மலக்குகளை ஈமான் கொள்ளுதல் (⮫)


 மலக்குகளை ஈமான் கொள்ளுதல்

الإيمان بالملائكة

மலக்குகளை ஈமான் கொள்ளுதல்

 PART-01- M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலபி.

           இஸ்லாத்தின் இரண்டாவது கடமை மலக்குகளை (வானவர்களை) நம்பிக்கை கொள்வதாகும்.

“மலக்குன்” எனும் ஒருமைச் சொல்லின் பன்மைச் சொல் மலாஇகா என்பதாகும். இதன் அர்த்தம் பலமுள்ளவர்கள், அல்லாஹ்வின் செய்தியை எத்திவைப்பவர்கள் என்பதாகும். அல்லாஹ்வின், தூய்மையான பரிசுத்தமான அறிவுள்ள படைப்பாக மலக்குகள் திகழ்கிறார்கள்.

மனிதர்கள், ஜின்கள் படைக்கப்பட்ட மூலத்தி லிருந்து மலக்குகள் படைக்கப்படவில்லை மாறாக மலக்குகள் ஒளியினால் படைக்கப் பட்டார்கள்.

صحيح مسلم (4ஃ 2294)

عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُلِقَتِ الْمَلَائِكَةُ مِنْ نُورٍ، وَخُلِقَ الْجَانُّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ، وَخُلِقَ آدَمُ مِمَّا وُصِفَ لَكُمْ»

“மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள். ஜின்கள் நெருப்புச் சுவாலையால் படைக்கப் பட்டார்கள். ஆதம் (அலை) அவர்கள் உங்களுக்கு விவரிக்கப்பட்டவாறு (களி மண்ணால்) படைக்கப்பட்டார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர். ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்)

மலக்குகளை நம்பிக்கை கொள்வதன் அவசியம் பற்றி அல்குர்ஆனும் ஹதீஸூம் பின்வருமாறு கூறுகின்றது.

آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ

(முஃமின்களாகிய) அவர்கள் அனைவரும் அல்லாஹ் வையும் அவனது மலக்குகளையும் அவனது வேதங்களையும் அவனது தூதர் களையும் விசுவாசம் கொண் டுள்ளனர். (2;285)

“ஈமான் என்பது அல்லாஹ்வையும், அவனது மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனது தூதர் களையும், மறுமை நாளையும், கலாகத்ரையும், (விதியையும்) விசுவாசம் கொள்வதாகும்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி), (நூல்: முஸ்லிம்)

மலக்குகளை விசுவாசம் கொள்ளாதவர் ஈமானையே நிராகரித்த வழிகேடராக கணிக்கப் படுகிறார்.

وَمَنْ يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا

“எவர் அல்லாஹ்வையும் அவனது மலக்கு களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும் இறுதி நாளையும் நிராகரிக்கின் றார்களோ நிச்சயமாக அவன் வெகுதூரமான வழிகேட்டில் சென்று விட்டான்.” (4;136)

மலக்குகள், முதல் மனிதன் ஆதம் (அலை)அவர்கள் படைக் கப்படுவதற்கு முன்பாகவே அல்லாஹ்வினால் படைக்கப் பட்டவர்கள்.

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ

“நபியே! உமது இரட்சகன் வானவர்களிடம்,  ‘நிச்சயமாக பூமியில் நான் ஒரு தலைமுறையை தோற்றுவிக்கப் போகி றேன்.’ என்று கூறிய போது, ‘நாங்கள் உன் புகழைத் துதித்துக் கொண்டும் உன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டும் இருக்க அதில் குழப்பத்தை விளைவித்து இரத்தங்களை சிந்துவோரையா தோற்றுவிக்கப் போகின்றாய்?’ என்று கூறினார்கள். (அதற்கவன்) ‘நீங்கள் அறியாத வற்றை யெல்லாம் நிச்சயமாக நான் நன்கறி வேன்’ எனக் கூறினான்.” (2;30)

ஆதம் (அலை) படைக்கப்பட்ட பின், அவருக்கு சுஜூது செய்யுமாறு அல்லாஹ் மலக்குகளுக்கு கட்டளையிட்டதும் மலக்குகள் அனைவரும் சுஜூது செய்தார்கள்.

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ  فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ  فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ  إِلَّا إِبْلِيسَ أَبَى أَنْ يَكُونَ مَعَ السَّاجِدِينَ 

(நபியே) உமது இரட்சகன் வானவர்களிடம் நிச்சயமாக நான் மனிதனை (தட்டினால்) ஓசை வரக்கூடிய காய்ந்த கறுப்புக் களிமண்ணினால் படைக்கப் போகிறேன். ஏன்று கூறியதை (எண்ணிப்பார்ப்பீராக).

நான் அவரை ஒழுங்குர அமைத்து அதில் என் ரூஹை (உயிரை) ஊதினால் நீங்கள் அவருக்கு சுஜூது செய்தவர்களாக விழுங்கள் (என்று கூறினான்). அப்போது மலக்குகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சுஜூது செய்தனர். இப்லீ ஸைத் தவிர சுஜூது செய்பவர்களுடன் இருப்ப தற்கு அவன் மறுத்துவிட்டான். (15;28-31)

மலக்குகள் பகுத்தறிவுள்ள, விளக்கமுள்ள படைப்பாகவே படைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தோற்றம் அல்லது உருவமைப்புப் பற்றி அல்லாஹ்வையன்றி யாரும் அறிய மாட்டார்கள். ஆதம் (அலை) படைக்கப் பட்டபோது அல்லாஹ் கற்றுத் தந்தவைகளைத் தவிர எதுவும் அறிய மாட்டோம்.  என்றனர் அவ்வாறே மனிதர்களின் பட்டோலைகளை எழுதும் மலக்குகளும் மனிதர்கள் செய்வதை நன்கறிந்தே எழுதவும் செய்கின்றனர்.

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ  

(அல்லாஹ்) எல்லாப் (பொருட்களின்) பெயர் களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான், பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர் களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்.” என்றான்.

قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ 

அவர்கள் (இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேக மிக்கோன்.” எனக் கூறினார்கள். (2;32)

قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ

         .''ஆதமே! அப் பொருட்களின் பெயர் களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (அல்லாஹ்) சொன்னான். அவர் அப்பெயர் களை அவர்களுக்கு விவரித்த போது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்ல வில்லையா?” என்று (அல்லாஹ் மலக்குகளை நோக்கி) கூறினான். (2;31-33)

وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ  كِرَامًا كَاتِبِينَ  يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

“நிச்சயமாக, உங்கள் மீது பாதுகாவலர்கள் (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள. நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.” (82;11,12)

        மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளை களுக்குக் கட்டுப் பட்டு நடப்பவர்களாகவும் எக்கட்டளைக்கும் மாறு செய்யும் தன்மையற்ற வர்களாகவும் உள்ளனர்.

عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

“நரகத்தின் மீது கடின சித்தம் கொண்ட பலசாலிகளான வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் தமக்கு ஏவியதற்கு மாறு செய்ய மாட்டார்கள். மேலும் அவர்கள் தமக்கு ஏவப்பட்டதைச் செய்வார்கள். (66;6)

يَخَافُونَ رَبَّهُمْ مِنْ فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

(மலக்குகள்) தமக்கு மேலுள்ள தமது இரட்சகனை அஞ்சி தமக்கு ஏவப்டுவதைச் செய்வார்கள்.” (16;50)

        அல்லாஹ்வின் வார்த்தைக்கு அல்லது பேச்சுக்கு முன்னால் பேசவும் மாட்டார்கள். மறுத்து பேசவும் மாட்டார்கள்.

لَا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُمْ بِأَمْرِهِ يَعْمَلُونَ

“பேச்சால் அவனை (மலக்குகள் முந்தவும் மாட்டார்கள். அவனது கட்டளைக்கேற்பவே செயற்படுவார்கள்.” (21;27)

அவ்வாறே அல்லாஹ் விரும்புகின்றவர்களை மலக்குகள் விரும்புவார்கள் அல்லாஹ் கோபிக் கின்றவர்களை கோபிப்பார்கள்.

صحيح البخاري (4ஃ 111)

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ' إِذَا أَحَبَّ اللَّهُ العَبْدَ نَادَى جِبْرِيلَ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحْبِبْهُ، فَيُحِبُّهُ جِبْرِيلُ، فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ القَبُولُ فِي الأَرْضِ '

அல்லாஹ் ஒரு அடியானை நேசித்து விட்டால் ஜிப்ரீலை அழைத்து, நிச்சயமாக அல்லாஹ் இன்னாரை நேசம் கொண்டு விட்டான். எனவே நீரும் அவரை நேசிப்பாயாக எனக் கூறுவான்.

ஜிப்ரீல் (அலை) வானத்திலுள்ளவர்களை (மலக்குகளை) அழைத்து நிச்சயமாக அல்லாஹ் இன்னாரை நேசித்து விட்டான். எனவே நீங்களும் அவரை நேசியுங்கள் என்பார். வானத்திலுள்ளவர்களும் அவரை நேசிப்பார் கள். பிறகு பூமியிலுள்ளவர்களும் அவரை நேசிக்கச் செய்யப்படும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்; அபூ ஹுரைரா (ரழி), (நூல்; புகாரி)

 மலக்குகள் பசி, தாகம், உறக்கம், களைப்பு போன்ற உணர்வுகளுக்கு அப்பால் பட்டவர் கள். மனித வர்க்கத் திற்கோ  ஜின் வர்க்கத் திற்கோ  பறவை பட்சிகளுக்கோ அல்லது ஏதேனும் ஜீவிகளுக்கோ உள்ள  தேவைகள் உடையவர்களல்லர்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தை பாக்கியம் குறித்து நற்செய்தி சொல்வதற்காக மலக்குகள் மனித தோற்றத்தில் வந்தனர். அவர்களுக்கு விருந்து சமைத்து வைத்தப் போது அதனை அவர்கள் உண்ண வில்லை.

 هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ  فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ  فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ  فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ

இப்றாஹீமின் கண்ணியத்திற்குரிய விருந்தாளி களின் (வானவர்களின்) செய்தி (நபியே) உம்மிடம் வந்ததா?

அவர்கள் அவரிடம் நுழைந்த போது ஸலாம் (சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினர். அவரும் ஸலாம் எனக் கூறி அறிமுகமற்ற கூட்டத்தினர் (என தனக்குள் எண்ணிக் கொண்டார்.)

பிறகு தனது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று கொழுத்த காளைக் கன்றை (பொரித்து) கொண்டு வந்தார். பின்னர் அவர்களுக்கு முன்னால் வைத்து சாப்பிடமாட்டீர்களா என்று கேட்டார்.

அவர்கள் உண்ணாமல் இருக்கவே அவர்கள் மீது அச்சம் கொண்டார். நீர் பயப்பட வேண்டாம் என அவர்கள் கூறி, அறிவுள்ள ஒரு குழந்தையைக் கொண்டு அவருக்கு அவர்கள் நன்மாராயமும் கூறினர். (51;24-28) (11;69,70)

பிறகு அந்த மலக்குகள், லூத் (அலை) அவர்களிடம் வந்து, அவரது சமூகம் ஆண் புணர்ச்சியில் ஈடுபட்டு வருவதனால் அவர்களது அழிவு குறித்தும் எச்சரிக்கை செய்தனர். இந்த மலக்குகள் ஆண்களின் தோற்றத்தில் வந்ததாக அல்லாஹ் தெளிவுப்படுத்துகிறான்.

وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِيءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَذَا يَوْمٌ عَصِيبٌ  وَجَاءَهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِنْ قَبْلُ كَانُوا يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَا قَوْمِ هَؤُلَاءِ بَنَاتِي هُنَّ أَطْهَرُ لَكُمْ فَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِ فِي ضَيْفِي أَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَشِيدٌ  قَالُوا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ  قَالَ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ

(வானவர்களாகிய) நமது தூதர்கள் (மனித தோற்றத்தில்) லூதிடம் வந்த போது அவர் அவர்களால் (அவரது சமூகத்தவர்களால்) மன நெருக்கடிக்குள்ளாகினார். இது பெரும் துன்பம் மிக்க நாளாகும் எனக் கூறினார்.

அவரது சமூகத்தினர் அவரிடம் விரைந்தோடி வந்தனர். அவர்கள் இதற்கு முன்னரும் (ஆண்புனர்ச்சியாகிய) இத்தீய செயல்களையே செய்து கொண்டிருந்தனர். எனது சமூகமே! இவர்கள் எனது பெண் மக்கள். அவர்கள் உங்களுக்கு திருமணம் செய்யப் பரிசுத்தமான வர்கள்.அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். எனது விருந்தினர் விடயத்தில் என்னை கவலைக்குள்ளாக்கி விடாதீர்கள். நல்ல மனிதர் ஒருவர் கூட உங்களில் இல்லையா? என்று கேட்டார். (11;77,78)

 மலக்குகள் அல்லாஹ் நாடுகின்ற மனித தோற்றங்களில் வரக்கூடியவர்கள். இதுதான் தோற்றம் என்று எவராலும் சொல்ல முடியாது. நபிமார்களிடத்தில் மலக்குகள் மனித தோற்றத்தில் வந்தது போல் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மர்யம் அலை) அவர்களிடத்தில்  மனித தோற்றத்தில் வந்து ஈஸா நபியின் பிறப்பு குறித்து நன்மாராயம் கூறினார்கள்.

وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذِ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا  فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا

நபியே இவ்வேதத்தில் மர்யம் குறித்தும் நினைவு கூர்வீராக. அவர் தனது குடும்பத்தை விட்டும் கிழக்குப் பக்கமுள்ள  ஓரிடத்தில் தனித்தப் போது அவர் அவர்களை விட்டும் (தன்னை மறைத்துக் கொள்ள) ஒரு திரையை எடுத்துக் கொண்டார். அப்போது (ஜிப்ரீல் ஆகிய) நமது ரூஹை அவரிடம் அனுப்பி வைத்தோம். அவர் அவளிடம் நேர்த்தியான ஒரு மனிதராகத் தோற்றமளித்தார். (19; 16,17)

    விஷேடமாக ஜிப்ரீல் (அலை) அவர்களின் யதார்த்தமான தோற்றத்தை பற்றி நபி (ஸல்) குறிப்பிட்டதுடன் அத் தோற்றத்தை பார்த்த தாகவும் குறிப்பிட் டார்கள்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் மிக நெருக்கமாக இருந்து வஹியை நபி(ஸல்) அவர்களுக்குக் கற்று கொடுத்த வேளையிலும், மிஃராஜ் பயணத்தில் ஸித்ரதுல் முன்தஹா எனும் இடத்தில் அண்மித்திருந்த வேளையிலும், ஜிப்ரீல்(அலை) அவர்களை நபி(ஸல்) அவர்கள் பாரத்துள்ளார்கள் என அல்லாஹ் கூறுகிறான்.

ثُمَّ دَنَا فَتَدَلَّى  فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى  فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى  مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى  أَفَتُمَارُونَهُ عَلَى مَا يَرَى  وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى  عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى

(நபியாகிய) அவர் கண்டது குறித்து (அவரது) உள்ளம் பொய்ப்பிக்கவில்ல. அவர் கண்டது பற்றி அவருடன் நீங்கள் தர்க்கம் செய்கிறீர் களா? ஸித்ரதுல் முன்தஹா எனும் இடத்தில் இவர் மீண்டும் ஒரு தடவை (ஜிப்ரீலாகிய) அவரைக் கண்டார். (53;11-13)

{وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ  وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ } [التكوير: 23، 24]

திண்ணமாக (ஜிப்ரீலாகிய) அவரை தெளிவான அடி வானத்தில் இவர் (முஹம்மத் நபி) கண்டார். (8;23)

இறை செய்தியை கொண்டுவரக் கூடிய ஜிப்ரீல் (அலை) அவர்களின் இயற்கை தோற்றத்தை   கண்டது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விபரித்தார்கள்.

صحيح مسلم (1ஃ 159)

فَقَالَ: «إِنَّمَا هُوَ جِبْرِيلُ، لَمْ أَرَهُ عَلَى صُورَتِهِ الَّتِي خُلِقَ عَلَيْهَا غَيْرَ هَاتَيْنِ الْمَرَّتَيْنِ، رَأَيْتُهُ مُنْهَبِطًا مِنَ السَّمَاءِ سَادًّا عِظَمُ خَلْقِهِ مَا بَيْنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ

நான், ஜிப்ரீலை அவர் படைக்கப்பட்ட தோற்றத்தில் இரு தடவைகள் பார்த்துள்ளேன். அவர் வானத்திலிருந்து இறங்கிக் கொண்டி ருந்ததை பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடை யிலுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி); நூல்: முஸ்லிம்.)

صحيح البخاري (4ஃ 116)

أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ' ثُمَّ فَتَرَ عَنِّي الوَحْيُ فَتْرَةً، فَبَيْنَا أَنَا أَمْشِي، سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ، فَرَفَعْتُ بَصَرِي قِبَلَ السَّمَاءِ، فَإِذَا المَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ، قَاعِدٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَجُئِثْتُ مِنْهُ، حَتَّى هَوَيْتُ إِلَى الأَرْضِ، فَجِئْتُ أَهْلِي فَقُلْتُ: زَمِّلُونِي زَمِّلُونِي، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {يَا أَيُّهَا المُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ}

(வானவர் ஜிப்ரீல் அவர்கள் முதன் முதலாக ஹிரா குகையில் எனக்கு வஹீ (இறைச் செய்தி கொண்டு வந்தார்.) பிறகு சிறிது காலத்திற்கு (மூன்றாண்டுகளுக்கு) எனக்கு வஹீ (இறைச் செய்தி) வருவது நின்று போய்விட்டது. (அக் கால கட்டத்தில் ஒரு முறை) நான் (பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்த போது வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டேன்.  என் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினேன். அங்கே ‘ஹிரா’ குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே (பிரமாண்டமான) ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டு நான் பீதிக்குள்ளாகி விட்டேன். அதன் விளைவாக (மூர்ச்சையுற்றுத்) தரையில் விழுந்து விட்டேன். பிறகு (மயக்கம் தெளிந்தவுடன்) என் வீட்டாரிடம் சென்று, “எனக்குப் போர்த்துங்கள். எனக்குப் போர்த்துங்கள்” என்று (நடுக்கத்துடன்) கூறினேன். அவ்வாறே போர்வை போர்த்தப் பட்டது. அப்போது அல்லாஹு தஆலா, ‘(போர்வை) போர்த்திக் கொண்டிருப்ப வரே! எழுந் திருங்கள். (அல்லாஹ்வின் தண்டனை குறித்து, மக்களை)  அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.  மேலும், உங்களுடைய இரட்சக னின்  பெருமையை எடுத்து ரையுங்கள். மேலும், உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும், (சிலைகள் எனும்) அசுத்தத்தை வெறுத்து விடுங்கள்” என்னும் (திருக்குர்ஆன் 74;1-5) வசனங்களை அருளினான்.

صحيح مسلم (1ஃ 153)

وَرَأَيْتُ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ، فَإِذَا أَقْرَبُ مَنْ رَأَيْتُ بِهِ شَبَهًا دَحْيَةُ» وَفِي رِوَايَةِ ابْنِ رُمْحٍ: «دَحْيَةُ بْنُ خَلِيفَةَ»

(நபித் தோழர்)தஹ்யாஹ் இப்னு கலீபாவுடைய தோற்றத்திற்கு ஒப்பாக ஜிப்ரீலை நான் பார்த்தேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) (நூல்: முஸ்லிம்)

ஜிப்ரீல்(அலை) அவர்களை நபி(ஸல்) அவர்கள் கண்டது போல் மாலிக் (அலை) மற்றும் மீக்காயீல் (அலை) அவர்களையும் கண்டுள்ளார்கள்.

صحيح البخاري (4ஃ 116)

 عَنْ سَمُرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي قَالاَ الَّذِي يُوقِدُ النَّارَ مَالِكٌ خَازِنُ النَّارِ، وَأَنَا جِبْرِيلُ وَهَذَا مِيكَائِيلُ»

நான் இன்றிரவு இரண்டு பேர்களைக் (கனவில்) கண்டேன். (அவ்விருவரையும் அறிமுகப்படுத்து முகமாக  ஜிப்ரீல் என்னிடம் கூறும் போது) ‘அதோ, நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயீல் ஆவார் என்றார். என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமுரா(ரலி) (நூல்: புகாரி)

      ஜிப்ரீல் (அலை) மனித தோற்றத்தில் சஹாபாக்கள் முன்னிலையில் பிரசன்னமா னார்கள், என்பதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

صحيح مسلم (1ஃ 37)

حَدَّثَنِي أَبِي عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ، إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ، شَدِيدُ سَوَادِ الشَّعَرِ، لَا يُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ، وَلَا يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ، حَتَّى جَلَسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْنَدَ رُكْبَتَيْهِ إِلَى رُكْبَتَيْهِ، وَوَضَعَ كَفَّيْهِ عَلَى فَخِذَيْهِ، وَقَالَ: يَا مُحَمَّدُ أَخْبِرْنِي عَنِ الْإِسْلَامِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْإِسْلَامُ أَنْ تَشْهَدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتُقِيمَ الصَّلَاةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَصُومَ رَمَضَانَ، وَتَحُجَّ الْبَيْتَ إِنِ اسْتَطَعْتَ إِلَيْهِ سَبِيلًا»، قَالَ: صَدَقْتَ، قَالَ: فَعَجِبْنَا لَهُ يَسْأَلُهُ، وَيُصَدِّقُهُ، قَالَ: فَأَخْبِرْنِي عَنِ الْإِيمَانِ، قَالَ: «أَنْ تُؤْمِنَ بِاللهِ، وَمَلَائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الْآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ»، قَالَ: صَدَقْتَ، قَالَ: فَأَخْبِرْنِي عَنِ الْإِحْسَانِ، قَالَ: «أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ»، قَالَ: فَأَخْبِرْنِي عَنِ السَّاعَةِ، قَالَ: «مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ» قَالَ: فَأَخْبِرْنِي عَنْ أَمَارَتِهَا، قَالَ: «أَنْ تَلِدَ الْأَمَةُ رَبَّتَهَا، وَأَنْ تَرَى الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ رِعَاءَ الشَّاءِ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ»، قَالَ: ثُمَّ انْطَلَقَ فَلَبِثْتُ مَلِيًّا، ثُمَّ قَالَ لِي: «يَا عُمَرُ أَتَدْرِي مَنِ السَّائِلُ؟» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «فَإِنَّهُ جِبْرِيلُ أَتَاكُمْ يُعَلِّمُكُمْ دِينَكُمْ»

உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு நாள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது மிக வெண்மையான ஆடை அணிந்த கடும் கறுத்த நிறமுடைய முடி நிறைந்த ஒரு மனிதர் வந்தார். அவரிடத்தில் பயணத்தின் அடையாளம் தென்படவில்லை. எங்களில் எவரும் அவரை அறிந்ததுமில்லை. அவர் வந்து நபி (ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தனது முழங்கால்களை நபி (ஸல்) அவர்களுடைய முழங்கால்களுடன் இணைத்து தனது இரு உள்ளங் கைகளை தனது இரு தொடைகளின் மேல் வைத்தார். (பிறகு) நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் மற்றும் மறுமை நாள் பற்றியும் அதன் அடையாளங்கள் பற்றியும் கேட்டார். நபி (ஸல்) அவர்களும் விளக்கப்படுத்தி னார்கள். பிறகு அவர் போய் விட்டார். பிறகு நபி (ஸல்) அவர்கள் உமரே! இப்போது வந்து கேள்வி கேட்டவரை அறிவீரா? எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது ரசூலுமே மிக அறிந்தவர்கள் எனக் கூறினேன். “நிச்சயமாக அவர்தான் ஜிப்ரீல். உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுக் கொடுப் பதற்கு உங்களிடம் வந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்), நூல்: முஸ்லிம்

ஜிப்ரீல்(அலை) அவர்களைப் பற்றி  விஷேடமாக அல்லாஹ் குறிப்பிடும் போது அவர் வலிமை மிக்கவர் அழகிய தோற்ற முடையவர் என்று குறிப்பிடுகிறான்.

عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ذُو مِرَّةٍ فَاسْتَوَى

வலிமை மிக்க அழகிய தோற்றமுடைய (ஜிப்ரீல் எனும் வான)வர் (முஹம்மத் நபியாகிய) இவருக்குக் கற்றுக் கொடுத்தார். (தனது இயற்கையான அமைப்பில் நபியின் முன்) நேராக நின்றார். (53; 5, 6)

அல்லாஹ் தேர்ந்தெடுத்த நபிமார்களுக்கு வஹி (இறை கட்டளையை) மலக்குகள் மூலமாக அல்லாஹ் இறக்கிவைக்கிறான். அப்பணியில் கூட்டல் குறைவின்றி மலக்குகள் எத்திவைப்பர்.

صحيح البخاري (4ஃ 112)

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ الحَارِثَ بْنَ هِشَامٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يَأْتِيكَ الوَحْيُ؟ قَالَ: «كُلُّ ذَاكَ يَأْتِينِي المَلَكُ أَحْيَانًا فِي مِثْلِ صَلْصَلَةِ الجَرَسِ، فَيَفْصِمُ عَنِّي، وَقَدْ وَعَيْتُ مَا قَالَ، وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، وَيَتَمَثَّلُ لِي المَلَكُ أَحْيَانًا رَجُلًا فَيُكَلِّمُنِي، فَأَعِي مَا يَقُولُ

ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘தங்களுக்கு வஹீ (இறைச் செய்தி) எப்படி வருகிறது?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், சில வேளை களில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார். அவர் கூறியதை நான் நினைவில் வைத்த நிலையில் அவர் என்னை விட்டுப் பிரிந்து விடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான சிரமம் தரக் கூடியதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று காட்சி யளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள் வேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) (நூல்: புகாரி)

    மனித தோற்றத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் மலக்குகள் இரண்டு இரக்கைக்கள் மூன்று இரக்கைகள் நான்கு இரக்கைகள் உடையவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளார் கள். ஜிப்ரீல் (அலை) 600 இறக்கைகள் உடையவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளார் கள்.

الْحَمْدُ لِلَّهِ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَاعِلِ الْمَلَائِكَةِ رُسُلًا أُولِي أَجْنِحَةٍ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ يَزِيدُ فِي الْخَلْقِ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

வானங்களையும் பூமியையும் படைத்தவனும், இரண்டிரண்டு மும்மூன்று நன்னாங்கு இறக்கை களையுடைய வானவர்களை தூதர்களாக ஆக்கிய அல்லாஹ் வுக்கே எல்லாப்புகழும். படைப்பில் தான் நாடுவதை அவன் மேலும் அதிகரிப்பான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். 35;1)

صحيح مسلم (1ஃ 158)

قَالَ: أَخْبَرَنِي ابْنُ مَسْعُودٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى جِبْرِيلَ لَهُ سِتُّمِائَةِ جَنَاحٍ»

“நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை 600 இறக்கைள் உடையவராக பார்த்துள்ளார்கள்” என இப்னு மஸ்ஊத் (ரலி)அறிவிக்கிறார்கள் (நூல்- முஸ்லிம்)

     உலக அழிவின் அடையாளமாக ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கும் போது மலக்குகளின் இறக்கைகளில் கைகளை வைத்தவராக இறங்குவார் என நபி(ஸல்) கூறினார்கள். சஹீஹூல் முஸ்லிமில் வரக் கூடிய நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியில் பின்வருமாறு காணப்படுகிறது.

صحيح مسلم (4ஃ 2253)

فَيَنْزِلُ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِيَّ دِمَشْقَ، بَيْنَ مَهْرُودَتَيْنِ، وَاضِعًا كَفَّيْهِ عَلَى أَجْنِحَةِ مَلَكَيْنِ،

ஈஸா (அலை) அவர்கள் திமிஷ்கின் கிழக்குப் பகுதியில் (அமைந்துள்ள) வெள்ளை மினாரா வில் இறங்குவார்கள். அப்போது தங்களுடைய இரு உள்ளங் கைகளையும் இரு மலக்குகளின் இறக்கைகள் மீது வைத்தவராக இறங்கு வார்கள். (நூல்:முஸ்லிம்)

உலகில் மனிதர்களின் தொகையை கணக் கெடுப்பது போல் மலக்குகளின் தொகையை கணக்கெடுக்க முடியாது. அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள்.

وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ وَمَا هِيَ إِلَّا ذِكْرَى لِلْبَشَرِ

உமது இரட்சகனின் படைகளை (மலக்குகளை) அவனை யன்றி வேறெவரும் அறிய மாட்டார்கள். (74;31)

حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

فَرُفِعَ لِي البَيْتُ المَعْمُورُ، فَسَأَلْتُ جِبْرِيلَ، فَقَالَ: هَذَا البَيْتُ المَعْمُورُ يُصَلِّي فِيهِ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ، إِذَا خَرَجُوا لَمْ يَعُودُوا إِلَيْهِ آخِرَ مَا عَلَيْهِمْ....

(ஏழாம் வானத்தில் வைத்து ) எனக்கு பைதுல் மஃமூர் எனும் இறை இல்லம் எடுத்துக் காட்டப்பட்து. அதைப் பற்றி ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் கேட்டேன். இதுதான் பைதுல் மஃமூராகும். ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் இங்கே நுழைந்து தொழுகிறார்கள். அதிலிருந்து வெளி யேறியவர்கள் மறுபடியும் அதனுள் நுழைவதில்லை என நபி(ஸல்) கூறினார்கள்.(நூல்: முஸ்லிம்).

ஒரு நாளைக்கு பைதுல் மஃமூருக்கு நுழைகின்ற 70,000 மலக்குகள் மறுபடியும் அம் மஸ்ஜிதுக்குள் நுழைவதில்லை என்றால் இது காலம் வரை  நுழைந்த மலக்குகளின் எண்ணிக்கையும் உலகம் அழியும் வரை நுழையப் போகின்ற மலக்குகளின் எண்ணிக் கையும் நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டாரகள். இது தவிர ஏனைய  மலக்குகளின் எண்ணிக்கையும் எவரும் அறிய மாட்டார்கள்.


 PART- 02 - மலக்குகளை நம்புதல்.

M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மலக்கு களுக்கென  பணிகள் வெவ்வேறாக பகிர்ந்த ளிக்கப்பட்டுள்ளன என்பதை காண முடிகிறது.

அல்லாஹ் கூறுகிறான்.

وَالنَّازِعَاتِ غَرْقًا

(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-

وَالنَّاشِطَاتِ نَشْطًا 

(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

وَالسَّابِحَاتِ سَبْحًا

வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

فَالسَّابِقَاتِ سَبْقًا

முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

فَالْمُدَبِّرَاتِ أَمْرًا

ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர் (களான மலக்கு) கள் மீதும் சத்தியமாக (அல்குர்ஆன்:79:1-5)

இக்குர்ஆன் வசனங்கள் முக்கிய சில பணிகளை சுட்டிக் காட்டுவது போல் மேலும் சில வசனங்களும் ஹதீஸ்களும் வேறு சில பணிகளுடைய மலக்குகளையும் சுட்டிக் காட்டு கின்றன.

உயிர்களை கைப்பற்றும் மலக்குகள்:

மேலேயுள்ள குர்ஆனிய வசனத்திற்கேற்ப நல்ல மனிதர் களின் உயிர்களை கைப்பற்றும் பொறுப்புக்கு சில மலக்குகளும், தீயவர்களின் உயிர்களை கைப்பற்றும் பொறுப்புக்கு சில மலக்குகளும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ

உங்களில் ஒருவருக்கு மரணம் வந்து விடுமானால், நமது தூதர்கள் (மலக்குகள்), அவர் ஆத்மாவை எடுத்துக் கொள் கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை. (6:61)

நல்லவர்களின் உயிர்களை கைப்பற்றும் நேரத்தில் வரக்கூடிய  மலக்குகள் சூரியனைப் போன்று பிரகாசமுடையவர்களாகவும் தீயவர் களின் - நிராகரிப்பாளர்களின் உயிர் களை கைப்பற்றும் நேரத்தில் வரக்கூடிய மலக்குகள் கறுத்த நிறமுடையவர்களாகவும் இருப்பார்கள் என நபி(ஸல்) குறிப்பிட்ட சஹீஹான ஹதீஸ்கள் கூறுகின்றன. 

நல்லவர்களின் உயிர்களை கைப்பற்றும் போது மிக இலகுவான முறையிலும், சுபசோபனச் செய்தி கூறியும் மலக்குகள் உயிர்களை கைப்பற்றுகிறார்கள்.

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30) نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ (31) نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ (فصلت: 30 - 32

நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்  எனக் கூறி பின்னர் (அதில்) உறுதியாக இருக்கின்றார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்கி நீஙகள் அச்சப்பட வேண்டாம் துக்கப்படவும் வேண்டாம். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்த்தைக் கொண்டு நன்மாராயம் பெறுஙகள்.( எனக் கூறுவர்.)

இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமையிலும் நாமே உதவி யாளர்கள். உங்களது மனங்கள் விரும்புபவை அதில்  உங்களுக்கு உண்டு. மேலும் அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு உண்டு. (இது) மிக்க மன்னிப் பவனான நிகரற்ற அன்புடையவனிட மிருந்துள்ள விருந்தாகும்.(41:30-32)

தீயவர்களின் உயிர்களை கைப்பற்றும் போது மலக்குகள் கடுமையாக நடந்து கொள்கிறார் கள், நிராகரிப்பாளர்களாக மரணிப்பவர்களுக்கு சபிக்கின்றார்கள்.

{ فَكَيْفَ إِذَا تَوَفَّتْهُمُ الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ  ذَلِكَ بِأَنَّهُمُ اتَّبَعُوا مَا أَسْخَطَ اللَّهَ وَكَرِهُوا رِضْوَانَهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ }

எனவே இவர்களது முகங்களிலும் பின்புறங்களிலும் வானவர்கள் அடித்து  அவர்களின் உயிர்களை கைப் பற்றினால் எப்படியிருக்கும். நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு கோபமூட்டியதை பின்பற்றிய தும் அவனது பொருத்தத்தை வெறுத்ததுமே இதற்குக் காரண மாகும். ஆகவே இவர்களின் செயல்களை அவன் அழித்து விட்டான்.(47: 27.28)

இவ்விரு  கூட்டத்திற்கும் பொறுப்பாளியாக மலக்குல் மவ்த் எனும் மலக்கு நியமிக்கப் பட்டுள்ளார்.

قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ

''உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்த்” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இரட்சகனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.( 32:11)

சபிக்கும் மலக்குகள்.

அல்லாஹ் தெளிவுப்படுத்தி சத்திய மார்க்கத்தை உரிய வடிவில் பின்பற்றாது மக்களுக்கு அதன் தெளிவை வழங்காது மறைத்து நிராகரிக் கின்றார்களோ அவர்களை மலக்குகள்,  சபிக்கின்றனர்.

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَئِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ (159) إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ (160) إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ (161) خَالِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُونَ (162البقرة: 159 - 162

மக்களுக்கு நாம் வேதத்தில் தெளிவுப்படுத்திய பின்னர்   நாம் இறக்கிய தெளிவான சான்று களையும் வழி காட்டல்களையும் யார் மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். சபிப்பதற்கு உரிமையுடையோரும் சபிக்கின்றனர்.

ஆனால் எவர்கள் தம் தவறிலிருந்து பாவமன்னிப்புக் கோரி தம்மை சீர்திருத்தம் செய்துக் கொண்டு (தாம் மறைத்த வற்றை) தெளிவுப்படுத்துகின்றார்களோ அவர்களை நான் மன்னிப்பேன். நான் மிக்க மன்னிப்பவன். நிகரற்ற அன்பு டையவன்.

 எவர்கள் நிராகரித்து  நிராகரிப்பாளர்களாகவே மரணித் தும் விடுகின்றார்களோ நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ்வினதும், வானவர் களினதும் மனிதர்கள் அனைவரினதும் சாபம் உண்டாகும்.  அவர்கள் அச் சாபத்திலே நிரந்தரமாக இருப்பார்கள் அவர்களை விட்டும் வேதனை இலகுப்படுத்த மாட்டாது. அவர்கள் அவகாசம் அளிக்க படவும் மாட்டார்கள்.  (2:159- 162)

அவ்வாறே கணவன்  தன் மனைவியை தனது தேவைக்காக  படுக்கைக்கு அழைக்கும் போது தகுந்த காரணமின்றி மறுக்கின்ற  மனைவியை யும் மலக்குகள் சபிக்கின்றனர்.

صحيح البخاري (4 116)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا لَعَنَتْهَا المَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ» تَابَعَهُ شُعْبَةُ، وَأَبُو حَمْزَةَ، وَابْنُ دَاوُدَ، وَأَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ

கணவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தார் என்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டே யிருக்கின்றனர்.

அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி)

யுத்த களத்தில் முஃமின்களுக்கு உதவியாக இறங்கும் மலக்குகள்.

இறை நிராகரிப்புக்கு எதிராக ஷைத்தான்கள் படைத் திரட்டி வந்தபோது முஃமின்களுக்கு உதவியாக நின்று பலப்படுத்தக் கூடியவர் களாகவும் யுத்தம் புரியக் கூடியவர் களாகவும் மலக்குகள் களம் இறங்கினார்கள். பத்ரு களத்தில் இறங்கிய மலக்குகள் பற்றி அல்லாஹ் பின்வரு மாறு கூறுகிறான்.

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ (9) وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

உங்கள் இரட்சகனிடம் நீங்கள் உதவி தேடிய போது நிச்சயமாக நான் தொடர்ச்சியாக ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு உதவுவேன் என்று உங்கள் இரட்சகன் உங்களுக்கு பதிலளித்தான்.

நற்செய்தியாகவும் இதனால் உங்கள் உள்ளம் அமைதி பெறவுமே இதை அல்லாஹ் ஏற்படுத்தினான். உதவி என்பது அல்லாஹ் விடமேயன்றி வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன் ஞானமிக்கவன்.

(8: 9-10)

 إِذْ يُوحِي رَبُّكَ إِلَى الْمَلَائِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِينَ آمَنُوا سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ وَاضْرِبُوا مِنْهُمْ كُلَّ بَنَانٍ

நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டோரை பலப்படுத்துங்கள். நிராகரிப்போரின் உள்ளங்க ளில் நான் பீதியை ஏற்பத்துவேன். நீங்கள் அவர்களது கழுத்துக்களுக்கு மேலால் வெட்டுங்கள். இன்னும் அவர்களின் அனைத்து விரல் நுனி களையும் துண்டித்து விடுங்கள் என வானவர்களுக்கு உமது இரட்சகன் வஹி அறிவித்ததை (நபியே எண்ணிப் பார்ப்பீராக) (8: 12)

அல்லாஹ்வை துதிக்கின்ற மலக்குகள்:

மலக்குகள் அல்லாஹ்வை துதிக்கின்றவர் களாகவும் அல்லாஹ்வை துதிக்கின்ற அவைக்கு சமூகம் தருகின்றவர் களாகவும் உள்ளனர்.

وَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ  يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ

அவனிடம் உள்ள(வான)வர்கள் அவனை வணங்குவதை விட்டும் பெருமையடிக்கவோ, சோர்வடையவோ மாட்டார் கள்.

அவர்கள் சோர்வடையாது இரவு பகலாக (அவனைத்) துதித்துக் கொண்டிருப்பார்கள். (21:19.20)

فالَّذين عند ربك يسبحون له بالَّليل والنَّهار وهم لا يسأمون) فصلت: 38

இவர்கள் அனைவரும் (அல்லாஹ்வை வணங்காது) பெருமையடித்தாலும் உமது இரட்சகனிடம் இருப்போர் இரவிலும் பகலிலும் அவனைத் துதிக்கின்றனர்.மேலும் அவர்கள் சோர்வடையவும் மாட்டார்கள். (41:38)

 அல்லாஹ்வை துதிக்கின்ற முஃமின்களை மலக்குகள் பூமியில் தேடிய வண்ணம் அழைவதுடன் அந்த முஃமின் களை சூழ்ந்தவவாறு அமர்கின்றனர். இந்த மக்களின் நிலையைப் பற்றி அல்லாஹ்விடம் சென்று புகழவும் செய்கின்றனர்.

صحيح مسلم (4  2069)

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ' إِنَّ لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى مَلَائِكَةً سَيَّارَةً، فُضُلًا يَتَتَبَّعُونَ مَجَالِسَ الذِّكْرِ، فَإِذَا وَجَدُوا مَجْلِسًا فِيهِ ذِكْرٌ قَعَدُوا مَعَهُمْ، وَحَفَّ بَعْضُهُمْ بَعْضًا بِأَجْنِحَتِهِمْ، حَتَّى يَمْلَئُوا مَا بَيْنَهُمْ وَبَيْنَ السَّمَاءِ الدُّنْيَا، فَإِذَا تَفَرَّقُوا عَرَجُوا وَصَعِدُوا إِلَى السَّمَاءِ، قَالَ: فَيَسْأَلُهُمُ اللهُ عَزَّ وَجَلَّ، وَهُوَ أَعْلَمُ بِهِمْ: مِنْ أَيْنَ جِئْتُمْ؟ فَيَقُولُونَ: جِئْنَا مِنْ عِنْدِ عِبَادٍ لَكَ فِي الْأَرْضِ، يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيُهَلِّلُونَكَ وَيَحْمَدُونَكَ وَيَسْأَلُونَكَ، قَالَ: وَمَاذَا يَسْأَلُونِي؟ قَالُوا: يَسْأَلُونَكَ جَنَّتَكَ، قَالَ: وَهَلْ رَأَوْا جَنَّتِي؟ قَالُوا: لَا، أَيْ رَبِّ قَالَ: فَكَيْفَ لَوْ رَأَوْا جَنَّتِي؟ قَالُوا: وَيَسْتَجِيرُونَكَ، قَالَ: وَمِمَّ يَسْتَجِيرُونَنِي؟ قَالُوا: مِنْ نَارِكَ يَا رَبِّ، قَالَ: وَهَلْ رَأَوْا نَارِي؟ قَالُوا: لَا، قَالَ: فَكَيْفَ لَوْ رَأَوْا نَارِي؟ قَالُوا: وَيَسْتَغْفِرُونَكَ، قَالَ: فَيَقُولُ: قَدْ غَفَرْتُ لَهُمْ فَأَعْطَيْتُهُمْ مَا سَأَلُوا، وَأَجَرْتُهُمْ مِمَّا اسْتَجَارُوا، قَالَ: فَيَقُولُونَ: رَبِّ فِيهِمْ فُلَانٌ عَبْدٌ خَطَّاءٌ، إِنَّمَا مَرَّ فَجَلَسَ مَعَهُمْ، قَالَ: فَيَقُولُ: وَلَهُ غَفَرْتُ هُمُ الْقَوْمُ لَا يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ '

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்க ளில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ’உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்’ என்று அவர்கள் (தம்மில்) ஒரு வரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர் கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கை களால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களி டம் அவர்களின் இறைவன் ‘என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட் கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார் களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப் படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்’ என்று வானவர்கள் கூறுகின்றனர்.

அதற்கு இறைவன், ‘அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்த தில்லை.’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னைப் பார்த்திருந்தால் எப்படி யிருப்பார்கள்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள், இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்’ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?’ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ‘அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்’ என்பார்கள். அதற்கு இறைவன்  ‘அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்த தில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படி யிருக்கும்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்’ என்று பதிலளிப்பார்கள்.

இறைவன், ‘அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?’ என்று வினவு வான். வானவர்கள், ‘நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)’ என்று பதிலளிப்பார். இறைவன், ‘அதனை அவர்கள் பார்த்திருக் கிறார்களா?’ என்று கேட்பான். வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்ததில்லை’ என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?’ என்று கேட்பான் வானவர்கள், ‘நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமை யாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்’ என்பர். அப்போது இறைவன், ‘எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்.’ என்று கூறுவான்.

அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ‘(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்’ என்பார். அதற்கு இறைவன், ‘அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்க ளுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர) பாக்கிய மற்றவனாக ஆகமாட்டான்.’ என்று கூறுவான்.

என அபூ ஹரைரா (ரலி) அறிவித்தார். நூல்:  முஸ்லிம்.

 பாவமன்னிப்புக் கோருகின்ற மலக்குகள். 

மலக்குகள் அல்லாஹ்வை துதிப்பது போல் அல்லாஹ்வை ஈமான் கொண்டு அல்லாஹ் காட்டிய வழியை பின்பற்று பவர்களுக்காக மன்னிப்பும் கோரு கிறார்கள்.

 الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ (7) } غافر: 7

எவர்கள் அர்ஷைச் சுமந்திருக்கின்றார்களோ அவர்களும், அதனைச் சூழ உள் ளோரும் தமது இரட்சகனின் புகழைக் கொண்டு துதிக்கின்றனர். மேலும் அவர்கள் அல்லாஹ் வை விசுவாசம் கொள் கின்றனர்.

மேலும் எங்கள் இரட்சகனே! நீ யாவற்றையும் அருளாலும் அறிவாலும் சூழ்ந்திருக்கிறாய். எனவே, பாவமன்னிப்புக் கோரி உனது பாதையைப் பின்பற்றுவோரை நீ மன்னித்து நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாது காப்பாயாக என விசுவாசம் கொண்டோருக் காகப் பாவ மன்னிப்புக் கோருகின்றனர். (40:7)

பிரார்த்தனை செய்யும் மலக்குகள்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து நற்காரியம் புரியும் முஃமினான நல்ல மக்களுக்கு மலக்குகள் பிரார்த்தனையும் செய்கிறார்கள்.

صحيح البخاري (2 115)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ العِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا '

ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்கு கின்றனர். அவ்விருவரில் ஒருவர், அல்லாஹ்வே தர்மம் செய்பவருக்கு பிரதி  பலனை அளித்திடுவாயாக என்று கூறு வார். மற்றொருவர், அல்லாஹ்வே! (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்பவருக்கு அழிவை கொடுப்பாயாக எனக் கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல் புகாரி)

صحيح البخاري (1/ 132)

عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " المَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ، مَا لَمْ يُحْدِثْ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، لاَ يَزَالُ أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا دَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ

உங்களில் ஒருவர் வுழு முறியாத நிலையில் தொழுகையில் இருக்கும் காலமெல்லாம் அவருக்காக மலக்குகள் யா அல்லாஹ் இவருக்கு மன்னிப்பை வழங்குவாயாக. இவ ருக்கு அருள் புரிவாயாக என்று கூறுகின்றனர் என நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) (நூல்: புகாரி)

கருவில் விதியை எழுதும் மலக்குகள்.

ஒவ்வொரு மனிதனும் உலகத்தில் பிறக்குமுன்பே அவனது விதி குறித்து எழுதப்படுகிறது. கருவரையில் குழந்தையாக உறுமாறுகின்ற சந்தர்ப்பத்தில் மலக்குகளை அல்லாஹ் அனுப்பி  அம்மனிதனின் முடிவுகள் சம்பந்தமாக எழுதச் செய்கிறான். 

صحيح البخاري (4 111)

 قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ المَصْدُوقُ، قَالَ: ' إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، وَيُقَالُ لَهُ: اكْتُبْ عَمَلَهُ، وَرِزْقَهُ، وَأَجَلَهُ، وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الجَنَّةِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ

 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்ட வருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்;  உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை - போன்று) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலி யா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்கு மிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்கு மிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத் தால் சொர்க்கம் புகுவார்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

மனிதர்களை கண்கானிக்கின்ற  மலக்குகள்.

அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட சில மலக்குகள் மனிதர்களை தூக்கத்திலும் விழிப்பி லும் பாதுகாக்கின்றவர்களாகவும் கண்காணிக் கின்றவர்களாகவும் உள்ளார்கள்.

{لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ إِنَّ اللَّهَ} الرعد: 11

         மனிதனாகிய) அவனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள். (13:11)

மலக்குகளின் இந்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு ஒருநாளைக்கு  இரு நேரங்களில் மேற்கொள்ளப்படக் கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

صحيح البخاري (4 113)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' المَلاَئِكَةُ يَتَعَاقَبُونَ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ، وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الفَجْرِ، وَصَلاَةِ العَصْرِ، ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ، فَيَقُولُ: كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي، فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ يُصَلُّونَ '

இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். ஃபஜ்ருடைய தொழுகையிலும் அஸருடைய தொழுகையிலும் ஒன்று சேருகிறார்கள். பிறகு, அல்லாஹ் - அவனோ மிகவும் அறிந்தவன் - அவர்களிடம், ‘(பூமியி லுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?’ என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், ‘அவர்களை உன்னைத் தொழுகிற நிலையில் விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்’ என்று பதிலளிப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) (நூல்: புகாரி)

அது போல் மனிதர்களின் பட்டோலையை எழுதும் மலக்குளும் உள்ளார்கள்.

{إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ (17) مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ } ق: 17، 18

வலப்புறமும் இடப்புறமும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு (வான)வர் எடுத்தெழுவதை (நபியே நீர் எண்ணிப்பார்ப்பீராக) .(எழுதுவதற்கு தயாரான) கண்காணிப்பாளர் அவனிடம் இருந்தேயன்றி எந்தவொரு வார்த்தை யையும் அவன் மொழிவதில்லை. (50:17.18)

அல்குர்ஆனை பாதுகாக்கும் மலக்குகள்.

அல்லர்ஹ்வுடைய கண்ணியமான வாரத்தை களான அல்குர்ஆன் லவ்ஹுல் முஹ்பூலில் பதிவு செய்யப்பட் டுள்ளது. அங்கிருந்து தான் நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் அல்குர்ஆன் கொண்டு வந்து கொடுக் கப்பட்டது. அந்த எழுதப்பட்ட ஏடு மலக்குகள் மூலமாக பாதுகாக்கப்படுகிறது.

{إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ (77) فِي كِتَابٍ مَكْنُونٍ (78) لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ (79) تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ } الواقعة: 77 -80

நிச்சயமாக இது கண்ணியமிக்க குர்ஆனாகும். அது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கின்றது. பரிசுத்தமான (வான)வர்களைத் தவிர (வேறு எவரும்) அதனைத் தொடமாட்டார்கள். (56:77-79)

فِي صُحُفٍ مُكَرَّمَةٍ  مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ  بِأَيْدِي سَفَرَةٍ  كِرَامٍ بَرَرَةٍ

(இக்குர்ஆன்) கண்ணியமிக்க உயர்வான தூய்மைப் படுத்தப்பட்ட ஏடுகளில் உள்ளதாகும்.

(இவ்வேடுகள்) கண்ணியம் மிகுந்த நல்லோர் களான (வானவர்கள் எனும்) எழுதுவோரின் கைகளில் உள்ள தாகும். (80:13-16)

அல்லாஹ்வின்  பரிசுத்தமான குர்ஆனை முறையாக பேணி ஓதிவருபவர்கள் மறுமையில் மலக்குகளுடன் இருக்கும் பாக்கியத்தை பெறுகிறார்.

குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதி வருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளுடன் இருப்பார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு.’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) (நூல்:  புகாரி

மலக்குகள் நுழையாத வீடுகள்

அல்லாஹ்வின் அருள்களை சுமந்து வருகின்ற மலக்குகள் முஃமின்களின் வீடுகளுக்கு வருகிறார்கள் என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். அந்த பாக்கியத்தை பெற்றுக் கொள்வதற்கு ஒரு விசுவாசி தன்னுடைய வீட்டை அல்லாஹ்வினதும் அல்லாஹ்வுடைய தூதரினதும் வழிகாட்டலுக்கேற்ப அமைத்துக் கொள்ள வேண்டும். மலக்குகள் நுழையாத வீட்டைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் பின் வருமாறு எச்சரிக்கை செய்கிறார்கள். 

صحيح البخاري (4 114)

 أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: سَمِعْتُ أَبَا طَلْحَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ، وَلاَ صُورَةُ تَمَاثِيلَ

உருவப்படங்களும் நாயும் உள்ள வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி)

 ஜூம்ஆவுக்கு வருகைத் தருபவர்களை பதிவு செய்யும் மலக்குகள்.

ஜூம்ஆவுடைய நாள் மிக முக்கியமான தினமாகும். அந்நாளில் முஸ்லிம்கள் கண்டிப்பாக பள்ளிவாசலுக்கு வரு கைத் தரவேண்டும். அங்கே நடைப் பெறும் குத்பாவிலும் பங்கேற்க வேண்டும். அந்த நாளில்  பள்ளிக்கு வருபவர்களுக்கு விஷேடமான நன்மைகளும் வழங்கப் படுகின்றன. அந்த ஏற்பாட்டை அல்லாஹ் மலக்குகள் மூலமாக செய்கிறான். மலக்குகள் ஜீம்ஆ நடைப் பெறும் பள்ளிவாசலுக்கு வந்து வருகைத் தருபவர்கள்pன் நன்மைகளை பதிவு செய்கிறாரகள்.

صحيح البخاري (4 111)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَص:112ஸ: «إِذَا كَانَ يَوْمُ الجُمُعَةِ، كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ المَسْجِدِ المَلاَئِكَةُ، يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ، فَإِذَا جَلَسَ الإِمَامُ طَوَوُا الصُّحُفَ، وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ

ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்று வதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள் என நபிழ(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) (நூல்: புகாரி)

 சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் காவலாளிகளாக இருக்கும் மலக்குகள்

 மறுமை நாளில் நல்லவர்களும் கெட்டவர்களும் ஒதுங்குமிடங்களை அல்லாஹ் தயார் செய்துள்ளான்.

நல்லவர்கள் (ஈமான் கொண்டவர்கள் சுவர்க்கத்திற்குச் சென்று இன்பம் அனுபவிப்ப வர்களாகவும் தீயவர்கள் பாவிகள் நிராகரிப்பாளர்கள் நரகத்திற்குச் சென்று தண்டனையை அனுபவிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

 சுவர்க்கத்திற்கு என்று மலக்குகளும் நரகத்திற்கு என்று மலக்குகளும் பாது காவர்களாக அல்லாஹ்வினால் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

நாளை மறுமையில் நரகம் கொண்டு வரப்படும். அதற்கு எழுபதாயிரம் கடிவாளம் இருக்கும். ஒவ்வொரு கடிவாளத் திற்கும் எழுபது மலக்குகள் இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரழி) (நூல்: முஸ்லிம்)

இந்த பயங்கரமான நரகத்திற்குள் குற்றமிழைத் தவர்கள் நுழையும் போது நரகத்திற்கு பொறுப்பான மலக்குகள் குற்றவாளிகளுடன் பேசுவார்கள்.

{وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنْذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ (71) قِيلَ ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ} الزمر: 71، 72

“நிராகரித்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்தின் பால் இழுத்துக் கொண்டு வரப்படுவர். அவர்கள் அங்கு வந்தவுடன் அதன் வாயில்கள் திறக்கப்படும். உங்களது இரட்சகனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக் காட்டி உங்களது இந்நாளின் சந்திப்பை உங்களுக்கு எச்சரிக்கை செய்யக் கூடிய தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா? என அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பர். அதற்கவர்கள் ஆம் (வந்தனர்) எனக் கூறுவர். எனினும், வேதனையின் வாக்கு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகி விட்டது. (39:71)

இந்த நரகத்தின்  பொறுப்பாளியாக மாலிக் (அலை)எனும் மலக்கு நியமிக்கப்பட்டுள்ளார்;.

صحيح البخاري (4 116)

عَنْ سَمُرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي قَالاَ الَّذِي يُوقِدُ النَّارَ مَالِكٌ خَازِنُ النَّارِ، وَأَنَا جِبْرِيلُ وَهَذَا مِيكَائِيلُ»

நான் இன்றிரவு இரண்டு பேர்களைக் (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்தனர். (அந்த இருவர் சார்பாக அவர்களில் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் பேசும் போது:) ‘அதோ, அங்கே நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல், (என்னுடனிருக்கும்) இவர் மீக்காயீல் ஆவார் என்று கூறியதாக நபி(ஸல்) அவர்கள்.  அறிவிப்பவர். ஸமுரா (ரலி) (நூல்: புகாரி)

நரகவாசிகள் தண்டனையை பொறுக்க முடியாமல் மாலிக் (அலை) அவர்களை அழைத்து கதருவார்கள்.

وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ قَالَ إِنَّكُمْ مَاكِثُونَ } الزخرف: 77

43:77.         மேலும், அவர்கள் (நரகத்தில்) ''யா மாலிக்'' உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!'' என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் ''நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே என்று கூறுவார்.

நல்லவர்கள் சுவர்க்கத்திற்குள் நுழையும் போது அதன் காவளாளிகள் சுவனவாசிகளுக்கு நற்செய்தி கூறுவார்கள்.

{وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ (73) وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعْدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاءُ فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ} الزمر: 73، 74

தமது இரட்சகனை அஞ்சியோர் சுவர்க்கத்தின் பால் கூட்டங்கூட்டமாகக் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் அங்கு வரும்போது அதன் வாயில்களோ திறக்கப்பட் டிருக்கும். அதன் காவலர்கள் உங்கள் மீது சாந்தி உண்டா கட்டும். நீங்கள் மணம் பெற்று விட்டீர்கள். நிரந்தரமாக இருப்பவர்களாக நீங்கள் இதில் நுழைந்து விடுங்கள் என்று அவர்களுக்குக் கூறு வார்கள். (39:73)

 மறுமையில் ஷபாஅத் செய்யும் மலக்குகள்.

மறுமையில் நல்லவர்களுக்கு பரிந்துரை செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் நபிமார் களுக்கும் முஃமின்களுக்கும் மலக்குகளுக்கும் வழங்குவான் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்கள். (நூல்: புகாரி)

அந்நாளில் அல்லாஹ் நாடிய முஃமின்களுக்கு அல்லாஹ் வின் அனுமதியைப் பெற்று மலக்குகள் மறுமையில் ஷபாஅத் செய்வார்கள்.

وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى

வானங்களில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் பரிந்துரை (ஷபாஅத்) அல்லாஹ் அவர் களுக்கு அனுமதியளித்த பின்னர் அவன் நாடிப் பொருந்திக்கொண்டோருக்கேயன்றி எவருக் கும் பயனளிக்காது. (53:26)