அல்குர்ஆன், சுன்னாவின் நிழலில் சுன்னாவின் முக்கியத்துவம்

விபரங்கள்

வஹி இரண்டு வகைப்படும் முதலாவது வஹி, வஹியுன் மத்லூஉன். அது ஓதிக் காண்பிக்கப்படும் வஹி யாகும். அது அல்குர்ஆனாகும். இரண்டாவது வஹி, வஹியுன் மர்வீயுன் என்பதாகும் அதுவே சுன்னா வாகும்

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  அல்குர்ஆன், சுன்னாவின் நிழலில் சுன்னாவின் முக்கியத்துவம்

  ] தமிழ் – Tamili –[ تاميلي

  MSM . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி

  2013 - 1435

  أهمية السنة في ظل القرآن والسنة

  « باللغة التاميلية »

  محمد إمتياز يوسف

  2013 - 1435

  அல்குர்ஆன், சுன்னாவின் நிழலில் சுன்னாவின் முக்கியத்துவம்

  MSM . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி.

  சுன்னாவின் அர்த்தம்

  சுன்னா என்ற அரபுப் பதத்தின் அர்த்தம் வழிமுறை, பாதை என்பதாகும்.

  இஸ்லாமிய ஷரீஆ வழக்கின்படி,

  இறைத்தூதர் என்ற அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சொல்கின்ற, செய்து காட்டுகின்ற வழி முறைகளையும் நபி (ஸல்) அவர்களின் முன்னிலை யில் சஹாபாக்கள் சொன்ன வைகள் மற்றும் செய்து காட்டியவைகளை நபியவர்கள் மறுப்பேதுமின்றி அங்கீகரித்தவையே சுன்னாவாக கணிக்கப்படும். (சுன்னாவுக்கு மாற்றமான செயல்கள் பித்அத்கள் எனப்படும்.)

  அல்குர்ஆனைப் போன்று சுன்னாவும் அல்லாஹ் விடமி ருந்து வந்த வஹியாகும். அல்குர்ஆன் ஓதப்படும் வஹி என்றும் சுன்னா ஓதப்படாத வஹி என்றும் அழைக்கப்படும். இது குறித்து இமாம் இப்னு ஹஸ்ம்(ரஹ்) பின்வருமாறு கூறு றார்கள்:

  அல்குர்ஆன் ஷரீஆவினது முதலாவது அடிப்படை யாகும். அதில் இறைத் தூதரை பின்பற்ற வேண்டும் என ஏவப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தனது தூதரை பின்பற்ற வேண்டும் என அல்லாஹ் வர்ணிக்கும்போது (அல்லாஹ் விடமிருந்து வஹி மூலம் அறிவிக்கப்படுவதைத் தவிர) அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை.'' (53:2) என்கிறான். இதன் மூலம் அல்லாஹ்விட மிருந்து தூதருக்கு வரு கின்ற வஹி இரண்டு வகைப்படும் என எங்களுக்கு தெளிவாகிறது. முதலாவது வஹி, வஹியுன் மத்லூஉன் என்பதாகும். அதாவது ஓதிக் காண்பிக்கப்படும் வஹி யாகும். அது தான் அல்குர்ஆனாகும்.

  இரண்டாவது வஹி, வஹியுன் மர்வீயுன்'' என்பதாகும். அதாவது இறைத்தூதரிடமிருந்து அறிவிக்கப்படும் செய்தியாகும். அதுவே சுன்னா வாகும் (நூல்: ஹிப்லுல்லாஹிஸ் ஸூன்னா பக்கம் 42)

  நபி(ஸல்) அவர்கள் பேசுகின்ற செயற்படுத்துகின்ற அனைத்து காரியங்களும் வஹியைக் கொண்டதாக அமையப் பெற்றது.

  مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى

  உங்கள் தோழர் (முஹம்மத்) வழிகெடவுமில்லை, தவறான கொள்கையில் செல்லவுமில்லை. அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. (53:2,3)

  எனக்கு வஹியாக அறிவிக்கப்படுவதைத் தவிர வேறெ தனையும் நான் பின்பற்றுவதில்லை என்று நபியே நீர் கூறுவீராக. (6:50)

  பின்பற்றத் தகுதியான இவ்வஹியை முழுமையாக எத்தி வைக்க வேண்டும் என அல்லாஹ்வினால் இறைத் தூதர் கட்டளை யிடப்பட்டார்கள்.

  يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

  தூதரே! உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கி வைக்கப் பட்டதை எடுத்துவைப்பீராக. (அவ்வாறு) நீர் செய்யாது விட்டால் அவனது தூதுத்துவத்தை நீர் எடுத்து வைத்தவராக மாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி லிருந்து பாதுகாப்பான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப் பாளரான கூட்டத்தாரை நேர் வழியில் செலுத்த மாட்டான். (5:67)

  அல்லாஹ்வின் வழிகாட்டல்களான அல்குர்ஆனை யும் சுன்னாவையும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்கள் முன் வைத்து அழைப்பு விடுத்தார்கள். நன்மை தீமைகளை தெளிவுப்படுத்தி அல்லாஹ் வின் திருப்திக்குரிய வழிகளையும் அவனது கோபத்திற்குரிய காரியங்களையும் எடுத்து ரைத்து சுவனத் தின்பால் நெருக்கி வைக்கக் கூடிய விடயங் களையும் நரகத்திலிருந்து தூரப்படுத்துகின்ற செயல்களையும் விளக்கப்படுத்தி மக்களுக்கு நற்போதனை செய்தார்கள்.

  எனவே ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அன்பையும் திருப்தியையும் அடைவதற்கான ஒரே வழி நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாக கொண்டு அவர் காட்டும் வழியில் காரியமாற்றுவதாகும்.

  لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

  உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவு கூருவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் நிச்சய மாக அழகிய முன்மாதிரி இருக்கின்றது. (33:21)

  قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

  நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். இன்னும் உங்கள் பாவங்களை உங் களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவனு மாவான் என்று நபியே நீர் கூறுவீராக. (3:31)

  மறுமையின் மீது நம்பிக்கை கொண்டு அல்லாஹ் வை சந்திக்க ஆசைப்படக் கூடியவர், அல்லாஹ் வின் திருப்தியையும் ரஹ்மத்தையும் எதிர்பார்க்கின் றவர் நபி காட்டிய வழியை (சுன்னாவை) பின் பற்றியாக வேண்டும். இதுவே முஃமினுக்குரிய இலக்கணமாகும்.

  இறைத் தூதரை பின்பற்றுபவர் உண்மையான முஃமினா கவும் அல்லாஹ்வின் அருளுக்குரிய வராகவும் நேர்வழிப் பெற்றவராகவும் இருப்பார். அவருக்கு மாறுசெய்பவர் நன்மைகளை (அமல் களை) அழித்துக் கொண்டவராகவும் தண்டனைக் குரியவராகவும் நராகரிப்பவராகவும், காணப்படு வார் என அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு தெளிவுப் படுத்துகிறான்.

  وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

  நீங்கள் விசுவாசிகளாக இருப்பின் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப் படுங்கள். (8;1)

  وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

  நீங்கள் அருள்செய்யப்படும் பொருட்டு அல்லாஹ் வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்.'' (3;132)(3:132)

  قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ

  நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத் தூதருக்கும் கட்டுப் படுங்கள் என நபியே நீர் கூறுவீராக. நீங்கள் புறக்கணித்தால் அவரது கடமை அவர் மீது சுமத்தப்பட்ட(தை எடுத்துரைப்ப) துதான். மேலும் உங்கள் கடமை உங்கள் மீது சுமத்தப்பட்ட (படிகட்டுப்படுவது) தான். நீங்கள் அவருக்குக் கட்டுப் பட்டால் நேர்வழி பெறு வீர்கள். இத்தூதர் மீதுள்ள கடமை தெளிவாக எடுத்து ரைப்பதைத் தவிர வேறில்லை.(24:54)

  فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

  (இறைத்தூதராகிய )அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேர்வதையோ அல்லது தமக்கு நோவினைத் தரும் வேதனை ஏற்படுவதை யோ அஞ்சிக் கொள்ளட்டும்.''(24:63)

  قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ

  நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என நபியே நீர் கூறுவீராக. நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக நிராகரிப்பவர் களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(3:32)

  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ

  விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூத ருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் (போதனை களை) செவி யேற்றுக் கொண்டே அவரைப் புறக்கணிக்க வேண்டாம். (8:20)

  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ

  விசுவாசிகளே! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களது (அமல் களை) வீணாக்கி விடா தீர்கள். (47:33)

  இறைத்தூதரின் வழிகாட்டல்களை மீறாமல் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அல்லது புதுப் புது செயற்பாடுகளை (அமல்களை) நுழைவிக்காமல் செயற்பட வேண்டும். தூதரின் வழிகாட்டலின் ஒரு விடயத்தையேனும் மாற்றுவது இறைக் கோட்பாடுக்கே மாறுசெய்வதாகும். மார்க்க தெளிவுகள், தீர்ப்புகள் பெறுவதற்கு அல்லாஹ் விடமும் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களிடமே மீளவேண்டும்.

  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا

  விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப் படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் உங்களில் அதிகார முடையோருக்கும் கட்டுப் படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொள்வோராக இருந்தால் அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் (தீர்வை வேண்டி) திருப்பி விடுங்கள். இதுவே மிகச் சிறந்ததும் அழகான முடிவாகும். (4:59)

  إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

  அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்க அல்லாஹ் விடமும் அவனது தூதரிடமும் (வாருங்கள் என) அவர்கள் அழைக்கப் பட்டால் செவியுற்றோம், கட்டுப்பட்டோம்' என்பதே முஃமின்களின் வார்த்தையாக இருக்கும். அவர்கள் தாம் வெற்றி யாளர்கள். (24:51)

  وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا

  அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவு செய்து விட்டால் தமது காரியத்தில் சுய அபிப்பிராயம் கொள்வதற்கு முஃமினான எந்த ஆணுக்கும் முஃமினான எந்தப் பெண்ணுக்கும் உரிமையில்லை. எவன் அல்லாஹ் வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்கின்றானோ நிச்சயமாக அவன் மிகத் தெளிவான வழிகேட்டில் சென்று விட் டான்.(33:36)

  அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்திருக்கும் வழி காட்டல்களுக்கு அடிபணிவதை விடுத்து மாற்று அபிப்பிராயம் கொள்வது அல்லாஹ்வை விட அவனது தூதரை விட தனக்கு நல்வழியை கண்டுபிடிக்க முடியும் என்று கூறு வதற்கு ஒப்பானதாகும். இதுவே வழிகேட்டின் உச்சக் கட்ட மாகும்.

  இறைத்தூதர் மூலம் காண்பிக்கப்பட்ட வழியை விட்டு விட்டுச் சென்றால் நரகத்திற்கே செல்ல நேரிடும்.

  وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا

  யார் தனக்கு நேர்வழி தெளிவான பின்னரும் இத் தூதருடன் முரண்பட்டு, முஃமின்களின் வழி அல்லாததைப் பின்பற்றுகின்றானோ அவன் செல்லும் வழியிலேயே அவனைச் செல்ல விட்டு, அவனை நாம் நரகத்தில் நுழைவிப்போம். செல்லு மிடத்தில் அது மிக்க கெட்டது. (4;115)

  நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வஹியை அடிப் படையாகக் கொண்டு தங்களுடைய தோழர்களை வழிநடாத்திச் சென்று அல்லாஹ்வின் பொருத் தத்திற்குரிய சமூகமாக உருவாக்கி காண்பித் திருக் கிறார்கள். அந்த சஹாபா சமூகம் நபிகளார் முன்னிலையில் வாழந்து காட்டிய வழிகாட்டலுக்கு அல்லாஹ்வின் அங்கீகாரமும் மனிதர்களுக்காக தோற்று விக்கப்பட்ட சிறந்த சமுதாயம் என்று (3;110) நற்சான்றும் கிடைக்கப் பெற்றது. எவர் அவ்வழிக்கு முரணாக செயற்படுகிறாரோ அவர் செல்லு மிடம் நரகமேயாகும்.

  அல்லாஹ்வுடைய கட்டளையையும் நபிமுஹம்மத் (ஸல்) அவர் களின் சுன்னாவையும் தலைக்கு மேல் வைத்து மதித்து, அவ்விண்டிலும் சொல்லப்பட்ட முறையில் வாழ்கிறாரோ அவர் நாளை மறுமையில் மகத்தான பாக்கியத் தைப் பெற்ற சுவனவாதி களில் ஒருவராக இருப்பார்.

  وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

  யார் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படு கின்றாரோ நிச்சயமாக அவர் மகத்தான வெற்றியை ஈட்டிக் கொண்டார்.

  وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا

  யார் அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படு கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள் உண் மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லோர்கள், ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள் சிறந்த தோழர்களாவர். (4;69)

  இறைத்தூதர் காட்டிய வழியை – சுன்னாவை - ஒதுக்கி விட்டு சமூகத் தலைவர்களை, தான் சார்ந்திருக்கும் பெரி யார்களை, மார்க்க அறிஞர்களை கண் மூடித்தனமாக பின் பற்றுவதும் பெரும் சாபத்திற்குரிய தண்டனையாக அமை யும்.

  يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَ وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا

  அவர்களின் முகங்கள் நரகத்தில் புறட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப் பட்டி ருக்கக் கூடாதா? மேலும் இத்தூதருக்கும் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா? என்று கூறுவார்கள்.

  மேலும் எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாம் எங்கள் தலை வர்களுக்கும் எங்கள் பெரியார் களுக் கும் கட்டுப்பட்டோம் அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர் என்று கூறுவர். எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இரு மடங்கு வழங்குவாயாக. இன்னும் அவர்களை நீ பெருமளவில் சபிப்பாயாக என்றும் கூறுவர். (33:66-68)

  இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படி யுங்கள் வழிபடுங்கள் என்று கட்டளையிடு வதன் மூலம் அவர்களது ஒவ்வொரு ஏவல் விலக்கல்களையும் பின் பற்றுபவர் அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றுபவரா கவும் இறைத்தூதரின் வழிகாட்டல்களை புறக்கணிப்பவர் அல்லாஹ்வை புறக்கணிப்பவராகவும் ஆகி விடு கிறார் என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

  مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا

  யார் இத்தூதருக்குக் கட்டுப்படுகின்றாரோ அவர் அல்லாஹ் வுக்கும் கட்டுப்பட்டு விட்டார். எவர்கள் புறக்கணிக்கிறார்களோ அவர்களைக் கண்காணிப் பவராக உம்மை நாம் அனுப்பவில்லை. (4;80)

  இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டே சுன்னாவை பின்பற்றுவதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

  மனிதர்கள் பின்பற்றுவதற்கு தகுதியானது அல் லாஹ்வின் வேதமும் அவனது தூதரின் வழி காட்டலுமாகும். இவ் விரண்டு வழிகாட்டலுக்கு அப்பால் நேர்வழி என்பது கிடை யாது. இது பற்றி பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) விளக்கப் படுத்து கிறார்கள்.

  வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நடத்தையில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் நடத் தையாகும். செயல்களில் தீயவை (நபிகளாரின் வழிகாட்டல் இல்லாமல்) புதிதாக உண்டாக்கப்படுபவையாகும். புதிதாக உண்டு பண்ணுபவை அனைத்தும் வழிகேடாகும். ஒவ் வொரு வழிகேடும் நரகத்தில் நுழையும்” என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர், ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (நூல: முஸ்லிம் 867 இப்னுமாஜா 45, புகாரி)

  பின்பற்ற தகுதியான குர்ஆனும் சுன்னாவும் இருக்கும் போது அதற்கு அப்பால் சென்று அமல்களை ஏற்படுத்திக் கொள்வது தீயகாரியங்கள் ஆகும். நரகில் கொண்டு போய் சேர்க்கும் வழி முறை யாகும் என நபி(ஸல்) கூறுகிறார்கள்.

  صحيح البخاري (3/ 184)

  عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ

  எமது இந்த விடயத்தில் (மர்க்கத்தில்) இல்லாததை யார் உண்டு பண்ணுகிறாரோ அது நிராகிக்கப் படும்” என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி முஸ்லிம்.)

  صحيح مسلم (3/ 1343)

  أَخْبَرَتْنِي عَائِشَةُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»

  நமது உத்தரவு இல்லாமல் யார் ஒரு அமலை செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். (அறிவிப்பவர்; ஆயிஷா(ரலி), நூல்: புகாரி முஸ்லிம்.)

  அல்லாஹ்வை விட அவனது தூதரை விட சிறந்த வழி காட்டலை யாரும் சொல்லித்தர முடியாது. சுவனத்திற்குரிய காரியங்கள் தெளிவுப்படுத்தி தந் திருக்கும்போது நாமாக புதுபுது அமல்களை உண்டு பண்ணுவது நரகத்திற்குரிய செயலாகவே அது அமையும்.

  سنن ابن ماجه (1/ 6)

  عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَطَّ خَطًّا، وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَمِينِهِ، وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَسَارِهِ، ثُمَّ وَضَعَ يَدَهُ فِي الْخَطِّ الْأَوْسَطِ، فَقَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ: {وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ} [الأنعام: 153] "

  நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் (நிலத்தில்) ஒரு நேர்கோட்டை கீறினார்கள். அதன் வலது பக்கத்தில் இரு கோடுகளை கீறினார்கள். அதன் இடது பக்கத்திலும் இரு கோடுகளை கீறினார்கள். நேர்கோட்டில் தனது கையை வைத்து இது தான் அல்லாஹ்வின் வழி” என்று கூறிவிட்டு நிச்சயமாக இதுவே எனது நேரான வழியாகும். இதனையே பின்பற்றுங்கள். பல வழிகளைப் பின்பற்றாதீர்கள். அப்பொழுது அது அவனது வழியை விட்டும் உங்களைச் சிதறடித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் பொருட்டு இதைக் கொண்டு உங்களுக்கு ஏவுகிறான் (அல்குர்ஆன்: 6:153) என்ற வசனத்தை ஓதினார்கள்.'' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: இப்னுமாஜா)

  سنن ابن ماجه (1/ 3)

  عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَمَرْتُكُمْ بِهِ فَخُذُوهُ، وَمَا نَهَيْتُكُمْ عَنْهُ فَانْتَهُوا»

  நான் உங்களுக்கு ஏவியதை எடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களை தடுத்தவைகளை விட்டும் விலகிக் கொள்ளுங் கள்.'' என நபி(ஸல்) கூறினார்கள்;. (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா)

  நான் உங்களை (தெளிவான) வெள்ளைப் போன்ற நிலை யில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன் றது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  (ஆம்) அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் உண்மை யை கூறினார்கள். அல்லாஹ்வின்மீது சத்தியமாக! (தெளி வான) வெள்ளைப் போன்ற நிலையில் எங்களை விட்டுச் சென்றார்கள் என அபூதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள். (நூல்: இப்னு மாஜா )

  سنن ابن ماجه (1/ 3)

  عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَخُذُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ، وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَانْتَهُوا»

  நான் உங்களை விட்டுவிட்ட நிலையில் என்னை நீங்கள் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் அழிக்கப்பட்டவர்கள் கேள்விகள் கேட்டு தங்களு டைய நபிமார்களுடன் முரண் பட்டுக் கொண்ட தாலேயாகும். நான் ஏவியதை உங்களால் முடிந்த வரை எடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு தடுத்த வைகளை தடுத்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல்: இப்னு மாஜா)

  سنن ابن ماجه (1/ 4)

  عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ»

  யார் என்க்கு வழிபட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கு வழி பட்ட வராவார். யார் எனக்கு மாறுசெய்தாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்து விட்டவராவார் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) நூல்: இப்னு மாஜா)

  صحيح البخاري (9/ 93)

  جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: " جَاءَتْ مَلاَئِكَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ نَائِمٌ، فَقَالَ بَعْضُهُمْ: إِنَّهُ نَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: إِنَّ العَيْنَ نَائِمَةٌ، وَالقَلْبَ يَقْظَانُ، فَقَالُوا: إِنَّ لِصَاحِبِكُمْ هَذَا مَثَلًا، فَاضْرِبُوا لَهُ مَثَلًا، فَقَالَ بَعْضُهُمْ: إِنَّهُ نَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: إِنَّ العَيْنَ نَائِمَةٌ، وَالقَلْبَ يَقْظَانُ، فَقَالُوا: مَثَلُهُ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا، وَجَعَلَ فِيهَا مَأْدُبَةً وَبَعَثَ دَاعِيًا، فَمَنْ أَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنَ المَأْدُبَةِ، وَمَنْ لَمْ يُجِبِ الدَّاعِيَ لَمْ يَدْخُلِ الدَّارَ وَلَمْ يَأْكُلْ مِنَ المَأْدُبَةِ، فَقَالُوا: أَوِّلُوهَا لَهُ يَفْقَهْهَا، فَقَالَ بَعْضُهُمْ: إِنَّهُ نَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: إِنَّ العَيْنَ نَائِمَةٌ، وَالقَلْبَ يَقْظَانُ، فَقَالُوا: فَالدَّارُ الجَنَّةُ، وَالدَّاعِي مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَنْ أَطَاعَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَى مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدْ عَصَى اللَّهَ، وَمُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْقٌ بَيْنَ النَّاسِ

  ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார். அதற்கு மற் றொருவர் கண் தான் உறங்குகிறது உள்ளம் விழித்திருக் கிறது என்று கூறினார். பின்னர் அவர்கள் உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு. இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள் என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் இவர் உறங்குகிறாரே என்றார். மற்றொருவர் கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது என்றார்.

  பின்னர் அவர்கள் இவரது நிலை ஒரு மனிதனின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒருவீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார். விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவு மில்லை, விருந்துண்ணவுமில்லை என்று கூறினார்கள்.

  பின்னர் அவர்கள் இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள் அவர் புரிந்து கொள்ளட்டும் என்றார்கள். அப் போது அவர்களில் ஒருவர் இவர் உறங்குகிறாரே என்று சொல்ல மற்றொருவர் கண் தான் உறங்குகிறது உள்ளம் விழித்திருக்கிறது என்றார். அந்த வீடுதான் சுவனம். அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள். முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கீழ்படிந்தவர் அல்லாஹ்வுக்கு கீழ் படிந்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்து விட்டார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களை நல்லவர் கெட்டவர் என பிரித்துக் காட்டி விட்டார்” என்று விளக்கம்அளித்தார்கள். (அறிவிப் பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ், நூல்: புகாரி-7281)

  صحيح مسلم (2/ 890)

  وَقَدْ تَرَكْتُ فِيكُمْ مَا لَنْ تَضِلُّوا بَعْدَهُ إِنِ اعْتَصَمْتُمْ بِهِ، كِتَابُ اللهِ، وَأَنْتُمْ تُسْأَلُونَ عَنِّي، فَمَا أَنْتُمْ قَائِلُونَ؟» قَالُوا: نَشْهَدُ أَنَّكَ قَدْ بَلَّغْتَ وَأَدَّيْتَ وَنَصَحْتَ، فَقَالَ: بِإِصْبَعِهِ السَّبَّابَةِ، يَرْفَعُهَا إِلَى السَّمَاءِ وَيَنْكُتُهَا إِلَى النَّاسِ «اللهُمَّ، اشْهَدْ، اللهُمَّ، اشْهَدْ» ثَلَاثَ مَرَّاتٍ

  நபி(ஸல்) அவர்கள் தங்களது இறுதி ஹஜ்ஜின் போது அரபாவில் மக்களுக்கு உரையாற்றி விட்டு மக்களே! உங் களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் வேதத்தை (இன்னுமொரு அறிவிப்பில் எனது வழி முறையையும்) விட்டுச் செல் கிறேன். அதனை பற்றிப் பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவற மாட்டீர்கள். (மக்களே! மறுமை நாளில்) என்னைப் பற்றி நீஙகள் விசாரிக்கப்படுவீர்கள். அல்லாஹ் விடத்தில் நீங்கள் என்ன கூறுவீர்கள்? என நபி (ஸல்) கேட்டார்கள். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ் வின் தூதை) எத்தி வைத்தீர்கள். உங்கள் கடமையை நிறைவேற்றினீர்கள். நீங்கள் அக்கறையுடன் நடந்து கொண்டீர்கள் என்று நிச்சயமாக நாங்கள் சாட்சி சொல்லுவோம் என சஹாபாக்கள் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களது சுட்டு விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்து விட்டு பிறகு அதை மக்களை நோக்கி தாழ்த்திக் காட்டி, யாஅல்லாஹ்! இதற்கு நீயேசாட்சி, யா அல் லாஹ்! இதற்கு நீயே சாட்சி, யாஅல்லாஹ்! இதற்கு நீயேசாட்சி என்று மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) (நூல்: முஸ்லிம்-2334)

  நபித்துவப் பணியில் நபிகளார் (ஸல்) அவர்கள் எந்தவொரு சுன்னாவையும் (அமலையும்) காட்டாமல் போனார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் இருக்கவில்லை. அவர்களது பணி அல்லாஹ்வின் கண்கானிப்பின் கீழ் நடந்தது. மார்க்கம் முழுமையாக எத்திவைக்கப்பட்டது என்பதை அல்லாஹ்வே உறுதியும் படுத்தினான்.

  الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

  இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்கு நான் முழுமைப் படுத்தி விட்டேன். எனது அருட் கொடையையும் உங்கள் மீது பூரணப்படுத்தி விட்டேன். மேலும் நான் இஸ்லாத்தையே உங்களுக்கு மார்க்கமாக பொருந்திக் கொண் டேன்.” (5;3)

  அல்லாஹ் பொருந்திக் கொண்ட மார்க்கம் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிய சுன்னாவை (வழிமுறையை) கொண்ட மார்க்கமாகும்.

  சுன்னாவின் முக்கியம் குறித்து இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கொடுத்த விளக்கம் மிகப் பொருத்தமானது: யாராவது இஸ்லாத்தில் ஒரு நூதனத்தை (பித்அத்தை) ஏற் படுத்தி விட்டு அது நல்லதெனக் கருதினால் அவர்,நபி (ஸல்) அவர்கள் தனது தூதுத் துவத்திற்கு மோசடி செய்து விட்டார் என்று கருதியவராவார். ஏனெனில், குர்ஆனில் இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைப் பூரணப் படுத்தி விட்டேன்' என்று அல்லாஹ் கூறுகிறான். அன்று மார்க்கமாக இல்லாத எதுவும் இன்று மார்க்க மாக முடியாது என்று கூறினார்கள். (நூல்: அல் இஃதிஸாம்-அஷ்ஷாதிபி பாகம்-01 பக்கம் - 64,65