அதிக கேள்வி ஆபத்தானது

விபரங்கள்

இஸ்லாத்தில் கேள்வியின் முக்கியத்துவம்
நபித்தோழர்களும் கேள்வியும்
அதிக கேள்வி சமூகத்திற்கு ஆபத்தானது
அதிக கேள்வியின் பின்விளைவுகள்
சம்பவம் நிகழ முன் கேட்டல்
கேள்வியின் வகைகள்

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  அதிக கேள்வி

  ஆபத்தானது

  ஆக்கம்

  எம். அஹ்மத் (அப்பாஸி)

  மீள்பரிசீலனை

  எம். ஜே. ரிஸ்மி (அப்பாஸி, M. A)

  வெளியீடு

  ரப்வா இஸ்லாமிய அழைப்பு நிலையம்

  ரியாத் – ஸவூதி அரேபியா

  كثرة السؤال

  سبب هلاك الأمم

  إعداد :

  أبو عبد الرحمن أحمد بن محمد

  مراجعة :

  أبو عبد الله محمد رزمي جنيد

  الناشر

  المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالربوة

  الرياض - المملكة العربية السعودية

  அதிக கேள்வி ஆபத்தானது

  இறைவன் அனைத்து மனிதர்களையும் ஒரே தரத்தில் படைக்கவில்லை. சிலரைக்கான சிலரை மார்க் கத்தால், கல்வியால், பொருளாதாரத்தால், பதவியால் உயர்த்தியுள்ளான். இவ்வாறு மனிதர்களுக்கு மத்தியி லுள்ள தராதரங்களில் கல்வியறிவு பிரதானமானது. அனைத்தையும் அறிந்தவர்கள் யாரும் இப்பூமியில் கிடையாது. சிலருக்குத் தெரிந்த விடயம் மற்றும் சிலருக் குத் தெரியாமலிருக்கும். இது அல்லாஹ் தனது அடியார் களுக்கு மத்தியில் வைத்துள்ள மாற்றப்படாத ஒரு நியதி.

  இஸ்லாத்தில் கேள்வியின் முக்கியத்துவம் :

  பொதுவாக அனைத்தையும் அனைவராலும் அறிந் துகொள்ள முடியாது என்பதால் அறியாதோர் அறிந்த வர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியமாகின் றது. இதனை இஸ்லாமும் வலியுறுத்துகின்றது. "நீங்கள் அறியாவிட்டால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று அல்லாஹ் தனது திருமறையில் இரு இடங்களில் கூறியுள்ளான். (நஹ்ல் 43, அன்பியாஃ 7) மேலும் "கேட்டு வருபவர்களை விரட்ட வேண்டாம்" (ழுஹா 10) என்று அல்லாஹ் தனது நபிக்குப் போதனை செய்கின்றான். இவ்வசனத்தில் "கேட்டு வருபவர்" என் பது மார்க்கத் தெளிவு பெற வருபவர், யாசகம் கேட்டு வருபவர் இருவரும் உள்ளடங்குவர். அது மாத்திரமின்றி மார்க்கத் தெளிவு பெற வந்த இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களைப் புறக்கணித்த நபி (ஸல்) அவர்களையே அல்லாஹ் கண்டித்துள்ளான். (ஸூரா அபஸ 1-10). மேற்கண்ட வசனங்களும், சம்பவங்களும் சந்தேகங் களைக் கேட்டுத் தெளிவு பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன.

  நபித்தோழர்களும் கேள்வியும் :

  நபித்தோழர்கள் தமக்குத் தேவையான மார்க்கத் தெளிவுகளை நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களிடமே நேரடியாகச் சென்று கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஸூரா அன்ஆம் 82ம் வசனம் இறங்கிய போது தமக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நபியி டத்தில் சென்று தீர்த்துக் கொண்டதை புஹாரி (3360, 3428), முஸ்லிமில் (124) பார்க்கின்றோம். அதில் பெண் களும் ஆண்களுக்கு சலைத்தவர்களல்லர் என்பதை நிரூ பித்துள்ளார்கள். "யார் தீர விசாரிக்கப்படுகிறாரோ அவர் தண்டிக்கப்படுவார்" என்று நபியவர்கள் கூறிய போது அன்னை ஆஇஷா (ரலி) அவர்கள் ஸூரா இன் ஷிகாக்கின் 8ம் வசனம் இதற்கு முரண்படுவது போன் றிருக்க அதனை நபியவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற் றுக்கொண்டார்கள். (புஹாரி 4939, 6536, 6537, முஸ் லிம் 2876) குறிப்பாக மதீனத்து அன்ஸாரிப் பெண்கள் இதில் முன்மாதிரிகள். இதனால்தான் அன்னை ஆஇ ஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : பெண்களிலே அன் ஸாரிப் பெண்கள்தான் சிறந்தவர்கள். மார்க்கத்தை விளங்குவதை விட்டும் வெட்கம் அவர்களைத் தடுக்க வில்லை. (புஹாரி 314, 315, 7357, முஸ்லிம் 332) அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் மாதவிடாய் பற் றிய சில சந்தேகங்களைக் கேட்ட போதே அன்னை யவர்கள் இப்பெண்களை சிலாகித்துக் கூறினார்கள்.

  அல்குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் பலதரப்பட்ட விடயங்களில் சுமார் 13 இடங்களில் "யஸ்அலூனக" (நபியே! உம்மிடத்தில் அவர்கள் கேட்கின்றார்கள்) என் பதாக இடம்பெற்றுள்ளது. அவை : பகரா 159 (தலைப் பிறை), 215 (செலவு செய்தல்), 217 (புனித மாதங்களில் பேரிடுதல்), 219 (மது, சூதாட்டம்), 220 (அனாதைகள்), 222 (மாதவிடாய்), மாஇதாஃ 4 (உணவில் அனுமதிக்கப் பட்டவை), அஃராப் 187 (மறுமை), அன்பால் 1 (போரில் கிடைத்த பொருட்கள்), இஸ்ராஃ 85 (ஆத்மா), கஹ்ப் 83 (துல்கர்னைன்), தாஹா 105 (மலைகள்), நாஸிஆத் 42 (மறுமை).

  அதிக கேள்வி சமூகத்திற்கு ஆபத்தானது :

  எந்தவொரு விடயத்திலும் அளவு கடந்து செல் வதை இஸ்லாம் ஆதரிக்க வில்லை. மாறாக அல்குர்ஆ னில் இரு வசனங்களில் அளவு கடந்து செல்வதை அல் லாஹ் தடுத்துள்ளான். (நிஸாஃ 171, மாஇதாஃ 77). அதே போன்றுதான் கேள்வி கேட்பதும். அளவுக்கதி கமாக தேவையின்றி கேள்வி கேட்டதால்தான் முன் சென்ற சமூகங்களுக்கு அழிவு ஏற்பட்டதாக நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் எச்சரித்துள்ளார்கள். அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர் கள் எமக்குப் பிரசங்கம் நிகழ்த்தினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹஜ்ஜைக் கடமை யாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்". ஒரு மனிதர் எழுந்து ஒவ்வொரு வருடமுமா? எனக் கேட் டார். மூன்று முறை அவ்வாறு கேட்கும் வரை நபியவர் கள் மௌனித்து விட்டு, "நான் "ஆம்" என்றால் அது கட மையாகி விடும், நீங்கள் (ஒவ்வொரு வருடமும் அதனை நிறைவேற்ற) சக்திபெற மாட்டீர்கள்" என்றார்கள். பின் கூறினார்கள் : "நான் உங்களை எந்த மார்க்கத்தில் விட் டுள்ளேனோ அதிலேயே என்னை விட்டுவிடுங்கள், உங் களுக்கு முன்சென்றவர்கள் அழியக்காரணம், அவர்கள் அதிகம் கேள்வி கேட்டதும், தமது நபிமார்களுடன் முரண்பட்டதும் தான். எனவே, நான் உங்களுக்கு ஏவிய வற்றை இயன்றளவு எடுத்து நடவுங்கள், ஒன்றைத் தடுத் தால் அதனை முழுமையாக விட்டுவிடுங்கள்" என்றும் கூறினார்கள். (முஸ்லிம் 1337). மேற்கண்ட ஹஜ் பற்றிய செய்தியில்லாமல் "நான் உங்களை எந்த மார்க்கத்தில் விட்டுள்ளேனோ அதிலேயே என்னை விட்டுவிடுங்கள், உங்களுக்கு முன்சென்றவர்கள் அழியக்காரணம், அவர் கள் அதிகம் கேள்வி கேட்டதும், தமது நபிமார்களுடன் முரண்பட்டதும் தான். எனவே, நான் ஒன்றைத் தடுத் தால் அதனை முழுமையாக விட்டுவிடுங்கள் உங்க ளுக்கு ஏவியவற்றை இயன்றளவு எடுத்து நடவுங்கள்" என்ற வார்த்தை புஹாரி (7288), முஸ்லிமில் (1337) அபூ ஹுரைரா (ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "சொன்னார்கள்", "சொல்லப்பட்டது" என்று (உறுதிப்படுத்தாமல்) கூறுவதையும், அதிகமாகக் கேள் விகேட்பதையும், பணத்தை வீணடிப்பதையும் நபியவர் கள் தடைசெய்தார்கள் என்று முஃகீரா பின் ஷுஃபா (ரலி) கூறியுள்ள செய்தி புஹாரி (6473), முஸ்லிமில் (593) இடம்பெற்றுள்ளது.

  நபியவர்கள் கூட நபித்தோழர்கள் அதிகமாகக் கேள்வி கேட்பதை அனுமதிக்க வில்லை. யாராவது இஸ்லாத்தை ஏற்று மதீனா நோக்கி ஹிஜ்ரத் வந்தால் அதன்பின் அதிக கேள்வி கேட்க அனுமதிக்கப்பட மாட் டார். அவ்வாறின்றி கிராமப்புறம், அல்லது தூரப் பிரதே சங்களில் இருந்து வருவோருக்கே, அடிக்கடி சந்திக்க முடியாமையினால் கேள்வி கேட்கும் சலுகை அதிகம் வழங்குவார்கள். இச்சலுகையைப் பயன்படுத்துவதற் காகவே ஹிஜ்ரத் பயணத்தைத் தாமதப்படுத்திய நபித் தோழர்கள் சிலரும் உளர். நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி) கூறுகின்றார்கள் : நான் நபியவர்களுடன் மதீனாவில் ஒரு வருடம்தான் தங்கியிருந்தேன். நபியிடம் கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தைத் தவிர வேறேதும் ஹிஜ்ரத்தை விட்டும் என்னைத் தடுக்கவில்லை. எங்களில் ஒருவர் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் சென்றால் அதன்பின் நபியிடம் அதிகம் கேள்வி கேட்க மாட்டார். (முஸ்லிம் 2553). அனஸ் (ரலி) கூறுகின்றார்கள் : நபியவர்களிடம் அதி கம் கேட்பதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டோம். கிரா மப்புறங்களிலிருந்து புத்திஜீவி ஒருவர் நபியிடம் வந் தால் நாம் மகிழ்வோம். அவர் நபியிடம் கேள்வி கேட் பார், நாம் அதனை செவிமடுப்போம். (முஸ்லிம் 12).

  அதிக கேள்வியின் பின்விளைவுகள் :

  சில சந்தர்ப்பங்களில் அளவுக்கதிகமான கேள்வி கள் ஆபத்தில் முடிந்து விடுகின்றது. அதற்கான வர லாற்று சான்றுகளும் பல உள்ளன. ஒரு கொலைகா ரனைக் கண்டுபிடிப்பதற்காக பனூ இஸ்ரவேலர்களுக்கு ஒரு மாட்டை அறுக்கும் படி கட்டளையிடப்பட்ட சம்ப வமே இதற்குப் போதுமான சான்றாகவுள்ளது. இச்சம்ப வம் ஸூரா பகரா வசனம் 67-73 வரை விளாவாரியாகக் கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பொதுவான ஒரு மாட் டை அறுக்கும்படி கட்டளையிட்டான். ஆனால் இவர் கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டதன் விளைவாக அல்லாஹ்வும் மென்மேலும் இவர்களது சிரமத்தை அதிகரித்தான். இறுதியில் மிகவும் சிரமப்பட்டே குறிப்பி ட்ட மாட்டைக் கண்டுபிடித்தார்கள்.

  ஸூரா மாஇதாஃவின் 101ம் வசனத்தில் இறை வன் பின்வருமாறு கூறுகின்றான் : "நம்பிக்கை கொண் டோரே! சில விடயங்கள் குறித்து நீங்கள் கேள்வி கேட்க வேண்டாம். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட் டால் அவை உங்களுக்குத் தீங்காக அமைந்து விடும். குர்ஆன் இறக்கப்படும் போது அது குறித்து நீங்கள் கேள்வி கேட்டால் அது உங்களுக்கு வெளிப்படுத்தப் படும்". இவ்வசனம் சில விடயங்களைத் துருவித்துருவி ஆராய்ந்து கேட்டால் அது ஆபத்தில் முடிந்து விடுமென் பதை உணர்த்துகின்றது.

  மேற்கண்ட வசனம் இறங்குவதற்கு ஒரு பிண்ணனி உள்ளது. அதனை புஹாரி (4621, 4622, 6362, 7089), முஸ்லிமில் (2359) அனஸ் (ரலி) வாயிலகக் காணலாம். அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள் : நபித்தோழர் கள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட் டுக் கொண்டிருந்தார்கள். ஆகவே நபி (ஸல்)அவர்கள் ஒருநாள் மிம்பரின் மீதேறி (இன்று) நீங்கள் என்னி டம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப்போவதில் லையென்று (கோபத்துடன்) கூறினார்கள். உடனே நான் வலப்பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொரு வரும் தமது ஆடையால் தலையைத் சுற்றிப் போர்த்தியவாறு அழுது கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் பேசத் தெடங்கினார். அம்மனிதர் (பிறருடன்) சண்டை சச்சரவு செய்யும் போது அவருடைய தந்தையல்லாத மற்றொரு வரின் மகன் என அழைக்கப்பட்டு வந்தார். ஆகவே அவர், அல்லாஹ்வின் நபியே! என் தந்தை யார்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தந்தை ஹுதாஃபா என்று சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் நாங் கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க் கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதரா கவும் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். குழப்பங்க ளின் தீங்கிலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோருகின்றோம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் ஒருபோதும் நான் கண்டதில்லை. எனக்கு (இன்று) சுவர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்தச் சுவரு க்கு அப்பால் நான் கண்டேன் என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா (ரஹ்) அவர் கள் கூறுகின்றார்கள். இந்த நபிமொழி, இறை நம்பிக் கை கொண்டவர்களே! சில விஷயங்களைக் குறித்துக் கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப் பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும் எனும் (5-101 ஆவது) இறைவசனத்தை ஓதும் போது நினைவு கூறப்படுவது வழக்கம்.

  இதே சம்பவம் அபூ ஹுரைரா (ரலி) வாயிலக தப்ஸீர் தபரீயீல் (9977) ஏற்க முடியுமான அறிவிப்பாளர் வரிசையுடன் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : நபி (ஸல்) அவர்கள் கோபங்கொண்ட நிலையில் முகம் சிவந்தவர்களாக வந்து மிம்பரில் உட்கார்ந்தார்கள். அப் போது ஒருவர் எழுந்து "நான் எங்கிருப்பேன்?" என்று வினவினார். "நீர் நரகிலிருப்பீர்" என்று நபியவர்கள் பதி லளித்தார்கள். மற்றுமொருவர் "என்னுடைய தந்தை யார்?" எனக் கேட்க "உம்முடைய தந்தை ஹுதாஃபா" என்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து, "நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும், அல்குர்ஆனை வழிகாட்டியாகவும் மன நிறைவுடன் ஏற்றுக் கொண்டோம், அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் சமீபத்தில்தான் அறியாமையிலிருந் தும், இணைவைப்பிலிருந்தும் மீண்டு வந்தோம், எங்க ளுடைய தந்தைமார் யார் என்பதை அல்லாஹ்வே அறி வான்" என்றார்கள். பிறகு நபியவர்களின் கோபம் தனிந் தது. இவ்வசனம் இறங்கியது.

  தேவையற்ற கேள்விகளைத் தவிரந்து கொள்வதன் அவசியத்தை மேற்கண்ட அறிவிப்புக்கள் உணர்த்து கின்றன.

  இதனை விடக் கொடியது என்னவெனில், அனும திக்கப்பட்டிருந்த ஒரு விடயம் ஒருவர் அது பற்றிக் கேட்டதன் விளைவாகத் தடுக்கப்பட்டால் அதுவே மிகக் கொடியதென நபியவர்கள் கூறினார்கள். (புஹாரி 7289 முஸ்லிம் 2358).

  சம்பவம் நிகழ முன் கேட்டல் :

  ஒரு சம்பவம் நிகழ முன்னால் அது பற்றிக் கேட்ப தைக்கூட நபியவர்களும், தோழர்களும் வெறுத்துள்ள னர். எனினும் அவசியத் தேவைகள் பற்றிக் கேட்பதை நபியவர்கள் தடுக்கவில்லை. சில நபித்தோழர்கள் போருக்குச் சென்று பிராணிகளை அறுப்பதற்குக் கத்தி கிடைக்காவிட்டால் கூறிய கம்பினால் அறுக்கலாமா? என வினவினார்கள். (புஹாரி 2488, முஸ்லிம் 1968). பிற்காலத்தில் வரும் தலைவர்கள் பற்றிக் கேட்டார்கள். ஹுதைஃபா (ரலி) எதிர்காலத்தில் இடம்பெறும் குழப்ப நிலைகள் பற்றிக் கேட்டார்கள். (புஹாரி 3606, முஸ்லிம் 1827, இப்னு மாஜாஃ 3779).

  எனினும் நபியவர்கள் சில விடயங்கள் நடக்க முன் துருவித்துருவிக் கேட்பதை வெறுத்தார்கள். அவ்வாறு நிகழ முன் ஒன்றைப் பற்றிக் கேட்டு அதே விடயத்தால் சோதிக்கப்பட்டவர்களும் உள்ளனர். உவைமிர் அல் அஜ்லானீ (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தனது மனைவி யுடன் அந்நிய ஒருவர் தகாத முறையில் உறவுகொள் வதைக் கண்டால் என்ன செய்ய வேண்டுமென, அது போன்று நிகழ முன் நபியிடத்தில் ஆஸிம் பின் அதீ அல் அன்சாரி (ரலி) அவர்கள் மூலம் கேட்டனுப்ப அக்கேள் வியை நபியவர்கள் வெறுத்ததாக ஸஹ்ல் பின் ஸஃத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி முஸ்லி மில் (1492) இடம்பெற்றுள்ளது. அதே போன்று இந்நி கழ்வு நடக்க முன் அது பற்றி நபியிடம் கேட்டுச் சென்ற ஒரு நபித்தோழர், அதே விபச்சாரத்தின் மூலம் தனது மனைவியாலேயே சேதிக்கப்பட்ட செய்தி இப்னு உமர் (ரலி) வாயிலாக முஸ்லிமில் (1493) அறிவிக்கப் பட்டுள் ளது.

  எந்த விடயம் நிகழ முன் அது பற்றி நபித்தோழர் கேட்டாரோ அதே விடயத்தின் மூலம் அதே நபித்தோ ழர் சோதிக்கப்பட்டதை இங்கு நாம் அவதானிக்கலாம்.

  நபித்தோழர்களிலும், உமர் (ரலி), இப்னு உமர் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), உபைய் பின் கஃப் (ரலி) போன்றோர் தம்மிடம் யாராவது அதுவரை நிகழாத ஒரு விடயத்தைப் பற்றிக் கேட்டால் அவ்விடயம் நடக்கும் வரை விட்டுவிடுமாறு கூறிவிடுவார்கள். (முஸ்னத் அத் தாரிமீ 123, 124, 126, 152, இப்னுஸஃதின் அத்தபகா துல் குப்ரா 3/ 380, ஆஜுர்ரீயின் அஃலாகுல் உலமா 1/ 106, இப்னு பத்தாவின் அல்இபானதுல் குப்ரா 315, இப்னு அப்தில் பர்ரின் ஜாமிஉ பயானில் இல்மி வஃபழ் லிஹ் 2/ 139- 142, இப்னு ஹஜரின் பத்ஹுல் பாரீ 13/ 327).

  நபி (ஸல்) அவர்களிடம் எதிர்காலத்தில் நிகழவிருக் கின்றதைப் பற்றிக் கேட்பதும், ஏனையோரிடம் அவ் வாறு கேட்பதும் ஒன்றல்ல என்பதையும் புரிந்து கொள் ளவேண்டும். நபியிடம் கேட்டால் வஹீ மூலம் பதில் சொல்வார்கள். ஏனையோர் சம்பவம் நடந்த பின் ஆராய்ந்து தீர்ப்புச் சொல்வதைத் தான் விரும்பியுள் ளார்கள். மாறாக, இவ்வாறு இவ்வாறெல்லாம் நடந் தால் என யூகித்து, அனுமானித்து, கிரகித்து ஏற்கனவே அதற்கான தீர்வு காண்பதை நபித்தோழர்கள் விரும்ப வில்லை என்பதை மேற்கண்ட அறிவிப்புக்கள் மூலம் புரியலாம்.

  கேள்வியின் வகைகள் :

  உலமாக்களிடம் கேட்கப்படும் கேள்விகள் இருவ கைப்படுகின்றன. உண்மையிலேயே சத்தியத்தை விளங்கி, தெளிவைப் பெறும் நோக்கில் கேட்கப்படும் கேள்விகள். மற்றது, உலமாக்களுடன் விவாதிக்கும் நோக்கில், அல்லது அவர்களது கருத்துக்களைப் பரீட்சி த்துப் பார்க்கும் நோக்கில் கேட்கப்படும் கேள்விகள்.

  சத்தியத்தைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் கேட் கப்படும் கேள்விகள் அளவுடன் இருக்கும்பட்சத்தில் வர வேற்கத்தக்கது. ஆனால் பதிலைத் தெரிந்து கொண்டு ஆலிம்களைத் துருவி ஆராயும் நோக்கில் கேட்போர் மார்க்க அடிப்படையில் எச்சரிக்கைக்குரியவர்கள். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வது அவசியம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உலமாக்களுடன் விவாதிக்கவோ, அறிவீனர்களை மட்டந் தட்டவோ, மக் களைத் தம்பக்கம் திருப்பவோ கல்வி கற்பவர் நரகிலிப் பார்". இச்செய்தி இப்னு உமர் (ரலி) (இப்னு மாஜாஃ 253), அபூ ஹுரைரா (ரலி) (இப்னு மாஜாஃ 260), கஃப் பின் மாலிக் (ரலி) (திர்மிதீ 2654), ஜாபிர் (ரலி) (இப்னு மாஜாஃ 254), அனஸ் (ரலி) (அல் அஹாதீஸுல் முஃக் தாரா 2480, 2481) போன்ற பல நபித்தோழர்கள் வாயி லாக அறிவிக்கப் பட்டுள்ளது. அனைத்து அறிவிப்பாளர் வரிசைகளின் மூலம் ஹஸன் என்ற தரத்திற்கு உயர் கின்றது.

  சுருக்கமாகக் கூறுவதாயின் எமக்கு ஏற்படும் சந்தே கத்திற்கான தெளிவுகளை நிகழாதவற்றுடன் அனுமா னிக்காமல், அளவு கடந்து துருவாமல் சாதாரணமாகக் கேட்பதில் தவறேதுமில்லை. இன்னும் சொல்லப்போ னால் அவ்வாறு கேட்டுத் தெளிவு பெறுவது அவசியமா கும். ஆனால் எச்சரிக்கை யாருக்கெனில் : அளவுக்கதிக மாகக் கேள்வி கேட்போர், நிகழாதவற்றை அனுமானித் துக் கேட்போர், உலமாக்களைத் தாழ்த்த அல்லது பரி சோதிக்கக் கேட்போர் ஆகியோருக்கே.

  அல்லாஹ் எமக்கு சத்தியத்தைத் தெளிவுபடுத்தி அதில் நிலைத்திருக்கச் செய்வானாக.