அனைத்துப் படைப்பினங்களையும் படைத்து அவர்களது எண்ணிக்கையைக் கணக்கிட்டு வைத்திருக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உண்டாவதாக. நாளை மறுமை நாளில் அவர்கள் அனைவரும் தனியாகவே அவனிடத்தில் வருவார்கள், மேலும் வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லையென நான் சாட்சி கூறுகிறேன், அவன் தனித்தவன், இணையற்ற வன், மேலும் நேர் வழியின் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்கள் நபியெனவும் சாட்சி கூறுகிறேன். மேலும் அவர்களுடைய தோழர்கள் மீதும், கிழையார்கள் மீதும் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட அவர்களுடைய வழி நடந்து நேர்வழி பெற்றவர்கள் மீதும் அல்லாஹ் ஸலவாத்துச் சொல்வானாக.
மனிதன் மரணிக்கும் தினமும், கியாமத் நாளில் அவன் எழுப்பாட்டப்படும் தினமும் அவன் கடந்து செல்லும் மிக முக்கியமான இரண்டு நாட்களாகும், எல்லா மனிதர்களும் இவ்விரு நாட்களையும் கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் இதைப்பற்றி சிந்தித்து படிப்பினை பெறுவது அவசியமாகும்.
உன்னைக் கடந்து செல்லவிருக்கும் மகத்தான இரண்டு நாட்களைப்பற்றி சிந்தித்துப் பார்த்தாயா?
இப்போது நாம் மிகவுமே ஆபத்தான இரண்டு காட்சிகளுக்கு முன்னால் இருக்கிறோம். அக்காட்சிகளைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
ஒன்று; (இன்னும் ஒரு நாளைப்பயந்து கொள்ளுங்கள், அதில் நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் மீட்டப்படுவீர்கள்). பகரா 281.
இரண்டு; (பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குறிய (கூலியான)தை பூரணமாகக் கொடுக்கப்படும். (அதில்) அவர்களோ அணியாயம் செய்யப்பட மாட்டார்கள்). பகரா 281.
நிச்சயமாக இவ்வசனம் சிறியவர் பெரியவர் கண்ணியமானவர், அற்பமானவர் போன்ற வேறுபாடு களின்றி அனைவருக்குமே அல்லாஹ் கட்டாயப்படுத் தியுள்ள மகத்தான இரு நாட்களை நினைவு கூறுகின்றன. நிச்சியமாக அதுவே (இறைவனின்) முன்னால் நிறுத்தப்படும் நாள்! மேலும் அதுவே வாக்களிக்கப்பட்ட சந்திப்புமாகும்.
அத்தினம் வருவதற்கு ஒரு வினாடிக்கு முன் மனிதன் ஏமாற்றும் (உலக) வீட்டில் இருந்து சந்தோசங்கள் அல்லது தீமைகள் நிறைந்த (மருமை) வீட்டை நோக்கிப் பயணிக்கிறான். அந்த வீட்டை நோக்கிப் பயணிப்பதற்கு கட்டாயப் படுத்தப்பட்ட வினாடியே அது. அந்த வினாடியில் தான் அவன் தனது புதல்வர்களையும், புதல்விகளையும் சகோதர சகோதரிகளையும் இறுதியாகப் பார்க்கும் நேரம். ஏன் இந்த உலகத்தையே இறுதியாகப் பார்க்கும் வினாடியும் அதுவே. பின்னர் அவனுடைய முகத்தில் (சகராத் எனும்) மரண அவஸ்தையின் அடையாளங்கள் தோன்றும். அவனுடைய இதயத்தின் அடியிலிருந்து மூச்சுகள் வெளியேறும்.
ஆம், (காபிர் எனும்) நிராகரிப்பவன் விசுவாசம் கொள்வதும், (பாஜிர் எனும்) தீயவன் உறுதியான நம்பிக்கை கொள்ளும் வினாடியும் அதுவே தான்.
அற்ப உலத்தைப் புரிந்துகொள்ளும் நேரமும் அதுவே தான்.
(மனிதன்) அல்லாஹ்வின் கடமையில் தான் தவரவிட்ட ஒவ்வொரு வினாடியையும் நினைத்துக் கவலைப் படக்கூடிய வினாடியும் அதுவே. அந்நேரத்தில் மனிதன் “இறைவா! என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்பு வாயாக!” என்று கூறுவான்.
(மலகுல் மவ்த் எனும்) உயிர்களைக் கைப்பற்றும் வானவர் மிக அன்மையிலிருந்து கொண்டு அழைப்பதற்கு ஆயத்தமாகும் தீர்க்கமான வினாடியும் அதுவே. அவ்வேளை அவர் என்னை சொர்க்கவாசி என அழைப்பாரா, அல்லது நரகவாசி என அழைப்பாரா என்று நான் அறிய முடியவிலையே!
உண்மையில் தனிமை என்பது (கபன் எனும்) வெண்ணிற ஆடையுடன் (லஹ்த் எனும்) புதைகுழியில் இருப்பதேயாகும்.
நீ உனது படுக்கை விரிப்பில் இருக்க, உனது குடும்பத்தினர் அவர்களுடைய கைகளால் உன்னை புரட்டுவதையும், உனது உயிர் கைப்பற்றப்படும்போது ஒவ்வொரு நரம்புகளிலிருந்தும் உயிர் பிரிக்கப்படுவதையும் சிந்தித்துப் பார்த்தாயா? பிறகு என்ன நடக்கப் போகிறது?
உயிரைப்படைத்த இறைவனிடம் அது ஒப்படைக்கப்பட்டு விடும், மேலும் காலோடு கால் பின்னிக் கொள்ளும்.
பின்னர் குளிப்பாட்டுபவர் வருவார், உனது ஆடைகளைக் களைவார், உன்னைத் தனியாக ஒரு பலகையின் மீது போடுவார், உன் மீது தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டுவார். சுத்தமும் செய்து விடுவார், பிறகு உனது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் (கபன் எனும்) வெண்ணிற ஆடையைக் கொண்டு வரும்படி கேட்பார், பின்னர் எல்லோருமாக சேர்ந்து உன்னை (மிஹ்ராப் எனும்) மாடத்தின் முன் (தொழுகை நடாத்துவதற்காக) வைப்பார்கள், பிறகு என்ன நடக்கப் போகிறது?!
தனியாகவே உன்னை மண்ணரையில் வைப்பார்கள்.
உன்னுடன் தங்குவதற்குத் தாயுமில்லை.
உன்னுடன் சேர்ந்திருக்க தந்தையுமில்லை,
உனக்கு ஆறுதல் கூற சகோதரனுமில்லை.
(பின் வருமாறு கவிஞர்) ஒருவர் கூறுவதைப் போல் நீ மாறி விடுவாய்.
எனது குடும்பத்தினர் பூமியின் வயிற்றில் என்னை ஒப்படைத்து விட்டுத் திரும்பிச் சென்று விட்டார்கள், எனக்கு ஏற்பட்ட தனிமையே?!
கஷ்டப்படும் ஏழையாக என்னை விட்டுச் சென்றார்கள், வெறும் அழுகை மாத்திரம் தான் என்னிடம் உள்ளது,
நடந்து முடிந்த எதுவுமே நடக்காதது போல் இருக்கிறது, நான் எச்சரிக்கப்பட்ட யாவும் வந்து விட்டது.
அவை தான் புழுதியைப் போல் எனது (கபன் எனும்) வெண்ணிற ஆடையில் ஒட்டிக் கொண்ட சொத்துக்கள்.
தோழா! என்னையும் என் நிலையையும் கண்டால் நிச்சியமாக நீ அழுது விடுவாய்!
அங்கு,தான் ஒருவன் தனிமையின் வீட்டையும், வியக்கத்தக்க பயங்கரமான தங்குமிடங்களையும் கண்டு கொள்வான். ஒரேயொரு வினாடியில் அவன் இழிவடைந்த (உலக) வீட்டிலிருந்து நிறந்தரமான சுவன வீட்டை நோக்கிப் பயணிக்கிறான்.
மேலும் அவன் ஒரே வினாடியில் உலகத்தின் கஷ்டங்களிலிருந்து விடுபட்டு மறுமையின் வசதியை நோக்கிப் பயணிக்கிறான், தீயவர்களுக்கு அன்மையி லிருந்து அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வின் பக்கம் பயணிக்கிறான்.
(உலகத்தின்) ஏமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டு விட்டது, எனவே ஒரு அடியானுக்கு மறுமையில் எழுப்பப்படும் போதும், அல்லாஹ்வின் பக்கம் மீளும் போதும் ஏற்படும் கஷ்டங்கள் விளங்கிவிடும், (உலகத்தின்) கேளிக்கைகளும் ஏமாற்றங்களும் முடிந்து அவைகளுக்கான கூலிகள் காத்திருக்கின்றன.
உனது பட்டோலை சுருட்டப்படும் நேரம் எப்படி இருக்கும்? “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” நற்செயல்கள் மீதா? அல்லது தீய செயல்கள் மீதா (அவ்வாறு சுறுட்டப்படும்)?. அல்லாஹ் வையும் இறுதி நாளையும் அதிகமாக மறந்திருந்த அந்த நாட்களை எண்ணி எண்ணி நீ மிகவும் வருத்தப்படுவாய். இதோ இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் முடிந்து விட்டன. அதன் நாட்களும் விரைவாகக் கழிந்து விட்டன. உனக்கு முன்னால் இருக்கும் யதார்த்தமான மருமை வாழ்க்கையை நோக்கி பயணிக்கு முகமாக உனது உயிரைப் படைத்தவனித்தில் நீ ஒப்படைக்கிறாய், ஒரே வினாடியில் குறிப்பிட்டுச் சொல்லப்படும் ஒரு பொருளாக (கூட) இருக்காத நிலைக்கு நீ மாறி விடுகிறாய். மருமையின் தங்குமிடங்களில் முதலாவது வீட்டை நீ சென்றடைந்து, ஒரு புது வாழ்க்கையை ஆரம்பித்தால் எப்படியிருக்கும்? - “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” - ஒன்றில் அது சந்தோசமான வாழ்க்கை யாகும் அல்லது அது துக்ககரமான வாழ்க்கையாகும்.
மண்ணரைவாசிகளின் நிலமை எப்படி யிருக்குமோ!!!
பாழடைந்த இடங்களிலும், இருண்ட குகைகளிலும் காணப்படும் எத்தனை மண்ணறைகள் அதிலுள்ள வர்களுக்கு சந்தோசத்தையும், பிரகாசத்தையும் நிறப்பி யிருக்கும். அதே நிலையில் ஒளியேற்றப்பட்டு மக்கள் சந்தோசமாக உலா வரும் இடங்களில் இருக்கும் எத்தனை மண்ணறைகள் நிரந்தரன வேதனையிலும் (ஜஹீம் எனும்) நரகமாகவும் இருக்கும்.
அடுத்தடுத்து மக்கள் நெருக்கமாகக் குடியிருக்கும் ஒரே மையவாடியில் வித்தியாசமான பரிபாலனம், - “வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” – ஒரு புறம் அல்லாஹ்வின் மகத்தான திருப்தியின் இன்பத்தில் ஒரு ஏழை மனிதன் புரள்கிறான், மறு புறம் (ஜஹீம்) எனும் நரகத்தின் அடித்தட்டிலும் நிலையான வேதனையிலும் சில மண்ணரைகள் காணப்படும். அதிலுள்ளவர்கள் சத்தமிட்டு அழைப்பார் கள் ஆனால் அவர்களுக்கு விடையளிக்க எவரும் இருக்கமாட்டார்கள், கூடவே இறங்கும்படி வேண்டுவார் கள் அதற்கும் விடையளிக்க எவரும் இருக்கமாட்டார்கள்.
******
மண்ணறைகள் அதிலுள்ளவர்களை நெறுக்கும். அப்பால் தீயவர்கள் வேதனை செய்யப்பட்டும், நல்லவர்கள் இன்பமும் அனுபவித்து அதிலே மறைந்து விடுவார்கள் பின்னர் அவர்களுடைய உடம்பின் எஞ்சிய பாகங்களும் உருப்புக்களும் சேகரிக்கப்படும், உடனே அல்லாஹ்வின் அழைப்பாளி வாக்களிக்கப்பட்ட சந்திப்புக்கும் சாட்சி கூறப்பட்டதுமான நாளைக்கு அவர்களை வரும்படி அழைப்பு விடுப்பார், அந்த நாளில் தான் பூமி, வேறு பூமியாகவும், வானங்கள் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய, அடக்கியாளும் அல்லாஹ் விடம் அவர்கள் எல்லோரும் திரளுவார்கள்.
அந்நாளில் எந்த நண்பனும் எந்த நண்பனுக்கும் எந்த ஒன்றையும் பயனளிக்க மாட்டான். அல்லாஹ் அருள் புரிந்தவரைத் தவிர அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
ஸூர் ஊதுபவர், அவருக்கு கட்டளையிடப்பட்டவாறு ஸூர் ஊதுவார், அவருடைய சப்தத்தைக் கேட்ட செவிகளும் செவிப்புளன்களும் நடுங்கும். உடனே அனைத்துப் பிரேதத்துக்குரியவர்களும் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து செருப்பணியாமல் வெருங்காலால் நடந்தவர் களாகவும், நிர்வாணமான வர்களாகவும், விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாகவும் வெளியேறுவார்கள், அங்கே பணம், அந்தஸ்து, வம்சம், போன்ற யாதொரு வேறுபாடுகளுக்கும் இடமில்லை.
அந்நாளில் கண்ணியமானவர் தாழ்ந்தவராவும், சங்கையானவர் இழிவானவராகவும், அல்லாஹ்விடத்தில் வருவார்.
முன்சென்றவர்களையும் பின் வந்தவர் களையும் அல்லாஹ் ஒன்று சேர்கும் தினமும் அதுவே தான்.
எல்லா நாட்களும் முடிவடையும் இறுதி நாளும் அதுவேதான்.
கனவுகளும் சந்தேகங்களும் கலைந்துபோகும் தினமும் அதுவேதான்.
வழக்காடுபவகள் ஒன்று சேரும் தினமும், அனியாயம் செய்தவனுக்கும் செய்யப்பட்ட வனுக்குமிடையில் நீதி வழங்கப்படும் தினமும் அதுவேதான்.
பட்டோலைகள் பிரிக்கப்படடுவதும், (மீஸான் எனும்) தராசு வைக்கப்படும் நாளும் அதுவே தான்.
ஒரு மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடும் நாளும் அதுவே தான்.
அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்பும் நாளும் அதுவே தான்.
(ஸுர் ஊதப்பட்டதும்) ஒரு அடியான் நஷ்டவாளி யாகவும், (மனம்) உடைந்தவனாகவும், ஒரு கைதியைப் போன்று அற்பனாகவும், இழிவடைந்தவனாகவும் செருப்பணியாமல் வெருங்காலால் நடந்த வனாகவும், நிர்வாணமானவனாகவும் “கடந்து சென்ற நாட்களையும் வருடங்களையும் பற்றி வினாத் தொடுத்து விசாரனையும் நடாத்தப் படுவதற்காக” வானங்களுக்கும், பூமிக்கும் ஆதிக்கம் செலுத்துபவனாகிய அல்லாஹ்விடம் செல்வான்.
*****
முன்சென்றவர்களும் பின்வந்தவர்களுமாக, அல்லாஹ் மாத்திரம் அறிந்து வைத்திருக்கும் எண்ணிக்கையை கொண்ட அனைத்துப் படைப்புகளுடனும் நீ நின்று கொண்டிருக்கும் போது உனது பெயர் கூறி அழைக்கப் படும் நேரத்தைச் சற்று கற்பனை செய்து பார்.
அல்லாஹ்வின் முன்னிலையில் உன்னை எடுத்துக் காட்டப்படுவதற்காக, இன்னா ருடைய மகன் இன்னார் எங்கே? என அழைக்கப்பட்டால், உனது புயங்கள் நடுங்க நீ எழுந்து நிற்பாய், கடுமையான பயத்தினால் சக்தியற்று உனது கால்களும் மற்றும் ஏனைய உருப்புக்களும் நடுங்கும், உனது நிறம் மாறி விடும், அப்போது உன்னை சூழ்ந்து கொள்ளும் கவலையையும், தடுமாற்றத்தை யும், பயத்தையும் அல்லாஹ்வே அறிவான்.
அந்நேரத்தில் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்த அல்லாஹ்வின் முன்னிலை யில் நிற்பதை நீ கற்பனை செய்து பார். அப்போது அப்போது நீ பீதியடைந்தவனாகவும் கவலை தோய்ந்த வனாகவும் காணப்படுவாய், உனது பார்வை கீழ் நோக்கியிருக்கும், உனது பட்டோலையை நீ பிடித்துக் கொண்டிருப்பாய், அதிலே நுற்பமான, மற்றும் பெரிய செயல்கள் யாவும் (எழுதப்பட்டு) இருக்கும். நித்தமும் நீ செய்த (தவறான)வைகளை மறைத்துக் கொண்டு உனக்கு நன்மை செய்து கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு முன்னால் நீ வெட்கித்து தலை குனிந்தவனாகமனமுடைந்து மெதுவாக அதை வாசித்துப் பார்க்கும் சந்தர்ப்பத்தை கற்பனை செய்து பார்!
அல்லாஹ்வுக்காக உன்னிடம் கேட்கிறேன்.
உனது தீய செயல்களையும், நீ செய்த பெரும் பாவங்களையும் பற்றி உன்னிடத்தில் விசாரனை செய்யும் போது எந்த நாவினால் அவனுக்குப் பதில் அளிக்கப் போகிறாய்? நாளை மறுமையில் எந்தக் கால்களினால் அவன் முன்னிலையில் நிற்கப் போகிறாய்? எந்தப் பார்வையினால் அவனை நீ பார்க்கப் போகிறாய்?! மகத்துவ மிக்க அவனுடைய பேச்சையும், கேள்விகளையும், கண்டிப்பையும் எந்த இதயத்தினால் சகித்துக் கொள்ளப் போகிறாய்?
மகத்துவம், கண்ணியம், பெருமை போன்ற பூரணமான பண்புகளால் உனது செவி நிறையக் கேள்விப் பட்டிருக்கும் (அல்லாஹ்) ஒருவன் உன்னிடத்தில் கேள்வி கேட்பதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
நீ அவனுக்கு மாறு செய்ததையும், பாவங்கள் செய்ததையும், மேலும் அவன் உன்னை அவதானித்துக் கொண்டிருந்தும் கூட அவனுடைய விளக்கல்களில் கவனயீனமாக இருந்ததையும், உலகத்தில் அவனுக்கு வழிப்படாது அலட்சியப் படுத்தியதையும் உனக்கு நினைவு கூறப்பட்டால் எப்படியிருக்கும்?
உன்னிடத்தில் அல்லாஹ் பின்வருமாறு கேள்விகள் கேட்டால் நீ என்ன பதில் கூறப்போகிறாய்?
அடியானே! என்னை நீ கண்ணியப் படுத்தவில்லையே! ஏன் நீ எனக்கு முன்னால் வெட்கப்படவில்லை?
நீ என்னை அவதானிக்கவில்லையா?
நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீ ஏன் இலகுவாக மதிப்பிட்டாய்?
நான் உனக்கு நன்மை புரியவில்லையா?
நான் உனக்கு அருள் புரியவில்லையா?
என் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது?
உனது வாலிபத்தை எவ்வாறு கழித்தாய்?
உனது ஆயுலை எவ்வாறு செலவு செய்தாய்?
உனது பணத்தை எங்கிருந்து சம்பாதித்து, அதை எவ்வாறு செலவு செய்தாய்?
உனது அறிவினால் என்ன செய்தாய் ?
(அல்லாஹ்வை) நிராகரித்த ஒருவன், அவனுடைய அழிவு நிச்சயம் என உறுதியாக அறிந்த பின் அவனுக்கு நிகழும் துன்பங்களை சற்று கற்பனை செய்து பார். அனைத்து படைப்புகளுக்கும் மத்தியில் முகம் கருத்தவனாக அவன் நரகத்துக்கு இழுத்துச் செல்லப்படுவான், அந்நேரம் அவனது இடது கரத்தாலோ அல்லது முதுகுக்குப் பின்னாலோ பட்டோலையை ஏந்தியிருப்பான், எனக்குப் பிடித்த கேடே! நாசமே! என்றெல்லாம் அவன் சப்தமிடுவான். அப்போது அவனுடைய தோளைப் பிடித்திருக்கும் வானவர்; இவன் தான் இன்னாருடைய மகன் இன்னார், சந்தோசத்தை இழந்து நிறந்தரத் துர்பாக்கிய வனாக மாறிவிட்டான் என சப்தமிட்டுக் கூறுவார்கள்.
(ஜஹன்னம் எனும்) நரகத்துக்கு மேல் தொங்க விடப்பட்ட (ஸிராத் எனும்) பாலத்தையும் அதன் மெல்லிய தோற்றத்தையும் கண்கூடாகவே பார்த்ததும் உனக்கு எற்படும் பயத்தை சற்று நினைவு படுத்திப் பார், பின்னர் அந்தப் பாலத்துக்கு கீழ் உள்ள நரகத்தின் கருந் தோற்றத்தை நீ காண்பாய், அதன் கடும் இரைச்சலையும், கொந்தளிப்பையும் நீ செவிமடுப்பாய், உனது நிலை மிகவுமே பலவீனமுற்றிருக்கும், இதயம் பயந்து கொண்டிருக்கும், கால்களும் தடுமாறிக் கொண்டிருக்கும், (பாவச்) சுமைகளால் உன் முதுகு பாராமாக இருக்கும், அந்நேரத்தில் சாதாரண தரையில் நடப்பதையே சுமையாக காணும் உனக்கு ஸிராத் எனும் அந்தக் கூர்மையான பாலத்தைக் கடந்து செல்லும் படி கட்டளை யிடப்படும். அப்போது அதைக் கடந்து செல்ல நீ ஒரு காலை எடுத்து வைத்ததுமே அதன் கூர்மை உனக்கு விளங்கி விடும், அடுத்து மற்றைய காலையும் எடுத்து வைக்க நீ முயற்சித்ததும் உனக்கு முன்னால் (அல்லாஹ்வுக்கு மாறு செய்த) மனிதர்கள் அதில் வழுக்கியும் கால் இடரியும் விழும் காட்சிகளையும், (ஸபானியா எனும்) நரத்தின் காவலாளிகள் அவர்களை நரகத்தின் கொக்கிகளால் மாட்டி இழுத்து தலை கீழாகவும் கால்கள் மோலாகவும் முகங்குப்புரத் தள்ளிவிடும் அகோரமான காட்சிகளையும் நீ நினைவு படுத்திப்பார்.
(ஸிராத் எனும்) பாலத்துக்கு மேலால் நீ ஒரு முறை நடந்தும் மறு முறை தவண்டும் பயணிக்கும் போது உனக்குக் கீழால் இருக்கும் இருண்ட (ஜஹன்னம் எனும்) நரகத்தின் நெருப்பு கொளுந்து விட்டு எரியும், அப்போது அதன் தீச்சுவாலை மேல் உயர்ந்து வருவதை நீ பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து பார்!!!
ஒரு கவிஞர் கூறினார்;
பாவமண்ணிப்புக் கோர எனது ஆத்மா மறுக்கிறது, அடியார்கள் அனைவரும் கண்ணிய மிக்க அல்லாஹ்வுக்கு முன் நிற்கும் போது தப்பிக்க வழியேது?
மலைகலைப் போன்ற பாவச் சுமைகளுடன் போதை வயப் பட்டோராக கப்ருகளிலிருந்து மனிதர்கள் எழுந்திருப்பார்கள்.
அவர்கள் கடந்து செல்வதற்காக தொங்க விடப்படும்(ஸிராத் எனும்) பாலத்தில் இடது பக்கத்தின் மீது தலை கீழாக விழுபவர்களும் உள்ளனர்.
(மேலும்) சுவன வீட்டை நோக்கிச் சென்றதும், மணப் பெண்கள் வரவேற்கக் கூடிய சிலரும் அவர்களில் உள்ளனர்.
பேரரசனாகிய அல்லாஹ் அவர்களை நோக்கி, எனது அடியானே! கவலைப்படாதே உனது பாவங்களை நான் மண்ணித்து விட்டேன் என்று கூறுவான்.
வேறு ஒரு கவிஞர் கூறுகிறார்;
(ஜஹீம் எனும்) நரகத்துக்கு மேல் (ஸிராத் எனும்) பாலம் தொங்க விடப்பட்டால், பாவிகள் மீது அது பாய்ந்து நீளமாகி விடும்.
ஒரு கூட்டத்தினர் (ஜஹீம் எனும்) நரகத்திலே அழிந்து கிடக்க, மற்றும் சிலர் சுவனங்களில் உறங்கிக் கொண்டிருப்பார்கள்.
திரையும் நீங்கி உண்மையும் தெளிவாகி விட்டது, கேடு நீடிக்க மரண ஓளங்கள் தொடர்கின்றன.
சகோதரனே! சங்கை மிக்க அல்லாவிடமிருந்து பெற்ற மகத்தான அடையாளமாக, நல்லறங்கள் செய்தவர்களின் கைகளும் முகங்களும் வெண்மையான நிலையில் அவர்கள் கப்றுகளிலிருந்து வெளியேறுவதை நினைவு கூர்ந்து பார். அவர்களுக்கு எவ்வளவு மகத்தான அந்தஸ்து? வானவர்கள் அவர்களைநோக்கி “இதுவே உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள்” (எனக் கூறியவர்களாக) எதிர் கொள்வார்கள்.
அடியானே! அந்த மகத்தான சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்காக விழித்தி ருந்த (உனது) கண்களையும், அவனுக்கு முன்னால் நீண்ட நேரம் நின்றிருந்த (உனது) கால்களையும் நீ பாராட்டுவாய்.
பின்னர் சாட்சியாளர்கள் எங்கே? என உன்னிடத்தில் கேட்கப்படும்.
அப்போது உன்னைச் சுமந்திருந்த பூமியும், உனக்கு நிழல் கொடுத்த வானமும் (உனக்கு சார்பாக) சாட்சி கூறும், உடனே அல்லாஹ் (அவைகளிடத்தில்) நீ உண்மை கூறிவிட்டாய் நன்மை செய்து விட்டாய் எனக் கூறிவிட்டு, எனது அடியானை இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளுக்கும், மகத்தான திருப்தியின் பாலும் அழைத்துச் செல்லுங்கள் எனக் கட்டளையிடுவான். அவனுடைய பட்டோலை வலக்கரத்தில் கிடைக்கப் பெற்ற (மகிழ்ச்சியால்) உலகத்தார் அனைவருக்கும் முன்னிலையில் “வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்” என்றும், - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - நான் திருப்தியான வாழ்க்கை யில் இருக்கிறேன் என்றும் சப்தமிட்டுக் கூறுவான். சுவர்க்கத்தின் எல்லாக் கதவுகளும் அவனுக்காக திறக்கப்படும், மேலும் ஹூருல் ஈன்களும், இளமை மாறாத சிறுவர்களும் அவர்கனைச் சுற்றி வருவார்கள், (முடிவாக) கஷ்டங்களும் களைப்பும் நீங்கி விடும்.
மேலும் சிந்தித்துப்பார். அல்லாஹ்வின் அழைப்பாளர் அநீதி இழைத்த மனிதனை நோக்கி, “இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வின் முன் எடுத்துக்காட்டுவதற்காக எழுந்திருப்பாயாக” என அழைப்பு விடுத்து, அதிகமான பாவங்களைச் செய்த அவனுடைய இரவுகளைப் பற்றியும், வீணாகக் கழித்த பகல்களைப் பற்றியும் அதில் அவன் என்னென்ன தீமைகளைச் செயதான் என்றும் கேள்விகள் கேட்பதை சிந்தித்துப்பார். அல்லாஹ்வின் அழைப்பாளி பின்வருமாறு அவனிடத்தில் கேட்பார்;
நீ என்ன நன்மையை எதிர்பார்க்கிறாய்?
நீ என்ன நற்காரியத்தை முற்படுத்தி யிருக்கிறாய்?
அப்போது (அவனுடைய) கால்கள் பதில்கூறும்; (இறைவா!) ஹராமானவை களுக்கு மாத்திரமே நான் நடந்து சென்றேன், உனது கடமைகளில் நான் குறைவு செய்து அத்து மீறினேன்.
******
அவனுடைய கைகள் பேசும்; எவ்வளவு பாவங்களையும், தடுக்கப்பட்ட விடயங்களை செய்திருக்கிறேன்!
*****
மேலும் அவனுடைய கண் சொல்லும்; (இறைவா!) இவன் என்னை தடுக்கப் பட்டவைகளாலே சுகம் அனுபவிக்கச் செய்தான், மானக்கேடான விடயங்களிலும் பாவச்செயல் களிலும் என்னைக் கொண்டு அவனை அழகு படுத்திக் கொண்டான். அப்போது அவனுடைய மர்மஸ்தானங்களும் ஏனைய உறுப்புகளும் அவைகள் செய்த பாவங்களுக்காக சாட்சி கூறும், பின்னர் அவைகளுடைய முறைப்பாடுகளை அல்லாஹ்வின் முன் எடுத்துக் காட்டப்படும்.
*
இன்னும் அவனுடைய காதுகள் இறைவா! தடுக்கப் பட்டவைகளால் நான் சுகம் அனுபவித்தேன் எனக் கூறும்.
ஒவ்வொரு உறுப்புக்களும் செய்த பாவங்களுக்காக அங்கே சாட்சி கூறிய பின்னர் அவைகளுடைய இறைவனுக்கு முன்னால் அவர்கள் மானபங்கப் படுத்தப் படுவார்கள். இதைத்தான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்;
وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ
அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக் காக நல்லோரில் இருந்து) பிரித்து நிறுத்தப் படுவார்கள்.
حَتَّىٰ إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ
அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவை களைப் பற்றி சாட்சி கூறும்.
وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدتُّمْ عَلَيْنَا ۖ قَالُوا أَنطَقَنَا اللَّهُ الَّذِي أَنطَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ
அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, “எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?” என்று கேட்பார்கள். அதற்கு அவைகள், “எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்" என்றும் அவை கூறும். (41/19-21)
அந்நேரத்தில் அவனைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் கூறுவான்; “எனது வானவர்களே! அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! அவனை நரகத்தில் தள்ளுங்கள் என் விடயத்தில் வெட்கம் குறைந்த அவனுடன் எனது கோபம் அதிகரித்து விட்டது” அப்போது அந்த ஆத்மா மீண்டும் இவ்வுலகத்துக்கு திருப்பி அனுப்பப் பட்டால் அல்லாஹ்வின் கடமைகளை நல்ல முறையில் நிறைவேற்றுவதாக ஆசை வைக்கும். பின்னர், கொந்தளிப்புடனும் கடும் இரைச்சலுடனும் கொளுந்து விட்டு எரியும் நரக நெருப்பின் முன்னெ நிறுத்தப்பட்டும். உடனே அதன் தலை மற்றும் விலாப்புறமாக நரகத்தில் முகம் குப்புற தள்ளப்படும், அப்போது அது நரகத்தின் இருண்ட பாதாலங்களில் விழுந்து அதன் அடித் தளங்களில் புரளும்.
மனோ இச்சைகளும், வீண் விலையாட்டுக்களும் முடிவுற்று கண்ணியத் துடனும் சங்கையுடனும் வாழ்ந்த அந்த ஆத்மா இழிவடைந்து விட்டது.
நரகத்தில் இருக்கும் இவர்களுக்கும் சுவனத்தில் இருப்பவர் களுக்குமிடையில் எவ்வளவு பெரிய வித்தியாசம்!!! வணக்கத்துக்குறிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்;
إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள் தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்.
يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
(அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.
وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا
வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்.
وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
மலைகள் (தம் இடம் விட்டுப்) பெயர்க்கப்பட்டு தூள் தூளாகி (பறந்து) விடும்.
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
للطَّاغِينَ مَآبًا
(பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே.
لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا
அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.
لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தைத் தவிர அவர்கள் (வேறு யாதொரு) குடிப்பையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
جَزَاءً وِفَاقًا
இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்.
إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை.
وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا
அவர்கள் நம்முடைய வசனங்களை மிக்க அலட்சியமாகப் பொய் ஆக்கினார்கள்.
وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا
எனினும், இவை அனைத்தையும் நாம் (நம்முடைய குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்துகொண்டோம்.
فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதனைச்) சுவைத்துப் பாருங்கள் (என்று கூறுவோம்). (40/17-30)
இவர்கள் தான் நரகவாசிகளும் அவர்கள் இறுதியாகச் சென்றடையும் இடமுமாகும், ஆனால் சொர்க்கவாசிகளின் நிலைமையை பின்வருமாறு அல்லாஹ் விளக்குகிறான்;
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
ஆயினும், இறை அச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சுவர்க்கம் என்னும்) இடம் உண்டு.
حَدَائِقَ وَأَعْنَابًا
(அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு.
وَكَوَاعِبَ أَتْرَابًا
(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகி களான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,
وَكَأْسًا دِهَاقًا
(பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்).
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا
அங்கு அவர்கள் யாதொரு வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்.
جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا
(இவைகளெல்லாம் இவர்களின் நன்மை களுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உங்களது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும். (40/31-36)
மரணம் மிக அன்மையில் உள்ளது. எனவே நீங்கள் (எந்நேரமும்) அதற்குத் தயாராக இருங்கள், மாலையானால் காலையை எதிர் பார்க்க வேண்டாம், அவ்வாறே காலை யானால் மாலையை எதிர்பார்க்க வேண்டாம், சில சமயம் நீங்கள் உயிருள்ளவர்களுடன் காலையில் இருக்கலாம், ஆனால் மாலையானதும் மரணித்தவர்களுடன் இருப்பீர்கள், அவ்வாறே உயிருள்ளவர்க ளுடன் மாலையில் இருக்கலாம், ஆனால் காலையானதும் மரணித்தவர்களுடன் இருப்பீர்கள். எனவே அல்லாஹ்வை வணங்கு வதில் நாம் அதிக ஈடுபாடு காட்டுவதுடன், எவ்வளவு கஷ்டங்கள் நேர்ந்தாலும் அவைகளைப் பொறுப்படுத்தாது எங்களு டைய மார்க்கத்துக்குச் சேவை செய்ய வேண்டும். ஏனென்றால் சுவர்க்கத்தின் பாதை முள் விரிப்பிலானது, உலகத்தில் நாம் கட்டாயம் நல்அமல் செய்தே ஆக வேண்டும், இன்றைய தினம் அமல் செய்வது மாத்திரம் தான் உள்ளது, (இங்கு) கேள்வி கணக்கு என்பது இல்லை. ஆனால் நாளைய தினம் கேள்வி கணக்கு மாத்திரம் தான் உள்ளது (அங்கு) அமல் செய்வதென்பதில்லை. எனவே கிருபையாளருக்கெல்லாம் கிருபையாளனும், சங்கையாளர்களுக்கெல்லாம் சங்கையாளனு மாகிய அல்லாஹ்வின் அறிவுறையை நாம் கேட்டு நடபோம்;
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை) நாளுக்காக, தான் எதனைத் தயார் படுத்தி வைக்கின்றான் என்பதைக் கவனித்து அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துக்கொள்ளவும். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (59/18)
யா அல்லாஹ்! ஏழு வானங்கள் மற்றும் அவை நிழல் தந்தவற்றின் இரட்சகனே! இன்னும் ஏழு பூமிகள் மற்றும் அவை சுமந்து கொண்டவற்றின் இறட்சகனே! சகல வஸ்துக்களின் இரட்சகனும் அவற்றின் உரிமையாளனுமே! வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவனே! கண்ணியமான வனே! பரிசுத்தமான திருநாமங்களுடை யவனே! உன்னுடைய எத்திருநாமத்தை கொண்டு பிரார்த்தனை செய்யப்பட்டால் அங்கீகரிப்பாயோ மகத்தான அத்திருநாமத் தைக் கொண்டு உன்னிடத்தில் நாங்கள் கேட்கிறோம். மரண அவஸ்தையின் போது எங்களுக்கு அருள்பாளிப்பாயாக, அல்லாஹ் வே நாங்கள் செய்யக்கூடிய அமல்களில் சிறந்ததை இறுதி நேரத்தில் செய்யக் கூடியவர்களாகவும், கழிக்கக்கூடிய ஆயுளில் சிறந்ததை இறுதி நேரத்தில் கழிக்கக் கூடியவர்களாகவும், எங்களுடைய நாட்களில் சிறந்ததை உன்னைத் தரிசிக்கக் கூடிய நாளாகவும் ஆக்கியருள்வாயாக. அல்லாஹ்வே அப்போது எங்களுடைய பயத்தை நீக்கி, மானங்களையும் மறைத்து, நாம் செய்த தவறுகளையும் மன்னித்து விடுவாயாக.
அல்லாஹ்வே! இருண்ட மண்ணரைகளுக்கும், வேதனைக் குறிய காட்சிகளுக்கும் நாம் சென்றடைய முன்னால் எங்களுடைய குற்றங்களை மண்ணித்து, மானங்களையும் மறைத்து, எங்களுக்கு அருள்பாளிப்பாயாக.
அல்லாஹ்வே! உன்னுடைய ஏகத்துவத்தையும் உனது நபியின் தூதையும் ஏற்றுக் கொண்டு சாட்சி கூறியவர்களாக மரணித்த அனைத்து முஸ்லிம்களுக்கும் அருள் பாளிப்பாயாக. மேலும் அவர்களுடைய பாவங்களைப் பொருத்தருள்வாயாக, அவர்களுக்கு அருளும் புரிவாயாக, சுகத்தையும் நல்குவாயாக, அவர்களை மன்னித்தும் விடுவாயாக, அவர்களுடைய தங்குதல்களை கண்ணியப் படுத்துவாயாக, அவர்களுடைய நுழை விடங்களை விஸ்தீரணப்படுத்து வாயாக, தண்ணீர், பனிக்கட்டி, ஆலங்கட்டி ஆகியவைகளைக் கொண்டு அவர்களைக் கழுவி விடுவாயாக, மிக்க வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து சுத்தம் செய்யப்படுவது போல் அவர்களைப் பாவங்களி லிருந்து பரிசுத்தப்படுத்துவாயாக.
கிருபையாளருக்கெல்லாம் கிருபையாளனே உன்னுடைய அருளைக் கொண்டு (எங்களுடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக.
கண்ணியத்தின் அதிபதியாகிய உமது இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன் (ஆகிவிட்டான்), மேலும் தூதர்அவர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும், இன்னும் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் (உண்டாவதாக).