சாலிஹான மனிதர் மூலம் வஸீலா தேடுதல் ()

முஹம்மத் இம்தியாஸ்

உயிருடன் இருக்கும் இறையச்சமுள்ள நன்னடத்தையுள்ள நல்லடியார் ஒருவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களை நீக்கிட அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கோருவது இஸ்லாத்தில் தடுக்கப்பட வில்லை.

  |

  சாலிஹான மனிதர் மூலம் வஸீலா தேடுதல்

  ] Tamil – தமிழ் –[ تاميلي

  M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

  2014 - 1435

  التوسل بالصالحين

  « باللغة التاميلية »

  محمد إمتياز يوسف

  2014 - 1435

  சாலிஹான மனிதர் மூலம் வஸீலா தேடுதல்

  M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

  உயிருடன் இருக்கும் இறையச்சமுள்ள நன்னடத்தையுள்ள நல்லடியார் ஒருவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களை நீக்கிட அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கோருவது இஸ்லாத்தில் தடுக்கப்பட வில்லை.

  நபித் தோழர்கள் தங்களுக்காக தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களுக்hக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நபி(ஸல்) அவர்களிடம் வேண்டியுள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் காணமுடிகிறது.

  صحيح البخاري (7ஃ 116)

  حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، قَالَ: قَالَ لِي ابْنُ عَبَّاسٍ: أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الجَنَّةِ؟ قُلْتُ: بَلَى، قَالَ: هَذِهِ المَرْأَةُ السَّوْدَاءُ، أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنِّي أُصْرَعُ، وَإِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللَّهَ لِي، قَالَ: «إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الجَنَّةُ، وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ» فَقَالَتْ: أَصْبِرُ، فَقَالَتْ: إِنِّي أَتَكَشَّفُ، فَادْعُ اللَّهَ لِي أَنْ لاَ أَتَكَشَّفَ، فَدَعَا لَهَا حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا مَخْلَدٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ: «أَنَّهُ رَأَى أُمَّ زُفَرَ تِلْكَ امْرَأَةً طَوِيلَةً سَوْدَاءَ، عَلَى سِتْرِ الكَعْبَةِ»

  அதா இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'சுவனவாசிகளுள் ஒருவரான ஒருபெண்மணியை உனக்குக் காண்பித்துத்து தரட்டுமா என இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் சொன்னார்கள் (இதோ) இந்தக் கருப்பு நிறப் பெண்மணிதான். இவள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'சிலபொழுது நான் மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறேன்., இதனால் என் ஆடைகள் விலகிவிடுகின்றன. எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றாள்.

  அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீ விரும்பினால் இதனைப் பொறுத்துக்கொள்., உனக்குச் சுவனம் கிடைக்கும். அல்லது அல்லாஹ்விடம் நான் பிரார்த்தனை செய்ய வேண்டுமென நீ விரும்பினால் உனக்கு நிவராணம் அளிக்க (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்கிறேன் என்றார்கள்.

  அதற்கு அவள்- '(அப்படியாயின்) நான் பொறுமையாக இருக் கிறேன். ஆனால் என் ஆடைகள் விலகாதிருக்க அல்லாஹ் விடம் துஆ செய்யுங்கள் என்றாள். அந்தப் பெண்மணிக்காக நபி(ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள்' (நூல்: புகாரி, முஸ்லிம்)

  தன்னுடைய நோயினை சுகப்படுத்த அல்லாஹ்விடம் துஆ வேண்டுமாறு இந்த சஹாபி பெண் நபி(ஸல்) அவர்களிடம் நேரடியாக வந்து முறையிடுகிறார். அதனால் அந்தப் பெண் ணுக்கு கிடைகக்கூடிய நன்மைகளை நபியவர்கள் விளக் கப்படுத்துகிறாரகள்.

  அதுபோல் கண்தெரியாத ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தனது பார்வைக்காக பிரார்த்திக்குமாறு கோரிய சம்ப வமும் பிரசித்திப் பெற்றதாகும்.

  இது பற்றி உஸ்மான் இப்னு அனீப் (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள். கண் தெரியாத ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு சுகம் கிடைப்பதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுஙகள் என்றார்.அப்போது நபியவர்கள் நீ விரும்பினால் பிரார்த்திக்கிறேன். நீ விரும் பினால் பொறுமையாக இரும். அது உனக்கு நன்மையாகும் என்றார்கள். அப்போது அந்த மனிதர் தனக்காக பிரார்த்திக்கு மாறு கூறினார்.அதற்கு நபியவர்கள் அழகியமுறையில் நீ வுழு செய்து விட்டு

  اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ، إِنِّي تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي فِي حَاجَتِي هَذِهِ لِتُقْضَى لِيَ، اللَّهُمَّ فَشَفِّعْهُ فِيَّ

  என்று கூறுமாறு கூறினார்கள்.

  துஆவின் பொருள்:யாஅல்லாஹ்! கருணை நபியாகிய முஹம்மத் (ஸல்) அவர்களை கொண்டு உன்னிடம் முன்னோகியவனாக கேட்கிறேன்.முஹம்மதே! உங்கள் மூலமாக என் இரட்சகனிடம் எனது இந்த தேவையை நிறைவேற்றுமாறு(பார்வையை வழங்குமாறு) கேட்கிறேன். யாஅல்லாஹ்! எனது விஷயத்தில் அவருடைய (முஹம்மத்(ஸல்) அவர்களுடைய)பிரார்த்தனையை ஏற்பாயாக. (நூல்:திர்மிதி)

  சஹாபாக்கள் குழந்தை பிறந்ததும் அக்குழந்தையை நபியவர் களிடம் கொண்டுவருவார்கள். அக்குழந்தைக்காக நபியவர்கள் அருள் வளம் வேண்டி (பரகத் வேண்டி) பிரார்த்திக்கவும் பேரீத்தப்பழத்தை நபியவர்கள் மென்று குழந்தையின் வாயில் தேய்க்கவும் (தஹ்னீக் செய்யவும்) வேண்டும் என்று விரும்பினார்கள் என்ற ஹதீஸ்களும் சஹீஹூல் புகாரியில் பதிவாகியுள்ளதை காண முடிகிறது.

  கடுமையான வரட்சி ஏற்பட்ட போதும் மழை பொழிய பிரார்த்திக்குமாறு நபிகளாரை அனுகி கேட்டிருக்கிறார்கள்.

  صحيح البخاري (2ஃ 28)

  أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَذْكُرُ أَنَّ رَجُلًا دَخَلَ يَوْمَ الجُمُعَةِ مِنْ بَابٍ كَانَ وِجَاهَ المِنْبَرِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: هَلَكَتِ المَوَاشِي، وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُغِيثُنَا، قَالَ: فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، فَقَالَ: «اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا» قَالَ أَنَسُ: وَلاَ وَاللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ، وَلاَ قَزَعَةً وَلاَ شَيْئًا وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ، وَلاَ دَارٍ قَالَ: فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ، انْتَشَرَتْ ثُمَّ أَمْطَرَتْ، قَالَ: وَاللَّهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سِتًّا، ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ البَابِ فِي الجُمُعَةِ المُقْبِلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: هَلَكَتِ الأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يُمْسِكْهَا، قَالَ: فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ» قَالَ: فَانْقَطَعَتْ، وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ قَالَ شَرِيكٌ: فَسَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَهُوَ الرَّجُلُ الأَوَّلُ؟ قَالَ: «لاَ أَدْرِي»

  ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர் (மேடை) இருந்த திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங் களின் கைகளை உயர்ததி, 'இறைவா! எங்களுக்கு மழை பொழி யச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய் வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரித்து கிடக்கும் மேகங்களையோ (மழைக்குரிய) எந்த அறிகுறிகளையோ நாங் கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) 'ஸல்ஃ' எனும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியாக இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின் புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை.

  அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்து ம்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற் குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

  இரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் தெரி யாது என்றனர் என ஷரீக் கூறுகிறார்.

  அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி)

  மதீனாவில் மழையின்றி கடுமையான பஞ்சத்தினால் வாடிய போது மழைக்காக துஆ செய்யுமாறு ஒரு நபித்தோழர் நபிகளா ரிடம் வந்து வேண்டுகிறார். நபியவர்களும் மழையை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அப்பிரார்த்தனையை ஏற்று அல்லாஹ் மழையை பொழிய வித்தான்.

  அதுபோல் கடுமையான அந்தமழையினால் அழிவுகள் ஏற்பட்ட போதும் அந்த மழையi நிறுத்த பிரார்த்திக்குமாறு நபி(ஸல்) அவர்களிடம் வந்து சொன்ன போது நபியவர்கள் பிரார்த் தித்தார்கள் அல்லாஹ் அந்த பிரார்த்தனையையும் ஏற்றுக் கொண்டான்.

  இறைத்தூதர் என்ற வகையில் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களது துஆவை பெற சஹாபாக்கள் முயன்றுள்ளார் கள். எனவே உயிருடன் இருக்கும் நல்ல சாலிஹான மனிதரிடம் துஆ செய்யுமாறு தாராளமாக கேட்கலாம்

  நபி(ஸல்) அவர்களின் வபாத்(மரணத்திற்குப் பின் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மழையின்றி பஞ்சம் ஏற்பட்டது. அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி)அவர்களிடம் மழைக்காக பிரார்த் திக்குமாறு வேண்டினார்கள். இச்செய்தி புகாரியில் பின் வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  صحيح البخاري (2ஃ 27)

  عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالعَبَّاسِ بْنِ عَبْدِ المُطَّلِبِ، فَقَالَ: «اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا فَتَسْقِينَا، وَإِنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا»، قَالَ: فَيُسْقَوْنَ

  அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் பொழுது உமர்(ரலி) அப்பாஸ்(ரலி) மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தார்கள்.இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய். (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோரு கிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக என்று உமர்(ரலி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும். என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

  உமர்(ரலி) அவர்;களின் வேண்டுதலை ஏற்று அப்பாஸ் (ரலி) அவர்கள் பிரர்த்திக்கும் போது

  اللَّهُمَّ إِنَّهُ لَمْ يَنْزِلْ بَلَاءٌ إِلَّا بِذَنْبٍ وَلَمْ يُكْشَفْ إِلَّا بِتَوْبَةٍ وَقَدْ تَوَجَّهَ الْقَوْمُ بِي إِلَيْكَ لِمَكَانِي مِنْ نَبِيِّكَ وَهَذِهِ أَيْدِينَا إِلَيْكَ بِالذُّنُوبِ وَنَوَاصِينَا إِلَيْكَ بِالتَّوْبَةِ فَاسْقِنَا الْغَيْثَ فَأَرْخَتِ السَّمَاءُ مِثْلَ الْجِبَالِ حَتَّى أَخْصَبَتِ الْأَرْضَ وَعَاشَ النَّاسُ فتح الباري لابن حجر (2ஃ 497

  யாஅல்லாஹ் எந்தவொரு துன்பமும் பாவத்தின் காரணமாகவே இறங்குகிறது. அது பாவமன்னிப்பின் மூலம் நீங்குகிறது. உன் நபியிடம் எனக்கு இருக்கும் கண்ணியத்தின் காரணமாக இந்த சமூகம் என்னைக் கொண்டு உன்னிடம் முன்னோக்குகிறது. பாவங்களுக்கு பரிகாரமாக பாவமன்னிப்பைக் கொண்டு எங்களது கரங்களை உயர்த்தியுள்ளோம்.எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள். (நூல்: பத்ஹூல் பாரி)

  அவ்வாறே முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது யஸீத் இப்னுல் அஸ்வத்(ரலி) அவர்கள் மூலம் மழை வேண்டி பிரார்த்pத்தார்கள்.(நூல: இப்னு அஸாகீர்)

  உயிருடன் இருக்கும் சாலிஹான மனிதர் மூலம் வஸீலா தேடலாம் என்பதை இந்த செய்திகள் உறுதியாக தெரிவிக்கின்றன.