ஜனாஸாவுக்குரிய கடமைகள் ()

முஹம்மத் இம்தியாஸ்

ஜனாஸாவுக்கு கெய்யவேண்டிய இஸலாமிய கடமைகள், அனைவரும் அறிந்துக் கொள்வதற்கு வேண்டிய சுன்னாவின அடிப் படையில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.

|

 ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

 இம்தியாஸ் யூசுப் ஸலபி

ஒருவர் மரணித்தது முதல் அடக்கம் செய்யப்படும்வரை செய்ய வேண்டிய ஒழுங்கு களை –மார்க்ககிரிகைகளை பித்ஆவை விட்டுவிட்டு சுன்னாவின் தெளிவான ஆதாரங்களுடன்     ஒவ்வாருவரும் விளங்கி செயற்படுத்திட வேண்டும் குறிப்பாக பிள்ளைகள் தங்களது பெற்றோர்களுக்காக தாங்களே முன்வந்து இக்கடமைகளை செய்திட படித்துக் கொள்ளவேண்டும். இதன் நிமித்தமே ஜனாஸா கடமைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் இங்கே விபரித்துள்ளேன்.

மரணத்தருவாயில் இருப்பவருக்கு கலிமாவை சொல்லிக் கொடுத்தல்:

- لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ

உங்களில் மரணத்தருவாயில் இருப்ப வருக்கு லாஇலாஹ இல்லல்லாஹு என்று சொல்லிக் கொடுங்கள்.

مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ

யாருடைய கடைசி வார்த்தை லாஇலாஹ இல்லல்லாஹு என்றிருக்கிறதோ அவர் என்றாவது ஒருநாள் சுவர்க்கத்தில் நுழைந்துவிடுவார். என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் முஆத் (ரலி), ஆதாரம்: அபூதாவூத்(3116) முஸ்லிம் (916),

மரணத்தருவாயில் இருப்பவருக்கு மிக அருகாமையில் இருந்து அவரது காதுக்கு கேட்கும் விதத்தில் கலீமாவை சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனை தல்கீன் என்றும் கூறப்படும். அது தவிர யாஸீன் சூரா ஓத வேண்டும் என்று கூறுவதற்கு ஸஹீஹான ஹதீஸ் எதுவுமில்லை. (இது பற்றிய விபரத்தை மரணித்தவருக்கு பயனளிப்பவை என்ற  கட்டுரையில் பார்க்கவும்)

மையத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி வைக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. விரும்பினால் அத்திசையில் வைக்கலாம்.  ஆனால் இது பற்றி வரக்கூடிய ஹதீஸ் பலஹீனமானதாகும்.

 உயிர் பிரிந்து விட்டால்:-

·       கடுமையின்றி இலேசாக மையத்தின் உடல் உறுப்புக்களை வளைத்து மடித்து நீட்டி வைக்க வேண்டும். அதனால் மையத்தை குளிப்பாட்டுவதற்கு இலகு வாக இருக்கும்.

 மையத்தின் கைகளை எடுத்து தக்பீர் கட்டி வைக்க வேண்டும் என்பது மார்க் கட்டளையல்ல.  ‘‘மையத்தின் இரு கைகளையும் விலாப் புறங்களுடன் இணைத்து வைக்க வேண்டும் என்று இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: அல்உம்மு 1ஃ281)

·       கண்கள் திறந்திருந்தால் இலேசாக கசக்கி மூடவேண்டும். மையித்தை முழு  மையாக மூடி வைக்க வேண்டும். மையத்தை பாரக்கும் போது நெற்றியில் முத்தமிட்டு கொள்ளலாம். அந்நேரத்தில் நல்ல வார்த்தைகளை கூற வேண்டும். பொறுமையை கைக் கொள்ளவேண்டும்.

صحيح مسلم (2ஃ 634)

عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: دَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي سَلَمَةَ وَقَدْ شَقَّ بَصَرُهُ، فَأَغْمَضَهُ، ثُمَّ قَالَ: «إِنَّ الرُّوحَ إِذَا قُبِضَ تَبِعَهُ الْبَصَرُ»، فَضَجَّ نَاسٌ مِنْ أَهْلِهِ، فَقَالَ: «لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ إِلَّا بِخَيْرٍ، فَإِنَّ الْمَلَائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ»

என் கணவர் அபூ ஸலமா (ரலி) மரண மடைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் வந்தார் கள். அப்போது என் கணவரின் கண்கள் திருந்திருந்தன. நபியவர்கள் இலேசாக கசக்கி கண்களை மூடிவிட்டு உயிர் கைப்பற்றப்பட்டவுடன் பார்வை அதனை நோக் கியே தொடர்ந்துவிடுகிறது என கூறினார்கள். இதனைக் கேட்ட மக்கள் நடுக்க முற்று அழுதார்கள். நீங்கள் உங்களைப் பற்றி நன்மையான சொல்லையே உபயோ கித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கூறுபவற்றுக்கு வானவர்கள் ஆமீன் கூறு கிறார்கள் என நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) நூல்: முஸ்லிம்)

Ø                நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தியை கேள்விப்பட்ட) அபூபக்கர் (ரலி) அவர்கள் ஸுன்ஹ் என்னுமிடத்திலுள்ள தமது வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ந்நபவி)க்கு வந்திறங்கி யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந் தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் அடை யாள மிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்டு இருக்கும் நிலையை கண்டார்கள். உடனே அபூபக்கர் (ரலி) நபி (ஸல்) அவர்களின் முகத்திலுள்ள துணியை அகற்றிவிட்டு அவர்கள் முத்தமிட்டு விட்டு அழுதார்கள். பின்பு அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பண மாகட்டும்! அல்லாஹ் உங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்த வில்லை. உங்கள் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை நீங்கள் அடைந்து விட்டீர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அயிஷா (ரலி) நூல்: புகாரி(1241)

 பொறுமையை கையாளுதல்

ü  துன்பத்தின் போது பொறுமையை இழந்து விடாமல் தான் அடைந் திருக்கும் துன்பத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். அபூஸலமா (ரலி) அவர்கள் மரணித்த போது அவர்களது மனைவி உம்மு ஸலமாவுக்கு பின்வரும் துஆவை கூறுமாறு நபி(ஸல்) கற்றுக் கொடுத்தார்கள்.

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا، إِلَّا أَخْلَفَ اللهُ لَهُ خَيْرًا مِنْهَا

ü  நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். அவனிடமே மீள்வோம். யாஅல்லாஹ்! நான் அடைந்திருக்கின்ற துன்பத்திறகு நீகூலியை தந்து அந்த துன்பத்திற்கு பகரமாக நல்லதொன்றை தருவாயாக என்று முஸ்லிமை பீடிக்கின்ற எந்த துன்பத்தின் போது கூறினால் அதற்கு பகரமாக நல்லதை அல்லாஹ் கொடுப்பான்.( நூல்:முஸ்லிம்)

 செய்யக் கூடாதவைகள்:-

عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ شَقَّ الْجُيُوبَ، وَضَرَبَ الْخُدُودَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ»

(சோகத்தை வெளிப்படுத்தும்போது நெஞ்சில் அடித்துக் கொண்டு)  சட்டைகளை கிழித்துக் கொண்டும் கன்னங்களில் அடித்துக் கொண்டும்;, அறியாமைக் கால வாசகங்களை கூறி  அழுபவர்களும் எங்களைச் சார்ந்தவர்களல்ல என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி), ஆதாரம்: புகாரி(1294), திர்மிதி(999), முஸ்லிம்-(934)

அல்லாஹ்வின் மீது தவக்குல்வைத்து நன்மையை எதிர்பார்த்திருப்பதே இறை விசுவாசியின் சிறந்த பண்பாகும்.

 மையித்தை பார்க்கும் போது

Ø    மையித்தை பார்க்கும் போது நபி(ஸல்)அவர்கள் கற்றுத்தந்த துஆவை கூறவேண்டும். 

Ø  நோயாளியையும் மையத்தையும் பார்க்கும் போது கூறக்கூடிய துஆவுக்கு மலக்குகள் ஆமீன் கூறுகிறார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்;.(முஸ்லிம்)

அபூ ஸல்மா (ரலி) மரணித்தபோது நபி (ஸல்) அவர்கள் வந்து பார்த்து பின் வருமாறு துஆச் செய்தார்கள்.

اللهُمَّ اغْفِرْ لِأَبِي سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ

பொருள்: யா அல்லாஹ்! அபூஸல்மாவை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களில் அவரது பதவியை உயர்த்துவாயாக! அவர் விட்டுச் செல்லும் மக்களுக்கு அவருக்குப் பகரமாக ஒருவரை ஏற்படுத்துவாயாக! அகில உலகங்களின் இரட்சகனே! எங்களையும் அவரையும் மன்னிப்பாயாக! அவரது கப்ரை விசாலமாக்கு வாயாக! அதிலே ஒளியை ஏற்படுத்துவாயாக! (அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) ஆதாரம்: முஸ்லிம் (920), அபூதாவூத்(3118)

மரணித்தவரின் (அபூ ஸலமா(ரலி)யின்) பெயரை கூறி நபியவர்கள் துஆ செய்தத னால் நாமும் பார்க்கச் செல்லும் மையத்தின் பெயரைக் கூறி இதே துஆவை ஓத வேண்டும். பலருக்கு இந்த துஆ தெரியாததனால் பாதிஹாவை ஓதி விட்டு இன்னும் சிலர் ஸலவாத்தை ஓதிவிட்டு வருகிறார்கள். இது தவறாகும். மேல் குறிப்பிட்ட துஆவை ஓத பழக்கமாகக்கிக் கொள்ள வேண்டும். இந்த துஆவின் மூலம் இரண்டு விடயங் களை நபியவர்கள் கற்றுத் தருகிறார்கள். ஒன்று மையத்திற்கு பிழைபொறுப்பு தேடு வது. இரண்டாவது மையத்தின் குடும்பத் திற்காக சிறந்த ஒருவரை அவருக்குப் பகர மாக ஆக்கிக் கொடு என்பதாகும்.

 நல்ல மையத்தின் அடையாளங்கள்.

ஒரு முஃமினின் மரணத்தருவாய் நல்லதாக அமைந்தது என்பதை அடையாளம் காண்பதையும் அல்லாஹ்வின் திருப்திக்கான மரணம் எப்படியானதாக இருக்கும் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

ü  ஒரு விசுவாசியின் மரணத் தருவாயில் நெற்றி வியர்த்திருக்கும். (ஆதாரம் அஹ்மத்)

ü  மேலும் யுத்தத்தில் கொல்லப்படுதல்,

ü  யுத்தத்தின் போது நோயுற்று மரணித்தல்,

ü  பிரசவத்தால் மரணித்தல்,

ü  வயிற்றோட்டத்தினால் மரணித்தல்,

ü  பிளேக், பாரிசவாத, சயரோக நோயினால் மரணமடைதல்,

ü  (நீரில்) மூழ்கியும் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியும், தீயினாலும் மரணமடைந்தல்,

ü  தன் உயிர், மானம், மரியாதை, குடும்பம், பொருட்களைப் பாதுகாக்க போராடி மரணித்தல்.

ü  அசத்தியத்தை எதிர்த்து சத்தியத்திற்காக (போராடி) கொல்லப் படுதல். (அல்லாஹ்வுக்கு இணைவைக்காதவர்களாக மரணித்தால்) இவர்கள் அனைவரும் ஷஹீத் (தியாகி)கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதா வூத், இப்னுமாஜா, அஹ்மத், நஸயீ)

 மையத்தை குளிப்பாட்டுதல்:

மையித்தைக் குளிப்பாட்டுவதற்கு குடும்பத்தவர்கள், உறவினர்கள் முன்வரவேண் டும்! கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் குளிப்பாட்ட முற்பட வேண்டும்.

(என் மனiவி) ஆயிஷாவே! நீ எனக்கு முன் மரணித்தால் நானே உன்னை குளிப்பாட்டி கபன் செய்து தொழுவித்து அடக்கம் செய்வேன்|| எனநபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:அஹ்மத், இப்னுமாஜா-1465)

அபூபக்கர் (ரலி) அவர்கள் மரணித்தபோது அவர்களுடைய மனைவி அஸ்மா (ரலி) குளிப்பாட்டினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பினத் உமைஸ் (ரலி), ஆதாரம்: முஅத்தா-304, பைஹகி)

பாத்திமா (ரலி) மரணித்தபோது அவர்களுடைய கணவன் அலி (ரலி) அவர்கள் குளிப்பாட்டினார்கள். (அறிவிப்பவர்: அஸ்மா பினத் உமைஸ் (ரலி), ஆதாரம்: பைஹகி பாகம்1, பக்கம் 396)

மையத்தை குளிப்பாட்டும் விடயத்தில் கண்டிப்பாக குடும்ப அங்கத்தவர்கள் உற வினர்கள் பங்கெடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மையத்தை குளிப்பாட்டி கபன் செய்யும் முறையை கட்டாயம் படித்துக் கொள்ள வேண்டும் என் பதை மேலேயுள்ள ஹதீஸ்கள் எமக்குக் கூறுகின்றன.

உலகத்தில் எத்தனையோ பட்டப்படிப்பு (கல்வி) முறைகளுக்கு பணம் செலவழித்து பிள்ளைககளை படிக்க வைக்கிறார்கள். ஆனால் பெற்றோர் இறந்தால் பிள்ளைகள் குளிப்பாட்டி கபன் செய்ய வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொடுக்க பெற்றோர் கள் மறந்து விடுகிறார்கள்.

பொதுவாக மையத்தை குளிப்பாட்டி கபன் செய்வதற்கு இரண்டாயிரம் ரூபா கூலி கேட்கிறார்கள். தன்னுடைய தாய் தந்தை சகோதரர்களை குளிப்பாட்டி கபன் செய்யத் தெரியாத பிள்ளைகள், அந்த காரியங்களை செய்வதற்கு இன்னுமொரு வரிடம் கூலிக்கு கொடுத்துவிடுகின்ற அவலம் நிறைந்த காட்சியை நாள்தோறும் பார்த்து வருகிறோம்.

குழந்தையை பெற்றெடுத்து சீராட்டி தாலாட்டி பாலூட்டி கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு அவர்களது கடைசி நேரத்தில் நடைபெறும் குளிப்பாட் டுதல் கபன் செய்தல் தொழுவித்தல் துஆச் செய்தல் போன்ற அடிப்படையான விடயங்கள் கூட பிள்ளைகளால் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை முஸ்லிம் குடும்பங்களில் காணப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். ஒவ்வொருவரும் தங்க ளது குடும்பங்களில் நடைபெறும் ஜனாஸாவின் காரியங்களை படித்து செயலாற்ற முன்வர வேண்டும். குடும்பத்தில் பெண்கள் பெண்களுடைய விடயத்திலும் ஆண்கள் ஆண்களுடைய விடயத்திலும் செயலாற்ற வேண்டும்.

 குளிப்பாட்டும் ஒழுங்குகள்:-

மையித்தை குளிப்பாட்டும்போது வலப்புறத்திலிருந்தும் வுழூச் செய்யும் இடங்களை கொண்டும் ஆரம்பிக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி), ஆதாரம் : புகாரி(1255), முஸ்லிம்(939)

Ø  குளிப்பாட்டுபவர் தன் கையை ஒரு துணியால் சுற்றிக் கொள்ள வேண்டும். மையித்தின் ஆடைகளை அகற்றிவிட்டு ஒரு துணியால் மையத்தை மூடிக் கொண்டு கையை விட்டு தேய்த்துக் கழுவி குளிப் பாட்ட வேண்டும்.

Ø  குளிப்பாட்டும்போது அடிவயிற்றை இலேசாக அழுத்த வேண்டும். அதன் மூலம் வயிற்றினுள் தேங்கிக் கிடக்கும் மலசலம் போன்ற அசுத்தங்கள் வெளியாகும். கர்ப்பிணிகளுக்கு இவ்வாறு செய்யலாகாது. உயிருள்ள மனிதன் எவ்வாறு குளித்து சுத்தமாகுவானோ அதுபோலவே மையத்தையும் அழுக் கிலிருந்து சுத்தப்படுத்தி குளிப்பாட்ட வேண்டும்.

Ø  குளிப்பாட்டும் இடத்தில் சாம்பிராணி புகைபோன்ற நறுமணங்கள் போடவேண் டும். அதன் மூலம் துர்வாடையை உணரா திருக்கச் செய்ய முடியும்.

Ø  மையத்தை குளிப்பாட்டும்போது ஒற்றைப்படையாக குளிப்பாட்ட வேண்டும். அதாவது மூன்று முறை அல்லது ஐந்து முறை அல்லது ஏழு முறை என்ற ஒற்றைக்கணக்கில் குளிப்பாட்ட வேண்டும். கடைசியாக குளிப்பாட்டும்போது கற்பூரம் போன்ற வாசனை (ளழயி சவர்க்கார) பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். குளிப்பாட்டிய பிறகு நன்றாக துடைக்க வேண்டும். ஆண் மற்றும் பெண் மையத்தை குளிப்பாட்டும் பொதுவான ஒழுங்கு முறை இதுதான். எனினும்

பெண் மையத்தினை குளிப்பாட்டிய பிறகு தலைமுடியை (பிரித்து) மூன்று பின்னலாக பிண்ணி முதுகுப் புறத்தில் போட வேண்டும்.

Ø  நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள் அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அதற்கும் அதிகமாக தடவைகள் குளிப்பாட்டுங் கள். கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடிந்ததும் எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்கள்.

குளிப்பாட்டி முடிந்ததும் நாங்க்ள நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்தோம். அப் போது அவர்கள் தமது கீழாடையைத் தந்து அதை அவரது உடலில் சுற்றுங்கள் எனக் கூறினார்கள் என உம்முஅதிய்யா (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஹப்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில்: ஒற்றைப்படையாகக் குளிப்பாட் டுங்கள். மூன்றுஅல்லது ஐந்து அல்லது ஏழு தடவைகள் குளிப்பாட்டுங்கள். குளிப் பாட்டும்போது அவரது (மையத்து) வலப் புறத்திலிருந்தும் வுழூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும், நாங்கள் அவருக்கு (மையத்திற்கு) தலைவாரி மூன்று சடைகள் (பின்னல்கள்) பின்னினோம் என உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் உள்ளது (நூல்: புகாரி (1262) முஸ்லிம்(939) திர்மிதி(990)

Ø  நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டத் தொடங்கியபோதே நாம் வழமையாக மரணித்தவரின் ஆடைகளை களைந்து விட்டுக் குளிப்பாட்டுவதுபோல் இறைத் தூதரின் ஆடைகளையும் களைந்து குளிப்பாட்டுவதா? அல்லது ஆடையுட னேயே நபி யவர்களை குளிப்பாட்டுவதா? என்று நபித்தோழர்கள் தர்க்கித்துக் கொண்டிருந் தார்கள்.

இவர்கள் இவ்வாறு தர்க்கித்துக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு அல்லாஹ் தூக்கத்தை உண்டாக்கினான். நபித்தோழர்கள் எல்லோரும் அந்த இடத்திலேயே உட்கார்ந்து உறங்கிவிட்டார்கள். எல்லோருடைய தாடியும் நெஞ்சின் மீது படிந்தது. பின்பு அடையாளம் காணமுடியாத ஒருவர் வீட்டுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு நபியவர்கள் அணிந்திருக்கும் ஆடையுடனேயே குளிப்பாட்டுங்கள் என்று கூறினார்.

திடுக்கிட்டு எழுந்த நபித் தோழர்கள் நபியவர்களின் ஆடைகளைக் களையாது ஆடைக்கு மேலாக தண்ணீர் ஊற்றி நபியவர்கள் அணிந்திருந்த ஆடையினாலேயே உடலைத் தேய்த்துக் குளிப்பாட்டினார்கள். நபியவர்களைக் குளிப்பாட்டும் வேலைக்கு நான் முந்தியிருந்தால் நபியவர்களின் மனைவியரைத் தவிர வேறு யாரும் நபியவர் களைக் குளிப்பாட்ட விட்டிருக்க மாட்டேன் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: அபூதாவூத் 2\60, இப்னூஜா 1\446, அஹ்மத் 6\267)

மையித்தை குளிப்பாட்டிய பின் மையித்திற்கு வுழூச் செய்து விடுகின்ற ஒரு நிலை யை பார்க்கிறோம். இதற்கான ஹதீஸை காண முடியவில்லை.

மையத்தை குளிப்பாட்டி கொண்டிருக்கும் போது கடைசியாக கழுவும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில்  எடுத்து அதனை குடும்ப உறுப்பினர்கள் தொட்டுத் தரவேண்டும் என்று கொடுத்து அனுப்புகிறார்கள். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அப்பாத்தி ரத்தை தொட்டுப் பிடித்துத் தரும்வரை மையத்தை குளிப்பாட்டாது ஊர வைத்து விட்டு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த பாத்திரத்தின் நீர் வந்ததும் குளிப்பாட்டி முடிப்பார்கள்.

இது இஸ்லாத்தில் சொல்லப்பட்ட வழிமுறையல்ல. அதனை இஸ்லாத்தின் பெயரால் சிலர் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இது நல்ல காரியமாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியிருப்பார்கள்.

Ø  மையித்தை குளிப்பாட்டுபவர்கள் அத னது குறைகளை அசுத்தங்களை யாரிட மும் சொல்லக் கூடாது.

Ø  ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டி அவரிலுள்ள குறைபாடுகளை வெளியிடாது மறைத்துக் கொண்டால் நாற்பது முறை அல்லாஹ் குளிப்பாட்டியவனை மன்னிக்கி றான். கப்ரு தோண்டியவனுக்கு நல்லிருப் பிடத்தை மறுமை வரை அளிக்கிறான். கபனிட்டவனுக்கு அல்லாஹ் மறுமையில் சுவர்க்கத்தில் மெல்லியதும் அழுத்தமானது மான உடைகளை அணிவிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப் பவர்: அபூராபிஃ (ரலி) நூல்: பைஹகி 3\362, ஹாகிம் 1\354)

Ø  மையித்தை குளிப்பாட்டியவர் கண்டிப்பாக குளிக்க வேண்டும் என்ற அவசிய மில்லை. மாறாக கைகளை நன்றாக கழுவிக் கொண்டால் போதுமானதாகும்.

 உங்களில் ஒருவரின் மையத்தை குளிப்பாட்டுவதனால் நீங்கள் குளிக்க வேண்டி யதில்லை. ஏனெனில் உங்கள் மையத்து நஜீஸ் அல்ல. நீங்கள் உங்கள் கைகளை மட்டும் கழுவிக் கொண்டால் போதுமான தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: ஹாகிம் 1\386, பைஹகீ 3\398)

Ø  யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை அவர்களது காயங்களுடன், ஆடைகளுடன் கபன் செய்து குளிப்பாட்டாமல் தொழு வித்து அடக்கம் செய்ய வேண்டும். (நூல்: புகாரி(1343)

Ø  ஹஜ் அல்லது உம்ராவுக்குச் சென்றவர் இஹ்ராம் அணிந்த நிலையில் மரணித்தால் குளிப்பாட்டி அவரது இஹ்ராம் துணியைக் கொண்டு கபன் செய்து தொழுவித்து அடக்கம் செய்ய வேண்டும்.

(இஹ்ராம் அணிந்த) ஒருவர், அரபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர் தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்து விட்டார். அது அவரது கழுத்தை முறித்துவிட்டது. (அதனால் அவர் இறந்து விட்டார்) அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது தலையை மறைக்கவும் வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி(1268), முஸ்லிம்)

மையத்தை குளிப்பாட்டும்போது கலீமா கூறி பாத்திஹா ஓதி சிலர் குளிப்பாட்டு கிறார்கள். இதுவும் நபி வழியில் இல்லாததாகும். உயிரோடு இருப்பவர் எப்படி குளிப்பாரோ அதுபோல்தான் மரணித்தவரையும் குளிப்பாட்ட வேண்டும்.

 கபன் செய்தல்:-

வெண்மையான ஆடைகளைக் கொண்டே உங்களில் இறந்தவருக்கு கபன் செய்யுங் கள் என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி-994, இப்னுமாஜா-1472)

Ø  ஆண் மையத்தின் கபன் துணி

மூன்று (நீண்ட) துணிகளாகும்! இவை ஒரே அளவுள்ளதாக இருக்க வேண்டும்|| இதைக் கொண்டு மையத்தைச் சுற்றிக் கபனிட வேண்டும். முதலில் வலது பக்கமா கவும் அடுத்து இடது பக்கமாகச் சுற்றி கபனிட வேண்டும்.

நபி (ஸல்) அவர்களுக்கு தலைப்பா கையோ, கமிசையோ இல்லாமல் மூன்று (துணி) வெள்ளைப் புடவைகளால் கபன் செய்யப்பட்டது என ஆயிஷா (ரலி) அவர் கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புகாரி(1271), முஸ்லிம்(941), திர்மிதி(996), அபூதாவூத்(3151)

தொப்பி, தலைப்பாகை, கமீஸ் என்பவைகளை அணிவித்து கபன் செய்வது நபிய வர்களுக்கு கபன் செய்த அமைப்புக்கு முரண்பட்டதாகும்.

மையத்தை கபணிடுவதற்கு மூன்று துணியைப் பயன்படுத்தலாம் என்று தெரிகி றது. அது கட்டாயமல்ல. மூன்று துணி கிடைக்காவிட்டால் ஒரு துணியாலும் கபனி டலாம். அல்லது இரு துணியாலும் கபனிடலாம். இவ்வாறு நபித்தோழர்களுக்கு நபி யவர்கள் கபனிட்டுள்ளார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் காண முடிகிறது. (நூல்: புகாரி, முஸ்லிம், முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்)

Ø  பெண் மையித்தின் கபன் துணி:

ஐந்து துண்டுகளைக் கொண்டதாகும். 1. உள்ளாடை 2. கமீஸ் (சட்டை) 3. தலை யை சேர்த்து மூடக் கூடிய) முந்தானை 4,5. இரண்டு நீண்ட துணிகள். (அறிவிப்ப வர்: லைலா பின்த் காளிப் (ரலி), ஆதாரம்: அபூதாவூத்-3157)

இந்த ஹதீஸ் பலவீனமானதாகும் எனஅஷ்ஷேய்க் நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) அவர்கள் தங்களது அஹ்காமுல் ஜனாஇஸ் எனும் நூலில் விளக்கப்படுத்து கிறார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் நூஹ் இப்னு ஹகீம் அஸ்ஸகபி என்பவர் இடம் பெறுகிறார்.இவர் யாரெனத் தெரியாதவர் என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்கள். (நூல்: நஸ்புர் ராயா 2ஃ258) எனவே பெண் மையத்தை முழுமையாக மூடி கபன் செய்வதற்கு தேவையான அளவு துணியை பயன்படுத்தி கொள்ளலாம்.

Ø  கபன் செய்த ஜனாஸாவை வீட்டு வாசலில் பள்ளிவாசலில் வைத்து யாஸின், ராதிபு, அல்பாத்திஹா, குல்உவல்லாஹு அஹத், குல்அஉது பிரப்பில் பலக், குல் அஊது பிரப்பின்னாஸ் அஸ்மாஉல் ஹுஸ்னா ஓதுவதும், ராதிபு வைப் பதும், துஆ பிரார்த்தனை செய்வதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத செயல்களாகும். இயலு மானவரை ஜனாஸாவை விரைவாக அடக்கம் செய்ய முனைய வேண்டும்.

 மௌனமாக விரைவாக எடுத்துச் செல்லல்

صحيح البخاري (2ஃ 86)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ، فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ»

ஜனாஸாவை (சுமந்து செல்லும்போது) விரைந்து கொண்டு செல்லுங்கள். அது (மையத்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து கொண்டு செல்கிறீர்கள். அவ்வாறில்லா விட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களது தோள்களிலிருந்து இறக்கி வைக்கறீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி(1315)

ஜனாஸா ஸன்தூக்கில் வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கைதேசமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல் புகாரி (1314, 1316)

ஜனாஸாவை சுமந்து செல்லும்போது சப்தமிட்டு திக்ருகள் கலிமாக்கள் கூறுவ தற்கு எந்த ஒரு ஹதீஸ் ஆதாரமும் இல்லை. சப்தமின்றி அமைதியான முறை யில் செல்வதே நபி (ஸல்) காட்டிச் சென்ற வழிமுறையாகும். இதற்கு மாற்றமாக சப்தத்தை உயர்த்துவது ஸுன்னாவுக்கு மாற்றமான செயலாகும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை 06-06-1980 (பத்வா) தீர்ப்பு வெளியிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

இமாம் நவவி (ரஹ்) கூறுகிறார்கள்: அறிந்து கொள். ஜனாஸாவுடன் செல்பவர்கள் மௌனமாகச் செல்வதே சரியானதாகும். ஏற்புடையதுமாகும். இவ்வாறுதான் முன்னோர்கள் செய்தனர். குர்ஆன் வசனங்களை ஓதிக் கொண்டும் திக்ருகள் செய்து கொண்டும் சப்தத்தை உயர்த்தக் கூடாது. அமைதியாக செல்வதன் மூலம் ஜனாஸா பற்றிய சிந்தனையும் மரணத்தைப் பற்றிய சிந்தனையும் ஏற்பட வழி பிறக்கிறது. இதுதான் இந்த இடத்தில் தேவையாகிறது. இதுதான் உண்மை நிலை. இதற்கு மாற்றமாக அதிகமானவர்கள் (சப்தமிட்டு திக்ரு குர்ஆன் ஓதி செல்வதைக்) கண்டு ஏமாந்துவிடாதே! (நூல்: அல் அஸ்கார் பக்கம் 203)

 ஜனாஸாத் தொழுகை விபரம்:

Ø  ஜனாஸாவின் காரியங்களில் பங்கேற்கக் கூடியவர் ஜனாஸாவை வீட்டிலிருந்து தூக்கிச் சென்று   தொழுகை நடாத்தி மையவாடிக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யும் வரையிலுள்ள அத்தனை காரியங்களிலும்  பங்கெடுக்க வேண்டும்.இந்த ஒவ்வொரு செயலுக்கும் மகத்தான கூலிகள் கிடைக்கப்பெறுகின்றன.

ஜனாஸா தொழுகைக்காக மக்கள் எல்லோரும் அணிவகுத்து நிற்கும்போது அந்த ஜனாஸாவுக்குரியவர் (இறந்தவர்) கடனாலியாக மரணித்தவரா? யாருக்காவது கடன் தர வேண்டியவராக மரணித்த வரா? என்பதை குடும்பஉறுப்பினர்கள், உறவினர்கள் விசாரித்துக் கொள்ள வேண்டும். கடனாலியாக ஒருவர் மரணித்தால் அது அல்லாஹ் விடத்தில் கடுமையான குற்றமாக கணிக்கப்படும். யுத்தத்தில் பங்கு கொண்டு ஷஹீதாக மரணிக்கின்ற ஒரு மனிதருடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டாலும் அவர் கடனாலியாக மரணித்தால் அதற்கான மன்னிப்பு கிடையாது என்பது நபிமொழி. (நூல்: முஸ்லிம்) எனவே இது விடயத்தில் முஸ்லிம்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பின்வரும் ஹதீ ஸை கவனியுங்கள்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. கொண்டு வந்தவர்கள் நபி (ஸல்) அவர்களை தொழுவிக்கும்படி கூறினார்கள். இவருக்கு (ஜனாஸாவுக்கு) எதேனும் கடனுண்டா என நபியவர்கள் கேட்டார்கள். இல்லை எனக் கூறப்பட்டது. ஏதாவது விட்டுச் சென்றுள்ளாரா? என நபியவர்கள் மீண்டும் கேட்டார்கள். இல்லை எனக் கூறப்பட்டது. நபியவர்கள் அந்த ஜனாஸாவுக்கு தொழுகை நடாத்தினார்கள்.

அதன்பின் இன்னுமொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. நபியவர்களைத் தொழுகை நடாத்தும் படி வேண்டினார்கள். நபியவர்கள் இவருக்கு கடன் ஏதும் உண்டா எனக் கேட்டார்கள். ஆம்| எனக் கூறப்பட்டது. ஏதேனும் விட்டுச் சென்றுள் ளாரா? என நபியவர்கள் மீண்டும் கேட்டார்கள். மூன்று தீனார்களை விட்டுச் சென்றுள்ளார் என பதிலளிக்கப்பட்டது. அந்த ஜனாஸாவுக்கும் நபியவர்கள் தொழுகை நடாத்தினார்கள்.

அதன் பின் மூன்றாவதாகவும் ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. நபியவர்களைத் தொழுகை நடாத்தும் படி வேண்டினார்கள். நபியவர்கள் இவர் ஏதேனும் விட்டுச் சென்றுள்ளரா? எனக் கேட்டார்கள். இல்லை என பதிலளித்தார்கள். ஷஇவருக்கு கடன் ஏதும் உண்டா? எனக் நபியவர்கள் கேட்டார்கள். ஆம் மூன்று தீனார்கள் கடன் உண்டு என பதிலளித்தார்கள். (அப்படியாயின்) உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடாத்துங்கள் என நபியவர்கள் கூறினார்கள். உடனே அபூதர்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! நான் அக்கடனுக்குப் பொறுப்பேற்கிறேன். இவருக்கு (இந்த ஜனாஸாவுக்கு) தொழுகை நடாத்துங்கள் எனக் கேட்டுக் கொண்ட போது நபியவர்கள் அந்த ஜனாஸாவுக்கு தொழுகை நடாத்தினார்கள். (அறிவிப்பவர்: சல்மதிப்னு அக்வல் (ரலி) நூல்: புகாரி(2289)

صحيح مسلم (2ஃ 652)

 أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلَّى عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ، وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ قِيرَاطَانِ»، قِيلَ: وَمَا الْقِيرَاطَانِ؟ قَالَ: «مِثْلُ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ»

Ø  யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. யார் அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத்கள் நன்மையுண்டு என நபி(ஸல்) அவ்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன? என வின வப்பட்டது. அதற்கவர்கள் இரண்டு பெரியமலைகளைப் போன்ற அளவு (நன்மை) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி-1325) (இன்னுமொரு அறிவிப்பில் உஹது மலையளவு என்று உள்ளது)

Ø  ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்காகச் செய்யப்படும் பிரார்த்தனை யாகும். ஆகவே உளத்தூய்மையுடன் பிரார்திக்க வேண்டும்

سنن ابن ماجه (1ஃ 480)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ، فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ»

Ø  நீங்கள் மையித்திற்காகத் தொழுதால் உளத்தூய்iயான மனதுடன் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவூத்-3199, இப்னு மாஜா-1497)

(இந்த பிரார்த்தனை 3வது தக்பீரில் கூறப்பட்டுள்ளது.)

صحيح مسلم (2ஃ 654

 عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ مَيِّتٍ تُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَبْلُغُونَ مِائَةً، كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ، إِلَّا شُفِّعُوا فِيهِ

அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காத 40 (இன்னுமொரு அறிவிப்பில் 100) முஸ்லிம்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டு இறந்தவருக்காக (இந்த) பிரார்த்தனை செய்தால் அவர்களுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்ன அப்பாஸ் (ரலி) ஆதாரம்: முஸ்லிம் (947,948)

·       ஜனாஸா தொழுகை நான்கு தக்பீர்களைக் கொண்டதாகும். புகாரி(1333), முஸ்லிம்(954)

·       மையித்து ஆணாக இருந்தால் தொழ வைக்கும் இமாம் மையித்தின் தலை பகுதிக்கு சமீபத்திலும் பெண் மையித்தாக இருந்தால் மையித்தின் நடுப் பகுதியிலும் நின்று தொழு வைக்க வேண்டும். புகாரி(1241), திர்மிதி (1034), இப்னுமாஜா(1494)

·       1வது தக்பீர் கூறி இரு கைகளையும் கட்டிய பின் அஊது பிஸ்மியுடன் சூரத்துல் பாத்திஹாவை ஓத வேண்டும்.

·       2வது தக்பீர் கூறிய பின் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும். (அத்தஹியாத்தில் ஓதக் கூடிய ஸலவா த்தை ஓதுவது மிக சிறப்பானதாகும்.)

·       3வது தக்பீர் கூறிய பின் மையித்திற் காக (துஆ) பிரார்த்தனை செய்ய வேண் டும்.

اللهُمَّ، اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ - أَوْ مِنْ عَذَابِ النَّارِ -

பொருள்: யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவருக்கு சுகமளிப்பாயாக! இவரது தங்குமிடத்தை (கபுரை) கண்ணியப்படுத்து வாயாக! இவரது நுழையுமிடத்தை (கபுரை) விசாலமாக்குவாயாக! வெண்மையான ஆடையை அழுக்குகளிலிருந்து தூய்மைப் படுத்துவது போல் இவரை தவறுகளிலி ருந்து தண்ணீராலும் ஆலங்காட்டி நீராலும், பனிக்கட்டியாலும் தூய்மைப் படுத்துவாயாக! இவரது இம்மை வீட்டை விட சிறந்த வீட்டை (சுவனத்தை மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையை விட சிறந்த துணையை இவருக்கு (மறுமையில்) கொடுப்பாயாக! இவரை சுவனத்தில் நுழையச் செய்வாயாக! கப்ருடைய வேதனை, நரக வேதனை ஆகிய வற்றிலிருந்து காப்பாற்றுவாயாக! அறிவிப்பவர்: அவ்ப் இப்னு மாலிக் (ரலி) நூல்: முஸ்லிம் (963)

(இந்த ஹதீஸை அறிவிக்கக் கூடிய அவ்ப் (ரலி) கூறுகிறார்கள். நபியவர்கள் கேட்ட இந்த துஆவுக்குரிய மையத்தாக நான் இருந்திருக்க வேண்டுமே என ஆசைப்பட்டேன்.)

سنن ابن ماجه (1ஃ 480)

اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَهُ»

யாஅல்லாஹ்! எங்களில் உயிருடன் இருப்பவர்களுக்கும் மரணித்த வர்களுக்கும் சமூகம்தந்திருப்பவர்களுக்கும் சமூகம்தராதவர்களுக்கும் சிறியவர் களுக்கும் பெரியவர்களுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன்னிப்பை வழங்குவாயாக. யாஅல்லாஹ்! எங்களில் எவரை நீ வாழச் செய்தாயோ அவரை இஸ்லாத்தில் வாழச் செய்வாயாக. எங்களில் எவரை மரணிக்கச் செய்தாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக. யாஅல்லாஹ் அவரது கூலியை எங்களைவிட்டும் தடுத்து விடாதே அவருக்குப்பின் எங்களை வழிதவறச் செய்யாதே.(இப்னுமாஜா)

·       4வது தக்பீர் கூறிய பின் ஸலாம் கூற வேண்டும்.

இந்த அழகான நபி (ஸல்) அவர்களின் துஆக்களை விட்டு விட்டு اللهُمَّ، اغْفِرْ لَهُ وَارْحَمْهُ அல்லாஹும் மஹ்பிர்லஹு வர்ஹம்ஹு| என்று சுருக்கமாக ஓதுவது கவலையான விடயமாகும்! மையித்திற்காக கேட்கப்படும் இந்த துஆவின் கருத்தை ஆழமாக சிந்திக் வேண்டும். எனவே  இயலுமானவரை பாடமாக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். துஆவின் பொருளை உணர்ந்து கேட்கும் போதுதான் அது உயிரோட்டமுள்ளதாக இருக்கும். அடுத்தவர்களுக்காக இந்த துஆவை நாம் கேட்கும்போது மற்றவர்களும் எனது ஜனாஸாவில் கலந்து கொண்டு இந்த துஆவைக் கேட்க வேண்டும் என்ற ஆசை வரவேண்டும். மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். மனம் உருகிய நிலையில் எமது பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரார்த்திக்க பழகிக் கொள்ள வேண்டும்.

 அடக்கம் செய்தல்

سنن ابن ماجه (1ஃ 486)

 عَنْ مُوسَى بْنِ عَلِيِّ بْنِ رَبَاحٍ، قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ، يَقُولُ: ' ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ نَقْبِرَ فِيهِنَّ مَوْتَانَا: حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ، وَحِينَ تَضَيَّفُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ '

மூன்று நேரங்களில் தொழுவதையும் இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

1.சூரியன் உதிக்க ஆரம்பித்த முதல் உயரும் வரை

2.சூரியன் உச்சிக்கு வந்தது முதல் அது சாயும் வரை

3.சூரியன் மறையத் துவங்கி அது மறையும் வரை ஆகியவையே அந்த மூன்று நேரங்களாகும் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா அஹ்மத், ஹாகிம், அபூதாவூத்)

இரவு நேரங்களில் அடக்கம் செய்வதற்கு தடை ஏதுமில்லை.

 மையித்தை கப்ரில் வைக்கும்போது

«بِسْمِ اللَّهِ، وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ

அல்லது

بِسْمِ اللَّهِ، وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ

என்று கூற வேண்டும்.

பொருள்: அல்லாஹ்வின் பெயரை கூறி நபி (ஸல்) அவர்களின் வழிமுறையின் அடிப் படையில் அடக்கம் செய்கிறோம். (இப்னு மாஜா-1551)

மையத்தை கப்ரின் உள்ளே வைக்கும் போது மையத்தின் கால்பக்கமாக கப்ரின் உள்ளே இறக்க வேண்டும்.

தனக்காக அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) தொழுவிக்க வேண்டும் என ஹாரிஸ் என்பவர் மரணசாசனம்  செய்திருந்தார். அதன்படி ஹாரிஸுக்காக அப்துல்லாஹ் (ரலி) தொழுகை நடாத்தினார்கள். பிறகு ஹாரிஸின் உடலை கப்ரின் உள்ளே இரு கால் பக்கமாக இறக்கினார்கள். இது (சுன்னத்) நபி வழியாகும் என்று கூறினார் கள். அறிவிப்பவர்: அபூ இஸ்ஹாக் (ரலி) நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 4ஃ130, அபூதாவூத் 2ஃ69

 தல்கீன்:

ஜனாஸாவை அடக்கி முடிந்தவுடன் தல்கீன் மற்றும் யாஸீன் ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை. தல்கீன் பற்றிய ஹதீஸ் ழஈபான (பலவீனமான)து என இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் அல்மஜ்முஃ பாகம் 1 பக்கம் 59லும் ஷரஹ் முஹத்த பிலும் குறிப்பிடுகிறார்கள்.

 மையித்தை அடக்கிய பின்

Ø  மையித்தை அடக்கம் செய்த பின் அங்கிருக்கும் ஒவ்வொருவரும் (மை யித்திற்காக) மனமுருகி பிரார்த்தனை செய்ய வேண்டும். பாவ மன்னிப்புத் தேட வேண்டும்.

வந்திருப்பவர்களுக்காக இம்மை மறுமைபற்றியும் மரணசிந்தனைப்பற்றியும் சுருக்கமாக உபசேதித்து அல்லாஹ்வின் அச்சத்துடன் திரும்பிச் செல்ல நினை வூட்டலாம்.

سنن أبي داود (3ஃ 215)

عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ، فَقَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ، وَسَلُوا لَهُ بِالتَّثْبِيتِ، فَإِنَّهُ الْآنَ يُسْأَلُ»، قَالَ أَبُو دَاوُدَ: «بَحِيرٌ ابْنُ رَيْسَانَ»

நபி (ஸல்) அவர்கள்  மையித்தை அடக்கம் செய்து முடியும் போது அங்கே நின்று உங்கள் சகோதருக்கு பாவ மன்னிப்புத் தேடுங்கள். அவரிடம் (மலக்குளால்) கேட் கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் (மன) உறுதியை கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார். என அங்கி ருக்கும் தமது தோழர்களிடம் கூறினார்கள். அறிவிப்பவர்; உஸ்மான் (ரலி), ஆதாரம்: அபூதாவூத்-3221)

மதீனா வாசி ஒருவருடைய ஜனாஸாவை அடக்கம் செய்த பின் நபி (ஸல்) கப்ருடைய வேதனையைப் பற்றி உபதேசம் செய்தார்கள்.  இது பற்றி பரா, உ.இப்னு ஆஸிப் (ரலி) பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.

 மதீனா வாசி ஒருவருடைய ஜனாஸாவைப் பின்துயர்ந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நாமும் அவர்களைச் சூழ அமர்ந்தோம். நபியவர்கள் சிறிய கம்புத் துண்டொன்றினால் நிலத்தில் கீறிக் கொண்டிருந்து விட்டுத் திடீரெனத் தமது தலையை உயர்த்தியவர்களாக கப்ருடைய வேதனையை விட்டு அல்லாஹ்விடம் பாது காவல் தேடிக் கொள்ளுங்கள் என்று மூன்று தடவை கூறினார்கள். பின்னர் மரணத் தறுவாயிலுள்ள ஒரு முஃமினுடைய நிலை பற்றிக் கூறினார்கள்.

முஃமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு மறுமையை நோக்கிக் கொண்டிருக்கையில் சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமுள்ள முகத்துடன் வானிலிருந்து சில மலக்குகள் அவரிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்துத் துணிகளையும் சுவர்க்கத்தின் நறுமணங்களையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள்.

அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் மலக்கு வந்து அவரருகில் அமர்வார். அவரை நோக்கி ஷஷநல்ல ஆத்மாவே! நீ அல்லாஹ்வுடைய மன்னிப்பளவிலும் அவனு டைய பொருத்தத்தளவிலும் இந்த உடலிலிருந்து வெளியேறி விடு என்று கூறு வார். தோல் பையொன்றிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலிலிருந்து இலகுவாக) வெளியேறி விடும். அதனை அம்மலக்கு எடுத்துச் செல்வார்.

அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள், உடனே சுவர்க்கத்துத் துணியிலும் நறுமணத்திலும் அதனை வைத்து விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனைச் சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கிச் சென்று வானத்தைத் திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறு வார்கள்.

அம்மலக்குகள் வானத்தைத் திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடை பெறும். ஏழாவது வானத்தைக் கடந்து சென்றதும், அல்லாஹ் ஆத்மாவைச் சுமந்து சென்ற மலக்குகளை இல்லிய்யீனிலே (முஃமின் களுடைய ரூஹுகள் இருக்குமிடம்) பதிந்துவிட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள (கப்ரிலுள்ள) அவனது உடலில் அவனுடைய ஆத்மாவை சேர்த்து விடுங்கள்|| என்று கூறுவான்.

(அந்த மலக்குகள் அவ்விதமே செய்வார் கள்) அப்போது அவரிடத்தில் (முன்கர் நகீர் என்ற) இரண்டு மலக்குகள் வந்து அவரை எழுந்திருக்கச் செய்து அமர வைப்பார்கள். அவர்க்ள அந்த அடியாரை நோக்கி பின் வருமாறு கேள்விகள் கேட்பார்கள்.

கே: உனது இறைவன் யார்?

ப:    எனது இறைவன் அல்லாஹ்.

கே: உனது மார்க்கம் என்ன?

ப:    எனது மார்க்கம் இஸ்லாம்.

கே: உன்னிடத்தில் (மார்க்கத்தைப் போதிக்க) அனுப்பப்பட்டவர் யார்?

ப:    அவர் அல்லாஹ்வுடைய ரஸுல்ளூ முஹம்மத் (ஸல்)

கே: நீ அதனை எவ்வாறு அறிந்து கொண்டாய்?

ப:    அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதினேன்ளூ அதனை விசுவாசம்  கொண் டேன் அதனை உண்மைப் படுத்தினேன். (இதன் மூலம் அறிந்துகொண்டேன்)

எனது அடியான் உண்மையுரைத்து விட்டார். அவருக்காகச் சுவர்க்கத்தின் விரிப்பு களை விரித்து விடுங்கள். சுவர்க்கத் தின் ஒரு கதவை அவருக்காகத் திறந்து விடுங்கள் என்று கூறக்கூடிய ஓசை யொன்று அப்பொழுது வானிலிருந்து வரும். அவருடைய கண் பார்வை எட்டு மளவு அவருடைய கப்ரு விசாலமாக்கப் படும்.

அப்போது நறுமணம் கமழ அழகிய ஆடைஅணிந்து வசீகரமான தோற்றத்து டன் ஒரு மனிதர் அவரிடத்தில் வருவார். அம்மனிதர் அவரை நோக்கி உனக்கு வாக் களிக்கப்பட்ட - உன்னை மகிழ்வூட்டக் கூடிய - ஒரு நன்னாள் இதுவாகும் என்று கூறுவார்.

அந்த முஃமின் அம்மனிதரை நோக்கி ஷஷநீர் யார்? என்று கேட்பார். அப்பொழுது அம்மனிதர் ஷஷநான் தான் (நீ உலகில் தேடி வைத்த) உனது ஷஸாலிஹான அமல்கள்| (அல்லாஹ் இந்த உருவத்தில் உன்னிடம் என்னை அனுப்பி வைத்தான்)|| என்று கூறுவான். அப்பொழுது அந்தமுஃமின், அல்லாஹ்வே! எனது குடும்பத் துடனும் நான் தேடிவைத்திருந்த என்னுடைய அமல்களுடனும் சென்ற டைய மறுமையை உண்டாக்குவாயாக! என்று கூறுவார். மரண வேளையின் போது ஒரு முஃமினுடைய நிலை இதுவாகும்.

நிராகரிக்கக் கூடியவன் மரண வேளையை நெருங்கி விட்டால் கருநிற (விகாரமான) முகத்துடன் சில மலக்குகள் வந்து அவனுடைய கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும்.

அப்பொழுது உயிரைக் கைப்பற்றக் கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர் வார். அவனை நோக்கி, கெட்ட ஆத் மாவே! அல்லாஹ்வின் புறத்திலிருந்துள்ள இழிவின் பாலும் அவனுடைய கோபத்தின் பாலும் நீ வெளியேறி வா|| என்று கூறுவார்.

அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஒட ஆரம் பித்து விடும். உயிரைக் கைப்பற்றக் கூடிய மலக்கு அவனுடைய உடலிலிருந்து பலவந் தமாக உயிரைப் பிடுங்கி எடுப்பார். நனைந்த கம்பளியிலிருந்து ஒரு மயிரைப் பிடுங்கு வது எவ்வளவு கடினமாகுமோ, அதனை விடக் கடினமாக அந்த உயிரைப் பிடுங்கி எடுப்பார்.

பின்னர், அது அந்தக் கம்பளியில் சுருட்டப்பட்டு முதலாவது வானத்துக்குக் கொண்டு செல்லப்படும். ஒரு பிணத்தின் வாடையை விடத் துர்வாடை அதிலிருந்து வீசும். முதலாவது வானத்திலுள்ள மலக்கு கள் இந்தத் துர்வாடை என்ன?|| என்று கேட்பார்கள். அப்பொழுது அந்த மலக்கு கள், உலகில் வாழ்ந்தவர்களில் மிகக் கெட்டவனான ஒருவனுடைய உயிர் கொண்டு வரப் பட்டிருக்கிறது|| என்று கூறுவார்கள்.

அதனைத் தொடர்ந்து வானத்தைத் திறந்து விடுமாறு ரூஹைச் சுமந்து வந்த மலக்குகள் கூறுவார்கள். அவனுக்காக வானம் திறக்கப்பட மாட்டாது||. நபியவர்கள் இவ்வாறு கூறிவிட்டுத் தொடர்ந்தும் பின்வரும் அல்குர்அன் வசனத்தை ஓதினார்கள்.

ஷஷநிசச்யமாக எவர், நம்முடைய வசனங் களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக் கணிப்பதைப் பெருமையாக்கிக் கொண் டாரோ அவருக்கு, (அல்லாஹ்வின் அரு ளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக் கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் துழையும் வரையில், அவர்கள் சுவர்க்கத் தில் நுழையவே மாட்டார்கள். குற்றவாளி களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப் போம்.|| (7:40)

பின்னர் அல்லாஹ், உயிரைச் சுமந்து வந்த மலக்குகளை நோக்கி அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள ஷஸிஜ்ஜீன்| என்ற இடத்தில் (ஸிஜ்ஜீன் என் றால் தீயவர்களின் செயல்கள் பதியப்படும் இடம்) பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர் அந்த உயிர் (முதலாவது வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும்|| என்று கூறிவிட்டு அல்குர்ஆன் வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.

ஷஷஎவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்த (காகம் கழுகு போன்ற) பறவைகள் இராய்ந்து கொண்டு சென்றதைப் போலவோ அல்லது வெகு தூரத்தில் காற்று அடித்துக் கொண்டு சென்றதைப் போலவோ ஆகிவிடுவான்.|| (22:31)

ஸிஜ்ஜீனிலே அவனுடைய செயல்கள் பதியப்பட்ட பின்னர் அவனது உயிர் அவனு டைய உடலில் ஊதப்படும். அதனைத் தொடர்ந்து இரண்டு மலக்குகள் அவனி டம் வந்து அவனை எழுப்பி, அமரச் செய் வார்கள்.அவனிடத்தில் பின்வருமாறு கேள்விகள் கேட்பார்கள்.

கே: உனது இறைவன் யார்?

ப:    ஆ... ஆ... எனக்குத் தெரியாது.

கே: உனது மார்க்கம் என்ன?

ப:    ஆ... ஆ... எனக்குத் தெரியாது.

கே: உன்னிடத்தில் (மார்க்கத்தைப் போதிக்க) அனுப்பப்பட்ட மனிதர் யார்?

ப:    ஆ... ஆ... எனக்குத் தெரியாது.

(மேற்சொன்னவாறு அனைத்துக் கேள்விகளுக்கும் தனக்குத் தெரியாது என்றே பதில் சொல்லுவான்.) இவன் பொய் சொல்லுகிறான்ளூ நரகத்தின் விரிப்புக் களை இவனுக்காக (கப்ரில்) விரித்து விடுங்கள்ளூ நரகத்தின் பக்கம் ஒரு கதவை இவனுக்காகத் திறந்து விடுங்கள்|| என்று கூறக்கூடிய ஓசையொன்று அப்பொழுது வானிலிருந்து வரும்.

நரகிலிருந்து உஷ்ணமும், விஷக்காற் றும் அவனுடைய கப்ருக்குள் வீசும். அவனு டைய வலது இடது விலா எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னி விடுமளவு கப்ரு அவனை நெருக்கும். அழுக்கான ஆடை யும் அவலட்சனமான முகமும் கொண்டு துர்வாடை வீசக் கூடிய ஒரு மனிதன் அவனிடம் வருவான். அம்மனிதன் அவனை நோக்கி, உனக்கு வாக்களிக்கப்பட்ட கேடு உண்டாக்கக் கூடிய இந்நாளை உனக்கு நான் (நினைவூட்டி) நன்மாராயம் கூறுகிறேன். என்பான். அப்பொழுது அவன், அவலட்சணமான நிலையில் இருக்கும் நீ யார்? என்று அம்மனிதனை நோக்கிக் கேட்பான். நான் தான் உனது தீய செயல்கள் என்று அவன் பதிலளிப்பான். அதனைத் தொடர்ந்து இறைவனே! நீ மறுமையை உண்டாக்காதே! என்று புலம்ப ஆரம்பித்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், ஹாகிம்)

நல்லடக்கதில் பங்கெடுத்த மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இவ்வாறாக உபதேசித்துக் கொள்வது மரணத்தை பற்றியும் மண்ணறை பற்றியும் மறுமை பற்றியும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றதாக அமையும்.

 தவிர்க்க வேண்டியவை.

கப்ரை ஒரு சாண் அளவுக்கு உயர்த்த வேண்டும். கூடுதலாக உயர்த்தக் கூடாது. கப்ரை வணங்கப்படும் இடமாக மஸ்ஜிதாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. இதனை நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

صحيح مسلم (2 667)

 عَنْ جَابِرٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ

கப்ரு பூசப்படுவதையும் அதன் மீது உட்காரப்படுவதையும் அதன் மீது கட்டப்படு வதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்;;;: முஸ்லிம்.

ü  உயர்த்தப்பட்டுள்ள (கட்டப்பட்டுள்ள) கப்ருகளை சமப்படுத்தமாறு நபி (ஸல்)அவர்கள் அலி (ரலி)க்கு கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம்-969, அபூதாவூத்-3218, திர்மிதி-1049,1052)

ü  மையத்தை அடக்கிய பின்ஒருவரை (கூலிக்கு) அமர்த்தி அவர் கேட்கும் துஆவுக்கு ஆமீன் கூறும் பழக்கத்தை அடியோடு ஒழித்து விட வேண்டும்.

ü  கபுரடியில் கூடி நின்று விஷேடமாக ஸலாம் கொடுக்கும் பழக்கத்தை விட்டு விட்டு எப்போதும் ஒரு முஸ்லிமை சந்திக்கும் போதுஸலாம் சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

 பச்சை மட்டை நடுதல்

v  மைய்ததை அடக்கம் செய்த பின் அந்த இடத்தில் மையத்து அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஒரு அடையாளத்தை வைத்துக் கொள்ளலாம்.

உஸ்மான் இப்னு மழ்ஊன்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் அடக்கம் செய்த பின் அவரது கப்ரில் ஒரு கல்லை வைத்தார்கள் என்ற செய்தி இப்னு மாஜா (1561)நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே மீஸான் எனும் பெயரில் ஒரு பழகைகைய கப்ரின் மீது நட்டம் பழக்கம் இலங்கை போன்ற நாடுகளில் வழக்கத்தில் உள்ளது.

கப்ரில் பச்சை மட்டையை அல்லது பச்சை மரகிழைகளை நட்ட வேண்டும் என்று சிலர் கூறி பின்வரும் செய்தியை ஆதாரமாக காட்டுகிறார்கள்.

 வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோது இவ்விருவரும்வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால், மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர். மற்றவர் கோல் சொல்லித் திரிந்தவர் எனக் கூறி விட்டு ஈரமான ஒரு பேரீச்சை மட்டையை (எடுத்து) இரண்டாகப் பிளந்து இரு கப்ருகளிலும் ஒவ்வொன்றாக நட்டினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்டதும், இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்டக் கூடும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் புகாரி (1361)

இந்த ஹதீஸை ஆதாரம் காட்டி அடக்கம் செய்யப்படக் கூடிய எல்லா கப்ருகளி லும் பச்சை மட்டை அல்லது மரம் நட்ட வேண்டும் என கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸில் நபியவர்கள் காட்டிய அந்த முறை குறிப்பிட்ட அவ்விரு கபுராளிகளுக்குமுரிய விஷேட அம்சமாகும். அந்த கபுராளிகள் வேதனை செய்யப் படுவதாக அல்லாஹ்வினால் அறிவித்து கொடுக்கப்பட்ட பின்புதான் நபியவர்கள் ஈச்சமட்டை இரண்டாக பிளந்து இரு கப்ரிலும் நட்டினார்கள். வழமைக்கு மாற்றமாக நபியவர்கள் இப்படி நடந்து கொண்ட தால்தான் ஸஹாபாக்கள் விளக் கம் கேட்கிறார்கள். இது நபியவர்களுக்கு மட்டுமுள்ள விஷேட தன்மையாகும்.

நாங்கள் அடக்கம் செய்யக்கூடிய மையத்தின் கபுருகளுக்கு மேல் ஈச்ச மட்டை அல்லது பச்சை மட்டை நடுவதனால் அந்த மையித்து ஒரு பாவி அல்லது குற்றவாளி என்று எமக்கு அறிவிக்கப்பட்டது. அதனால்தான் நட்டினோம் என்று கூறுவது போலாகும். (அல்லாஹ் அதைவிட்டும் நம்மை காப்பானாக)

எனவே அந்த ஹதீஸை வைத்து எல்லா மையத்திற்கும் பச்சை மட்டை நட வேண்டும் மற்றும் ஊதுகத்தி பற்றவைத்து சாம்புரானி புகை யிட வேண்டும் என்று கூறுவது தவறாகும்.; மை

மையவாடிமைக்குள் நுழையும் போது அல்லது

மையவாடிகளை தரிசிக்கும் போது (ஸியாரத் செய்யும் போது

பின்வருமாறு கூறிக் கொள்வது சுன்னத்தாகும்.

السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا، إِنْ شَاءَ اللهُ لَلَاحِقُونَ، أَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ '

முஃமினான முஸ்லிமான மண்ணறை வாசிகளே! இன்ஷாஅல்லாஹ் நாங்களும் உங்களுடன் வந்து சேரக்கூடியவர்களே. எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் விடத்தில் சுகத்தை கேட்கிறேன்.

ü  மையவாடியில் நாட்டுநடப்புக்கள் உலக விவகாரங்கள் அரசியல் அலசல்கள் என்று பலதரப்பட்ட செய்திகளை கதைப்பதையோ விமர்சனங்கள் செய்வதை யோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். மையவாடிககு வந்த நோக்கம் மையத்திற்காகவும் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு பிரார்த்திப் பதற்காகவும் என்பதை மறந்துவிடக்கூடாது.  இந்த முன்மாதிரியை நாம் ஏற்படுத்திக் கொண்டால் தான் நாளை எமது மையத்தில் கலந்து கொள்ப வர்களும் எமக்காக பிரார்த்தித்து விட்டு செல்வார்கள்.

ü  அதுபோல் செல்போன்களையும் ஓப் பண்ணிவைத்துக்கொள்ளவேண்டும். குறிப்பிட்ட சில நிமிடங்களில் முடிவடையக்கூடிய ஜனாஸாவுடைய இறுதிக் கிரிகைகளில் கலந்து கொள்ளக்கூடிய நாம் உள்ளம் உருகி மரணத்தையும் மறுமையையும் ஞாபகப்படுத்திக் கொள்ள இதுவே நல்ல சந்தர்ப்பமாகும் என்பதை மறந்து விடக்கூடாது.