الإيمان بالكتب
வேதங்களை நம்புதல்
மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்காக மனிதர் களிலிருந்தே அல்லாஹ் தேர்ந்தெடுத்த நபிமார்கள் மூலம் அல்லாஹ் அருளிய செய்தி களே வேதங்கள் எனப்படும்.
வேதங்கள் என்பதற்கு அரபியில் அல் குத்பு எனப்படும். இதன் ஒருமைச் சொல் அல்கிதாப் (வேதம்) என்பதாகும். குத்பு என்ற சொல்லுடன் சுஹூபு எனும் வார்த்தையும் இந்த வேதத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன. அல்லாஹ்விடமிருந்து வேதம் பெறாத எந்த நபியும் இல்லை.
كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَأَنْزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ
மனிதர்கள் ஒரே சமுதாயமாகவே இருந்தனர். பின்னர் (அவர்களிடையே கருத்து வேறு பாடுகள் தோன்றவே) நன்மாராயம் கூறுபவர் களாகவும் எச்சரிக்கை செய்பவர்களாகவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பி அவர்களுக்கு வேதங்களையும் அருளினான். (2:130)
ஒவ்வொரு நபிக்கும் கொடுக்கப்பட்ட வேதங்களின் பெயர்களை அல்குர்ஆன் குறிப்பிடாத அதே வேளை ஒரு சில நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதங்களின் பெயர்களை மட்டுமே குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
தவ்ராத் வேதம் - மூஸா நபிக்கும்,
இன்ஜீல் வேதம் - ஈஸா நபிக்கும்
ஸபூர் வேதம் - தாவூத் நபிக்கும்,
புர்கான் (அல்குர்ஆன்) வேதம் - முஹம்மத் நபிக்கும் வழங்கப்பட்டது.
அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட எல்லா தூதர்களையும் பாகுபாடின்றி விசுவாசம் கொள்ள வேண்டும் என்பது போல் எல்லா தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன என்பதையும் விசுவாசம் கொள்ள வேண்டும்.
وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ
நபியே! (இறையச்சமுடைய மக்களான) அவர்கள் உமக்கு அருளப்பட்டதையும் (குர்ஆனையும்) உமக்கு முன்னர் அருளப் பட்டவற்றையும் (வேதங்களையும்) ஈமான் கொள் வார்கள். மேலும் மறுமையையும் உறுதியாக ஈமான் கொள்வார்கள். (2:4)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَى رَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي أَنْزَلَ مِنْ قَبْلُ وَمَنْ يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا } [النساء: 136
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அவனது தூருக்கு இறக்கிவைத்த வேதத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். யார் அல்லாஹ்வையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும் இறுதி நாளையும் நிராகரிக்கின்றானோ நிச்சயமாக அவன் வெகு தூரமான வழி கேட்டில் சென்று விடடான். (4:136)
ஈமானின் வரையரைகளை நபி (ஸல்) அவர்கள் தெளிவுப் படுத்தும் போது மலக்குகளை நம்பிக்கை கொள்வதைப் பற்றியும் குறிப்பிட்டார்கள்.
ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனது மலக்கு களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர் களையும் மறுமை நாளையும் கலாகத்ரையும் விசுவாசம் கொள்வதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி), நூல்: முஸ்லிம்)
ஒரு சமூகம் எந்த மொழியில் பேசியதோ அந்த மொழியிலேயே அல்லாஹ் நபிமார்களை அனுப்பிவைத்து அதே மொழியிலே வேதங்களையும் அருளினான்
وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ
நாம் எந்தத் தூதரையும் அவர் தனது சமூகத்திற்குத் தெளிவுபடுத்துவதற்காக அவர்களது மொழியிலேயே தவிர அனுப்ப வில்லை. (14:4)
வேதங்களைப் பெற்றுக் கொண்ட சமூகத்தின ரைப் பற்றி அல்லாஹ் கூறும் போது குறிப்பாக யூத கிறிஸ்தவர்கள் பற்றி குறிப்பிடும் போது அவர்கள் தங்களது வேதங்களான தவ்றாத் மற்றும் இனஜீல் வேதங்களை முறையாக பாதுகாத்திட வில்லை, அதில் திரிபுகள் செய்தனர் என்று குறிப்பிடுகிறான்.
{مِنَ الَّذِينَ هَادُوا يُحَرِّفُونَ الْكَلِمَ عَنْ مَوَاضِعِهِ} [النساء: 46
யூதர்களின் சிலர் (வேத) வார்த்தைகளை அவற்றின் இடங்களை விட்டும் திரிபு படுத்துகின்றனர். (4:46, 5:41) 2:174
فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً يُحَرِّفُونَ الْكَلِمَ عَنْ مَوَاضِعِهِ وَنَسُوا حَظًّا مِمَّا ذُكِّرُوا بِهِ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَى خَائِنَةٍ مِنْهُمْ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ } [المائدة: 13]
அவர்கள் தங்கள் உடன் படிக்கையை முறித்தனால் அவர்களை நாம் சபித்து அவர்களது உள்ளங்களை இறுக்கமானதாகக்கி விட்டோம். (அதனால்) அவர்கள் (வேத) வார்த்தைகளை அதன் இடங்களை விட்டும் திரிபுபடுத்தி விடுகின்றனர். இன்னும் தமக்கு உபதேசிக்கப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டும் விட்டனர். அவர்களில் சொற்பத் தொகையினரைத் தவிர ஏனையோரிடமிருந்து ஏதேனும் ஒரு மோசடியை நீர் அவதானித்துக் கொண்டிருப்பீர். எனவே அவர்களை நீர் மன்னித்து பொருட்படுத்தாது விட்டு விடுவீராக. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (5:13,)
{قُلْ مَنْ أَنْزَلَ الْكِتَابَ الَّذِي جَاءَ بِهِ مُوسَى نُورًا وَهُدًى لِلنَّاسِ تَجْعَلُونَهُ قَرَاطِيسَ تُبْدُونَهَا وَتُخْفُونَ كَثِيرًا} [الأنعام: 91]
ஒளியாகவும் மனிதர்களுக்கு நேர்வழியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் யார் என (நபியே) கேட்பீராக. அதை நீங்கள் (தனித்தனி) ஏடுகளாக ஆக்கி அவற்றில் (சிலதை) வெளிப்படுத்துனீர்கள் அதிகமானதை மறைத்தும் விடுகிறீர்கள்.(6:91)
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அல்லாஹ் அருளிய தவ்றாத் மற்றும் இன்ஜீல் வேதத்தி லுள்ள விடயங்களை முழுமையாக வெளிப் படுத்தாத அதே வேளை அதிலுள்ள படி தீர்ப்புவழங்காது தங்கள் மனோ இச்சைப்படி தீர்ப்பு வழங்கினர். எனவே உண்மையான தவ்றாத் மற்றம் இனஜீலின் சட்டங்களை நிலை நிறுத்துமாறு அல்லாஹ் அந்த மக்களுக்கு கட்டளையிட்டான்.
وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ مِنْ رَبِّهِمْ لَأَكَلُوا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ أَرْجُلِهِمْ مِنْهُمْ أُمَّةٌ مُقْتَصِدَةٌ وَكَثِيرٌ مِنْهُمْ سَاءَ مَا يَعْمَلُونَ } [المائدة: 66
அவர்கள் தவ்றாத்தையும் இன்ஜீலையும் தமது இரட்சகனிடமிருந்து தமக்கு இறக்கி வைக்கப் பட்டதையும் நிலை நாட்டியிருந்தால் அவர்களுக்கு மேலிருந்தும் அவர்களின் கால்களுக்கு கீழிருந்தும் (தாராளமாக) புசித்திருப்பார்கள். அவர்களின் நடுநிலையான கூட்டத்தினரும் உள்ளனர். ஆனால் அவர்களில் அதிகமானோர் செய்து கொண்டிருப்பது மிகக் கெட்டதாகும்.(5:66)
{وَلْيَحْكُمْ أَهْلُ الْإِنْجِيلِ بِمَا أَنْزَلَ اللَّهُ فِيهِ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ } [المائدة: 47]
இன்ஜீலையுடையோர் அல்லாஹ் அதில் இறக்கியதைக் கொண்டே தீர்ப்பளிக்கட்டும். எவர்கள் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் தாம் பாவிகள்.(5:47)
{قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لَسْتُمْ عَلَى شَيْءٍ حَتَّى تُقِيمُوا التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِنْهُمْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طُغْيَانًا وَكُفْرًا فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ} [المائدة: 68
வேதத்தையுடையோரே! தவ்றாத்தையும் இன்ஜீலையும் உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு இறக்கிவைக்கப் பட்டதையும் நீங்கள் நிலை நாட்டுகின்ற வரையில் நீங்கள் எந்த சத்தியத்திலும் இல்லை என்று (நபியே) நீர் கூறுவீராக. உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கி வைக்கப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு வரம்பு மீறுதலையும் நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி யிருக்கிறது. எனவே நிராகரிப்பாளர்களான இக்கூட்டத்தார் மீது நீர் கவலை கொள்ளாதீர்(5:68)
வேதம் கொடுக்கப்பட்ட அம்மக்கள் வேதத்தில் மறைத்த வற்றை திரிபுபடுத்தியவற்றை அல்குர்ஆனூடாக அல்லாஹ் தெளிவு படுத்தினான்.
يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِمَّا كُنْتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَنْ كَثِيرٍ قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ
வேதத்தையடையோரே! வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்தவற்றில் அதிகமான வற்றை உங்களுக்கு தெளிவு படுத்தும் எமது தூதர் உங்களிடம் வந்தார். எனினும் பலவற்றை அவர் விட்டு விடுவார். அல்லாஹ் விடமிருந்து ஒளியும் தெளிவான வேதமும் நிச்சயமாக உங்களிடம் வந்து விட்டது. (5:15)
அல்குர்ஆனுக்கு முன் இறங்கிய வேதங்களின் நிலமை களை முஸ்லிம்கள் நம்ப வேண்டிய முறைப்பற்றியே இந்த வசனங்கள் தெளிவுப் படுத்துகின்றன.
எனவே உலக மக்களும் குறிப்பாக வேதம் கொடுக்கப்பட்ட மக்களும் இறுதியாக அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதமான அல்குர்ஆனை விசுவாசிக்க கடமைப் பட்டுள்ளார்கள்.
இறுதி வேதமான அல்குர்ஆன் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் எனும் இரவில் இறக்கப்பட்டது.
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (3) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ} [الدخان: 3، 4
நிச்சயமாக நாம் இதை பாக்கியம் பொருந்திய (லைலதுல் கத்ர்எனும்) ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாம் எச்சரிக்கை செய்வோராக இருக்கின்றோம். (44:3)
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
நிச்சயமாக நாம் (குர்ஆனாகிய) இதனை லைலதுல் கத்ரில் இறக்கி வைத்தோம்.
லைலதுல் கத்ர் என்னவென்பதை (நபியே) உமக்கு அறிவித்தது எது? லைலதுல் கத்ர் என்பது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.
வானவர்களும் ரூஹ் (எனும் ஜிப்ரீலும்) சகல கட்டளைகளுடன் தமது இரட்சகனின் அனுமதிப் பிரகாரம் அதில் இறங்கு கின்றனர்.
அதிகாலை உதயமாகும் வரை அது அமைதி பொதிந் திருக்கும். (97:1-5)
இந்த வேதத்தை விசுவாசிக்க வேண்டிய அவசியத்தை அல்லாஹ் வலியுறுத்தி கூறுகிறான்.
{وَهَذَا كِتَابٌ أَنْزَلْنَاهُ مُبَارَكٌ مُصَدِّقُ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَلِتُنْذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَالَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ يُؤْمِنُونَ بِهِ وَهُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ} [الأنعام: 92
உம்முல் குரா (எனும் நகரங்களின் தாயாகிய மக்கா)வையும் அதனைச் சூழ உள்ளவர்களையும் நீர் எச்சரிக்கை செய் வதற்காக நாம் இறக்கிய இவ்வேதம் அருள் பொதிந்த தாகும் (இது) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப் படுத்து வதாகவும் இருக்கின்றது. எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்கின்றார்களோ அவர்கள் இதையும் நம்பிக்கை கொள்வார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகையிலும் பேணுதலாக இருப்பார்கள்.(6:92)
இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அரபு சமூகத் திலிருந்து அனுப்பப்பட்டதனால் அரபு மொழியிலே இறுதி வேதத்தையும் அல்லாஹ் வழங்கினான்.
إِنَّا أَنْزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாம் இதனை இறக்கி வைத்தோம். (12:2)
இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதி தூதர் என்ற படியினால் - அவரது வருகைக்குப்பின் இறைத் தூதர்களின் வருகை முற்றுப் பெற்றதனால்- எந்தவொரு வேதமும் வரமாட்டாது. எனவே அல்குர்ஆன் அரபு சமூகத்திற்கு மட்டுமன்றி உலக மக்களுக்குரிய வேதமாகவே - வழிகாட்டியாகவும் - அல்லாஹ்வினால் அருளப்பட்டது.
تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا
அகிலத்தாருக்கு எச்சரிக்கையாக இருப்பதற் காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடிய (இவ்வேதத்தை தன் அடியார் மீது இறக்கி வைத்தவன் பாக்கிய முடையவனாவான். (25:1)
{يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمْ بُرْهَانٌ مِنْ رَبِّكُمْ وَأَنْزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا} [النساء: 174
மனிதர்களே. உங்கள் இரட்சகனிடமிருந்து ஒரு சான்று உங்களுக்கு வந்திருக்கிறது. (குர்ஆன் எனும்) தெளிவை உங்களுக்கு நாம் இறக்கி வைத்துள்ளோம்.(4:174)
{فَأَيْنَ تَذْهَبُونَ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ} [التكوير: 26، 27
ஆகவே நீங்கள் இக்குர்ஆனை விட்டும் எங்கு செல்கிறீர்கள். இது அகிலத்திற்குரிய நல்லுப தேசமேயன்றி வேறில்லை.(81:26. 27)
அல்குர்ஆன் அருளப்பட்ட பின் தவ்றாத் மற்றும் இன்ஜீல் கொடுக்கப்பட்ட மக்களும் இக்குர்ஆனை பின்பற்ற வேண்டும் என அல்லாஹ்வினால் உத்தரவிடப்பட்டது.
{يَا أَيُّهَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ آمِنُوا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِمَا مَعَكُمْ مِنْ قَبْلِ أَنْ نَطْمِسَ وُجُوهًا فَنَرُدَّهَا عَلَى أَدْبَارِهَا أَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّا أَصْحَابَ السَّبْتِ وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا } [النساء: 47
வேதம் கொடுக்கப்பட்டவர்களே. நாம் முகங்களை உருமாற்றி அவைகளை பின்புறமாக திருப்பி விடுவதற்கும் அல்லது அஸ்ஹாபுஸ்ஸபத் (எனும் சனிக்கிழமைக்காரர்) களை சபித்தது போல் சபித்து விடுவதற்கு முன்னரும் உங்களிடம் இருப்பதை உண்மைப் படுத்தும் விதமாக நாம் இறக்கியிருப்பதை நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் வின் கட்டளை நிறைவேற்றப்படக் கூடியதாகவே இருக்கிறது. (4:47)
முஸ்லிம்கள் குர்ஆனை மட்டுமே பின்பற்ற வேண்டுமே தவிர முன்னைய வேதங்களை பின்பற்றக் கூடாது.
اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا مَا تَذَكَّرُونَ
உங்கள் ரப்பிடமிருந்து அருளப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனைத் தவிர வேறு எவரையும் பாதுகாவலராக எடுத்துக் கொள்ளாதீர்கள். (7:3)
ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் தவ்ராதின் ஒரு பிரதியை கொண்டு வந்து அல்லாஹ்வின் தூதரே இதோ தவ்ராத்தின் பிரதியாகும் எனக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். உமர் (ரழி) அப்பிரதியை வாசிக்கலானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறத் தொடங்கியது. உடனே அபூபக்கர் (ரழி), உமரே! உனக்கு நாசமுண்டா கட்டும். அல்லாஹ்வின் தூதரின் முகத்தை நீர் பார்க்க வில்லையா எனக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்த உமர் (ரழி), அல்லாஹ் வினதும் அவனது தூதரினதும் கோபத்திலிருந்து அல்லாஹ் விடம் பாதுகாப்புக் கோருகிறேன். அல்லாஹ்வை றப்பாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் பொருந்திக் கொண்டேன் எனக் கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை றப்பாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் பொருந்திக் கொண் டோம் எனக் கூறிவிட்டு, முஹம்மத்தின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, மூஸா (அலை) உங்களுக்கு மத்தியில் வந்தால், என்னை ஏற்று பின்பற்றுவதை விட்டு விட்டு அவரை நீங்கள் பின்பற்றினால் வழிகெட்டு விடுவீர்கள். மூஸா (அலை) உயிருடன் இருந்து என் நபித்துவத்தை அடைந்து கொண்டால் அவரும் என்னையே பின்பற்ற வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: தாரமி 449)
இறுதி வேதமான அல்குர் ஆனை பாதுகாத்திடும் பொறுப்பினை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இன்று வரை எந்த மாற்றமும் திரிபுமின்றி புனித குர்ஆன் மனன வடிவிலும் எழுத்து வடிவிலும் பாதுகாக்கப் பட்டு வருகின்றது.
{ إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ} [الحجر: 9
நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கினோம் இன்னும் நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்பவர்களாவோம். (15:9)