أدعية النبي صلى الله عليه وسلم
அன்னலாரின் பிரார்த்தணைகள்
இவரது இயற்பெயர் அஷ்ஷைக் அப்துல் முஹ்சின் இப்ன் ஹம்த் அல் அப்பாத் என்பதாகும், இவர் சவூதி அரேபியாவில் உள்ள ஸுல்பி எனும் கிராமத்தில் ஹிஜ்ரி 1353 ல் பிறந்தார், தமது பாடசாலைக் கல்வியை ரியாத் நகரத்தில் முடித்துக் கொண்டு பின்னர் அங்குள்ள இமாம் முஹம்மத் பின் ஸுஊத் பல்கலைக்கலகத்தின் இஸ்லாமிய சட்டக் கல்லூரியில் இணைந்து கல்வி பயின்றார்.
அஷ் ஷெய்க் இப்ராஹீம், அஷ் ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ், அஷ் ஷெய்க் முஹம்மத் அல் அமீன் அஷ் ஷன்கீதீ, அஷ் ஷெய்க் அப்துர்ரஹ்மான் அல் அப்ரீகீ, அஷ் ஷெய்க் அப்துல் ரஸ்ஸாக் அல் அபீபீ போன்ற பிரபல்யமான அறிஞர்களிடமும் கல்வி பயின்றார், பின்னர் முறையே ஹிஜ்ரி 1379 ல் புரைதா நகரில் உள்ள அல் மஃஹதுல் இல்மி, ஹிஜ்ரி 1380 ல் ரியாத் நகரில் உள்ள அல் மஃஹதுல் இல்மி முதலிய கல்வி நிலையங்களில் ஆசிரியராக கடமையாற்றினார்.
ஹிஜ்ரி 1381 ல் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகம் அங்குரார்ப்பனம் செய்யப்பட்டதும் அங்கு முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்ட பெருமையும் இவரையே சாரும். பின்னர் அப் பல்கலைக் கழக நிர்வாகக் குழுவில் அங்கத்தவராக நியமிக்கப்பட்ட இவர்கள் ஹிஜ்ரி 1393 ல் பல்கலைக் கழகத்தின் உப தலைவராகவும், பின்னர் தலைவராகவும் நியமனம் பெற்றார். அல் அஸ்கர் பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டத்தைப் பெற்ற ஷெய்க் அவர்கள் பிரபல்யம் வாய்த அறிஞரும் பன்னூல் ஆசிரியருமாவார்.
நன்றி:
http://www.saaid.net
1- اللَّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ. (رواه البخاري)
பொருள்: யா அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறை வேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளி லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக. ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை. (ஆதாரம்: புகாரி)
இவ்வாறு ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2- اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ. فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ. (متفق عليه)
பொருள்: 'இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
3- رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي ، وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي ، اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ ، وَعَمْدِي ، وَجَهْلِي ، وَهَزْلِي وَكُلُّ ذَلِكَ عِنْدِي ، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ ، وَمَا أَخَّرْتُ ، وَمَا أَسْرَرْتُ ، وَمَا أَعْلَنْتُ ، أَنْتَ الْمُقَدِّمُ ، وَأَنْتَ الْمُؤَخِّرُ ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. (متفق عليه)
பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்தி லும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடு வாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டு மென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பரகசியமாகச் செய்த தையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
4- اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ أَوَّلَهُ وَآخِرَهُ سِرَّهُ وَعَلانِيَتَهُ . (رواه مسلم)
பொருள்: இறைவா! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! அவற்றில் சிறியதை யும் பெரியதையும், ஆரம்பமாகச் செய்ததையும் இறுதி யாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததை யும் மறைமுகமாகச் செய்ததையும் மன்னிப்பாயாக. (ஆதாரம்: முஸ்லிம்)
5- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ . (رواه البخاري)
பொருள்: இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையில் இருந்தும், இயலாமையில் இருந்தும், சோம்பலில் இருந்தும், கஞ்சத் தனத்தில் இருந்தும், கோழைத் தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: புகாரி)
6- اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنَ البُخْلِ، وَأَعوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأعُوذُ بِكَ أنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ. (رواه البخاري)
பொருள்: இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், வயோதி பத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும்,வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், கப்ரின் (புதை குழியின்) வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். (ஆதாரம்: புகாரி)
7- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكَسَلِ وَالْهَرَمِ، وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ، وَمِنْ فِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ الْفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ عَنِّي خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ . (متفق عليه)
பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்தி லிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனை யிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெரும் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாது காப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மை யான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடை வெளியை ஏற்படுத்துவாயாக (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
8- اَللّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالاِنْجِيْلِ وَالْفُرْقَانِ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ اَللّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ . (رواه مسلم)
பொருள்: இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அரியணையின் அதிபதியே! எங்கள் இறைவா! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! தானிய வித்துகளையும் விதைகளையும் பிரி(த்து தாவர வர்க்கத்தை முளைப்பி)ப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கான் (குர்ஆன்) ஆகிய வேதங்களை அருளியவனே! அனைத்துப் பொருட்களின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். அவற்றின் முன்நெற்றி ரோமங்களை நீயே பிடித்துள்ளாய். இறைவா! நீயே ஆரம்பமானவன், உனக்கு முன்னர் வேறெதுவும் இல்லை. நீயே இறுதியானவன், உனக்குப் பின்னர் வேறெதுவும் இல்லை. நீயே மேலானவன், உனக்கு மேலே வேறொன்றுமில்லை. நீயே அடித்தளமானவன், உனக்குக் கீழே வேறொன்றுமில்லை. எங்கள் கடன்களை நிறைவேற்றி வைப்பாயாக! வறுமை யிலிருந்து காத்து எங்களைத் தன்னிறைவு கொள்ளச் செய்வாயாக! (ஆதாரம்: முஸ்லிம்)
9- اللَّهُمَّ إِنِّي أَ عُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ . (رواه مسلم)
பொருள்: யா அல்லாஹ்! நான் செய்த, மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (ஆதாரம்: முஸ்லிம்)
10- اَللّهُمَّ أَصْلِحْ لِيْ دِينِيَ الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِيْ وَأَصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ وَأَصْلِحْ لِيْ آخِرَتِيَ الَّتِيْ فِيْهَا مَعَادِيْ وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِيْ فِيْ كُلّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِيْ مِنْ كُلّ شَرّ. (رواه مسلم)
பொருள்: இறைவா! எனது காரியங்களின் கவசமாக உள்ள எனது நடத்தையைச் சீர் படுத்துவாயாக. நான் வாழ்கின்ற இவ்வுலகையும் எனக்குச் சீர்படுத்து வாயாக. நான் திரும்பிச் செல்ல இருக்கிற எனது மறுமையையும் சீர்படுத்துவாயாக. எனது வாழ் நாளை ஒவ்வொரு நன்மையையும் அதிகப்படுத்தக் கூடியதாக ஆக்குவாயாக, எல்லா தீமையிலிருந்தும் எனக்கு விடுதலையளிப்பதாக எனது மரணத்தை ஆக்கு! (ஆதாரம்: முஸ்லிம்)
11- اَللّهُمَّ إِنّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى. (رواه مسلم)
பொருள்: இறைவா! உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், கற்பொழுக்கத்தையும், செல்வத் தையும் வேண்டுகிறேன். (ஆதாரம்: முஸ்லிம்)
12- اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اَللّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا. (رواه مسلم)
பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பல் இருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் தள்ளாமை யிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப் படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன், அதன் காவலன். இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடை யாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையி லிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (ஆதாரம்: முஸ்லிம்)
13- اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْ تُضِلَّنِي، أَنْتَ الْحَيُّ الَّذِي لَا يَمُوتُ، وَالْجِنُّ وَالْإِنْسُ يَمُوتُونَ. (متفق عليه)
பொருள்: இறைவா! உனக்குக் கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன் மீதே நம்பிக்கை வைத்தேன். உன்னிடமே திரும்பினேன். உன்னிடமே வழக்குரைக்கிறேன். இறைவா என்னை நீ வழி தவறச் செய்யாதிருக்க உனது கண்ணியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தான் மரணிக்காது உயிருடன் இருப்பவன். மனிதரும், ஜின்களும் மரணிப்பவர்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
14- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ. (رواه مسلم)
பொருள்: இறைவா! உன் அருட்கொடைகள் (முற்றாக) நீங்குவதிலிருந்தும், நீ வழங்கிய (ஆரோக்கியம், செல்வம் போன்ற) நன்மைகள் (நோய், வறுமை போன்ற தீங்குகளாக) மாறி விடுவதிலிருந்தும், உனது தண்டனை திடீரென வருவதிலிருந்தும், உனது கோபத்திற்கு உள்ளாக்கும் அனைத்து அம்சங்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். (ஆதாரம்: முஸ்லிம்)
15- اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ. (رواه مسلم)
பொருள்: இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக. (ஆதாரம்: முஸ்லிம்)
16- اللهُمَّ رَبَّ جِبْرَائِيل وَمِيكائِيلَ وَإسْرَافِيلَ، فَاطِرَ السَّماوَاتِ وَالأرْض، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَة، أَنْتَ تَحْكُمْ بَيْنَ عِبَادِكَ فِيما كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ. اهْدِنِي لَمِا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإذْنِكَ، إنّكَ تَهْدِى مَنْ تَشَاءُ إلَى صِرَاطٍ مُسْتَقِيم. (رواه مسلم)
பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படை யானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (பிற மக்களால்) மாற்றுக் கருத்து கொள்ளப்பட்டாலும் சத்திய (மார்க்க)த்திலேயே உன் தயவால் என்னை நிலைத்திருக்கச் செய்வாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்து கிறாய். (ஆதாரம்: முஸ்லிம்)
17- اللَّهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ. (رواه مسلم)
பொருள்: இறைவா, உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திலிருந்தும், உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.இறைவா! உன் (கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னை விட்டும் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்துகொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய். (ஆதாரம்: முஸ்லிம்)
18- اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ. (متفق عليه)
பொருள்: யா அல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
19- اللَّهُمَّ اجْعَلْ لِي فِي قَلْبِي نُورًا ، وَفِي لِسَانِي نُورًا ، وَفِي سَمْعِي نُورًا ، وَفِي بَصَرِي نُورًا ، وَمِنْ فَوْقِي نُورًا ، وَمِنْ تَحْتِي نُورًا ، وَعَنْ يَمِينِي نُورًا ، وَعَنْ شِمَالِي نُورًا ، وَمِنْ بَيْنِ يَدَيَّ نُورًا ، وَمِنْ خَلْفِي نُورًا ، وَاجْعَلْ فِي نَفْسِي نُورًا ، وَأَعْظِمْ لِي نُورًا. (متفق عليه)
பொருள்: இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் மனத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு ஒளியை வலிமையாக்குவாயாக (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
20- اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآَجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ، وَمَا لَمْ أَعْلَمْ، اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَاذَ مِنْهُ عَبْدُكَ وَنَبِيُّكَ، اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ ، وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ تَقْضِيهِ لِي خَيْرًا . (رواه ابن ماجة)
பொருள்: யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து நன்மைகளையும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் (தருமாறு) உன்னிடம் கேட்கிறேன். நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து தீமைகளை விட்டும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உன்டைய அடியாரும், நபியுமாகிய (முஹம்மது-ஸல்) அவர்கள் கேட்ட நல்லவைகள் அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அடியாரும் நபியுமாகிய (முஹம்மது ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய தீமைகள் அனைத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! சொர்க்கத்தையும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ எனக்கு நிர்ணயித்துள்ள அனைத்து தீர்ப்புகளையும் (ஏற்பாடுகளையும்) எனக்கு நல்லதாக ஆக்கிவைக்குமாறும் உன்னிடம் வேண்டுகிறேன். (ஆதாரம்: இப்னுமாஜா)
21- اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ، وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْغِنَى وَالْفَقْرِ، وَأَسْأَلُكَ نَعِيمَاً لاَ يَنْفَدُ، وأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لاَ تَنْقَطِعْ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعَدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأْلُكَ لَذَّةَ النَّظَرِ إلَى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ، فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلاَ فِتْنَةٍ مُضِلَّةٍ، اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ. (رواه أحمد والنسائي)
பொருள்: யா அல்லாஹ்! உன்னுடைய மறைவான அறிவைக் கொண்டும் படைப்பினங்கள் மீதுள்ள உனது ஆற்றலைக் கொண்டும் (நான் கேட்கின்றேன்) நான் (இவ்வுலகில்) வாழ்வது எனக்கு நலவாக இருந்தால் என்னை உயிர் வாழ வைப்பாயாக! நான் மரணிப்பது எனக்கு நலவாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! யா அல்லாஹ்! மறைவான நிலையிலும் வெளிப்படையான நிலையிலும் உனக்கு அஞ்சி வாழ்வதை கேட்கின்றேன். சந்தோச நிலையிலும் கோபப்படும் போதும் சத்தியத்தை மொழியும் பாக்கியத்தை நான் உன்னிடம் கேட்கின்றேன். செல்வ நிலையிலும் வறுமையிலும் நடுநிலை பேணுவதை கேட்கின்றேன். முடிவில்லாத அருட்பாக்கியத்தை நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் உனது தீர்ப்பின் மீது திருப்தி கொள்ளும் (மனோ) நிலையை நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் மரணத்தின் பின் இதமான வாழ்க்கையையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், மேலும் உனது திருமுகத்தை காணும் இன்பத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், இன்னும் வழிகெடுக்கும் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதில் ஆர்வத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன், யா அல்லாஹ்! ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் அழகைக்கொண்டு எங்களை அழகு படுத்துவாயாக! மேலும் நேர்வழி பெற்றவர்களாகவும் நேர்வழி காட்டுபவர்களாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக! (ஆதாரம்: அஹ்மத், நஸாஈ)
22- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ ، وَأَهْلِي وَمَالِي ، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي ، وَآمِنْ رَوْعَاتِي ، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي ، وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي ، وَمِنْ فَوْقِي ، وَأَعُوذُ بِعَظَمَتِكَ مِنْ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي. (رواه أبو داوود)
பொருள்: யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யா அல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். (ஆதாரம்: அபூதாவூத்)
23- اللّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ. (رواه أحمد والترمذي)
பொருள்: இறைவா! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! வானங்களை யும், பூமியையும் படைத்தவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே! வணக்கத்திற் குரியவன் உன்னைத் தவிர யாரு மில்லை. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)
24- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ، وَأَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ قَلْبَاً سَلِيمَاً، وَلِسَانَاً صَادِقَاً، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ، إِنَّكَ أنْتَ عَلاَّمُ الْغُيُوبِ. (رواه النسائي، والطبراني في الكبير)
பொருள்: யா அல்லாஹ்! (சகல நல்ல) காரியங்களில் நிலைத்திருப்பதையும், நேர்வழியில் உறுதியையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். இன்னும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திடவும் உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் நான் உன்னிடம் கேட்கின்றேன். தூய்மையான உள்ளத்தை யும் உண்மை உரைக்கும் நாவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த நன்மைகளை (எல்லாம்) கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த எல்லா தீங்குகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். உனக்குத் தெரிந்த (எல்லாப்) பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (ஆதாரம்: தப்ரானி, நஸாஈ)
25- اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ. (رواه الترمذي)
பொருள்: யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டு எனக்கு போதுமாக்கு வாயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவை யற்றவனாக ஆக்குவாயாக. (ஆதாரம்: திர்மிதி)
26- اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إلَهَ إلاَّ أنْتَ، اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ الكُفْرِ وَالفَقْرِ، وأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، لا إلَهَ إلاَّ أنْتَ. (رواه أبو داوود)
பொருள்: யாஅல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. (ஆதாரம்: அபூதாவூத்)
27- رَبِّ أَعِنِّي وَلَا تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلَا تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرِ الهُدَى إِلَيَّ، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ، رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا، لَكَ ذَكَّارًا، لَكَ رَهَّابًا، لَكَ مِطْوَاعًا، إِلَيْكَ مُخْبِتًا أَوَّاهاً مُنِيبًا، رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَأَجِبْ دَعْوَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَاهْدِ قَلْبِي، وَسَدِّدْ لِسَانِي، وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي. (رواه أحمد والترمذي)
பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு கிருபை செய்வாயாக! எனக்கு பாதகமாக கிருபை செய்யாதிருப்பாயாக! எனக்கு உதவி செய்வாயாக! எனக்கு பாதகமாக உதவி செய்யாதிருப்பாயாக! எனக்காக சூழ்ச்சி செய்வாயாக! எனக்கு பாதகமாக சூழ்ச்சி செய்யாதிருப்பாயாக! எனக்கு நேர்வழியை காட்டுவாயாக! நேர்வழியை எனக்கு எளிதாக்கு வாயாக! எனக்கு அநீதி செய்பவருக்கு பாதகமாக எனக்கு உதவிசெய்வாயாக! உனக்கு நன்றி செலுத்து பவனாக, உன்னை நினைவு கூர்பவனாக, உன் மீது அதிக அச்சம் கொள்பவனாக, உனக்கு வழிப் படுபவனாக, கட்டுப்படுபவனாக, அடிபணிபவனாக, சரணடைபவனாக என்னை ஆக்குவாயாக. இறைவா! எனது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! எனது பாவங்களை போக்கிடுவாயாக! எனது பிரார்த்தனைக்கு பதிலளிப்பாயாக! எனது ஆதாரங்களை நிலைபெறச் செய்வாயாக! எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! எனது நாவை பலப்படுத்துவாயாக! எனது உள்ளத்தின் கசடுகளை அகற்றிடுவாயாக! (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)
28- اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كُلُّهُ، اللَّهُمَّ لاَ قَابِضَ لِمَا بَسَطْتَ، وَلاَ بَاسِطَ لِمَا قَبَضْتَ، وَلاَ هَادِيَ لِمَنْ أَضْلَلْتَ، وَلاَ مُضِلَّ لِمَنْ هَدَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُقَرِّبَ لِمَا بَاعَدْتَ، وَلاَ مُبَاعِدَ لِمَا قَرَّبْتَ، اللَّهُمَّ ابْسُطْ عَلَيْنَا مِنْ بَرَكَاتِكَ، وَرَحْمَتِكَ، وَفَضْلِكَ، وَرِزْقِكَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ الْمُقِيمَ الَّذِي لاَ يَحُولُ وَلاَ يَزُولُ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ يَوْمَ الْعَيْلَةِ، وَالأَمْنَ يَوْمَ الْخَوْفِ، اللَّهُمَّ إِنِّي عَائِذٌ بِكَ مِنْ شَرِّ مَا أَعْطَيْتَنَا وَشَرِّ مَا مَنَعْتَنَا، اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الإِيمَانَ وَزِيِّنْهُ فِي قُلُوبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِينَ، اللَّهُمَّ تَوَفَّنَا مُسْلِمِينَ، وَأَحْيِنَا مُسْلِمِينَ، وَأَلْحِقْنَا بِالصَّالِحِينَ غَيْرَ خَزَايَا وَلاَ مَفْتُونِينَ، اللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ يُكَذِّبُونَ رُسُلَكَ، وَيَصُدُّونَ عَنْ سَبِيلِكَ، وَاجْعَلْ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ، اللَّهُمَّ قَاتِلِ الكَفَرَةَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ، إِلَهَ الْحَقِّ. (رواه أحمد)
பொருள்: யாஅல்லாஹ்! புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானது. நீ விரித்ததை மடக்குபவர் யாரும் இல்லை. நீ மடக்கியதை விரிப்பவர் யாரும் இல்லை, நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. நீ நேர்வழி காட்டியவரை வழி கெடுப்பவர் யாரும் இல்லை, நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாரும் இல்லை. நீ கொடுத்ததைக் தடுப்பவர் யாரும்இல்லை, நீ தூரமாக்கி வைத்ததை நெருக்கமாக்கி வைப்பவர் யாருமில்லை, நீ நெருக்கமாக்கி வைத்ததை தூரமாக்கி வைப்பவர் யாருமில்லை, யாஅல்லாஹ்! உனது வளங்கள்,உனது கருணை, உனது கிருபை, உனது ரிஸ்க் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக! யாஅல்லாஹ்! நீங்காத, விலகிச் செல்லாத, நிரந்தரமான அருட்கொடையை உன்னிடம் கேட்கிறேன். யாஅல்லாஹ்! சிரமமான நேரத்தில் உதவியையும், பயத்தின் நேரத்தில் பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன், யா அல்லாஹ்! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கி லிருந்தும், நீ எங்களுக்கு தடுத்தவற்றின் தீங்கி லிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானை (இறை நம்பிக்கையை) பிரியமாக்கிவை. அதை எங்களது உள்ளங்களில் அலங்கரித்துவை. இறை நிராகரிப்பு, உனது கட்டளைக்கு மாறு செய்வது, உனக்குக் கட்டுப்படாதிருத்தல் முதலியவற்றை எங்களுக்கு வெறுப்பாக்கி விடு. எங்களைப் பகுத்தறிவாளர்களில் ஆக்கிவிடு யா அல்லாஹ்! எங்களை முஸ்லிம்களாக மரணிக்க செய்வாயாக! முஸ்லிம்களாக எங்களை வாழச் செய்வாயாக! நஷ்டமடையாதவர்களாக, சோதனைக்கு உள்ளாகாதவர்களாக எங்களை நல்லோர்களுடன் சேர்த்து வைப்பாயாக யா அல்லாஹ்! உனது தூதர்களைப் பொய்யாக்கி, உனது வழியிலிருந்து தடுக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! அவர்கள் மீது உனது தண்டனையையும் வேதனையையும் இறக்குவாயாக. யாஅல்லாஹ்! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருக்கும் நிராகரிப் பாளர்களை நீ அழித்துவிடு! உண்மையான இறைவனே! "(ஆதாரம்: அஹ்மத்)
29- اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ . (متفق عليه)
பொருள்: யா அல்லாஹ்! இப்ராஹீம் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் நீ கருணை புரிந்தது போன்று முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் கருணை புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். யா அல்லாஹ்! இப்ராஹீம் நபி மீதும் அவர்கள் வழிவந்தவர்களின் மீதும் நீ அருட்பேறுகள் பொழிந்தது போன்று முஹம்மத் நபி மீதும் அவர்களின் வழிவந்தவர்களின் மீதும் நீ அருட் பேறுகள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
உங்கள் கருத்துக்களை எமக்கு அறிவிக்கவும்.