இஸ்லாத்தில் பெண்களின் மாதவிடாய்

எழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ்

மீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்

விபரங்கள்

1. மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கை
2. இவள் தீட்டு ஏற்பட்டவள் அல்ல.
3. அக்காலத்தில் வணக்க வழிபாட்டில் ஈடுபட தேவையில்லை.
4. நீண்டகாலம் ஏற்படும் இரத்தப்போக்கை புறக்கணித்து வணக்க வழிபாட்டி ஈடுபட முடியும்.

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  மாதவிடாய் காலத்தில் பெண் தீண்டத் தகாதவள் அல்ல

  குர்ஆனின் கூற்று

  ] Tamil – தமிழ் –[ تاميلي

  M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

  2014 - 1435

  ذات الحيض في الإسلام

  « باللغة التاميلية »

  محمد إمتياز يوسف

  2014 - 1435

  இஸ்லாத்தின் பார்வையில்

  பெண் தீண்டத் தகாதவள் அல்ல.

  M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி

  இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணை தீண்டத் தகாத அருவருப்பான ஒரு பிறவியாக கணிக்காது ஆன்மா உள்ள ஒரு பெண் ணாகவும், அண்டிப் பழக அருகதையுள்ள ஒரு பெண்ணாகவும், மனிதப் பிறவியாகவுமே போற்று கின்றது.

  நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய காலத்தில் மாத விலக்குள்ள பெண்ணைத் தீண்டத் தகாதவளாக ஒதுக்கி வைக்கும் மக்களுடைய பழக்கங்களைப் பற்றி நபித் தோழர்கள் பின்வருமாறு முறையிட்டார்கள்.

  ‘அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாட மாட்டார்கள். இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?' எனக் கேட்டார்கள். (தங்களு டைய பெண்கள் விஷயத்தில் இப்படித் தான் நடக்க வேண்டுமா என்ற எண்ணத்திலேயே கேட் டார்கள்.) அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி மாதவிலக்குள்ள பெண்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறையை விளக்கப்படுத்தினான்.

  'மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் வினவு கிறார்கள். அது ஒரு அசௌகரியமாகும். எனவே மாத விடாயின், போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மை யாகும் வரை அவர்களை அணு காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங் கள் எனறு (நபியே!) நீர் கூறுவீராக. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர் களை நேசிக்கிறான். மேலும் தூய் மையானவர் களையும் நேசிக்கின்றான் எனக் கூறுவீராக’ (அல்குர்ஆன் 2:222)

  இந்த வசனத்தில் மாதவிலக்குள்ள பெண்களிடம் நெருங்காதிருங்கள், விலகி யிருங்கள், தூய்மையடைந்த பின் இணைந்து கொள்ளுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதற்காகப் பயன்படுத்தப்பட்ட அறபு வார்த்தை ‘இஃதஸிலூ’ என்பதாகும். அதன் மூலச்சொல் ‘அஸ்ல்’ என்பதாகும். இதன் நேரடிப் பொருள் கணவனும் மனைவியும் உடலுறவில் ஈடுபடாமல் இரு பாலுறுப் புகளும் சந்தித்துக் கொள்ளாமல் தவிர்ந்து கொள்வது என்பதாகும்.

  நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வசனத்திற்கு விளக்கவுரை கூறியபோது ‘தாம்பத்திய உறவைத்தவிர மாதவிடாய்ப் பெண்ணுடன் மற்றக் காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி)(நூல்: முஸ்லிம்)

  எனவே, இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுடன் தாம்பத்திய உறவைத் தவிர்த்துக் கொண்டு அன்றாடம் சாதாரணமாக அண்டிப் பழகுவது போன்றே செயலாற்ற வேண்டும் எனக் கூறுகிறது.

  மாதவிடாய் ஒரு பாவம் என்றோ கடவுளின் சாபம் என்றோ இஸ்லாம் கூறவில்லை. அக்கருத்துடையவர்களின் மூட நம்பிக்கைளையும் சடங்கு சம்பிரதாயங்க ளையும் தகர்த்தெறிந்து பெண்ணின் கௌரவம் காக்கவே அது வழிகாட்டுகிறது.

  நபிமுஹம்மது (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறியதாவது: “எனக்கு மாதவிடாய் ஏற்பட் டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எனது மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதக் கூடியவர்களாக இருந்தார் கள்”. (நூல்:புகாரி: முஸ்லிம்.)

  ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். ஆடையைக் கட்டிக் கொண்டதும் என்னை அணைத்துக் கொள்வார்கள்’. (நூல்: புகாரி)

  நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் 'இஃதிகாப்' எனும் வணக்கத்தை நிறைவேற்ற தங்கி யிருக்கும் போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கமாகத் தலையைக் காட்டு வார்கள். நானோ மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களது தலையைக் கழுவி விடுவேன். மேலும், அவர்களது தலையை வாரியும் விடுவேன்.’ (நூல்: புகாரி முஸ்லிம். )

  'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் பருகிய பானத்தை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள்.

  மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான், இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்து விட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வைத்துக் கடித்துச் சாப்பிடுவார்கள்’. (நூல்: முஸ்லிம் 505)

  ‘நாங்கள் ஹஜ் வணக்கத்தைச் செய்வதற்காகப் புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரீஃப்’ என்ற இடத்தை அடைந்த தும் மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து ஏன் அழுகிறாய்? என்று வினவினார்கள். இவ்வாண்டு ஹஜ் செய்ய முடியாது என்று கருதுகிறேன் என்றேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்று சொன்னேன். இந்த மாதவிடாய் ஆத முடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபதுல்லாஹ்வை (கஅபா ஆலயத்தை) தவாப் (சுற்றி வருவதை) தவிர ஹாஜிகள் செய்கின்ற மற்ற எல்லாக் காரியங்களையும் நீ செய்து கொள் என எனக்கு கூறினார்கள், என ஆயிஷா(ரலி) அறிவிக் கிறார்கள். (நூல் : புகாரி )

  ‘கன்னிப் பெண்களும் மாதவிடாய் பெண்களும் பெருநாள் அன்று தொழுகை நடைபெறும் திடலுக்கு வந்தாக வேண்டும். தொழுகையிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். அங்கு நடை பெறும் நன்மையான காரியங் களிலும் முஸ்லிம்களுடைய பிரார்த்தனை களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கட்டளை யிட்டார்கள். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) (நூல் புகாரி

  மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழக் கூடாது, நோன்பு நோற்கக்கூடாது, கஃபா ஆலயத்தை (தவாபு) சுற்றி வரக்கூடாது பள்ளிவாசலில் தங்கக்கூடாது, கணவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது என்பன போன்ற காரியங்களைத் தவிர ஏனைய விடயங்களில் மற்றப் பெண்களைப் போல் சகஜமாக சாதாரணமாக நடந்து கொள்ளலாம் என நபி(ஸல்) அவர்கள் விளக்கி யுள்ளார்கள்.

  மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு இஸ்லாம் வழங்கி யுள்ள மதிப்பும் மரியாதையும் கண்ணியமும் இந்த பொன்மொழிகள் மூலமும் நபிகளாரின் செயற்பாடுகள் மூலமும் புரிந்து கொள்ளலாம். மாதவிடாய் ஏற்பட்ட பெண் இருந்த இடம் தீட்டுப்பட்ட இடம் என்றோ அவளுடைய ஆடையை தீட்டுப்பட்ட ஆடை என்றோ அவளைத் தொட்டவன் முழுமையாக முழுக வேண்டும் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.

  ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவருடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால் அவள் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டார்.

  அதற்கு நபியவர்கள் உங்களில் எவருடைய ஆடையிலாவது மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால் அதைச் சுரண்டி விட்டு பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து விடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளட்டும் என கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி)(நூல்: புகாரி)

  ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்ட இடத்தை மாத்திரம் கழுவி விட்டு அந்த ஆடையை தொழுகைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என நபியவர்கள் கூறியதன் மூலம் ‘தீட்டுப்பட்ட ஆடை’ என்ற சிந்தனையை வளர விடாமல் நசுக்கி விடுகிறார்கள்.

  அதுபோல் ‘மாதவிடாய் ஏற்படக்கூடிய நாட்களையும் தாண்டி இரத்தப் போக்கு ஏற்பட்டால் அதனை ஒரு தீட்டாகக் கருதாமல் சாதாரணமாக வெளியேறும் இரத்தமாகக் கருதி சுத்தமாக்கி விடுமாறும் கூறுகி றார்கள்.

  பாதிமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெணமணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் (மாதவிடாய் காலத்தையும் தாண்டி வெளியாகிக் கொண்டி ருக்கும்) அதிக இரத்தப் போக்கிலிருந்து சுத்த மாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி யவர்கள் ‘அது ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நோய். அது மாதவிடாய் அல்ல. மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டு விடு. மாதவிடாய் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்து விட்டுத் தொழுது கொள்.’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (நூல் :புகாரி முஸ்லிம் )

  அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்(ரலி) அவர்களின் மனைவி உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு ஏழு வருடகாலமாக இரத்தப் போக்கு இருந்து வந்தது எனக் கூறி மார்க்கத் தீர்ப்புக் கோரினார். “இது மாதவிடாயல்ல. (வழமை யாக) மாதவிடாய் நிற்கும் நாட்கள் வரை நீ காத்திரு. பின்னர் குளித்து விட்டுத் தொழுது கொள்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (நூல்: முஸ்லிம் )

  வழமையான மாதவிடாய்க்கான நாட்களையும் கடந்த பின், தொடராக இரத்தம் வெளியேறுமாயின் அது மாதவிடா யல்ல. நரம்பு சம்பந்தப்பட்ட ஒரு நோய். அதற்காக கவலைப்படாமல் சுத்தம் செய்து விட்டுத் தொழுகையில் ஈடுபடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

  பெண்களுடைய இரத்தப் போக்கைக் காரணம் காட்டி அவர்களை மட்டம் தட்டவு மில்லை. அவர்களுடைய மானம் மரியாதையை ஏலம் போடவுமில்லை. அதற்கான எந்தச் சடங்கு சம்பிரதாயங்களையும் சொல் லிக் கொடுக்கவுமில்லை.

  மாதவிடாய் ஏற்படுவதால் பெண்களை தீண்டத் தகாத பிறவியாக கணிக்கக் கூடாது என்று இஸ்லாம் உறுதியாகக் கூறி, பெண்மைக்கு அழகு சேர்க்கிறது