லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்
ஒரு முஸ்லிமுக்கு உளச்சுத்தமும் உடல சுத்தமும் மிகவும் அவசியம். அழுக்குகளின் வகைகள், அவற்றை நீக்க தேவையான நீர் சம்பந்தப்பட்ட சட்டங்கள், நீர் அழுக்காகும் சந்தர்ப்பங்கள் என்பன பற்றிய விளக்கம் இக்கட்டுரையில் அடங்கியுள்ளன.