தவ்ஹீதின் வகைகள் (⮫)


 தவ்ஹீதின் வகைகள்

أقسام التوحيد

தவ்ஹீதின் வகைகள்.

 எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி

தவ்ஹீத் எனும் வார்த்தையின் அர்த்தம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும்.

அதாவது அல்லாஹ் அனைத்தையும் படைத்தவன், பரி பாலிப்பவன், போஷிப்பவன், ஆட்சி அதிகாரம் அவனுக்கே உரியவை, அவனுக்கு இணையாக துணையாக எவரும் இல்லை, எந்த வஸ்துமில்லை, அவனைப் போல் ஒருவனுமில்லை என்று அவனை ஒருமைப்டுத்துவதாகும். பள்ளிக் கூடங்களில் கலிமாக்கள் பற்றி படிக்கும் போது இந்த தவ்ஹீதை 4ம் கலிமா தவ்ஹீத் என்று  படிக்கின்றோம்.

இந்த தவ்ஹீத் 3வகையாக பிரித்து நோக்கலாம்.        

1.தவ்ஹீதுர்ருபூபிய்யா

 2.தவ்ஹீதுல் உலூஇய்யா

3.தவ்ஹீதுல் அஸமாஉ வஸ்ஸிபாத்

 1. தவ்ஹூதுர் ருபூபிய்யா

அல்லாஹ்  வானம் பூமி மற்றும் அவ்விரண்டுக்கும் இடைப் பட்டவைகளையும் எவ்வித முன்மாதிரியுமின்றி படைத்த வன், பரிபாலிப்பவன், உணவளிப்பவன், அனைத்து உயிர் களுக்கும் உயிர் அளிப்பவனும், அவைகளை மரணிக்கச் செய்பவனுமாவான்.

இப்பிரபஞ்ஞத்தை மிக நுணுக்கமாக திட்ட மிட்டு செயற் படுத்துபவன். இதில் அவனுக்கு துணையாக இணையாக எந்தவொன்றுமில்லை என்ற நம்பிக்கையின்  மூலம் அல்லாஹ்வை இறைமைத்துவத்தில் ஒருமைப் படுத்து வதாகும்.

{إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ} [الأعراف: 54]

நிச்சயமாக உங்கள் இரட்சகனான அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில படைத்து பின் அர்ஷின் மேலானான். அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான். அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது இன்னும் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங் களையும் தன் கட்டளைக்கு - கீழ் படிந்த வையாகப் படைத்துள்ளான். அறிந்து கொள்ளுங்கள். படைத்தலும், கட்டளையிடு தலும் அவனுக்கே உரியதாகும். அகிலங்களுக் கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். 7/54

          இவ்வகைத் தவ்ஹீதை நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கா நகர  மக்களும் ஏற்றிருந்தனர்.

{وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ} [الزخرف: 9]

43:9   .(நபியே!) நீர் அவர்களிடம், “வானங் களையும் பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால் “யாவரையும் மிகைத்தவனும், நன்கறிந்தவனுமே இவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.

{قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ (86) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ أَفَلَا تَتَّقُونَ (87) قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (88) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ} [المؤمنون: 86- 89]

23:86. ”ஏழு வானங்களின் இரட்சகனும்  மகத்தான அர்ஷின் இரட்சகனும்  யார்?” என்றும் நபியே நீர் கேட்பீராக.

23:87 .”அல்லாஹ் தான் என்று அவர்கள் சொல்வார்கள், (அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று நபியே நீர் கேட்பீராக.

23:88 நீங்கள் அறிந்திருந்தால் பாதுகாப்பவனும் எவராலும் பாதுகாக்கப் படாதவனும் அனைத்துப்  பொருட்களின் அதிகாரத்தையும் தன் கைவசம் வைத்திருப்பவனும் யார்? என்று நபியே நீர் கேட்பீராக.

23:89 .அதற்கவர்கள் “அல்லாஹ்தான் என்று கூறுவார்கள். (உண்மை தெரிந்தும்) எவ்வாறு நீங்கள் மயக்கப் படுகிறீர்கள்?”என்று கேட்பீராக.

{وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ} [لقمان: 25]

31:25 “வானங்களையும், பூமியையும் படைத்த வன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், “அல்லாஹ்” என்றே நிச்சயமாக சொல்லுவார்கள். அல் ஹம்து லில்லாஹ் – எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்று நீர் கூறுவீராக எனினும், அவர்களில் பெரும் பாலோர் அறியமாட்டார்கள்.

இது போன்று அனேக வசனங்கள் தவ்ஹீதுர் ருபூபிய்யாவை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன்  இவ் வசனங்கள், மக்கா மக்கள் அல்லாஹ் மீது கொண்ட நம்பிக்கையை எடுத்து காட்டுகிறது. ஆனாலும் அம்மக்கள் அல்லாஹ்வை முறையாக நம்பவுமில்லை, அல்லாஹ்வுக் குரிய இறைமைத் துவத்தை வழங்குவுமில்லை.

அல்லாஹ்வை இரட்சகன் என்று கூறினாலும் அல்லாஹ் வுக்குரிய வணக்கங்களை வழங்காது அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த சிலை களுக்கு வழங்கினார்கள். இதன் நிமித்தமாக அவர்களது இறைநம்பிக்கை அல்லாஹ் வினால் மறுக்கப்பட்டது.

அம்மக்களுடைய இறை நம்பிக்கை அமைய வேண்டிய முறையைப் பற்றி நபி முஹம்மத் (ஸல்) எடுத்துரைத்தப் போது அதற்கு கட்டுப்படாது எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அட்டகாசங்களை கட்டவிழ்த்து விட்டார்கள்.

 2. தவ்ஹீதுல் உலூஇய்யா

வணக்கங்கள் அனைத்துக்கும் தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே யாகும். அவனல்லாத எவரும் எந்த வஸ்துவும் வணக்கங்களுக்கு தகுதியல்ல என்று உறுதிப்படுத்துவதே தவ்ஹீதுல் உலூஇய்யா எனப்படும்.

உதாரணமாக தொழுகை நோன்பு நேர்ச்சை, பிரார்த்தனை, பாதுகாவல்(தவக்குல்), உதவி கோரல் போன்ற இபாதத் களை (வணக்கங்களை) அல்லாஹ்வுக்கே செலுத்திட வேண்டும். இந்த இபாதத்களுக்காகவே அல்லாஹ் நம்மை படைத்துள்ளான்.

{قُلْ إِنَّنِي هَدَانِي رَبِّي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ دِينًا قِيَمًا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ (161) قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (162) لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ} [الأنعام: 161- 163]

சூறா அல் அனாம்161(நபியே!) நீர் கூறும், “மெய்யாகவே என் இரட்கசன்  எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான். அது மிக்க உறுதியான மார்க்கமாகும். (நபி) இப்றாஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்வர்களில் ஒருவராக இருக்க வில்லை.

6:162 நீர் கூறும், “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னு டைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

6:163 .”அவனுக்கு யாதோர் இணையுமில்லை. இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன்.  (அவனுக்கு) வழிப் பட்டவர்களில், முஸ்லிம் களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).

       இந்த இபாதத்களில் ஏதேனும் ஒன்றை அல்லாஹ் அல்லாத படைப்புகளுக்கு (நபிமார்களுக்கோ மலக்குகளுக்கோ வலிமார் களுக்கோ) செய்வது அல்லாஹ்வுக்கு செய்யும் பெரும் துரோகமாகும். மாபெரும் இணை வைப்புமாகும்.

{وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِنْدَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ} [المؤمنون: 117]

23:117.        மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை பிரார்த்திக்காறானோ அவனுக்கு அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை, அவனுடைய விசாரணை அவனுடைய இரட்சகனிடமே இருக்கிறது. நிச்சயமாக நிராகரிப்போர் வெற்றி அடைய மாட்டார்கள்.

 மக்கத்து மக்கள் அல்லாஹ்வுடைய வல்லமைகள் ஆற்றல்களை நம்பி ஏற்றிருந்த போதும் இபாதத்களை அல்லாஹ்வுக்கு செலுத்தாது அவைகளை தாங்கள் வணங்கும் சிலைகள், மற்றும் நல்லடியார்களுக்கு செலுத்தி அதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய முடியும் என்று கூறிவந்தனர். அல்லாஹ்வுக்கும் அவர்களுக்குமிடையில் இடைத்தரகர்களாக அவர்களும் வணங்கும் நல்லடியார்களை ஆக்கினார்கள்.

{أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ} [الزمر: 3]

          அறிந்து கொள்வீராக! தூய மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது எவர்கள் அவனையன்றிப் வேறு பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டார் களோ “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் வணங்கவில்லை” என்கின்றனர். அவர்கள் எதில் கருத்து வேறுபாடு  கொண்டிருந்தார் களோ அதில் அவர்களுக்கிடையே  நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப் பான். நிச்சயமாக அல்லாஹ் பொய்யனையும் நிராகரிப்ப வனையும் நேர்வழியில் செலுத்த மாட்டான். 39:3

மக்கத்து மக்களின் நியாயங்களை அல்லாஹ் ஏற்க வில்லை என்பதை இவ்வசனம் தெளிவாக கூறுகிறது. இபாதத் களுக்கு எவரும் சொந்தம் கொண்டாடவும் முடியாது. பங்கு போட்டு கொள்ளவும் முடியாது என்பதை அல்லாஹ் தெளி வாகக் கூறுகிறான். அல்லாஹ்வை நெருங்குவதற்கு எந்த இடைத்தரகரும் தேவை யில்லை. வணக்கங்களை நேரடி யாகவே அல்லாஹ்வுக்கே செலுத்தவேண்டும். அவனை மட்டுமே வணங்கவேண்டும். இச் செய்தியைத் தான் எல்லா இறைத் தூதர்கள் மூலமாக அல்லாஹ் எடுத்து வைத்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்:

{وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ} [النحل: 36]

அல்லாஹ்வை வணங்குங்கள் மேலும் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) தாகூத்தை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் எனக் கூறும் தூதரை ஒவ்வொரு சமூகத் திலும் நிச்சயமாக நாம் அனுப்பிவைத்தோம். 16/36

 3.தவ்ஹீதுல் அஸமாஉ வஸ்ஸிபாத்

அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள், பண்புகள் உள்ளன. அவைகளுக்கு ஒப்புவமாணம் கூறாது, அதன் கருத்துக்களை திரித்து  கூறாது அதன் கருத்துக்களை சிதைக்காது அப்படியே நம்பவேண்டும்.

அதாவது அல்லாஹ் தன்னைப் பற்றி எப்படி குர்ஆனில் வர்ணித்துள்ளானோ அல்லாஹ் வுடைய தூதர் நபி முஹம்மத் (ஸல்) எப்படி அல்லாஹ்வைப்பற்றி வர்ணித்து கூறினார் களோ அப்படியே நம்பவேண்டும்.

அல்லாஹவின் கை

அல்லாஹ்வின் முகம்

அல்லாஹ்வின் பாதம்

அல்லாஹ்வின் பார்வை

அல்லாஹவின் பேச்சு

போன்ற பண்புகள் குர்ஆனிலும் சுன்னாவிலும் சொல்லப் பட்டுள்ளன. அவைகளுக்கு மனித படைப்புகளுக்கு ஒப்பாக்கி அல்லது உவமானம் கூறி கருத்துக்களை திரித்து கூறிவிடக்கூடாது.

 அதுபோல்;

அல்லாஹ் கேட்கிறான், அல்லாஹ் பார்க்கிறான், அல்லாஹ் சிரிக்கிறான், அல்லாஹ் அடிவானத்திற்கு வருகிறான், அல்லாஹ் பெருமை கொள்கிறான், அல்லாஹ் கோபம் கொள்கிறான், அல்லாஹ் இரக்கம் காட்டுகிறான் போன்ற பண்புகளையும் திரித்து கூறாது எந்த வொன்றோடும் உதாரணம் கூறாது நம்பவேண்டும்.

மேன்மையும் கண்ணியமுமிக்க அல்லாஹ் தனக்குரிய விதத்தில் தன்னுடைய பண்புகளுக் குரியவனாக இருக்கிறான்  என்று நம்பிக்கை கொள்ளவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

{هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ (23) هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ} [الحشر: 23، 24]

59:22 . அவனே அல்லாஹ், உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் மறைவான வற்றையும்  பகிரங்கமானவற்றையும் நன்கறி பவன். அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

59:23 .அவனே அல்லாஹ், உண்மையாக வணங்கப் படத்தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவனே ஆட்சியாளன், மிகப்பரிசுத்த மானவன், சாந்தி யளிப்பவன், பாதுகாப்பவன், கண்கானிப்பவன். (யாவரை யும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரியவனுமாவான். அவர்கள் இணைவைப்ப வற்றை விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

59:24 அவன்தான் அல்லாஹ், படைப்பவன், தோற்றுவிப்பவன்  உருவமளிப்பவன். அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின் றன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.

அவ்வாறே அல்லாஹ் தன்னைப் பற்றி கூறும் போது

{الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى} [طه: 5]

          அர்ரஹ்மான் அர்ஷின் மேலானான் 20:5 என்று கூறுகிறான். அல்லாஹ் அர்ஷின் மேலால் எப்படி யாரைப் போல் இருக்கிறான் என்று தெரியாது. குர்ஆனில் கூறப் பட்டவாறு நம்பவேண்டும்.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் அல்லாஹ் அர்ஷின் மேலால் எப்படி இருக்கிறான் என ஒருவர் கேட்டார். அதற்கு இமாமவர்கள் அல்லாஹ் அர்ஷின் மேலால் இருக்கிறான் என்பது அறியப்பட்ட விடயம். எப்படி இருக்கிறான் என்பது அறியப்படாத விடயம். அது பற்றி கேள்வி கேட்பது பித்அத்தாகும் என்றார்கள். (நூல்: ஹில்யதுல் அவ்லியா காபம் 6. பக்கம் 325)

அல்லாஹ்வுடைய தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அழகிய பெயர் களையும் பண்புகளையும் எப்படி சஹாபாக்க ளுக்கு கற்றுக் கொடுத்தார்களோ அதே அடிப்டையிலே ஒவ்வொரு முஸ்லிமும் நம்பவேண்டும். இதை விடுத்து உவமான உவமைகள் கூறக்கூடாது.

 இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முஃதஸிலாக்கள் மற்றும் ஜஹ்மியாக்கள் என்போர் அல்லாஹ்வின் பெயர் கள் மற்றும் பண்புகளுக்கு தங்களுடைய பகுத்தறிவிக் கேற்ப விளக்கம் கொடுத்து மனித சிந்தனைக்கேற்ப புரிந்து கொள்ள முற்பட்டதன் காரணமாக பெரும் சீர்கேட்டை விளைவித்தார்கள். எனவே இவர்களை வழி கேடர்களாக, இமாம்கள் அடையாளம் காட்டினார்கள்.

கீர்த்தியும் மகத்துவமுமிக்க அல்லாஹ் தன்னுடைய பெயர்களை சிதைப்பதை வண்மையாக கண்டிக்கிறான்.

{وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ} [الأعراف: 180]

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உள்ளன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தி யுங்கள், அவனுடைய பெயர்களில் திரிவுப்படுத்து வோரை விட்டு விடுங்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த வற்றுக் காக  கூலி கொடுக்கப்படுவார்கள். 7:180

ஆழகிய பெயர்களுக்கும் பண்புகளுக்கும் உரிய இரட்சகனான அல்லாஹ் தனக்கு ஒப்பாக எதுவுமில்லை என்று தெளிவாக கூறிய பிறகும் பகுத்தறிவைக் கொண்டு புரிந்து கொள்ளள முனைவது வழிகேட்டைத் தவிர வேறில்லை.

{لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ} [الشورى: 11]

அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். 42:11

{وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ} [الإخلاص: 4]

112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

இக்குர்ஆன் வசனங்கள் நன்கு புரிந்து அல்லாஹ்வை தூய்மைப்படுத்தவேண்டும்.