அல்குர்ஆன் உங்கள் பார்வைக்கு! ()

முஹம்மத் இம்தியாஸ்

குர்ஆனைப் பற்றிய அறிவு வினாக்கள் மூலம் வெளிப்படுகிறது

  |

  அல்குர்ஆன் உங்கள் பார்வைக்கு!

  ] தமிழ் – Tamil –[ تاميلي

  இம்தியாஸ் யூசுப்

  2013 - 1434

  القرآن سؤال وجواب

  « باللغة التاميلية »

  إمتياز يوسف

  2013 - 1434

  அல்குர்ஆன் உங்கள் பார்வைக்கு!

  MSM . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி.

  அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதில் எந்த கூட்டல் குறைவுகள் திரிபுகள் கையாட்டல்கள் நடந்ததில்லை. நபி(ஸல்) அவர்களுடைய வார்த்தைக்கூட இடம் பெற்றதில்லை. அன்று முதல் இன்றுவரை இறக்கப்பட்ட பிரகாரம் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. அல்குர்ஆனுடைய அடிப்பபடையை அல்குர்ஆனைக் கொண்டே முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குர்ஆன் பற்றிய அறிமுகத்தை இங்கே சுருக்கமாக முன்வைக்கிறேன்.

  அன்புக்குரியவர்களே! அல்லாஹ்வை ஈமான் பொண்ட நாம் அல்லாஹ் வுடைய வேதத்தையும் ஈமான் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். எனவே அல்குர்ஆனின் அறிமுகத்தை பின்வருமாறு விளங்கிக் கொள்வோம்.

  · அல்குர்ஆன் எப்போது அருளப்பட்டது?

  அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது.

  شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ

  ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டி யாகவும் நேரான வழியைத் தெளிவாக்கக் கூடிய தாகவும் நன்மை-தீமையை பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன்அருளப் பெற்றது... (2:185).

  · ரமழானின் எந்த இரவில் அருளப்பட்டது?

  லைலதுல் கத்ர் இரவில் அருளப்பட்டது.

  إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ

  தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக நாம் இதனை மிக்க பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கிவைத்தோம். (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம். (44:1-3)

  إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ

  நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை லைலதுல் கத்ர் (மகத்துவம் மிக்க) இரவில் இறக்கி வைத்தோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்ன வென உமக்கு எப்படி தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.

  வானவர்களும் (ஜிப்ரீல் ஆகிய பரிசுத்த) ஆவியும் தங்கள் இறைவனின் கட்டளைப் பிரகாரம் ஒவ்வொரு காரியத்துடன் இறங்கு கின்றனர். ஸலாம்-சாந்தி சமாதானம்- இது விடியற் காலை வரை இருக்கும். (97:1)

  · அல்குர்ஆன் எந்த மொழியில் அருளப்பட்டது?

  அல்குர்ஆன் எந்த சமுதாயத்திற்கு அருளப்பட்டதோ அந்த சமுதாயம் பேசிய அறபு மொழியில்தான் அருளப்பட்டது.

  الر تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ (1) إِنَّا أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ

  அலிப்.லாம்.ரா. இது தெளிவான வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் நன் கறிந்து கொள்ளும் பொருட்டு அறபு மொழியில் இக்குர்ஆனை நிச்சயமாக நாமே அருளினோம். (12:2)

  وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ

  ஒரு மனிதர் தான் (முஹம்மத் நபியாகிய) இவருக்கு (இவ்வேதத்தை) கற்றுக் கொடுக்கிறார் என்று இவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறி வோம். எவர் கற்றுக் கொடுப்பதாக இவர்கள் கூறுகிறார்களோ அவருடைய மொழியோ அரபு அல்லாத வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அறபு மொழியில் உள்ளது. (16:103).

  · அல்குர்ஆன் நபியவர்களுக்கு எப்படி வந்தது?

  அல்லாஹ்வின் வானர்களின் தலைவர் ஜீப்ரீல் (அலை) மூலம் குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு எத்திவைக்கப்பட்டது.

  قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ

  நிச்சயமாக (ஜிப்ரீல் ஆகிய) அவர் அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரமே உமது இதயத்தில் இதனை இறக்கி வைத்தார். (2:97).

  وَإِنَّهُ لَتَنْزِيلُ رَبِّ الْعَالَمِينَ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنْذِرِينَ بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ

  நpச்சயமாக இது அகிலத்தாரின் இரட்சகனால் அருளப்பட்டதாகும். ஏச்சரிக்கை செய்வோரில்நீர் இருப்பதற்காக நம்பிக்கைக்குரிய ரூ{ஹ்(என்னும் ஜிப்ரயீல்) இதனை உமது இருதயத்தில் இறக்கி வைத்தார்.(இது) தெளிவான அரபு மொழியில் உள்ளதாகும். (26:193 16:102 53:5-8 81:19-24).

  அல்குர்ஆன் எழுத்து வடிவில் இறங்கியதா?

  அல்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் ஓசை வடிவில் அருளப்பட்டு கற்றுக் கொடுக்கப்பட்டது.

  إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى

  இது (குர்ஆன்) அவருக்கு (முஹம்மத் நபிக்கு) வஹீ மூலம் அறிவிக்கப் பட்டதே யன்றி வேறில்லை. (ஜிப்ரீல் என்னும்) பலசாலியே இதனை அவ ருக்குக் கற்றுக் கொடுக்கிறார். (53:4-6).

  لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

  (நபியே! ஜிப்ரீல் மூலம் ஓதிக் காண்பிக்கும்போது) நீர் அவசரப்பட்டு அதனை ஓத உம்முடைய நாவை அசைக்காதீர். ஏனென்றால் அதனை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும் படி செய்வது நம்மீதுள்ள கடமையாகும். (75:16-19)

  أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّا أَنْزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ يُتْلَى عَلَيْهِمْ إِنَّ فِي ذَلِكَ لَرَحْمَةً وَذِكْرَى لِقَوْمٍ يُؤْمِنُونَ

  அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் ஒரு வேதத்தை உமக்கு நாம் இறக்கியி ருப்பது அவர்களுகு;குப் போதாதா?நிச்சயமாக நம்பிக்கை கொள்ளும் சமூகத் தாருக்கு இதில் அருளும் நல்லுபதேசமும் இருக்கின்றன.(29:51)

  · அல்குர்ஆன் எங்கே பதியப்பட்டிருந்தது?

  அல்குர்ஆன் வானத்திலுள்ள லவ்ஹுல் மஹ்பூளில் பதியப்பட்டிருந்தது. அங்கிருந்து நபியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் அருளப்பட்டது.

  إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ فِي كِتَابٍ مَكْنُونٍ لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ

  நிச்சயமாக இது மிக்க கண்ணியமுள்ள குர்ஆனாகும். (லவ்ஹுல் மஹ்பூல் என்னும்) பாதுகாக்கப் பட்ட புத்தகத்தில் இருக்கிறது. (56:77-78)

  بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ فِي لَوْحٍ مَحْفُوظٍ

  இந்த கண்ணியமான குர்ஆன் லவ்ஹுல் மஹ்பூலில் பதிவு செய்யப்பட்டி ருக்கிறது. (85: 21-22)

  فِي صُحُفٍ مُكَرَّمَةٍ مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ بِأَيْدِي سَفَرَةٍ كِرَامٍ بَرَرَةٍ

  மிக்க கண்ணியமான நல்லோராகிய எழுதுவோர்களின் கைகளினால் (லவ் ஹுல் மஹ்பூல் எனும்) மிக்க கண்ணியமான ஏடுகளில் வரையப்பட்ட பரிசுத்தமான இ(வ்வேதமான)து மிக்கமேலான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. (80:13-16).

  · அல்குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ள இடத்தை ஷைத்தானால் அணுக முடியுமா?

  நிச்சயமாக ஷைத்தானால் அணுக முடியாது.

  إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ فِي كِتَابٍ مَكْنُونٍ لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ

  (இந்தக் குர்ஆன் லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. துய்மையான (வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள். (56:77-79).

  · அல்குர்ஆன் மொத்தமாக அருளப்பட்டதா?

  நிச்சயமாக இல்லை. நபிகளாரின் பிரச்சாரப் பணியில் சமூக உருவாக்கத் திற்கேற்ப சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப சிறிது சிறிதாக 23 வருடங்களாக நபியவர்களுக்கு அருளப்பட்டது.

  وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنْزِيلًا

  மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்தக் குர்ஆ னைப் பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதனைச் சிறுகச் சிறுகவும் இறக்கி வைத்தோம். (17:106).

  وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً كَذَلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ وَرَتَّلْنَاهُ تَرْتِيلًا

  இந்தக் குர்ஆன் முழுவதும் (நபியாகிய) அவர் மீது ஒரே தடவையில் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? என்று நிராகரிக்கும் இவர்கள் கேட்கின்றனர். இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக (குர்ஆனை உமக்கு) இறக்கியதெல் லாம் உம் இருத யத்தைத் திடப்படுத்துவதற்காகவே! (25:32).

  · அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்கள் மாற்றியமைத்ததுண்டா?

  அல்லாஹ்வினால் அருளப்பட்ட பிரகாரமே குர்ஆனை எத்திவைத்தார்களே தவிர அதில் ஒரு எழுத்தைக் கூட நபியவர்கள் மாற்றிவிடவில்லை.

  وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

  அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் இது அல்லாத வேறு குர்ஆனை கொண்டு வருவீராக அல்லது இதை மாற்றியமைப்பீராக'' என்று நமது (மறுமை) சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர்.

  நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறி விக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்துவிட்டால் மகத்தான (மறுமை) நாளின் வேதனையை அஞ்சுகிறேன் என நபியே கூறுவீராக (10:15).

  · அல்குர்ஆனை வஹிமூலம் பெற்ற நபி(ஸல்)அவர்கள் எழுதப்படிக்க தெரிந்தவரா?

  இல்லை. முஹம்மத்(ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியா வார்கள்.

  وَمَا كُنْتَ تَتْلُو مِنْ قَبْلِهِ مِنْ كِتَابٍ وَلَا تَخُطُّهُ بِيَمِينِكَ إِذًا لَارْتَابَ الْمُبْطِلُونَ

  மேலும் (நபியே) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்தையும் ஓதுபவராக இருந் தததுமில்லை. உமது வலக்கரத்தால் அதனை நீர் எழுதவுமில்லை. அவ்வா றெனில் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.(29:48)

  · அல்குர்ஆன் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் முழுமை படுத்தப் பட்டதா?

  ஆம். அல்குர்ஆன் முழுமைபடுத்தப் பட்டதால்தான் இஸ்லாமிய மார்க்கமும் முழுமைப்படுத்தப்பட்டது.

  الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

  நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம் பரிபூரண மாக்கி வைத்துவிட்டேன். உங்கள் மீது எனது அருட்கொடைகளையும் பூர்த்தி யாக்கி விட்டேன். இஸ்லாததை உங்களுக் கான மார்க்கமாகவும் பொருந்திக் கொண்டேன் (5:3).

  · அல்குர்ஆனுக்கு விளக்கம் சொல்லும் உரிமை நபிகளாருக்கு வழங் கப்பட்டதா?

  وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

  ஆம். அவர்கள் கூறும் விளக்கம் மார்க்கமாகவும் ஆக்கப்பட்டது.

  மக்களுக்கு அருளப்பட்டதை அவர்களுக்கு நீர் விளக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் சிந்திக்க வேண் டும் என்பதற்காகவும் இந்த வேதத்தை நபியே நாம் உம்மீது இறக்கிவைத்தோம். (16:44).

  · அல்குர்ஆன் இறைவேதம் என உறுதிப்படுத்துவது எப்படி?

  குர்ஆனைப் போன்ற ஒரு வேதத்தை எவராலும் உருவாக்க முடியாது என்று அல்லாஹ் சவால் விடுவதே குர்ஆன் இறைவேதம் என்பதற்கு சிறியதொரு சான்றாகும்.

  وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

  நமது அடியாருக்கு (முஹம்மத் நபிக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இதுபோன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் (அவ் விதம்) செய்யாவிட்டால் ஒருபோதும் செய்யவே முடியாது. நரக நெருப் புக்கு அஞ்சுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருட்கள். (2: 23.24).

  أمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِسُورَةٍ مِثْلِهِ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

  இதனை (இக்குர்ஆனை நம்முடைய தூதராகிய) அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றனரா? நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால் இதுபோன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங் கள். அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத் துக் கொள்ளுங்கள் என்று நபியே கூறுவீராக. (10:38)

  أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (13) فَإِلَّمْ يَسْتَجِيبُوا لَكُمْ فَاعْلَمُوا أَنَّمَا أُنْزِلَ بِعِلْمِ اللَّهِ وَأَنْ لَا إِلَهَ إِلَّا هُوَ فَهَلْ أَنْتُمْ مُسْلِمُونَ

  (நம்முடைய தூதராகிய) இவர் இதை பொய்யாக கற்பனை செய்து கொண்டா ரென அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக் கட்டி பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள். அல்லாஹ் வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை அழைத்துக் கொள்ளுங் கள் என்று நபியே கூறுவீராக.

  உங்களுக்கு அவர்கள் பதிலளிக்காவிட்டால் நிச்சயமாக அல்லாஹ்வின் ஞானத்துடன் இது அருளப்படது என்பதையும் அவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கட்டுப்படுகிறீர்களா? (11:13 14)

  قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنْسُ وَالْجِنُّ عَلَى أَنْ يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا

  இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று திரண்டாலும் இதுபோன்றதைக் கொண்டு வரமுடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இரு ந்தாலும் சரியே என்று நபியே கூறுவீராக! (17:88).

  · அல்குர்ஆனுக்கும் முன்னைய நபிமார்களுக்கும் கொடுக்கப்பட்ட வேதங்களுக்கும் என்ன தொடர்பு?

  முஹம்மது நபிக்கு முன்பு வந்த நபி மார்களுக்கும் அல்லாஹ்வினால் வேதங்கள் அருளப்பட்டதென்று நம்ப வேண்டும் என்றும் முஸ்லம்களுக்கு கட்டளையிடப் பட்டுள்ளது. ஆனால் அந்த வேதங்களை பின்பற்ற வேண்டும் என்று ஏவப்படவில்லை. அல்குர்ஆன் அவ்வேதங்களை உண்மைப் படுத்துவதுடன் அந்த வேதங்களில் கையாளப்பட்ட தவறுகளையும் திரிபு களையும் சுட்டிக் காட்டுகிறது.

  قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ عَلَيْنَا وَمَا أُنْزِلَ عَلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ

  நபியே! நாங்கள் அல்லாஹ்வையும் எங்கள் மீது இறக்கப்பட்டதையும் இப்றாகீம் இஸ்மாயீல் இஸ்ஹாக் யஃகூப் ஆகியோர் மீதும்(இவருடைய) சந்ததிகள் மீதும் இறக்கப்பட்டதையும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் மற்றும் ஏனைய நபிமார்களுக்கும் அவர்களது இரட்சகனிடமிருந்து வழங்கப்பட்டதை யும் நம்பிக்கை கொண்டோம் என்று கூறுவீராக மேலும் அவர்களில் எவருக்கிடையிலும் வேறுபாடு காட்டமாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்கள் என்றும் கூறுவீராக.(3:84)

  · அல்குர்ஆனைத்தான் முன்னைய வேதங்கள் கொடுக்கப்பட்டவர் களும் பின்பற்ற வேண்டுமா?

  அல்குர்ஆன் இறுதி வேதம் என்பது போல் முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் உலக மக்களுக்கு இறுதி நபியாவார்கள். அல்குர்ஆனையும் நபியையும் ஏற்றுக் கொள்வது அவர்கள் மீதும் கடமையாகும் என குர்ஆன் குறிப்பிடு கிறது.

  يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِمَّا كُنْتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَنْ كَثِيرٍ قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ

  வேதத்தையுடையவர்களே! வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்த வற்றில் அதிகமானவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்தும் எமது தூதர் உங்களிடம் வந்துள்ளார். எனினும் பலவற்றை அவர் விட்டு விடுவார். அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவான வேதமும் (குர்ஆனும்) நிச்சய மாக உங்களிடம் வந்து விட்டது.(5:14)

  அல்குர்ஆனில் தவறுகள் ஏற்பட இடமுண்டா?

  எக்காலத்திலும் தவறுகள் ஏற்பட வாய்ப்பேயில்லை.

  لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ

  இதற்கு முன்பும் இதற்கு பின்னும் இதில் பொய் வராது. புகழுக்குரிய ஞான மிக்கோனிட மிருந்து (இக்குர்ஆன்) அருளப்பட்டது. (41:42)

  · அல்குர்ஆனை பாதுகாக்கும் பொறுப்பு யாருக்குரியது?

  அல்லாஹ்வே அப்பொறுப்பை ஏற்றி ருக்கிறான்.கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் குர்ஆன் பதிவாகியுள்ளது.

  إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

  நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.' (15:9)

  · அல்குர்ஆன் படித்து விளங்குவதற்கு எளிதானதா?

  அனைத்து மக்களுக்கும் நேர்வழியை காட்டும் பொருட்டு மிகஇலகு நடையில் குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது.

  أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا

  அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடு களைக் கண்டிருப்பார்கள். (4:82).

  وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ

  இக்குர்ஆனை விளங்குவதற்கு எளி தாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (54:22)

  أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا

  அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்களின் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24).

  · அல்குர்ஆனை ஓதாது விட்டால் படிக்காது விட்டால் என்ன நடக்கும்?

  அல்குர்ஆனை ஓதாது படிக்காது விட்டால் அதன் படி நடக்காது விட்டால் மறுமையில் தண்டனை கிடைக்கும்.

  وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا

  எனது போதனையை புறக்கணிப்பவனுக்கு நிச்சயமாக நெருக்கடியான வாழ்க்கை உண்டு.அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். என் இரட்சகா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே. ஏன் என்னை குருட னாக எழுப்பினாய்?என்று அவன் கேட்பான். அப்படித்தானட நம் முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன.அதை நீ மறந்தவாறே இன்று நீ மறக்கப் படுகிறாய் என்று (அல்லாஹ்) கூறுவான். (20:124-126)

  · அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமுரியதா?

  இல்லை. முழு மனித சமூகத்திற்கு முரியது.

  تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا

  அகிலத்தாருக்கு எச்சரிக்கையாக இருப்பதற்காக (சத்தியத்தையும் அசத்தியத் தையும்) பிரித்தறிவிக்கக்கூடிய (இவ்வேதத்)தை தன் அடியார் மீது இறக்கி வைத்தவன் பாக்கியமுடையவனாவான்.(25:1)

  وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ فَأَيْنَ تَذْهَبُونَ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ

  இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வார்த்தையல்ல. எனவே நீங்கள் எங்கு செல்கிறீர்கள்.இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை (81:25-29 2:185 25:1 14:1).

  · அல்குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு?

  114 அத்தியாயங்கள் உண்டு