நோன்பு இஸ்லாத்தின் மூன்றாவது கடமை. அல்லாஹ்வின் அருளுக்குரிய கடமைகளில் ஒன்றாக நோன்பும் ஆக்கப்பட்டுள்ளது. எல்லா இபாதத்தகளை விட நோன்பு வித்தியாசமான வணக்கமாகும். ஒவ்வொரு இபாதத்களுக்கும் குறுகிய கால நேரம் விதிக்கப்பட்டாலும் நோன்புக்கு மாத்திரம் ஒரு மாதம் விதிக் கப்பட்டுள்ளது. இதன் வகையில் நோன்பின் சிறப்பு உயர்வானது. இக்கடமையை நிறைவேற்றக் கூடிய நாம் அது பற்றிய சட்டங்கள் மற்றும் தெளிவுகளை அறிந்திருக்க வேண்டும்.
பாவங்களை சுட்டெரிக்கக்கூடிய அருள்மிகு
ரமழான் வருகிறது என்கிற போது
உள்ளங்கள் மகிழ்ச்சியால் பூரித்துப் போகின்றது.
சந்தோசங்கள் கட்டுக்கடங்காமல் அலை பாய்கின்றது.
நீர்வீழ்ச்சியின் ஓசைகள் போன்று
குர்ஆனிய ராகங்கள் காதுகளில் ரீங்காரம் மிடுகின்றது.
ரஹ்மத்தின் இன்பங்கள் நெஞ்சங்களில் நிழலாடுகின்றது.
சின்ன பிள்ளைகள் முதல் பெரியவரகள் வரை
அனைவரும் குதூகளிக்கின்றனர்.
அடியார்களின் மகிழ்ச்சி மட்டிட முடியவில்லை எனறால்
ரஹ்மானின் கருணையை மட்டிட முடியுமா?
ஆம். அன்பாளனான அல்லாஹ்வின் அருளுக்கு எல்லையில்லை. அருள் வாசல் களை இம்மாதத்தில் அடியார்களுக்காக திறந்து விடுகின்றான் . சுவனத்தின் வாயல் களை திறந்து நரகத்தின் வாசல்களை மூடிவிடுகின்றான். நோன்பாளிக்கென பிரத்தியேகமாக ரய்யான் எனும் சுவனத்தை தயார்படுத்துகிறான். நன்மையை நாடுபவரே நன்மையின் பால் விரைந்து வாருங்கள் என்ற அழைப்பே விடுக் கப்படுகிறது.
நாம் மனதார விரும்பும் விருந்தாளியை அன்புடன் ஆரத்தழுவி வரவேற்பதில் காண்பிக்கும் மகிழ்ச்சியை விட கருணையாளனான அல்லாஹ் தன்அடியார்களை தனது அருளால் மூடிக்கொள்ள ஆசைக் கொள்கிறான். எந்த முஃமின் இந்த வாய்ப்பை நழுவவிடுவான்?
ரமழானின் கண்ணியம் மகத்துவம் அதன் சிறப்புக்களை பற்றி அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விபரிக்கிறார்கள்.
عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ' إِنَّ فِي الجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ القِيَامَةِ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، يُقَالُ: أَيْنَ الصَّائِمُونَ؟ فَيَقُومُونَ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ
சுவர்க்கத்தில் ரய்யான் என அழைக்கப்படும் ஒரு வாயில் உண்டு.மறுமையில் நோன்பாளிகளைத் தவிர வேறு எவரும் அதில் நுழையமாட்டார்கள். நோன்பாளி கள் எங்கே என அழைக்கப்படும். நோன்பாளிகள் எழுந்து செல்வார் கள்.அவர் களைத்தவிர எவரும் நுழையமாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் (அவ்வாயல்) மூடப்படும். எவரும் அதனுள் நுழைய மாட்டார்கள் எனநபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி) (நூல்;: புகாரி)
سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِّحَتْ أَبْوَابُ السَّمَاءِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ»
ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' إِذَا كَانَتْ أَوَّلُ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ، صُفِّدَتِ الشَّيَاطِينُ، وَمَرَدَةُ الْجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ، وَفُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَنَادَى مُنَادٍ: يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ '
ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்க ளுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும் அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் 'நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள் பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!' என்று உரக்கச் சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி இப்னுமாஜா)
முஸ்லிம்கள் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து இம்மாதத்தை நன்மைகள் அறுவடை செய்யும் களமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நோன்பு என்ற வணக்கததை நிறைவேற்றும் போது அல்லாஹ்விடத்தில் நன்மையை எதிர்பார்த்து இறைவிசுவாசத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் நோற்கவேண்டும். வீணாக காலத்தை கழிக்கும் பொழுது போக்காகவோ, பசியையும் தாகத்தையும் உரசிப்பார்க்கும் பயிற்ச்சியாகவோ கருதாது நன்மைகளை தேடிக்கொள்ளும் பாக்கியமாக கொள்ளவேண்டும். இத்தகைய பாக்கியத்தை முழமையாக அடைந்திட வாய்ப்புகிடைக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பில் செயற்படவும் வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
எவர் நம்பிக்கையடனும் நன்மையi எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்திய பாவங்கள்அமன்னிக்கப்படும் என நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: பகாரி)
நபி(ஸல்) அவர்கள் கூறும் இந்த நோக்கத்தில் நோன்பு நோற்போமேயானால் முன்திய பாவங்கள் மன்னிக்கப்பட்ட புன்னியவான்களாக ஆகிடுவோம்.
தக்வாவும் சமூக மாற்றமும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
விசுவாசிகளே! நீங்கள் இறையச்சம் (தக்வா) உடையவர்களாக திகழ்வதற்காக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டவாரே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:183)
நோன்பினுடைய மிகப்பெரும் இலட்சியத்தை அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான். சமூக மாற்றத்தில் நோன்பு பாரிய பங்கை வகிக்கின்றது என்பதை இந்த வசனம் அறிவிக்கிறது.
முஸ்லிம் மக்களை பக்குவப்படுத்தி நல்லொழுக்கமுள்ளவர்களாக அல்லாஹ்வை பயந்து நடக்கக் கூடியவர்களாக மாற்றுவதே இந் நோன்பின் பிரதான இலக்காகும்.
சஹர் செய்ததிலிருந்து நோன்பு திறக்கும் வரை சாப்பிடக்கூடாது, பருகக்கூடாது, மனைவியிடம் உறவு கொள்ளக்கூடாது போன்ற ஆகுமாக்கப் பட்ட சில காரியங்கள் தடுக்கப்படுகின்றன. தனக்கு உரிமையான இக்காரியங்களை அல்லாஹ்வுக்காக கை விட்டு தியாகம் செய்ய முன்வருபவன் அடுத்தவனுடைய சொத்துக்களை அபகரிக்க மாட்டான், கொள்ளையடிக்க மாட்டான், மானக் கேடான, பாவமான காரியங்களில், ஈடுபட மாட்டான். மோசடி செய்ய துணிய மாட்டான். பொய் பேசமாட்டான் இது போன்ற எந்த ஒரு தீமையான விவகாரங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டான். இத்தகைய செயற்பாட்டுக்கே தக்வா எனப்படும். இன்னுமொரு வார்த்தையில் சொன்னால் அல்லாஹ்வை அஞ்சி இஹ்லாஸை கடைப்பிடித்து அவனது கட்டளைகளை முழுமையாக ஏற்று நடந்து பாவங்களைவிட்டு ஒதுங்கிக் கொள்வதே தக்வாகும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»
நோன்பு வைத்திருக்கும் போது பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விட்டுவிடவில்லையோ அவர் தாகித்திருப்பதனாலும், பசித்திருப்பதனாலும் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி)
ஆன்மீக ரீதியில் மக்களை பண்படுத்தி லௌகீக வாழ்வில் செயல்வீரர்களாக வளர்த்தெடுக்கும் பெரும் இலட்சியப் பயணத்தின் பயிற்சிப் பாசரையாக இருப்பது தான் ஒரு மாத கால நோன்பு! ஒவ்வொரு வணக்க வழி பாடுகளும் (இபாதத்களும்) இந்தப் பயிற்சியைத் தான் எங்களுக்கு வழங்கப்படுகிறது. உள்ளத்தையும் உடலையும் தூய்மைப் படுத்துவது போல் சுற்றியிருக்கும் உறவுகளுடன் தூய்மையா க நடப்பதையும் கற்றுத்தருகிறது.
أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' قَالَ اللَّهُ: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ، إِلَّا الصِّيَامَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَالصِّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ '
நோன்பு உங்களை தீமைகளிலிருந்து தடுக்கும் ஒரு கேடயமாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே உங்களில் எவரும் நோன்பு பிடித்திருக்கும் போது கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். வீண் கூச்சல் போட வேண்டாம் எவரேனும் ஏசினால் அல்லது சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி(என்னுடன் பிரச்சினைப்படாதே) என்று கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி.
வாயை திறந்தால் தூசனம் பேசுபவர்களுக்கு, கெட்டவார்த்தைகளை பயன் படுத்து பவர்களுக்கு, வீண் கூச்சல் போடுபவர்களுக்கு, அதனை விட்டும் தூரமாகிட தங்களுடைய நடத்தைகளை சீர்செய்து, நல்ல பண்பாடுகளை வளர்த்துக் கொள் வதற்கு நோன்பு ஒர் அரிய சந்தர்ப்பம்.
மக்களுக்கு தொல்லை கொடுக்காமல் இரவு நேரங்களில் அரட்டையடிக்காமல், பாதைகளில் விளையாட்டுகளில் ஈடுபடாமல் அடுத்தவர்களுக்குக் கஷ்டத்தை கொடுக்காமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம்களைப் பற்றி மாற்று மத நண்பர்களிடத்தில் தப்பான எண்ணங்கள் உருவாகாத முறையில் நடந்து கொள்ளும் அதேவேளை நோன்பின் மாண்புகளை புரியவைக்கும் செயல்பாடுகளை காண்பிக்க வேண்டும்.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுவும் ஓர் அரிய சந்தர்ப்பம் என்பதை மறந்து விடக் கூடாது. ஆத்மீக லௌகீக வாழ்வின் அர்த்தங்களை புரியவைத்து செயல் படுத்த வைப்தை தான் இந்த ரமழான் எங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. இந்த நோக்கத்தை புரியாமல் இந்தப் பயிற்சிகளை பெறாமல் ஒருவர் நோன்பு நோற் பதால் எந்தப் பிரயோ சனமும் கிடையாது.
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ
ரமழான் மாதம் எத்தகைய மகத்துவம் உடையதென்றால், அதில்தான் மனிதர் களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் நன்மை தீமையைப் பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் (என்னும் இவ்வேதம்) அருளப்பெற்றது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர், அதில் நோன்பு நோற்கவும்|| (அல்குர்ஆன் 2 :185)
முஸ்லிம் சமூகத்துக்கும் அல்குர்ஆனுக்கும் இடையிலுள்ள நெருங்கிய தொடர்பு நீங்கியதே இன்றைய இஸ்லாமிய உம்மத் அனுபவித்துவரும் இன்னல்களுக்கும், இழிவுகளுக்கும் அடிப்படைக் காரணமாகும். முஸ்லிம் உம்மத் இழந்த பெருமை களை மீண்டும் பெற வேண்டு மென்றால் அல்குர்ஆனோடு நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்வதே ஒரே வழியாகும்.
இக்குர்ஆன் மூலமே ஜாஹிலியத் சமூகம் சுவனத்தின் சமூகமாக மாற்றப்பட்டது. ரமழானில் மிகப்பெரும் மாற்றங்களும் வெற்றிகளும் அந்த சமூகத்தால் இஸ்லாமிய உம்மத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே குர்ஆனுடன் தொடர்ப் புகளை மேற்கொள்ளும் வழிகளில் சிலதை காணவேண்டும். எனவே குர்ஆன்' பற்றிய அறிவையும் சுன்னா பற்றிய தெளிiவையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதனை தன்னுடைய தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் இறக்கி வைத்தான். குர்ஆனுக்கு மகத்தான அந்தஸ்து உண்டு. எனவே குர்ஆன் ஓதுவதிலும் அதைக் கொண்டு செயலாற்றுவதிலும் ஆர்வம் கொள்ளவேண்டும்.
குர்ஆனை ஓதுகின்ற முஃமினுக்கு உதாரணம் உத்ருஜ்ஜா பழத்தைப் போன்றது. அதன் மணம் நறுமணமாகும். அதன் சுவையும் இனிமையானதாகும்.குர்ஆனை ஓதாத முஃமினுக்கு உதாரணம் ஈத்தம்பழத்தைப் போன்றதாகும். அதற்கு நறுமணம் கிடையாது அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதக் கூடிய நயவஞ்சகனுக்கு உதாரணம் ரைஹானா பழத்தைப் போன்றதாகும். அதன் மணம் நல்லது அதன் சுவை கசப்பானது. குர்ஆனை ஓதாதவனுக்கு உதாரணம் ஹன்லலா பழததைப் போன்றதாகும். அதற்கு நறுமணமில்லை அதன் சுவை கசப்பானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்)
குர்ஆனுடன் வாழும் ஒரு முஸ்லிம் நறுமணம் வீசும் ஒரு முஸ்லிமாகவே எப்போதும் காட்சியளிப்பார்.நிச்சயமாக குர்ஆனின் மூலமே உள்ளங்கள் உயிர் பெறுகின்றன.
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
முஃமின்கள் யாரெனில் அல்லாஹ்வைப்பற்றி ஞாபக மூட்டப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கும்.அவனது வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களது விசுவாசத்தை அதிகரிக்கும். மேலும் அவர்கள் தமது இரட்சகன் மீது முழுமையாக பொறுப்புச்சாட்டுவார்கள். (8:2)
அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும் முழுமையாக நம்பிக்கை கொண்ட ஒரு முஃமினின் உள்ளம் பால் போல் பரிசுத்தமாக இருக்கும். அழுக்கடைவதற்கு எச்சந்தர்ப்பத்தையும் வழங்கமாட்டான். இந்நிலையை தொடர்வதற்கு குர்ஆனை ஓதவும் அதன் படி செயலாற்றவும் வேண்டும். அப்படி செய்கிறவர் சிறந்து விளங்குவார்.
எந்தவொரு நூலையும் பத்திரிகையும் வாசிக்கும் போது நன்மை வழங்கப்படு வதில்லை. அல்லாஹ்வுடைய வார்த்தையான குர்ஆனை ஓதும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மையுண்டு. திக்கித்திக்கி ஓதினாலும் இந்த நன்மை கிடைக்கப் பெறுகிறது.
سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لاَ أَقُولُ الْم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ.
எவர் அல்குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்குப் ஒரு நன்மை வழங்கப்படும். அந்த ஒரு நன்மை பத்தாகப் பெருக்கப்படும அலிப் லாம் மீம் என்பது ஒரு எழுத்து என நான் கூறமாட்டேன். அலிப் ஒரு எழுத்து லாம் ஒரு எழுத்து மீம் ஒரு எழுத்தாகும். (எனவே அலிப் லாம் மீம் என ஓதினால் 30 நன்மைகள் கிடைக்கும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரழி), ஆதாரம் : தராமி திர்மிதி அஹ்மத், ஹாகிம்.
நாம் எங்களையும் எங்கள் உடல்களையும் அழகுப்படுத்துவது போல் நாங்கள் வசிக்கும் வீடுகளையும் குர்ஆனைக் கொண்டு அழகுப்படுத்த வேண்டும் பிரகாசிக்கச் செய்ய வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ»
உங்களுடைய வீடுகளை மையவாடிகளாக ஆக்கி விடாதீர்கள். சூரத்துல் பகரா ஓதப்படுகின்ற வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகின்றான். என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி), ஆதாரம் : முஸ்லிம்
ஷைத்தானை வீடுகளிலிருந்து விரட்டுவதற்கு குர்ஆன் சிறந்த ஆயுதமாகும். அல்லாஹ்வின் வார்த்தைகள உச்சரிக்கப்படும் வீடாக அது மாறும்போது ஷைத் தான் தோல்வியடைந்தவனாக ஓடிவிடுகிறான். மனிதர்களும் பாதுகாப்புப் பெற்று விடுவார்கள். காலை மாலையிலும் இரவில் தூங்கும் போதும் குர்ஆன் ஓதிக் கொள்வதோடு நபிகளார் கற்றுத்தந்த அவ்ராதுகளையும் ஓதிக் கொள்ளும் பழக் கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
குர்ஆனை நாற்பது நாட்களுக்குள் ஓதி முடியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி), நூல்: திர்மிதி (இமாம் நாசிருத்தீன் அல்பானி (றஹ்) இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்கிறார்கள்.)
ஓவ்வொரு நாளும் எமது காரியங்களை முறையாகச் செய்வதற்கு நேரங்களை ஒதுக்கிக் கொள்வது போல் குர்ஆன் ஓதிக் கொள்வதற்கும் நேரங்களை ஒதுக்கிக் கொள்ளவேணடும்.
குர்ஆன் ஓதும் போது அழகியமுறையில் தஜ்வீத் சட்டங்களை பேணி ஓதுவதற்கு முயற்சிக்க வேண்டும். காரணம் இது அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். அழகிய குரலில் ஓதுவதை அவன் விரும்புகிறான்.
அல்குர்ஆனை அழகாக இராகமிட்டு ஓதாதவன் எம்மைச் சேர்ந்தவன் இல்லை என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி), ஆதாரம் புகாரி)
உங்கள் குரல்களினால் அல்குர்ஆனை அழகுபடுத்துங்கள் என நபி(ஸல்) கூறி னார்கள். (அறிவிப்பவர் : பர்ரா இப்னு ஆஸிப் (ரழி), ஆதாரம் : அஹ்மத், அபூதாவூத் இப்னு மாஜா, தாரமி
குர்ஆனை திறம்பட கற்று ஓதுவதுடன் - அதன் விளக்கங்களை புரிந்து கொள் வதுடன்- மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். காரணம் அது எங்கள் வழிகாட்டி. அதன் விளக்கமான சுன்னா எங்கள் பாதை.
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَفْضَلَكُمْ مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعَلَّمَهُ»
உங்களில் மிகவும் சிறந்தவர் குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : உஸ்மான் (ரழி) ஆதாரம் புகாரி)
மக்கள் அல்லாஹ்வின் வழிகாட்டல்களை அறிந்து புரிந்து செயல்படுவதற்காகவே அல்லாஹ் தன்னுடைய வேதமான குர்ஆனை மிக எளிய நடையில் இலகு மொழியில் இறக்கி வைத்துள்ளான்.
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ
(மனிதர்கள் சிந்தித்து ஆராய்ந்து) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இத்திருக் குர்ஆனை நாம் மிக்க எளிதாக்கியிருக்கின்றோம். ஆகவே, (குர்ஆனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டா? (அல்குர்ஆன் 54 : 17, 22, 32, 40)
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
அவர்கள் இக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது உள்ளங்கள் மீது பூட்டுக்கள் தான் போடப்பட்டு விட்டனவா?|| (47:24)
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا
அவர்கள் இக்குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவர் களிடமிருந்து இது வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளை காண்பார்கள். (4:82)
முரண்பாடுகளற்ற சந்தேகங்களற்ற குழப்பங்களற்ற தெளிவான வார்த்தைகளை கொண்டு அல்லாஹ் இந்த வேதத்தை இறக்கி வைத்துள்ளான்.
அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் கட்டளை களுக்கும் மாறுசெய்ததினால் அழிக்கப்பட்ட சமூகங்களை அல்லாஹ் குர் ஆனில் எங்களுக்கு எடுத்துக் காட்டி விட்டு குர்ஆனை சிந்திக்க வேண்டாமா என்று அறிவுரை கூறி இதுபோன்ற அழிவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ள வழிகளையும் தெளிவுப்படுத்தியுள்ளான். எனவே குர்ஆனை படிப்போம் சிந்திப்போம் செயல் படுவோம்.
குர்ஆனை மறுத்தவன் -அதன் போதனைகளை எடுத்து நடக்க மறுத்தவன்-குர்ஆனை இறக்கிவைத்த அல்லாஹ்வையும் அக்குர்ஆனை மக்களிடத்தில் போதனை செய்த அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைகளையும் மறுத்தவனாவான். எனவே அவன் இந்த உலகில் நஷ்டப்பட்டவனாகவும் மறுமையில் இழிவடைந்தவனாகவும் குருடனாகவும் எழுப்பப்பட்டு தண்டிக்கப்படுவான்
وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى
ِ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًاقَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى قَالَ رَبّ
எவன் எனது நல்லுபதேசத்தை (அல்குர்ஆனை)ப் புறக்கணிக்கின்றானோ அவனு டைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமையில் நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.
எனது இரட்சகனே! பார்வையுடையவனாக இருந்த என்னை நீ ஏன் குருடனாக எழுப்பினாய் என அவன் கேட்பான். அவ்வாறு தான் நமது வசனங்கள் உன்னிடம் வந்தன. அவற்றை நீ மறந்து விட்டாய். இவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கடிக்கப் படுகின்றாய் என அல்லாஹ் கூறுவான். (20:124)
மக்களுக்கு வழி காட்ட இறக்கப்பட்ட குர்ஆனை கொண்டும் அதற்கு விளக்கம் கூறிய நபி(ஸல்) அவர்களின் சுன்னாவைக் கொண்டும் மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும். இதுவே ஒரு முஸ்லிமுக்கு பிரதான ஆதாரமாகும்.
قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
நபியே) நீர் கூறும்: இதுவே எனது (நேரான) வழி. (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றிய வர்களும் இருக்கின்றோம். (இணை துணைகளை விட்டும்) அல்லாஹ் மிகப் பரிசுத்தாமானவன். ஆகவே, (அவனுக்கு) இணைவைப்போரில் நானும் ஒருவனல்ல|| (12:108)
அல்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி முழுமனித சமூத்திற்கும் உரியதாக அருப் பட்டதனால் அம்மக்களுக்கு குர்ஆனை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஏனைய காலங்களில் இரவு நேரங்களில் நின்று வணங்குவது போல் நோன்பு காலத் திலும் இரவு வணக்கத்தில் ஈடுபட வேண்டும் அதுவும் ஈமானுடனும் அல்லாஹ் விடத்தில் நன்மையை எதிர்பார்த்தும் தொழவேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
எவர் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங் குகிறார்களோ அவருடைய முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி
عَنْ عَطَاءٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يُخْبِرُنَا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِامْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، - سَمَّاهَا ابْنُ عَبَّاسٍ فَنَسِيتُ اسْمَهَا -: «مَا مَنَعَكِ أَنْ تَحُجِّينَ مَعَنَا؟»، قَالَتْ: كَانَ لَنَا نَاضِحٌ، فَرَكِبَهُ أَبُو فُلاَنٍ وَابْنُهُ، لِزَوْجِهَا وَابْنِهَا، وَتَرَكَ نَاضِحًا نَنْضَحُ عَلَيْهِ، قَالَ: «فَإِذَا كَانَ رَمَضَانُ اعْتَمِرِي فِيهِ، فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ حَجَّةٌ» أَوْ نَحْوًا مِمَّا قَالَ
நோன்பு மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு சமமாகும். ஆகவே நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)
ரமழான் ஏழை எளிய மக்களின் நலனில் அக்கரை கொள்ளும் மாதமாகும். மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் வளர்க்கும் மாதமாகும். ஏனைய மாதங்கள் அல்லது நாட்களைவிட இம்மாதத்தில் தர்மம் செய்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறது. காரணம் இது அல்லாஹ்வுடையமாதம். குர்ஆன் அருளப்பட்ட மாதம். நபி(ஸல்) அவர்களும் ஏனைய நாட்களைவிட ரமழானுடைய மாதத்தில் அதிகம் வாரி வாரிவழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
َنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல் (அலை) ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி (ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) ரமழானின் ஒவ்வொரு இரவும் ரமழான் முடியும்வரை நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களை நபியவர்கள் சந்திக்கும் போது மழைக் காற்றைவிட அதிகமதிகமாக வாரி வழங்குவார் கள். அறிவிப்பவர் இப்னுஅப்பாஸ் (ரலி) நூல் புகாரி -
மனிதனிடத்திலிருந்து கஞ்சத்தனத்தை அகற்றி தாளார மனப்பான்மையை வளரக்கச் செய்யும் வழிதான் தர்மமாகும். எனவே அல்லாஹ்வுக்கு பயந்து நரகத்திற்கு பயந்து ஒரு துண்டு ஈத்தப்பழத்தையாவது தர்மம் செய்யுமாறு நபிய(ஸல்) ஏவுகிறார்கள்;.
பேரீத்தப்பழத்தின் சிறுதுண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் அதீ பின் ஹாதிம் (ரலி) நூல் புகாரி
தர்மம் செய்வதற்கு எல்லோரிடத்திலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் வாய்ப்பு இருக்காது செல்வம் இருக்காது. உண்மையில் தர்மம் என்பது நல்லவார்த்தை கூறுவதும் புன்னகை பூப்பதும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எம்மிடம் கொடுப்பதறகு எதுவுமில்லை என்றால் சிரித்த முகத்துடன் அன்பான வார்த்தையில் பேசவேண்டும்.
‘‘தர்மம் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என நபி (ஸல்) கூறியதும், நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கு பொருள்) எதுவும் கிடைக்கவிட்டால்... எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்), ஏதேனும் கைத் தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மமும் செய்ய வேண்டும் என்றார்கள். தோழர்கள் அதுவும் முடிய வில்லையாயின் எனக் கேட்டதற்கு. தேவையுடையவர்களுக்கு உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று பதிலளித்தார்கள். அதுவும் இயலவில்லையாயின் என்று தோழர் கள் கேட்டதற்கு, நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் அபூமூஸா (ரலி) நூல் புகாரி (
நபி ஸல் அவர்கள் எங்களிடம் தர்மம் செய்ய வேண்டும் என்று ஏவினால், எங்க ளில் ஒருவர் கடைத் தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து இரு கையளவு தானியம் சம்பாதித்து (அதை தர்மம் செய்து) விடுவார். அறிவிப்பவர் இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் புகாரி
ஏழ்மையில் வாழ்ந்த சஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து தொழில் தேடி சம்பாதித்து தர்மம் செய்கின்ற அளவுகுக்கு ஈமானை பலப் படுத்தியுள்ளார்கள்.தங்கள் வறுமைக்கு காரணம் கூறி, வீட்டில் முடங்கி விட வில்லை. செல்வத்தால் தரமம் செய்ய முடியாவிட்டால் உடல் உழைப்பின் மூலமாவது ஒத்துழைப்புகள் வழங்கி உதவி செய்வதும் தர்மமாகும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
தர்மம் செய்வதால் இவ்வுலகில் மட்டுமன்றி மறுமையிலும் நன்மைகிடைக்கும் எனற அசைக்க முடியாத நம்பிக்கைத்தன் சஹாபாக்களை பன்படுத்தியது.
அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலின் கீழ் ஏழுபேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அதில் ஒருவர், தனது இடக்கரத்துக்கு தெரியாமல் வலக்கரத்தால் இரகசியமாக தர்மம் செய்தவர் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி
மறுமையின் மஹ்ஷர் மைதானத்தில் மனிதனின் நிலை மிகப்பயங்கரமானது. சூரியன் ஒரு மைலுக்கு அண்மையில் கொண்டுவந்து நிறுத்தப்படும். மனிதர் களிடமிருந்து வலிந்தோடும் வியர்வையில் அவர்களுடைய பாவங்களின் அளவுக் கேற்ப மூழ்கிப் போவார்கள். அந்நேரத்தில் அந்த கடுமையான சூட்டிலிருந்து ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலுக்குக் கீழ் நிழல் கொடுக்கிறான். அதில் ஒருவர் தர்மம் செய்தவர் என நபி(ஸல்) இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இந்த பாக்கியத்தை நாமும் பெறுவதற்கு கஞ்சத்தனத்தை விட்டும் ஒதுங்கி தர்மம் செய்திட வேண்டும்.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மை யுள்ள தர்மம் எது? எனக் கேட்டார். நீர் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருள் தேவை யுள்ளவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ள வராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். உயிர், தொண்டைக் குழியை நெருங்கும் வரை (தர்மம் செய்வதை) தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருள்கள். மற்ற வர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) நூல் புகாரி
மனிதனுக்கு எப்போதும் பொருளாதரம் அவசியம. சம்பாதிக்க வேண்டும் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அவனது பொருளாதாரத்தில் மற்றவர் களுக்கும் தர்மமாக ஸகாத்தாக போய்ச் சேரவேண்டும். அதே நேரம் பொருளா தாரத்தில் போதுமான செல்வம் இல்லை என்றாலும் இருப்பதைக் கொண்டு போது மாக்கிக் கொண்டு அதனை மற்றவர்களுக்கும் கொடுப்பதற்கு முனைய வேண்டும். வறுமையை அஞ்சிக் கொண்டு செல்வத்தில் ஆசைக் கொண்டு வாழும் போது மரணத்தையும் மறுமையையும் பயந்து கொடுக்கப்படும் தர்மமே உயர்ந்த தர்மமாக நபி(ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்துகிறார்கள். உயிர் தொண்டை குழியை அடையும் போது தர்மம் பற்றி பேசுவதால் நன்மை எதுவுமில்லை பேசுவதற்கு சந்தர்ப்பமும் இருக்காது.
ஒவ்வொரு நாளும் இரு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர் அல்லாஹ்வே தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக! எனக் கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருள்களை) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார். என நபி (ஸல்) அவர்கள் கூறினார். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி
தர்மம் செய்கின்ற மனிதனுக்கு அல்லாஹ்வின் மலக்குகள் அருள் வேண்டி பிரார்த் திக்கிறார்கள். கொடுக்காதவனுக்கு அழிவை வேண்டி பிரர்த்திக்கிறார்கள். அழிவை விட அருள் ஒரு முஃமினுக்கு அவசியமானதாகும். அருள் கிடைக்கின்ற போது அவனது வாழ்வு பாக்கியம் பொருந்தியதாக மாறிவிடுகிறது. தர்மம் செய்திடும் போது நல்லதை தூய்மையானதை கொடுத்திட வேண்டும். அதற்குத்தான் நன்மைகள் உண்டு.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்த கைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவை யற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).
மக்களின் தேவைகளுக்காக கொடுத்துதவும் ஹலாலான சம்பாத்தியங்களி லிருந்து செலவிட வேண்டும். உழைப்பு ஆகுமானதாகவும் தூய்மையானதாகவும் இருத்தல் அவசியமானதாகும். சிறந்த, உயர்தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்க வேண்டும். தர்மம் செய்கிறோம், இனாமாக வழங்குகிறோம் என்பதற்காக பழுதடைந்த மட்டகரமான மோசமான பொருட்களை வழங்கிடக் கூடாது என அல்லாஹ் தடைவிதிக்கிறான்.
யார் முறையான சம்பாத்தியத்திலிருந்து ஒரு பேரீத்தப் பழத்தின் மதிப்புக்கு தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான். அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் புகாரி (1410)
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்ய வேண்டும். அல்லாஹ் அங்கீ கரிக்காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்து கொடுப்பதால் நன்மை ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.
ஹராமான வழிகளில் சம்பாதித்து சொத்துக்களை வியாபார பொருட்களை ரமழா னில் ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதாலோ அல்லது பள்ளிவாசல் களுக்கு வழங்குவதாலோ நன்மைகள் கிடைக்கப் போவதில்லை.
அல்லாஹ் நல்லதை தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: புகாரி).
எங்களுக்கு யாராவது எதையாவது கொடுத்தால் அது நல்லதாக தரமானதாக பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருப்பதையே விரும்புவோம். மட்டகரமானதை தந்தால் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
இதுபோலவே நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் போது கூட நல்லதையே கொடுக்க வேண்டும். நாம் விரும்புவதையே மற்றவர் களுக்கும் விரும்ப வேண்டும்.
நீங்கள் விரும்புவதை செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர் கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவன் (3:92).
மேலே கூறிய 2:267 வசனம் அருளப்பட்டது தொடர்பாக பராஉ பின் ஆஸிப் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்.
பேரீச்ச மரத்திலிருந்து பேரீச்சம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்துக கொண்டு வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்க விடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.
ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்ட மான காய்ந்த பேரீச்சம் குலையைத் தொங்க விட முற்பட்டார். அது அனுமதிக் கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார். (அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு) அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளி னான். (நூல்: இப்னு மாஜா தப்ஸீர் இப்னு கஸீர்).
மக்களுக்கு வழங்கும்போது நல்லவைகளை வழங்க வேண்டும் என்ற போதனை யை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அதனையே அல்லாஹ் அங்கீ கரிக்கிறான்.
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்ல வற்றி லிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும்.... நன்மைதான் எனக் கூறுவீராக. (2:215) என அல்லாஹ் கூறுகிறான். எனவே சிறு துண்டு ஈத்தப் பழத்திலிருந்து தர்மத்தை துவங்கி செயற்பட வேண்டும். எதனையும் சேர்மித்து வைத்து தண்டனைக்கு ஆளாகிடக்கூடாது.
நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன் மீது (தன் அருளைப் பொழியாமல்) முடித்து வைத்துக் கொள்வான். (எனவே) உன் சக்திக் கேற்ப சிறிதளவாவது தர்மம் செய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். அறிவிப்பவர் அஸ்மா (ரலி) நூல் புகாரி (1434)
தர்மம் செய்யாது பதுக்கிக் கொள்ளும் போது அல்லது முடித்து வைத்துக் கொள் ளும் போது அல்லாஹ்வும் அந்த மனிதனுக்கு கொடுக்காது தடுத்து விடுகிறான். மனிதன் மனிதனுக்கு அன்பு காட்டாத போது அல்லாஹ்வும் அந்த மனிதனுக்கு அன்பு காட்டாது கொடுப்பதை தடுத்து கொள்கிறான்.
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையை பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத் தால் தர்மத்தின் நன்மை அவளது கணவனுக்கும் கிடைக்கும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல் புகாரி
பொதுவாக ஆண்கள் அதிகமாக தர்மம் செய்வதற்கு சந்தர்ப்பம் இருப்பது போல் பெண்களும் தங்;களுடைய செல்வத்திலிருந்து தர்மம் செய்யமுடியும். அது போல் உணவுக்காக தயார் செய்யப் படுபவற்றிலிருந்து மீதமாகுவதை வீணாக்காமல் தர்மம் செய்யும் போது அதனை சம்பாதித்த கணவனுக்கு நன்மை கிடைப்பது போல் மனைவிக்கும் நன்மை வழங்கப்படுகிறது.
பொறுமை எனும் குணம் வார்த்தையளவிலே பெரும்பாலோரிடத்தில் உள்ளது. சொற்பமானவர்களிடமே இந்த குணத்தை செயல்ரீதியில் காணுகிறோம். பொறுமை இறைவனிடத்திலிருந்து வருகின்ற ஓர் அருள். பொறுமைக்கு எதிரான குணங்கள் உணர்ச்சிவசப்படுதல் அல்லது கோபம் என்பன வாகும். இவை ஷைத்தானின் புறத்திலிருந்து வருவன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக நோன்பு எனக்குரியது! அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு (பாவங் களிலிருந்து காக்கும்) கேடயமாகும். எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக் கள் பேச வேண்டாம், கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி என்று அவர் சொல்லட்டும். (புகாரி)
வீண்சண்டைகள் விதன்டாவாதங்கள் என்று ஈடுபட்டு பொறுமையை இழந்து அசிங்கமாக நடப்பதிலிருந்து காப்பாற்றி புத்திசாதுர்யத்துடன் பொறுமையுடன் சகிப்புத்தன்மையுடன் நடக்கும் குணத்தை விதைக்கிறது இந்த நோன்பு.
இன்று நாட்டில் நடக்கும் திடீர்ச் சண்டை சச்சரவுகளுக்கு மூலக் காரணமே கோபம் தான். ஒரு கணம் பொறுமையுடன் சிந்தித்தால் மனிதன் இவைகளை தடுக்க முடியும்.
நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடுகிறான் என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியுமுண்டு. மனிதன் சிந்திக்காமல் உணர்ச்சிவசப்படுவதால் பின்னர் வருத்தப் படுகின்றான். உதாரணமாக, ஒரு பெண்ணை பார்த்து உணர்ச்சிவசப்படுபவன் சிந்திக்காமல் பலாத்காரத் துக்கு துணிந்துவிடுகின்றான். பின்னர் வருந்து கின்றான். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். திருமண முடிக்க வசதி (சக்தி) யுடையவர் திரு மணம் முடிக்கட்டும். முடியாதவர் நோன்பு நோக்கட்டும். அது அவரது பார்வைக்கும் கற்புக்கும் பாதுகாப்பளிக்கும்.
தன்குறிக்கோளில் தோல்வியடைபவன் ஒரு நிமிட முடிவில் தற்கொலைக்குத் துணிந்துவிடும் சம்பவங்கள் அதிகம். ஏன்? உள்ளங்களில் ஷைத்தானின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய தீய செயல்களுக்கு காரணம் அவர்களின் அந்த ஒரு நிமிட முடிவுதான். அந்த ஒரு நிமிடமும் பொறுமையாக கழித்து விட்டால் துன்பப்பட வேண்டிய அவசிய மில்லை. எங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் ஏற்பட்டால் உட்கார்ந்து கொள்ளட்டும். கோபம் அவரை விட்டும் நீங்கிவிட்டால் சரி, இல்லையேல் அவர் படுத்துக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார் கள். (திர்மிதி)
கோபம் ஷைத்தானின் புறத்திலிருந்து வருவதால் மனிதனை பித்னாவுக்குள் சிக்கவைத்து பிளவுகளையும் குழப்பங்களையும் உண்டு பண்ணவே அவன் விரும்பு கிறான். எனவே கோபம் வரும் போது ஷைத்தனிலிருந்து பாதுகாப்பு தேடுமாறு கூறி அஊது பில்லா மினஷ்ஷைத்தானிர் ரஜீம் என கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
சோதனைகள் துன்பங்கள் தொடரும் போது அதில் பொறுமை கொண்டு அல்லாஹ் விடம் நன்மையை எதிர்பார்த்திருக்க தயாராக வேண்டும்.
எவன் தன் வாழ்வில் துன்பங்கள் நேரிடும் போது அதை சகித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறானோ அவனுக்கு அல்லாஹ் சகிப்பபுத் தன்மையை வழங்கி விடுகின்றான். துன்பங்களை சகித்துக் கொள்ளும் தன்மையைவிட சிறந்த ஒரு அருட்கொடையை எவனும் பெற்ற தில்லை. அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) (நூல் புகாரி முஸ்லிம்)
வல்ல இறைவன் கூறுகின்றான். அவர்கள் எத்தகையவரென்றால் செல்வ நிலை யிலும் வறுமை நிலையிலும் செலவு செய்து கொண்டிருப்பார்கள். கோபத்தை யும் அடக்கிக் கொள்ளக் கூடியவர்கள். மனிதர் (களின் குற்றங்) களையும் மன்னித்துவிடக் கூடியவர்ககள். அல்லாஹ்வோ நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 03:134)
எத்தகை நிலையிலும் சகிப்புத் தன்மையை கடைப்பிடிக்கும் போது அல்லாஹ்வின் நேசம் கிடைப்பதுடன் சகிப்புத் தன்மையுடன் வாழவைக்கும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ (155) الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (156) أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ
நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும் பசியாலும் செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு (நபியே!) நன்மாரா யம் கூறுவீராக. அவர்கள் யாரென்றால் தமக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்போது ‘‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்| (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நாம் அவனி டமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறு வார்கள்.
அத்தகையோருக்கே அவர்களின் இரட்சகனிட மிருந்து அருள்களும் கருணையும் உண்டாகும். அவர்களே நேர்வழி பெற்ற வர்கள். (2:155-157)
மனித வாழ்வு சோதனைக்கு உட்படுத் தப்படும் என்பது அல்லாஹ்வின் நியதி யாகும். இதிலிருந்து எவரும் விதிவிலக்குப் பெற்றவர் அல்லர். பொறுமையை கடைப்பிடிப்பவர்களுக்கு அல்லாஹ் வின் அருளும் கருணையும் கிடைக்கப் பெறுகிறது.
இப்பொறுமையை கடைப்பிடித்து அல்லாஹ்விடம் ஒதுங்கிவிடுவதற்கு அல்லாஹ் அழகிய வழியை பின்வருமாறு கற்றுத்தருகிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ}
விசுவாசங் கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (2:153)
எனவே ரமழான் மாதத்தில் என்னெ ன்ன பயிற்சிகளைப் பெறுகின்றோமோ அதே பயிற்சியை ரமழான் அல்லாத காலங்களிலும் கடை பிடித்துவாழ்வோமாக!
ஆண் பெண் ஒவ்வொருவர் மீதும் நோன்பு நோற்பது கட்டாய கடமையாகும். ஆனால் சிலருக்கு சில சந்தர்ப்பங்களில் நோன்பு வைக்காமல் இருப்பதற்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்கள் பற்றிய விரங்களையும் வேறுசில சட்டங்களையும் சுருக்கமாக தெரிந்து கொள்வோம்
(அ) நோயாளிகள் : நோன்பு நோற்க இயலாதவர்கள் அல்லது (நோன்பு நோற்பதனால் உடலுக்கு பலவீனம் ஏற்படும் என மருத்துவ ஆலோசனை பெற்ற) நோயாளிகள். இவர்கள் நோன்பை விட்டுவிட்டு நோய் நீங்கியதும் விடுபட்ட நோன்பை நோற்க வேண்டும்.
(ஆ) பிரயாணிகள் : ரமழானில் பிரயாணம் மேற்கொள்பவர்களாக இருப்பின் அந்த நாட்களில் நோன்பை வி;ட்டுவிட்டு பிரயாணம் முடிந்து, ஊர் திரும்பியதும் விடுபட்ட நோன்பை பிடிக்க வேண்டும். (பார்க்க அல்குர்ஆன் 2:185)
(இ) மாதவிடாய் பெண்கள் : ரமழானில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் நோன்பை விட்டுவிட்டு றமழான் முடிந்ததும் நோன்பை திருப்பி நோற்க வேண்டும். மாத விடாய் காலத்தில் தொழவும் கூடாது. இவ்வாறு விடுபட்ட தொழுகைகளை மீண்டும் திருப்பி தொழவும் கூடாது.
நாங்கள் நபி (ஸல்) அவர் களுடன் இருக்கும் போது எங்களு க்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மை யடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு (திருப்பி நோற்குமாறு) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளை யிடுவார்கள். விடுபட்ட தொழுகை களை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ஆதாரம் புகாரி , முஸ்லிம் ).
(ஈ) கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் : கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் ரமழானில் நோன்iபை விட்டுவிட சலுகையளிக்கப் பட்டுள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டுபவர்களுக்கும் நோன்பு நோற்பதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகை யளித்தார் கள். (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம் : திர்மிதி (715) இப்னுமாஜா (1668)
(உ) முதியவர்கள் : நோன்பை நோற்க முடியாத முதியவர்கள் அந்த நோன்பை விட்டு விடலாம். ஆனால் இவர்கள் மீண்டும் அதனை களாச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் முதுமையினால் நோன்பை விடக் கூடியவர்கள் மீண்டும் அதனை நோற்கக் கூடியவர்களாக எதிர்காலத்தில் இருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் இதை விடவும் அதிக முதுமை யுடையவர்களாகவே இருப்பார்கள்.
இவ்வாறு நோன்பை விட்டுவிடக் கூடியவர்கள் ஒவ்வொரு நோன்புக்காகவும் ஒரு ஏழைக்கு வசதி இருந்தால் உணவளிக்க வேண்டும். வசதியில்லையாயின் அதனையும் அவர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை.
நோன்பு நோற்க சக்தியற்றவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) கூறும் போது இது (முற்றிலுமாக) மாற்றப்படவில்லை. நோன்பு நோற்க சக்தியிழந்த முதியவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கமளித்தார்கள். (ஆதாரம் தப்ஸீர் இப்னு கஸீர் 1 பக்கம் 221)
நோன்பை விட்டுவிடுவதற்கு சலுகை வழங்கப் பட்டவர்கள் முடியுமானவரை அடுத்த றமழான் வருவதற்கு முன் விடுபட்ட நோன்புகளை நோற்க முயற்சிக்க வேண்டும்.
ரமழானில் எனக்கு சில நோன்புகள் தவறிவிடும். அதை (அடுத்த றமழானுக்கு முந்திய) ஷஃபான் மாதத்தில் தான் என்னால் களாச் செய்ய முடிந்தது நபி (ஸல்) அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகள் இருப்பதே இதற்கு காரணமாகும். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி), ஆதாரம் : புகாரி முஸ்லிம் அபூதாவூத்
ஸஹர் செய்தல் : நீங்கள் ஸஹர் செய்யுங்கள். ஏனெனில் ஸஹரில் பரகத் உண்டு என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) ஆதாரம் புகாரி இப்னுமாஜா
ஸஹர்உணவை தாமதப்படுத்துவது சிறந்தது! ஸஹரை தாமதப்படுத்தி, நோன்பு திறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளார்கள். என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூதர் (ரழி) (ஆதாரம் : புகாரி முஸ்லிம்
அதிகமான மக்கள், இரவு ஒரு மணிக்கு அல்லது இரண்டு மணிக்கு ஸஹர் செய்துவிட்டு தூங்கி விடுகிறார்கள். இது தவறாகும். சுபஹ் நேரம் வருவதற்கு சற்று முன்னதாக ஸஹர் செய்ய முயற்சிக்க வேண்டும். ஸஹரை தாமதப் படுத்துவதும் ஒரு நன்மையான காரியமாகும்.
சாப்பிடும் போது பாங்கு சொன்னால் : ஸஹருக்கு தாமதமாக கண்விழித்து ஸஹர் உணவு உண்ணும் போது அதான் சொல்லக் கேட்டால் உணவு உண்ணு வதை நிறுத்தக் கூடாது. தனக்கு போதுமான அளவு சாப்பிட்டுவிட்டு நிறுத்த வேண்டும்.
தனது கையில் உணவுத் தட்டு இருக்கையில் உங்களில் எவரும் அதான் கூறுவதைச் செவியுற்றால் தனது தேவைக்கேற்ற அளவு உண்ணாமல் பாத்திரத்தை வைத்து (உண்பதை நிறுத்தி) விட வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி), ஆதாரம் : அபூதாவூத்
நோன்பின் நிய்யத் அல்லது ஸஹர் நேரத்தில் கூறும் நிய்யத் என்று குறிப்பிட்டு கூறுவதற்கு எந்த ஒரு துஆவும் ஹதீஸில் இல்லை.
நவைத்து ஸவ்மகதின்... என்று கூறக்கூடிய சில வசனங்களைத் தான் நோன்பின் நிய்யத் என மக்கள் நம்புகின்றனர், நம்பவைக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி ஒரு துஆ நபி (ஸல்) கற்றுத் தந்ததாக ஆதாரபூர்வமான ஹதீஸே கிடையாது.
நிய்யத் என்றால் மனதினால் நினைத்தல் என்பதே பொருளாகும் எனவே நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்கிறேன் என்ற எண்ணத்துடன் (மனதினால் நினைத்து) நோற்க வேண்டும்.
செயல்கள் யாவும் (அவரவர்) எண்ணங்களைப் பொறுத்ததே. (எனவே) ஒவ்வொரு மனிதனும் தான் நினைத்ததையே அடைந்து கொள்கிறான் என்பது நபி மொழி. (அறிவிப்பவர் உமர் (ரழி), ஆதாரம் : புகாரி
மறதியின் காரணமாக : நோன்பாளி மறந்து விட்டு உண்ணவோ பருகவோ செய்தால் (நினைவு வந்ததும்) அவர் தன் நோன்பை தொடரட்டும். அவரை அல்லாஹ்தான் உண்ணவும், பருகவும் வைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி), ஆதாரம் : புகாரி முஸ்லிம்
பல் துலக்குதல் : நபி (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கின்ற போது என்னால் கணக்கிட முடியாத அளவுக்கு அதிகமாக பல் துலக்க (மிஸ்வாக் செய்ய) நான் கண்டேன். (அறிவிப்பவர் : ஆமிர் இப்னு ரபீஆ (ரழி), ஆதாரம் புகாரி (3ஃ76), திர்மிதி (725), அபூதாவூத் (2364)
குளித்தல்: நபி (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது, தாகம் அல்லது வெயிலின் சூடு காரணமாக தலையின் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கக் கண்டேன். (அறிவிப்பவர் : அபூபக்கர் இப்னு அப்துர் ரஹ்மான் (ரழி), ஆதாரம் : அபூதாவூத்
தூக்கத்தில் இந்திரியம் வெளிப்படுதல் : நோன்பு நோற்றிருக்கும் வேளையில் (தூக்கத்தில்) கனவின் மூலம் ஸ்கலிதம் (விந்து) ஏற்படுவதினால் நோன்பு முறிந்து விடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : அபூதாவூத்
இரத்தம் குத்தி எடுத்தல், ஊசி ஏற்றுதல்: நோன்பாளி இரத்தம் குத்தி எடுப்பதை ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். பின்னர் அனுமதி வழங் கினார்கள். (ஆதாரம் : திர்மிதி , அபூதாவூத்
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையிலும், நோன்பு வைத்தவராகவும் இருந்த போது இரத்தம் குத்தி எடுத்தார்கள் (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரஹ்)
இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி நோன்பாளி இரத்தம் குத்தி எடுப்பது கூடும்! அது தவறல்ல என்று கருதினார்கள் என இமாம் திர்மிதி (அபூ ஈஸா) (ரழி) கூறினார்கள். (ஆதாரம் : திர்மிதி அபூதாவூத்
போஷாக்குள்ள ஊசிகளன்றி மருத்துவத்திற்காக நோன்பாளிக்கு ஊசி ஏற்றுவதும், உடல் மற்றும் இரத்த பரிசோதனை செய்வதிலும் எந்த தவறுமில்லை! உணவு உட்கொள்வது தான் தடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனத் தில் கொள்ள வேண்டும்.
வாந்தி எடுத்தல்: தானாக ஒருவருக்கு வாந்தி வந்தால் அவர் நோன்பை களாச் செய்ய வேண் டியதில்லை. வேண்டு மென்றே யார் வாந்தி எடுக்கிறாரோ அவர் நோன்பை களாச்செய்ய வேண்டும்|| என நபி (ஸல்) கூறினார்கள். (ஆதாரம் : திர்மிதி அபூதாவூத்
தாம்பத்திய உறவு கூடாது : நோன்பு நோற்றதிலிருந்து திறக்கும் வரை செய்யக்கூடாத காரியங்களில் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்வதும்|| ஒன்றாகும். ஆனாலும் இரவு வேளையில் உறவு கொள்வது ஆகுமாக்கப் பட்டுள்ளது.
நோன்பின் இரவு வேளையில் நீங்கள் உங்கள் மனைவியர்களுடன் தாம்பத்திய உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது (2:187)
நோன்பு நோற்றிருக்கும் வேளையில் உறவு கொண்டால் அந்த குற்றித்திற்கு தண்டனையாக, பின்வரும் மூன்று வழிகளில் ஒன்றில் கணவன் பரிகாரம் காண வேண்டும்.
ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும்.
அல்லது தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதற்கு முடியாது விட்டால் (சக்தியில்லை என்றால்)
அறுபது மிஸ்கீன்களுக்கு உணவளிக்க வேண்டும். (நபிமொழி நூல் புகாரி)
நோன்பு திறத்தல் : நோன்பு திறப்பதை அவசரப்படுத்த வேண்டும். ஸஹர் செய்வதை பிற்படுத்த வேண்டும் என்பது நபி மொழி. (அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரழி), ஆதாரம் முஸ்லிம் திர்மிதி
நோன்பு திறக்கும் போது நோன்பாளி கேட்கும் துஆ (அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படும் அது) மறுக்கப்பட மாட்டாது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு ஆஸ் (ரழி) ஆதாரம் : இப்னுமாஜா
(அல்லாஹ்வின் அருளை வேண்டியும், பாவமன்னிப்பு கோரியும், துஆ கேட்பது மிகச் சிறந்தது)
அல்லாஹும்ம லக ஸும்து... என்ற துஆ ஆதாரபூர்வமானதல்ல. இது முர்ஸல் என்னும் பலவீனமான அறிவிப்பைச் சார்ந்ததாகும். (ஆதாரம் அபூதாவூத் (2358)
பிறர் வீட்டில் நோன்பு திறத்தால்
அவ்வீட்டார்களுக்காக பின்வரும் துஆவை கூறவேண்டும்.
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ
பொருள் : நோன்பாளிகள் உங்களிடம் நோன்பு திறந்தனர்! நல்லோர்கள் உங்கள் உணவை உண்டனர். மலக்குகள் உங்கள் மீது ஸலவாத் (அருள் புரியும் படி) கூறினர்.
நபி (ஸல் அவர்கள் ஸஃத் இப்னு உபாதா (ரழி) அவர்கள் வீட்டில் உணவு உண்டு விட்டு இவ்வாறு கூறினார்கள் என அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (ஆதாரம் அபூதாவூத்
ரமழான் மாதத்தின் மகத்துவமான ஒரு இரவுதான் லைலதுல் கத்ர் இரவு. இந்த இரவில் தான் அல்குர்ஆன் அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விடவும் சிறப்பானதாகும். (பார்க்க அல்குர்ஆன் 97:1-3) இந்நாளை பெற்றுக் கொள்ளவே இஃதிகபபும் சுன்னத்தாக்கப்பட்டது.
லைலதுல் கத்ர் இரவு எது என்பதை உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். (அந் நேரத்தில்) இரண்டு மனிதர்கள் இது விடயத்தில் தர்க்கம் புரிந்து கொண்டிருந்தனர்.அவ்விருவருடனும் ஷைத்தானும் இருந்தான். எனவே நான் அந்த இரவு எது என்பதை மறந்து விட்டேன். எனவே நீங்கள் றமழானில் கடைசிப் பத்தில் லைலதுல் கத்ர் இரவைத் தேடிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி), ஆதாரம் : புகாரி முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வதற்காக றமழானின் கடைசிப் பத்தில் மரணிக்கும் வரை இஃதிகாப் இருந்தார்கள். (நபிமொழி) (அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரீ (ரழி), ஆதாரம் : புகாரி முஸ்லிம்
நீங்கள் லைலதுல் கத்ர் இரவை றமழானின் கடைசிப் பத்தில் ஒற்றையான (21, 23, 25, 27, 29) நாட்களில் பெற்றுக் கொள்ளுங்கள் எனநபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி) ஆதாரம் : புகாரி முஸ்லிம் இப்னுமாஜா
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَقُمْ لَيْلَةَ القَدْرِ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
லைலதுல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும் நன்மைய எதிர்பார்த்தும் வணங்குகிறா ரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவ்பவர் அபூஹூரைரா(ரலி) நூல் புகாரி.
عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: انْطَلَقْتُ إِلَى أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ فَقُلْتُ: أَلاَ تَخْرُجُ بِنَا إِلَى النَّخْلِ نَتَحَدَّثُ، فَخَرَجَ، فَقَالَ: قُلْتُ: حَدِّثْنِي مَا سَمِعْتَ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةِ القَدْرِ، قَالَ: اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ الأُوَلِ مِنْ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ، فَأَتَاهُ جِبْرِيلُ، فَقَالَ: إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ، فَاعْتَكَفَ العَشْرَ الأَوْسَطَ، فَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ: إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ: «مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلْيَرْجِعْ، فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ القَدْرِ، وَإِنِّي نُسِّيتُهَا، وَإِنَّهَا فِي العَشْرِ الأَوَاخِرِ، فِي وِتْرٍ، وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ» وَكَانَ سَقْفُ المَسْجِدِ جَرِيدَ النَّخْلِ، وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا، فَجَاءَتْ قَزَعَةٌ، فَأُمْطِرْنَا، فَصَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَرْنَبَتِهِ تَصْدِيقَ رُؤْيَاهُ
லைலதுல் கத்ர் இரவு எனக்குக் காட்டப்பட்டது. பின்பு அது எனக்கு மறக்கடிக் கப்பட்டது. நான் அந்த இரவில் தண்ணீரிலும், களி மண்ணிலும் சுஜுது செய்யக் கண்டேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஸயிதுல் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் (நோன்பு) 21ம் நாள் இரவு மழை பொழிந்தது. நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்தில் தண்ணீர் பெருகிக் காணப்பட்டது. அந்த அதிகாலை நபி (ஸல்) அவர்கள் சுபஹ் தொழுது விட்டு திரும்பும் போது அவர்களின் முகத்தில் தண்ணீர், மண் படிந்து காணப்பட்டது. அந்த இரவு தான் (லைலதுல் கத்ர் இரவு) 21ம் இரவாக இருந்தது. (அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரி (ரழி), ஆதாரம் : புகாரி முஸ்லிம்
லைலதுல் கத்ர் இரவின் காலைப் பொழுதில் சூரியன் ஒளியிழந்தும் உதிக்கும் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : உபை இப்னு கஃப் (ரழி), அதாரம் : திர்மிதி
லைலதுல் கத்ர் கடுமையான சூடோ, கடுமையான குளிரோ இன்றி அமைதியும் சாந்தமும் கொண்டதாக காணப்படும். அந்த இரவை அடுத்து வரும் காலைப் பொழுதில் சூரியன் இளஞ் சிவப்பு நிறத்தையுடையதாக இருக்கும் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி), அதாரம் ஸஹீஹுல் ஜாமிஉல் ஸகீர்)
லைலதுல் கத்ர் 27ல் என்று நபி (ஸல்) குறிப்பிட்டுக் கூறவில்லை. அவ்விரவை அடைந்து கொள்ள நபியவர்கள் வபாத்தாகும் வரை இஃதிகாப் இருந்தார்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. லைலதுல் கத்ர் இரவின் அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி அவ் வடையாளங்கள் கடைசி 10ல் ஒற்றையான இரவுகளில் தென்படுமாயின் அதுவே லைலதுல் கத்ர் இரவாகும் என்று கூறினார்கள். எனவே ஒவ்வொருவரும் கடைசிப் பத்தின் ஒற்றைப் படையான இரவுகளில் ஆர்வத்துடன் அதிகமாக வணக்கங்களில் ஈடுபட்டு லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
லைலதுல் கத்ர் இரவு இது தான் என்று அறிந்து கொண்டால் நான் என்ன கூறவேண்டும் என ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் பின்வருமாறு கற்றுக் கொடுத்தார்கள்.
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
பொருள் : அல்hஹ்வே சிச்சயமாக நீ மன்னிப்பவன்! மன்னிப்பை விரும்புகிறவன்! என்னை மன்னிப்பாயாக! ஆதாரம் : இப்னுமாஜா, திர்மிதி
அன்புள்ள சகோதரர்களே! மனிதர்களாக பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே. பாவத்தை விட்டும் பாவமன்னிப்பை விட்டும் அப்பாற் பட்டவர் எவருமில்லை. நாம் செய்த பாவத்திற்கு பச்சாதப்பட்டு, அழுது கண்ணீர் வடித்து அல்லாஹ்வின் அருளில் நம் பிக்கை வைத்தவர்களாக மன்னிப்புக் கோரவேண்டும்.
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
நபியே நீங்கள் கூறுங்கள் தங்க ளுக்கு தாங்களே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! அல்லாஹ் வின் அருளில் நம்பிக்கை இழந்து விட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பு கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் அருள்பாளிப் போனுமாக இருக்கிறான். (39:53)
நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவத்திற்கு உடனே அந்த நிமிடத்திலே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும். மீண்டும் அந்தப் பாவத்தை செய்யமாட்டேன் அதன் பக்கம் நெருங்கமாட்டேன் என்று உறுதிகொள்ள வேண்டும். எங்கள் பிரார்த்தனைக்கும், பாவமன்னிப்புக்கும் பதிலளிக்கக் கூடிய ஒரே கடவுள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் அன்புள்ளவன் இரக்க முள்ளவன்.
அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தை செய்து விட்டாலும், அல்லது தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்து கொண்டாலும் உடனே அல்லாஹ் வை நினைவு கூர்ந்து, தங்களுடைய பாவங்களுக்கு அவனிடமே பிழை பொறுக்கத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? இவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் (அதில்) நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதிலிருந்து விலகி விடுவார்கள்) (அல்குர்ஆன் 3:135)
சகோதரர்களே! பாவமன்னிப்பு கேட்பதற்கென்று விஷேடமான ஒரு தினம் இஸ்லாத்தில் கிடையாது! இடைத்தரகர் ஒருவரை நியமித்து அவர் மூலமாக தவ்பா கேட்க வேண்டும் என்ற நடைமுறையும் இஸ்லாத்தில் கிடையாது. தான் செய்த பாவத்தை உணர்ந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து தனக்கு தெரிந்த பாஷை யில் உடனே பாவமன்னிப்புக் கேட்டு அல்லாஹ்விடம் மன்றாட வேண்டும் என்பதை மேலேயுள்ள இவ்வசனங்கள் கூறுவதை கவனத்தில் கொள்ளுங்கள். அவ்வாறே ஐவேளை தொழுகைகள் முடிந்த பின்பும் பாவமன்னிப்பு கேட்ப தற்கான முறையில் துஆக்களை நபி யவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அவை களை பாடமாக்கி கருத்துக்களை உணர்ந்து ஓதுவதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான மக்கள் ரமழான் மாதம் நோன்பு 27 நள்ளிரவில் பள்ளிவாசலில் (ஆண்கள், பெண்கள்) ஒன்று கூடி இமாம் சொல்லிக் கொடுக்கும் தவ்பாவை கிளிப் பிள்ளை மாதிரி திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று செய்தபாவம், இன்று செய்த பாவம், நாளை செய்யும் பாவம், முன் செய்த பாவம், இருட்டில் செய்த பாவம், வெளிச்சத்தில் செய்த பாவம்...| என்று பாவத்தை கோர்வை செய்து ஒரு வருடத்திற்கான பாவமன்னிப்பை மொத்தமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் கேட்டுவிட்டு அடுத்த வருடம் ரமழான் நோன்பு 27ல் மீண்டும் பள்ளிக்கு வந்து நள்ளிரவில் தவ்பா கேட்கிறார்கள். இப்படியான ஒரு வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்திற்கு காட்டித்தரவில்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தராத எந்த வழி முறையும் மார்க்கமாக மாட்டாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தவ்பாவுக்கென குறிப்பிட்ட நாள் கிடையாது. எந்நேரமும் எச்சந்தரப்பத்திலும் பாவமன்னிப்புக் கோரவேண்டும். தான் செய்த தவறுகள் பாவங்கள் மற்றும் குற்றங்களை உணரந்து உளத் தூய்மை யுடன் கேட்க வேண்டும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نُورُهُمْ يَسْعَى بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
விசுவாசிகளே! நீங்கள் கலப்பற்ற தூய மனதுடன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். உங்கள் இரட்சகன் உங்களை விட்டும் உங்கள் தீமைகளைப் போக்கி உங்களைச்சுவன சோலைகளில் நுழைவிப்பான்.அஅவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.... (அல்குர்ஆன் 66:8)
எவர் பாவமன்னிப்புக் கோரவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்களே! (அல்குர்ஆன் 49:11)
அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோராதவர்கள் ஆணவக்காரர்கள் அனியாயக்காரர்கள். அது மட்டுமன்றி அல்லாஹ்வை புறக்கனிக்கும் மனபாவமுடையவர்கள். எனவே இத்தகைய தீய குணங்களிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
பகலில் பாவம் செய்தவர் தனது பாவத்திற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரு வதற்காக, நிச்சயமாக அல்லாஹ் தனது கையை இரவில் விரித்து ((பாவம் செய்தவன் கேட்கும் தவ்பாவை ஏற்றுக்) கொள்கிறான். இரவில் பாவம் செய்தவர் தனது பாவத்திற்காக பாவமன்னிப்புக் கோருவதற்காக நிச்சயமாக அல்லாஹ் தனது கையை பகலில் விரித்து (பாவம் செய்தவன் கேட்கும் தவ்பாவை ஏற்று) கொள்கிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை (அதாவது கியாமத் நாள் வரும் வரை) அல்லாஹ் இவ்வாறு ஒவ்வொரு செய்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமூஸா (ரலி) நூல் முஸ்லிம்.
ஒருவன் செய்த பாவத்திற்கு எந்நேரமும் மன்னிப்பு வழங்க தவ்பாவை ஏற்றுக் கொள்ள கருனையுள்ள அல்லாஹ் தயாராக இருக்கும் போது நாங்கள் வருடத்திற்கு ஒரு முறை தவ்பா செய்ய முயல்வது தவறான வழிமுறையாகும். கிழமைக்கு ஒருமுறை மாதத்திற்கு ஒருமுறை வருடத்திற்கு ஒரு முறை தவ்பா செய்யும் பழக்கம் மாற்று மதத்தவர்களிடம் தான் இருக்கிறது. இஸ்லாத்தில் இல்லை.
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள். நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு 100 முறை பாவமன்னிப்பு கோருகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அஹர் பின் யஸார் (ரலி) நூல் முஸ்லிம்.
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபியவர்களே எந்த நாளும் பாவமன்னிப்புத் தேடும் போது நாங்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பாவமன்னிப்பு தேடுவது சரிதானா என்பதை சிந்தியுங்கள்.
ரமழான் நோன்பு கடைசி பத்து வந்துவிட்டால் ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் ஏழை எளியவர்களைத் தேடி கண்டுபிடித்து ஸகாத்துல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை கொடுப்ப தற்கு தயாராகவே இருப்பர். பெரியவர்கள் இதற்காக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண் டிருக்கும் போது சிறுவர்கள் அதனை கொண்டுபோய் கொடுப்பதில் ஆர்வம் காட் டுவர். மனமகிழ்ச்சியுடன் அல்லாஹ்வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் நாடி நாம் கொடுக்கும் இந்த பித்ரா பற்றிய விபரத்தை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
நோன்புப் பெருநாளைக்காக தயாராகும் போது ஒவ்வொரு முஸ்லிமும் பித்ரா கொடுத்து தயாராகும் படி இஸ்லாம் கட்டளையிடுகிறது.
நோன்பின் போது ஏற்பட்ட தவறு களுக்குப் பரிகாரமாகவும் பெருநாள் தினத்தில் ஏழை எளியவர்கள் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது எனபதுமே இதன் நோக்க மாகும்.
عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ، فَمَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلَاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ، وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ فَهِيَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ»
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகளிலிருந்து தூய்மைப் படுத்துவதற் காகவும் ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை (பித்ராவை) கடமையாக்கினார்கள்|| அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல்கள் அபூதாவூத், இப்னுமாஜா)
பணக்காரர்கள் மட்டுமல்லாமல் பெருநாளைக்கான செலவுகள் போக எவர்களிடம் (பணம், பொருள்) வசதி இருக்கிறதோ அவர்கள் அனைவரும் இந்த பித்ராவை கொடுத்தாக வேண்டும்.
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى كُلِّ حُرٍّ، أَوْ عَبْدٍ ذَكَرٍ أَوْ أُنْثَى مِنَ المُسْلِمِينَ»
முஸ்லிமான ஆண், பெண், பெரியார், சிறுவர், அடிமை,அடிமையல்லாதவர் ஆகிய அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீத்தப்பழம், தீட்டிய கோதுமை ஆகியவற்றில் ஒரு ஸாவு கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமை யாக்கினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல்கள் புகாரி முஸ்லிம்)
குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்காகவும், நோன்பு நோற்றவர்களுக்கும், நோன்பு நோற்க முடியாத நிலையிலுள்ள குழந்தை, சிறியவர், முதியவர்களுக்காகவும், குடும்பத் தலைவன் ஒரு ஸாவு வீதம் பித்ரா கொடுக்க வேண்டும்.
மக்கள் எதனை பிரதான உணவாக கொள்கிறார்களோ அதையே கொடுக்க வேண்டும்.
أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: «كُنَّا نُخْرِجُ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ أَقِطٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ»
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا نُخْرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ»، وَقَالَ أَبُو سَعِيدٍ: «وَكَانَ طَعَامَنَا الشَّعِيرُ وَالزَّبِيبُ وَالأَقِطُ وَالتَّمْرُ
நாங்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்புப் பெருநாள் தர்மமாக ஏதேனும் உணவையோ அல்லது பேரீச்சம் பழத்தையோ அல்லது தீட்டப்படாத கோது மையையோ அல்லது பாலாடைக் கட்டியையோ அல்லது உலர்ந்த திராட்சையையோ ஒரு ஸாவு அளவு கொடுப்போம்||
மற்றொரு அறிவிப்பில் (எமது)உணவாக இருந்ததிலிருந்து ஒரு ஸாஉ நோன்பு பெருநாள் தர்மமாக நபி(ஸல்) காலத்தில் வழங்கி கொண்டிருந்தோம் . எங்களது உணவு தீட்டப்படாத கோதுமை பாலாடை கட்டி பேரீத்தப்ழம் உலர்ந்ந பேரீத்தப்ழமாக இருந்தது என அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அறிவிக்கிறார்கள் (நூல் புகாரி)
மக்கள் ஒரு ஸாவு அளவு தீட்டப்படாத கோதுமைக்கு பகரமாக அரை ஸாவு தீட்டப் பட்ட கோதுமையை பித்ராவாக கொடுத்தார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் புகாரி)
நமது நாட்டில் அரசி, மா, போன்றவை பிரதான உணவாக இருப்பதனால் அதனை யே ஒரு ஸாவு பித்ரா கொடுக்கலாம்.
ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டு இந்த பித்ராவை நபியவர்கள் கடமையாக்கினர்கள் என்ற ஹதீஸி லிருந்து அந்தந்தப் பகுதிகளில் எது உணவாக அமைந்துள்ளதோ அதனையே வழங்கலாம் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு ஸாவு அளவு கொடுக்க வேண்டும் என்று மேலேயுள்ள ஹதீஸ் கூறுகிறது. இரண்டு கைகளாலும் நான்கு முறை அள்ளி கொடுப்பதே ஒரு ஸாவு என்று கூறப்படும். (இது சுமார் 2 1\ 2Kg என்று கணிக்கப்படுகிறது) எனவே நாம் கொடுக்கும் உணவுப் பொருட்களை இந்த முறையில் அளந்து கொடுக்க வேண்டும்.
பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன் அல்லது பெருநாள் தொழுகைக்கு முன்கொடுத்துவிட வேண்டும். சஹாபாக்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். அறிவிப் பவர் இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி)
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِزَكَاةِ الفِطْرِ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»
மக்கள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பே பெருநாள் தர்மத்தை கொடுத்து விடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் புகாரி முஸ்லிம்)
பித்ரா கொடுப்பதன் கடைசி நேரம் பற்றி கூறப்பட்டிருக்கிறது. அதனை சேகரி த்து விநியோகிக்கும் ஆரம்ப நேரம் பற்றி கூறப் படவில்லை. எனவே ரமழான் மாதத் தில் எப்போதும் வேண்டுமானாலும் இதற் கான ஆயத்தங்களை, விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
பெரும்பாலான மக்கள் வருடா வருடம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பித்ரா கொடு த்து வரும் வழக்கத்தைப் பார்க்கிறோம். இதனால் அதிகமான ஏழைகள் நன்மை பெறும் சந்தர்ப்பம் குறைந்து விடுகிறது. ரமழான் காலங்களில் பாதையோரங்களில் காணப்படக் கூடிய ஏழைகள், வீடு வீடாக ஏறி இறங்கக் கூடிய ஏழைகள் அதிகரி த்துக் கொண்டு வருவதையும் காணுகி றோம். தெரிந்த, தெரியாத ஏழைகள் உட் பட எல்லோரும் இந்த பித்ராவை பெற்றுக் கொள்ளும் வழியை நாம் கடைபிடிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும் (மஹல்லாக் களிலும்) பித்ரா கொடுப்பதற்கு தகுதி யுள்ள மக்களிடமிருந்து அவர்களுடைய பித்ராக்களை ஒரு இடத்தில் ஒன்று சேர் த்து, அவ்வூரிலுள்ள ஏழை எளியவர்களை அழைத்து கொடுக்கும் போது எளியவர் களின் தேவைகளை நிறைவேற்றவும் முடியும். வீடுவீடாகப் படியேறி இறங்கும் ஏழைகளின் அவலங்களுக்கு பிரிகாரம் காணவும் முடியும்.
கூட்டாக விநியோகிக்கும் போது ஆயிரக் கணக்கான ஏழைகள் நன்மையடை வார்கள். தனித்தனியாக கொடுக்கும் போது ஒரு சிலர் மட்டுமே நன்மை யடை வார்கள்.
முஸ்லிம்கள் சேர்ந்து வாழக்கூடிய இடங்களில் (மஹல்லாக்களில்) ஸகாத் மற்றும் ஸகாதுல் பித்ரா ஆகியவற்றை கூட்டுமுறையில் நடை முறைப்படுத்தப்படுமானால் ஏழை ஏளியவர்கள் அனாதைகள் விதவைகள் தேவை யுடையவர்களது வாழ்வு பிரகாசமானதாக அமையும். பள்ளி நிர்வாகிகள் முன்னின்று இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தல் வேண்டும்.
நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதிகமான ஆண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் தான் இத்தொழுகைகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே தவிர பெண்கள் ஆர்வம் காட்டுவதாகவோ கட்டாயம் என உணர்ந்து கொண்டதாகவோ தெரிய வில்லை. அதனால் தான் ஆண் களை தொழுகைக்கு அனுப்பிவிட்டு பெண்கள் வீட்டு வேளைகளில் முடங்கி விடுகிறார்கள். இது பெரும் தவறாகும்.
ஹப்ஸா பின்த் ஸிரீன் (ரலி) கூறியதாவது : நாங்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜிப் பெருநாளிலும் தொழும் இடத்திற்கு எங்கள் குமரிப் பெண்கள் செல்வதை தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அந்தப் பெண்மணி அன்னை உம்மு அதிய்யா (ரலி) அறிவித்த ஹதீஸை பின்வருமாறு கூறினார்கள்.
நாங்கள் யுத்தக்களத்தில் காயமுற்ற வர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடியவர் களாகவும் நோயாளிகளை கவனிக்கக் கூடியவர்களாகவும் இருந்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமாகுமா? எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளுக்கு மேலங்கி இல்லாவிட்டால், அவளது தோழி தனது மேலதிகமான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம் களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும் எனக் கூறினார்கள்.
மேலும் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் பெருநாள் தொழுகைக்காக தொழும் திடலுக்கு (மைதானத்திற்கு) வீட்டைவிட்டு புறப்படச் செய்யும் படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழு மிடத்தை விட்டு விலகியிருப்பார்கள் என உம்மு அதிய்யா (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரியில் பதிவாகியுள்ளது.
பெண்கள் கண்டிப்பாக பெருநாள் தொழுகைக்காக வீட்டைவிட்டு புறப்பட வேண்டும் மாதவிடாய்க் காரியாக இருந்தாலும் கூட கலந்துகொண்டு தொழும் இடத்திலிருந்து விலகி யிருந்து அங்கு நடைபெறும் குத்பாவை செவி மடுக்க வேண்டும் என்பது நபி அவர்களின் கட்டளை. இந்தக் கட்டளையை ஏற்று செயல்பட பெண்கள் முன்வர வேண்டும்.
சில பகுதிகளில் ஆண்களுக்கு ஒரு நேரத்திலும், பெண்களுக்கு வேறொரு நேரத்திலும் பள்ளிவாசலில் இருமுறை தொழுகை, குத்பா நடாத்துகிறார்கள். சில சமயங்களில் வீடுகளில் பெண்களுக்கு மாத்திரம் தொழுகை நடாத்துகிறார்கள். இவை நபிவழிக்கு முரணான செயலாகும். ஊர்மக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஒரே ஜமாஅத்தின் கீழ் ஒரே நேரத்தில் ஒரே (திடலில்) மைதானத்தில் தொழக் கூடியதாக ஏற்பாடு செய்வதே நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) மைதானத்திற்கு (தொழுவதற்கு) செல்பவர்களாக இருந்தார்கள் என அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி)
உம்முஅதிய்யா (ரலி) அறிவிக்கும் மேலேயுள்ள ஹதீஸிலும் மைதானத் திற்கு தொழுகைக்காக புறப்பட்டுச் செல்லுமாறுதான் நபியவர்கள் கட்டளையிட்டுள் ளார்கள் என்று தெரிகிறது. எனவே பெருநாள் தொழுகைகளை ஏற்பாடு பண்ணக் கூடிய பள்ளி நிருவாகிகள் அல்லது பேஷ் இமாம்கள் ஊரிலுள்ள மைதானத்தில் ஆண்கள், பெண்களுக்கு ஒரே நேரத்தில் தொழுகை நடாத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே நபியவர்கள் நடைமுறைபடுத்திக் காட்டிய சுன்னாவாகும். ஆண்கள், பெண்களுக் கென்று தனித்தனியாக நபியவர்கள் ஜமாஅத் நடாத்தியதில்லை.
பெருநாள் தொழுகையில் முதலாவது ரகஅத்தில் முதல் தக்பீர் கூறி இரு கைகளை கட்டி வஜ்ஜஹ்து போன்ற துஆக்களை ஓதியபின் சூரத்துல் பாத்திஹா ஓதும் முன் ஏழு விடுத்தம் தக்பீர் (அல்லாஹு அக்பர்) என்று கூறவேண்டும். அதன்பின் சூரத்துல் பாத்திஹாவுடன் ஏனைய சூராவை ஓதவேண்டும்.
இரண்டாம் ரக்கஅத்தில் சுஜுதி லிருந்து எழுந்தவுடன் ஐந்து விடுத்தம் தக்பீர் கூறி அதன் பின் சூரத்துல் பாத்திஹாவுடன் ஏனைய சூராவை ஓதவேண்டும். (நூல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு ஒரு வழியில் சென்று விட்டு வேறொரு வழியாக (வீடு) திரும்புவார்கள். (நூல் புகாரி)
பெருநாள் தொழுகைக்கு பாங்கு, இகாமத் முன்பின் சுன்னத்தான தொழுகைகள் இல்லை. தொழுகை முடிந்த பின்பே குத்பா (உரை) நிகழ்த்த வேண்டும். (நூல் புகாரி)
நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு முன்பு சாப்பிடுவதும், ஹஜ்ஜுப் பெரு நாளில் தொழுகைக்குப் பின்பு சாப்பிடுவதும் நபிவழியாகும். (நூல் புகாரி)
நோன்பு பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தினங்க ளில் நோன்பு நோட்பது ஹராமாகும். (நூல் புகாரி)
இரு பெருநாட்களிலும் அல்லாஹ்வை பெருமைப்படுத்தி அதிகமதிகமாக தக்பீர் கூறவேண்டும்.
{ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
(நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை படுத்துவதற்காகவும் அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காகவும் (தக்பீர்கூறி) அவனைப் பெரு மைபடுத்து வதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவ்வாறு செய்தான்) (அல்குர்ஆன் 2:185 22:37)
வீண் வேடிக்கைகளிலும் சினிமா பார்ப்பதிலும் ஈடுபடுவதை முற்றாக (எல்லா நேரங்களிலும்) தவிர்ந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம்களது தவறான நடத்தையின் காரணமாகத்தான் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் முன்னிட்டு இன்னி சைக் கச்சேரியென்றும் புதுப் படங்கள் வெளியாகின்றன என்றும் விளம்பரப்படுத்து கிறார்கள். முஸ்லிம்கள் வெட்கித் தலை குனியக் கூடிய செயல்கள் இவைகள். இதுபோன்ற அனாச்சாரங்களைத் தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும்.
பெருநாள் தினத்தில் விளையாட்டு போட்டிகள் போன்றவை நடாத்தலாம் என்பதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.
பெருநாள் தினத்தன்று சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங் களையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனை பார்க்க (ஆயிஷா) ஆசைப்படுகிறாயா என நபி யவர்கள் கேட்டார்கள். நான் ஆம் என் றேன். அப்போது நபியவர்கள் என்னை தனக்கு பின்புறமாக நிறுத்தி என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தார்கள். நான் (விளiயாட்டை) பார்த்து சலித்த போது உனக்கு பார்த்தது போதுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் உள் ளே போ எனக் கூறினார்கள். (அறிவிப் பவர் ஆயிஷா (ரழி) நூல் புகாரி)