சமாதானம் மேலோங்க முயற்சி செய்வோம்

விபரங்கள்

முஸ்லிம்கள் கல்வி, ஊடகம், அரசியல், பொருளாதாரம், ஆகிய எல்லா துறைகளிலும் ஆளுமையும் தகமையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும், இதற்காக முயற்சிக்கவும் வேண்டும். அப்போது முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக விடுக்கப் படும் சவால்களை இலகுவாக முறியடிக்க முடியும். மேலும் இதன் மூலமே உலகெங்கும் சமாதானம் நிலை பெற முடியும் என்பது இஸ்லாம் கற்றுத் தரும் உண்மைகளில் ஒன்றாகும்.

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  சமாதானம் மேலோங்க முயற்சி செய்வோம்

  ] Tamil – தமிழ் –[ تاميلي

  A.J.M மக்தூம்

  2015 - 1436

  "نتكاتف لانتشار السلام"

  « باللغة التاميلية»

  عبد الجبار محمد مخدوم

  2015 - 1436

  சமாதானம் மேலோங்க முயற்சி செய்வோம்

  محمد مخدوم بن عبد الجبار

  A.J.M. மக்தூம்

  முஸ்லிம்கள் கல்வி, ஊடகம், அரசியல், பொருளாதாரம், ஆகிய எல்லா துறைகளிலும் ஆளுமையும் தகமையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும், இதற்காக முயற்சிக்கவும் வேண்டும். அப்போது முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக விடுக்கப் படும் சவால்களை இலகுவாக முறியடிக்க முடியும். மேலும் இதன் மூலமே உலகெங்கும் சமாதானம் நிலை பெற முடியும் என்பது இஸ்லாம் கற்றுத் தரும் உண்மைகளில் ஒன்றாகும்.

  ஒரு சமூகத்தின் பலம் என்பது கால சூழலுக்கும் தேவைக்கும் ஏற்றால்போல் மாறிச் செல்லும் தன்மை கொண்டுள்ளது.

  இதனையே பின்வரும் அல் குர்ஆனின் வசனங்கள் தெளிவு படுத்துகின்றன:

  وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَاتُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ

  அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையானக் குதிரைகளையும் ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப் படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. 8:60

  وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ

  அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 8:61

  وَإِن يُرِيدُوا أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ ۚ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ

  அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான். 8:62

  இங்கே கூறப்பட்டுள்ள (குவ்வஹ்) பலம் என்ற வார்த்தை பொதுவானதாகும். அது ஈமானிய பலம், ஒற்றுமையின் மூலம் ஏற்படும் பலம், பொருளாதார பலம், ஊடக பலம் என எல்லா வகையான பலத்தையும் குறிக்கும். அவ்வாறே கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப அது வித்தியாசப் படும் வாய்ப்புமுள்ளது.

  குதிரைகள் என்று இங்கு குறிப்பிடப் பட காரணம் இந்த வசனம் இறங்கும் போது இருந்த சமூகத்தின் நிலைமையை கருத்திற் கொண்டே யாகும். அக்காலத்தில் குதிரை வாகனம் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக பயன் படுத்தப் பட்டு வந்தமை கவனத்திற் கொள்ளத் தக்கதாகும்.

  இப்படியான வலிமைகளைப் பெறுவதற்கான நோக்கம் அநியாயம், அக்கிரமங்களில் ஈடுபடுவதற்கோ அல்லது தீவிர வாத செயல்களில் ஈடுபடுவதற்கோ அல்ல. மாறாக அக்கிரமக் காரர்கள் இதன் மூலம் அச்சம் கொண்டு அதில் இருந்து தவிர்ந்து கொள்ள முற்படுவர். அதனால் சமாதானத்தையும், இனங்களுக்கிடையிலான சக வாழ்வையும், ஐக்கியத்தையும் கட்டி எழுப்ப முடியுமாகும் என்பதனையே இத்திருவசனங்கள் தெளிவு படுத்துகின்றன.

  இறைவனின் கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப் பட்டு, இறைத் தூதரின் வழிமுறைகளை முழுமையாக நமது வாழ்வில் எடுத்து நடக்கும் அதே நேரத்தில் சண்டை சச்சரவுகள், பிரிவு, வேற்றுமை என்பன எம்மை முழுமையாக பலவீனப் படுத்தி குழப்பத்தில் தள்ளிவிடும் என்பதையும் புரிந்து கொண்டு செயலாற்றுவது அவசியமாகும்.

  وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

  இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் முரண் பட்டுக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு முரண் பட்டுக் கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமை யுடையவர்களுடன் இருக்கின்றான். 8:46

  எதிர் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் நிலை எவ்வாறு அமையும் என்பதை இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவு படித்தியுள்ளார்கள். அது நாம் வாழும் இந்த கால சூழ் நிலை போன்றதையே குறிக்கும் என கருதுகிறேன். அந்த செய்தி பின்வருமாறு:

  “பசிப்பிடித்த மிருகங்கள் உணவு தட்டின் மீது பாய்வது போன்று ஒரு காலத்தில் இஸ்லாத்தின் எதிரிகள் உங்களை அழித்தொ ழித்திட ஒன்று திரள்வார்கள்". என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய போது, "நாம் அப்போது குறைவானவர்களாக இருப்போமா?" என ஒரு நபித் தோழர் வினா எழுப்பினார். அதற்கு அவர்கள்: "அந்த நேரத்தில் நீங்கள் அதிகமாகவே இருப்பீர்கள். எனினும் வேகமான நீர் ஓட்டத்தின் விளைவால் ஏற்படும் நுரையைப் போன்று பலம் அற்றவர்களாக இருப்பீர்கள். மேலும் எதிரிகளுக்கு உங்கள் மீது இருந்த அச்ச உணர்வை இறைவன் நீக்கி இருப்பான், உங்களை "வஹ்ன்" ஆட்கொண்டிருக்கும்". என்று கூறிய போது ஒருவர்: "வஹ்ன்" என்றால் என்ன? இறைத் தூதரே! என்று வினவினார். அப்போது, "அதுதான் உலக ஆசையும், மரணத்தின் மீதுள்ள வெறுப்பும்" என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைராஹ் (ரழி), நூல்: அபூ தாவூத், அஹ்மத்)

  இங்கே இறைத் தூதர் (ஸல்) அவர்கள் நமது பலகீனத்துக்கான இரண்டு காரணிகளை எடுத்துக் கூறியுள்ளார்கள். அவற்றை தூர எரிந்து விட்டு நம்மைப் பலப் படுத்திக் கொள்ள முனைய வேண்டும்.

  ஒற்றுமை என்பது முஸ்லிம்களின் பலமான ஆயுதம், அதன் மூலம் அவர்கள் நிறையவே சாதித்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொண்ட முஸ்லிம்கள் மீது காழ்புணர்ச்சி கொண்ட தீய சக்திகள், அன்று தொட்டு இன்று வரை முஸ்லிம்களுக்குள் விரிசலை உண்டு பண்ணி, முஸ்லிம்களைப் பிளவு படுத்தி பலமிழக்கச் செய்ய திட்டம் தீட்டி கங்கணம் கட்டி செயல் பட்டு வருகின்றனர் என்பதை நாம் கவனத்தில் கொண்டு செயல் படுவது அவசியமாகும்.

  நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் விரும்ப வேண்டும். வன்முறைகள், குழப்பங்களுக்கு எதிராக செயற்பட வேண்டும். இஸ்லாத்தின் வெற்றிக்கென சட்ட விரோத செயல்கள் எதனையும் மேற்கொள்ளவும் கூடாது. அதே நேரத்தில் அடுத்தவர் மூலம் அநீதம் செய்யப் படுவதை அனுமதிக்கவோ அல்லது தன் மானத்தை பிறரிடம் இழந்த கோழைகளாகவோ இருக்கவும் முடியாது.

  இவற்றையெல்லாம் சிந்தித்து செயற்பட்டு நமக்கெதிரான சவால்களை முறியடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக. ஆமீன்