பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் (⮫)


 பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள்

وجوب بر الوالدين

 பெற்றோர்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

எல்லா புகழும் உலக இரட்சகனான அல்லாஹ் வுக்கே. ஸலவாத்தும் ஸலாமும் எங்கள் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தி னர், தோழர்கள் அனைவர் மீதும் உரித்தாகட் டும். பெற்றோருக்கு உபகாரம் செய்வதும், அவர்களுக்கு வழிப்படுவதும் கடமையென்றும், அவர்களை நோவினை செய்வதை எச்சரித்தும் விபரிக்கும் இத்தொகுப்பு ஹதீஸ் களையும், அல் குர்ஆன் வசனங்களையும், பெரும் இஸ்லாமிய அறிஞர்களின் பத்வாக்களையும் உள்ளடக்கிய தாகும்.

 பெற்றோருக்கான உபகாரம்

  எவ்வாறு அமையும்?

“அவர்களிருவரில் ஒருவருக்காக உம்ரா செய்வது (ஏற்கெனவே உம்ரா நிறைவேற்றி யிருப்பினும்) கூடுமா?” என சங்கைக்குறிய அஷ் ஷெய்க் இப்னு உதைமீன் அவர்களிடம் கேள்வி கேட்கப் பட்டது.

         அதற்கு அவர்கள் பின்வருமாறு பதில் கூறினார்கள். “பெற்றோருக்கான உபகாரம் என்பது பொருள், பணம், கண்ணியம், உடல் உழைப்பு என்பன மூலமாக செய்யப்படும் ஒரு கடமையாகும். பெற்றோரை நோவினை செய்வது பெரும் பாவங்களை சேர்ந்ததும், அவர்களின் உரிமையை மறுப்பதுமாகும்.  அவ்விருவரும் உயிர் வாழும் போது உபகாரம் செய்வது நியாயமானதாகும்.”

மேலே கூறப்பட்டது போல் மரணத்தின் பின் பெற்றோருக்கான உபகாரமாவது, அவர்களுக் காக பிரார்த்திப்பதும், பிழை பொறுக்கத் தேடு வதும், அவர்களது வஸிய்யத்தை நிறை வேற்று வதும், அவர்களது  நண்பர்களை கண்ணியப் படுத்துவதும், அவர்கள் மூலமான இரத்த உறவுகளை சேர்ந்து நடப்பதும் ஆகிவைகளை அடக்கியது. இவ்வைந்து விடயங்களும் பெற்றோரின் மரணத்தின்  பின்னர் அவர்களுக் காக செய்யும் உபகாரமாகும்.

பெற்றோருக்காக, பிறருக்கு ஸதகா கொடுப்பது ஆகுமானதே. எனினும் பிள்ளை களை ஸதகா கொடுக்கும்படி யாராலும் பணிக்க முடியாது. நீ பெற்றோர்களுக்காக ஸதகா கொடுக்காத போதிலும் அவர்களுக்காக பிரார்த்திப்பது மிகவும் மேலானது. ஏனெனில், றசூல் (ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறினார் கள். “ஒரு மனிதன் மரணித்தால், மூன்று விஷயங்களை தவிர ஏனைய எல்லா செயல்களும் அவனை விட்டும் துண்டிக்கப் பட்டு விடுகின் றன. அவையாவன, நிலையான தர்மம், (ஸதகா ஜாரியா) , (மக்கள்) பயன் பெரும் அறிவு, அவர்களுக்காக துஆ புரியும் ஸாலிஹான பிள்ளை.”

இந்த ஹதீஸின் படி, ரசூல் (ஸல்) அவர் கள் மரணித்த பெற்றோருக்காக ஒரு பிள்ளை செய்யும் ஸதகா, உம்ரா, அல் குர்ஆன் ஓதல் ஆகிய நல்லமல்களை விட  ஒரு பிள்ளை தன் பெற்றோருக்காக கேட்கும் துஆ மிகச் சிறப்பா னது என கூறியுள்ளதும், முன் குறிப்பிட்ட செயல்களுக்கு சமமான அந்தஸ்து கொடுக்கப் படா விட்டாலும் துஆ கேட்பது மிகவும் சிறப்பானது என்பதற்கு ஆதாரமாகும். அதே சமயத்தில் சயீத் இப்னு அப்பாதா (றலி) அவர்கள் றசூல் (ஸல்) அவர்களுடம் “ யா றசூலுல்லாஹ்! எனது தாயார் திடீரென வபாத்தா கிவிட்டார்கள். அவர்கள் பேசி யிருந்தால் ஸதகா கொடுத்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு பதிலாக நான் ஸதகா கொடுக்கலாமா?” எனக் கேட்டார். அதற்கு றசூல் (ஸல்) அவர்கள் “ஆம்” என்றார்கள்.

பெற்றோருக்கு பதிலாக உம்ரா செய்வதை விட, ஸதகா அல்லது அது போன்ற விடயங் களை செய்வதை விட, அவர்களுக்காக துஆவை அதிகரிக்குமாறு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதுவே ரசூல் (ஸல்) அவர்கள் காட்டிய வழியுமா கும். அதோடு ஒருவர் தன் பெற்றோருக்காக ஸதகா கொடுப்பதையோ, உம்ரா செய்வதை யோ, தொழுவதையோ, குர்ஆன் ஓதுவதையோ நாங்கள் மறுக்க வில்லை. அதாவது பெற்றோர் கள் இருவருமோ அல்லது ஒருவரோ உம்ரா  அல்லது ஹஜ்ஜு போன்ற அமல்களை நிறை வேற்றாத நிலையில் வபாத்தாகி இருந்தால் ஒரு பர்ளை நிறைவேற்றுவது, துஆவை விடச் சிறப்பானது எனக் கூறலாம். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன் (பத்வா இஸ்லாமிய்யா)

அஷ் ஷேய்க் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். “நாங்கள் உடல் ரீதியாக உபகாரம் செய்வதும், அல்லாஹ்விடம் பாவமற்றதும், உங்களுக்கு தீங்கு ஏற்படாதது மான அவர்களின்  ஏவல்களுக்கு  வழிப்படுவ தும், பாசத்துடன், கருணையுடன் அவர்களுடன் பேசுவதும், இயலாமை, நோய், முதுமை காரணமாக அவர்களை ஒதுக்காமல் இருப்ப தும், அவற்றை ஒரு சுமையாக கருதாமல் இருப்பதும் பெற்றோருக்கு செய்யும் உபகாரங்க ளாகும். ஏனெனில், நீங்களும் உங்கள் பிள்ளை களுக்கு பெற்றோராவீர்கள். உங்கள் பெற்றோர் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது போலவே நீங்களும் உங்கள் பிள்ளைகளிடமிருந்து எதிர் பார்ப்பீர்கள்.

எவர் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்தாரோ, அவரது பிள்ளைகள்அவருக்கு உபகாரம்செய்வர். எவர் பெற்றோருக்கு வேதனை செய்தாரோ அவரது பிள்ளைகள் அவரை வேதனை செய்வர்.  நீங்கள் எவ்வாறு கொடுக்கின்றீர்களோ அதுவே உஙகளுக்கு கிடைக்கும்.

உங்களது தாய்..பின்னரும்

உங்கள் தாய்...

“அல்லாஹ் ஏதன் தந்தையை விட தாயை சிறப்பாக்கியுள்ளான்?”

றசூல் (ஸல்) அவர்கள் தாயைப் பற்றி கூறும் போது மூன்று தடவையும், தந்தையை பற்றி ஒரு தடவையும் ஏன் குறிப்பிட்டு கூறியுள்ளார் கள்?” என ஷெய்க் அப்துல்லாஹ்  அல் ஜிப்ரீன் அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள் பின் வருமாறு பதிலளித்தார்கள்.

அபு ஹுரைரா (றழி) அவர்கள் மூலம் றிவாயத் செய்யப்பட்ட ஸஹீஹான ஹதீஸ் இதனை உறுதிப் படுத்துகின்றது. அதாவது “யா றசூலுல்லாஹ்! மனிதர்களில் நான் தோழமை வைத்துக் கொள்வதற்கு மிகவும் அருகதையுள்ள வர் யார்?” என ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உனது தாய்.” எனக் கூறினார்கள்.

 “அடுத்தது யார்?” என அம்மனிதர் கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “உனது தாய்“ என்றார்கள்.

“அடுத்து யார்?” என்று அம்மனிதர் மீண்டும் கேட்டார். அதற்கும் “உனது தாய்?” என்று பதிலளித்தார்கள்.

“அடுத்தது யார்?” என கேட்கப்பட்டபோது “உனது தந்தை” என நான்காவது முறையாக பதில்  கிடைத்தது

இன்னுமொரு ரிவாயத்தில், இக்கேள்விக்கு தொடர்சியாக மூன்று முறை உனது தாய், உனது தாய், உனது தாய், உனது தந்தை, பின்னர் அடுத்துள்ளவர்கள என பதில் கூறி னார்கள். ஒரு தாய் தன் வயிற்றில் குழந்தையை சுமப்பதும்,  அதனோடு தொடர்பு டைய பிள்ளை பேறு உட்பட எல்லா வேதனை களையும் சகித்துக் கொள்வதும், பாலூட்டு வதும், வளர்ப்பதுமான இம் மூன்று செயல் களும் தந்தையால் செய்ய முடியாதவை. இதனால் தாய் மேற் கூறப்பட்ட உரிமையை பெறுகிறார். அதே நேரத்தில் தந்தையானவர் வாழ்க்கை செலவுக்கு வேண்டியவற்றை சம்பாதிப்பதினாலும், பிள்ளைகளை கற்பிப்பது தொடர்பான வேலைகளை செய்வத னாலும் ஒரு உரிமையை மாத்திரம் பெறுகின் றார். அல்லாஹ்வே நன்கறிந்தவன். (பத்வா இஸ்லாமிய்யா)

ஒரு தடவை மதிப்பிற்குறிய அஷ் ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ் அவர்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது.

“நான ஒரு விதவையை திருமணம் செய்ய விரும்புகிறேன். எனது தந்தையும், மகளும், குடும்பத்தினர்களும் அதனை ஏற்றுக் கொள் கின்றனர். எனினும் எனது தாய் அதை விரும்ப வில்லை. இச்சந்தர்ப்பத்தில் தாயின் விருப்பத் தை பொருட் படுத்தாமல் இத் திருமணத்தை செய்ய என்னால் முடியுமா? அவ்வாறு செய்தால் தாயை வேதனை படுத்தியதாக நான் ஆவேனா?”

அஷ் ஷெய்க் அவர்கள் பின்வருமாறு பதிலளித் தார்கள்.

“தாயின் உரிமை மிகவும் வலுவானது. தாய்க்கு உபகாரம் செய்வது வாஜிபான விடயங்களில் மிகவும் முக்கியமானது. மனிதர்களில் தாயே சிறப்பான புத்திமதி கூறுபவர்  என்பதினாலும், சில வேளைகளில் உனக்கு தீங்கு ஏற்படும் குணங்கள் அப் பெண்ணிடம் இருப்பதை தாய்  அறிந்திருக்ககூடும் என்பதனாலும்,  அப் பெண்ணைத் தவிர வேறு எத்தனையோ பெண்கள்  இருப்பதினாலும், அல்லாஹ் தன் குர்ஆனில் “எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு (ஒவ்வொரு சங்கடத்தி லிருந்தும்)வெளியேறும் வழியை அதன் ஆக்கு வான். மேலும் அவர் எண்ணியிராத விதத்தில் அவருக்கு வாழ்வாதரங்களை அவன் வழங்கு வான். எவர், அல்லாஹ்வின் மீது (தன் காரியத்தை ஒப்டைத்து முழுமையாக)  நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை அடைந்தே  தீருவான். (ஆயினும்) அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை திட்டமாக நிர்ணயம் செய்திருக்கிறான்.” சூரா தலாக் வசனம் 2,3ல் கூறுவதினாலும் உன் தாய் விரும்பாத சம்பந்தப் பட்ட பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம். என உங்களுக்கு நான் உபதேசம் செய்கிறேன்.”

எந்த விஷயங்கள் உங்களது மார்க்க, உலக விவகாரங்களுக்கு நன்மை பயிற்குமோ அவற்றை அல்லாஹ் இலகுவாக்கட்டும்.

 பெற்றொருக்கு உபகாரம் செய்வது ஜிஹாத், ஹிஜ்ரத்தை விட முதன்மை படுத்தப்பட்ட விடமாகும்

அபூ ஹுறைறா (ரழி) அவர்கள் மூலம் அறிவிக் கப் படும்  ஹதீஸில் இவ்வாறு கூறுகிறார்கள். “ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு ஜிஹாத் செய்ய அனுமதி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘உங்களது இரு பெற்றோர்களும் உயிரோடு இருக்கிறார்களா?’ எனக் கேட்டார்கள்’. அதற்கு அம் மனிதர் ‘ஆம்’ ​ எனக் கூறினார். ‘அப்படியாயின் ஜிஹாத் அவ்விருவரிலும் உங்களுக்கு உண்டு. அதை செய்யுங்கள்.’ எனக் கூறினார்கள்.” றிவாயத் முஸ்லிம்.

 இஸ்லாத்துக்கு மாறு செய்யாத  வகையில் பெற்றோருக்கு வழிப்படுதல்.

ஒரு தடவை மதிப்பிற்குரிய அஷ் ஷெய்க் அப்துல் அஸீஸ்  பின் பாஸ் அவர்களிடம்  பின் வருமாறு கேட்கப்பட்டது. “நல்ல நண்பர்களை விட்டு விடும் படியும்,  அவர்களோடு உம்றா வை நிறைவேற்றப் போக வேண்டாம். (நானோ தனிமையாக போக முடியாதவன். ஏனெனில் வழியில் பிறரின் உதவி எனக்கு தேவையென் பதை எனது தாயும் அறிவாள்) என்றும் என் பெற்றோர்கள் என்னை கேட்டுக் கொண்டனர்.  இச் சூழ் நிலையில் அவ்விருவரையும் வழிப்படு வது என் மீது வாஜிபாகுமா?

இதற்கு அஷ் ஷெய்க் பின்வருமாறு பதில் கூறினார்கள். “அல்லாஹ்விற்கு மாறு செய்யும் விடயத்திலோ, உங்களுக்கு  தீங்கு  ஏற்படும் எனும் விடயத்திலோ, பெற்றோரை வழிப்பட வேண்டிய தில்லை. உனது தாய் இஸ்லாம் மார்க்கத்தில் இல்லாத நிலையிலும், நீ திருமணம் செய்யவுள்ள பெண் இஸ்லாமிய மார்க்கத்திலும்  உள்ள  இச்சந்தர்ப்பத்தில், தாயின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டிய தேவையில்லை.

ஏனெனில், நபி (ஸல்) அவர்கள பின் வருமாறு  கூறியிருந்தனர். “வழிப்பாடு என்பது நியாய மான  விடயங்களில் மாத்திரம்தான்” என்றும், “அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் எந்த ஒரு படைப்பையும் வழிப்பட வேண்டிய அவசிய மில்லை.”

நல்லவருடன் சேர வேண்டாம் அல்லது கெட்ட வர்களுடன் தோழமை கொள்ளும்படி பெற்றோரோ அல்லது வேறு எரோயினும் கூறினால் அவர்களக்கு அமைதியாகவும், சிறந்த அணுகு முறை மூலமும் எடுத்துக் கூறுங்கள். உதாரணமாக நல்லவர்களுடன் சேரவே என் மனம் விரும்புகிறது. அவர்கள் மூலம் கல்வி போன்ற பிரயோசனங்களை பெறுகின்றேன் என்றும்,  அவர்களுக்கு நீ பதில் கூறும் போது மென்மையாகவும் நடந்துக் கொள். நல்லவர்களின் தோழமையை உன் பெற்றார் தடுத்தால் மேலே கூறிய இரு ஹதீஸ்களின் அடிப்படை யில் அவர்களுக்கு வழிப் பட வேண்டிய அவசியம் இல்லை. எனினும் நல்லவர்களுடன் சேர்வதையோ, அவர்களோடு பயணிப்பதையோ பெற்றோரி டம் கூற வேண்டாம். மாறாக, கெட்டவர் களுடன் சேரும்படி அல்லது புகை பிடித்தல், போதைப் பொருள் பாவித்தல், விபச்சாரத்தில் ஈடுபடல் போன்ற இவற்றில் ஒன்றையோ அல்லது அவை போன்ற பாவமான எதையோனும் ஏவினால், அவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. (பத்வா இஸ்லாமிய்யா)

ஒரு தடவை அஷ் ஷெய்க் அவர்களிடம் பின் வருமாறு கேட்கப்பட்டது. “ எனது தந்தை புகை பிடிப்பவர். கடைத்தெருவுக்கு  சென்று சிகரட் வாங்கி வரும்படி என்னை பணிக்கின்றார். அவ்வாறு நான் செய்தால் பாவமாகுமா? நான் செய்யா விட்டால் பிரச்சினை ஏற்படும். என்பதையும் அறிவேன். தயவு செய்து விடை தாருங்கள்.”

அஷ் ஷெய்க் அவர்களின் விடை பின்வருமாறு;

“புகை பிடித்தல் பின்வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் அல்லாஹ் ஹராமாக்கிய கெட்டவை களை சேர்ந்ததும்.  பல் வேறு தீங்குகளை கொண்டது மாகும்.  எனவே அதை தவிர்ப்பது உங்கள் தந்தை மீது வாஜிபாகும். அல்லாஹ் தன் திரு மறையில் “அல்லாஹ் அவர்களுக்கு நல்லவை களை ஹலாலாக்கு கின்றான். கெட்டவை களை ஹராமாக்குகின்றான்.” (அல் அஃராப் 157) மேலும் ‘அவர்களுக்கு ஹலாலாக்கப்பட்டவை கள் எவை? என உம்மிடம் கேட்கின்றார்கள். (நபியே!) சொல்லுவீராக். உங்களுக்கு நல்ல வைகளே ஹலாலாக்கப் பட்டுள்ளது. (அல் மாயிதா;4)

அல்லாஹ் நல்லவைகளை ஹலாலாக்கி யிருப்ப தாக தெளிவாக கூறியுள்ளான். புகை பிடித்தல் தீங்கு விளைவிக்கக் கூடிய,கெட்ட விடயமாகும்.

உன் தந்தை மீதும், புகை பிடிப்பதை பரிமாறிக் கொள்கின்ற  மற்றவர்கள் மீதும் தவ்பா செய்வ தும், அவர்களின் சபையில் உட்காருவதை தடுத்துக் கொள்வதும் கடமையாகும். புகை பிடிக்கின்ற விடயத்திலோ அது தவிரவுள்ள பாவமான காரியத்திலோ உதவுவதும் உனக்கு ஆகாது.

றசூல் (ஸல்) அவர்கள் “தீன் என்பது நல்லுபதே சமாகும்”  என்று கூறினார்கள். “இது யாருக்கு யா றசூலுல்லாஹ்?” என்று கேட்கப்பட்டது. “ அல்லாஹ்வுக்கும், றசூலுக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும், பொது மக்களுக்குமாகும் (ரிவாயத் முஸ்லிம்) எனக் கூறியிருக்கும் இந்த ஹதீசை நடை முறைபடுத்துமுகமாக உன் மீதும் உன் சகோதரர்கள் மீதும், உனது சிறிய, பெரிய தந்தைகள் மீதும், உன் தந்தைக்கு உபதேசம் செய்வதும் அதன் தீங்குகளைப் பற்றி எச்சரிக்கை செய்வதும்  கடமையாகும்.

நல்லவற்றுக்கு அல்லாஹ் உன் தந்தைக்கு உதவுவானாக. இப்பாவத்திலிருந்தும் ஏனைய பாவங் களிலிருந்தும் தவ்பா செய்ய உன் தந்தைக்கு உதவுவானாக. நல்ல விடயங் களுக்கு உன்னை உதவியாளனாக்க உதவுவா னாக.  அவ்வாஹ் மிகவும் நெருக்கமாக இருந்து கேட்போனாவான்.

 சிந்தித்து பாருங்கள்

ஒரு தடவை இப்னு உமர் (ரழி)  அவர்கள் ஒரு மனிதரை கண்டார்கள். அவர் தன் தாயை முதுகில் சுமந்துக் கொண்டு கஃபாவை தவாப் செய்துக் கொண்டிருந்தார். உமரை (றழி) அங்கு கண்ட அம் மனிதர் “யா இப்னு உமரே! இவருக்கு (எனது தாய்க்கு) நான் சன்மானம் கொடுத்து விட்டதாக நீங்கள் நினைக்கிறீர் களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர், “இல்லை. அது ஒரு தடவையில் முடியாது, இருப்பினும் நீ நல்லது செய்து விட்டாய்.  சிறிய செயலின் மூலம் அதிக நன்மையை அல்லாஹ் தருவானாக.” என கூறினார்கள்.

சுப்யான் இப்னு உயைனா அவர்கள் கூறுகிறார் கள்.“ ஒரு மனிதன் பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தார். உட்கார வேண்டும் என்ற எண்ணத் தில்,  நின்று தொழுதுக் கொண்டிருந்த தன் தாயின் மீது மோதி விட்டார். இதை அறிந்த தாய் நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக மகனுக்கு இடம் கொடுத்தார்.

 உன் தாய்க்கு உபகாரம் செய்வது போல் தந்தைக்கும் உபகாரம் செய்.

மதிப்பிற்குரிய அஷ் ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ் அவர்களிடம் ஒருவர் இவ்வாறு கேட்டார்.

“நான் இரானுவத்தில் சுமாரான ஒரு சம்பளத் திற்கு தொழில் புரிகிறேன். அதில் ஒரு பகுதியை என் தாய்க்குக் கொடுக்கிறேன். ஏற்கெனவே எனக்காக அவர்கள் செய்த செலவுக்கு எது நன்றிக் கடனுக்காகும் என நினைக்கிறேன். என் தந்தை நான் சிறுவனாக இருக்கும் போது கூட எனக்காக செலவு செய்யவில்லை. அதனால் நான் அவருக்கு எதுவும் கொடுப்பதில்லை. இது விடயத்தில் என் மீது ஏதேனும்  பாவம் உண்டாகுமா?” எனக் கேட்டார்.

அதற்கு ஷேய்க் அவர்கள், “உனது பெற்றோர் நீ சிறிய வயதில் இருக்கும் போது உனக்காக செலவு செய்யாவிடினும், பெற்றோருக்காக பிள்ளைகள் செலவு செய்வது வாஜிபான விடயங்களில் மிகவும் முக்கியமானதாகும்.” என பதிலளித்தார்கள்.

இது தொடர்பாக அல்லாஹ் கூறியிருப்பது சூரா லுக்மான்14) “உன் தந்தைக்கு உபகாரம் செய்வதும், சொல்லாலும், செயலாலும் அழகிய முறையில் நடந்துக் கொள்வதும், அவருக்கு யாதேனும் தேவை இருப்பின் உன்னையும், உன் குடும்பத்தையும் பாதிக்காத விதத்தில் நிறை வேற்றுவதும் உன்மீது கடமையாகும். இவ்வாறு செய்வது, “தானும், பிறரும் பாதிக்கப்படாத விதத்தில்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப் பதற்கு ஒப்பாகும். உன்னிடம் வசதியிருப்பின், தனது தேவையை கேட்டுப் பெறுகின்ற உரிமை உனது தந்தைக்கு உண்டு. இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உட்கொண்டவை களில்  மிகவும் சிறப்பானது உங்கள் உழைப்பி லிருந்து பெற்றதாகும். நிச்சயமாக உங்கள் பிள்ளைகள் உங்கள் உழைப்பில் நின்றும் உள்ளவர்களே.” என்று கூறினார்கள். உனது தாய்க்கும், தந்தைக்கும் உபகாரம் செய்யும் படி யும், அவர்களின் பொருத்தத்தினை சம்பாதித்துக் கொள்ளும் படியும் நான் உங்களை உபதேசிக் கின்றேன். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றோரின் பொருத்தத்தில் உண்டு. அவனது வெறுப்பு பெற்றோரின் வெறுப்பில் உண்டு” எனக் கூறியதனால் அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்பீக் செய்வானாக. (பதாவா இஸ்லாமிய்யா)

பெற்றோருக்கு உபகாரம் புரிதல் வாழ்நாளிலும், றிஸ்கிலும் (வாழ்வாதாரம்)  அதிகரிப்பை உண்டாக்கும்.

அனஸ் இப்னு மாலிக் அவர்கள் கூறுகின்றார் கள். “நபி (ஸல்) அவர்கள்சொன்னார்கள். எவனொருவன் தன் வாழ் நாளையும், வாழ்க்கை  வசதிகளையும் அதிகரித்துக் கொள்ள விரும்பு கின்றானோ, அவன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்யட்டும்.  தனது இனபந்துக்களை சேர்ந்து நடந்துக் கொள்ளட்டும்.” றிவாயத்து அஹ்மத்.

தூபான் (றழி)  அவர்கள் கூறுகின்றார்கள். “மனிதன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனது றிஸ்கு தடுக்கப் படுகின்றது. ஒருவ னுடைய கழாவை (விதியை) மாற்ற, துஆவைத் தவிர எதனாலும் முடியாது.பெற்றோருக்கான உபகா ரம் வாழ் நாளை அதிகரிக்கச் செய்கின்றது.”

 தாயின் மரணத்தின் பின்னர் நான் எவ்வாறு அவர்களுக்கு உபகாரம் செய்வேன்?

அஷ் ஷெய்க் அவர்கள் கூறினார்கள்; “ ஒரு  மனிதர் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து, யா றசூலுள்ளாஹ்! (ஸல்) பெற்றோருக்கு செய்யும் உபகாரத்தில் எவையேனும் மரணத்தின் பின்னர் உண்டா? அவற்றை நான் செய்வதற்கு.” எனக் கேட்டார்.  றசூல் (ஸல்) அவர்கள், “ அவர்களுக் காக தொழுவதும்,  பிழை பொறுக்க தேடுவதும், அவர்கள் செய்த உடண்படிக்கைகளை காப்பாற் றுவதும், அவர்களின் நண்பர்களை கண்ணியப் படுத்துவதும், அவர்கள் வழி மூலம் வந்த இன பந்துக்களை சேர்ந்து நடப்பதும் இவையணைத் தும் வபாத்தின் பின்னர் உன் பெற்றோருக்கான உபகாரமாகும்.

உனது தாய்க்காக துஆ செய்யும் படியும், பிழை பொறுக்கத் தேடும்படியும், மார்க்கத்திற்குட் பட்ட வஸிய்யாக்களை நிறை வேற்றும் படியும், அவர்களது நண்பர்களை கண்ணியப் படுத்தும் படியும், மாமா, சாச்சி,பெரியம்மா, போன்றோர் களையும் தாய் வழி இனபந்துக்களை சேர்ந்து நடக்கும் படியும் நான் உங்களுக்கு உபதேசம் செய்கிறேன்.”

அபு புர்தா (றழி) அவர்கள் கூறினார்கள். “ நான் மதீனாவுக்கு வந்தேன். அப்பொழுது அப்துல்லா  இப்னு  உமர் (றழி) அவர்கள் என்னிடம் வந்து, ”நான் ஏன் தங்களிடம் வந்தேன் என்பதை அறிவீர்களா?” எனக் கேட்டார். அதற்கு “இல்லை” என பதிலளித் தேன். அப்பொழுது அன்னார் சொன்னார்கள், “றசூல் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். ‘எவர் தன் தந்தையை தன் கப்ரில் சேர நினைக்கின்றாரோ அவர் தனது தந்தை வபாத்தான பின்னர், தன் தந்தையின் சகோதரர்களுடன் சேர்ந்து நடக்கட் டும்.’ எனது தந்தை உமர் அவர்களுக்கும் உங்கள் தந்தைக்கும் இடையில் சகோதரத் துவமும், அன்பும் இருந்தது. அதை நான்  அடைந்துக் கொள்ள நினைத் தேன்.” றிவாயத் இப்னு ஹிப்பான்.

பாவங்கில் மிகப் பெரியது எது என உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

மதிப்பிற்குரிய அஷ் ஷேய்க் அப்துல்லாஹ் பின் ஜபரைன் அவர்களிடம் பின்வருமாறு கேட்கப் பட்டது. “வாலிபர்களில் சிலர் தங்கள் பெற்றோரை நோவினை செய்தும், உரத்த தொனியில் அவர்களுடன் பேசியும், மரியாதை கொடுக்க மறந்தும் நடந்துக் கொள்கின்றனர். இவர்கள் தொடர்பாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்? பெற்றோரை நோவினை செய்வது பெரும் பாவத்தை சேர்ந்ததா? நோவினை செய்பவர் தவ்பா செய்வது அவசியமா? தவ்பா செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்து தண்டனை கிடைக்குமா?”

இதற்கு அஷ் ஷெய்க் அவர்கள் பின்வருமாறு  பதிலளித்தார்கள். “ அல்லாஹ் பெற்றோரின் விடயத்தில் வஸிய்யத் செய்து, அவர்களின் உரிமைகளை தன்னுடைய உரிமையுடன்  இணைத்துக் கூறியுள்ளான். (சூரா லுக்மான்)

அல்லாஹ் அவனது உரிமைகளை பற்றி முதலில் கூறி அதற்கு அடுத்ததாக பொற்றோருக் கு உபகாரம் செய்வதை கூறி யுள்ளான். அவர்கள்  முதுமை எய்தி விட்டால் அவர்களை வெறுக்க வோ, வேதனைப் படுத்த வோ வேண்டாம். மாறாக அன்பு, பணிவு காட்டி மென்மையாக பேசவும். அத்தோடு அவர்கள் மீது அருள் செய்யும் படி அல்லாஹ் விடம் கேட்க வேண்டும் என்றும், சிறு வயதில் அவர்கள் செய்த உபகாரத் தை ஞாபகப்படுத் திக் கொள்ளும் படியும் கூறி யுள்ளான்.

ஒரு முறை றசூல் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “பாவங்களில் மிகப் பெரியது எது என உங்க ளுக்கு  அறிவிக்கட்டுமா?”  அதற்கு தோழர்கள்  “ஆம்” என்றனர். றசூல் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரை நோவினை செய்வதும்” என பதிலளித்தார்கள்.

பெற்றோரை பிறர் ஏசக் காரணமாவதை விளக்கி  “அது பெரும் பாவமாகவும்” என றசூல் (ஸல்) குறிப்பிட்டு கூறினார்கள். “ஒரு மனிதன் தன் பெற்றோரை ஏசுவது பெரும்  பாவங்களை சேர்ந்ததாகும். மேலும் தன் பெற்றோரை லஃனத் செய்பவரை அல்லாஹ் லஃனத் செய்யட்டும்.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அதற்கு சஹாபாக்கள், “எவ்வாறு ஒருவர் தன் பெற்றரை பிறர் ஏசக் காரணமாவார்?” எனக் கேட்டார்கள். அதற்கு, “ ஒருவர் மற்றவரின் தாயை அல்லது தந்தையை எசுவதனால் சம்பந்தப் பட்டவர்கள் இவரின் பெற்றோரை ஏசுவார்கள.” என நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.

பெற்றோரின் உரிமைகளையும், அவர்களுக்கு உபகாரம் செய்யும் முறைகளை தெரிந்திருப் பதும், அவர்களின்  உரிமைகளை மென்மையாக கொடுப்பதும், பணிவுடன் நடந்துக் கொள்வதும், அவர்கள் கேட்கும்போது  அவர்களின் தேவை களுக்கு  விடையளிப்பதும், தன்னால் முடிந்த வரை அவர்களுக்கு உதவுவதும், உபகாரத்தின் போது ஏற்பட்ட பிழைகளுக்காக அல்லாஹ் விடம் தவ்பா செய்வதும், அவர்களின் திருப் பொருத்தத் தையும் மன்னிப்பையும்கேட்பதும் கடமை யாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள்.

“அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றோரின்  பொருத்தத்திலும் அவனது வெறுப்பு பெற்றோ ரின் வெறுப்பிலும் உண்டு.”

 இவற்றின் பலன்கள்

முஜாஹித் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

“தகப்பன் அடிக்கும் போது அவரது கையை தட்டி விட ஒரு பிள்ளைக்கு  முடியாது. எவர் பெற்றோர் மீது (கருணையின்றி) கடுமையாக பார்வை செலுத்துகின்றாரோ, அவர் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வில்லை. எவர்  கவலைக்குரிய விடயங்களை அவர்களுக்கு  ஏற்படுத்துகின் றார்களோ,  அவர்கள் பெற்றோரை நோவினை படுத்தி விட்டனர்.

ஹஸன் இப்னு அலி (றழி) அவர்கள் கூறுகின் றார்கள். “பெற்றொரை நோவினை  படுத்தும் விடயத்தில், “சீ”  என்பதை விட இலகுவான (வார்த்தை) ஏதாவது இருந்திருந்தால் அதை அல்லாஹ் ஹராமாக்கியிருப்பான்.பெற்றோரை நோவினை செய்பவர் சுவர்க்கம் நுழைய மாட்டார். மேலும் அல்லாஹ் மறுமையில் அவர்களை பார்க்கவுமாட்டான்.”

 பெற்றோரை நோவினை செய்பவரின் அமல்கள்  எற்றுக்கொள்ளப் படுவதில்ல.

இப்னு உமர் (றழி) அவர்களை தொட்டும்  றிவாயத் செய்யப்படுகிறது. றசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ் மூன்று வகையான மனிதர்களை கியாமத் நாளில் பார்க்க மாட்டான். பெற்றோரை நோவினை செய்தவன், மது பானத்துக்கு அடிமைப் பட்ட வன், தான் கொடுத்தவற்றை  சொல்லிக் காட்டு பவன்.” றிவாயத் அந் நஸாயி, அல் ஹாகிம்.

அபி உமாமா (றலி) அறிவித்தார்கள், றசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், “மூன்று வகையான மனிதர்கள் சொர்க்கம் நுழைய மாட்டார்கள். அவர்கள் பெற்றோரை நோவினை செய்தவர்கள், ரோசமற்றவர்கள், ஆணுக்கு நிகராக நடக்கும் பெண்.”

“மூன்று வகையான மனிதர்கள் சொர்க்கம் நுழைய மாட்டார்கள். அவர்கள் பெற்றோரை நோவினை செய்தவன், கொடுத்தவற்றை சொல்லிக் காட்டுபவன், அல்லாஹ்வின் கத்ரை பொய்யாக்குபவன். இப்பாவங்களுக்கு பதிலாக எவ்வகையான பரிகாரங்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

”இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக. ஆமீன்.