பெருநாள் கொண்டாடுவோம்

விபரங்கள்

முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாட வேண்டிய முறைகள் பற்றி விளக்கம்

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  பெருநாள் கொண்டாடுவோம்

  ] தமிழ் – Tamil –[ تاميلي

  M.S.M. இம்தியாஸ் யூசுப்

  2013 - 1434

  العيد والإحتفالات الإسلامية

  « باللغة التاميلية »

  إمتياز يوسف

  2013 - 1434

  பெருநாளும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளும்

  எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி

  நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களும் முஸ்லிம்களுக்குரிய பெரு நாள் தினமாகும். இந்நன்நாளை அறிவுள்ளதாக, பய னுள்ளதாக ஆக்கிக் கொள்வது எமது கடமை யாகும்.

  முதலில் இந்நாளில் தக்பீர் கூறி அல்லாஹ்வை போற்றிப் புகழ்வது கடமையாகும்.

  இரண்டாவது, ஆரோக்கியமான பொழுது போக்கு களில் ஈடுபடச் செய்வது கட்டாயமாகும்.

  பெருநாள் என்கிறபோது எல்லோருடைய உள்ளங் களும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். குறிப்பாக சிறுவர்களுடைய உள்ளங்கள் சந்தோசத்தில் பூரித்துப் போய் இருக்கும். பலரை சந்திக்க வேண்டும், கதைக்க வேண்டும், விளையாட வேண்டும், உறவினர் வீடுகளுக்குப் போக வேண்டும், தங்களது நண்பர் களை அழைத்து வரவேண்டும் என்று களகளப்பாக இருப்பார்கள். இந்த ஆசைகளுக்கு வேலி போடத் தான் முடியுமா?

  நகர்ப் புறங்களிலும் கிராமப் புறங்களிலும் வாழக் கூடியவர்களின் பெருநாள் தினங்கள் முற்றிலும் வித்தியாசமானது. நகர்ப்புறங்களிலுள்ளவர்கள் தங் களது வீடுகளில் அடைந்து கிடப்பார்கள், கடற் கரை, பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு சென்று பொழுதை கழித்து விட்டு வருவார்கள். அத்தோடு அவர்களது பெருநாள் முடிந்து விடும்.

  சிலாகித்து கூறுமளவுக்குப் பயனுள்ளதாக இந்நாள் கழிந்தது என்று எவரும் கூற மாட்டார்கள்.

  உள்ளங்களுக்கு உண்மையான மகிழ்ச்சியும் எண் ணங்களுக்கு உண்மையான பெறுமதியும் உள்ளதாக இந்நாளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

  இஸ்லாம் அனுமதிக்காத கலாச்சார சீரழிவை தடுத்து நிறுத்தி, இஸ்லாம் ஊக்குவிக்கும் ஆரோக்கிய நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும். பல்வேறு வயதுடையவர்களுக்குமான நிகழ்ச்சிகள் தயாரிக்கப் பட வேண்டும். ஒவ்வொரும் தமது திறமைகளை, ஆக்கங்களை வெளிப்ப்படுத்த வாய்ப்பு தரும் களமாக அமைக்க வேண்டும். அவற்றில் சில,

  · ஆண்களுக்கிடையிலான போட்டிகள்

  · பெண்களுக்கிடையிலான போட்டிகள்

  · சிறுவர்களுக்கிடையிலான போட்டிகள்

  · வயது முதிர்ந்தவர்களுக்கான நிகழ்ச்சிகள்

  என்று தனித் தனியான பல போட்டிகள் நடாத்துவது, உள்ளத்திற்கு அமைதியையும் புத்துணர்ச்சியும் ஊட் டும். இறுக்கமான உள்ளங்களிலிருந்து விடுபட வழி வகுக்கும். இதனால் சிறார்களும், இளைஞர்களும் மகிழ்ச்சிடைவது போல், நாள் முழுவதும் வீட்டுக்குள் அடைந்திருக்கும் பெண்களும் வயது முதிர்ந்தவர் களும் கூட மகிழ்ச்சியடைய வாய்ப்பு கிடைக்கும்.

  பெருநாள் தொழுகையை மைதானத்தில் தொழ வேண்டும் என்ற இறைத்தூதரின் கட்டளையின் யதார்த்தத்தை இங்கு நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஆண்கள் தங்களுடைய நண்பர்கள், சொந்தங்களை சந்தித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், பெண்கள் தங்களது தோழிகளை, உறவினர்களைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், சிறார்கள் தமது சினேகிதர்களை சந்தித்து இன்பமுறுவதும் கண் கொள்ளா காட்சியாகும்.

  இஸ்லாம் விரும்பும் ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளை நடாத்த பள்ளி நிர்வாகங்களோ ஜமாஅத்களோ அல் லது குடும்ப அங்கத்தினர்களோ கவனம் செலுத்த வேண்டும்.

  ஆயிஷா (றழி) அறிவிக்கும் இந்த ஹதீஸைப் பாருங் கள்.

  صحيح البخاري (2/ 16)

  وَكَانَ يَوْمَ عِيدٍ، يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالحِرَابِ، فَإِمَّا سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِمَّا قَالَ: «تَشْتَهِينَ تَنْظُرِينَ؟» فَقُلْتُ: نَعَمْ، فَأَقَامَنِي وَرَاءَهُ، خَدِّي عَلَى خَدِّهِ، وَهُوَ يَقُولُ: «دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ» حَتَّى إِذَا مَلِلْتُ، قَالَ: «حَسْبُكِ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَاذْهَبِي».

  ஒரு நாள் பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ. “நீ (இவ்விளையாட்டை) பார்க்க விரும்புகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அவர்கள் என்னை தனக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தார்கள்.

  (பிறகு சூடான் நாட்டவர்களைப் பார்த்து) அர்பி தாவின் மக்களே! விளையாட்டைத் துவங்குங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்தபோது “உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் (உள்ளே) போ.” என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

  ஆயிஷா (ரழி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில்:

  صحيح البخاري (2/ 17)

  عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: دَخَلَ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتِ الأَنْصَارُ يَوْمَ بُعَاثَ، قَالَتْ: وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ، فَقَالَ أَبُو بَكْرٍ: أَمَزَامِيرُ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا بَكْرٍ، إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا».

  ஒரு பெருநாள் தினத்தின்போது, புஆஸ் (எனும்) ஜாஹிலிய்யா யுகத்தில் நடந்த போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ள வற்றை அன்ஸாரி களைச் சார்ந்த இரண்டு சிறுமிகள் என் முன்னே பாடிக் கொண்டிருந்தபோது, அபூபக்கர் (ரழி) வந்தார் கள். அவ்விரு சிறுமியர்களும் பாடகிகள் அல்லர். அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத் தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்கர் (ரழி) கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அபூ பக்கரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன. இது நமது பெருநாட்களாகும்” என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

  இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்ட முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் பெருநாள் எவ்வாறு இருந்திருக்கிறது என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. நாமும் இவ்வாறான நிகழ்ச்சிகளை, விளையாட்டுக்களை பற்றி சிந்தித்து,. பரிசுகள் வழங்கி உற்சாகமூட்டலாம். நல்ல தொரு பொழுதுபோக்கை எமது சமூகத்துக்கு வழங்கலாம்.

  இஸ்லாம் அனுமதித்த, ஊக்கம் கொடுத்த அறிவு பூர்வமான பொழுது போக்குகள் தவிர்க்கப்படும் போது, ஷைத்தானிய நிகழ்ச்சிகளும், களியாட்டங் களும் அவற்றின் இடங்களை பிடித்துக் கொள் கின்றன. அவற்றில் எமது மாணவர்களும், இளைஞர் களும், வளர்ந்தவர்களும் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.