முன்னைய வேதங்களில் முஹம்மது நபி (ஸல்) ()

டாக்டர். சாகிர் அபதுல் கரீம் நாயக்

முன்னைய வேதங்களில் முஹம்மத் நபி (ஸல்) பற்றி குறிப்பிடும் உண்மை வசனங்கள்

    |

    முன்னைய வேதங்களில் முஹம்மது நபி (ஸல்)

    ] தமிழ் – Tamil –[ تاميلي

    டாக்டர் ஜாகிர் நாயக்

    தமிழாக்கம்

    M.S.M. இம்தியாஸ் யூசுப்

    ﷻ‬.M.. சமீம்

    2013 - 1434

    محمد ﷺ في اغلديانات القديمة

    « باللغة التاميلية »

    د/ ذاكر نايك

    ترجمة: إمتياز يوسف

    2013 - 1434

    முன்னைய வேதங்களில் முஹம்மத் நபி(ஸல்)

    தமிழில்: எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி

    ﷻ‬.M.. சமீம்

    முன்னுரை

    பம்பாயை சேர்ந்த Dr. ஜாகிர் நாயக், ஆங்கில மொழியில் சர்வதேச அரங்கில் பிரசித்திப் பெற்ற ஒரு இஸ்லாமிய அழைப்பாளர். பல மதங்களையும் ஆய்வு செய்து இஸ்லாத்தின் தூதை உரிய முறையில் எத்திவைக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்.

    இஸ்லாத்திற்கெதிராக எழுப்பப்படும் ஐயங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உரிய பதில்களை வழங்கி தூய மார்க்கத்தின் உன்னத தன்மையை உலகறியச் செய்வதில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.

    இஸ்லாம் சர்வதேச மார்க்கம் இறுதி மார்க்கம்ள நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் சர்வதேச தூதர் முழுமனித சமூகத்திற்குமுரிய இறுதித் தூதர் என்ற செய்தியை உலக மக்களின் பார்வைக்கு எட்டச் செய்வதில் அயராது உழைத்து வருகிறார்.

    ஒரே ஒரு இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனது இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற தூதுத்துவச் செய்தியை பல மதங்களின் வேத நூல்கள் மற்றும் போதனை களிலிருந்து தக்க சான்றுகளுடன் மக்களுக்கு எடுத்துக் கூறி இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து வருகிறார்.. அவரது பணி தமிழ் உலகிற்கு இப்போதுதான் அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு அம்சமாகவே இந்நூலையும் தயாரித்துள்ளோம்.

    யூத கிறிஸ்தவ இந்து பௌத்த மற்றும் பார்சி நூல்களில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி முன்னறிவிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன என்ற அடிப்படை உண்மை யை Dr.ஜாகிர் நாயக் எடுத்துக்காட்டுகிறார். Dr.ஜாகிர் நாயக் இது பற்றி எழுதியுள்ள வைகளையும் பேசியுள்ளவைகளையும் அவரது சொற்பொழிவுகள் மற்றும் எழுத்துக்களிலிருந்தும்(இணையத்திலிருந்தும்) எடுத்து மொழி பெயர்த்து ‘‘முன்னைய வேதங்களில் முஹம்மத் நபி'' எனும் தலைப்பில் தொகுத்து இந்நூலை தயாரித்துள்ளோம். இப்பணியில் என்னுடன் மொழியாக்கம் செய்து தந்த மரி யாதைக்குரிய ஆசிரியர் ﷻ‬.M. சமீம் அவர்களுக்கு எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    பைபிளில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு

    பழைய ஏற்பாடு (OLD TESTMENT)

    பழைய ஏற்பாட்டில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அல்குர்ஆன் ஸூறா அல்அஃராபின் 7ம் அத்தியாயம் 157ம் வசனம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

    அவர்கள்தான் (எழுத்தறிவற்ற) உம்மி நபியான இத்தூதரைப் பின்பற்றுவார்கள். அவர் குறித்து எழுதப்பட்டிருப்பதை தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் கண்டு கொள்வார்கள். அவர், அவர்களுக்கு நன்மையை ஏவி, தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூய்மை யானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி தீயவற்றை அவர் களுக்குத் தடைசெய்வார். மேலும் அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்குவார். எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு அவரைக் கண்ணியப்படுத்தி அவருக்கு உதவியும் செய்து அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்று கின்றார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.’’

    1. பைபிளில் உபகாமம் எனும் அத்தியாயத்தில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எல்லாம் வல்ல இறைவன் மூஸாவுடன் பேசுகிறான். உன்னைப்போல ஒரு தீர்க்க தரிசியை நான் அவர்களுக் காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதை யெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். (உபகாமம் 18:18)

    கிறிஸ்தவர்கள் இந்த முன்னறிவிப்பு இயேசுவைப் பற்றி குறிப்பிடுவதாக சொல் கின்றனர் ஏனனில் இயேசு (ஈஸா (அலை) அவர்கள் மூஸா (அலை) போன்ற வராவார். மூஸா (அலை) போன்றே ஈஸா (அலை) அவரும் ஒரு யூதராகவே இருந்தார். மூஸா (அலை) ஒரு நபியாவார். அவ்வாறே நபி ஈஸா (அலை) அவர்களும் ஒரு நபியாவார். எனவே இது இயேசு வைபற்றி கூறப்பட்ட முன்னறிவிப்பாகும் என்கின்றனர்.

    மோசேயின் இவ் எதிர்வு கூறல் நிறைவேறுவதற்கு மேற்படி அடிப்படை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுவதாயிருந் தால் பைபிளில் அந்த அடிப்படையை நிறைவு செய்த மூஸா வுக்குப் பின் வந்த நபிமார்கள் அனைவருக்கும் அது பொருந்து வதாக இருக்கும். உதாரணமாக Solomon Isaiah Ezekiel Danial Hosea Joel Malachi John போன்றவர்கள். இவர்கள் எல்லோருமே யூதர்களாக இருக்கின்றனர். நபிமார்களாகவும் இருக்கின்றனர். எனினும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களே மூஸா (அலை) போன்றவர் ஆவார். அவருக்கே இந்த முன்னறிவிப்பு பொருந்துகிறது.

    அதனை பின்வருமாறு நோக்கலாம்

    (i) மூஸா (அலை) அவர்களுக்கும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும்; ஒரு தாயும் தந்தையும் இருந்தனர். அதே வேளை ஈஸா (அலை) அவர்கள் அற்புதமாக ஆண் சம்பந்தமின்றிப் பிறந்திருக்கின்றார்.

    இயேசு கிறிஸ்துவினுடைய ஐநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரி யாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டி ருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (மத்தேயு:1:18)

    தேவ தூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக:பரிசுத்த ஆவி உன்மேல் வரும், உன்னத மானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். (லூக்கா:1:35)

    (ii) மூஸா (அலை) அவர்களும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் திருமணம் முடித்தவர்களாகவும் குழந்தைகளை உடையவர்களாவும் இருந்தனர். பைபிளின் கூற்றுப்படி ஈஸா (அலை) அவர்கள் திருமணம் முடிக்கவுமில்லை. குழந்தை பெறவுமில்லை.

    (iii) மூஸா (அலை) அவர்களும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் இயற்கை மரணமே எய்தினர். எனினும், ஈஸா (அலை) உயிருடன் மேலே உயர்த்தப்பட்டார்.

    மேலும் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் மகன் ஈஸா மஸீஹை நாம் கொலை செய்தோம் என்று அவர்கள் கூறிய தினாலும் (சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரை கொலை செய்யவுமில்லை. அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. மாறாக அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப் பாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விடயத்தில் கருத்து வேறு பாடு கொண்டோர் அவர் பற்றி சந்தேகத்திலேயே இருக் கின்றனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவரைப் பற்றிய எவ்வித அறிவும் அவர்களுக்கு இல்லை. உண்மையாக அவர்கள் அவரை கொலை செய்யவில்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்பால் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்''. (அல்குர்ஆன் 4:157,158)

    முஹம்மத் (ஸல்) அவர்கள் மூஸாவின் சகோதர்களின் வழித்தோன்றலாக வந்த வராவார். அறபுகள் யூதர்களின் சகோதரர்களாவர். இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரு மக்கள், இஸ்மாயில், இஸ்ஹாக் (அலை) ஆகியோராவர். இதில் அறபுகள் இஸ்மாயில் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களாகவும் யூதர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் பரம்பரையில் வந்தோராகவுமிருக்கின்றனர்.

    வாயில் இட்ட வார்த்தைகள்| (என்ற பைபிள் வசனத் தின்படி) நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எழுத்தறிவில்லா தவறாக இருந்ததோடு அவர்களுக்கு அல்லாஹ் விடமிருந்து கிடைத்தவற்றையெல்லாம் அவர் வாயின் மூலம் திருப்பிச் சொல்பவராகவே இருந்தார்.

    (iஎ) மூஸா (அலை), முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் இறை தூதராக இருந்த அதே நேரம் அரசர்களாகவுமிருந்திருக்கின்றனர். அதாவது அவர்கள் மரண தண்டனை வழங்கக்கூடிய அதிகாரம் கொண்டோராக இருந்திருக் கின்றனர். (இயேசு அப்படிப்பட்டவராக இருக்கவில்லை) ஈஸா (அலை) கூறினார்: எனது ராஜதானி இவ்வுலகைச் சேர்ந்ததல்ல.| (யோவான்; 18:36)

    இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற் குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாத படிக்கு என் ஊழியக் காரர் போராடியிருப்பார்களே, இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற் குரியதல்ல என்றார். (யோவான்:18:36)

    (எ) மூஸா (அலை), நபி முஹம்மத் (ஸல்) ஆகிய இருவரும் அவர்களது வாழ் நாளிலேயே அவர்களது மக்களாலேயே இறைத் தூதுவர்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டோராக இருந்தனர். ஈஸா (அலை) அவர்கள் அவரது வாழ்நாளில் தனது மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார்.

    அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான்:1:11)

    (எi) மூஸா (அலை), நபிமுஹம்மத் (ஸல்) ஆகிய இரு வரும் புதிய சட்டங்களையும் விதிமுறைகளையும் தமது மக்களுக்காகக் கொண்டு வந்தனர். பைபிளின் கூற்றுப் படி ஈஸா (அலை) தனது மக்களுக்கு எந்தப் புதிய சட்டங்களையும் கொண்டு வர வில்லை.

    வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப் பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறை வேறுமளவும், அதில் ஒருசிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:17.18)

    2 நபி முஹம்மத் (ஸல்) எஸியா எனும் வேதநூலில் கீழ்வருமாறு எதிர்வு கூறப் படுகின்றது.

    அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான். (ஏசாயா:29:12)

    படிப்பறிவில்லாத அவருக்கு இந்த நூல் கொடுக்கப்பட்டு அவருக்கு சொல்லப்பட்டது. இதை ஓதுவீராக என நான் உம்மிடம் கேட்கிறேன் அவர் சொல்கிறார் நான் படிப்பறி வில்லாதவன்| வானவர் தலைவர் ஜிப்ரீல்(அலை) நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இக்ரஃ, ஓதுவீராக என கூறிய பொழுது, நான் படிப்பறிவில்லாதவன் என்று பதிலளித்தார்கள். (நூல்:; புஹாரி)

    3. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் அவர் பெயரா லேயே குறிப்பிடப்படுகிறார்.

    நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் சுலைமான் (அலை) அவர்களில் பாடல்: அத்.5, வச.16ல் அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஹிக்கோ மாமிட்டகிம் வி குல்லோ முஹம்மதிம் வகேதே வ.ஸஹ்ரீ பைன ஜரூசலேம்||

    '“Hikko Mamittakim we kullo Muhammadim Zehdoodeh wa Zehraee Bayna Jerusalem.”

    அவர் வாய் மிகவும் மணமானது -ஆம் அவர் முழுக்க அழகானவர். இவர் எனது அன்புக்குரியவர். அவர் எனது நண்பர். ஜரூஸலத்தின் பிள்ளைகளே!

    ஹிப்ரூ மொழியில் ~im| (இம்) பெயருடன் சேர்க்கப்படுவது கௌரவத்தைக் குறிக்கவாகும். அதேபோன்று ~im|) இம் என்பது முஹம்மத் என்ற பெயருடன் இணைக்கப்பட்டுள்ளது. முஹம்மதிம் -ஆங்கில மொழி பெயர்ப்பில் நபி முஹம்மது என்று மொழிபெயர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் ஹிப்ரூ மொழியிலுள்ள பழைய ஏற்பாட்டில் தூதர் நபி முஹம்மத்(ஸல்) என்றே இன்றும் காணப்படுகின்றது.

    4. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தை களுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.(உபாகமம் அத்.18:19)

    (பழைய ஏற்பாட்டின் இந்த முன்னறிவிப்புக்கள் அனைத் தும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களையே குறிப்பிடுகிறது.)

    புதிய ஏற்பாடு (NEW TESTEMENT)

    புதிய ஏற்பாட்டில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:

    அல்குர்ஆன் அத்.61, வச.6 இஸ்ராயிலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராகவும் எனக்குப் பின்வரும் அஹ்மத்| என்ற பெயருடைய ஒரு தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவராகவும் உங்களிடம் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன் என மர்யமின் மகன் ஈஸா கூறினார். (நபி முஹம்மதாகிய) அவர் தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் வந்தபோது இது தெளிவான சூனியமே என அவர்கள் கூறினர்.

    பழைய ஏற்பாட்டிலுள்ள நபி முஹம்மத் (ஸல்)அவர்கள் பற்றிய எல்லா முன்னறிவிப்புக்களும் யூதர்களுக்கு நன்கு பொருந்துவது போன்றே கிறிஸ்த வர்களுக்கும் பொருந்து கின்றன.

    1.இயேசு கூறுகிறார்: நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வே றொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். (யோவான்:14:16)

    2. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிறவரும், பிதாவி னிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும் போது, அவர் என் னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார். (யோவான்:15:26)

    3. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். (யோவான்:16:7.8)

    எனினும், நான் உமக்கு உண்மையை உரைக்கின்றேன். நான் போய்விடுவேன் என்பது உமக்குத் தெளிவு. நான் போகாவிட்டால், உம்மிடம் உமக்கு ஆறுதல் கூறுபவர் வரமாட்டார். ஆனால். நான் பிரிந்து சென்றுவிட்டால் நான் அவரை உம்மிடம் அனுப்புவேன்.

    என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லா வற்றையும் உங்களுக்கு நினைப்வூட்டுவார். (யோவான்:14:26)

    நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். (யோவான்:16:7)

    அஹ்மத்| அல்லது முஹம்மத்| புகழுபவர் புகழப்பட்டவர்| என்ற சொலலின்; அர்த்தமாகும். கிரேக்க மொழியில் பெரிக்லை டோஸ் (Periclylos) என்னும் சொல்லின் அர்த்தமும் ஒன்றே. எனினும், பெரிக்லைடேஸ் என்பதை ஆங்கில மொழி பெயர்ப்பில் (Comforter) ஆறுதல்படுத்துபவர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. (Periclylos) என்ற கிரேக்க சொல்லின் சரியான அர்த்தம், அன்பான நண்பர் அல்லது Advocate என்பதே. ஆறு தல்படுத்துபவர் Comforter அல்ல. Paraletos என்று உச்சரிப்பு தவறாக Periclylos என்பது எழுதப்பட்டள்ளது. ஈஸா (அலை) அவர்கள் உண்மையிலே யே அஹ்மத் வருவார் என எதிர்வு கூறியுள்ளார். கிரேக்க சொல்லான Paraclete என்ற சொல் உலகில் எல்லாப் படைப்புகளுக்கும் கருணை யாக அனுப்பப்பட்ட நபிமுஹம்மத் (ஸல்) அவர்களையே குறிக்கின்றது.

    சில கிறிஸ்தவர்கள் comfortor (ஆறுதல் படுத்துபவர் எனக் குறிப்பிடப்படுவது புனித ஆவி|யைக் குறிக்கின்றது எனக் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் கூறும் ஆறுதல் படுத்துபவர்| ஈஸா (அலை) பிரிந்து சென்ற பின்னரே வருவார் என பைபிள் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. பைபளில் ஈஸா (அலை) இவ்வுலகில் இருக்கும் காலத்திலும் அவருக்கு முன்னும், எலிஸ்பெத்தின் கருவரையிலும் புனித ஆவி இருந்ததாக பைபிள் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

    இயசு ஞானஸ்தானம் செய்யப்படும் போது புனித ஆவி இருந்ததாக பைபிள் குறுப் பிடுகின்றது. எனவே மேற்போந்த எதிர்வுகூறல் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகையை யே குறிப்பிடுகின்றது.

    குறிப்பு: இங்கே குறிப்பிடப்படும் பைபிள் மேற்கோள்கள் அனைத்தும் ஜேம்ஸ் மன்னரின் பைபிள் பிரதிக்கமைவானது.

    இந்து வேதங்களில் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு

    (பெங்களுரில் கடந்த 21.01.2006 அன்று இந்து மதம் மற்றும் இஸ்லாமிய புனித வேதங்களின் அடிப்படையில் கடவுள் கோட்பாடு'' எனும் தலைப்பில் Dr. ஜாகிர் நாயக் மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோருக்கிடையில் நடந்த பகிரங்க நிகழ்ச்சியின் இறுதியில் இந்து வேதங்களில் நபி முஹம்மத் (ஸல்) பற்றிய முன்னறிவிப்பு கூறப்பட்டுள்ளதா? கல்கி அவதாரம் என்பது யாரை குறித்து சொல்லப்படுகிறது? என பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு Dr. ஜாகிர் நாயக் அளித்த பதில் இது.:)

    ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜீ தன்னுடைய இந்துயிஸம் & கொமன் திரெட் எனும் நூல் பக்.26ல் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என்ற தலைப்பின் கீழ் இந்து மத வேதங்களில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பைச் சுட்டிக் காட்டு கிறார். பவிஷ்ய புராணம் பர்வம்-3 காண்டம்-3, அத்தியாயம்-3, சுலோகம் 5--6ல் வருவதாக குறிப்பிடுகிறார்.

    இது ஆதாரபூர்வமானதும் மிகச் சரியானதும் முற்றிலும் உண்மையானதுமாகும். இதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். ஆனாலும், அதிலுள்ள விடயங்கள் வார்த்தைக்கு வார்த்தை தரப்படவில்லை. இந்து வேதங்களில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்புகளில் ஒன்றே ஒன்றை மட்டும்தான் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜீ ஆதாரபூர்வமாகக் குறிப் பிட்டுள்ளார்.

    முஹம்மத் நபி(ஸல்) பற்றிய முன்னறிவிப்புக்கள் பல பின்வருமாறு காணப் படுகிறது:

    பவிஷ்ய புராணம் பர்வம்-3 காண்டம்-3, அத்தியாயம்-3, சுலோகம் 5-8 படி

    வெளிப் பிரதேசத்தைச் சார்ந்த சமஸ்கிருத அல்லாத பிற மொழி பேசக் கூடிய ஒருவர் வருவார் என்றும், அவர் தன் தோழர்களுடன் கூடவே இருப்பார் என்றும், அவர் பெயர் முஹம்மத் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ராஜா போஜ்; அவரை ஏற்று வரவேற்றுள்ளார். ஏ மனித னிடத்திலுள்ள சிறப்பே! ஓ அறபு வாசியே! தீமையை அழித் தொழிப்பதற்காக ஒரு வலுவான கூட்டத்தையே அவர் உரு வாக்குவார். அவர் பாலைவனத்தைச் சார்ந்தவராக இருப்பார்.

    பவிஷ்ய புராணம், பர்வம்-3, காண்டம்-3, அத்தியாயம்-3, சுலோகம் 10-27படி

    எல்லாம் வல்ல கடவுள், அவனுக்கு ஒருவிரோதி இருந்ததாகவும் அவன் ஏற்கனவே கொல்லப்பட்டுப் போய் அவனை விட வலிமையான எதிரி அப்போது வந்திருக் கின்றான்.

    முஹம்மத் எனும் பெயருடைய மனிதரை நான் அனுப்புவேன். அவரே இவர்களை நேர்வழிப்படுத்துவார்.

    என் அரசனே! நீ பிசாசுகளின் பிரதேசத்திற்கு போகத் தேவையில்லை. என்னுடைய அன்பினாலே உன்னை தூய்மைப்படுத்துவேன். வானவர்களைப் போன்ற தன்மை யுள்ள ஒரு மனிதர் வந்து சொல்லுவார்.

    எல்லாம் வல்ல இறைவன் என்னை ஆரிய தர்மம் என்றும் சத்திய மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக என்னை அனுப்பிவைத்தான். நான் இறைச்சி உண்ணக்கூடிய ஒரு கூட்டத்தினரை உருவாக்குவேன். என்னை பின்பற்று பவர்கள் சுன்னத் (விருத்த சேதனம்) செய்த வர்களாக இருப்பார்கள்.||

    (நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடைய வழித்தோன்றல்கள் சுன்னத் செய்யப் பட்டவர்களே என்பதை நாம் அறிந்ததே).

    அவர் தலையில் குடுமி இருக்காது. அவர்கள் தாடி வைத்திருப்பார்கள். அவர்கள் ஒரு புரட்சியை உண்டு பண்ணுவார்கள். அவர்கள் தொழுகைக்காக அழைப்பு விடுப்பார்கள். -அதனை அரபியில் அதான''என்று நாம் அழைக்கிறோம்.-அவர்கள் அனுமதிக்கப்பட்ட மிருகங்களின் இறைச்சியை புசிப்பார்கள். ஆனால், பன்றியின் இறைச்சியை அவர்கள் தொடக்கூடமாட்டார்கள். -திருக்குர்ஆனில் நான்கு வெவ்வேறு இடங்களில் பன்றியை முற்றாக வெறுக்குமாறு ஏவப்பட்டுள்ளது. அவை:

    ஸூரா பகரா அத்தியாயம் 2 வசனம.173

    ஸூரா அல்மாயிதா அத்தியாயம் 5. வசனம் 3.

    ஸூரா அல்அன்ஆம் அத்தியாயம் 6. வசனம்145.

    ஸூரா அன்னஹ்ல் அத்தியாயம்16. வசனம்115 ஆகிய வசனங்களாகும்.

    மேலும் அவர்கள் செடி கொடிகள் மூலம் சுத்தம் செய்யப்பட மாட்டார்கள். மாறாக சத்தியத்திற்காக போர் செய்து அதன் மூலம் சுத்தமடைவார்கள். இவர்களே முஸ்லிம் கள் என்று அழைக்கப்படுவார்கள்.

    பவிஷ்ய புராணம், பருவம்-3, காண்டம்-3, அத்தியாயம்-3, சுலோகம் 21-23லும்

    அதர்வண வேதம்; புத்தகம் 20, வேதவரி 127, மந்திரம் 1-14லும்; நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    குன்தப்; சுத்தா''(kuntap sukta)) மறைவான சுரப்பி'' என்றும் (அதன் அர்த்தம் பின்னால் தெரியவரும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.

    முதலாவது வசனம் நபி முஹம்மத் (ஸல்0 அவர்களைப் பற்றி ‘‘நரஷன்ஷா’’ என குறிப்பிடுகிறது. அதன் பொருள் புகழுக்குரியவர் என்பதே.

    மேலும் ‘‘கவுரமா'' என அழைக்கப்படுகிறர். அதன் பொருள்; அமைதியை நிலை நாட்டும் அரசர் என்றும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ப்பவர் என்றும் 60,090 எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுபவார் என்றும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றியே குறிப்பிடுகிறது.

    மேலும் அதர்வண வேதம் புத்தகம் 20, வேதவரி 21, மந்திரம் 6; நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்; வாழ்வில் சந்தித்த கந்தக் போர் பற்றி கூறப்படுகிறது.

    அதர்வண வேதம் புத்தகம் 20, வேதவரி 21,மந்திரம் 7ல்

    20 குழுக்களை அவர் முறியடிப்பார் என்றும் காணப் படுகிறது.

    நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் காலத்தில் மக்காவில் ஏறத்தாழ 20 குழுக்களே இருந்தன.

    ரிக் வேதம் புத்தகம் 01, வேதவரி 53, மந்திரம் 09 மற்றும்

    சாம வேதம் அக்னி மந்திரம் 64ல்

    அவர் தன்னுடைய தாயிடம் தாய்பால் அருந்த மாட்டார் எனப்படுகிறது.

    நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் தனனை பெற்ற தாயிடம் தாய்ப்பால் அருந்திய தில்லை என்பதை யாவரும் அறிந்ததே.

    மேலும் அஹ்மத் எனும் பெயரிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளார். அதன் அர்த்தமும் புகழுக்குரியவர் என்பதே. அஹ்மத் என்பது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மற்றொரு பெயராகும்.

    இதுபோன்ற முன்னறிவிப்புகளை ஏராளமாக காணலாம். அந்நூல்களின் பட்டியல் இதோ:

    சாம வேதம் உத்தர்சிக் மந்திரம் 1500

    சாமவேதம் இந்த்ரா அத்தியாயம்-2, மந்திரம் 152

    யஜீர் வேதம், அத்தியாயம்-31, வசனம்-18

    அதர்வண வேதம், புத்தகம்-8, வேதவரி-5, மந்திரம்-16

    அதர்வண வேதம், புத்தகம்-20, வேதவரி-126, மந்திரம்-14

    ரிக்வேதம், புத்தகம்-8, வேதவரி-6, மந்திரம்-10

    ‘‘நரஷன்ஷா'' (புகழுக்குரியவர்) என்றும் வேதங்களில் பல இடங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. நரஷன்ஷா என்பது சமஸ்கிருத சொல்லாகும். ‘‘நர்'' என்றார் மனிதன் ‘‘ஷன்ஷா'' என்றால் புகழுக்குரிய மனிதன். அரபுமொழியில் முஹம்மத் என்ற சொல் லுக்குமுரிய பொருளும் அதுவே. இந்த நரஷன்ஷா என்பது பற்றி வேதங்களில் பல இடங்களில் முன்னறி விப்பு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலாவது:

    ரிக்வேதம் புத்தகம்-01, வேதவரி-13, மந்திரம்-03

    ரிக்வேதம் புத்தகம்-01, வேதவரி-18, மந்திரம்-09

    ரிக்வேதம் புத்தகம்-01, வேதவரி-106, மந்திரம்-04

    ரிக்வேதம் புத்தகம்-01, வேதவரி-142, மந்திரம்-03

    ரிக்வேதம் புத்தகம்-02, வேதவரி-03, மந்திரம்-02

    ரிக்வேதம் புத்தகம்-05, வேதவரி-05, மந்திரம்-02

    ரிக்வேதம் புத்தகம்-07, வேதவரி-02, மந்திரம்-02

    யஜுர் வேதம், அத்தியாயம்-20, வசனம்-37

    யஜுர் வேதம், அத்தியாயம்-21, வசனம்-57

    யஜுர் வேதம், அத்தியாயம்-21, வசனம்-31

    யஜுர் வேதம், அத்தியாயம்-21, வசனம்-55

    யஜுர் வேதம், அத்தியாயம்-28, வசனம்-02

    யஜுர் வேதம், அத்தியாயம்-28, வசனம்-19

    யஜுர் வேதம், அத்தியாயம்-28, வசனம்-42

    (அரங்கில் பலத்த கைத்தட்டல் இடம்பெறுகிறது. கேள்விக்கு பதிலளிப்பதற்கான நேரமும் முடிவடைகிறது இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் என Dr.. ஜாகிர் நாயக் தன்னுடைய பதிலை நிறைவு செய்தார்.)

    ‘‘இது மிகச் சிறப்பு. ஆகவே நீங்கள் அனைவரும் இந்து வேதங்களை மதியுங்கள். அது காபிர் அல்லது நிராகரிப்போர் சமாச்சாரம் என்று புறக்கணித்து விடாதீர்கள்;. இந்த விஷயங்களையெல்லாம் நம் கவனத்திற்கு கொண்டு வந்த Dr.. ஜாகிர் நாய்க் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கூறக் கடமைப்புட்டுள்ளேன் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜீ குறிப்பிட்டார்.

    கல்கி அவதாரம்

    சமஸ்கிருதத்தில் அவதாரம் என்பது இரு சொற்களின் இணைப்பாகும். அதாவது அவ்-தாரம்: என்பது இறங்கி வருவது என்று அர்த்தம்.

    பொதுவாக ஹிந்துக்களின் நம்பிக்கை என்னவென்றால் கடவுள் மனித உருவெடுத்து பூமிக்கு வந்தார் என்பதேயாகும். சில அறிஞர்கள் அவதாரம் என்பது கடவுள் தன்னையே குறித்துச் சொன்னது என்கிறார்கள்.

    வேறு சிலர் அவதாரம் என்பது கடவுள் தன்னையே குறித்துச் சொன்னது அல்ல என்கிறார்கள். அது என்ன வென்றால் இறைவன் ஒரு முனிவரையோ ஒரு ரிஷியையோ அனுப்பியுள்ளான் என்பதாகும் என்கிறார்கள்..

    இந்தக் கோட்பாடு குர்ஆனுடன் ஒத்துப் போகிறது.

    மனிதர்களிலிருந்து ஒருவரை அல்லாஹ் தேர்ந்தெடுத்து அனுப்பி அந்த மனிதருடன் உறவாடுவதாகக் குர்ஆன் சொல்கிறது. அவரைத்தான் இறைத் தூதர் என்கிறோம்.

    இதுகுறித்து அல்குர்ஆன் ஸூரா பாதிர் அத்தியாயம்:35, வசனம்: 24ல் எந்வொரு சமுதாயத்தில் அதில் எச்சரிக்கை செய்பவர் வராமல் இருந்ததில்லை''.

    அல்குர்ஆன் ஸூரா அர்ரஃத் 13: வசனம் 7ல் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தூதரை அனுப்பியுள்ளோம்'' என அல்லாஹ் கூறுகிறான்.

    ஆகவே, இந்து வேதங்களை நீங்கள் படிக்கின்றபோது ஏராளமான ஞானிகளை இறைவன் அனுப்பியுள்ளதாகச் சொல்கிறான். அதில ஒருவர்தான் கல்கி அவதாரம்.

    பகவத் புராணம் காண்டம் 12, அத்தியாயம் 02, ஸ்லோகம் 18-20.படி

    ஷம்பாலா நகரின் தலைவர் விஷ்னுயாஷ் என்பவர் வீட்டில் அவர் பிறப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அவருடை பெயர் கல்கி என்பதாகும். அவருக்கு எட்டு (08) தெய்வீக அம்சங்கள் இருக்கும் என்கிறது. அவர் குதிரையின் மீது வலது கையில் வாலை ஏந்தியவராக வருவார் என்றும் கொடியவர்களை அழிப்பார் என்றும் காணப்படுகிறது.

    மேலும் பகவத் புராணம் காண்டம் 01, அத்தியாயம் 03, ஸ்லோகம் 25 படி

    கலியுகத்தில் மன்னர்களெல்லாம் கொள்ளையர்களாக மாறுகின்ற தருணத்தில் விஷ்னுயாஷின் வீட்டில் கல்கி| பிறப்பார் என்று சொல்கிறது.

    கல்கி புராணம் அத்தியாயம் 02, வசனம் 04ல்

    அவரின் தந்தையின் பெயர் விஷ்னுயாஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கல்கி புராணம், அத்தியாயம் 02, வசனம் 05ல்

    கல்கிக்கு நான்கு தோழர்கள் உதவியாக இருப்பார்கள் என குறிப்படுகிறது.

    கல்கி புராணம், அத்தியாயம் 02, வசனம் 07ல்

    அவருக்கு யுத்த களத்தில் வானவர்கள் உதவி செய்வர்

    கல்கி புராணம், அத்தியாயம் 02, வசனம் 11ல்

    அவர் விஷ்னுயாஷின் வீட்டில் சுமதியின் வயிற்றிலிருந்து பிறப்பார்.

    கல்கி புராணம், அத்தியாயம் 02, வசனம் 15ல்

    அவர் மாதோ மாதத்தில் 12ம் நாள் பிறப்பார்.

    கல்கி அவதாரம் பற்றி இவ்வாறு விளக்கப்படுத்திக் கொண்டே போகலாம்.

    ‘‘விஷ்னுயாஷ்’’ என்பதன் பொருள் இறைவனின் அடியார் என்பதாகும். நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ். அதன் அர்த்த மும் இறைவனின் அடியார் என்பதாகும்.

    அவரது தாயார் பெயர் ‘‘சுமதி.'' அதன் அர்த்தம் சாந்தி மற்றும் அமைதி என்பதாகும். நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் தயார் பெயர் ஆமினா. அதன் அர்த்தமும் சாந்தி மற்றும் அமைதி என்பதாகும்.

    அவர் ஷம்பாலா எனும் இடத்தில் பிறப்பார்.'' அதன் அர்த்தம் அமைதியான இடம் என்பதாகும். மக்காவை தாருல் அமான்''சாந்தமும் அமைதியுமுடைய இடம் என அழைக்கிறார்கள்.

    அவர் ஒரு கிராமத்தின் தலைவர் வீட்டில் பிறப்பார்' என சொல்லப்படுகிறது. முஹம்மத நபி அவர்கள் மக்கா நகரின் தலைவர் வீட்டில் பிறந்தார்.

    மாதோ மாதத்தின் 12ம் நாள் பிறப்பார் எனப்படுகிறது. முஹம்மத் நபி ரபீயுல் அவ்வல் மாதத்தின் 12ம் நாள் பிறந்தார்.

    அவர் ‘‘கடைசி ரிஷி'' என சொல்லப்படுகிறது. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறுதி ரிஷியாவார்.

    அல்குர்ஆனில் சூரா அல்அஹ்ஸாப் 33, வசனம்:40ல் இது கூறப்பட்டுள்ளது.

    முஹம்மத், உங்களது ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக் கிறார்.’’

    அவருக்கு தெய்வீக ஞானம் கிடைக்கும். இந்த மனிதர் குகையில் இருப்பார். பின் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்து பின் பழையஇடத்திற்கே திரும்புவார் எனப் படுகிறது''.

    நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதல் தெய்வ அறிவிப்பு ஹிரா குகையில் கிடைத்தது. பிறகு அவர் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம்பெயர்ந்தார். அது வடக்கு திசையில் உள்ளது. அவர் மக்காவுக்கே திரும்பி வந்தார். அவருக்கு இயற் கையாக மிகச் சிறந்த எட்டு பண்புகள் இருக்கும்.

    அறிவு கூர்மை

    சுய கட்டுப்பாடு

    தெய்வீக ஞானம்

    மதிப்பு சார்ந்த உயர்ந்த பரம்பரை

    மன தைரியம்

    உடல் வலிமை

    மிகுந்த ஈகை குணம்

    நன்றியுணர்வு

    இந்த எட்டும் நபிமுஹம்மத் (ஸல்) அவர்களிடம் இருந்தது.

    அவர் மனித குலத்தை வழிநடாத்துவார். அது குர்ஆன் ஸூரா ஸபா அத்தியாயம் 34 வசனம்28ல் கூறப்பட்டுள்ளது. (நபியே!)மனிதர்கள் அனைவருக்கும் நன்மாராயம் கூறுப வராகவும் எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி நாம் உம்மை அனுப்ப வில்லை. எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்''. (34:28)

    அவருக்கு வெள்ளை குதிரை கொடுக்கப்பட்டுள்ளது''.

    நபிமுஹம்மத் (ஸல்) அவர்களுக்கு புராக் எனும் வெள்ளை குதிரை கொடுக் கப்பட்டது. நபி முஹம்மத் (ஸல்)அவர்கள் போர்களில் ஈடுபட்டுள்ளார். அதிகமான தோழர்களை பாதுகாத்தனர். வலது கையில் வாளை ஏந்தியிருந்தார்.

    இவருக்கு உதவி புரிய நான்கு தோழர்கள் இருந்தார்கள். அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) உஸ்மான் (ரழி) அலி (ரழி). இவர்களை குலபாஉர் ராஷிதீன் என கூறப்படும்.

    வானவரால் உதவி செய்யப்படுவர்'' பத்ரு போரில் நபி முஹம்மத் (ஸல்) அவர் களுக்கு வானவர்கள் உதவி புரிந்தார்கள்.

    ஸூரா ஆலஇம்ரான் அத்தியாயம்: 3: வசனம்: 123ல்

    நீங்கள் பலம் குன்றியிருந்த நிலையிலும் பத்(ருப் போ)ரில் அல்லாஹ் உங்களுக்கு நிச்சயமாக உதவிசெய்தான். ஆகவே நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். மூவாயிரம் வானவர்களை உங்கள் இரட் சகன் இறக்கி உங்களுக்கு உதவி புரிந்தது உங்க ளுக்குப் போதாதா என்று நம்பிக்கை கொண்டோரிடம் (நபியே) நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக.''

    ஸூரா அல் அன்பால் அத்தியாம் 8: வசனம்: 9ல்

    உங்கள் இரட்சகனிடம் நீங்கள் உதவி தேடியபோது நிச்சயமாக நான் தொடர்ச்சியாக ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு உதவுவேன் என்று அவன் உங்களுக்கு பதலளித்தான்’’.

    தீர்க்க தரிசனம்மிக்க இந்த முன்னறிவிப்புக்கள் அனைத் தும் நபி முஹம்மத்(ஸல்) அவர்களைத்தான் குறிக்கின்றது.

    பார்சி மத நூல்களில் முஹம்மது நபி(ஸல்) பற்றிய பற்றிய முன்னறிவுப்பு

    Zend Avesta Farvardin Yasht (செனட் அவஸ்தா பர்வாடின்|) என்ற நூலில் பாகம் 28 வசனம் 129 குறிப்பிடு கிறது. (கிழக்கின் புனித நூல்கள் பாகம் 23 – செனட் சவஸ்தா பிரிவு 11 பக்கம் 220)

    அவருடைய பெயர் வெற்றி பெற்றவர்' (Soeshyant; சோஸ்யாந்த்' என்றிருக்கும். இன்னும் அவருடைய பெயர் Astvat-eret) அஸ்த்வாத் எராட்டா' ஆகவும் இருக்கும். அவர் (Soeshyant) சோஸ்யாந்த்' (கருணையுள்ளவர்) ஆகவுமிருப் பார். ஏனெனில் அவர் மூலம் முழு உலகமும் பயன்பெரும். அவர் (Astvat-eret) அஸ்த்வாத் எராட்டா' (உயிருள்ள பொருள்களை உயர்வு பெறச்செய்பவர்.) அவரே ஒரு உடலுள்ள உயிருள்ள ஒருவராக இருப்பதால் அவர் உடல் கொண்ட உயிரினங்களை அழிவில் நின்றும் காப்பார். அத்தோடு இருகால் படைப் பினங்களின் போதையைவிட்டும் நம்பிக்கையாளரின்;. (சிலை வணங்கிகள் மற்றும் அதுபோன்ற வர்கள் மற்றும் மஸ்டாயினிகளின் பிழைகள்) தீங்குகளை விட்டும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உதவுவார்.

    இந்த முன்னறிவிப்பு நபிமுஹம்மது (ஸல்) அவர்களுக்கு மாத்திரமே முழுக்க முழுக்கப் பொருந்தும்.

    நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது வெற்றி பெற்றார்கள். அத்தோடு ரத்ததாகம் கொண்டி ருந்த அவரது எதிரிகளை பெருமனதோடு மன்னித்து விட்டார். இன்று உம்மீது எந்தப் பழியும் இல்லை|.

    சோஸ்யாந்த்' என்ற சொல்லுக்கு பொருளாவது புகழுக்குறியவர்' (Haisting’s Encycolopidia ஹெயஸ்;டிங்ன் கலைக் களஞ்சியம் பார்க்க) அதை அரபுக்கு மொழியாக் கினால் முஹம்மது' என்று வரும். அதாவது முஹம்மது(ஸல்) அவர்களைக் குறித்து நிற்கிறது.அஸ்த்வாத் எராட்டா' என்ற பாரசீக சொல் ‘அஸ்து' என்ற சொல்லிலிருந்து திரிவு பெற்று வந்துள்ளது. அதன் பொருள் புகழப்படுதல்' என்பதாகும். மேலும் இச்சொல் பாரசீக சொல்லான இஸ்தாதன்' என்ற திலிருந்து திரிவு பெற்று வந்திருக்கும். ஒன்றை உயர் வடையச் செய்பவர்' என்பது இதன் பொருள். ஆக அஸ்த்வாத் எராட்டா' என்பதற்கு புகழப்பட்டவர்' என்ற பொருள் கொள்ளலாம். அதன் சரியான அரபு மொழியாக்கம் நபிகள் நாயகத்தின் இன்னொரு பெயரான அஹ்மத்' என்று வரும். இந்த எதிர்வு கூறல்கள் தெளிவாக நபி முஹம்மது (ஸல்) அவர்களது அஹமத், முஹம்மத் என்ற இரு பெயர் களையும் குறித்து நிற்கின்றது. அத்தோடு அவர் முழு உலகத்துக்கும் பயனுள்ளவராக இருப்பார் என்றும் கூறுகிறது. புனித குர்ஆனில் ஸூரா அல்அன்பியா ஸூரா 21 வசனம் 107 இதற்குச் சான்று பகர்கின்றது.

    (நபியே!) அகிலத்தாருக்கு அருட் கொடையாகவேயன்றி உம்மை நாம் அனுப்ப வில்லை|| (அல்குல்ஆன் 21: 107)

    தூதரின் தோழர்களின் புனிதத்துவம் பற்றி :-

    Zend Avesta Farvardin Yasht செண்ட் அவஸ்தா' ஷசம்யாட் யாஸ்ட்' பாகம் 16 வசனம் 95 (கிழக்கின் புனித நூல் பாகம் 23 செண்ட் அவஸ்தா பாகம் 2 பக்கம் 308ல்)

    அவரது அஸ்த்வாத் எராட்டாவின் நண்பர்கள் முன்னே வருவர். அவர்கள் எதிரி களை தாக்குபவராகவும், நல்ல சிந்தனையுள்ளவர்களாகவும், நல்முறையில் பேசுப வர்களாகவும், நல்செயல் செய்பவர்களாகவும், நல்லசட்டதிட்டங்களை பின்பற்று வோராகவும் இருப்பதோடு அவர்கள் நாவுகள் ஒரு பொய்யையேனும் சொல்லி யிருக்காததாகவுமிருக்கும். இங்கே கூட முஹம்மத்(ஸல்) அவர்கள் அஸ்த்வாத் இரேடா' என்ற பெயரில் அழைக்கப்படுகி;ன்றார்.

    இதே போன்று தீமையுடன் (சைத்தானுடன்) போரிடும் அவரது தோழர்களைப் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றது. அவர்கள் நல்லடியார்களாகவும், நல்ல ஒழுக்க சீலர்களாகவும் எப்பொழுதும் உண்மை பேசுபவர்களாகவுமிருப்பவர் எனக் குறிப்பிடுகிறது. இது தெளிவாக ஸஹாபாக்களையே குறித்து நிற்கின்றது.

    '(Dasatir தஸாதீரில்' நபி முஹம்மத்(ஸல்) பற்றிக் குறிப்பிடப்படுவதாவது:

    தீர்க்க தரிசனம் பற்றி (Dasatir) தஸாதீரில் சுருக்கமாகவும் மூல உள்ளடக்கமாகவும் கூறப்படுவதாவது, (Zoroastrain) சொரோஸ்திய மக்கள் தாங்கள் பின்பற்றி வந்த மார்க்கத்தை கைவிட்டு அலைக்கழியும் காலத்தில் அரேபியாவில் ஒரு மனிதர் தோன்றுவார். அவரைப் பின்பற்றுவோர் பாரசீகத்தை வெற்றி கொள்வர். அவர்கள் தமது கோவில்களில் நெருப்பை வணங்குவதை விட்டுவிட்டு அவர்கள் இப்றாஹீமின்(அலை) கஃபாவின் பக்கம் வணக்கத்துக்காக தங்கள் முகங்களைத் திருப்புவார்கள். அப்பொழுது அந்தக் கஃபாவில் எந்தவித சிலைகளுமிருக்காது. அவர்கள் (அராபிய தூதரின் சீடர்கள்) உலகிற்கு கருணை யாளர்களாகவிருப்பர். அவர்கள் பாரசீகம்;மதாயின், ருஸ், பால்க், சொரோஸியர்களின் புனித தளங்கள் மற்றும் அதை அண்டிய பகுதிகள் அனைத்தையும் தமது ஆளுகைக்குள் கொண்டு வருவர். அவர்களது தீர்க்கத்தரிசி அற்புதமான செய்திகளைச் சொல்லும் சிறந்த பேச்சாற்ற லுள்ளவராக இருப்பார்.

    இந்த தீர்க்க தரிசனம் நபி முஹம்மத் (ஸல்) அவர்களையே குறிக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

    நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கடைசி நபியாக இருப்பார்.

    (Bundahish) பண்டாஹிஸ் பாகம் 3, வசனம் 27ல் குறிப் பிடப்படுகிறது. Soeshyant ) சோஸயாந்த்' என்பவர் கடைசித் தீர்க்கத்ரிசியாக இருப்பார் என்று குறிப்பிடுவது நபி முஹம்மது (ஸல்) அவர்களைத்தான் -புனித குர்ஆனில் சூரது அஹ்ஸாப் இக்கூற்றை உறுதி செய்கிறது.

    முஹம்மது உங்கள் எவரதும் தந்தையாக இல்லை. ஆனால் அவர்தான் அல்லாஹ் வின் தூதர். தூதர்களின் முத்திரை. அல்லாஹ் சகலவற்றையும் நன்கறிந்தவன்|| (அல்குர்ஆன் 33:40)

    புத்தமதமும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் பற்றிய முன்னறி விப்பும்

    கௌத்தம புத்தர்தான் புத்த மதத்தின் ஸ்தாபகராவார். அவரது மூலப் பெயர் சித்தார்த்தன் (நிறைவு செய்தவர் எனப் பொருள்). அத்தோடு அவர் சாக்கிய முனி எனவும் அழைக்கப்பட்டார். (சாக்கிய கோத்திர முனிவர்). அவர் கி.மு.563ல் தற்போதைய நேபாள எல்லைக்குள் அமைந்துள்ள கபில வஸ்து என்ற நகரத்தை அண்மித்த பினி எனும் இடத்தில் பிறந்தார்.

    ஜனப்பிரவாத கதைகளுக்கமைய ஒரு சாஸ்திரன் அரசனான அவரது தந்தையிடம் வந்து ஒரு முன்னறிவிப்புச் செய்துள்ளார். சித்தார்த்தன் நான்கு விடயங்களை அவதானித்த மாத்திரத்தில் மறுகணமே தனது சிம்மாசனத்தைத் தூக்கியெறிந்து விட்டுச் சென்றுவிடுவான் என்பதே அவ்வறிவிப்பு. அதாவது,

    முதுமையானவன்,

    நோய்வாய்ப்பட்டவன்,

    இறந்து கொண்டிருப்பவன்,

    இறந்த உடல்.

    ஆகியவையே அந்நாங்கு விடயங்களாகும். எனவே அரசன்இ சித்தார்த்தனை சகல உலக சுகங்களும் நிறைந்த ஒரு இடத்தில் அடைத்து வைத்து இந்நான்கில்; எதையும் காண முடியாதவாறு காத்து வந்தான்.

    சித்தார்த்தன் தனது 16 வயதில் யசோதரா என்பவளை மணந்தார். 29ம் வயதில் சித்தார்த்தனுக்கு தனது முதல் மகள் கிடைத்த நாளன்று இந்த நான்கு விடயங்களையும் காண நேர்ந்தது.

    வாழ்வின் துன்பநிலைமைகளை அவதானித்த அவர் அன்றிரவே அதன் தாக் கத்திற்குட்பட்டு முடியைத் துறந்து இவ்வுலக சுகபோகங்கள் அனைத்தையும் உதரி விட்டதோடு தனது மனைவி, பிள்ளை ஆகியோரையும் விட்டு விட்டு ஒரு சதமுமற்ற ஏழை நாடோடியாக மாறினார்.

    அவர் ஆரம்பமாக ஹிந்து கொள்கைகளையும் பின்னர் ஜைன மதத்தையும் ஆய்ந்து பின்பற்றி வந்தார். பல வருடங்க ளாக தீவிர தன் மறுப்பு நிலையில் சகல லௌகீக சுகபோகங் களையும் கைவிட்டு உடலை வருத்தி கடுமையாக நோன் பிருந்தார். ஆனால் கடைசியில் சுகபோகங்களை விடுத்து தனது உடலை வருத்துவதன் மூலம் தான் தேடிய உண்மை யான ஞானத்தை பெற முடியாதென்பதை உணர்ந்து மீண்டும் வழமை போல உண்ணவும் பருகவும் ஆரம்பித்த தோடு துறவரத்தையும் கைவிட்டார். தனது 35ம் வயதில் ஒரு நாள் மாலை தான் தியானத்தில் ஈடுபட்டிருந்தவேளை, தான் தேடிய தீர்வான உண்மையான ஞானம் தனக்குக் கிடைத்துவிட்டதாக உணர்ந்தார். அன்றிலிருந்து அவர் கௌதமன் -புத்தர் ஞானம் பெற்றவர்- என்று அழைக் கப்பட்டார்.

    பின்னர் 45 வருடங்களாக தான் கண்டறிந்ததாக எண்ணிய ஞானத்தை அவர் மக்களுக்கு போதனை செய்தார். அவர் நகரத்துக்கு நகரம், கிராமத்துக்கு கிராமம் வெற்றுக் காலுடன் கால் நடையாகவும் தலையை மலித்து சவரம் செய்து கொண்டவராகவும் தனது மஞ்சள் அங்கி தவிர்ந்த வேறு எந்த ஆடையும் அணியாதவாறு தனது கைத்தடி மற்றும் பிச்சைப் பாத்திரத்துடன் அலைந்து திரிந்தார். அவர் கி.பி. 483ல் தனது 80ஆவது வயதில் காலஞ் சென்றார்.

    பௌத்த மத நூல்கள்

    வரலாற்று விமர்சனங்களின் படி பௌத்தரின் போதனை களின் மூல நூல் காணக் கிடைக்க முடியாது. ஏனெனில் ஆரம்பத்தில் பௌத்தரின் போதனைகள் அவரது சீடர்களால் மனனமிடப்பட்டிருந்தது. அவர் இறந்த பிறகு அவரது போதனைகள் ஓதப்பட்டு ஒரு பொது ஒப்புதலை பெறுவ தற்கான ''ராஜகஹ'' எனுமிடத்தில் ஒரு சபை கூட்டப்பட்டது. அப்பொழுது அவரது போதனைகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளும் முரண்பட்ட ஞாபக மீட்டல்களும் முன்வைக்கப்பட்டன. கடை சியில் காய்சப்ப மற்றும் ஆனந்த'' என்று இரு பிரதான பௌத்தரின் சீடர்களின் முன்வைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    அதன் பின்னர் 100 வருடங்கள் கழித்து இன்னும் இவ்வாறானதொரு சபை வேசாலியில்'' கூட்டி அவரது போதனைகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டன. எனி னும் புத்தரின் மரணத்தின் 400 வருடங்களின் பின்னரே அவரது போதனைகளும் அவரது கொள்கைகளும் எழுத் துருப் பெற்றன. எனினும், எழுதும்போது அவற்றின் உண் மைத் தன்மை நம்பகத் தன்மை தொடர்பாக எந்த ஆய்வும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. அவை கருத்தில் கொள்ளப்படவுமில்லை.

    பௌத்த மத நூல்கள் பாலி, சமஸ்கிருத நூல்களை என இரு பிரிவாக வகுக்கலாம்.

    I. பாலி நூல்கள்:

    பாலி மதநூல்களில் பௌத்த மத பிரிவுகளில் ஒன்றான ஹீனயான மதப் பிரிவுக்குட்பட்ட கருத்துக்களும் கோட் பாடுகளுமே நிரம்பியுள்ளன.

    திரிபிடக்க

    பாலிமொழியில் காணப்படும் மிகப் பிரதான பௌத்த நூல் திரிபிடக்கவாகும். அதுவே தற்பொழுது காணக் கிடைக் கும் மிகவும் ஆரம்பகால பௌத்த நூலாகக் கொள்ளப்படு கிறது. அது கி.மு. முதலாம் நூற்றாண்டில் எழுதி வைக்கப் பட்டது.

    திரிபிடக்க அல்லது மூன்று நீதிச் சட்டக் கூடைகள் மூன்று நூல்களைக் கொண்டது.

    1. வினய பிடக :(நடத்தை ஒழுக்கங்கள் தொடர்பானது) இந்த நூலில் பிரதானமாக ஒழுக்கக் கோவைகளும் பௌத்த ஒழுங்குகள் தொடர்பான விடயங்களும் காணப்படுகின்றன.

    2. சுத்த பிடக:suttapitaka (புத்தரின் போதனைகளும் சீடர்களுடனான அவரது சம்பாசனைகளும் அடங்கியது)

    இதில் புத்தர் மேற்கொண்ட மத பிரசங்கங்களும் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களும் அவர் சீடர்களுடன் மேற்கொண்ட மத சம்பாசனைகளும் அடங் கியுள்ளன. இதுவே மூன்று பிடகங்களிலும் மிகவும் பிரதானமான பிடக மாகக் கொள்ளப்படுகிறது. இதில் ஐந்து பௌத்த பிரிவுகள் (நிகாயாக்கள்) உள்ளடக் கியுள்ளன.

    தம்மபத| என்பது இன்னொரு பிரதான பௌத்த பாலி மத நூலாகும். அதில் சிறுசிறு நீதிப் போதனைகளும் புத்தரின் வாசகங்களும் உள்ளடங்கியுள்ளன.

    3. அபிதம்ம பிடக: (கொள்கைப் பகுப்பாய்வு விளக்கங்களை உள்ளடக்கியது.)

    இந்த மூன்றாவது பிடகத்தில் பௌத்த மெய்ஞ்ஞானக் கோட்பாடுகள் அடங்கி யுள்ளன. இது மற்றைய இரு பிடகங்களில் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பான பகுப் பாய்வு விளக்கங்களாகக் காணப்படுகின்றன. இதுவே பௌத்த கோட்பாடுகளை விளக்கக் கூடியதாகவும் இருக் கின்றன.

    II. மஸ்கிருத பௌத்த மத நூல்கள்

    சமஸ்கிருத பௌத்தமத நூல்கள் மகாயான பௌத்த பிரிவினரால் விரும்பப்படும் நூல்களாகும். எனினும் சமஸ்கிருத பௌத்த நூல்கள் பாலி நூல்கள் போன்று ஒரு தொகுப்பாக அல்லது சட்டக் கோவையாகத் தொகுக்கப்படவில்லை. ஆகவேதான் பல சமஸ்கிருத நீதி நூல்கல் காலப் போக்கில் காணாமல் போய் மறைந்து விட்டன. மற்றயவை சீன மொழி போன்று வேறு மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டன. அவை மீண்டும் சமஸ்கிருத மொழிக்கு மாற்றப்பட்டு வரு கின்றன.

    மகாவஸ்து: மகாவஸ்து என்பது மிகப் பிரபல்யமான சமஸ்கிருத படைப்பாகும். இது சீன மொழிபெயர்ப்பிலிருந்து பாதுகாத்து எடுக்கப்பட்டதாகும். அது பெரும் பிரிவுகளைக் கொண்ட பரம்பரை கட்டுக்கதைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

    லலிதாவிஸ்த்ரா: லலிதாவிஸ்த்ரா என்பது சமஸ்கிருத இலக்கிய படைப்பாகும். அது கி.மு. முதலாம் நூற்றாண்டுக் குரியது. அதாவது புத்தாவின் பிறப்புக்கு 500 வருடங்க ளுக்குப் பின் எழுதப்பட்டது. அதில், மூட கதைகளை விரும்பும் மக்கள் புத்தாவுடன் சம்பந்தப்படுத்திச் சொல்லும் அற்புதங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

    புத்தரின் போதனைகள்

    · வாழ்க்கையின் நான்கு விதி கோட்பாடுகள்:

    புத்தரின் பிரதான போதனைகள் அனைத்தும் நான்கு அதி உயர் உண்மைகள் என்ற அடிப்படையில் சுருக்கிச் சொல்லலாம்.

    முதலாவது: வாழ்வு என்பது துயரங்களும் பீடைகளும் நிறைந்ததாகும்.

    இரண்டாவது: துயரங்களுக்கும் பீடைகளுக்கும் முற்று முழுதான காரணம் ஆசையாகும்.

    மூன்றாவது: துயரங்களையும் பீடைகளையும் ஆசைகளை ஒழிப்பதன் மூலம் அகற்றி விடலாம்.

    நான்காவது: (பின்வரும்) எட்டு விதி வழியைப் பின் பற்றுவதன் மூலம் ஆசைகளை அழித்து விடலாம்.

    · உயர்வான எட்டு விதிகள் பின்வருமாறு:

    1. சரியான கருத்து

    2. சரியான எண்ணம்

    3. சரியான பேச்சு

    4. சரியான செயற்பாடு

    5. சரியான வாழ்வுமுறைமை

    6. சரியான முயற்சி

    7. சரியான சிந்தனை

    8. சரியான தியானம்

    · நிர்வானம்

    நிர்வானம் என்பதற்கு சொல்லார்த்தம் காற்றில் அனைந்து செல்லுதல் அல்லது அழிந்து போதல் என்பதாகும். பௌத்த சிந்தாந்தத்தின்படி இதுவே அதிமுடிவான குறிக்கோளாகும். இதை அடைவதற்கு ஒருவர் தனது ஆசையை ஒழிக்க வேண்டும். ஆசையை அழிப்பதற்கு (மேற்கூறிய) எட்டு விதி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    பௌத்த சிந்தாந்தம்:

    அது தன்னிலேயே முரண்படுகின்றது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு பிரதான பௌத்த போதனைகள் அனைத்தும் இந்த நான்கு உன்னத உண்மைகளில் சுருக்கிக் கூறப் பட்டுள்ளது.

    1. வாழ்வென்பது பீடைகளும் துயரங்களும் நிறைந்ததாகும்.

    2. பீடைகளுக்கும் துயரங்களுக்குமான காரணம் ஆசையாகும்.

    3. பீடைகளும் துயரங்களும் ஆசைகளை ஒழிப்பதன் மூலம் அகற்றப்படலாம்.

    4. எட்டு விதி வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆசைகளை ஒழித்து விடமுடியும்.

    இந்த பௌத்த கோட்பாடுகள் தனக்குள்ளே முரண்படுவதைக் காணலாம். மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் மூன்றாவதான பீடைகளும் துன்பங்களும் ஆசையை ஒழிப்பதன் மூலம் அகற்றலாம் என்பதும் நான்காவது ஆசை யை ஒழிப்பதற்கு எட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதும் தனக்குத் தானே முரண்படுகின்றது.

    ஏனெனில் பௌத்தத்தை பின்பற்ற விரும்பும் எவரும் முதலில் நான்கு உயர் உண்மைகளையும் மற்றும் எட்டு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மூன்றாவது உயர்உண்மையின் படி பீடைகளும் துன்பங்களும் ஆசையை அகற்றுவதன் மூலம் ஒழிக்கப்படலாம். நீங்கள் ஆசையை அகற்றும் பட்சத்தில் நான்கு பிரதான உண்மைகளையும் பின்பற்றுவது எவ்வாறு? அதைச்செய்ய எட்டு விதிகளை வழிகளைப் பின்பற்ற ஆசை கொண்டிருக்க வேண்டும்.

    சுருக்கமாகச் சொன்னால் ஆசையை ஒழிப்பதாயின் எட்டு விதிமுறைகளைப் பின்பற்றும் ஆசை இருந்தேயாக வேண்டும். நீங்கள் எட்டு விதி வழிமுறைகளைப் பின்பற்றாத பட்சத்தில் ஆசையை அகற்றிவிட முடியாது. எனவே இது ஒன்றுக் கொன்று தன்னிலே முரண்படுவதைக் காணலாம்.

    புத்த மதத்தில் கடவுள் கொள்கை

    புத்தர், கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற விடயத்தில் மௌனம் சாதித்துள்ளார். இந்தியாவில் பல கடவுள் கொள்கைகளும் சிலை வணக்கங்களும் மிகுந்திருந்த காலத்தில் புத்தர் வாழ்ந்திருந்தமையால் அவர் ஒரு கடவுள் கொள்கை யை வெளிப்படையாக போதிக்காமல் மௌனம் சாதித்திருக்கலாம். அவர் கடவுள் இருக்கிறார் என்பதை மறுக்கவுமில்லை.

    புத்தரிடம் அவருடைய சீடர் ஒருவர் கடவுள் இருக்கிறாரா எனக்கேள்வி கேட்ட போது, அதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். மீண்டும் மீண்டும் இக்கேள்வியைக் கேட்டு நச்சரித்த பொழுது அவர் சரி நீ வயிற்று வலியினால் அவதிப்பட்டுக் கொண் டிருக்கையில் உமது நோயைக் குணப்படுத்துவதில் நீ கவனம் செலுத்துவாயா அன்றி வைத்தியரின் மருந்தை ஆய்வு செய்வாயா? எனவே கடவுள் இருக்கிறாரா என்று ஆராய்வது எனது வேலையுமில்லை. உனது வேலையுமில்லை. எமது வேலை உலக துயரங்களிலிருந்து விடுபடு வதற்காக வேலைகளைச் செய்வது தான்| என்றார்.

    பௌத்த மதம் தம்மா என்ற பெயரில் கடவுளின் இடத்தில் பொது சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. எனினும் இதனால் மனிதனின் முடிவு ஆசைகளைத் திருப்திப்படுத்த முடியவில்லை. சுய முயற்சியுடன் செயற்படுதல் என்ற மதக் கோட்பாடுகளை விடுத்து எதிர்பார்ப்பையும் வாக்குறுதியையும் தரும் மதமாக மாற்ற வேண்டியதாயிற்று.

    ஹீனயான மதம் மக்களுக்கு எந்த வித வெளி உதவி களையும் வாக்குறதியாக முன்வைக்கவில்லை. மஹாயான பிரிவினர் புத்தரின் கருணை மிக்க அவதானிப்புப் பார்வை துன்பப்படும் எல்லா அபலை மக்களின்பாலும் விழுகிறது என்ற கருத்தைப் போதிக்கிறது. அவ்வாறு புத்தரைக் கடவுளின் ஸ்தானத்தில் வைக்கிறது. பல அறிஞர்கள் பௌத்த மதத்தில் காணப்படும் கடவுள் கொள்கை ஹிந்து மதத்தின் செல் வாக்கினால் உள்வாங்கப்பட்டதெனக் குறிப்பிடுகின்றனர்.

    பௌத்தர்களில் பலர் அவர்கள் வாழும் பகுதிகளில் கட வுள்களை உருவாக்கிக் கொண்டனர். ஆக கடவுள் எவரும் இல்லாத பௌத்த மதம் நாளடைவில் பல கடவுள் உள்ள மதமாக மாறியது. சிறிய கடவுள், பெரிய கடவுள், பலயீன மான, பலமான, ஆண் பெண், கடவுள்கள் நாளடைவில் உருவாக்கப்பட்டன. மனிதக் கடவுள்கள் காலத்திற்கு காலம் தோன்றுவதும் திரும்பத் திரும்ப மீளுயிர் பெறுவதும் சாதா ரண நடைமுறையாயிற்று. புத்தர் ஹிந்து மதத்தில் இருந்த ஷஷசாதிக் கொள்கைக்கு'' முற்றிலும் எதிராக இருந்தார்.

    நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு

    பௌத்த நூல்களில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தொடர்பாகக் காணப்படும் குறிப்புகள் பின்வருமாறு:

    1. புத்தர் நபி முஹம்மத் (ஸல்) ஒருவர் வருவார் என முன்னறிவிப்புச் செய்தார்.

    யு) அநேகமாக எல்லா பௌத்த நூல்களிலும் இது காணப்படுகிறது. அது சக்கவத்தி சின்ஹானத் சுத்தந்தா D. 111 . 76 நூலிலும் பின்வருமாறு காணப்படுகிறது.

    உலகில் மைத்திரி (கருணைமிக்கவர்) என்ற பெயரில் ஒரு புனிதர் வருவார். அவர் மிக உன்னதமானவர். அவர் ஐயங்கள் தெளிந்தவர். செயல்களைத் தவிர அறிவைக் கொண்டு நிரப்பப்பட்டவர். நன்மாராயம் சொல்பவர். முழு அகிலத்தையும் அறிந்தவர்.

    அவர் என்ன விடயங்களை தனது ஆத்மார்ந்த அறிவின் மூலம் உணர்ந்து கொண்டாரோ, அவற்றை இந்த அகிலத் துக்கும் எடுத்து முன்வைப்பார். அவர் தனது மார்க்கத்தைப் போதிப்பார். அம்மார்க்கம் மிகச் சிறந்த மூலத்தைக் கொண்டது. அதன் முடிவிலும் உயர்வானது. அதன் நோக்கத்திலும் உயர்வானது. ஆன்மாவிலும் எழுத்திலும் அது உயர்வானதே. அவர் ஒரு மத வாழ்வைப் போதிப்பார். அவ்வாழ்வு முறை முழுமையாக பரிசுத்தமானதும் முழுமை பெற்றதுமாகும். நான் இப்பொழுது போதிக்கும் என் மதம் போன்றதும் வாழ்வு முறை போன்றதையும் அவர் போதிப்பார். அவரது மதகுருமார் கூட்டம் பல ஆயிரக்கணக்கில் இருக்கும். எனது மதகுருக் கள் கூட்டமோ நூற்றுக் கணக்கிலேயே இருக்கிறது.

    டீ) கிழக்கின் புனித நூல்கள்| பாகம் 35 பக்கம் 225ல் குறிப்பிடப்படுவது தலை மைத்துவமும் மத ஒழுங்கும் தங்கி யுள்ளது. ஒரே புத்தர் நான் மட்டுமல்ல எனக்குப் பிறகு ஷமைத்திரியர்| எனும் இவ்விவ்வாறான குணங்களையுடைய ஒரு புத்தர் பின்னர் வருவார். நான் தற்பொழுது நூற்றுக் கணக்கானோரின் தலைவராக இருக்கிறேன். அவர் பல ஆயிரக்கணக்கானோரின் தலைவராக இருப்பார்.||

    ஊ) கேரஸ் என்பவரால் எழுதப்பட்ட புத்த மதக் கோட்பாடுகள்| என்ற நூலில் பக்கம்: 217, 218 (இது இலங்கையில் காணப்படுகிறது.)

    (புத்தரின் சீடரான) ஆனந்தாஇ அருள் பெற்றவரான புத்தரிடம் கேட்கிறார். நீங்கள் சென்று விட்ட பின் எங்க ளுக்கு போதனை செய்பவர் யார்?|

    அருள் பெற்றவர் (புத்தர்) சொல்கிறார்: இந்த பூமியில் வந்த முதல் புத்தர் நான் அல்ல. கடைசியானவரும் நானல்ல. காலப் போக்கில் இப்பூமியில் இன்னொரு புத்தர் தோன்று வார். மிகவும் ஐயங்தெளிந்த ஞானம் பெற்றவர். செயல்களில் அறிவைக் கொண்டு நிரம்பியர்.

    அவர் ஒப்பிட்டுச் சொல்ல இயலாத மனிதர்களின் தலை வராகவும், தூதர்களினதும் அழிந்து செல்லக் கூடிய மனிதர் களினதும் தலைவராகவும் இருப்பார். நான் என்ன அற ஞானங்களை அறிவியல் உண்மைகளை உங்களுக்குப் போதிக்கின்றேனோ, அவற்றையே அவரும் வெளிப்படுத்துவார். அவர் அவரது மார்க்கத்தையும் போதிப்பார்.

    அம்மார்க்கம் மூலத்தில் சிறப்பானது. அதன் முடிவில் உச்சத் தன்மையில் உயர் வானது. அதன் குறிக்கோளில் உன்னதமானது. அவர் ஒரு மதரீதியான ஒழுக்க வாழ்வை போதிப்பார். அது முழுமையானதும் பரிசுத்தமானதும், தற்பொழுது நான் உங்களுக்குப் போதிப்பது போன்றுமிருக்கும். அவரது சீடர்கள் பல ஆயிரக்கணக்கில் இருப்பர். ஆனால் எனது சீடர்களோ நூற்றுக்கணக்கிலேயே உள்ளனர்.

    ஆனந்த் கேட்டார் அவரை நாம் எவ்வாறு அடையாளங் காண்பது?

    அருள் பெற்ற அவர் (புத்தர்) கூறும்போது அவர் மைத் திரியர்' என அறியப்படுவார் எனப் பதிலளித்தார்.

    1. மைத்திரிய என்ற சமஸ்கிருத சொல்லுக்கும் பாலியில் அதன் சம அர்த்தமுள்ள மெத்தய்ய| என்ற சொல்லுக்கும் ஷஅன்புள்ளஇ கருணைமிக்க, இரக்கமுள்ள| என்ற கருத்து கொள்ளப்படுகிறது. இது அத்தனைக்கும் சமமான கருத் துள்ள அறபுச் சொல் அஹ்மத்| என்பதாகும்.

    அல்குர்ஆனில் ஸூறா அன்பியாவில் நாம் உம்மை சகல படைப்புகளக்கும் கருணை யாகவேயன்றி அனுப்பவில்லை (21:107) இதில் கருணை மிக்கவர் என குறிப்பிடப்படும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கருணை மிக்கவர் (மைத்திரி) என்று அழைக்கப்படுகிறார்.

    i) குர்ஆனில் கருணை, கருணை மிக்கவர் என409 இடங்களில் குறிப்பிடப்படுகின்றன.

    ii) குர்ஆனில் உள்ள எல்லா அத்தியாயங்களும் -9ம் அத்தியாயமான ஸூறா தௌபாவைத் தவிர, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என ஆரம்பிக்கின்றது. அதன் பொருளா வது -நிகரற்ற அன்புடையோன் அளவற்ற அருளாள னான அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன் என்பதாகும்.

    iii) முஹம்மத்;| (Muhammadh) என்ற சொல் மஹமத்| (Mahamadh) என்றோ மஹ்மூத் (Mahmoodh) எனறோ உச்சரிக் கப்படுகின்றது. இன்னும் வேறு மொழிகளில் பல்வேறு முறைகளில் உச்சரிக்கப்படுவதை அவதானிக்கக் கிடைக் கின்றது. பாலி, சமஸ்கிருத மொழிகளில் மஹோ (Maho) அல்லது மஹா (Maha) என்பதன் அர்த்தம் அதி சிறந்த உன்னதமான என்றும் மெத்தா (Metta) என்றால் அன்பு கருணை என்றும் பொருள்படும். ஆக, மஹமத் என்பதன் பொருள் மஹா காருண்யம் என்று கொள்ளலாம்.

    2. புத்தரின் போதனைகள் சிலரால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடிய மறை பொருளானவையாகவும் எல்லோ ருக்கும் விளங்கக் கூடிய பொதுக் கொள்கை முறை எனவும் இரு வகைகளை கொண்டிருக்கிறது.

    (Books Of the East) கிழக்கன் புனித நூலகள் பாகம்-2, பக்.36ல் மஹாபரி நிப்பான சுத்த (Maha-Parinibbana Sutta) அத்தியாயம்2 வசனம்-32ல் கீழ்வருமாறு கூறப்படுகிறது.

    நான் மறைபொருள் ஞானத்தையும் பொதுக் கொள்கை களையும் எந்தவித வேறுபாடும் காட்டாமல் போதித்துள் ளேன். சத்தியத்தைக் கூறும் விடயத்தில், ஆனந்தா ததகாத் தாவுக்கு எதையும் மறைத்து விடும் ஆசிரியர் ஒருவரின் மூடிய கைக்கொள்கை இருக்க முடியாது.

    நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் இறை ஞானம், பொது உலக விடயங்கள் எதுவும் தொடர்பாக எந்த வித வேறு பாடுமின்றி அல்லாஹ்வால் ஏவப்பட்ட கட்டளைகளை மக்களு க்கு எடுத்துரைத்துள்ளார். அன்றும் இன்றும் புனித குர்ஆன் பொதுமக்களுக்கு பகிரங்கமாகவே ஓதிக்காண்பிக்கப்பட்டுள்ளது. ஓதிக் காண் பிக்கப்படுகிறது. நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தில் எதையும் மறைப்பதையிட்டு கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

    3. புத்தரின் நெருங்கிய சீடர்கள்

    கிழக்கின் புனித நூல் பாகம்-2, பக்.-97 மஹாபரிநிப்பன சுத்த, அத்தியாயம்-5, வசனம்-36ன் படி:

    அப்பொழுது அருள் பெற்றவர் (புத்தர்) ஒருமுறை சகோதர மக்களுக்கு போதனை செய்யும்போது அவர் சொன்னார்: எவராகிலும் சகோதர மக்களில் ஒருவர் நீண்ட கடந்த காலத்தில் அரஹத் புத்தா வாக இருந்திருக்கிறாரோ அவர்களும் எனக்கு இப்பொழுது மிக நெருக்கமாக இருக் கும் சீடரான ஆனந்த போன்று எனது சீடர்களே. இந்த சகோதரர்கள் எதிர்காலத்தில் அரஹத் புத்தாவாக இருப்பார். அவருக்கும் ஆனந்தா எனக்கு இருப்பது போன்று நெருக்கமான சீடர்களாக இருப்பர்.

    புத்தருக்கு மிக நெருக்கமான சீடர் ஆனந்த-அதே போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மிக நெருக் கமான சீடராக அனஸ் (ரழி) அவர்கள் இருந்திருக் கிறார்கள். அவர் மாலிக் அவர்களின் மகனாவார். அனஸ் (ரழி) அவர்களை அவரது பெற்றோர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைத் தார்கள். அனஸ் (ரழி) சொல்கிறார்: எனது தாயார் நபிய வர்களுக்கு சொன்னார். அல்லாஹ்வின் தூதரே! இதோ இருக்கிறார் உங்களது சிறு ஊழியர்.

    மேலும் அனஸ் (ரழி) கூறுகையில் எனக்கு 8 வயதிலிருந்து நான் அவர்களுக்கு ஊழியம் செய்து வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள் என்னை தனது மகன் என்றும் தனது அன்புக் குரிய சீடர் என்றும் அழைப்பார். அனஸ் (ரழி) அவர்கள் நபிகளாரின் மரணம் வரை எல்லாக் காலங்களிலும் சமாதான காலம், யுத்த காலம் எல்லாவற்றிலும் ஆபத்திலும் பாதுகாப்பி லும் நபி (ஸல்) அவர்களுடன் ஒன்றாக இருந்துள்ளார்கள்.

    i) அனஸ் (ரழி) 11 வயதே நிரம்பியவராக இருந்தபோதும் உஹத் யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களுக்குப் பக்கத்தில் இருந்திருக்கிறார்கள். அந்த யுத்தத்தில் நபி (ஸல்) அவர்கள் காயப்பட்டு ஆபத்தில் இருந்திருக்கிறார்கள்.

    ii) ஹுனைன் யுத்தத்தின்போதும், அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் எதிரிகள் சூழப்பட்டிருந்த வேளை 16 வயது நிரம்பி யிருந்த அனஸ்(ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பக்கத்தில் துணையாக இருந்திருக்கிறார்கள்.

    எனவே அனஸ்(ரழி) அவர்கள் புத்தரை மதம்பிடித்த யானை தாக்க வந்தபோது அவருடன் கூட இருந்த ஆனந்தாவுக்கு ஒப்பிட்டுக் கூற முடியும்.

    ஒரு புத்தரை அடையாளம்÷இனங்காண ஆறு அளவு கோள்கள் கூறப்பட்டுள்ளன:

    கரோஸினால் எழுதப்பட்ட புத்தமத நூல், பக்.214ன் படி

    அருள் பெற்றவர் (புத்தர்) கூறுகிறார், இரண்டு சந்தர்ப்பங் களிலேயே ஒரு ததகாத்தா|வின் பிரசன்னம் மிகவும் தெளிவாகவும் அளவற்ற பிரகாசமுடைய தாகவும் காணப்படும். ஆனந்தா இரவில் ஒரு ததகாத்தா அதிஉன்னத ஸ்தா னத்தை (நிலையை) அடைவதோடு முழுமையான உள்ளறி வையும் (ஞானம்) பெறுகிறார். இரவில்தான் அவர் கடை சியாக மறைவாகிறார். அம்மறைவின்போது இவ் வுலகின் அவரது சகல விடயங்களும் இப்போது போகின்றன.

    4. கௌத்தம புத்தரின் கூற்றுப்படி, ஒரு புத்தரை அடையாளங் காண கீழ்வரும் ஆறு அடிப்படைகள் அளவுகோள் கள் உள்ளன.

    1. ஒரு புத்தர் அதி உன்னத நிலையையும் முழுமையான உள்ளறிவையும் இரவு நேரத்திலேயே அடைந்து கொள்கிறார்.

    2. அவர் முழுமையான ஞானம் அடையும் பொழுது அவர் அளவு கடந்த பிரகாசம் அடைகிறார்.

    3. புத்தர் இயற்கை மரணமேயடைவார்.

    4. அவர் இரவு நேரத்திலேயே மரணமடைவார்.

    5. அவர் மரணிக்கும் தருவாயில் மிக மிகப் பிரகாசமாகத் திகழ்வார்.

    6. அவரது இறப்பின் பின் அவரது இவ்வுலக இருப்பு முற்றுப் பெற்று விடும்.

    நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அதிஉன்னத ஞான நிலையை -நபித்துவத்தை இரவு நேரமொன்றிலேயே பெற்றார்.

    அல்குரஆனின் ஸூரா துஹானில் கூறப்படுகிறதுளூ

    விடயங்களைத் தெளிவாக்கும் (வேத) நூலின் மீது சத்தியமாக -நாம் அதை ஒரு அருள் பெற்ற இரவிலேயே இறக்கிவைத்தோம்.|| (அல்குர்ஆன் 44:2-3)

    ஸூரா கத்ரில் கூறப்படுவதாவது:

    நாம் நிச்சயமாக இதை (தூதை) கண்ணியமிக்க இரவிலேயே இறக்கிவைத்தோம்.|| (அல்குர்ஆன் 97:1)

    · நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தமக்குக் கிடைத்த ஞானத்தை விண்ணிலிருந்து வந்த ஒரு ஒளியைக் கொண்டு உணர்ந்தார்.

    · நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இயற்கை மரணமே எய்தினார்கள்.

    · அயிஷா (ரழி) கூற்றுப்படி முஹம்மத் (ஸல்) அவர்கள் இரவு நேரத்திலேயே மரணமடைந்தார்கள்.அவர் இறக் கும் போது வீட்டில் விளக்கெரிய எண்ணெய் இருக்க வில்லை. ஆதலால் ஆயிஷா (ரழி) அவர்கள் எண்ணெய்யை இரவல் வாங்கி வந்திருந்தார்கள்.

    · அனஸ் (ரழி) அவர்கள் கூற்றுப்படி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், அவர் இறந்த இரவு மிகமிக பிரகாசமாகக் காணப்பட்டார்கள்.

    · நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து அடக்கம் செய்யப்பட்டார்கள்.

    5. புத்தர்கள் என்போர் போதகர்களே!

    தம்மபதவில் கூறப்படுகிறது. கிழக்கின் புனித நூல்கள்;, பாகம்-10, பக்.67படி

    ஜாகாத்தாக்கள் (புத்தர்கள்) என்போர் போதகர்கள் மட்டுமே.

    அல்குர்ஆனின் ஸூரா ஹாசியாவில் கூறப்படுகிறது

    எனவே நீர் உபதேசம் செய்வீராக. நீர் உபதேசம் செயக்கூடியவரே. நீர் அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர். (அல்குர்ஆன் 88: 21-22)

    6. தம்மபதவில் மைத்திரியரை இனங்காண கீழ்வரும் அடையாளங்கள் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. தம் மபதவில் மெதத சுத்த 151ன் படி

    வாக்குறுதியளிக்கப்பட்டவர்:

    1) முழுப்படைப்புகளுக்கும் கருணையாளராக இருப்பார்.

    2) சமாதானத்துக்கான தூதுவராக -சமாதானத் தூது வராக இருப்பார்.

    3) உலகில் அதி வெற்றியாளராக இருப்பார்.

    ஒரு போதகராக மைத்திரியாக இருப்பார்.

    1) உண்மையாளராக இருப்பார்

    2) தன்னை மதிப்பவராக இருப்பார்.

    3) மென்மையானவராகவும் கண்ணியமானவராகவும் இருப்பார்.

    4) பெருமையுள்ளவராக இருக்க மாட்டார்.

    5) படைப்புகளுக்கு தலைவராக இருப்பார்.

    6) சொல்லிலும் செயலிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரி யாக இருப்பார்.

    (இவையனைத்தும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு களாகவே உள்ளன.)