அஹ்காமுல் ஜனாஸா (ஜனாஸாவின் விதிமுறைகள்) ()

மௌலவி எம்.எம்.முபாரக் இப்னு முஹம்மத் மஹ்தூம்

ஜனாசாவின் போது கடை பிடிக்க வேண்டிய விதி முறைகளும், தடுக்கப்பட வேண்டிய பிழைகளும்

|

 அஹ்காமுல் ஜனாஸா (ஜனாஸாவின் விதிமுறைகள்)

أحكام الجنائز

அஹ்காமுல் ஜனாஸா (ஜனாஸாவின் விதிமுறைகள்)

மௌலவி

எம்.எம். அஹ்மத் முபாறக் கபூரி பீ.ஏ. (மதனி)

முன்னாள் அதிபர், கபூரிய்யா அரபிக் கல்லூரி, மஹரகம

பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

என்னை சிறு வயது

முதல் சன்மார்க்க

நெறியில் வளரச்

செய்து சமூகத்துக்குப்

பயனுள்ளவனாக ஆக்கிட

ஆவல் கொண்ட எனது

அன்பின்

பெற்றோர்களுக்கு......!

சமார்ப்பணம்

சகல புகழும் ஏக வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்து. அவன் ஏகன் இணை துணையற்றவன். மறுமை நாளின் அதிபதி. யா அல்லாஹ்! உன் அடியானும் இறுதித் தூதருமாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னா ரது தோழர், கிளையார் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் சொரிந்தருள்வாயாக!

'அஹ்காமுல் ஜனாஸா" என்ற இந்நூல் முதன் முதலில் 1992ல் ஹாதி புத்தக நிலையத்தினரால் வெளியிடப் பட்டது. தொடர்ந்தும் 1994, 1997, 2001 வருடங்களில் இரண்டாம், மூன்றாம், நான்காம் பதிப்புக்கள் வெளியாயின. அந்நூலை ஆசிரியர் எழுதும் போது அவரது மனதிலே தோன்றிய எண்ணப்படி மக்கள் இந்தப் புத்தகம் மூலம் பயன்படு கிறார்கள் என்ற செய்தியை பல பதிப்புகள் வெளியான தன் மூலம் அறியமுடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.

ஐந்தாவது பதிப்பாக வெளிவரும் இது திருத்திய பதிப்பாக வெளி வருகிறது. இதிலே பின் இணைப்பாக ஜனாஸாவோடு சம்பந்தப்பட்ட பல விடயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சுமார் இருபது வருடங்களைத் தாண்டிய பின்பும் இந் நூல் சமூகத்துக்குப் பயனுள்ளதாக அமைந்தி ருப்பது அல்லாஹ் அவருக்குச் செய்த பேரருளா கும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக் கும் தூய எண்ணத்தைத் தந்தருள் வானாக! நல் அமல்கள் செய்ய அருள் புரிவானாக!

பின் முஹம்மத்

பர்பெக்ட் பிரின்டர்ஸ்

14.12.1434

20.10.2013

ஐந்தாம் பதிப்புரை

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவரும் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரி அதிபருமாகிய அல் ஹாஜ் மௌலவி பாழில் எம்.பி.எம் . அலியார் ஜே.பீ. (தேசபந்தி) அவர்கள் மனமுவந்தளித்த பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் மஹறகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் அதிபராகப் பணிபுரியும் அல்-ஹாஜ் மௌலவி எம்.எம். அஹமத் முபாறக் அரபுக் கல்லூரியில் எட்டாண்டுகள் பயின்று உயர் கல்விக்காக மதீனா பல்கலைக் கழகமும் சென்று அங்கும் பட்டம் பெற்றவர். மார்க்க விடயங்களில் ஆழமான அறிவுள்ளவர். தீவிரவாதப் போக்குகளை விரும்பாதவர். பழகுவதற்கு இனிமையா னவர். தான் கற்ற கல்வியினால் முஸ்லிம் சமூகம் பயனடைய வேண்டும் என்பதற்காக கொழும்பு நகரின் பிரதான பள்ளி வாயல் களில் குத்பா பேருரை நிகழ்த்துவதுடன் பல மார்க்க வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றார். தொடார்ந்து ஐந்து வருடங்க ளுக்கு மேலாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இஸ்லாமிய வரை யறை என்ற தலைப்பில் வாரந் தோறும் இஸ்லாமிய சட்ட நுணுக்கங்களுக்கு விரிவான விளக்கமளித்து வருகின்றார்.

இதே தொடரில்தான் அஹ்காமுல் ஜனாஸா என்ற பெயரில் ஒரு சிறு நூலை எழுதியுள் ளார். இவரது ஆக்கங்கள் நூலுருப் பெறுவ தில் இந்நூல் ஒரு கன்னி முயற்சியாகும்.

இந்நூலை ஆரம்ப முதல் இறுதி வரை நான் வாசித்துப்பார்த்தேன். எனக்கு உதவியாக எனது அரபுக் கலா சாலையின் உஸ்தாது மார்களையும் சேர்த்துக் கொண்டேன். ஒருவர் வாசிக்க ஏனையவர் அதைச் செவி மடுத்தோம். இதில் கூறப்பட்ட மார்க்க சட்டங்களையும், ஹதீஸ்களையும், அதற்கான விளக்கங்களையும் மூலநூல் களுடன் அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்தோம். சில இடங்களில் தேவையான ஆலோசனைகளையும் மதிப்புரை வழங்கியுள்ளோம். இந்நூலில் பொதிந்துள்ள இஸ்லாமியச் சட்டங்கள் யாவும் சட்ட மேதை ஷாபிஈ (ரஹ்) அவர்களது கருத்துக்களையும் அவர்களின் சிறப்பு மிகு சீடர்களில் ஒருவரான இமாம் நவவி (ரஹ்) கருத்துக் களையுமே உள்ளடக்கியுள்ளன. இந்நூல் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கூடுதலான பிரயோசனத்தை அளிக்க வேண்டும். அதன் மூலம் அல்லாஹ் மௌலவி முபாறக் அவர்களுக்கும் அவரது உஸ்தாது மார்களுக்கும் عِلْمٌ يُنْتَفَعُ بِهِ என்ற மணி மொழிக்கொப்ப சகல பாக்கியங்களையும் வழங்க வேண்டும் எனப் பிரார்த்திக் கிறேன்.

அல்லாஹ்வுக்காக என்ற தூய்மையான எண்ணத்து டனுள்ள நமது செயல்கள் அனைத்தும் கபூல் செய்வானாக! ஆமீன்

وَاللهُ اَعْلَمُ بِالصَّوَابِ

அல்லாஹ்வே சகல உண்மைகளையூம் அறிந்தவன்

மௌலவி எம்.பி. அலியார் ஜே.பீ. (தேசபந்தி)

அதிபர், தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கலாசாலை,

சம்மாந்துறை.

1992.05.01

 முகவுரை

சர்வ புகழும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!

ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள் தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஜனாஸாவின் கடமைகள் பர்ளு கிபாயா என்பதை நாமெல்லோரும் அறிவோம். அதனை முறையாக ஒருவரேனும் நிறைவேற்றுவதன் மூலமே எல்லோரது கடமையும் நீங்கிவிடுகிறது. அக்கடமையை ஒழுங்காக நிறைவேற்ற அதன் விதிமுறை களை நாங்கள் அறிவது இன்றியமையாத தாகும். ஜனாஸா விடயமாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நடந்து கொண்ட முறைகள் என்னவென அறிந்து அதன்படி செயலாற்றக் கிடைத்தால் அதுவே பெரும் பாக்கியமாகும்.

ஜனாஸாவின் விதிமுறைகள் பற்றி ஏற்கன வே பல உலமாக்கள் சிறு நூல்களையும், பிரசுரங்களையும் எழுதியுள்ளனர். இருப்பினும் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்நூலை நாம் தொகுத்துள்ளோம். கூடுமான வரை தேவையான இடங்களில் ஆதாரங்களைத் தந்து விளக்கியுள்ளோம். ஷாபிஈ மத்ஹபின் கருத்துக்களை அவதா னத்திலெடுத்து இதனைத் தொகுத்துள் ளோம். குறைவற்ற தன்மை தூய்மை மிகு அல்லாஹ்வுக்கே யுரியது. எனவே இதில் குறைகள் காணப் படலாம். அதனைப் பெரிது படுத்தாது பெருமனதுடன் சுட்டிக்காட்டித் திருத்துமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

இந்நூல் எனது மறு உலக வாழ்வுக்குப் பயனுள்ள ஒன்றாக அமைய வேண்டு மென்று பிரார்த்திக்கிறேன். இதனை சரிபார்த்து அவ்வப்போது கருத்துக்களைத் தெரிவித்த உலமாக்களுக்கும் குறிப்பாக பல்வேறு பொறுப்புகளுக்கு மத்தியில் இந்நூலை வாசித்து ஆலோசனைகளோடு இந் நூலுக்கு மதிப்புரை தந்த முன்னுரை அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தலைவரும் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் இரபுக் கல்லூரி அதிபருமாகிய மௌலவி பாழில் எம்.பீ. அலியார், ஜே.பி. (தேவுபந்தி) அவர்களுக்கும், அக் கல்லூரிப் போதனாசிரியர்கட்டும் மௌலவி பாழில் எம்.எஸ்.நூருல் ஹம்ஸா (தீனி) பீ.ஏ. அவர்களுக்கும் அல்லாஹ், நற்கூலி வழங்கப் பிரார்த்திக்கிறேன். இதனை அழகுற அச்சுப்பதிவு செய்த தந்த நிலையத்தா ருக்கும் எமது நன்றிகள் உரித்து.

மௌலவி அஹ்மத் முபாறக்

109, பைபர் கார்டன்,

ஞானவிமல வீதி,

தெமட்டகொடை, கொழும்பு - 09

ஸபர் 01, 1413

ஆகஸ்ட் 01. 1992

உலகில் பிறந்த மனிதர் ஒவ்வொருவரும் என்றோ ஒரு நாள் மரணித்தே தீர வேண்டும். பிறப்பு (ஹயாத்து) இறப்பு (மவ்த்) ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நல்லமல்கள் செய்து அல்லாஹ் வின் அருளைப் பெற்றுக் கொள்பவனே பெரும் பாக்கியசாலியாவான்.

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

அவன் உங்களில் நற்கிரியை புரிவோர் யாரென்று பரீட்சிக்கவே ஹயாத்தையும் மவ்த்தையும் படைத்தான்.

(அல்குர்ஆன் 67:02)

மவ்த்து வருமுன் மறுமைக்காகத் தயார் பண்ணிக் கொள்ள வேண்டும். அதற்காக வாழ்நாள் நீடிப்பதை விரும்பவும் வேண்டும். நல்லமல்கள் என்பது இரண்டு நிபந்தனை களின் அடிப்படையில் கவனிக்கப்படும். ஒன்று மனத்தூய்மை எனும் இஃலாஸ், மற்றது நபியின் வழிமுறையை பின்பற்றல் எனும் இத்திபாஉ. இவ் விரண்டில் ஒன்று இல்லாதபோது அவ்விடயம் நல்லமலாக முடியாது. இஃலாஸ் இருந்து அது நபிவழிக்கு ஒத்ததாயினும் இஃலாஸ் இன்றேல் அதுவும் நல்லமலாகாது.

قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا، الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا

“கருமத்தில் நஷ்டமடைந்தவர்களை நாம் உங்களுக்கு அறியத்தரட்டுமா? என்று நபியே நீர் கேளும், அவர்கள் யாரென்றால் இவ்வுலக வாழ்க்கையிலே தவறான வழியில் முயற்சி செய்து கொண்டு தாங்கள் மெய்யாகவே நல்ல காரியங்களைச் செய்வதாக எண்ணிக் கொள்வர்.”

(அல் குர்ஆன் 18:103, 104)

 ஜனாஸாவும் அதன் விதிமுறைகளும்

எனவே, நாம் எமது எல்லாச் செயல்களை யும் சன்மார்க்க வழியொட்டியதாக நிறைவேற்றக் கடமைப் பட்டிருக்கின்றோம். மறுமையில் நஷ்டப்படாதிருக்க அதுவே வழியாகும். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

நோயுற்றால் மருந்து செய்க. “எல்லா நோய் களுக்கும் மருந்துண்டு. எனவே நோய்க் குரிய மருந்து செய்தால் அல்லாஹ்வின் அருளால் சுகம் கிடைத்து விடும்.”

(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்).

இந்த நபிமொழி மூலம் நாம் மருந்து செய்வது அவசியமாகும் என்பது விளங்கு கின்றது. அதிலும் ஹறாம் கலவாது பார்த்துக் கொள்வது கடமையாகும். ஹறாமான பொருட்களை வைத்தியத்துக் குப் பயன் படுத்தலாகாது என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது போதனையாகும். ‘அல்லாஹ் உங்களுக்கு ஹறாமாக்கிய எப்பொருளிலும் உங்களது நோய்க்குரிய நிவாரணியை வைக்கவில்லை’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி).

எனவே ஹறாம் கலவாது, நோய்க்குப் பரிகாரம் செய்வது கடமையாகும். மரணப்படுக்கையில் இருப்பவர் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி ஷாபிஈ மத்ஹவின் பிரதான இமாம் அந்நவவீ (ரஹ்) அவர்கள் தம் “அல் அத்கார்” 121 வது பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

“மரணப்படுக்கையில் இருப்பவன் தன்னை அல்லாஹ் மன்னித்தருள வேண்டும் என்ற ஆசையோடும், மன்னிப்பான் என்ற நல்லெண்ணத்தோடும் இருக்க வேண்டும். கடைசி வார்த்தை வஸிய்யத் சொல்லும் போது தன்னுடைய ஜனாஸாவில் எந்த பித்அத்துகளும் நிகழாது தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும். தனக்காக துஆ செய்ய வேண்டும் எனவும் கூறுவது சிறந்ததாகும்.”

மரணப்படுக்கையில் உள்ளவர்களுக்கு ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை சொல்லிக் கொடுக்க வேண்டும். இறுதி வார்த்தையாக அது அமையும் வண்ணம் பல விடுத்தங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். மரணப் படுக்கையில் உள்ளவர்களுக்கு கேட்க குர்ஆன் ஓதுதல் சிறப்பாகும்.

ரூஹ் பிரிந்து விட்டால்

அவ்வாறு குர்ஆன் ஓதப்பட்டு அல்லது கலிமா சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது ரூஹ் பிரிந்தால் அதனை நிறுத்தி விட்டு மையித்தோடு சம்பந்தப்பட்ட வேலைகளைக் கவனிப்பதில் ஈடுபடுவது அவசியமாகும். அவையாவன:

بِسْمِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

என்று சொல்லி இரண்டு கண்களையும் கசக்கி மூடிவிட வேண்டும்.

2. கை, கால் போன்ற உறுப்புக்கள் மரத்து, குளிர்ந்து விடுமுன் அவற்றை உரிய இடத்தில் சேர்த்துவிடல் வேண்டும்.

(அதற்காக முன்னங்கைகளை புயம் வரையும் புயங்களை உடம்பின் பக்கங் களை நோக்கியும் மடிக்க வேண்டும். கீழ் கால்களைத் தொடை வரையும் தொடை களை அடி வயிற்றை நோக்கியும் மடிக்க வேண்டும்)

3. வாய் திறபடா வண்ணம் நாடிக்கட்டு போட வேண்டும்.

4. மரணித்தவர் அணிந்துள்ள ஆடை ஆபரணங்களை, கை, கால், பல் போன்ற செயற்கை உறுப்புக்கள் இருப்பின் அவற்றை நீக்கி மையத்தை ஒரு புடவை யால் மூடிவிட வேண்டும்.

5. வயிறு ஊதாமலிருக்க பாரமான ஒரு பொருளை வயிற்றுக்கு மேலால் வைத்துவிடல் வேண்டும்.

6. மையித்தை கட்டில் போன்ற ஒரு உயரமான இடத்தில் வைத்தல் வேண்டும்.

 ஒருவர் காலமாகிவிட்டால் அதுபற்றி அறிவிக்கலாமா?

காலமான செய்தியை அறிவிப்பது ஷரீஅத்தின் பார்வையில் பிழையான ஒன்றல்ல. ஓலமிட்டுப் பறை யடித்து மரண அறிவித்தல் செய்வது ஷரீஅத்தில் தடுக்கப்பட்டதாகும். அறிவித்தல் மூலம் மரணித்தவரின் உற்றார், உறவினர், நண்பர், நல்லோர், போன்றோர் ஜனாஸாவில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. நஜாஷி மன்னன், ஜஃபரிப்னு அபீ தாலிப் அப்துல்லாஹிப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரது வபாத் செய்தியை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள்.

(ஆதாரம்: பத்ஹுல் பாரி 3:116)

மரணச் செய்தி எட்டிய ஒருவர்

إنَّا ِللهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ

(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே வாழ்கின்றோம். மேலும் அவனிடமே மீளுவோம்) என்று சொல்லிக் கொள்வது ஸுன்னத்தாகும். இந்த வார்த்தையைப் பொதுவாக எந்த ஒரு ஆபத்தான வேளையிலும் சொல்வது ஸுன்னத்தாகும். அதே போல ஒருவர் காலமான செய்தியறிந்த நேரத்திலிருந்து அவரது கெடுதிகள் பற்றி பேசாதிருத்தல் வேண்டும். அவ்வாறு பேசுவது பாவமாகும். மையித்தைப் பார்க்கச் செல்கிறவர்கள் மையத்துக்காக துஆச் செய்வது ஸுன்னத் தாகும். “அல்லா ஹும்மஃபிர் லஹு, வர்ஹமுஹு, வர்பஃ தரஜதஹு பில் மஹ்திய்யீன்” (யா அல்லாஹ் இவரை மன்னித்துக் கிருபை செய்வாயாக இவரது அந்தஸ்த்தை நேர்வழி பெற்றோருடன் உயர்த்தி வைப்பாயாக) என்பன போன்ற துஆக்களை ஓதுவது ஸுன்னத்தாகும். இதனைச் செய்வோம். மையித்து வீட்டாருக்குத் தேவையான உணவு ஏற்பாடு களை பக்கத்து வீட்டார் அல்லது உறவினர் கள் மேற்கொள்வது ஸுன்னத்தாகும்.

ஜஃபர் இப்னு அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலமான போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தம ஸஹாப்பாக் களிடம் பின்வருமாறு கூறினார்கள்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ رَضِي اللهُ عَنْهُ قَالَ: لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ رَضِيَ اللهُ عَنْهُ حِيْنَ قُتِلَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ أَوْ أَمْرٌ يَشْغَلُهُمْ – (أخرجهُ الخمسة الا النسائي)

“ஜஃபரின் வீட்டாருக்கு உணவு சமைத்துக் கொடுங்கள். அவர்களை வேறொரு வேலை ஈடுபடுத்தியுள்ளது.” (ஆதாரம்:நஸஈ தவிர்ந்த ஏனைய ஸுனன்கள்)

எனவே உறவினர்கள் இக்கைங்கரியங் களைச் செய்வது சிறந்த ஒரு ஸுன்னத்தும் நல்லோரது நற்பண்புமாகும் என இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் நாமோ, வருவோர் போவோருக்குக்கெல்லாம் குளிர்பானங்கள் கொடுத்து வருகின்றோம். அது ஸுன்னத்துக்கு முற்றிலும் மாற்றமா னதாகும்.

 மையித்தைக் குளிப்பாட்டுவது யார்?

மையித்தைக் குளிப்பாட்டுபவர் மையித்தில் காணப்படும் குறைகளை சொல்லித் திரியக் கூடாது. ஜனாஸாவின் குறைகளை சொல்லித் திரிவது ஹராமாகும். ‘ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைக் குளிப்பாட்டி அதில் காணப் படும் குறைகளை மறைப்ப வனை 40 விடுத்தம் அல்லாஹ் மன்னிப்பான்.’ (அல்ஹாகிம்) என்ற ஹதீஸ் மூலம் ஜனாஸாவின் குறைகளை மற்றவர் களிடம் சொல்லித் திரியாதோரே அதனை குளிப்பாட்ட முற்பட வேண்டும் என்பது விளங்குகிறது. காலமானவருக்கு மிக நெருங்கியவர்களே ஜனாஸாவைக் குளிப் பாட்டுவதற்கு உரிமையும், தகைமையும் பெறுகின்றார்கள். ஜனாஸாவில் காணப் படும் எந்த ஒரு குறையும் வெளிப் படாமலி ருக்க சிறந்த முறை இதுவாகும். அதிலும் ஆண்களை ஆண்களும், பெண்களைப் பெண்களும் குளிப்பாட்ட வேண்டும். எனினும் கணவனை மனைவியும், மனைவி யைக் கணவனும் குளிப்பாட்டுவது அனுமதி க்கப்பட்ட தாகும். ஆண் மையித்தைக் குளிப்பாட்டுவதாயிருந்தால் மையித்தின் தகப்பன், பாட்டன், சகோதரன், தகப்பனின் சகோதரன் என்ற ஒழுங்குப்படி முற்படுத்தப் படுவர். மையித்தைக் குளிப்பாட்டுபவர் பின்வரும் ஒழுங்கு களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

1.   தன் கையைப் பழைய புடவையால் நன்கு சுற்றிக் கொள்ள வேண்டும்.

2.   மையித்தின் நகத்திலுள்ள அழுக்குகளை நீக்க வேண்டும்.

3.  மையித்தை ஒரு துணியால் மூடிக் கொண்டே தண்ணீர்  ஊற்ற வேண்டும்.

4.  மையித்தைக் குளிப்பாட்டுவதாக நிய்யத்துச் செய்ய

     வேண்டும்.

5.  வலது புரத்தை முற்படுத்த வேண்டும். அதிலும் வுழுவுடைய உறுப்புகளை முற்படுத்த வேண்டும்.

6.  ஒற்றைப்படக் கழுவுதல் வேண்டும்.

7.  இலந்தை இலை, சவர்க்காரம் போன்றவைகளை கழுவும்போது உபயோகித்தல் வேண்டும்.

8.  கடைசியாகக் கற்பூரம் கலந்து கழுவுதல் வேண்டும்.

9.  குளிப்பாட்டுபவர்கள் மாத்திரமே அங்கிருத்தல்   வேண்டும்.

10. பெண் மையித்தாயிருந்தால் அந்த மையித்தின் தலை      முடியின் பின்னல்களை அவிழ்த்துவிட்டு குளிப்  பாட்டி முடிந்த பின் மூன்று பின்னல் களை பின்னி பின்புறம் விட வேண்டும்.

11. வூழு செய்வித்தல் வேண்டும்.

குறிப்பு:

1.    குளிப்பாட்டும்போது அடிவயிற்றை இலேசாக அழுத்த வேண்டும். அதன் மூலம் வயிற்றினுள் தேங்கிக் கிடக்கும் மலசலம் போன்றன வெளியாகும். கர்ப்பிணிகளுக்கு இவ்வாறு செய்ய லாகாது.

2.    மையித்து வைக்கப்பட்டுள்ள இடத்திலும் குளிப் பாட்டப் படும் இடத்திலும் நறுமணம் கமழச் செய்ய வேண்டும். அதன் மூலம் துர்வாடையை எவரும் உணராதிருக்கச் செய்யலாம்.

3. புனித யூத்தத்தில் உயிர் நீத்த ஷஹீத் குளிப்பாட்டப்பட     மாட்டார்.

 கபன் செய்வதெப்படி?

ஜனாஸாவைக் குளிப்பாட்டி முடிந்ததும் வெள்ளைப் புடவையால் கபன் செய்யப்பட வேண்டும். “வெள்ளாடை அணிவியுங்கள் அதுவே சிறந்தது. அப்புடவையாலே உங்கள் ஜனாஸாக்களை கபன் செய்யுங் கள்.” (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)

ஜனாஸாவை முற்றாக மறைக்கக் கூடிய தாக கபன் அமைய வேண்டும். பட்டுப் புடவை ஆண் மையித்துக்கு ஹறாமாகும். கபனுக்கு விலையுயர்ந்த புடவைகள் உபயோகிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜனாஸாவைக் குளிப்பாட்டி ஈரம் வற்றிய பின் மூன்று நீண்ட துணிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிப் பரப்பி வைத்து மேலால் உள்ள புடவையில் ஜனாஸாவைக் கிடத்த வேண்டும். ஜனாஸாவை தக்பீர் கட்டி வைக்க வேண்டும் என்பதில்லை. கபன் செய்ய இலேசாவதற்கு கையை நீட்டி வைப்பதே நன்று. பின்னர் ஒரு புறமுள்ள புடவையை இழுத்து மறுபுறமாகச் சேர்ப்ப தோடு மறுபுறத்தி லுள்ளதை இடப் புறத் துக்கு இழுத்து, இப்படியாக மூன்று கபன் துணிகளையும் நன்கு இறுகச் செய்து கட்டி விட வேண்டும்.

கபன் புடவையினுள் கற்பூரம், அத்தர் முதலிய வாசனைப் பொருட்கள் வைப்பதும் கண், காது, மூக்கு, வாய் மறைவான இடம் முதலிய இடங்களிலும் ஸுஜூதுக் குரிய உறுப்புக்களிலும் கற்பூரம் கலந்து பஞ்சு வைப்பதும் ஸுன்னத்தாகும்.

1.    “ஆண் மையித்தின் கபன் மூன்று துண்டுகளைக் கொண்டதாகும். ரஸூலு ல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலைப்பாகையோ, கமிசையோ இன்றி மூன்று வெள்ளைப் புடவைகளில் கபனிடப் பட்டார்கள்”

(அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

2. பெண் மையித்திற்கு ஐந்து துண்டுகள் தேவை. அவை நீண்ட துணிகள் இரண்டும், சாரமும், கமீசும் முகமூடியு மாகும்.

(பத்ஹுல்பாரி 3;133 ஸுனன் அபீதாவூத் 3;200)

3. ஹஜ்ஜு, உம்றா செய்ய இஹ்ராம் கட்டிய ஒருவர் இஹ்றாமுடனே காலமானால் அதனுடனே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும். ஆணாயின் தலை மூடக் கூடாது. பெண் மையித்தாயின் முகம் மூடக் கூடாது. அத்தர் போன்ற வாசனைகளும் உபயோகிக்கக்கூடாது.

 ஜனாஸாவை சுமந்து செல்லல்

சகல ஈடேற்றமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஸஹாபாக்களையும் பின்பற்றுவதிலே தான் தங்கியுள்ளது.

“சப்தத்தோடும் நெருப்போடும் ஜனாஸா வைத் தொடரா தீர்கள்” (ஸுனன் அபீதாவூத் 3/203) என்று ரஸூலுல்லாஹி ஸல்லல் லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறி னார்கள். எனவே தான் உத்தம ஸஹாபாக் கள் ஜனாஸாவை சுமந்து செல்லும் போது அமைதியாக மௌத்துடைய நினைவோடு சென்றனர் என்று வரலாறு கூறுகிறது.

ஜனாஸாவின் ஒழுங்கு முறைகளைக் கூறிய ஷாபிஈ மத்ஹபின் பிரதான இமாமான அந் நவவி (ரஹ்) அவர்கள் தன் அல் அத்கார் 203 ம் பக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

“அறிந்து கொள்க! சரியானதும், தேர்ந் தெடுக்கப் பட்டதும், நம்முன்னோர் பின் பற்றியதுமான விடயம் யாதெனில் ஜனாஸாவோடு செல்லும்போது வாய்மூடி மௌனமாகச் செல்வதேயாகும். எனவே ஏதேனும் ஓதுவதன் மூலமோ திக்ர்கள் மூலமோ சப்தம் உயர்த்தப் படலாகாது. அதன் தாத்பரியம் தெளிவானதாகும். ஏனெனில் அது மனத்தை அடக்கி முழுச் சிந்தனையும் ஜனாஸாவோடு தொடர்பு படுத்த வல்லது. இத்தகைய சந்தார்ப் பங்களில் இதுவே வேண்டற்பாலதும், உண்மையுமாகும். இதற்கு மாறாக நடந்து கொள்ளும் பெரும்பான்மையோரைப் பார்த்து ஏமாறாதீர்” என்று கூறுகின்றார் கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தீஸையொட்டியே மேற்கண்ட விளக் கத்தை இமாமவர்கள் கூறியுள்ளார்கள் ஜனாஸாவைச் சுமந்து செல்கையில் அவசரமாக எடுத்துச் செல்வது ஸுன்னத்தான முறையாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَسْرِعُوا بِالْجِنَازَةِ فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ (متفق عليه)

“ஜனாஸாவை அவசரமாக எடுத்துச் செல்லுங்கள். நல்ல தொரு ஜனாஸாவாயின் நல்லதன் பால் அதனை முற் படுத்தியவர் களாவீர்கள். கெட்டதாயின் அதனை உங்கள் கழுத்திலிருந்து இறக்கி விட்டவர் களாவீர்கள்.”

(ஸஹீஹ் முஸ்லிம், ஸஹீஹுல் புகாரி)

ஜனாஸாவை சுமந்து செல்லும் வேலை ஆண்களுக் குரியதாகும். அவர்கள் ஜனாஸா வுக்கு முன்னாலும், அதனைச் சூழவும் நடந்து செல்லலாம். வாகனங்களில் செல்வோர், ஜனாஸாவுக்கு பின்னால் செல்ல வேண்டும். பெண்கள் ஜனாஸாவை சுமந்து செல்வதோ, வாத்தியக் கருவி இசைப்பதோ, மலர் வளையம் ஏந்திக் செல்வதோ தடுக்கப்பட்டனவாகும். முன்னர் கூறப்பட்டது போல் மௌத்தின் சிந்தனை யோடு அமைதியாக சுமந்து செல்வதே சரியான ஸுன்னத்தாகும்.

 ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கலாமா?

ஜனாஸா சுமந்து செல்லப்படுவதைக் காண்பவர் எழுந்து நிற்பது விருப்பத்திற்குரி யதாகும் என்பது இமாம் அந் நவவீ (ரஹ்) அவர்களின் அபிப்பிராயமாகும். அதே நேரம் இவ்விடயம் பற்றி வந்துள்ள ஹதீஸ் களில் ஜனாஸாக்களுக்காக எழும்பி நிற்கு மாறு ரஸூலுல் லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கட்டளை யிட்டதாகவும், பின்னர் அவ்வாறு எழும்பாது உட்காருமாறு பணித்தார்கள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆதலால், விரும்பியவர்கள் எழுந்து நிற்க லாம். விரும்பாத வர்கள் விட்டு விடலாம் என்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜனாஸா வொன்று சுமந்து செல்லப் படுவதைக் காண்பவர்:

سُبْحَانَ الْحَيّ الَّذِىْ لاَ يَمُوْتُ

“மரணமின்றி நிலைத்திருக்கும் நித்தியனான அல்லாஹ் வைத் தூய்மைப் படுத்துகின் றேன்” என்று கூறுவது ஸுன்னத்தாகும்.

 ஜனாஸாத் தொழுகை

ஜனாஸாத் தொழுகை நடத்தும் உரிமை - தொழுவிக்கும்

பொறுப்பு மையத்தின் நெருங்கிய வாரிசுக்கு ரியது. மையத்தின் தகப்பன், பாட்டன், சகோதரன், தந்தையின் சகோதரன், சாச்சா வின் மகன் என்ற ஒழுங்குப் பிரகாரம் தொழுகையை நடாத்த உரிமை பெறுவர். மேற்கூறப் பட்ட எவருமில்லாத போது வேறு யாரும் தொழுகையை நடாத்த முற்படுத்தப்படுவர். ஆனால், காலமானவர் தனது ஜனாஸாத் தொழுகையை நடாத்த எவரையும் வஸிய்யத் செய்திருந்தால் அவரே தொழுவிக்க முதற் தகுதி பெறுவார்.

ஜனாஸாத் தொழுகைக்கும் ஏனைய தொழுகைகளுக்கு முரிய சர்த்துக்களான

1.   சுத்தமாயிருத்தில்.

2.   அவ்ரத்தை மறைத்தல்.

3.   கிப்லாவை முன்னோக்குதல்

4.   சக்தியுடையோர் நின்று தொழுதல் என்பன கவனிக்கப்படும்.

இடமின்மை காரணமாக நெருங்கி நிற்பது குற்றமாகாது.

அவ்வாறே தொழுகைக்கு நிற்பவர்கள் மூன்று ஸப்பு (அணி)களாக நிற்பது விரும்பத்தக்கதாகும். “எந்தவொரு முஸ்லி மின் ஜனாஸாவுக்கேனும் முஸ்லிம் களில் மூன்று ஸப்புக்கள் நின்று தொழுகையை நிறைவேற்று வார்களோ அந்த ஜனாஸா வுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு விதியாகி விடும்” என்று அல்லாஹ்வின் தூதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: மாலிகுப்னு ஹூபைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆதாரம்: அபூதாவூத்)

மூன்று ஸப்பு நிற்க வேண்டும் என்பதன் மூலம் அதிகம் பேர் இத்தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே வலியு றுத்தப்படுகின்றது. அதுவல்லாமல் குறைந்த தொகையினர் மூன்றாகப் பிரிந்து நிற்க வேண்டும் என்பதில்லை. பெண் ஜனாஸா வாயின் அந்த ஜனாஸாவின் நடுப்பகுதிக்கு நேராகவும் ஆண் ஜனாஸாவாயின் தலைக்கு நேராகவும் இமாம் நிற்க வேண்டும். “ரஸூலுல்லாஹி ஸல்லல்லா ஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆண் ஜனாஸாவின் தொழுகையில் தலைக்கு நேராகவும், பெண் ஜனாஸாவின் தொழுகை யில் நடுப்பகுதிக்கு நேராகவும் நின்றனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், ஆதாரம்: ஸுனன் இப்னு மாஜா)

 இத்தொழுகை நான்கு தக்பீரைக் கொண்டதாகும்.

“ஜனாஸாவுக்குரிய கடமையான தொழுகையை நிறை வேற்றுகின்றேன் என்ற நிய்யத்தோடு அல்லாஹு அக்பார் என்று தக்பீர் சொல்ல வேண்டும். முதலா வது தக்பீருக்குப் பிறகு ஸூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும். இரண்டாவது தக்பீருக்குப் பிறகு ஸலவாத்து ஓதுதல்.

(அத்தஹிய்யாத்தில் ஓதப்படும் ஸலவாத்து ஏற்ற முடையது)

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ فِي العَالَمِيْنَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

மூன்றாவது தக்பீருக்குப் பிறகு, ஜனாஸா வின் பாவ மன்னிப்புக்காக துஆக் கேட்டல்.

اللَّهُمَّ اغْفِرْ لَهُ، وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

யா அல்லாஹ்! இந்த மையித்தை மன்னித் துக் கிருபை செய்வாயாக! (கப்ரில்) உன் தண்டனையிலிருந்து காத்தருள்வாயாக. அவரது தவறுகளைப் பொறுத்தருள் வாயாக  அவருக்குரிய உபகாரத்தை கண்ணியமாக ஆக்குவாயாக. அவரது கப்ரை விசாலப் படுத்துவாயாக. வெள்ளாடைகள் அழுக்கி லிருந்து தண்ணீர், பனி, முதலிய வற்றால் தூய்மைப்படுத்துவது போல் அவரது பாவங் களை விட்டும் தூய்மைப்படுத்துவாயாக. அவரது வீட்டை விட சிறந்த வீட்டையும் அவரது மனைவியை விட சிறந்த மனைவி யையும் கொடுத்தருள்வாயாக. அவரை சுவனம் நுழையச் செய்து கப்ரின் வேதனை, நரகின் தண்டனை என்பவற்றிலிருந்து காத்தருள் வாயாக.”

اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ اللَّهُمَّ لاَ تَحْرِمْنَا اَجَرَهُ وَلاَ تُضِلَّنَا بَعْدَهُ

“யா அல்லாஹ்! எம்மில் வாழ்வோர், வபாத் தானோர், இங்கு சமூகமளித்தோர், சமூகம ளிக்காதோர், சிறியோர், பெரியோர், ஆண், பெண் ஆகிய எல்லோரையும் மன்னித்தருள் வாயாக. யா அல்லாஹ் எம்மில் எவரையும் வாழச் செய்வாயாயின் இஸ்லாத்திலே வாழ வைப்பாயாக. எவரையேனும் மரணிக்கச் செய்தால் ஈமானோடு மரணிக்கச் செய்வா யாக. (அவரது இழப்புக்காக பொறுமை கொள்ளும்) எமது கூலியைத் தடுத்து விடாதே. அவரது மரணத்தின் பின் நாம் வழி தவறிவிடாது காத்தருள்வாயாக!”

 நாலாவது தக்பீருக்குப் பிறகு ஸலாம் சொல்லல்.

இன்று நம்மில் பலரும் ஜனாஸாவோடு பள்ளி வரை வந்த பின்பும் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ளாதிருப்பது கண்டிக்கத் தக்கதாகும். ஜனாஸாவில் கலந்து கொள்வதன் நோக்கம் காலமான வருக்கு பாவமன்னிப்புக் கேட்பதாகும் என்பதைக் கவனத்தில் எடுக்கும் எவரும் இந்தத் தவறைச் செய்ய முற்பட மாட்டார் கள்.

 தாமதித்து வந்தவர் தொழுவது எப்படி?

ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட பின்பு ஜனாஸாவுக்கு சமூகமளிப்போர் கப்ருக்கு அண்மையில் சென்று தனது கடமையான ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றிக்

கொள்ளலாம். (அல் மஜ்மு: 05/249)

மதீனாவில் பள்ளியைப் பெருக்கி சுத்தம் செய்து வந்த நீக்ரோ பெண்ணொருத்தி காலமாகி நல்லடக்கம் செய்யப் பட்டாள். அவளைக் காணாதிருந்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அப்பெண் காணப்படாததன் காரணம் பற்றி விசாரித்தார்கள். அப்பெண் காலாமானதாகக் கூறப்பட்டது. அப்போது ஏன் நீங்கள் எனக்கு அறிவித்திருக்கக் கூடாது? என்று நபி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேட்டார்கள். சிறியதொரு விஷய மெனக் கருதியே ஸஹாபாக்கள் அதனை அறிவிக்க வில்லை என தெரிய வந்தது. பின்னர் அந்த ஜனாஸா அடக்கப்பட்ட இடத்தைக் கேட்டறிந்து அவ்விடத்துக்குச் சென்று, நின்று தொழுதுவிட்டு பின்வரு மாறு சொன்னார்கள்: “நிச்சயமாக இந்தக் கப்ருகளில் உள்ளோர் மீது இருள் மண்டி யுள்ளது. நான் அவர்கள் மீது தொழுத இத்தொழுகை காரணமாக அல்லாஹ் அவர் களுக்கு ஒளியூட்டியுள்ளான் என்றார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

எனவே ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அடக்கப் பட்ட பின் வருவோர் கப்ரடி சென்று தவறிப் போன ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றலாம் என்பதை அறிய வேண்டும்.

 அடக்கம் செய்வதெப்படி?

முஸ்லிம்களின் ஜனாஸா முஸ்லிம் கப்ருஸ்தானத்திலே தான் அடக்கப்பட வேண்டும். முஸ்லிமல்லாதோர் முஸ்லிம் மக்பரா (கப்ருஸ்தானம்)க்களில் அடக்கப் படக் கூடாது. மையித்தை சுமக்கும் சக்தியுடையவர்களே கப்ரில் இறங்க வேண்டும். பெண் மையித்தை கப்ரில் இறக்குவதாயிருந்தால் கூடுமான வரை திருமண விலக்கானவர்களே (மஹ்ரம்) அவ்வேலைகளில் ஈடுபட வேண்டும். பெண் ஜனாஸாவாயிருந்தால் ஜனாஸாவைக் கப்ரினுள் இறக்கும்போது ஒரு புடவையால் மேற்புறமாக கபுரோடு சேர்த்தாற் போல் மறைப்புத் துணி பிடித்துக் கொள்வது  மிகவும் சிறப்புடையதாகும். ஜனாஸாவைக் கப்ரினுள் இறக்குவதற்கு மிகவும் நெருங்கிய உறவினர் களே அருகதையுடையவர்கள் ஆவார். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹவஸல்லம் அவர்களின் ஜனாஸா வை நல்லடக்கம் செய்வதற்காக ஹஜ்ரத் அலி, அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு போன்றவர்களே கப்ரில் இறங்கினார்கள். மனைவியின் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் கணவன் ஈடுபடல் சிறந்தது. மையித்தைக் கப்ரினுள் வைக்கும்போது

بِسْمِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

என்று கூறுவதோடு மையித்தை  வலப் புறமாக கிப்லாவை நோக்கிய வண்ணம் கப்ரில் வைக்க வேண்டும். ஜனாஸா நல்ல டக்கம் செய்யப் பட்டபின் கப்ருக்கு அண்மையில் உள்ளோர் தம் இரு கைகளா லும் மூன்று பிடி மண் போடுவது விரும்பத் தக்கதாகும்.

“ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஜனாஸா மீது தொழுகையை நிறைவேற்றி விட்டு கப்ரடியே வந்தார்கள். பின் தலைப்புறமாக மூன்று பிடி மண் போட்டார்கள்”.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆதாரம்: இப்னு மாஜா 1;499)

மையித் அடக்கப்பட்ட பின் அக்கப்ரை ஒரு சாணளவு

உயர்த்தி மட்டப்படுத்துவதும் ஸுன்னத்தாகும்.

(ஆதாரம்: அபூதாவூத் 3;215)

மேலும் கப்ரின் மீது அடையாளமாக கல்லொன்றை வைப்பதும் ஸுன்னத்தாகும். உஸ்மானுப்னு மழ்ஊன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலமானபோது அவருடைய கப்ரில் ஒரு கல்லை அடையாள மாக வைக்கும்படி (ஸல்) அவர்கள் கூறினார் கள். அக்கல் பாரமான தாயிருந்த போது அதனை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சுமந்து வந்து கப்ரின் தலைப் புறமாக வைத்தார்கள். பின்னர், இதன் மூலம் நான் எனது சகோதரனின் கப்ரை அறிந்து கொள்வேன். எனது குடும்பத்த வர்களில் எவரேனும் காலமானாலும் இங்கே அடக்கம் செய்வேன் என்றார்கள்.

(அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

ஆதாரம்: இப்னு மாஜா 1/498)

அடக்கப்பட்ட கப்ரின் மீதோ, கபுரடியிலே நெருப்பு, சந்தனக் குச்சு முதலியவை கொளுத்துவது கூடாது. அதேபோல் சுண்ணாம்பு தடவுதல், கட்டடம் கட்டுதல் ஏதேனும் எழுதுதல் என்பன தவிர்க்கப்பட வேண்டும்.

(ஆதாரம்: இப்னுமாஜா 1/498)

ஏனெனில் இவை கப்ரடியிலே செய்யப்படக் கூடாத வையாகும். ஹறாமாகும்.

 ஒன்றுக்கு மேற்பட்ட ஜனாஸாக்கள் இருப்பின் என்ன செய்யலாம்?

யுத்தம், வெள்ளம், வேறும் அனர்த்தம் காரணமாக மரணிப்போரின் எண்ணிக்கை சில வேளை கூடுதலாக இருப்பதைக் காண முடிகின்றது. அவ்வேளை அவர்கள் மீது தொழுகை நடத்துவதும் அடக்கம் செய்வ தும் சிரமமாயிருக்கலாம். இவ்விடயத்தில் நாங்கள் அலட்டிக் கொள்ளத் தேவை யில்லை. ஏனெனில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்  களின் காலத்தில் பல ஜனாஸாக்கள் கொண்டு வரப்பட்டால் முதலில் ஆண் மையித்தும் அதனையடுத்து பெண் மையித்துமாக வைத்துத் தொழுகை நடத் தப்பட்டது என்ற ஹதீஸ் ஸஹீஹுல் புகாரி, ஸுனனுன் நஸாஈ, முஸ்னத் அஹ்மத் போன்ற கிரந்தங்களில் பதிவாகி யுள்ளது. தனித்தனி கப்ரு தோண்ட முடியாத போது நீண்ட கிடங்கைத் தோண்டி ஜனாஸாக்கள் அடக்கப்படுகின்றன. (உலமாக்களைக் கண்டு இது பற்றி விரிவாக அறிந்து கொள்ளவும்).

 குறைமாதப் பிள்ளை பற்றிய சட்டம்

சில சமயங்களில் குறைமாதப் பிரசவங்கள் நிகழ்வ துண்டு. அத்தகைய நிலைமைகளில் எவ்வாறு நடந்து கொள்வதென விளங்காது நம்மில் பலரும் திண்டாடுவதுண்டு. அது பற்றிய விளக்கத்தையும் நாம் அறிதல் அவசியமாகும். அவ்வாறு பிரசவிக்கும் குறைமாத சிசு, பிறக்கும் போதே ஆட்ட அசைவுகள், சப்தமிடல் முதலியவை காரணமாக உயிரோடிருந்தாகத் திட்டமா னால் ஜனாஸாவுக்குரிய சகல கடமைகளும் நிறை வேற்றப்பட வேண்டும். குறைமாத சிசுவுக்கு தொழுகை நடத்தப்படல் வேண்டும். அதன் பெற்றோருக்கு பாவ மன்னிப்பு, அருள் என்பன கிடைக்க பிரார்த்திக்க வேண்டும் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.”

(அறிவிப்பவர்: முகீரதுப்னு ஷஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம்: அபூதாவூத் 3/ 205)

பின் வருவோர் மீது தொழுகை நடாத்தப்பட மாட்டாது.

1. இஸ்லாத்தை எதிர்த்துப் போராடும் காபிர்களோடு யூத்தத்தில் ஈடுபட்டு உயிர் பிரிந்தவர் ஷஹீத் எனப்படுவார். இத்தகையவர் மீது குளிப்போ தொழுகையோ நடாத்தப்பட மாட்டாது.

2. நான்கு மாதத்தை அடைந்தும் மரித்துப் பிறந்த சிசு.

குறிப்பு: நான்கு மாதத்துக்கு குறைந்த காலப்பகுதியில் வெறும் சதைப் பிண்டமாக வெளிவரக் கூடியதைப் புதைத்து விடுவது கடமையாகும்.

(உம்ததுஸ்ஸாலிக்இ அல்பிக்ஹுல் இஸ்லாமி 2: 506)

 தல்கீன்

ஜனாஸா அடக்கப்பட்ட பின் அந்த மையித்துக்காக அங்குள்ளவர்கள் பிழை பொறுக்கத் தேட வேண்டும் என ஸஹீஹான ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. இன்று சம்பிரதாயத்திலுள்ளவாறு கபுரின் தலைப்புறமாக ஒருவர் குந்திக் கொண்டு ஓதப்படும் தல்கீன் ஸஹீஹான ஹதீஸ் மூலம் நிரூபிக்கப்படவில்லை. ஸஹாபாக் களில் எவரேனும் ஓதியதற்கான ஸஹீஹான ஆதாரமும் கிடையாது. அதனால்தான் இமாம் ஷாபிஈ அவர்களும் ஜனாஸாவின் சட்டத்திட்டங்களைத் தெளிவாகக் கூறிவிட்டு தல்கீன் பற்றிப் பேசாது விட்டார்கள் போலும். தற்போது நடை முறையிலுள்ள தல்கீன் ஓதப்படுவது முஸ்தஹப்பு (அல் அத்கார் 138ம் பக்கம்) என்று கூறிய இமாம் அந்நவவீ (ரஹ்) அவர்களே தல்கீன் பற்றிய ஹதீஸ் ழஈபான (பலவீனமான) ஹதீஸ் என்று கூறுகிறார் கள். அத்தகைய ஹதீஸ்களை சட்டமியற்று வதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது என அல் மஜ்மூஃ முதலாம் பாகம் 59 ம் பக்கத்தில் அவர்களே கூறியூள்ளனர். ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த இமாம் இஸ்ஸுப்னு அப்திஸ் ஸலாம் (ரஹ்) அவர்கள் தல்கீன் என்பது பித்அத் என்று கூறியுள்ளார்கள். (கிதாபுல் பதாவா - இமாம் இஸ்ஸுப்னு அப்திஸ்ஸலாம் பக்.91 ஷரஹுல் மஹல்லீ ஹாஷியது உமைரா 1:353)

மேற்கண்ட விளக்கங்கள் மூலம் தல்கீன் ஓதுவது எவ்வகையிலும் ஸுன்னத் என்று கூறப்பட முடியாது என்பதை விளங்க முடி கின்றது. ழஈபான ஒரு ஹதீஸை வைத்து நாம் பிரச்சினைப்படுவதை விடவும் ஸஹீஹான ஹதீஸ்களின் பக்கம் எமது கவனத்தை சற்றுத் திருப்பினால் கபுரடியில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய முடியும்.

1. உஸ்மானுப்னு அப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மையத்தை அடக்கி முடிந்து விட்டால் அங்கு சிறிது தங்கி நின்று உங்கள் சகோதரருக்குப் பிழைபொறுக்கக் கேளுங்கள். உறுதியான வார்த்தையை அவருக்கு வழங்குமாறு கேளுங்கள். இப்போது அவர் விசாரிக்கப் படுகின்றார் என்று சொல்வார்கள். (ஸுனன் அபீதாவூத் 3:215)

2. அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். பகீஉல் கர்கத் அடக்க ஸ்தலத்தில் ஜனாஸாவொன்றில் நாம் கலந்து கொண்டோம். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அங்கு வந்து குந்தினார்கள். நாமும் குந்தியிருந்தோம். அவர்களிடம் ஒரு தடியுமிருந்தது. தலையை சிறிது தாழ்த்திய அவர்கள் அந்தத் தடியால் பூமியைக் கிளறினார்கள். பின்னர், உங்க ளில் எவருக்கும் அவரது சுவன அல்லது நரகலோக இடமும், அவர் பாக்கியவானா

அல்லது துற்பாக்கியவானா என்பதும் (அல்லாஹ்விடம்) எழுதப்பட்டுள்ளது (என்று கூறிப்) போதனைச் செய்தார்.

அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! எம்மைப் பற்றி எழுதப்பட்டுள்ள ஏட்டை நம்பி அமல் செய்யாது இருந்து விடட்டுமா? என்று கேட்டார். அதற்கு, யார் பாக்கியவான்களோடு பதியப்பட்டுள் ளாரோ அவர் பாக்கியவான்களின் அமல் களின் பால் செல்வார். துர்பாக்கியவான் களோடு எழுதப்பட்டவன் துர்பாக்கிய வான்களின் செயல்கள் பால் செல்வான் என்று கூறி, பின்வரும் வசனத்தை ஓதினார்கள். (உங்களில்) எவர் தர்மம் செய்து (அல்லாஹுவுக்குப்) பயந்து (இம் மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களை (நல்ல தென்றே) உண்மையாக்கி வைக்கின் றாரோ அவருக்கு (சுவனத்துக்குரிய நேரிய) வழியை நாம் எளிதாக்கித் தருவோம். எவர் உலோபித்தனம் செய்து (அல்லாஹ் வையும்) பொருட்படுத்தாது இம்மார்க்கத்தி லுள்ள நல்ல காரியங்களைப் பொய்யாக்கி வைக்கின்றாரோ அவருக்கு கஷ்டத்துக் குரிய (நரகத்தின்) வழியைத் தான் நாம் எளிதாக்கி வைப்போம். அவன் (நரகத்தில்) விழும்போது அவனுடைய பொருள் அவனுக்கு யாதொரு பயனுமளிக்காது.” என்ற (அல்குர்ஆன் 92:5 -11 ) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

(ஸஹீஹுல் புகாரியின் விரிவுரை பத்ஹுல்பாரி 3:225)

மேலே கூறப்பட்ட ஹதீஸ்கள் எல்லாம் கப்ரில் வைக்கப்பட்டவர்களுக்கு பிழை பொறுக்க துஆச் செய்ய வேண்டும் என்பதை விளக்குகின்றன. மேலும் குழுமி யிருப்போருக்குப் பயனுள்ள போதனை யேதும் செய்வதன் அவசியத்தையும் விளக்குகின்றது. அதனால் தான் இப்னு ஹஜரினில் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் ‘கபுரடியில் போதனை செய்வதும் கபுரைச் சூழ நண்பர்கள் அமர்வதும்’ என்று தம் பிரபல்யமிகு கிரந்தம் பத்ஹுல் பாரியில் ஒரு தலைப்பிட்டுள்ளார்கள்.

எனவே மையித்தை அடக்கிய பின் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து விளங்க முடிகின்றது. இன்று சம்பிரதாயமாகவுள்ள நடைமுறை, ஸஹீஹான ஹதீஸ் மூலம் நிரூபனமான தல்ல என்பதை நாம் விளங்க வேண்டும். அனுதாபம் தெரிவித்தல் ஒரு முஸ்லிமின் இன்ப துன்பங்களில் மற்ற முஸ்லிம்கள் பங்கு கொள்வது மிக விரும்பத்தக்கதாகும். ஆதலால் தான் ஒரு முஸ்லிம் நோயுற்றால் அவனை நோய் வினவுவதும் ஜனாஸாவில் கலந்து கொள்வதும் மற்ற முஸ்லிம் மீது கடமை எனக் கூறப் பட்டுள்ளது. எனவே காலமான ஒரு முஸ்லிமின் மனைவி, மக்கள், உற்றார் ஆகியோருக்கு மற்ற முஸ்லிம்கள் ஆறுதல் கூறுவது ஸுன்னத்தாகும். அனுதா பம் தெரிவிக்க மற்றவர்கள் வருவர் என ஜனாஸா வீட்டவர் எதிர்பார்த்திருக்கலா காது. அனுதாபம் தெரிவிக்கச் செல்வோர்

اَعْظَمَ اللهُ أَجَرَكَ وَاَحْسَنَ عَزَآءَكَ وَغَفَرَ لِمَيِّتِكَ

அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தந்தருள்வா னாக உங்கள் கவலையைப் போக்குவா னாக. மேலும் உங்கள் காலஞ் சென்றவரை மன்னிப்பானாக என்று கூறி மையத்து வீட்டவருக்கு ஆறுதல் கூற வேண்டும். அவர்களுக்குக் கை கொடுத்து ஆறுதல் கூறும் போது மேற்கண்டவாறு ஓதுவது ஸுன்னத்தாகும்.

 இத்தாவும் ஹிதாதும்

மூன்று தினங்களுக்கு மேல் ஒரு முஸ்லிமின் மறைவுக்காக காலமானவரின் மனைவி தவிர்ந்த எவரும் (துக்கம்) ஹிதாது அனுஷ் டித்தலாகாது. கணவனை இழந்த பெண் நாலு மாதம் பத்து நாள் இத்தா இருக்க வேண்டும். ‘அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசிக்கும் எந்தவொரு பெண்ணும் (கணவனை இழந்தவரைத் தவிர) மூன்று தினங்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கலாகாது. (கணவனையிழந்த) அவள் நான்கு மாதமும் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும்" என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள். ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)

கணவனை இழந்தவரின் இத்தா பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடு கின்றது.

1. உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டும் மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் 10 நாட்கள் எதிர்பார்த்திருக் கவும். (அல் குர்ஆன் 2:234)

2. கர்ப்பஸ்திரீகளுக்கு அவர்களுடைய (இத்தாவின்) தவணை தாம் பிரசவிக்கும் வரையிலிருக்கின்றது. (அல் குர்ஆன் 65:04)

இத்தா ஏன் என்று திட்டமான நியாயங்கள் கூறப்பட முடியாது. அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிதல் - தஅப்புதீ என்றே நாம் விளங்க வேண்டும்.

 ஸியாரத் செய்யும் முறை என்ன?

மையித்து அடக்கம் செய்யப்பட்டு முடிந்த பின் அதற்கண்மையில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் நின்று கொண்டு ‘உங்கள் சகோதரருக் குப் பிழை பொறுக்கப் பிரார்த்தனை செய்யுங்கள். தவ்ஹீதுக் கலிமாவில் நிலை பெறவும் கேளுங்கள். தற்போது அவர் விசாரிக்கப்படுகின்றார்’ எனக் கூறுவார்கள்.

(அறிவிப்பவர்: உஸ்மானிப்னு அப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆதாரம்: அபூதாவூத் 3:215)

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தாயின் அடக்க ஸ்தலத்தை ஸியாரத் செய்த போது அவ்விடத்தில் அழுதார்கள். அன்னாரைச் சூழ்ந்திருந்தவர்களும் அழுதனர். பின்னர் அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி, எனது தாயாரின் பிழை பொறுக்கத் தேட அல்லாஹ்விடம் அனுமதி கேட்டேன். அவன் அதனை அனுமதிக்கவில்லை. அவரின் அடக்கஸ்தலத்தைத் தரிசிக்க அனுமதி கேட்டேன். அதனை அனுமதித் தான். எனவே கப்ருகைளத் தரிசியுங்கள். அது உங்களுக்கு இம்மையை வெறுத்து மறுமையை நினைவு படுத்தச் செய்யும் என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லஹு அன்ஹு அவர்கள், ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 08/45 - இப்னு மாஜா)

இதன் மூலம் கப்ருகளை ஸியாரத் செய்வது ஸுன்னத் என்பது விளங்கக் கிடைக்  கின் றது. அங்கு அடக்கப் பட்டோருக்கு பாவ மன்னிப்புக் கோரவும், மரணத்தைப் பற்றிய எண்ணத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஸியாரதுல் குபூர் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறல்லாமல் தேட்டங்கள் நிறைவேறக் கேட்கவோ, நேர்ச்சை நிறைவேற்றவோ ஸியாரத் செய்வது சன்மார்க்கத்தில் தடுக்கப் பட்டதாகும் (ஹறாமாகும்). ஸியாரத் செய்யச் செல்பவர்கள் பின்வருமாறு சொல்ல வேண்டும்.

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ تَعَالىَ بِكُمْ لاَحِقُوْنَ

முஃமின் கூட்டத்தவரே உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக. நாங்களும் இன்ஷா அல்லாஹ் உங்களை வந்தடைவோம்.

(ஆதாரம்: ஸுனன் அபீதாவூத், நஸாஈஇ இப்னுமாஜா)

கப்ராளிகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்பதற்கன்றி அங்கு வேறு நோக்கங்களோடு செல்வது கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

 மவ்த்தின் பின் பயனளிப்பவை எவை?

எமது ஷரீஅத்தின் அடிப்படைகளான அல்குர்ஆனும், அல் ஹதீஸும் அங்கீகரித்த எல்லா வழிகளும் மையித்துக்குப் பயனளிப் பவையாகும். “மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்திக்கும் நல்ல பிள்ளை என்பனவே பயனளிக்கும்” என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல் லாஹு அன்ஹு ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 3;1255)

மரணித்தோருக்குப் பயனளிப்பவை பற்றி ஸுனன் இப்னு மாஜா எனும் ஹதீஸ் கிரந்தத்தில் பின்வருமாறு காணப்படுகின்றது.

01. ஒரு முஃமின் காலஞ் சென்றால் அவனைச் சென்றடையும் நற்கருமங்களா வன:

1. அவன் போதித்த கல்வி,

2. அவன் விட்டுச் சென்ற நன்னடத்தை யுள்ள பிள்ளை,

3. அவன் விட்டுச் சென்ற குர்ஆன்,

4. அவன் கட்டிய பள்ளிவாசல்,

5. வழிப்போக்கருக்கெனக் கட்டிய தங்கும் சத்திரம்,

6. அவன் வெட்டிய ஆறு,

7.அவன் சுகதேகியாக இருக்கையில் சொந்த செல்வத்தி லிருந்து செய்த தர்மம்.

இவைகளே ஒருவனது மரணத்தின் பின் வந்து சேரும் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆதாரம்: இப்னுமாஜா 01:88)

02. ஒருவன் ஆரம்பித்து வைத்த நற்கிரியை யும் அவனது மரணத்தின் பின் பயன ளிக்கும்:

இஸ்லாத்திலே நல்ல கருமம் ஒன்றை யார் ஆரம்பித்து விடுவாரோ அவருக்கு அக்கரு மத்தின் கூலியும் அதனைச் செய்து வருவோ ரது கூலியுமுண்டு. அவர்களின் கூலியில் எந்தவொன்றும் குறைவுற மாட்டாது என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பர்: ஜரீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 02: 705 ஸுனனுத்தாரிமீ 1;130)

03.மரணித்தவருக்காகச் செய்யும் தர்மமும் அம்மரணித்த வருக்கே பயனளிக்கும்;

“ஒருவர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எனது தாயார் காலமாகி விட்டார். அவருக் காக நான் தர்மம் செய்தால் அது அன்னாருக் குப் பயனளிக்குமா? என்று கேட்டார். ஆம்! ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்று பதில் கூறினார்கள்.”

(அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி - பத்ஹுல் பாரி 03:25)

04. தண்ணீர் வசதி செய்து கொடுப்பது பயனளிக்கும்:

ஸஃதுப்னு உபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், (தன்னுடைய தாயாரின் வபாத் குறித்து) அல்லாஹ்வின் தூதரே! ஸஃதின் தாயார் காலமாகிவிட்டார். அவருக்காகச் செய்வதற்கேற்ற தர்மம் யாது? என்று  வினவினார். அதற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், ‘சிறந்த தர்மம் தண்ணீர்’ என்றார்கள் எனவே அவர் ஒரு கிணறு தோண்டி தர்மமாக விட்டார். (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)

 05. ஸதகா பயனளிக்கும்:

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, எங்கள் தகப்பனார் வஸிய்யத் செய்யாத நிலையில் சில சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார். அவருக்காக நான் ஸதகா செய்தால் பயன ளிக்குமா? என்று கேட்டார். ஆம் என்று பதில் கூறினார்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆதாரம்: நஸாஈ 06:252 இப்னுமாஜா 02: 906)

06. ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, எனது தாயார் வஸிய்யத் செய்யாத நிலையில் திடீரெனக் காலமானார்கள். பேசும் சந்தர்ப்பம் கிடைத்திருப்பின் தர்மம் செய்திருப்பார் என நினைக்கி றேன். நான் அவருக்காக ஏதும் தர்மம் செய்தால் அது அவருக்கு பயனளிக்குமா? என்று கேட்டார். “ஆம்” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

(அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 03:696)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லா ஹு அன்ஹு அவர்கள், ஆதாரம் : நஸாஈ 06:252)

07. துஆ பயனளிக்கும்:

மரணித்தவருக்காக ஏனைய முஸ்லிம்கள் கேட்கும் துஆவும் பயனளிக்கும். ஆதலால் தான் பின்வரும் துஆவை அல்குர்ஆன் எமக்குப் போதித்துள்ளது. அவர்களுக்குப் பின் வந்தவர்கள் “எம்மிறைவனே! எம்மையும் மன்னித்து எமக்கு முன் ஈமானோடு மரணித்த எமது சகோதரர்க ளையும் மன்னித்தருள்வாயாக" என்று கூறினர். (அல் ஹஷ்ர் 59:10) ‘நீங்கள் ஜனாஸாத் தொழுகைக்காக நின்றால் தூய்மையோடு பிரார்த்தனை புரியுங்கள்” என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆதாரம்: அபூதாவூத் 03:210)

08. காலமானவரைச் சேர்ந்து நடந்தோ ரோடு நல்ல முறையில் உறவு வைத்துக் கொள்ளுதல் பயனளிக்கும்.

பனூ ஸலமா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோர் இருவரும் காலமானதன் பின்பு நான் நிறை வேற்ற வேண்டிய கடமைகள் ஏதுமுண்டா?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம் காலமான

1. அவர்கள் மீது ஜனாஸா தொழுவது,

2. அவ்விருவருக்காகவும் பிழை பொறுக்கத் தேடுவது,

3. மவ்த்தின் பிறகு அவ்விருவரும் செய்த வாக்கு, உடன் படிக்கைகள் ஏதுமிருப்பின் அதனை நிறைவேற்றுவது,

4. அவர்களது உறவினரைச் சேர்ந்து நடப்பது,

5. அவர்களின் நண்பர்களைக் கண்ணியப் படுத்துவது மாகும் என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூ உஸ்யத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் 03:498)

மேற் கண்டவையல்லாத அனேக ஆதாரங் கள் காலமான ஒருவருக்காக ஸதகா முதலி யன செய்யலாம் என்பதை உணர்த்து கின் றன. இவையொன்றிலேனும் குர்ஆன் ஓதி நன்மை சேர்ப்பிக்கலாம் என்ற கருத்தை உணர்த்தும் எந்தவொரு ஆதாரமுமில்லை. யாஸீன் ஸூரா போன்ற ஸூராக்களை யோ குல்ஹுவல்லாஹு (இக்லாஸ்) ஸூறத்தை ஒரு லட்சம் விடுத்தமோ ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்பன போன்றவற்றை ஆயிரம் விடுத்தமோ ஓதி காலமானவருக்கு நன்மை சேர்ப்பிக் கலாம் என்பதற்கு எந்த ஆதாரமு மில்லை.

இன்று நம் சகோதர, சகோரிகள் கபுரடி சென்று செய்து வரும் சில காரியங்கள் ஷரீஅத்துக்கோ அதனைக் கொணர்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வழிமுறைக்கோ எவ்விதத்திலும் ஒத்ததல்ல. இதையுணர்த்தும் ஹதீஸ் கலை வல்லுனர் (முஹத்திஸீன்) களினதும் அல் குர்ஆன் விரிவுரையாளர் (முபஸ்ஸிரீன்) களினதும் பிரபல்யமிகு சில இமாம்களி னதும் கருத்துக்களை இங்கு தொகுத்துத் தருகின்றோம்.

இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

“மனிதனுக்கு அவன் முயன்றதன்றி வேறில்லை” (53:39) என்ற வசனத்துக்கு பல இமாம்களும் விளக்கம் தந்துள்ளனர்.

அவர்களுள் ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அல் இமாம் அபுல் பிதாஃ இஸ்மாயீல் இப்னு கதீர் (வபாத் ஹிஜ்ரி 774) அவர்கள் பின்வரு மாறு குறிப்பிடுகின்றார்கள்.

எப்படி ஓரு ஆத்மா எவ்வாறு மற்றொரு ஆத்மாவின் பாவத்தைச் சுமக்காதோ அவ்வாறே அது தனக்குகெனச் செய்தன வற்றின் கூலியையன்றி அடைந்து கொள்ள மாட்டாது. இந்த (53:39) ஆயத்திலிருந்து தான் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், காலமானவருக்காக குர்ஆன் ஓதி ஹதியாச் செய்வது சேராது என்று சட்ட மெடுத்துள் ளார். ஏனெனில் அது காலமான ர்களின் உழைப்பையோ, செயலையோ சேர்ந்தல்ல. ஆதலால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு தனது உம்மத்தவருக்கு வழி காட்டவோ, செய்யும் படி தூண்டவோ இல்லை. மேலும், ஏதும் ஆதாரத்தை கூறியோ, சுட்டிக் காட்டியோ அறிவிக்கவுமில்லை. ஸஹாபாக் கள் எவரேனும் (இவ்வாறு குர்ஆன் ஓதி ஹதியா) செய்ததற்கான எந்த ஆதாரமு மில்லை. அவ்வாறு செய்வது சிறந்ததெனில் அந்த உத்தமர்கள் இவ்விடயத்தில் எம்மை முந்தியிருப்பர்.

அல்லாஹ்வை அணுகும் வழிமுறைகள் அடிப்படை மூலா தாரங்களிலேயே தங்கி யுள்ளது. அதிலே வேறெதையும் ஒப்பு நோக்கிப் பேசவோ சுய விளக்கமளிக்கவோ அனுமதியேயில்லை.

காலம் சென்றவருக்காக துஆக் கேட்டல், ஸதகா செய்தல் என்பன மூலாதாரங்களில் இருந்து பெறப்பட்டதாகும் என்பது இமாம் கள் ஏகோபித்த கருத்தாகும்.

(தப்ஸீர் இப்னு கதீர் 04 ம் பாகம் 259 ம் பக்கம்)

அல் ஹதீஸ் விரிவுரையாளர்களான இமாம்களது கருத்து

01. ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்தவரும் ஸஹீஹ் முஸ்லிமை விரிவுரை செய்தவரு மான இமாம் ஷரபுத்தீன் அந்நவவீ அஷ் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது, ‘ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ் வின் தூதரே ‘எனது தாயார் பேச முடியாத நிலையிலிருந்து காலமானார். அன்னாருக் குப் பேச முடியுமாயிருந்தால் தர்மம் (ஸதகா) செய்திருப்பார் என எண்ணுகிறேன. இப்போது நான் அன்னாருக்காக ஸதகா செய்யட்டுமா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என பதில் கூறினார்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இந்த ஹதீஸின் அடிப்படையில் மரணித்த ஒருவர் பெயரில் தர்மம் செய்தல், அவரது பிழை பொறுக்க துஆக் கேட்டல், நோன்பு பிடித்தல், ஹஜ்ஜு செய்தல், கடனையடைத்தல் என்பன நிறைவேறும் என்பதில் இமாம்கள் ஏகோபித்துள்ளனர். குர்ஆன் ஓதி அதன் நன்மையைச் சேர்ப் பித்தால் அதன் நன்மை சேராது என்பது ஷதபிஈ மத்ஹபின் பிரபல்யமிகு அபிப்பிரா யமாகும்.

(சரஹ் ஸஹீஹ் முஸ்லிம் 07:90 மரணித்தவருக்கு ஸதகாவின் நன்மை சேரல்) (அல் அத்கார் 150ம் பக்கம்)

02. இமாம் நதவி அவர்களும் தமது ஷரஹுஸ் ஸுன்னா 06:199ல் மேற்கண்ட கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

03. இமாம் இப்னு ஹஜரினில் அஸ்கலானி (ரஹ்) அவர்களும் காலமானவருக்காக, நோன்பு பிடித்தல், ஸதகா செய்தல் என்பவற்றை வலியுறுத்தி தம் பத்ஹுல் பாரி எனும் கிரந்தத்தில் (06:389 - 04: -193) கூறியுள்ளனர்.

04. இமாம் ஸன் ஆனி (ரஹ்) அவர்கள் தம் ஸுபுலுஸ் ஸலாம் இரண்டாம் பாகம் 203ம் பக்கத்தில் மேற்கண்ட விடயத்தைப் பதிந்துள்ளார்.

05. இமாம் இஸ்ஸுப்னு அப்திஸ்ஸலாம் (ரஹ்) அவர்கள் குர்ஆனை ஓதி நன்மை சேர்ப்பிப்பதால் அது சேருமா எனக் கேட்கப்பட்ட போது பின்வருமாறு விடையளித் தார்கள்.

குர்ஆன் ஓதுவதன் நன்மை ஓதுபவருக்கு மாத்திரமே யாகும்.

வேறு எவருக்கும் அது சேராது ஏனெனில் அல்லாஹ் பின்வருமாறு கூறியுள்ளான்.

1. “மனிதனுக்கு அவன் முயற்சியின்றி வேறில்லை” (53:39)

2. “அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவையூம் அதன் சக்திக்கு மேலால் நிர்ப்பந்திப்ப தில்லை. அது தேடிக் கொண்ட நன்மை அதற்கே பயனளிக்கும். அது தேடிக் கொண்ட தீமையும் அதற்கே.” (02:286)

3. “நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்தவராவீர்கள்.” (17:07) என்று கூறியுள்ளான்.

4. “எவரேனும் குர்ஆனை ஓதினால் அதன் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை வீதம் எழுதப்படும்” என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரலியல்லஹு அன்ஹு அவர்கள், ஆதாரம்: திர்மிதி)

மேற்கூறப்பட்ட அல்லாஹ்வின் வசனங்க ளும் ஹதீஸும் நன்மைகள் அவற்றைத் தேடிக் கொண்டவருக்கேயுரியது என்று வரையறுத்துள்ளதைக் காணமுடிகின்றது. அதற்கு மாறாக நடக்கும் எவரும் ஆதார மின்றி குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றம் செய்தவராவார். எனவே தனது ஓதலின் நன்மையை காலமானவருக்குச் சேர்ப்பிக்க விரும்புபவர் “மனிதனுக்கு அவன் முயற்சி யின்றி வேறில்லை” 53-59 என்ற அல் குர்ஆன் வசனத்துக்கு மாறு செய்தவராவார்.

ஓதப்படும் குர்ஆனின் நன்மை ஓதியவருக் கேயாகும், மையித்துக்கல்ல. ஏனெனில் அது ஓதியவரின் செயலாகும். எனவேதான் அல்லாஹ் நற்கிரியைகளுக் குரிய கூலியை அதனைச் செய்தவனுக்கென்று கூறி மட்டுப் படுத்தியுள்ளான். “யார் நல்லமல் செய்கிறாரோ அது அவருக்கேயாகும்." (41:46)

ஆச்சரியம் என்னவெனில் கனவில் கண்டதை வைத்து குர்ஆன் ஓதி நன்மை சேர்ப்பிக்கலாம் என நிரூபிக்க முனைவதா கும். உதாரணமாக, ஒரு மனிதன், தான் கண்ட கனவு பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.

நான் நித்திரையில் இருக்கும் போது ஒரு கப்ருஸ்தானில் அடங்கப்பட்ட பலர் தம் கப்றுகளிலிருந்து வெளியே வந்து ஏதோ பொறுக்குவதைக் கண்டு ஆச்சரியப் பட்டேன். அவர்களிலொருவர் ஒன்றுமே பொறுக்கிக் கொள்ளாது அங்கு உட்கார்ந்தி ருப்பதையும் கண்டேன். அம்மனிதனை நெருங்கி அவர்கள் என்ன பொறுக்கு கிறார் கள் என்று கேட்டேன். அதற்கு அம்மனிதர் முஸ்லிம்கள் ஓதியனுப்பும் குர்ஆன், துஆ, ஸதகா என்பவைகளைப் பொறுக்குகிறார் கள் என்றார். நீ ஏன் அவர்களோடு சேர்ந்து பொறுக்கவில்லை எனக் கேட்டதற்கு பின்வருமாறு கூறினார். “எனக்கு அப்படிப் பொறுக்கி எடுக்க வேண்டிய தேவை யில்லை. கடைத் தெருவில் வியாபாரம் செய்யும் எனது மகன் தினமும் ஓதி எனக்கு சன்மானம் அளிக்கும் கத்ம் காரணமாக எனக்கு வேறு தேவையில்லை என்றார்.

நித்திரையிலிருந்து விழித்தபோது கடைத் தெரு சென்றேன்.

அங்கொரு வாலிபன் உதட்டை அசைத்துக் கொண்டி ருந்தான். “என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?” என அவனிடம் கேட்ட போது ‘எனது தந்தைக்கு நான் குர்ஆன் ஓதி அனுப்பி வைக்கிறேன்.’ என்றான். சில காலத்தின் பின் கப்ராளிகள் வெளியே வந்து பொறுக்கும் போது முதற் கனவில் தனித்திருந்த மனிதனும் சேர்ந்து பொறுக்குவதைக் கண்டேன். நித்திரையி லிருந்து விழித்த நான் ஆச்சரியப்பட்டு கடைத் தெருவுக்குச் சென்றேன். அங்கிருந்த வாலிபன் காலமாகி யுள்ளான் என அறிந்து கொண்டேன். (இஆனதுத் தாலிபீன் 2:143)

கனவுகள், சன்மார்க்க சட்டங்களுக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட மாட்டாது. (கிதாபுல் பதாவா - இமாம் இஸ்ஸுப்னு அப்திஸ்ஸலாம் அஷ் ஷாபிஈ பக்கம் 96)

மேற்கண்டவைகள் இமாம்களின் தீர்ப்பு களாகும்.

காலமானவருக்காக நாம் என்ன செய்யலாம் என்பதைப் பிரிதோர் இடத்திலும் விளக்கி யுள்ளோம். ஆதலால் இந்தப் பிரச்சினை குர்ஆன், ஹதீஸ், ஆரம்பகால முஸ்லிம் களான ஸஹாபாக்கள், இமாம்கள் ஆகியோரின் தீர்ப்பின் அடிப்படையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். சம்பிரதாயங்கள் பழக்க வழக்கங்கள் மார்க்கமாக மாட்டாது. அல்லாஹ்வே சகலதையும் அறிந்தவன்.

01. ஒருவர் காலமானால் அவரது ஜனாஸாவை பற்றி அறிவிக்க வேண்டுமா?

எவரேனும் காலமானால் அது பற்றி அறிவிப்பதில் தவறேதுமில்லை. “நஜாசி மன்னன் காலமான போது ஸஹாபாக்க ளுக்கு அது பற்றி நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்களே அறிவித்து விட்டு தொழுகையும் நடத்தினார்கள்.” (ஆதாரம்:ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஜனாஸா பற்றி அறிவிப்பதனால் உற்றார், உறவினர், நண்பர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பேற்படுகின்றது. இது நல்ல செயலாகும்.

02. மையித்தைக் குளிப்பாட்டும்போது என்னென்ன ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்?

மையித்தைக் குளிப்பாட்டும் போது ஓர் உயரமான இடத்தில் அதனை வைக்க வேண்டும். மையித்தை புடவையால் மூடிக் கொண்டே குளிப்பாட்ட வேண்டும். குளிப் பாட்டும் இடத்திலிருந்து துர்வாடைகள் வீசாதிருப்பதற்காக வாசனைகள் போட வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கைக் குரியவர்களே இவ் வேலையில் ஈடுபட வேண்டும்.

03. மையித்தைக் குளிப்பாட்டும் போது எல்லோருமே அதில் பங்குகொள்ள வேண்டுமா?

மையித்தைக் குளிப்பாட்ட உரித்துடைய வர்களே அதில் ஈடுபட வேண்டும். அங்கு சமூகமளிக்கும் எல்லோரும் தண்ணீர் ஊற்ற வேண்டுமென்பதில்லை. அப்படி ஊற்றுவது வீண்விரயம் (இஸ்ராப்) ஆகும்.

04. மையித்தைக் குளிப்பாட்டி முடித்தபின் அதனைச் சூழ நின்று ஏதும் ஓத வேண்டுமா?

மையித்தைக் குளிப்பாட்டி முடிந்து கபன் செய்விக்கப் பட்டால் உடனே நல்லடக் கத்துக்காகச் சுமந்து செல்வதே பிரதான வேலையாகும். அதுவன்றி அதனை வைத்துக் கொண்டு சூழ நின்று ஓதுவதோ, பாடுவதோ எந்தவொரு அடிப்படையை வைத்தும் செய்யப்படுவனவல்ல. இது பித்அத்தாகும்.

ஜயமும் தெளிவும்

05. மையித்தை எல்லோரும் பார்ப்பதன் சட்டமென்ன?

உயிரோடிருக்கும் போது யார்யாரைத் திரை யின்றி நேரடியாகப் பார்க்க முடியுமென் றுள்ளதோ மரணத்தின் பின்பும் அதே சட்டமாகும். திருமண விலக்கானவர்கள் (மஹ்ரமி)களை ஆண்களோ, பெண்களோ பார்க்கலாம். அன்றி திருமண விலக்கில்லா ஒரு அன்னிய ஆணின் மையித்தை ஒரு அன்னிய பெண்ணோ, ஒரு பெண்ணின் மையித்தை திருமண விலக்கில்லா ஆணோ பார்ப்பது ஹறாமாகும்.

06. கபனிலோ மையித்தின் நெற்றியிலோ கலிமா போன்றன எழுதப்படுவதன் சட்டமென்ன?

கபனிடப்படு முன்பு அல்லது பின்பு நெற்றி யிலோ, கபனிலோ கலிமா முதலிய வசனங் களை எழுதுவது கஃபாவின் போர்வைத் துண்டு வைப்பது, வேறேதேனும் எழுதி வைப்பது முதலியன யாவும் பித்அத்தாகும்.

07. ஜனாஸாவை சுமந்து செல்லும்போது உலக விசயங்களைக் கதைக்கும் வழக்கம் பரவலாக உள்ளது. எனவே கலிமா, திக்ர் என்பன ஓதிக் கொண்டு போவது வாஜிபு என்று கூறப்படுவதன் உண்மையென்ன?

ஜனாஸாவை சுமந்து செல்லும் முறையைக் கற்றுத் தந்த ரஸூலுல்லாஹி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மையித்தை நெருப்புடனோ எந்தவொரு சப்தத்துடனோ சுமந்து செல்லலாகாது என்று போதனை செய்துள்ளர்கள். உத்தம ஸஹாபாக்கள் அதனடிப் படையிலே செயலாற்றினார். ஏதாவது ஓதுவது ஏற்ற மெனில் அதனைச் செய்ய அந்த ஸஹாபாக் கள் சிறிதும் பின்வாங்கி இருக்க மாட்டார் கள். சுமந்து செல்லும் மக்கள் கதைக்கின் றார்கள் என்பதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சை மீறி சட்டமியற்ற எவருக்கும் உரிமையில்லை என்பதை நாங்கள் அறிய வேண்டும். (ஜனாஸாவை சுமந்து செல்லல் என்ற பகுதியை பார்க்க)

08. ஜனாஸாவை வாகனங்களில் ஏற்றிச் செல்லலாமா? மலர் வளையம் சுமந்து செல்லல், மரணித்தவரது உருவப் படங்கள் சுமந்து செல்லல் ஆகுமா?

அடக்கப்படுமிடம் இடம் தூரத்திலிருப்பின் ஜனாஸாவை வாகனத்தில் கொண்டு செல்லலாம். அதே நேரம் ஜனாஸாவில் கலந்து கொள்வோர் வாகனத்தில் வருவதா யின் பின்னால் செல்வதே முறையாகும். மேலும் மலர் வளையம் ஏந்திச் செல்வது, படங்கள் சுமந்து செல்வது, மேள வாத்தியங் களோடு செல்வது என்பன யாவும் அந்நிய பழக்க வழக்கங்களாகும். இவை ‘பித்அத்’ ஆகும். இராணுவ மரியாதை செய்ய வேண்டி வந்தாலும் மார்க்க வரம்போடு அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

09. ஜனாஸா வீட்டில் உணவு, குடிபானங் கள் பரிமாறுவதன் சட்டமென்ன?

ஒரு முஸ்லிம் காலமானால் அவரது வீட்டுக் குத் தேவையான உணவு வகை ஏற்பாடு செய்யும் கடமை உற்றார் உறவினருக்குரிய தாகும். மூன்று தினங்களுக்குப் பக்கத்து வீட்டார் இதனைக் கவனிப்பது மேலாகும். இதுவன்றி வருவோர் போவோருக்காக உணவு பானங்கள் என்பன பரிமாறுவது தவிர்த்துக் கொள்ளப் பட வேண்டும். ‘ஹஜ்ரத் ஜஃபரிப்னு அபீ தாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலமான போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஜஃபரின் குடும்பத்தவர்களுக்கு உணவு சமையுங்கள். அவர்களை வேறொரு வேலை ஈடுபடுத்தி யுள்ளது” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு ஜஃபர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். ஆதாரம்: அபூதாவூத் இப்னுமாஜா) ஒரு சகோதர முஸ்லிமின் துன்பத்தில் பங்கு கொள்ளவே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

10. நல்ல மையித்துக்கு அடையாளங்கள் ஏதுமுண்டா?

நல்ல மையித்துக்குரிய அடையாளங் களா வன:

1. இறுதி நேரத்தில் கலிமா மொழிய நாவுக் கு இலேசாகும். லாஇலாஹ இல்லல்லாஹ் யாருடைய இறுதி வார்த்தையாக அமையுமோ அவர் சுவனம்  புகுவார்.

(அறிவிப்பவர்: முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்) ஆதாரம்: அல் ஹாகிம்)

2. நெற்றி வியர்வை வெளிப்படல். “முஃமினின் வபாத் நெற்றி வியர்வையால் அறியப்படும்”. (அறிவிப்பவர் புரைதா பின் அல்ஹஸீப், ஆதாரம் திர்மிதி)

3. வெள்ளி இரவில் அல்லது பகலில் காலமா தல். ‘வெள்ளிக்கிமை பகலில் அல்லது இரவில் காலமாகும் முஸ்லிமை அல்லாஹ் வேதனையிலிருந்து காத்து விடுகின்றான்’.

(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் திர்மிதி)

4. யூத்த களத்தில் ஷஹீதாகுதல் ‘யூத்த களத்தில் மரணிப்பவருக்கு ஏழு சிறப்புகள் உண்டு.’

1. முதல் இரத்தச் சொட்டு சிந்தும்போதே அவன் மன்னிக்கப் படுகின்றான்.

2. சுவனலோகத்தில் அவனுக்குரிய இடம் காட்டப்படும்.

3. கப்ரின் தண்டனையிலிருந்து பாதுகாக்கப்படுவான்.

4. மஹ்ஷரின் திடுக்கதிலிருந்து அச்சம் தீர்வான்.

5. ஈமானின் ஆபரணம் அணிவிக்கப்படுவான்.

6. சுவனலோக ஹுருள் ஈன் (அரும்பயர்) மண முடித்து வைக்கப்படுவர்.

7. தன் உறவினர்களில் 70 பேருக்காக சிபாரிசு செய்ய அனுமதிக்கப் படுவான்.

(அறிவிப்பவர்: உபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆதாரம் திர்மிதி)

11. ஜனாஸா சுமந்து வந்து தொழுவிப்பதற்கு முன் காலஞ்சென்றவர் பற்றி என்ன சொல்கிறீர்கள்? என ஒருவர் வினவ, மற்றவர்கள் ‘அவர் நல்லவர்’ என்று பதில் சொல்வதன் சட்டமென்ன?

இது பிழையான சம்பிரதாயமாகும். குடி, ஸினா போன்ற பெரிய பாவங்களைச் செய்த ஒருவரைக் கூட நல்லவர் எனக் கூறுவது பொய்ச் சாட்சியமாகும். ஒரு சமயம் ஜனாஸாவொன்று கொண்டு செல்கையில் ஸஹாபாக்கள் அம்மையித்தை ப் போற்றிப் பேசினர். அதனைக் கேட்ட ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “விதியாகிவிட்டது” என்று மூன்று விடுத்தம் கூறினார்கள். அவ்வாறே மற்றொரு ஜனாஸா கொண்டு செல்கையில் அந்த ஜனாஸாவைப் பற்றிக் குறை கூறினர். அதற்கும் நபி (ஸல் அவர்கள், “விதியாகிவிட்டது” என்று கூறினார்கள். இது பற்றி உமர் ரலியல் லாஹு அன்ஹு அவர்கள் நபி ரஸூலுல்லா ஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விளக்கம் கேட்டபோது முதலாவது ஜனாஸாவைப் போற்றினீர்கள். அவருக்கும் சுவனம் விதியாகி விட்டது. இரண்டாவது ஜனாஸாவைக் குறை கூறி னீர்கள், அதற்கு நரகம் விதியாகிவிட்டது.

நீங்கள் தான் புவியிலுள்ள அல்லாஹ்வின் சாட்சிகள் எனக் கூறும்  ஹதீஸை ஆதார மாகக் காட்டி மையத்தை வைத்துக் கொண்டு மேற் சொன்னவாறு சாட்சி சொல்ல எந்த ஆதாரமும் கிடையாது. எதிர்பாராதவிதமாக உண்மையை அறிந்த எவரும் ஜனாஸாவைப் பற்றி நல்லது கூறினால் அந்த ஜனாஸாவை போற்றிய தாகக் கருதப்படும்.

12. ஜனாஸாவை வைத்துக் கொண்டு ஸூரதுல் இக்லாஸ் ஓதுவது ஏன்?

மையித்தைக் குளிப்பாட்டும் நேரம் முதல் அடக்கம் வரையுள்ள சந்தர்ப்பங்களில், சுமந்து செல்லும்போது, தொழுகைக்காக நிற்கும் போது மையித்தை அடக்கு கின்ற போதெல்லாம் மரணம் பற்றிய சிந்தனை யோடே நடந்து கொள்ள வேண்டும். சும்மாதானே இருக்கின்  றோம் என்ற காரணம் கூறி ஸூரதுல் இக்லாஸ் ஓது வதற்கு ஹதீஸிலோ இமாம்களின் அபிப்பிராயங்களிலோ எந்தவித ஆதாரமு மில்லை. அமல்கள் செய்வதில் உத்தம ஸஹாபாக்களை விட நாம் மிஞ்சி விட முடியாது என்பதை உறுதியாக நம்ப வேண்டும்.

13. ஜனாஸாவைக் கப்ரில் வைத்தபின் அதற்கு மேலால் ஊது பத்தி பற்ற வைக்கலாமா?

ஜனாஸாவைச் சுமந்து செல்கையில் நெருப் பேந்திச் செல்லலாகாது என்னும் ஹதீஸைக் காணும் எவரும் கப்ரின் மீது ஊதுபத்தி போன்றன வைக்கத் துணிய மாட்டார்கள். அது ஹறாமாகும்.

14. ஒருவர் தன் மனைவியின் ஜனாஸா வைக் குளிப்பாட்டலாமா? கபன் செய்த பின் தன் மனைவியின் ஜனாஸாவைப் பார்க்கலாமா?

காலமான தன் மனைவியைக் குளிப்பாட்ட கணவனுக்கு உரிமையுள்ளது. அவ்வாறே மனைவியும் தன் கணவனைக் குளிப்பாட்ட முடியும். நீர் எனக்கு முன் காலமானால் நான் உன்னைக் குளிப்பாட்டி கபனிட்டு உன்மீது தொழுகையும் நடாத்தி, நானே உன்னை அடக்கிவிடுவேன்" என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின் றார்கள்.

(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் 06-228)

எனவே காலமான மனைவியைக் குளிப்பாட் டவோ அவளின் ஜனாஸாவைப் பார்க்க வோ கணவனுக்கு அனுமதியுண்டு.

15. காலமானவருக்காக குர்ஆன் ஓதி நன்மை சேர்ப்பிக்கலாமா?

காலமானவருக்கு மற்றவர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி ஏற்கனவே கூறியூள்ளோம். ‘காலமான ஒருவருக்காக குர்ஆன் ஓதி நன்மை சேர்ப்பிக்கும் எண்ணத்தில் செய்யும் முறை ஸுன்னத்தைச் சேர்ந்ததல்ல.’ இது இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களது அபிப்பிராயமாகும். மேலும் நாள் குறிப்பிட்டு 3,7,15, 20, 40, 60, 100 எனச் சடங்குகள் நடத்தும் நடைமுறையி லுள்ள வழக்கம் பிழையானதாகும். அது பற்றி முன்னர் விவரிக்கப்பட்டுள்ளது.

16. கப்ரைக் கட்டலாமா? அங்கு விளக்கேற்றலாமா?

கப்ரைக் கட்டுவதோ அதன் மேல் சாந்து பூசுவதோ ஹறாமாகும். கப்றில் சுண்ணாம்பு பூசப்படுவது அதன் மேலால் உட்காருவது அதன் மேல் கட்டடம் எழுப்பப்படுவது என்பனவற்றை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,                                                                                                    

ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், ஸஹீஹ் முஸ்லிம்)

பொது இடங்களிலோ வக்ப் செய்யப்பட்ட இடங்க ளிலோ கப்ரு கட்டப்படுவது ஹறாமாகும். கட்டப்பட்டி ருந்தால் அதனை உடைப்பது வாஜிபாகும். (பத்ஹுல் முஈன் 2/120 )

17.ஜனாஸாவை முத்தமிட ஷரீஅத்தில் அனுமதி யுண்டா?

ஜனாஸாவை முத்தமிட விவாக விலக்கான வர்களுக்கு அனுமதியுண்டு. ரஸூலுல்லா ஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஜனாஸாவை ஹஸ்ரத் அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முத்தமிட்டனர். (பத்ஹுல் பாரீ 03/115 அந்நஸாஈ 04/11) எனவே காலமான ஒருவரைப் பார்க்கச் செல்லும் ஒரு முஸ்லிம் காலமானவர் தனக்கு விவாக விலக்குள்ள வராயின் முத்தமிடுவதில் தவறில்லை.

18. ஜனாஸா அடக்கப்பட கப்ரை மீண்டும் தோண்டலாமா?

அடக்கப்பட்ட ஜனாஸாவைக் காரண மின்றித் தோண்டி வெளியே எடுக்கலாகாது. அதற்குரிய கடமைகள் ஏதும் செய்விக்கப் படாது அடக்கப்பட்டால், கிப்லாவை நோக்காமல் அடக்கப் பட்டிருந்தால் விசாரணைகள் அல்லது பரிசோதனைகள் ஏதும் நடத்தப்பட வேண்டியிருந்தால் கப்ரை மீண்டும் தோண்டலாம்.

19. குறிப்பிட்ட சில நாட்களின் பின் அடக்கப்பட்டவரது கபுரில் மண் கூட்ட வேண்டுமா?

இது ஒரு பித்அத்தாகும். அடக்கப் பட்டவ ருக்கு துஆ கேட்க வேண்டுமேயல்லாது அங்கு சென்று குறிப்பிட்ட சில நாட்களில் கப்ரைப் போர்த்துவதோ, மண் கூட்டு வதோ,  சாப்பாடுகள் ஏதும் கொண்டு போய் வைப்பதோ தடுக்கப்பட வேண்டியதாகும். மையத்து வீடுகளில் ஸலாம் சொல்வதற்கு நாற்பது தினங்களுக்கு முஸ்லிம் பெண்கள் செல்லும் வழக்கம் இருந்தது. இது மார்க்கத்துக்கு முரணானது என்பதால் 1888.11.26 ஆம் திகதி ஜம்இய்யதுல் இஸ்லாமியா கூடிய கூட்டத்தில் பின்வரும் தீர்மானத்தை எடுத்து நடைமுறைப் படுத்தியது. (இந்த ஜம்இய்யா காலம் சென்ற எம்.ஸீ. சித்திலெப்பை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது)

இந்த ஊரில் இக்காலத்தில் மையத்து வீடு களுக்கு நாற்பது நாளைக்கு பெண்கள் ஸலாம் சொல்லப் போகிற கெட்ட வழக்கத் தை நிறுத்த வேண்டும் என்றும், மார்க்க பிரகாரம் மூன்று நாளைக்கு மேல் மையத்து வீடுகளில் ஸலாம் சொல்லக் கூடாது என்றும் தீர்ப்பிடப்பட்டது (முஸ்லிம் நேசன் 1886.12.03)

20. பெண்கள் மீது ஜனாஸாத் தொழுவது கடமை யில்லை. எனினும் புனித ஹஜ்ஜு, உம்றா நிறைவேற்றச் செல்லும் சமயங் களில் ஜனாஸா தொழக் கிடைக்கின் றது. அவ்வாறு தொழுகையில் ஈடுபடலாமா?

பெண்கள் மீது ஜனாஸாத் தொழுவது கடமையில்லா விடினும், ஆண்கள் எவரும் இல்லாத போது கடமையாகி விடுகின்றது. அவ்வாறே ஹஜ்ஜு, உம்றா போன்ற வற்றை நிறைவேற்றச் சென்ற சமயம் மேற்படி தொழுகை யில் ஈடுபட்டால் அது நிறைவேறும்.

21. மையித்தை அடிக்கழுவி மக்கள் பார்வைக்காக வைக்கலாமா?

மையித்தை குளிப்பாட்டி கபன் செய்யு முன் அடிக்கழுவி அதனை சில மணிநேரம் மக்கள் பார்வைக்காக பள்ளி வாசல் வளாகத்தில் பிரத்தியேகமாக கட்டப்பட்ட கட்டிடத்தில் வைக்கலாமா என வினவி 2009.01.27 ஆம் தேதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப் பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப் படுகிறது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. சலாத்தும் ஸலாமும்

அவனின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒருவர் மரணித்து விட்டால் அவரது ஜனாஸாவை பார்வையிடச் சென்று அதன் இறுதிக் கடமைகளில் ஈடுபடுவது நபி வழியைச் சார்ந்ததாகும்.

ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உஸ்மான இப்னு மல்ஊன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை மைய்யித்தாக இருக்கும் நிலையில் முத்தமிட்டார்கள்.

(அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா)

நூல் ஸுனன் இப்னி மாஜாஹ், பாடம் மையித்ததை முத்தமிடுதல்).

ஒரு மனிதன் உயிருடனிருக்கும் போது சுத்தமாக இருப்பது அவனது கடமையாகும் அவன் மரணித்து விட்டால் அவனை நஜீஸ் களிலிருந்து சுத்தம் செய்து வைப்பது மற்ற வர்களினது கடமையாகும்.

ஜனாஸாவை குளிப்பாட்ட உரிய நேரம் வரு முன் சுத்தம் செய்து அடிக்கழுவி வைப்பதில் தவறேதும் இருப்பதாக தெரிய வில்லை. என்றாலும் இதனை பள்ளி வளாகத் தில் செய்யும் பொழுது மற்றவர் களுக்கு இடையூறு இல்லாமலும், ஆண், பெண் கலப்பு இல்லாமலும், ஏனைய அடக்கவேண்டிய ஜனாஸாக்களுக்கு இடையூறு இல்லாமலும், ஜனாஸாவை அடக்கம் செய்வதை தக்க காரணமின்றி பிற்படுத்தாமலும் ஜனாஸாவை அடிக் கழுவி பள்ளிவாசல் வளாகத்தில் ஒதுக்கப் பட்ட பிரத்தியேகமான இடத்தில் மக்கள் பார்வைக்காக வைப்பது மார்க்கத்திற்கு முரணான விடயமாக தெரியவில்லை.

அகில ஜம்மிய்யதுல் உலமா

பத்வா இல: 031ACJU/F2009/0108

22.பழைய மையவாடியின் மீது கட்டிடம் அமைக்கலாமா?

பழைய மையவாடியின் நீர்த்தடாகம், மலசல கூடம் போன்றவற்றை உள்ளடக்கிய கட்டிடத் தொகுதி அமைப்பதற்கு ஃபத்வா கோரி 2007.10.17 ஆம் தேதியிட்டு தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகிறது.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. சலாத்தும் ஸலாமும் அவனின் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

அல்லாஹ்வுடைய படைப்புக்களில் மிகச் சிறந்த படைப்பு

மனிதப் படைப்பாகும். அவர்களில் குறிப்பாக முஸ்லிம் கள் மிக கண்ணியமான வர்களாகும். உயிருடன் இருக்கும் போது ஒரு முஸ்லிமைச் சங்கைப் படுத்துவதைப் போன்று அவன் மரணித்த பிறகும் அவனைச் சங்கைப் படுத்துவது அவசியமாகும். முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்பட்ட மையவாடிகளில் கட்டிடம், பாதை போன்றவற்றை அமைப்பதால் அதில் உள்ள ஜனாஸாக்களின் அடையா ளங்கள் நிரந்தரமாக மறைக்கப்படுவதுடன் அதில் அடங்கப் பட்டவர்களுடைய சங்கைக்கும் குந்தகம் ஏற்படுகின்றது. எனவே முஸ்லிம் களுடய மையவாடிகளில் கட்டிடங்கள், பாதைகள் அமைப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இத் தீர்ப்புக்கு பின்வரும் தீர்ப்புக்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக அமைகின்றன.

அபூ மர்ஸத் அல்-கனவி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். கப்ர்கள் மீத உட்காரா தீர்கள், மேலும் அவற்றை நோக்கி தொழாதீர்க்ள் என ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் - ஹதீஸ் எண் 1768)

ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக் கின்றார்கள்: கப்ர்கள் சுண்ணாம் பால் பூசப்படுவதையும், அவை மீது எழுதப்படுவதையூம், அவற்றின் மீது கட்டப்படுவதையும், அவை மிதிக்கப் படுவதையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடை செய்தார்கள்.

(நூல் : ஜாமிஉத் திர்மிதி - ஹதீஸ் எண் 1052)

அகில ஜம்மிய்யதுல் உலமா

பத்வா இல: 015/F/ACJU/2009/

23. பொது மயானத்தில் முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்ட தனியான இடத்தில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யலாமா?

பொது மயானத்தில் முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்ட தனியான இடத்தில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடய மாகும். எனினும் உரிய முறையில் உள்ளூராட்சி சபையை அணுகி முஸ்லிம் களுக்குரிய பகுதியை பிரித்து அறிந்து கொள்ளும் விதத்தில் ஒரு மதில் கட்டப் பட்டால் அது மிகவும் விரும்பத் தக்கதாகும்.

அகில ஜம்மிய்யதுல் உலமா

பத்வா இல: 002/ACJU/F/2009

24. வக்ஃப் செய்யப்பட்ட மையவாடியை பாதையாக மாற்றலாமா?

வக்ஃப் என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். வக்ஃப் செய்யப் பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக் கேனும் இலவசமாக கொடுக்கவோ, கைமாற்றவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும். ஒரு பொருளை வக்ஃப் செய்த நபர் எந்த நோக்கத்தக்காக அதை வக்ஃப் செய்தாரோ அந்நோக்கத்திற்கு பங்கம் ஏற்படாமலும் அதனை மாற்றாமலும் அதனைப் பயன் படுத்துவது அதன் நிருவாகிகளின் கடமை யாகும் என்பதுடன் தக்க காரணமின்றி அப்பொருளை அது வக்ஃப் செய்யப்பட்ட நோக்கத்துக்கு மாறாக பயன்படுத்துவது மிகப் பெரிய தவறாகும்.

வக்ஃப் செய்யப்பட்ட பொது மையவாடி யின் அடிப்படை நோக்கம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதாகும். அதற்கு மாற்றமாக அதனைப் பயன்படுத்துவது அனுமதிக்க முடியாத காரியமாகும்.

அகில ஜம்மிய்யதுல் உலமா

பத்வா இல: 004/ACJU/F/2005

25. மையவாடியை கனரக வாகனம் மூலம் சீர்படுத்தலாமா?

மையவாடியை கனரக வாகனம் மூலம் சீர்படுத்தல் ஆகுமானதா எனக்கேட்டு தாங்கள் அனுப்பி வைத்த கடிதம் சம்பந்தமாக ஆராய்ந்து பூரண தெளி வறிக்கை யொன்றை எமக்கு வழங்குமாறு எமது கண்டி மாவட்டக் கிளையைக் கேட்டிருந்தோம். அதற்கிணங்க அவர்களால் 2010.05.06 ஆந் தேதியிட்டு அனுப்பிய கடிதத்தில், ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பதில் நிலம் இல்லாத

காரணத்தாலும், சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக மைய வாடியில் ஜனாஸாக்கள் அடக்கப்படாத காரணத்தாலும் மையவாடி யை ஜனாஸாக்கள் அடக்க முடியுமான விதத்தில் புணருத்தானம் செய்வது அவசியம் என்று நாம் கருதுகின்றோம். அதற்கென மண் அகற்றும் இயந்திரங்க ளைப் பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அனை தவிர்க்க முடியாதென எண்ணு கின்றோம், என குறிப்பிட்டள்ளது.

எமது கண்டி மாவட்டக் கிளையினால் அனுப்பி வைக்கப் பட்டிருக்கும் இத் தீர்ப்பினை உங்கள் வினாவுக்கு பொறுத்த மானதாக கருதுவதோடு அவ்வாறே செய்து கொள்ளும்படியும் ஆலோசனை வழங்கு கிறோம். இது உங்களது ஊரின் (உடதல வின்ன மடிகே) நிலைமையை ஆராய்ந்து உங்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்ட பத்வாவாகும்.

அகில ஜம்மிய்யதுல் உலமா

பத்வா இல: 04/ACJU/F/2010/0117

இரண்டிலொரு வழியைத் தேர்ந்தெடுப்போம்.

ஜனாஸா வைப் பற்றிய விளக்கங்களை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருத்தல் அவசியமாகும். ஒருவரேனும் அதனைச் சரியாக நிறைவேற்றாவிடில் சகலரும் குற்றவாளிகளாகி விடுவார்கள்.

சன்மார்க்கக் கடமைகளில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஸஹாபாக்கள், தாபிஈன்கள் முதலானோரும் காட்டிய வழியே சரியான தாகும். அதுவே அல்லாஹ்வின் திருப்தி யைத் தரவல்ல நேரிய வழியாகும். அவைகளுக்கு மாற்றமான சம்பிரதாயங்கள், ஸுன்னத்துக்கு மாற்ற மான (மக்களைத் திருப்திப்படுத்தக் கூடிய நமது சிந்தனைக்கு அழகாகத் தெரியக் கூடியன) எவையும் சரியான வழியாகாது. நிச்சயமாக வழிகளில் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வழியாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

( ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின் வருமாறு கூறினார்கள். ‘எவரையேனும் பின்தொடர விரும்புபவன் அல்லாஹ்வின் தூதரையும் தோழர்களை யும் பின்தொடரட்டும். நிச்சயமாக அவர் களே இந்த உம்மத்தில் தோன்றிய நல்லுள் ளம் படைத்தோரும், ஆழ்ந்த அறிவுடை யோரும், சிரமத்தில் குறைந்தவர் களும், நேரிய வழியில் இருந்தோரும், நல் நிலை யிலிருந்தோரும் ஆவர். தன் நபியின் தோழமைக்கும் தீனை நிலை நாட்டவும் அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களின் சிறப்பை அறிந்து அவர்களின் வழியைத் தொடருங்கள். நிச்சயமாக அவர்கள் நேர்வழியில் உள்ளனர்”. (முஸ்னத் அஹ்மத் )

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

இவற்றைத் தவிர்ப்போம்

1. ஜனாஸாவை வைத்துக் கொண்டு ஓலமிடுவதை;

2.  ஜனாஸாவை சூழ பெண்கள் அமர்வதை;

3. வருவோர் போவோருக்கு குளிர்ப்பானங்கள் பரிமாறு வதை

4. ஜனாஸாவை பார்க்க வருவோருக்கு விருந்து கொடுப்பதை

குளிப்பாட்டும் போது

1. திறந்த இடத்தில் மையித்தை குளிப்பாட்டுவதை,

2. அவ்ரத்தை மூடாது குளிப்பாட்டுவதை,

3. எல்லோருமே தண்ணீர் ஊற்றச் செய்வதை,

4. ஒரு கோப்பைத் தண்ணீரை எல்லோரும் தொட்டு வரச் செய்வதை,

கபன் செய்யும் போது

1. காலமானவரின் நெற்றியில் அத்தர், பன்னீர் போன்றவற்றால் கலிமா எழுதுவதை,

2. ஜனாஸா தன்னைத் தொழச் செய்வித்தலை (அதாவது ஜனாஸாவை தக்பீர் கட்டி தொழுவது போன்று செய்விப்பதை),

3. மஹ்ரமி, அஜ்னபீ என்ற பாகுபடின்றி ஜனாஸாவைப் பார்ப்பதை,

4. ஜனாஸாவுக்கு உள்ளாடை, காற்சட்டை முதலியன அணிவிப்பதை,

கபன் செய்து முடிந்த பின்

1.   காலமானவரது ஜனாஸாவை மனைவி பார்க்காது தடுப்பதை,

2.   காலமான கணவனின் ஜனாஸாவூக்கு அண்மையில் மனைவி சென்று மஹர் ஹலால் எனக் கூறுவதை. ஜனாஸா ஒரு குழந்தையாயின் அதனிடம் தாய் சென்று பால் ஹலால் எனக் கூறுவதை,

3. எந்த அவசியமுமின்றி ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துவதை,

4. தொழுகை ஆரம்பிக்கும் வரை ஸூரதுல் இக்லாஸ் ஓதிக் கொண்டிருப்பதை,

ஜனாஸாவை சுமந்து செல்லும் போது

1. ஜனாஸாவுக்கு மேலால் அல்லது சந்தூக்குக்கு மேலால் மலர் வைப்பதை,

2. ஜனாஸாவை வீட்டிலிருந்து எடுத்து செல்கையில் பாங்கு சொல்வதை,

3. திக்ர், பைத்து முதலியன கூறி சப்தமிட்டுக் கொண்டு ஜனாஸாவை சுமந்து செல்வதை,

4. கதைத்துக் கொண்டு போவதை,

அடக்கம் செய்த பின்

1. மையித்து நடைபெற்ற வீட்டில் காலமானவர் உறங்கிய இடத்தில் விளக்கேற்றுவதை,

2. ஜனாஸா நடைபெற்ற வீட்டார் சில தினங்கள் விழித்திருப்பதை,

3. கப்ரினுள் பாங்கு சொல்வதை,

4. கணவனையிழந்த பெண் மூன்று தினங்கள் கழியும் வரை இத்தாவைப் பிற்படுத்துவதை,

ஜனாஸாவுக்குரிய கடமைகள் முடிந்தபின்

1. கணவனையிழந்த பெண் இத்தா இருப்பதற்கான விசேட குளிப்பு நிறைவேற்றுவதை,

2. 40 நாட்கள் மட்டும் வபாத்துக்குரிய இத்தாவை அனுஷ்டித்தலை,

3. 40 நாள் தான் வீட்டிலிருந்து ரூஹ் செல்வதாக நம்பி அத்தினத்தில் சடங்குகள் செய்வதை,

4. 40 ம் நாள் கப்ரை புடவையால் மூடுவதை,

சகல கடமைகளின் பின்னும்

1. மையித்து வீட்டை தீட்டுள்ள இடமாகக் கருதுவதை;

2. கணவனை இழந்த பெண்ளை திருமண வைபவங்களில் கலந்து கொள்ளாமல் தடுப்பதை;

3.வபாத்துடைய இத்தாக் கழிப்பவர்கள் கர்ப்ப ஸ்தீரிகளை காணாது தடுப்பதை ;

4. இத்தாவைக் கழித்த பெண் முதல் நாள் ஒரு ஆண் முகத்தில் விழிப்பது;

போன்ற விடயங்களைத் தவிர்ந்து நடப்போமாக.

ஜனாஸாவுடன் சம்பந்தப்பட்ட சில துஆக்கள்.

ரூஹ் பிரிந்து விட்டால்

بِسْمِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

என்று சொல்லி இரண்டு கண்களையும் கசக்கி மூடிவிட

வேண்டும்.

மரணச் செய்தி எட்டிய ஒருவர்

إِنَّا ِللهِ وَإِنَّا اِلَيْهِ رَاجِعُوْن

(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே வாழ்கின்றௌம். மேலும் அவனிடமே மீளுவோம்) எனக் கூறவேண்டும்

ஜனாஸாவொன்று சுமந்து செல்லப்படுவதைக் காண்பவர்:

سُبْحَانَ الْحَيّ الَّذِىْ لاَ يَمُوْتُ

'மரணமின்றி நிலைத்திருக்கும் நித்தியனான அல்லாஹ் வைத் தூய்மைப்படுத்துகின்றேன்.’ என கூறுவார்.

ஜனாஸாத் தொழுகையின் போது முதலாவது தக்பீருக்குப் பிறகு ஸூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும். இரண்டாவது தக்பீருக்குப் பிறகு ஸலவாத்து ஓதுதல் (அத்தஹிய்யாத்தில் ஓதப்படும் ஸலவாத்து ஏற்ற முடையது)

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ فِي العَالَمِيْنَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

மூன்றாவது தக்பீருக்குப் பிறகு, ஜனாஸாவின் பாவ மன்னிப்புக்காக துஆக் கேட்டல்.

اللَّهُمَّ اغْفِرْ لَهُ، وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

“யா அல்லாஹ்! இந்த மையித்தை மன்னித்துக் கிருபை செய்வாயாக! (கப்ரில்) உன் தண்டனையிலிருந்து காத்த ருள்வாயாக. அவரது தவறுகளைப் பொறுத்தருள் வாயாக. அவருக்குரிய உபகாரத்தை கண்ணியமாக ஆக்குவாயாக. அவரது கப்ரை விசாலப்படுத்துவாயாக. வெள்ளாடைகள் அழுக்கிலிருந்து தண்ணீர், பனி, முதலிய வற்றால் தூய்மைப்படுத்துவது போல் அவரது பாவங் களை விட்டும் தூய்மைப்படுத்துவாயாக. அவரது வீட்டை விட சிறந்த வீட்டையும் அவரது மனைவி யை விட சிறந்த மனைவியையும் கொடுத்தருள்வாயாக. அவரை சுவனம் நுழையச் செய்து கப்ரின் வேதனை, நரகின் தண்டனை என்பவற்றிலிருந்து காத்தருள் வாயாக."

اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ اللَّهُمَّ لاَ تَحْرِمْنَا اَجَرَهُ وَلاَ تُضِلَّنَا بَعْدَهُ

“யா அல்லாஹ்! எம்மில் வாழ்வோர், வபாத்தானோர், இங்கு சமூகமளித்தோர், சமூகமளிக்காதோர், சிறியோர், பெரியோர், ஆண், பெண் ஆகிய எல்லோரையும் மன்னித்தருள்வாயாக. யா அல்லாஹ் எம்மில் எவரையும் வாழச் செய்வாயாயின் இஸ்லாத்திலே வாழ வைப்பாயாக. எவரையேனும் மரணிக்கச் செய்தால் ஈமானோடு மரணிக்கச் செய்வாயாக. (அவரது இழப்புக்காக பொறுமை கொள்ளும்) எமது கூலியைத் தடுத்துவிடாதே. அவரது மரணத்தின் பின் நாம் வழி தவறிவிடாது காத்தருள்வாயாக! மையித்தைக் கப்ரினுள் வைக்கும் போது

بِسْمِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

என்று கூறுவதோடு மையித்தை வலப் புறமாக கிப்லாவை நோக்கிய வண்ணம் கப்ரில் வைக்க வேண்டும். அனுதாபம் தெரிவிக்கச் செல்வோர்

اَعْظَمَ اللهُ أَجَرَكَ وَاَحْسَنَ عَزَآءَكَ وَغَفَرَ لِمَيِّتِكَ

அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தந்தருள் வானாக. உங்கள் கவலையைப் போக்கு வானாக. மேலும் உங்கள் காலஞ் சென்ற வரை மன்னிப்பானாக.

தமக்கு வேண்டியவர்களின் கப்ருகளை ஸியாரத் செய்யச் செல்பவர்கள் பின்வரு மாறு சொல்ல வேண்டும்.

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنْ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ تَعَالىَ بِكُمْ لاَحِقُوْنَ

முஃமின் கூட்டத்தவரே உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக நாங்களும் இன்ஷா அல்லாஹ் உங்களை வந்தடைவோம்.

உசாத்துணை

1. அல் குர்ஆன்

2. தப்ஸீர் இப்னி கதீர்

3. ஸஹீஹுல் புகாரி

4. ஸஹீஹ் முஸ்லிம்

5. ஸுனன் அபூதாவூத்

6. அல்ஜாமிஉத் திர்மிதி

7. ஸுனுன் நஸாஈ

8. ஸுனன் இப்னிமாஜா

9. ஸுனனுத் தாரிமி

10. அல் முவத்தா

11. பத்ஹுல் பாரீ

12. ரியாலுஸ் ஸாலிஹீன்

13. அல் அத்கார்

14. அல் பிக்ஹுல் இஸ்லாமீ

15. உம்ததுஸ் ஸாலிக்

16. இஆனதுத் தாலிபீன்

17. கிதாபுல் பதாவா (இஸ்ஸுப்னு அப்திஸ்ஸலாம்)

18. அல்மஹல்லீ ஹாஷியது உமைரா

 முடிவரை

اللَّهُمَّ انْفَعْنِيْ بِمَا عَلَّمْتَنِيْ وَعَلِّمْنِيْ مَا يَنْفَعُنِيْ وَارْزُقْنِيْ عِلْمًا يَّنْفَعُنِيْ

யா அல்லாஹ்! எனக்குக் கற்றுத் தந்தவை மூலம் பயன்பெறச் செய்வாயாக. எனக்கு பயனுள்ளதையே கற்றுத் தருவாயாக. எனக்குப் பயனுள்ள அறிவைத் தந்தருள் வாயாக ஆமீன்.

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றைப் புதிதாக உண்டு பண்ணி விட்டு அதனை சன்மார்க் கத்தை சேர்ந்த சிறந்த ஒன்றாகக் கருதுப வன் நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவப் பணியில் மோசம் செய்து விட்டார் எனக் கூறியதற்கு சமமாவார். இன்றைய தினம் உங்கள் சன்மார்க்கத்தை சம்பூர்ணப் படுத்தி விட்டேன் என அல்லாஹ் கூறியுள்ளான். எனவே எம் மார்க்கம் அருளப் படுங்கால் சன்மார்க்க அனுஷ்டானமாக இருக்காத ஒன்று இன்று சன்மார்க்கத்தை சேர்ந்ததாக ஆக்க முடியாது என இமாமுல் மதீனா மாலிக் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் இமாம் இப்னுல் மாஜிசூன் ரஹ்மதுல்லாஹ்