முஸ்லிம்கள் அறிய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் பற்றிய கேள்வி பதில்கள்

விபரங்கள்

இறை விசுவாசத்தில் அறியப்படவேண்டிய முக்கிய விபரங்கள் பற்றி 22கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் என்ற முறையில் இலகுவான பாடங்கள் இதில் அடங்களியுள்ளன.

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

முஸ்லிம்கள் அறிய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் பற்றிய கேள்வி பதில்கள்

>தமிழ்-Tamil تاميلي ->

அஷ் ஷெய்க் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ் ஸஃதி நூலாசிரியர்

❧❧

ஜாசிம இப்னு தஇயான்

மொழி பெயர்த்தவர்

முஹம்மத் அமீன்

மீலாய்வுசெய்தவர்

سؤال وجواب في أهم المهمات

اسم المؤلف

العلامة الشيخ عبدالرحمن بن ناصر السعدي

—™

ترجمة:

جاسم بن دعيان

مراجعة:

محمد أمين

முஸ்லிம்கள் அறிய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் பற்றிய கேள்வி பதில்கள்.

அஷ் ஷெய்க் அப்திர் ரஹ்மான் அஸ் ஸஅதி அவர்களால் கேள்வி பதில்கள் முறையில் எழுதப் பட்ட சிறிய நூல். இதில் தவ்ஹீத் என்றால் என்ன? அதின் பிரிவுகள் என்ன? ஈமான், இஸ்லாம் என்றால் என்ன, அல்லாஹ்வின் திருநாமங்கள் என்ன, அவனது குணாதிசயங்கள் என்ன? ஈமானில் கூடுதல் குறைதல் ஏற்படுமா? அடியார்கள் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன? ஷிர்க், அதன் பிரிவுகள் என்ன? நபிமார்கள் மீது எவ்வாறு விசுவாசம் கொள்வது? அல் கத்ர் எனும் விதியை நம்புவது எவ்வாறு? இறுதி நாளை நம்பிக்கை கொள்வது எப்படி? முனாபிக் எனும் நயவஞ்சகம் என்பது என்ன? இது போன்ற எராளமான கேள்விகளுக்கு இங்கு விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளன.

முஸ்லிம்கள் அறிய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் பற்றிய கேள்வி பதில்கள்.

நூலாசிரியர்

அஷ் ஷெய்க் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ் ஸஃதி

தமிழில்

ஜாசிம் இப்னு தஇயான்

بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பிக்கிறேன்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அழகிய திரு நாமங்களும், பூரணான குணாதிசயங்களும் எங்கும் பரவி இருக்கும் ஆசீர்வதங்களும் அவனுக்கே சொந்தம். மார்க்கத்திலும், இவ்வுலக, மறுமை வாழ்வில் உயர்பெற வழிகாட்ட அனுப்பப்பட்ட முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

இது, ஒருவர் மார்க்கத்தில் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய முக்கிய விபரங்களும் இறை விசுவாசத்தின் அடிப்படையையும் விளக்கும் சிறிய கை நூலாகும். இந்த விபரங்களை இலேசாக விளக்குவதற்கு வசதியாக கேள்வி பதில் முறையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கேள்வி 1. தவ்ஹீத் எனும் ஏகதெய்வ நம்பிக்கையின் வரையரைகள் என்ன? அவற்றின் பிரிவுகள் என்ன?

பதில். தவ்ஹீதின் வரையரை விபரங்கள் என்பது அதனுடன் சம்பந்தப் பட்ட சகல விடயங்களிலும் ஏகத்துவத்தை பின்பற்றுவதாகும். அதாவது, அல்லாஹ்வுக்கு அடிபணிதல் பற்றிய அறிவு, அதனை கொள்கையாக அமைத்துக் கொள்வது, அதனை ஏற்றுக் கொள்வது போன்ற சகல விடயங்களும் அல்லாஹ்வின் பரிபூரண தன்மைகள் அவனுக்கு மாத்திரமே உள்ளன என்று அவனை ஏகத்துவப்படுத்தல். சகலதையும் படைத்த அவனுக்கு உண்மையில் ஏகத்துவமும் வழிபாடும் உரிய தாகும். அதன் பின் சகல விதமான வணக்க வழிபாடுகள் அவனுக்கு மாத்திரமே நிறைவேற்றப் பட வேண்டும். இவ்வாறான விளக்கங்களின் படி தவ்ஹீத் மூன்று வகைப்படும்.

முதலாவது; தவ்ஹீத் அர் ருபூபியியா அதாவது, படைத்தல், அவற்றை போஷித்தல், ஏற்பாடு செய்தல், பயிற்றுவித்தல் போன்ற பரிபாலனத்தில் போஷிப்பவனை ஏகத்துவப் படுத்தி அவனையே ஏற்றுக்கொள்வதாகும்.

இரண்டாவது; தவ்ஹீதுல் அஸ்மா வஸ் சிபாத் – அதாவது தன்னை பற்றி அல்லாஹ் எவ்வாறு விவரித்துள்ளானோ அல்லது அவனது தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவனை பற்றி எவ்வாறு உறுதிப்படுத்திக் கூறினார்களோ அந்த முறையில் உறுதிப் படுத்திக் கூறுவது, அவனுக்கு இணை வைப்பது அல்லது மாற்றம் செய்வது அல்லது கூடுதலாக சேர்ப்பது போன்ற எதனையும் செய்யாது அவ்வாறு கூறப்பட்ட அல்லாஹ்வின் தன்மைகளையும் அழகிய திரு நாமங்களையும் உறுதியாக ஏற்றுக்கொள்வது.

மூன்றாவது; சகல வித வணக்க வழிபாடுகளையும், அவற்றின் பிரிவுகளையும், ஒவ்வொரு அம்சங்களையும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் நிறைவேற்றுவது. இவற்றில் எதிலும் எந்த ஒருவரையும் கூட்டுச் சேர்க்காது நேர்மை யுடன் நிறைவேற்றுவது.

இவை அணைத்தும் தவ்ஹீதின் பிரிவுகளாகும். அல்லாஹ் வின் அடியான் இவை அணைத்தையும் நிறைவேற்றும் வரை அவன் உண்மையான முவஹ்ஹித் எனும் அல்லாஹ்வை எகத்துவப் படுத்திய ஒருவனாக மாட்டான்.

2வது கேள்வி; ஈமான், இஸ்லாம் என்றால் என்ன? இவ்விரண்டின் அடிப்படை என்ன?

பதில்; ஈமான் என்பது அல்லாஹ்வும் அவனது மார்க்க தூதரும் எந்த விஷயங்களை உண்மை என்று கூறி, அவற்றை விசுவாசம் கொள்ளுமாறு எமக்கு கட்டளை யிட்டார்களோ அவை அனைத்தையும் உறுதியாக விசுவாசம் கொண்டு அவற்றை உண்மை படுத்துவதாகும். இஸ்லாம் என்பது செயலுடன் சம்பந்தப்பட்டதாகும். அதாவது அல்லாஹ்வுக்கு மாத்திரம் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதும் அவனுக்கு மாத்திரம் கீழ்படிந்து செயல் புரிவதுமாகும்.

ஈமான் மற்றும் இஸ்லாம் என்ற இரண்டு விஷயங்களின் அடிப்படை பற்றி சூரா பகராவில் குர்ஆன் இவ்வாறு விவரிக்கிறது.

قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ (136)

“அல்லாஹ்வையும், எங்கள் பால் இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப், இவர்களுடைய சந்ததிகள் ஆகியோரின் பால் இறக்கப்பட்டதையும், மூஸா வுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப் பட்டிருந்த தையும், மற்றைய நபிமார்களுக்கு அவர்கள் இரட்சகனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்ததையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்; அவர்களிடமிருந்து எவருக்கும் இடையில் நாம் (பிரித்து) வேறுபாடு காட்ட மாட்டோம். இன்னும், அவனுக்கே நாங்கள் முற்றிலும் கீழ்படிகின்றவர்கள்" என நீங்களும் கூறுங்கள்."

இந்த விஷயம் சம்பந்தமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறினார்கள்.

“ஈமான் என்பது அல்லாஹ்வையும், அவனுடைய மலக்கு களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும், நன்மையோ அல்லது தீமையோ அல்லாஹ் நாடியபடி நடைபெறும் என்பதை நீங்கள் நம்புவதாகும். மேலும், இஸ்லாம் என்பது வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு நாயன் இல்லை முஹம்மது நபி (ஸல்லல்ஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்று விசுவாசம் கொண்டு சாட்சியம் கூறல், ஐங்காலத் தொழுகையை சரியாக நிறைவேற்றல், நீங்கள் சகாத் செலுத்துதல், ரமதான் மாதத்தில் நோற்றல், அல்லாஹ்வின் வீட்டுக்குச் சென்று ஹஜ் கடமைகளை நிறைவேற்றல் என்பன அடங்கும்.

இதன் அடிப்படையில் உள்ளத்தில் ஏற்படும் விசுவாசம் இமான் என்றும் வெளிப்படையாக நிறைவேற்றும் செயல்கள் இஸ்லாம் என்றும் விளக்கப்படுத்தப் பட்டுள்ளது.

கேள்வி 3 ; அல்லாஹ்வின் அழகிய திரு நாமங்கள் மற்றும் அவனுடைய பண்புகள் என்பவற்றின் அடிப்படை என்ன?

பதில்; இவற்றின் அடிப்படை மூன்று. அதாவது அல்லாஹ்வின் சகல அழகிய திருநாமங்கள் மீதும் விசுவாசம் கொள்ளல். தன்னை பற்றியும் தன் குணாதிசயங்கள் பற்றியும் அவற்றை பற்றிய நியாயங்களை அவனே கூறியுள்ளபடி விசுவாசம் கொள்ளல். இதன் அடிப்படையில் அவன் சகல ஆற்றல் படைத்தவன், சகல விஷயங்கள் பற்றிய முழுமையான அறிவு அவனுக்கு உண்டு, சகல விஷயங்களையும் தனது ஆற்றலை கொண்டு செயல் புரியக்கூடிய பராக்கிரம் வாய்தவன், தான் விரும்பியவர்களுக்கு தனது அளவற்ற கருணை செலுத்தக் கூடிய பெரும் கருணை வாய்ந்தவன் என்று விசுவாசம் கொள்கிறோம். இவற்றை போலவே அவனது ஏனைய குணாதிசயங்களை யும், பண்புகளையும் இவற்றுக்குரிய நியாயங்களை யும் விசுவாசம் கொள்ள வேண்டும்.

கேள்வி 4; எல்லா படைப்புகளையும் விட உயரத்தில் அல்லாஹ் இருக்கிறான். அவன் அர்ஷின் மீது உயர்ந்து இருக்கிறான் என்ற கூற்றை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்;

எல்லா சிந்தனைகளையும் விட, உலகலாவிய யதார்த்தங்களை விட உயரத்தில் எமது இறைவன் அல்லாஹ் இருக்கிறான் என்று நாம் அறிவோம். அவன் செயல்பாடுகளில் உயர்ந்தவன். குணங்களில் உயர்ந்தவன். சக்தியில் உயர்ந்தவன். அதிகாரத்தில் உயர்ந்தவன். அத்துடன் அவன் தனது படைப்பிணங்களை விட்டும் நீங்கியவன். அவற்றை விட மிகவும் வேறு பட்டவன். அவன் எமக்கு தன்னை பற்றி அறிவித்துள்ளது போல் அர்ஷ் எனும் உயர் பீடத்தில் தன்னை ஸ்தாபித்துக் கொண்டுள்ளான். அவ்வாறு அவன் அமைத்துக் கொண்டான் என்று அவன் அறிவித்ததை தவிர எவ்வாறு தன்னை ஸ்தாபித்துக் கொண்டான் என்பது எங்களுக்கு தெரியாத விஷயங்களாகும். அவன் அர்ஷின் மீது நிலை பெற்று இருக்கிறான் என்று அல்லாஹ் அறிவித்ததை தவிர, தான் எவ்வாறு நிலை பெற்றுள்ளான் என்பதை எமக்கு அறிவிக்கவில்லை. படைத்தவனாகிய அல்லாஹ் வின் ஏனைய குணாதிசயங்கள் பற்றியும் நாம் இவ்வாறே கூற வேண்டும். அதாவது அல்லாஹ் அவனது குணாதிசயங்கள் பற்றி எங்களுக்கு அறிவித்துள்ளான் என்பதை தவிர அவற்றை பற்றிய தன்மைகள் பற்றிய முழு விபரங்களை பற்றி எமக்கு அறிவிக்கப்பட்டில்லை. அல்லாஹ் தனது நூல்கள் மூலமும் தனது நபிமார்கள் மூலமும் எமக்கு அறிவித்துள்ள படி அவை அனைத்தையும் அவ்வாறே விசுவாசம் கொள்வது எமது கடமையாகும். இவற்றை பற்றிய விபரங்களை நாம் கூட்டவோ குறைக்கவோ கூடாது.

கேள்வி 5; அல்லாஹ்வின் கருணை பற்றியும், அவன் முதலாவது வானத்துக்கு இறங்குகிறான் என்பது பற்றியும் நீங்கள் என்ன கூற முடியும்?

பதில்; அல்லாஹ்வின் கருணை, அவனது வருகை, அவன் முதலாவது வானத்துக்கு இறங்குதல் போன்று அவன் தன்னை பற்றி குறிப்பிட்ட அத்தனை விஷயங்களையும் நாங்கள் விசுவாசம் செய்கிறோம். அதே போன்று அல்லாஹ்வை பற்றி அல்லாஹ்வின் தூதர் எவ்வாறு வர்ணித்துள்ளார் களோ, அவை அனைத்தையும் அவனது படைப்புக ளுடன் ஒப்பிடாது நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நம்பிக்கை கொள்கிறோம். அவனை போல் எதுவும் இல்லை என்பது இதற்கு காரணமாகும். அவனுக்கு தனிப்பட்ட தன்மை உண்டு. ஆனால் அவனுடைய தன்மைக்கு நிகரான எதுவும் இல்லை. அவனுக்கு உயர்ந்த பண்புகள் உள்ளன, ஆனால் அவனது உயர் பண்புகளுக்கு நிகரான வேறு எவ்வித பண்பும் இல்லை. இந்த விபரங்களை உறுதிப் படுத்தி, அவற்றின் மூலம் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, குர்ஆனிலும் சுன்னாஹ்விலும் மிகத் தெளிவாக கூறப்பட்ட முறையில் அல்லாஹ்வை பற்றி கூறிய தன்மைகளை உறுதிப்படுத்தல். அவற்றை எந்த வகையிலும் மாற்றவோ, அவற்றை முற்றாக புறக்கணிக்கவோ, புது அர்த்தங்களை புகுத்தவோ, படைப்புகளை சுட்டிக்காட்டும் தன்மைகளுடன் ஒப்பிடவோ, இணை வைக்கவோ கூடாது.

கேள்வி 6; அல்லாஹ்வின் கூற்று, குர்ஆனில் கூப்படும் விஷயங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்; குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தை களே. அது எவராலும் உருவாக்கப்பட்ட நூலல்ல. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆன் இறுதியில் அவனிடமே மீளும். அதில் உள்ள பிரகடனங்க ளும், கருத்துக்களும் நிச்சயமாக அல்லாஹ் அறிவித்தவைகளே. அவன் பேசாமல் இருக்க வில்லை. தான் விரும்பியதை தான் விரும்பிய நேரத்தில் வெளிப்படுத்துவான். அவனுடைய பேச்சுக்கு எல்லையோ அல்லது முடிவோ கிடையாது.

கேள்வி 7; பொதுவாக ஈமான் (இறை விசுவாசம்) என்றால் என்ன? ஈமான் கூடவோ குறையவோ முடியுமா?

பதில்; விசுவாசம் என்பது உள்ளத்தில் எழும் எண்ணங்களின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொள்ளும் கொள்கைகள், அவற்றை செயல் முறைகள், உடலாலும் நாவாலும் பிரகடணப் படுத்தல், என்பவைகளை குறிக்கும் பொது வார்த்தையாகும். ஆகையால் மதத்தின் அடிப்படைகள், அதன் கிளைகள் என்பன விசுவாசத்தில் அடங்கியுள்ளன. ஆகையால் நன்மைகளை செய்தல், நல்ல விஷயங்களை பேசுதல், அவைகளில் அதிமாக ஈடுபடுதல் என்பன கொள்கைகளின் சக்தியும் அவற்றின் நல்ல அம்சங்களும் ஆகும். இவற்றின் மூலம் இறை விசுவாசம் அதிகரிப்பதோடு இவற்றுக்கு எதிராக செயல் புரிதல் மூலம் இறை விசுவாசம் குறைந்து விடும்.

கேள்வி 8; அபாக்கியம் பெற்ற பாவியின் நிலை என்ன?

பதில்; ஏக தெய்வ நம்பிக்கையை ஏற்றுக்கொண்ட இறை விசுவாசி எல்லா விதமான பாவங்களையும் விட்டு நீங்கி இருப்பான். அத்துடன் எவற்றின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமோ அவற்றின் மீது நம்பிக்கை வைப்பான். எவரேனும் அடிப்படை இறை விசுவாசத்தை விட்டு நீங்கி விடுகிறானோ அவன் பாவம் செய்தவனாக மாறி விடுகிறான். அவனுடைய இறை விசுவாசம் உறுதியற்று விடும். அவன் தனது விசுவாசத்தை கைவிட்ட குற்றத்துக்கு ஆளாகிறான். அவன் செய்த பாவத்துக்கு தண்டனை வழங்கும் முழு உரிமை அவனை படைத்தவனுக்கு உண்டு. அத்துடன் என்றென்றும் நரகத்தில் தங்குவான். ஆகையால் முழுமையான இறைவிசுவாசம் ஒருவனை நரகத்தில் இருந்து பாதுகாப்பளிக்கும், அதே நேரத்தில் குறைபாடு உள்ள இறைவிசுவாசம் நரகத்தில் நிரந்தரமாக இருப்பதை விட்டும் அவனுக்கு பாதுகாப்பளிக்கும்.

கேள்வி 9; விசுவாசிகளுக்கு இருக்கும் அந்தஸ்து எவ்வளவு? அவற்றின் விபரங்கள் என்ன?

பதில்; விசுவாசிகள் மூன்று பிரிவினராக உள்ளனர்.

1. சாபிகூன் எனப்படும் பிரிவினர். இவர்கள் நன்மை செய்வதில் முன் நிலை வகிப்பவர்கள். இவர்கள் கட்டாயமான கடமைகள், முக்கியமான சுன்னத்துக்கள் ஆகியவற்றை தாமும் கடைபிடித்து மற்றவர்களுக்கும் அவற்றை ஏவி நடத்தி வைப்பார்கள். ஹராமான, மற்றும் வெறுப்பூட்டும் செயல்களை தடுத்து தாமும் அவற்றை விட்டும் நீங்கி இருப்பார்கள்.

2. முக்தசிதூன் எனப்படும் சிக்கனமாக செயல் புரிபவர்கள். கட்டாயமாக்கப் பட்ட (பர்ழான) விஷங்களில் மாத்திரம் ஈடுபட்டு, தடுக்கப்பட்ட (ஹராமான) விஷயங்களை விட்டும் நீங்கி இருப்பார்கள்.

3. ழாலுமூன லிஅன்புஸிஹிம் எனப்படும் தமக்கே அநியாயம் செய்துக் கொண்டவர்கள். இவர்கள் நன்மையான காரியங்களை செய்து தீயசெயல் களிலும் ஈடுபட்டவர்கள்.

கேள்வி 10; அடியார்களின் செயல் முறைகள் பற்றிய தீர்ப்பு என்ன?

பதில்; அல்லாஹ்வின் அடியார்கள் அல்லாஹ்வுக்கு அடி அணிந்து எந்தவொரு காரியத்தை செய்தாலும், அல்லது அவனது கட்டளைக்கு மாற்றமாக எந்தவொரு பாவமான காரியத்தில் ஈடுபட்டாலும் அது அல்லாஹ்வின் படைப்பில், அவனது தீர்ப்பில், அவனது தராசில் பதியப் பட்டுள்ளது. ஆனால் மனிதர்கள் எவ்வாறு செயல் புரிந்தாலும்,அல்லாஹ் அவர்களை அந்த விஷயங்கள் சம்பந்தமாக எந்த வகையிலும் கட்டாயப் படுத்தவில்லை. மனிதர்களுக்கு அவர்கள் விரும்பியவாறு, அவர்களது சக்திக்கு ஏற்றவாறு செயல்பட அல்லாஹ் சுதந்திரம் அளித்துள்ளான். இது மனிதர்களின் இயற்கையான சுபாவமாகும். அவர்கள் அந்த செயல்களுக்காக விளக்கம் கூறப்படுவார்கள். அவற்றின் அடிப்படை யில் அவர்கள் விளைவுகளும் முடிவுகளும் கொடுக்கப் படுவார்கள். இவை அணைத்தும் அல்லாஹ்வின் படைப்புகளாகும். இதற்குக் காரணம் அவர்கள் படைப்பு, அவர்களது சிந்தனை கள் அவர்களது சக்தி மற்றும் அவர்களுக்கு ஏற்படும் அனைத்தும் அல்லாஹ்வால் படைக்கப் பட்டதே. ஆகையால் அல்லாஹ்வின் படைப்புகள், அவற்றின் தன்மைகள், அவற்றின் பண்புகள், அவற்றின் அசைவுகள் பற்றி அல் குர்ஆனும் சுன்னாவும் குறிப்பிடும் அனைத்து விபரங்களையும் நாங்கள் விசுவாசம் கொள்கிறோம். அடியார்கள் நன்மையோ தீமையோ செய்யக் கூடியவர்கள். அச்செயல்கள் சம்பந்தமாக அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு குர்ஆனும் சுன்னாவும் கூறும் நியாயங்களை நாங்கள் விசுவாசம் கொள்கிறோம். அதன்படி மனிதனின் ஆற்றலையும் அவனது சிந்தனைகளையும் படைத்தவன் அல்லாஹ். இவ்விரண்டும் மனிதனின் பேச்சு, அவனது செயல் என்பன செயல்பட காரணங்களாக அமைகின்றன. அனைத்தையும் படைத்த இறைவன் அவற்றுக்கு தேவையான காரணங்களையும் படைத்தான். மேலும் அல்லாஹ் சகல ஆற்றல் படைத்தவன். ஆகையால் மனிதர்களை கட்டாயப் படுத்தாது அவர்களுடன் மிகவும் கண்ணியமாக நடந்துக் கொள்கிறான்.

கேள்வு 11; ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணை வைப்பது) என்றால் என்ன? அதன் வகைகள் என்ன?

பதில்; ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் இரு வகையாகும். ருபூபிய்யா எனும் அல்லாஹ்வின் நிர்வாகத்தில் இன்னொருவரை இணை வைத்தல். அதாவது படைப்புக்களில் சிலவற்றை படைப்பதற்கும் அவற்றை ஏற்பாடு செய்வதற்கும் அல்லாஹ்வுடன் இன்னுமொரு வருக்கும் பங்குண்டு என ஒரு அடியான் நினைப்பது இந்த வகையான ஷர்க்கில் அடங்கும். இரண்டாவது இபாதத் எனும் இறை வணக்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் இன்னொருவருக்கும் பங்குண்டு என நினைப்பது. இது இரண்டு வகையானது. முதலாவது ஷிர்க்குல் அக்பர் எனும் மிகப் பெரிய இணை வைத்தல். அடுத்தது ஷிர்க்குல் அஸ்கர் எனும் சிறிய விஷயங்களில் இணை வைத்தல். ஷிர்க்குல் அக்பர் என்பது அல்லாஹ்வை தவிர ஏனையவர்களிடம் பிரார்த்தனை புரிதல், அவர்களிடம் நன்மைகள் எதிர் பார்த்திருத்தல், அவர்களுக்கு பயத்துடன் அஞ்சி நடத்தல் போன்ற வணக்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் அல்லாஹ் அல்லாதவர்களிடம் நடந்துக் கொள்ளுதல். இத்தகைய செயல்கள் ஒருவரை மதத்திலிருந்து அப்புரப்படுத்தி விடும். இவ்வாறு செய்பவர்கள் நரக நெருப்பில் என்றென்றும் நிலை பெறுவர். ஷிர்க்குன் அஸ்கர் எனும் சிறிய ஷிர்க்கான காரியங்கள் என்பவை அல்லாஹ் அல்லாத ஏனைய விஷயங்களின் மீது சத்தியம் செய்தல், அளவுக்கு மீறி எவரையும் புகழ்ந்து பேசுதல், அகம்பாவம் போன்ற வணக்க வழிபாடு சம்பந்தப் படாத விடயங்களில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் அளவுக்கு சமானமாக நடந்துக் கொள்ளும் வழிமுறை களாகும்.

கேள்வி 12; அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கும் முறை என்ன?

பதில்; அல்லாஹ் சகல படைப்புகளையும் விட என்றும் நிலைத்திருப்பவன். தனிப்பட்ட தேவைகள் எதுவும் இல்லாத தனித்தவன். சகல வர்ணனை களையும் விட வேறுபட்டவன். எல்லா வகையிலும் சர்வ சம்பூர்மானவன். சகல கீர்த்தியும் அவனுக்கே உரியன. எல்லா புகழும் அவனுக்கே உரியன. அவன் மிகப் பெரியவன். மிவும் உயர்ந்தவன். படைப்பகளின் அறிவுக்கு எட்டாத உயர்த்தியான குணாதிசயங்கள் அவனுக்கு உரியன. அவனே முதன்மையானவன், அவனுக்கு முன்னால் எதுவும் இல்லை. அவன் வெளியரங்கமானவன், அவனுக்கு அப்பால் எதுவும் இல்லை. அவன் உள்ளரங்க மானவன், அவனுக்கு கீழால் எதுவும் இல்லை. எல்லாவித தன்மைகளை விடவும் மிகவும் உயர்ந்தவன். எல்லா ஆற்றல்களில் இருந்தும் மிவும் சிறந்தவன். எல்லா சக்திகளை விட மிவும் சக்தி வாய்ந்தவன். எல்லா விஷயங்களை பற்றியும் நன்கு அறிந்தவன். எல்லா விஷயங்களிலும் அதிகாரம் படைத்தவன். எல்லா மொழிகளிலும் கேட்கப்படும் எல்லா தேவைகளுக்கும் செவி சாய்ப்பவன். சகலவற்றையும் நன்கு அவதானிப்ப வன். அவனது படைப்புகளை பற்றி மிகவும் உன்னிப்பாக கவணிப்பவன்.அவனது எல்லா தன்மைகளிலும், செயல்களிலும் பெரும் புகழுக்கு ரியவன். அவன் ஆற்றலிலும் சக்தியிலும் மிவும் உயர்ந்தவன். அவன் கருணையாளன். அளவற்ற அருளாலன். அவனது கருணை அனைத்தையும் சூழ்ந்துக்கொள்ளும். நடைபெறும் அனைத்து விஷயங்களையும் அவனது கருணை, அவனது உதவி, மற்றும் அவனது அருள் சூழ்ந்துக் கொண்டிருக்கும். அவனே அரசன். அதிபதிகளுக் கெல்லாம் அதனே மிகப் பெரிய அதிகாரம் அடைத்தவன். அதிகாரத்தை நடத்துபவன் அவனே. அவன் சர்வ ஞானம் படைத்தவன். மிகவும் உயர்ந்தவன். படைப்புகள் எல்லாம் அவனுக்கு அடங்கி நடக்கும். கீழ்ப்படிவதற்கு தகுதியானவன் அவனே. அனைத்தையும் மாற்றியடைக்கும் ஆற்றல் படைத்தவன் அவனுக்கே உண்டு. அவன் என்றும் உயிருடன் இருப்பவன். எல்லா புகழுக்கும் உரிமை கொண்ட அவன் என்றும் நிலைத்திருப்பவன். அவன் ஒருவருக்கும் கட்டுப்படாது இருப்பவன். எவருடைய உதவியும் தேவையற்றவன். அவன் சகல செயல்களிலும் போற்றப்படுபவன். அவன் நாடியதை நடைபெறச் செய்யும் ஆற்றல் படைத்தவன். அவன் நாடாத போது அக்காரியம் நடைபெறுவதில்லை. இவ்வாறெல்லாம் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு நாவால் மொழிகிறோம். அவனே எங்கள் இறைவன். படைப்பவன். எவ்வித முன் மாதிரியுமின்றி தான் நாடியதை படைப்பவன். படைக்கப்பட்டவைகளில் காணப்படும் அழகு, அலங்காரம் கொண்ட அமைப்பு, ஆகியவற்றை திட்டமிட்டு அழகிய முறையில் அவனே படைத்தான். வணக்கத்துக் குரிய இறைவன் அவனை தவிர யாரும் இல்லை. அதிகமாக மன்னிப்பளிக்கும், சகல சக்தி படைத்த, சகல அதிகாரம் படைத்த அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். வேறு எவர் பக்கமும் திரும்ப மாட்டோம். அவனை விட்டு திரும்பி போகவுமாட்டோம். அவனையே முழுமையாக வணங்குகிறோம். அவனிடமே உதவி தேடிகிறோம். அவனிடமிருந்தே எல்லா நன்மை களையும் எதிர் பார்க்கிறோம். அவனுக்கே பயப்படு கிறோம். அவனுடைய கருணையையே எதிர்ப்பர்க்கிறோம். அவனது கட்டளைக்கும் அவனது தண்டனைக்கும் நாங்கள் பயப்படு கிறோம். அவனை தவிர எங்களுக்கு வணங்குதற்கு தகுதியான வேறு இறைவன் எவரும் இல்லை. ஆகையால் அவனையே வணங்குகிறோம். அவனிடமே உதவி கேட்கிறோம். அவனை தவிர வணங்குவதற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமை வாழ்க்கையிலும் எமக்கு பொறுப்பாளியான அவனிடமே எமது எல்லா தேவைகளையும் யாசிக்கிறோம். அவனுடைய உதவி நன்மையை தரும். எமக்கு ஏற்படக்கூடிய எல்லாவித தீமை களையும், நஷ்டங்களையும் எம்மை விட்டும் தடுப்பவன் அவனே. இவ்வாறு உளப்பூர்வமாக நாங்கள் சாட்சி கூறுகிறோம்.

கேள்வி 13; நபிமார்களை விசுவாசம் கொள்ளும் முறை பற்றிய விளக்கம் என்ன?

பதில்; நபிமார்கள் எனப்படும் இறை தூதர் களையும், ரசூல் மார்கள் எனப்படும் அல்லாஹ் வின் கட்டளைகளை கொண்டு வந்தவர்களையும் முழுமையாகவும், விளக்கமாகவும் விசுவாசம் கொள்வது எமது கடமையாகும். நிச்சயமாக அல்லாஹ் தனது கட்டளைகளையும், தூதையும் அறிவிக்கும் வழியாக அவர்களை தேர்தெடுத்தான். அவனது மார்க்கத்தை பரப்புதற்கும், அவனுக்கும் அவனது படைப்புகளுக்கம் இடையில் ஊடகமாக அவர்களை அல்லாஹ் அமைத்தான். அவர்கள் நேர்மையாளர்கள் எனவும், அவர்கள் கொண்டு வந்த விஷயங்கள் எவ்வித பிழையுமில்லாதவைகள் என்று நிரூபிக்கும் சாட்சிகள் மூலம் அவர்களை உறுதிப் படுத்தினான். நிச்சயமாக அவர்கள் நன்னடத்தையிலும், நன்மை புரிவதிலும் மற்றவர்களை விட பரிபூரணம் பெற்றவர்களாவர். உண்மையே பேசக் கூடியவர்களாகவும், நற்பண்புகள் நிறைந்தவர்களாகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். எவருக்கும் அவர்களுக்கு நெருங்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு விஷேச தன்மைகளை அல்லாஹ் அருளினான். கீழ்தரமான எல்லா காரியங்களை விட்டும் அவர்களை தூரமாக்கினான். அல்லாஹ் அறிவித்த விஷயங்களை தவிர வேறு எதனையும் அறிவிப்பதை விட்டும் அவர்கள் தம்மை தடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அறிவிக்கும் அத்தனை விபரங்களும், அவர்கள் மார்க்கத்தில் காட்டும் நேர்வழிகளும் உண்மாயனவை, அவற்றில் எவ்வித பிழைகளும் இல்லை. இவ்வாறு அவர்கள் அனைவரையும் நாங்கள் விசுவாசம் செய்கிறோம். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த அத்தனையையும் நாங்கள் உண்மையென நம்புகிறோம். அவர்கள் மீது அன்பு வைக்கிறோம். அவர்களுக்கு சங்கை செய்கிறோம். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சம்பந்தமாக அவை அனைத்தை யும் முழுமையாக நம்பிக்கை கொள்வது எமது விஷேட கடமையாகும். அன்னாரை அறிந்துக் கொள்வதும், அன்னார் கொண்டு வந்த மார்க்க அனுஷ்டானங்களை எங்களால் முடிந்த அளவு முழுமையாகவும் விபரங்களுடனும் தெரிந்துக் கொள்வது எம் அனைவர் மீதும் கட்டாய கடமையாகும். இவ்வாறு அன்னார் மீது நம்பிக்கை வைப்பது, அன்னரை பின்பற்றுவது, சகல விடயங்களிலும் அன்னாரின் கட்டளைக்கு அடிபணிவது எனும் செயல்கள் அன்னார் கொண்டு வந்த விபரங்களை உறுதிப் படுத்துவதாகும். அன்னார் கொண்டு வந்த கட்டளைகளை நிறைவேற்றுவதும், அன்னார் தடுத்த விஷயங்களி லிருந்து விழகி நடப்பதும் இதன் மூலமே நடைபெறும். நிச்சயமாக அன்னார் இறுதி நபியாவார்கள். அவருக்குப் பிறகு வேறோரு நபியில்லை. அன்னார் மார்க்க அனுஷ்டானங்கள் அனைத்தையும் முழுமையாக எமக்கு அறிவித்துள்ளார்கள். இந்த அனுஷ்டானங்கள் மரித்தவர் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை நிலைத்திருக்கும்.

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பிக்கிறேன்

கேள்வி 14; விதி எனப்படும் தலை எழுத்தின் மீது விசுவாசம் கொள்வதில் எத்தனை பிரிவுகள் உள்ளன? அவை என்ன?

பதில்; விதியில் நம்பிக்கை வைப்பதில் நான்கு கட்டங்கள் உள்ளன. இவை அனைத்தையும் நிறைவேற்றுதன் மூலம் விதியின் மீது வைக்கும் நம்பிக்கை முழுமையடையும்.

1. சகலவற்றையும் அல்லாஹ் மிக்க அறிந்தவன் என்று நம்பிக்கை வைத்தல்.

2. நடைபெறும் அனைத்து விஷயங்களை பற்றியும் அல்லாஹ் தீர்க்கமாகவும், தெளிவாகவும் எல்லா வகையிலும் அறிந்து வைத்துள்ளான் இன்று நம்பிக்கை வைத்தல்.

3. அனைத்து சம்பவங்களும் லவ்ஹுல் மஹ்பூல் எனும் புத்தகத்தில் எழுதப் பட்டுள்ளது என்று உறுதியாக நம்பிக்கை வைத்தல்.

4. அத்தனை சம்பவங்களும் அல்லாஹ்வின் அனுமதியுடனும் அவனது சக்தியினாலும் நடை பெறுகின்றன என்று உறுதியாக நம்பிக்கை வைத்தல். அவன் நாடியதொன்று நிச்சயமாக நடைபெறும். அவன் நாடாததொன்று ஒரு போதும் நடைபெறாது. இதன்படி தனது அடியார் களுக்கு சுதந்திரமாக செயலாற்றுதற்கு அவன் இடம் கொடுத்துள்ளான். ஆகையால் அவர்கள் தமது சக்திக்கு ஏற்றவாறு அல்லாஹ்வின் அனுமதிப்படி சுதந்திரமாக எதனையும் செய்வார் கள். உயர்த்தியாகிய அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّ ذَلِكَ فِي كِتَابٍ

(நபியே! வானத்திலும், பூமியிலும் இருப்வற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இது (லவ்ஹுல் மஹ்ஃபூல் எனும்) புத்தகத்தில் இருக்கின்றது. நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதேயாகும்.

لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ (28) وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ (29)

உங்களில் (நேர்வழியில்) நிலைத்திருக்க நாடுகிற வருக்கு (இது ஒரு அறிவுரையாகும்.) இன்னும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் (நல்லறிவு பெற) நாட மாட்டீர்கள். சூரா இன்பிதார் 81 – 28,29 வசனம்.

கேள்வி 15; கியாமத் நாளை விசுவாசம் கொள்வதின் எல்லை? அதில் அடங்கியுள்ள விஷயங்கள் என்ன?

பதில்; மரணத்தின் பின் நடைபெறுவதாக குர்ஆனும் சுன்னாவும் அறிவிக்கும் அத்தனை விஷயங்களையும் விசுவாசம் கொள்வதும் இறுதி நாளை விசுவாசம் கொள்வதில் அடங்கியுள்ளன. உதாரணமாக கப்ரின் நிலை, மீண்டும் எழுப்பப் படும் வரை கப்ரில் தங்கியிருக்கும் வாழ்க்கை, அங்கு கிடைக்கப் பெறும் நிம்மதி அல்லது தண்டனை, மரித்தோரை மீண்டும் எழுப்பும் தினத்தில் ஏற்படும் நிலை, கப்ரில் கேட்கப்படும் கேள்விகள், அதன் விளைவுகள், மீசான் எனும் தராசு, பரிந்திரைத்தல், சுவர்க்கத்தின் மற்றும் நரகத்தின் நிலைகள், அவற்றின் தன்மைகள், அங்கு தங்கியிருக்கும் மக்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் விஷயங்கள் போன்ற அத்தனை மீதும் நம்பிக்கை வைத்தல் இறுதி நாளை நம்பிக்க வைப்பதில் அடங்கும்.

கேள்வி 16; நிபாஃக் எனும் நயவஞ்சகத் தன்மை என்றால் என்ன? அதன் தன்மைகள், பிரிவுகள் என்ன?

பதில்; நிபாஃக் எனும் நாவஞ்சகம் என்பது நல்லவைகளை மாத்திரம் வெளிப்படுத்தி, தீமைகளை மறைத்து வைத்தலாகும். இதில் இரண்டு பாகங்கள் உள்ளன. 1. நிபாஃக் அல் அக்பர் எனும் இஸ்லாமிய அடிப்படை கொள்கை சம்பந்தமாக ஏற்படும் மிகப் பெரிய நயவஞ்சம். இதில் ஈடுபட்டவர் என்றென்றும் நரக நெருப்பில் இருக்க நேரிடும். இந்த வகையான முனாபிக்குகள் பற்றி அல் குர்ஆன் இவ்வாறு விபரிக்கிறது.

وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آَمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآَخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ

இன்னும் “அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசம் கொண்டிருக்கின்றோம்" எனக் கூறுவோர் மனிர்களில் (சிலர்) இருக்கின்றனர். ஆனால் அவர்களோ விசுவாசம்கொண்டவர்கள் அல்லர். சூரா பகரா 2;8

இவர்கள் வெளிப்படையாக முஸ்லிம்கள் எனக் காட்டிக் கொண்டாலும், உள்ளங்களில் இஸ்லாத்தை முற்றிலும் நிராகரித்தவர்களாவர்.

2. நிபாஃக் அஸ்கர் எனும் அன்றாட செய்கைகளில் காணப்படும் சிறிய நாவஞ்சகம். இது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸை ஒன்றை குறிப்பிட வேண்டும்.

நாவஞ்சகர்களின் அடையாளங்கள மூன்று. அவர்கள் பேசினால் பொய் சொல்வார்கள். வாக்கு கொடுத்தால் அதனை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் ஏதேனும் ஒன்றை பொறுப்புக் கொடுத்தால் அதில் மோசடி செய்வார்கள்.

இதன் காரணமாக அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் எனும் பெரிய நயவஞ்சகத்தின் அடிப்படையில் செய்யப்படும் இறை வணக்கம் அல்லது வழிபாடுகள் எதுவும் எவ்வித நன்மையும் அளிக்காது. சிறிய நயவஞ்சகம் எனும் தன்மை உள்ள ஒருவர் இறை விசுவாசத்துடன் இணைந்து செயல் புரிவதால் அவருக்கு நன்மையோ, அதன் விளைவோ கிடைப்பதற்கு அவகாசம் உண்டு. அதே போல் அவரது செயலுக்கு நன்மையோ, அல்லது தண்டனையோ கிடைக்கும் வாய்ப்புண்டு

கேள்வி 17 பித்ஆ என்பது என்ன? அதன் பிரிவுகள் எத்தனை?

பதில்; நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளுக்கு மாற்றமாக செய்யப்படும் அத்தனையும் பித்ஆ என்று அழைக்கப்படும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதலாவது, இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக ஏற்படும் ஆதாரமற்ற புதிய கொள்கைகள். அல்லாஹ்வும், அவனுடைய ரசூல் (ஸல்) அவர்களும் அறிவித்தவைகளுக்கு மாற்றமான முறையில் விசுவாசம் கொள்ளல். இது சம்பந்தமாக அல்லாஹ்வின் ரசூல் (ஸல்) அவர்கள் இவ்வாறு அறிவித்தார்கள். “என்னுடைய சமூகம் 73 கூட்டங்களாக பிரிவார்கள். அவர்களில் ஒரு கூட்டத்தாரை தவிர எனைய அனைவரும் நரக நெருப்புக்கு ஆளாவார்கள்." அதனை கேட்ட மக்கள் “அவர்கள் எந்த கூட்டத்தவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களே?" என்று விசாரித்தார் கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நானும் என்னை பின்பற்றுகின்றவர்களும் எதில் இருக்கிறோமோ, அதில் நிலைத்து இருப்பவர்கள்." என்று பதிலளித்தார்கள்.

ஆகையால், இந்த விளக்கத்துக்கு ஏற்றவாரு எவர் நடந்துக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக சுன்னாஹ்விக்கு பொறுத்தமாக இருப்பவராவார். இதற்கு மாற்றமாக நடக்கும் கூட்டத்துடன் எவர் சேர்ந்துக் கொள்கிறாரோ அவர் “முப்ததிஃ" எனும் பிழையான கொள்கையில் சார்ந்து இருக்கிறார் என்பது தெளிவு. அனைத்து பித் ஆ க்களும் வழி கேடாகும். அதன் பின் சுன்னாஹ்வுக்கு ஏற்ப பித்ஆ வில் வித்தியாசங்கள் ஏற்படும்.

இரண்டாவது; செயல்களின் அடிப்படையில் ஏற்படுத்தக் கூடிய புதுமையான சம்பவங்கள். அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் மார்க்கத்தில் செய்து காட்டாத ஒன்றை வணக்கம் என்ற பெயரில் புதிதாக புகுத்தலும், அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதி கொடுக்காத அல்லது தடுத்த செயலை வணக்கம் என்று ஏற்றுக் கொள்வதும் இதில் அடங்கும். ஆகையால் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒரு செயலை வணக்கம் என்று ஏற்றுக் கொண்டால், அல்லது மார்க்கம் தடுக்காத ஒரு வழிபாட்டை ஒருவன் தடுத்துக் கொண்டால் அவன் “முப்ததிஃ" எனக் கருதப்படுவான். அதாவது பிழையான வணக்கத்தை நடத்துபவன் என்று கருதப் படுவான்.

கேள்வி 18; உங்களுக்கு பொறுப்பு சாட்டப்படும் முஸ்லிம்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?

பதில்; உயர்த்தியாகிய அல்லாஹ் இவ்வறு அறிவிக்கிறான்.

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ

விசுவாசம் கொண்டோர்கள் சகோதரர்களா வார்கள். குல் ஆன். 49; 10.

ஆகையால் அவர்களை சகோதரர்களாக ஏற்றுக் கொள்வதும், அவர்களுக்கு அன்பு செலுத்துவதும், நீங்கள் விரும்பும் ஒன்று அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நாடுவதும், நீங்கள் வெறுக்கும் ஒன்று அவர்களுக்கு நடைபெறுவதை வெறுப்ப தும், உங்கள் வசதிக்கும் சக்திக்கும் பொருத்தமான முறையில் அவர்களுடைய வாழ்வை சீர்படுத்து வதும், அவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலைக்கவும், அவர்கள் உள்ளங்கள் ஒன்று பட்டு செயல் புரிவதற்கும், சத்தியத்தின் பக்கம் அவர்களை ஒன்று சேர்க்கவும் நீங்கள் நேர்மையாக பாடுபட வேண்டும். ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். ஒரு முஸ்லிம் தன் சகோதரனுக்கு அநியாயம் செய்ய மாட்டான். அவன் தன் சகோதரனை வஞ்சிக்க மாட்டான். அவனிடம் பொய் பேச மாட்டான். சகோதரனை கேவலப்படுத்த மாட்டான். பெற்றோர், தன் மீது பொறுப்பு சாட்டப்பட்ட உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்ற வர்களுக்காக தனது கடமைகளை சரிவர நிறைவேற்றுவான்.

கேள்வி 19; நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் சந்பந்தப் பட்ட விஷயங்களில் எங்கள் மீது சாட்டப் படும் பொறுப்புகள் என்ன?

பதில்; அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும் நான் வைக்கும் விசுவாசம், நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மீது அன்பு செலுத்துவதன் மூலம் மாத்திரமே முழுமையடைகிறது. அவர்களுடைய கண்ணியம், அவர்கள் நிறைவேற்ற முன் வந்த செயல்களின் முக்கியத்துவத்தை பொருத்து இந்த அன்பு வைத்தல் நிகழ வேண்டும். அது போன்றே, நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அன்று செய்த மாபெரும் தியாகங்களே இன்றைய முஸ்லிம் சமூகம் இவ்வளவு உயர்ந்த அந்தஸ்த்தை அடைவதற்கு காரணமாக இருக்கிறது. ஆகையால் இதன் கண்ணியம் உத்தமத் தோழர் சகாபாக்க ளுக்கே உரியது. அல்லாஹ் அவர்கள் மீது வைத்த அன்பின் காரணமாக அவர்களுக்கு நேரான மார்க்கத்தை காட்டினான். அவர்களுடைய சிறப்பை உலகெங்கும் அல்லாஹ் பரவச் செய்தான். அவர்கள் மத்தியில் பிரச்சினை எதுவும் ஏற்படாத வகையில், அவற்றை தடுத்துக் கொண்டான். புகழுக்கு உரித்தான சகல காரியங்களிலும், ஆரம்ப சமூகத்தின் மத்தியில் இந்த தோழர் பெருமக்கள் மற்றவர்களை விடவும் முன்னனியில் திகழ்ந்தார்கள். எல்லா பாவமான காரியங்களிலும் மற்றவர்களை விட மிகவும் தூரமாகி நின்றார்கள். இவர்கள் அனைவரும் மிகவும் நேர்மையான, நியாயமான முறையில் வாழ்ந்து காட்டினார்கள். இதன் மூலம் இவர்கள் அல்லாஹ்வின் அன்புக்கு உரிமையாளர்கள் ஆனார்கள்.

கேள்வி 20; இமாமத் எனும் வார்த்தை பற்றிய உங்களது கூற்றுக்கு பொருள் என்ன?

பதில்; இமாம் எனும் சமுதாயத்தின் தலைவனை நியமித்துக் கொள்வது சமூகத்தின் மீது சுமத்தப்படும் “பர்ழு கிபாயா" எனும் கட்டாய கடமை என்பதை நாங்கள் நம்புகிறோம். இதற்கு காரணம் மார்க்க விடயங்கள் சம்பந்தமாவும், உலக விடயங்கள் சம்பந்தமாகவும் சமூகத்தை நேர்வழி செலுத்துவதற்கு ஒரு தலைவன் இல்லாவிடில் அச்சமூகம் நிலைத்து நிற்க முடியாது. இந்த தலைமைத்துவத்தின் மூலம் சமூக கட்டுப்பாட்டை மீறி தீவிரவாதத்தில் ஈடுபடக் கூடியவர்களை தடுத்து நிறுத்துவற்கும், சமூகத்தில் நடைபெறக் கூடிய குற்றங்களுக்கு தண்டனை வழங்கவும் முடியும். பாபக் காரியங்களுக்கும் அட்டூலியத் துக்கும் அன்றி, நன்மையான காரியங்களுக்கு மாத்திரமே இந்த தலைமைத்து வத்துக்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும். அல்லாஹ்வின் அடியார்களுக்கும், பாபக் காரியங்களில் ஈடுபடும் மக்களுக்கும் மத்தியில் மோதல் எற்படுவது நிச்சயம். அந்த சந்தர்ப்பத்தில் நல்லவர்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிய வேண்டும். பாபச் செயல்களில் ஈடுபடும் மக்களுக்கு அவற்றை விட்டு நீங்க உதவி புரிய வேண்டும்.

கேள்வி 21; அஸ் ஸிராத் அல் முஸ்தகீம் எனும் நேர் வழி என்பது என்ன? அதன் தன்மை என்ன?

பதில்; அஸ் ஸிராத் அல் முஸ்தகீம் எனும் நேர் வழி என்பது நன்மை பயக்கும் அறிவும் நேர்மையான செயல்களுமே. நன்மை பயக்கும் அறிவு என்பது அல் குர் ஆனும் ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த விஷயங்கள் பற்றிய அறிவு. சரியான கொள்கையின் அடிப்டையில் பர்ழு எனும் கட்டாயக் கடமைகளையும், நபில் எனும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட கூடுதலான கடமைகளையும் நிறைவு செய்து, தடுக்கப் பட்ட காரியங்களிலிருந்து விழகி அல்லாஹ்வுக்கு நெறுக்கமாவது நேர்மையான செயல் எனப்படும். அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும், அவனது அடியார்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்புக்களையும், சரிவர நிறை வேற்றுதல், அவை அல்லாஹ்வுக்காக மாத்திரம் நேர்மையுடன் நிறைவேற்றுவதன் மூலமும், அவனது தூதர் (ஸல் ) அவர்கள் காட்டித் தந்த முறையில் அமுல் படுத்துவதன் மூலமும் நிறைவு அடைகிறது. மார்க்கத்தின் அத்தனை செயல்களும் இந்த இரண்டு அடிப்படையின் மீதே நடைபெற வேண்டும். ஆகையால் எவரேனும் அல்லாஹ் வுக்காக மாத்திரம் என்ற நேர்ச்சையின்றி ஏதேனும் காரியத்தை செய்தால் அவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் ஷிர்க் எனும் குற்றத்தை செய்தவராகி விட்டார். யாரேனும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் அல்லாது வேறொரு வழியில் ஒரு நற்காரியத்தை செய்தால், அவர் பித்ஆ எனும் மார்க்கத்தில் புதுமை யொன்றை புகுத்திய கடுமையான குற்றத்தை செய்த பாபத்துக்கு ஆனாகிறார்.

கேள்வி 22;

இறை விசுவாசம் கொண்ட ஒருவர் இறைவனை ஏற்றுக் கொள்ளாதவன், இறையச்சம் அற்றவன் ஆகியோரிடமிருந்து எவ்வாறு வித்தியாசப் படுகிறார்?

பதில்;

இது முக்கியமான ஒரு கேள்வியாகும். ஒரு இறை விசுவாசிக்கும் இறைவனை மறுக்கும் ஒருவனுக் கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அறிவதன் மூலம் சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் உள்ள வேற்றுமையை அறிந்துக் கொள்ள முடியும். அத்துடன் அபாக்கியம் பெற்ற மக்களையும், பாக்கியம் பெற்ற மக்களையும் பிரித்து அறிய முடிகிறது. இதன் படி, இறைவிசுவாசம் உள்ளவன் உண்மையான சத்தியவானாவான். அவன் அல்லாஹ், அல்லாஹ்வின் குர்ஆன், அவனது சுன்னாக்கள் ஆகியவற்றில் கூறப்படும் அல்லாஹ்வின் உயர் பண்புகளையும் அவனது திருநாமங்களையும் அறிந்துக் கொள்ள வேண்டிய முறையில் சரிவர அறிந்து உறுதியான நம்பிக்கை கொண்டவன், அவற்றை முழுமையாக ஏற்றுக் கொண்டவன், அத்துடன் அல்லாஹ்வை பற்றி எந்த விபரங்கள் கூறப்படவில்லையோ, அவற்றை விட்டு முற்றாக நீங்கியவன். இதன் காரணமாக இறை நம்பிக்கை, அறிவு, உறுதி, அமைதி, அல்லாஹ்வுடன் உள்ள தொடர்பின் அடிப்படை ஆகியவைகளின் காரணமாக அவனது உள்ளம் பூரணமடைந்திருக்கும். அவனது உள்ளம் அல்லாஹ்வின் பக்கம் மாத்திரம் சாய்ந்து இருக்கும். தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் எந்த விஷயங்களை அல்லாஹ் மார்க்கத்தில் சேர்த்து வைத்தானோ, அந்த வணக்கங்களை மாத்திரம் உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்காக இவர்கள் நிறைவேற்றுவார்கள். அவர்கள் அல்லாஹ்விட மிருந்து நற் பரிசில்களை எதிர் பார்ப்பவர்களாக இருப்பார்கள். அல்லாஹ்வின் தண்டனைக்கு பயந்தவர்களாக இருப்பார்கள். அவர்களது உள்ளங்கள், நாவுகள், உடலுருப்புகள் அனைத்தும் அல்லாஹ் அருளிய நற்கொடைகளுக்காக நன்றி செலுத்திக்கொண்டு செயல் படும். அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்காக ஒவ்வொரு கணமும் நன்றி கூறிக் கொண்டிருக்கும். தமக்கு கிடைத்த அருட் கொடைகளை விட வேறு எந்த அருட் கொடையும் இல்லை என்று நினைக்கும். தமக்கு கிடைத்த நன்மைகளை விட வேறு எந்த நன்மையும் இல்லை என நினைக்கும். அல்லாஹ் விடமிருந்து கிடைத்த இன்பங்களுடன் உலக இன்பங்களை ஒப்பிட்டு நோக்கும் போது, உலக இன்பங்கள் இரண்டாம் தரமாக தோன்றும். அத்துடன் அவர்களுக்கு அளித்த அல்லாஹ்வின் கொடைகளை நன்றியுடன் ஏற்றுக் கொள்வார்கள். இப்படிப் பட்ட சந்தர்ப்பத்தில் லௌகிகவாதிகள் அல்லது அல்லாஹ்வின் சிந்தனையின்றி வாழும் சிலரை போல் உலக இன்பங்களை அனுபவிப் பதை போல் அல்லாமல், இன்பங்களை தடுத்துக் கொள்வார்கள். மாறாக அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகள், அல்லாஹ்வின் அடியார் களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆகியவற்றை நிறைவேற்றியவர்களாக உலக வாழ்வை கட்டுப்பாட்டுடன் அனுபவிப்பார்கள். இதன் படி தமது இலட்சியங்கள், நோக்கங்கள் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்வார்கள். அவர்களது உள்ளங்களில் எப்போதும் அமைதி நிறைந்து இருக்கும். அடக்கத்துடன் இருக்கும். தாம் விரும்பாத எதேனும் நடந்தாலும் அவர்கள் வேதனை அடைய மாட்டார்கள். இதன் படி அல்லாஹ் இவ்வுலக, மறுஉலக இன்பங்களை அவர்களுக்கு ஒன்றாக சேர்த்துக் கொடுப்பான்.

அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாது, அல்லாஹ்வை பற்றிய எவ்வித சிந்தனையுமற்று வாழும் மக்கள் கூட்டம் மேற் குறிப்பிட்டவைக்கு மாற்றமாகவே செயல் புரிவார்கள். அவர்கள் தமது இறைவனை புறக்கணிப்பார்கள். சகல வல்லமை பொருந்திய இறைவனையும், அவனது பூரணமான தன்மையையும் நிரூபிக்கும் அறிவும், அவற்றுக்கு தேவையான சாட்சிகளும் இருப்பினும், அவற்றை புரிந்துக் கொள்ளக் கூடிய புத்தியும், அறிவுத் திறனும் இருப்பினும் அவற்றை தேவையான வழியில் உபயோகிக்க மாட்டார்கள். அவனை ஏற்றுக் கொள்வதையும், அல்லாஹ்வை வணங்கு வதையும் விட்டு நீங்கும் போது அவன் உலக போகங்களில் மூழ்கிறான். அவற்றுக்கு அடிமையாக மாறிவிடுகிறான். அவனுடைய இதயம் காட்டில் சஞ்சரிக்கும் ஜந்துக்களுக்கு சமமாக மாறிவிடுகிறது. தான் விரும்பியவை தனக்கு கிடைக்காமல் போய்விடும் என்ற பீதி அவனை ஆட்கொள்ளும். தன்னை சஞ்சலத்துக்கு ஆளாக்கக் கூடிய, வெறுக்கத் தக்க ஏதேனும் சம்பவம் தனக்கு ஏற்படுமோ என்ற பயம் அவனை பீடிக்கும். வாழ்க்கையில் ஏற்படக் கூடிய துன்பம், எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அமைதியாக, நிதானமாக செயல் புரியும் ஆற்றல் அவனை விட்டு நீங்கிவிடும். இறைவிசுவாசத்தின் பாதுகாப்பை, அல்லாஹ்வை நெறுங்குவதால் ஏற்படும் அதன் நன்மைகளை, இறை விசுவாசத்தின் நல் விளைவுகளை அவன் இழந்து விடுகிறான். அவனுள் ஒரு பதட்டமான நிலை ஏற்படுகிறது. நன்மையான விளைவுகளை அவன் எதிர் பார்ப்பதில்லை. தண்டனைகளுக்கு பயப்படும் தன்மை அவனை விட்டும் அகன்று விடும். அவனது பயமும், எதிர்பார்ப்பும் உலக ஆசாபாசங்கள் மீதும், பொருள்களின் மீதும் கொண்ட பேராசையில் சார்ந்து இருக்கும்.

சத்தியத்துக்கு கட்டுப்படுவதும், அல்லாஹ்வின் அடியார்கள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான முறையில், வார்த்தையால், நோக்கத்தால் நேர்வழி காட்டுவதும் இறை விசுவாசிகளின் உன்னத குணங்களில் ஒன்றாகும்.

ஆனால், இறைவனை மறுப்பவன் உண்மையை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது, அகம்பாவத்துடன் உலகில் செயல் புரிவான். இறைவனின் படைப்புகளுடன் மமதையுடன் நடந்துக் கொள்வான். தன்னை பற்றி இறுமாப்புடன் நோக்குவான். எவருக்கும் நல்வழி காட்டமாட்டான்.

மூமினின் உள்ளம் வெறுப்பு, வஞ்சகம், ஏமாற்றுதல் போன்ற கீழ்தரமான செயல்களை விட்டு விழகி புனிதமாக இருக்கும். தான் விரும்புவது தனது சகோதரனுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உல்லத்தில் நிறைந்திருக்கும். தான் வெறுப்பவை மற்றவர் களுக்கு நிகழக் கூடாது என்று அவனது உள்ளம் எதிர்பார்க்கும். தனது வசதிக்கு ஏற்ப மற்றவர்களுக்கு சேவை புரிய அவன் முன் வருவான். மற்றவர்களுக்கு எற்படக் கூடிய துன்பங்களை நீக்குவதில் பங்கு பற்றுவான். தன்னால் எந்த வகையிலும் மற்றவர்களுக்கு அநியாயம் ஏற்படாது பார்த்துக் கொள்வான்.

ஆனால் இறை விசுவாசத்தை நிராகரிக்கும் மனிதனின் உள்ளத்தில் வஞ்சகமும், கொடூரமும் எப்போதும் நிறைந்திருக்கும். தனக்கு இலாபம் ஏற்படக் கூடிய சந்தர்ப்பத்திலன்றி மற்றவர்களுக்கு நன்மையோ இலாபமோ ஏற்படுவதை அவன் விரும்புவதில்லை. மக்களுக்கு துன்பங்களும், அநியாயங்களும் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அவற்றை நீக்குவதற்கு அவனுக்கு வசதியும், வாய்ப்பும் இருப்பினும் அவற்றை பற்றி பாராமுகமாக இருப்பான்.

ஒரு மூமின் எப்போதும் உண்மையே பேசுவான். அவன் கொடுக்கல் வாங்கல்களில் நேர்மையாக இருப்பான். நட்பு, கௌரவம், சாந்தம், கருணை, பொறுமை, நேர்மை, எளிமை, அன்பு ஆகிய உயர் பண்புகள் கொண்ட உயர்ந்த மனிதனாக ஒரு மூமின் திகழ்வான். ஆனால் இறை நம்பிக்கையற்ற ஒருவன் கொடூரம், கடுமை, கோழைத்தனம், நிம்மதியின்மை, பொய், அநீதி, மிருக இயல்பு போன்ற கீழ் தரமான குணங்கள் நிறைந்த மனிதன் என்பதை நாம் அறியவேண்டும்.

அல்லாஹ்வையன்றி வேறு எவருக்கும், எதற்கும் ஒரு மூமின் தலை குனிய மாட்டான். அவனது உள்ளமும், ஆண்மையும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் சேவை புரிந்து, அல்லாஹ்வையன்றி வேறு எதற்கும் அடங்கி நடக்காது. தூய்மை, பெருந்தன்மை, பலம், தைரியம், கௌரவம் போன்ற உயர் பண்புகள் நிறைந்த மூஃமின் உயர் பண்புகளை தவிர வேறு எதனையும் தேர்ந்து எடுக்க மாட்டான்.

ஆனால் இறை நம்பிக்கை அற்றவன் இவற்றுக்கு மாற்றமான பண்புகளை கொண்டிருப்பான். அவனது உள்ளத்தில் உலக ஆசைகள் மாத்திரம் குடிகொண்டிருக்கும். அவற்றால் ஏற்படக்கூடிய நாசத்தை பற்றி அவன் கவலை பட மாட்டான். ஆனால் அவற்றின் மூலம் கிடைக்க கூடிய இலாபங்களை மாத்திரம் எதிர்பார்ப்பான். அவற்றுக்காகவே தன் நேரத்தையும், காலத்தையும் வீணாக செலவு செய்வான். ஆனால் அவனது குறுகிய நோக்கங்களுக்காக அன்றி வேறு எந்த குறிக்கோலுக்காவும், சிரமத்தையோ, பலத்தையோ அல்லது தைரியத்தை செலவழிப்பதை காண முடியாது. நன்மை தீமை பற்றி அவனுக்கு எவ்வித கவலையும் கிடையாது.

ஒரு மூஃமின் சமூகத்துக்கு பிரயோசனம் அளிக்கக் கூடிய செயல்களில் முயற்சி செய்வான். அதே நேரத்தில் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பது, அந்த நம்பிக்கையில் உறுதியாக இருப்பது, அக் காரியங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் உதவி தேடுவது போன்ற விஷயங்களில் ஈடுபடுவான். உயர்தியாகிய அல்லாஹ் அவனுக்கு நிச்சயமாக உதவி புரிவான்.

ஆனால், இறை விசுவாசமற்றவன் அல்லாஹ்வின் மீது எதனையும் பாரம் சாட்ட மாட்டான். தனது மிக்க் கீழ்த்தரமான, எவ்வித பயணுமற்ற ஆத்மாவை திருப்தி படுத்துவதை விட அவனுக்கு வேறு எவ்வித நோக்கமும் கிடையாது. உண்மையிலேயே திருப்தி படுத்த அவன் முயற்சி செய்யும் அந்த ஆத்மாவுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ்வே, அவன் எதிர்பார்க்கும் நோக்கங்கள் நிறைவேற உதவி புரிவதும் அல்லாஹ்வே என்பதை அவன் அறிவதில்லை. யதார்த்த நிலை இவ்வாறு இருக்கும் போது, அவனது ஆசைகள் நிறைவேறும் போது, அவற்றை தன் சுய முயற்சி காரணமாக அவை யாவும் நடைபெற்றன என்று அவன் நினைக்கிறான்.

ஒரு மூஃமினுக்கு அல்லாஹ்வின் பரகத் கிட்டும் போது, அவற்றை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறான். தனக்கு பயன் அளிக்கக் கூடிய முறைகளில் அவற்றை பயன் படுத்துவான். நன்மை விளைவிக்க கூடிய முறையில் அவற்றை செயல் படுத்துவான். ஆனால் இறை நம்பிக்கையற்றவன் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அகம்பாவத்துடனும், கர்வத்துடனும் நடந்துக் கொள்வான். அல்லாஹ் விடமிருந்து பெற்ற நிஃமத்துக்கள் பற்றி நினைவு கூர்ந்து, அவற்றை பெறுவதற்கு வழி காட்டிய ஏனையவர்களை மறந்து விடுவான். அல்லாஹ் வுக்கோ, ஏனைய மக்களுக்கோ நன்றி கூற மாட்டான். அந்த நிஃமத்துக்களை கீழ்த்தரமான நோக்கங்களுக்காக உபயோகிப்பான். அதன் காரணமாக அவனுக்கு கிடைத்த நிஃமத்துக்கள் மிகக் குறுகிய காலத்தில் அவனை விட்டும் அகன்று ஓட வாய்ப்பு ஏற்படும்.

ஒரு முஃமினுடைய வாழ்வில் துன்பம் ஏதேனும் ஏற்பட்டால், பொறுமையுடனும், அதன் மூலம் நன்மை எற்படும் என்றும், நல்ல விளைவுகள் கிடைக்கும் என்றும், அத் துன்பம் வெகு சீக்கிரம் விலகிப் போகும் என்றும் ஆவலுடன் அதனை எதிர் நோக்குவான். அச்சந்தர்ப்பத்தில் தான் விரும்பிய ஒன்றில் ஏற்பட்ட இழப்பை விட, தனக்கு ஏற்பட்ட துன்பத்தை விட, தனக்கு கிடைக்கக் கூடிய நன்மை சிறப்பு மிக்கதாகும் என்ற நம்பிக்கை அவனுள் ஏற்படும். ஆனால் இறை நம்பிக்கையற்ற ஒருவன் அச்சந்தர்ப்பத்தை பயத்துடனும், துக்கத்து டனும் எதிர் நோக்குவான். அவனுக்கு எற்படும் நஷ்டம் பல மடங்காகத் தெரியும். உள்ளும் புறமும் அவன் பெரும் துயரத்துக்கு ஆளாவான். பொறுமை அவனை விட்டு நீங்கும். அவனுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் அவன் எந்த வித நற்பயனையும் எதிர் பார்க்க மாட்டான்.

அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளும் ஒரு மூஃமின் ரஸூல்மார்கள் அனைவர் மீதும் விசுவாசம் கொள்வான். அவர்களை கண்ணியப் படுத்துவான். எனைய அனைத்து படைப்புகளை விட அவர்கள் மீது அன்பு காட்டுவான். மரித்தவர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படும் இறுதி நாளில், மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ரசூல் மார்கள் காட்டிய நல்வழி மூலம் ஏற்படுவதை விசுவாசம் கொள்வான். அதே போன்று ரசூல் மார்கள் எந்த தீய வழிகளை தடுத்தார்களோ அந்த வழிகளை பின்பற்றியதால் இறுதி நாளில் மனிதர்களுக்கு தீமைகள் ஏற்பட்டன என்பதையும் அவன் விசுவாசம் கொள்வான். படைப்புகள் அனைத்திலும் சிறந்த படைப்பு உயர் பண்புகளை கொண்ட முஹம்மத் (ஸல்) அவர்களே. அல்லாஹ் அன்னாரை உலக மக்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக ஆக்கினான். அனைத்து மக்களின் நன்மைக்காக, அவர்களை நேர் வழியில் அழைத்துச் செல்ல அன்னாரை அல்லாஹ் உலகத்துக்கு அனுப்பினான்.

ஆனால் இறை மறுப்பாளர்கள் இதற்கு மாற்றமாக செயல் புரிவார்கள். ரசூல்மார்களின் விரோதிகளை இவர்கள் கௌரவப் படுத்துவார்கள். அப்படிப்பட்ட விரோதிகளின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள். ரசூல்மார்கள் கொண்டு தூதை இழிவாகக் கருதுவார்கள். எவ்வித மனித உணர்ச்சிகளுமற்ற இவர்களின் புத்தியும், இவர்களை இழிவு நிலைக்கு இழுத்துச் சென்ற கீழ்தரமான குணங்களும் இவற்றுக்கு சிறந்த உதாரணமாகும்.

ஒரு மூமின் நபி (ஸல்) காட்டிய வழியை அப்படியே பின்பற்றுவான். அவற்றின் மீது அன்பு செழுத்துவான். அதே போன்று, நபி (ஸல்) அவர்களின் சஸாபாக்கள் உட்பட முஸ்லிம் தலைவர்கள் மீதும், நேர் வழி காட்டும் சமூகத் தலைவர்கள் மீதும் அன்பு காட்டுவதை அல்லாஹ் மார்க்கத்தில் ஒரு செயலாக ஆக்கி இருக்கிறான். ஆனால் இறை விசுவாசமற்றவன் இதற்கு எதிராக கருமம் ஆற்றுவான். ஒரு மூஃமின் அல்லாஹ்வுக்கு மாத்திரம் நேர்மையாக கடமை புரிவான். அல்லாஹ்வை வணங்குவதில் மிகவும் கவணமாக, சரியான ஒழுங்கு முறைப் படி நடந்துக் கொள்வான்.

இறை மறுப்பவன் தனது செயல்களில் எந்த ஒரு கட்டுப்பாட்டையும் காணமாட்டான். கீழ் தரமான நோக்கங்களை தவிர அவனிடம் வேறு எந்த குறிக்கோளும் கிடையாது.

ஒரு மூஃமின் பயனுள்ள அறிவு, சரியான இறை நம்பிக்கை ஆகியன மூலம் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு, அவனையை நினைவு கூர்ந்து, அவன் பக்கமே சார்ந்து நின்று, ஏனைய படைப்புகளுடனும் கருணையுடன் நடந்துக் கொள்வதன் மூலம் அவனது உள்ளம் நிறைவுடன் திறந்திருக்கும். அத்துடன் அந்த உள்ளம் உயர்ந்த பண்புகளால் நிறைந்து பரிசுத்தமாக இருக்கும்.

ஆனால், இறை மறுப்பவனின் உள்ளமோ பரந்த மனப்பான்மைக்கு இடமளிக்க எந்த தேவையும் இல்லாத காரணத்தால், அதற்கு மாற்றமாக, அதனை பற்றிய எவ்வித சிந்தனையு மின்றி நடந்துக் கொள்ளும்.

நீங்கள் சுருக்கமாக கொடுத்த விளக்கத்தின் படி, உள்ளத்தில் இறை விசுவாசம் உறுதியாக ஏற்பட்டால், அதன் மூலம் வாழ்விலும், எதிர்காலத்திலும் சாந்தியும் அமைதியும் கிட்டினால் அது எமது வெளியுலக வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும், தமது கொள்கைகள், பண்புகள், நடவடிக்கைகள் என்பன ஒழுங்காக அமைந்தி ருந்தால், அவற்றின் மூலம் ஏனைய மக்களை நேர் வழிக்கு அழைப்பு கொடுத்திருந்தால், அதன் மூலம் எல்லா ஜனங்களுக்கும் நேர் வழி காட்டி இருந்திருந்தால், நீங்கள் குறிப்பிடும் சக்தி வாய்ந்த கூட்டம் மார்க்கத்தையும் இறை விசுவாசத்தையும் மறுக்க காரணம் என்ன? இவற்றுக்கு எதிராக சமர் புரிய காரணம் என்ன? இவற்றிலிருந்து சிலர் தூரமாக ஒதுங்கிப் போவதற்கு காரணம் என்ன? இதற்கு மாற்றமாக சம்பவங்கள் நடைபெற காரணம் என்ன? இவ்வாறு கேள்விகள் எழுப்ப காரணங்கள் உள்ளன. பாவம் புரிபவனுக்கும் நல்லது புரிபவனுக்கும் இடையில் வித்தியாசம் உண்டு. புண்ணியத்துக்கும் பாவத்திக்கும் இடையிலும், தீங்குக்கும் பலனுக்கும் இடையிலும் உள்ள வித்தியாசங்களை பிரித்தறியக் கூடிய அறிவும், ஞானமும் மக்களுக்கு இயற்கையாக இருப்பது தான் காரணம்

இவ்வாறான கேள்விகளுக்கு அல்லாஹ் தனது நூலாகிய அல் குர் ஆனில் மிகத் தெளிவாக பதில் அளித்துள்ளான். இப்படிப்பட்ட பிழையான சிந்தனைகளுக்கு வழி வகுத்த விஷயங்களையும், அவற்றை தடுத்துக் கொள்ளக்கூடிய முறைகள் பற்றியும் அல்லாஹ் பதில் அளித்துள்ள சிறப்பான முறையை அறிய முடியும். ஒரு அடியான் எதிர்பார்க்கும் சகல விஷயங்களும் அவனுக்கு கிட்டாது. அது நடைமுறையில் சாத்தியமாகாது. ஆகையால் இஸ்லாம் மார்க்கத்தின் மீது நம்பிக்கை யற்ற காரணத்தால், இந்த நம்பிக்கையை விளங்கிக் கொள்ளத் தடையாக இருக்கும் ஏராளமான காரணங்கள் மனிதனின் உள்ளத்தில் இடம் பெறும். இவற்றில் சிலவற்றை ஆராய்ந்தால், அதனை பற்றிய அறிவீனம், உண்மையை சரிவர அறிந்துக் கொள்ள இயலாமை, இஸ்லாம் காட்டும் உயர் கல்வியையும் சிறந்த வழிகாட்டலையும் பின்பற்ற முடியாமை போன்ற தடைகளை காரணம் காட்ட முடியும். உயர் பண்புகளும், உண்மைகளும் கொண்ட மார்க்கத்தை நெருங்குவதற்கு தனக்கு பயனுள்ள விஷயங்களை பற்றி அறிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு அவனது அறிவீனம் தடையாக உள்ளது. உயர்க்தியாகிய அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

بَلْ كَذَّبُوا بِمَا لَمْ يُحِيطُوا بِعِلْمِهِ وَلَمَّا يَأْتِهِمْ تَأْوِيلُهُ

அதனை (குர்ஆனை) பற்றிய அறிவில்லாத காரணத்தால், அவர்களை சூழ்ந்து இருப்பவை களை அவர்கள் பொய்யாக்கினார்கள். அதன் உண்மை அவர்களிடம் இன்னும் வந்து சேரவில்லை.

உண்மையிலேயே அவர்களின் அறிவீனமும் அதனை பற்றிய அவர்களின் மதியீனமும் காரணமாக அவர்கள் அதனை பொய்யாக்கினார் கள் என்றும், சத்தியத்தின் பக்கம் சார்ந்து நிற்கவும், அதனை ஏற்றுக் கொள்ளவும் வழி வகுக்கும் தண்டனை பற்றிய உண்மை அவர்களை வந்து சேரவில்லை என்றும் இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது. மேலும், இவர்களை பற்றி பல்வேறு வசனங்களில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். அவற்றை பற்றிய சில விபரங்கள் கீழே காணலாம்.

وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதனை) அறிய மாட்டார்கள். சூரா அல் அன் ஆம் 6;37.

وَلَكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ

ஆனால், அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். சூரா 6;111

صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ

அவர்கள் செவிடர்கள், ஊமைகள், குருடர்கள். ஆதலால் அவர்கள் எதையும் அறிந்துணர மாட்டார்கள். சூரா 2;171

إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ

இதில் சிந்தித்து அறியும் மக்களுக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன. 13;4

அவ்வாறான கருத்துக்களை எடுத்துக் காட்டும் வசனங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன.

அறிவீனம் என்பதை சில சந்தர்ப்பங்களில் கண்கூடாக பார்க்க கூடியதாக உள்ளது. உதாரணமாக தமது தலைவர்களையும், தமது எஜமான்களையும் பின்பற்றி, அல்லாஹ்வின் தூதரை பொய்யாக்கி, அன்னாருடைய தூதை ஏற்றுக் கொள்ள மறுத்த பொது மக்களில் பெரும்பாலோரின் நிலை இவ்வாறே இருந்தது. அல்லாஹ்வின் தண்டனை இறங்கிய போது அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا

எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்படிந்தோம். ஆகவே, அவர்கள் எங்களை வழி தவறச் செய்து விட்டார்கள். சூரா அல் அஹ்ஜாப் 33;67.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் வேறொரு விஷயத்துடன் சம்பந்தப்படுத்தி காணக்கூடியதாக உள்ளது. இது இரண்டு வகைப் படும். தமது சமூகத்தை அல்லது தமது மூதாதையரை அல்லது தம் மத்தியில் வசிப்பவர்களை அல்லது மதத்தை அடிப்படையாகக் கொண்டது ஒரு வகையாகும். இவனிடம் சத்தியம் வந்திருந்த போதிலும் அவன் அதனை காணமாட்டான். தான் பிறந்து வளர்ந்த மதத்தை அவன் ஏற்றுக் கொண்டதாலும், சமூகம் அவன் மீது திணிக்கும் வற்புருத்தலாலும் அவனது சிந்தனை மிகவும் குறுகிய வட்டத்துக்குள் மாத்திரம் நிலைத்திருக்கும். நபிமார்களையும், அவர்கள் கொண்டு வந்த தூதையும் நிராகரித்த மக்கள் இவர்களாவார்கள். இவர்களை பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِي قَرْيَةٍ مِنْ نَذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا وَجَدْنَا آَبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آَثَارِهِمْ مُقْتَدُونَ

இவ்வாறே எந்த ஊருக்கும் அதில் வசதியுடன் வாழ்ந்தவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளின் மீதே பின்பற்றிச் செல்பவர்கள்." என்று கூறியே தவிர நான் உமக்கு முன்னர் (நம்முடைய) எச்சரிக்கையாளரை அனுப்பவில்லை“ சூரா அல் சுஹ்ருப் 43;23.

இது மாபெரும் அந்தகார இருளாகும். தனது நண்பன் அசத்தியத்தில் வாழும் போது தான் சத்தியத்தில் வாழ்வதாக இவன் நினைத்துக் கொள்கிறான். நாஸ்திகர்கள், யதார்த்தவாதிகள் பலரும் இந்த கூட்டத்தை சேர்ந்தவர்களே. அதனால் ஏதேனும் ஒரு விஷயத்தை உறுதிப் படுத்தும் போது அவர்களது தலைவனை பின்பற்றி அதன் அடிப்படையிலேயே சிந்திப்பார்கள். அத் தலைவர்கள் எதேனும் ஒரு விஷயத்தை அறிவித்தால் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள். இது அவர்களுக்கு வேத வாக்காகும். இத்தலைவர்கள் ஏதேனும் ஒரு பொய்யை கற்பனை செய்து ஆரம்பித்து வைத்தால், அவர்களுடன் இணக்கம் இருப்பினும், இணக்கம் இல்லாவிடினும் தலைவர்களை கண்மூடித்தனமாக ஆட்டு மந்தையை போல் பின்பற்றுவார்கள். பிரச்சினைகள் எற்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் கலவரம் செய்வது இந்த மந்தை கூட்டம்தான். இதற்காக இவர்களிடம் எந்த காரணிகளும் கிடையாது.

அறிவீனத்தின் இரண்டாவது வகை; இது நாஸ்திகத்தின் தலைவர்கள், யதார்த்தவாதத்தில் மூழ்கிய கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் மக்கள் சம்பந்தப்பட்டதாகும். அவர்கள் மற்றவர்களை அறிவீனர்கள் என்று கருதுவார்கள். அவர்களின் அறிவு, தாம் கற்ற விஷயங்கள் எனும் குறுகிய வட்டத்துக்குள் மாத்திரம் தேங்கிக் கிடக்கும். அவர்களின் அகம்பாவத்தின் காரணமாக நபிமார்களை விசுவாசம் கொள்ளவும், அவர்களை பின்பற்றவும் மறுப்பார்கள். ஏனைய விடயங்கள் இயற்கையா கவே உண்மையாக இருப்பினும் அவைற்றையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் ரசூல்மார்களையும் பொய் என்று உரைப்பார்கள். மறைவான விஷயங்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதரும் எந்த உண்மைகளை அறிவித்தார்களோ அவற்றையும் பொய் என முற்றாக மறுப்பார்கள். அல்லாஹ்வின் எச்சரிக்கைப் படி தண்டனைக்கு ஆளாக்கப் படுவதற்கு பொருத்தமான பாவிகள் இவர்களே. இவர்களை பற்றி உயர்த்தியாகிய அல்லாஹ் இவ்வாறு அறிவிக்கிறான்.

فَلَمَّا جَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَرِحُوا بِمَا عِنْدَهُمْ مِنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ

“எனவே, அவர்களுடைய தூதர்கள் அவர் களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்த சமயத்தில் (அதனை அவர்கள் பரிகாசம் செய்து நிராகரித்தி விட்டு) கல்வியினால் தங்களிடம் உள்ளதை கொண்டு பெரு மசிழ்ச்சி அடைந்தார்கள். இன்னும், அவர்கள் எதை பரிகாசம் செய்துக் கொண்டிருந்தார்களோ அது அவர்களை சூழ்ந்துக் கொண்டது. சூரா மூஃமின் 40;83.

இதன்படி, தம்மிடமுள்ள கல்வி அறிவையும், தமது திறமையையும் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவை பிழையாக இருப்பினும் அவற்றின் மீது சார்ந்து நிற்பதற்கு தேவையான காரணங்கள் பற்றி பெரும் சந்தோஷம் அடைந்தார் கள். அவற்றின் அடிப்படையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளை பற்றியும் திருப்தி அடைந்தார்கள். அவற்றை பற்றி புகழ்ந்து பேசுவதும், அல்லாஹ் வின் தூதர்கள் கொண்டு வந்த உண்மையான ஞானத்துக்கும், காட்டிய நேர் வழிக்கும் எதிராக வாதம் புரிவதையும் தம் சாதனை என்று பெருமையுடன் பேசினார்கள். அல்லாஹ்வின் தூதர்கள் கொண்டு வந்த உண்மையான அறிவுரை களை கேவலப்படுத்துவதை விட்டும் அவர்களின் அகம்பாவம் அவர்களை தடுக்கவில்லை. எதனை அவர்கள் கேவலப் படுத்தினார்களோ இறுதியில் அது அவர்களை சுற்றி இறுக்கமாக அடைத்துக் கொள்ளும்.

இவ்வுலகலாவிய அறிவில் மூழ்கிக் கிடக்கும் நாஸ்திகர்கள் இவ்வாறு ஏமாற்றத்தில் சிக்கிக் கிடக்கிறார்கள். அவர்கள் எந்த அறிவில் மூழ்கிக் கிடக்கிறார்களோ அதனை சரியென தர்க்கம் புரிய அவர்களிடம் எந்த சாதனமும் இல்லை. இன்றைய சமூகத்தில் மார்க்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத கல்லூரிகளிலும் அந்த அவல நிலை காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக, இவ்வாறான பள்ளிக் கூடங்களில் கல்வி பயின்று வெளியேறும் மாணவ மாணவியரிடம் மார்க்கம் பற்றிய எவ்வித அறிவும் இல்லை. மதம் காட்டும் பண்புகளுக்கு எற்ற முறையில் அவர்களுடைய ஒழுக்கங்கள் அமைந்திருக்காது. மற்ற எவரும் அறியாத விஷயங்கள் தாம் அறிந்துள்ளதாக இவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். உலக விஷயங்களில் மூழ்கிக் கிடக்கும் நாஸ்திகர்களுக்கு இப்படிப் பட்டவர்கள் மிகவும் இலேசாக அடிமை படுவார்கள். இவ்வகை அபாயங்களில் இருந்து பாதுகாக்க முஸ்லிம் பிள்ளைகளுக்கு தேவையான மார்க்கம் சம்பந்தப்பட்ட கல்விக்கு பாடசாலை களில் முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டும். வெற்றியும் தோழ்வியும் மற்ற எல்லா விஷயங் களை விட இவ்வாறான மார்க்க கல்வியில் மாத்திரமே தங்கி உள்ளது. ஆனால் இன்றைய பாடசாலைகளில் மார்க்க கல்வியை தவிர வேறு எத்தனையோ விஷயங்களை பின்பற்றும் அவல நிலையை காண்கிறோம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களும், பொறுப்பானவர்களும் உண்மை நிலையை தேடி அறிந்து, உடனடியாக தேவையான நடவடிக்கை எடுப்பது அவர்கள் மீது கடமையாகும். இதில் மிகப் பாரிய பொறுப்பு ஆசிரியர்கள் மீது சுமத்தப் பட்டுள்ளது. இதனை செய்யா விட்டால் எதிர்கால இளம் பிள்ளைகள், பெண்கள் ஆகியோரின் இன்றைய நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாது, அதே நிலையில் தேங்கி நிற்கும். அதனால் இவற்றுக்கு பொறுப்பானவர்களும், இதனை பற்றி பேசக் கூடியவர்களும், அல்லாஹ்வை பயந்தவர் களாக செயல் புரிய வேண்டும். பாடசாலைகளில் மார்க்கத்தை கற்றுக் கொடுப்பது முக்கிய பாடமாக கருதப்படுவதன் மூலம் அல்லாஹ்விடமிருந்து பெரும் நன்மைகளை எதிர் பார்க்க முடியும். உதாசீனம் காரணமாக பிழைகள் ஏற்படுவது மிகவும் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும். நன்மையும், நற்பண்புகளும் மார்க்கம் சம்பந்தமான அறிவை தேடுவதிலேயே தங்கியுள்ளது.

மார்க்கத்துக்கும், இறை நம்பிக்கைக்கும் பாதகம் விளைவிக்கும் இன்னுமொரு விஷயம் பொறாமையும் அநியாயமும் ஆகும். இதுவே யூதர்களின் நிலையாக இருந்தன. அவர்கள் நபி (ஸல்) அவர்களை பற்றியும், அன்னாரது நேர்மை பற்றியும், அன்னார் கொண்டு வந்த மார்க்கத்தின் சத்தியத்தை பற்றியும், தமது சொந்த குழந்தைகளை அடையாளம் அறிவது போல் அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால், இறை விசுவாசத் துக்கு பதிலாக உலகலாவிய நோக்கங்களையும், கீழ்தரமான இச்சைகளையும் அடையும் நோக்கத்துடன் அறிந்துக் கொண்டே உண்மையை மறைத்தார்கள். குறைஷி தலைவர் கூட்டத்தில் பெரும்பான்மையோரை இந்த நோய் பீடித்திருந்ததாக சரித்திரம் சான்று கூறுகிறது. அகம்பாவமும், தற்பெறுமையும் இந்த நோய்க்கு மூல காரணங்களாகும். சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவும், அதனை பின்பற்றவும் இந்த நோய் பெறும் தடையாக இருந்தது. உயர்த்தியாகிய அல்லாஹ் இதனை இவ்வாறு விளக்கிக் கூறுகிறான்.

سَأَصْرِفُ عَنْ آَيَاتِيَ الَّذِينَ يَتَكَبَّرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ

நியாயமின்றி, பூமியில் கர்வம் கொண்டு இருப்போரை, என்னுடைய அத்தாட்சிகளை (விளங்கிக் கொள்வதை) விட்டும் திருப்பி வைத்து விடுவேன். சூறா அல் அஃராப் 7;146.

அகம்பாவம் என்பது சத்தியத்தை மறுக்கும். ஏனைய படைப்பினங்களை கேவலத்துடன் நோக்கும். உண்மையை பற்றிய சாட்சிகளும், ஆதாரங்களும் விளங்கிய பின்பும், அதனை எற்றுக் கொள்ளவும், அதற்கு கீழ்படிந்து வாழவும் அனைகரை தடுக்கும். அல்லாஹ் இவ்வாறு எமக்கு அறிவிக்கிறான்.

وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنَتْهَا أَنْفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ

அவர்களுடைய இதயங்கள் அதனை (உண்மையென) உறுதி கொண்ட நிலையில் அநியாயமாகவும், அகம்பாவத்தாலும் அதனை அவர்கள் மறுத்தார்கள். சூறா அந் நம்ல் 27;14.

பிழையற்ற, விவேகத்துக்கு ஏற்ற தெளிவான அத்தாட்சிகளையும், காதில் விழும் அத்தாட்சி களையும் ஏற்றுக் கொள்ள மறுப்பதன் காரணமாக இறை நம்பிக்கை உள்ளத்தில் ஏற்படுவதற்கு பெரும் தடைகள் ஏற்படுவதற்கு இன்னுமொரு காரணமாக அமைகின்றது. சகலதையும் அறிந்த அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ

எவர் (ஒருவர்) அர் ரஹ்மானுடைய நல்லுபதேசத்தை விட்டும் புறக்கணித்து விடுகிறாரோ, அவருக்கு நாம் ஒரு ஷைத்தானை (நண்பனாக) சாட்டி விடுவோம். அவன் அவருக்கு இணை பிரியாத தோழனாகி விடுகிறான். நிச்சயமாக, (ஷைத்தானாகிய) அவர்கள் அவர் களை (அல்லாஹ்வின்) நேரான பாதையிலிருந்து தடுத்தும் விடுகின்றனர். மேலும் நிச்சயமாக தாங்கள் நேரான பாதையில் இருப்பவர்கள் எனவும் அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். சூறா அல் சுஹ்ருப் 43; 36-37.

அல்லாஹ் மேலும் இவ்வாறு கூறுகிறான்.

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ

(அவர் உபதேசித்ததை) நாங்கள் செவியுற்றோ, அல்லது (அவைகளை) நாங்கள் விளங்கியோ இருந்திருந்தால் நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம். என்று அவர்கள் கூறுவார்கள். சூரா அல் முல்க் 67;11.

இப்படிப்பட்ட கூட்டத்தினர் நபிமார்கள் கொண்டு செய்திகளுக்கு செவிமடுப்பதன் மூலம் பயன் பெறவோ, பகுத்தறிவுடன் அவற்றைப் பற்றி சிந்திக்கவோ எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அவற்றை ஏற்றுக் கொள்ளவுமில்லை. சத்தியத்தின் பக்கம் வழிகாட்டக் கூடிய சுயமான விவேகமும் அவர்களுக்கு இருக்கவில்லை. வெறுமையான சிந்தனைகளும், போலியான தோற்றமும் மாத்திரமே அவர்களிடம் காணப்பட்டன. அவற்றை சரியென அவர்கள் கற்பனை செய்தார்கள். ஆனால் அவை அவர்களுடைய அறிவீனத்தை தான் சுட்டிக் காட்டுகிறது. உண்மையின் பக்கம் அவர்கள் செல்வதை தடுத்து, தாமும் வழிகேட்டில் சிக்கித் தவிக்கும் தமது தலைவர்களை நரக நெருப்புக்கு அழைத்துச் செல்லப்படும் வரை அவர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள்.

உண்மை தெளிவாக புரிந்த பின்னும் அதனை நிராகரித்த அவர்களின் செயல், அதனை பின் பற்றுவதற்கு பெரும் தடையாக அமைந்தது. உண்மையை அறிந்துக் கொண்ட பின்னும் அதனை ஏற்றுக் கொள்ள உள்ளம் மறுப்பதும், நன்மையான காரியங்களை பாபமாகவும், பாபமான காரியங்களை நன்மையாக காண்பதும், ஒரு அடியான் இறைவனின் கடும் தண்டனைக்கு ஆளாகும் பயங்கரமான நிலையை உருவாக்கும். அதனை பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ

பின்னர் (நேர் வழியிலிருந்து) அவர்கள் சறுகிய பொழுது அல்லாஹ்வும் அவர்களுடைய இதயங்களை (நேர் வழியிலிருந்து) சறுகச் செய்து விட்டான். சூறா அஸ் ஸஃப் 61;5

இந்த பரிதாபமான நிலை பற்றி அல்லாஹ் மேலும் இவ்வாறு கூறுகிறான்.

وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ

மேலும், முதல் தடவை அவர்கள் இவ்வேதத்தை விசுவாசிக்காது இருந்த பிரகாரமே நாம் அவர்களுடைய இதயங்களையும், பார்வை களையும் புரட்டி விடுவோம். அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிந்து திரியுமாறு விட்டு விடுவோம். சூறா அல் அனாம் 6;110.

ஒவ்வொருவரும் புரியும் செயல்களுக்கு ஏற்ப அல்லாஹ் பலன் கொடுப்பது தான் இதற்கு காரணமாகும். அவர்களை பற்றி குறிப்பிட்ட பிரகாரமே அவர்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.

உயர்த்தியாகிய அல்லாஹ் இவ்வாறு சாட்சி கூறுகிறான்.

إِنَّهُمُ اتَّخَذُوا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ اللَّهِ

நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி, ஷைத்தான்களையே (தங்கள்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்கள். மேலும், தாங்கள் நிச்சயமாக நேர் வழிபெற்றவர்கள் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சூறா அல் அஃராப் 7;30.

சுகபோகமான வாழ்க்கையில் மூழ்கி இருப்பதும், வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிப்பதற்காக செல்வத்தை வீண் விரயம் செய்வதும் இறை விசுவாசம் ஏற்படுவதற்கு பெரும் தடைகளாக அமைந்துள்ள காரணங்களாகும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மனிதன் தனது இச்சைகளின் பின்னால் துரத்திக் கொண்டி ருப்பான். கீழ்தரமான இச்சைகளுக்கு அவன் அடிமையாவான். இப்படிப் பட்ட மனிதனை பற்றி சகலமும் அறிந்த அல்லாஹ் இவ்வாறு கூறிகிறான்.

بَلْ مَتَّعْنَا هَؤُلَاءِ وَآبَاءَهُمْ حَتَّى طَالَ عَلَيْهِمُ الْعُمُرُ

எனினும், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் இவர்களின் ஆயுட்காலம் நீண்ட தாக ஆகும் வரை சுகமனுபவிக்கச் செய்தோம். சூறா அல் அன்பியா 21;44

إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُتْرَفِينَ

நிச்சயமாக இவர்கள் இதற்கு முன்னர் பெரும் சுகபோக வாழ்வுடைய வர்களாக இருந்தனர். சூறா அல் வாகிஆ 56;45

அவர்கள் அனுபவிக்கும் சுகபோகத்தை கட்டுப் படுத்தி, பயன் அளிக்கக் கூடிய வகையில், ஒரு எல்லைக்குள் அவற்றை குறைத்து, அவர்களுக்கு தீங்கு ஏற்படாது பாதுகாப்பு அளிக்கும் மார்க்கம் அவர்களிடம் கொண்டு வரப் பட்ட போது, தமது சடங்குகளையும் சம்பிரதாயங் களையும் தடுக்கும் சட்டமாக புதிதாக வந்த மார்க்கத்தை அவர்கள் கருதினார்கள். தவறான ஆசா பாசங்களுக்கு அடிமையான மனிதன், எந்த வழியிலாவது தனது இச்சைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வான். அல்லாஹ்வின் மீது விசுவாசம் வைப்பதை கடமையாக்கி, தனக்கு பாக்கியம் புரிந்த தனது இறைவனுக்கு நன்றியுள்ளவனாக மாறி, தனது இச்சைகளில் மூழ்காது வாழ வழி காட்டும் மார்க்கம் அவர்களிடம் பொண்டு வரப் பட்டபோது, அவர்கள் புறமுதுகிட்டு வெருண்டு ஓடினார்கள்.

அது போன்று ரசூல்மார்களையும், அவர்களை பின்பற்றிய வர்களையும் கேவலமான வர்கள் எனவும், குறை உள்ளவர்களாகவும் கருதிய பொய்யர்கள், அந்த புனிதர்கள் மீது வசை மொழி பாடியதும் உண்மையான மார்க்கத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள தடையாக அமைந்த இன்னுமொரு காரணமாகும். நூஹ் நபி (அலை) அவர்களின் மக்கள் அவரை நோக்கி இவ்வாறு கூறியதாக குர்ஆன் அறிவிக்கிறது.

قَالُوا أَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ

அதற்கவர்கள், (எங்களில் தரத்தால்) மிகத் தாழ்வானவர்கள் உம்மை பின்பற்றி இருக்கின்ற நிலையில் உம்மை நாங்கள் விசுவாசிப்போமா? என்று கூறினார்கள். சூறா அஷ்ஷுஅரா 26;111

وَمَا نَرَاكَ اتَّبَعَكَ إِلَّا الَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِيَ الرَّأْيِ وَمَا نَرَى لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ بَلْ نَظُنُّكُمْ كَاذِبِينَ

மேலும் எங்களில் ஆழ்ந்து சிந்திக்காத இழிவானவர்களை தவிர (வேறெவரும்) உம்மை பின்பற்றி நடப்பதாக நாங்கள் காணவில்லை. உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் காணவில்லை. சூறா ஹூத் 11;27.

அவர்களது உள்ளத்தில் குடிகொண்டிருந்த அகம்பாவமே இவ்வாறு நடைபெறுவதற்கு காரணமாக அமைந்தது. தம்மை பற்றி கர்வமும், அகம்பாவமும் கொண்டிருக்கும் போது ஏனையவர் அனைவரும் தம்மை விட தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விடுகிறது. இதன் காரணமாக தம்மை தேடி வந்த உண்மையை ஏற்றுக் கொள்ள உள்ளம் மறுக்கிறது. ஆனால், புகழ் வாய்ந்த, அதிகார பலம் உள்ள ஒருவரிடம் இருந்து வரும் கட்டளையை, எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக இம்மனிதர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமு மில்லை. அதனை பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

كَذَلِكَ حَقَّتْ كَلِمَةُ رَبِّكَ عَلَى الَّذِينَ فَسَقُوا أَنَّهُمْ لَا يُؤْمِنُونَ

இவ்வாறே பாவம் செய்பவர்கள் மீது நிச்சயமாக அவர்கள் விசுவாசம் கொள்ள மாட்டார்கள் என்ற உமது இரட்சகனின் வாக்கு உண்மையாகி விட்டது. 10;33

பாவம் என்பது அல்லாஹ்வுக்கு அடிபணியாது ஷெய்தானுக்கு கீழ் படிந்து நடப்பதாகும். மேல் குறிப்பிட்ட விபரங்களுக்கு ஏற்ப உள்ளங்கள் இருப்பின், அது அறிவின் மூலமோ அல்லது செய்கையின் மூலமோ உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு பெரும் தடையாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் எவரையும் அல்லாஹ் பரிசுத்தப் படுத்த மாட்டான். அதற்கு மாற்றமாக பாபம் செய்த அவனது ஆத்மாவின் மீது மேலும் பாபங்களை சுமத்துவான். இதன்படி பொறுப்பின்மை, அறிவீனம் ஆகியவற்றின் காரணமாக எவ்வித பயனுமளிக்காத காரியங்களில் அவன் ஈடுபடுவான். அவனது ஒவ்வொரு செயலும் அவனை நஷ்டத்துக்கும் பாவத்துக்கும் இட்டுச் செல்லும். அவனது பயனற்ற செய்கைகள் அவனை பாவங்களுக்கு வழி காட்டும். உண்மையை ஏற்றுக் கொள்வதை விட்டும் அவனை தடுக்கும். காரணம், எந்த நொடியில் அல்லாஹ்வை வணங்குவதையும், அவனுக்கு அடிபணிவதையும் விட்டு மனிதனின் உள்ளம் விழகியதோ, அக்கணமே தீய சக்திகள் அனைத்துக்கும் அவனை அறியாமலேயே அவனது உள்ளம் அடிபணிய நேரிடுகிறது. இந்த பரிதாப நிலையை பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّـهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَانٍ مَّرِيدٍ ﴿٣﴾ كُتِبَ عَلَيْهِ أَنَّهُ مَن تَوَلَّاهُ فَأَنَّهُ يُضِلُّهُ وَيَهْدِيهِ إِلَىٰ عَذَابِ السَّعِيرِ ﴿٤﴾

மேலும், அறிவின்றி அல்லாஹ்வுடைய விஷயத்தில் தர்க்கம் செய்கின்றவரும், மனமுரண் டான ஒவ்வொரு ஷைத்தானை பின்பற்றுகிறவரும் மனிதர்களி (சிலர்) உள்ளனர்.

நிச்சயமாக எவன் (ஷைத்தானாகிய) அவனை நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, நிச்சயமாக (ஷைத்தானாகிய) அவன் இவனை வழிகெடுத்து, நரக வேனையின் பக்கமே செலுத்தி விடுவான் என்று அவன் மீது விதியாக்கப் பட்டு விட்டது. சூறா ஹஜ் 22;3,4

கல்வியையும், உண்மையை பற்றிய அறிவையும் குறுகிய வரம்புக்குள் கட்டுப் படுத்தி வைப்பதன் காரணமாக சத்தியத்தையும், இறை விசுவாசத்தையும் பின்பற்றுவதற்கு எதிராக மேலும் ஒரு தடை ஏற்படுகிறது. உலகலாவிய விஷங்களில் ஈடுபாடுள்ள நாஸ்திகர்களின் செயல் முறை இதுவாகும். அவர்கள் தம்மால் விளங்கிக் கொள்ளக் கூடிய தத்துவ ஞானத்தின் வட்டத்துக் குள் மாத்திரம் தமது அறிவை கட்டுப் படுத்திக் கொள்வார்கள். தான் புரிந்துக் கொண்ட தத்துவ ஞானத்தையும் மீறிய, அதனை விட தெளிவான சான்றுகளும், வழிகளும் உலகில் இருப்பினும், அவற்றை தமது ஐம்புலன்கள் மூலம் உணர்ந்துக் கொள்ள மறுப்பார்கள். மனிதனிடம் இயல்பாக உள்ள விவேகத்தை கொண்டு அதனை பற்றி துருவி ஆராய மாட்டார்கள். இவ்வாறு ஆராய்வது குழப்பத்தை ஏற்படுத்தும் அல்லது பிரச்சினை உண்டாக்கும் என கருதினார்கள். இதன் காரணத்தால் எராளமானவர்கள் வழிகேட்டுக்கு ஆளானார்கள். இப்படிப் பட்ட பிழைகளின் காரணமாக அனேகம் பேர் அல்லாஹ்வை நிராகரித்த மக்களாக மாறினார்கள். அல்லாஹ்வின் நபிமார்களையும், அவர்களை உறுதிப் படுத்த அவர்கள் கொண்டு வந்த பல்வேறு ஆதாரங்களை யும், சான்றுகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். தமது புறக் கண்களுக்குத் மாத்திரம் தெரியக் கூடிய சான்றுகளையும், தமது நிலையை உறுதிப்படுத்துவதற்கு தமக்கு தேவையான விபரங்களையும் ஏற்று அவற்றின் மீது மாத்திரம் நிலையாக நின்றார்கள். எல்லா வகையான சான்றுகளும், ஆதாரங்களும் அவற்றை படைத்த வனையும், அவனது ஏகத்துவத்தை பற்றியும், தனது படைப்புகளிலிருந்து வேறுபட்டு நிற்கும் அவனது ஏற்பாடுகளையும் பற்றி உறுதி கூறுவது இறை ஞானத்தின் உண்மை நிலையாகும். எப்படிப் பட்ட வாதத்தாலும், எப்படிப் பட்ட முறையிலும் இந்த உண்மைக்கு சமமாக நிற்கவோ, நெருங்கவோ முடியாது. காதால் கேட்கும் சான்றுகளும், விவேகத்தின் மூலம் அறியக் கூடிய சான்றுகளும், கண்களால் பார்க்கக் கூடிய சான்று களும், இயற்கை காட்டும் சான்றுகளும் இதற்கு சாட்சி பகர்கின்றன. மனிதனுக்குள்ளும், ஆகாயத்தி லும் அல்லாஹ்வை பற்றிய சாட்சிகளும், ஆதாரங்க ளும் தெளிவாக உள்ளன. நிச்சயமாக அவன் இருப்பது உண்மை, அவனால் நபிமார்கள் அனுப்பப் பட்டனர் என்பதும் உண்மை, அவன் மக்களின் கிரியைகளின் படி கொடுக்கும் பிரதி பலன்களும் உண்மை. அவன் அறிவித்த சகல விபரங்களும் உண்மையானவை. அவனது மார்க்கம் உண்மை. இந்த உண்மைகளுக்கு பிறகு வேறு என்ன இருக்க முடியும்? ஆனால் நாஸ்திக வாதிகளின் பொறுப்பற்ற தன்மையும், அவர்களது ஆணவமும், பல்வேறு வழிகளில் அவர்களுக்கு நன்மை பயக்கக் கூடிய சத்தியத்தையும் சூழ்ந்துக் கொண்டு விட்டது. இப்படிப் பட்ட லெளகிக வாதிகள் நிச்சயமாக பிழையான வழியிலும், பார்வை இழந்து அந்தகர்களாக இருப்பதையும் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட இறை விசுவாசி, தனது விவேகத்தின் ஒளியில் அறிந்துக் கொள்கிறான். நேரான வழியை எமக்குக் காட்டி நல்லருள் புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தாகும்.

லௌகிகவாதிகளையும், அவர்களின் கூற்றை நம்பி ஏமாந்து, அவர்களை பின்பற்றும் கூட்டத்தின் பிடிவாதம் இறை நம்பிக்கையையும், சத்தியத்தை ஏற்றுக் கொள்ள தடையாக இருந்த இன்னுமொரு முக்கிய காரணமாகும். உண்மையில் உலகலாவிய பொருட்கள், இயற்கை ஆகியன பற்றிய கல்வியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள இந்த சகாப்தம் வரை மனிதர் அனைவருக்கும் நேர் வழி பெறும் வாய்ப்பு கிட்டவில்லை, அதனால் விவேகத்துக்கு பொருத்தமான எந்த காரியத்தையும் செய்யவில்லை, அதன் பின்பே மனிதன் நேர் வழியை பெற்றான் என்பது அவர்களது சித்தாந்தம். இது அவர்களுக்கு மேலும் ஊக்கத்தை கொடுத்தது. இதற்கு சாதகமாக எல்லா வித விதண்டா வாதமும் முன் வைத்தனர். சத்தியத்தை புறக்கணிக்கும் அகம்பாவம் இவர்களிடம் அதிகமாகவே இருந்தது. மூடி மறைக்க முடியாத அளவுக்கு, அறிவில்லா மக்களுக்கு மமதையாகவும் மாறியது. இப்படிப் பட்ட கொடுமையான சிந்தனையால் அதில் எவ்வகையான மாற்றமும் எற்பட வில்லை. லௌகிக பொருட்களும், தொழிற்சாலைகளும் அவற்றின் பொருள் உற்பத்தியும், இயற்கையின் வளர்ச்சியும் அதன் முன்னேற்றமும் இறுதி கால கட்டத்தில் பூரணமடைந்தது என்று அவர்கள் கூறிய போது அனைவரும் அவர்கள் சத்தியவான் கள் என்று சாட்சி கூறும் நிலையில் இருந்தார்கள்.

இப்படிப் பட்ட மக்களை சரிவர அடையாளம் கண்டு, அவர்களுடன் மிவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதன் மூலம் சரியான அறிவு, நித்திய உண்மை, அழகிய நற்பண்புகள் ஆகியவைகளை பெற்று அவற்றின் பக்கம் சார்ந்து நிற்கும் வாய்ப்பு எமக்கு ஏற்படுகிறது. இப்படிப் பட்ட உயர்ந்த அறிவை பெற்ற கூட்டத்தினரின் தீர்ப்பு சிறந்த தீர்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகையால், சரியான கல்வி ஞானம், விவேகம் ஆகியவற்றை அடையாளம் காண வேண்டும் என்றால் அவற்றின் பரிபூரணத் தன்மையில் உள்ள குறைகள், அதன் மூலம் ஏற்படும் விளைவுகள், அவற்றுக்கான சான்றுகள், அவற்றின் மூலம் எடுக்கப் படும் முடிவுகள் ஆகியவற்றை நன்கு அறிந்துக் கொள்ள வேண்டும். இவற்றின் படி, மார்க்கத்தின் பரிபூர்ண தன்மையையும், அதன் உயர்ந்த அந்தஸ்தையும் அறிய வேண்டு மென்றால், எமது தூதர் முஹம்மத் (ஸல்ல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்கள் கொண்டு வந்து, முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக கருதும் தத்துவங்கள், ஒழுக்கம், மார்க்கம், உலகலாவிய விஷயங்கள், அன்பு, பாசம், அறிவு போன்றவை களை வாழ்வின் அடிப்படையாக கொள்ள வேண்டும். இப்படியான அடிப்படையில் ஆன்மீகம், உலக வாழ்வு போன்ற எல்லா விஷயங்களிலும் வெற்றியும், நன்மையான முடிவும் அவர்களை தேடி வந்தன. சகல சமூகத்தினரும் அவர்களுக்கு அடி பணிந்தார்கள். அதே போன்று இவ்வுலகத்தில் முழுமையையும், உயர் பதவி களையும் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் பெற்ற உயர்ந்த அந்தஸ்தை வேறு எவராலும் நெறுங்க முடியவில்லை. யாரேனும் அவ்வாறு நெறுங்க முயற்சித்தால், அவர்களுக்கும் அதே பாதையில் பயணம் செய்ய நேரிட்டது. இறுதியாக, சுதந்திரத்தை தேடிய லௌகிகவாதிகளின் தன்மைகள், அவற்றின் மூலம் பெற்ற விளைவுகள் என்ன என்பதை சற்று கவணிக்க வேண்டும். அவர்கள் தமது இச்சைகளை அடைந்து கொள்ளும் விஷயத்தில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத, முழுமையான சுதந்திரத்தை அனுபவித்தார்கள். இதன் காரணமாக தாம் மிகவும் தாழ்ந்த நிலையை அடையும் வரை, அவர்கள் அதிலேயே தங்கி இருக்கவில்லை.லௌகிகவாதத்தில் இருக்கும் சில சக்திகள் கவர்ந்துக் கொள்ள வில்லையெனில், இது நாசத்தின் விளைவை கொண்டு வரக் கூடிய சுதந்திரம் என அவர்கள் சிந்தித்து இருப்பர்கள். அந் நிலை பற்றி அல்லாஹ் இவ்வாறு விவரிக்கிறான்.

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ

மேலும் (நபியே!) அநியாயக்காரர்கள் செய்கின்றவைகளைப் பற்றி அல்லாஹ்வை பாராமுகமானவனாக இருப்பதாக நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம். சூறா 14 ; 42

அதே போன்று மார்க்கம் கூறும் நற் பண்புகள் காணப்படா விட்டாலும் சில உயர்ந்த மனிதர்களிடம் அவற்றின் அடையாளங்களை காணக் கூடியதாக இருந்தன. இதன் மூலம் அவர்கள் இவ்வுலக வாழ்வை சீர்படுத்திக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் உயர்வாக கருதும் லௌகிக வாதத்துக்கு இதனால் எவ்வித மதிப்பும் கிட்ட வில்லை. ஆகையால், யார் மார்க்கத்தை பறிகொடுத்து விட்டானோ, அவன் எதனையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வாயப்பையும் இழந்து நிற்பான். அவன் இறுதியில் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி, இன்பம் ஆகியவற்றை இழந்து நிற்பான். இந்த உண்மைக்கு சாட்சி கூறுபவனை விட, அதனை கூர்ந்து அவதானிப்பவன் உறுதியான உள்ளம் படைத்தவன். இன்றைய லௌகிவாதத்தில் மூழ்கிக் கிடக்கும் நவீன மனிதனை விட, அல்லாஹ்வின் ஆட்சி, அதிகாரம், அவ்வாஹ்விட மிருந்து ஏற்படும் விளைவுகள் ஆகிய இஸ்லாத்தின் அடிப்படை உண்மைகளில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது போன்ற ஷிர்க்கான காரியங்களில் ஈடுபட்ட 1400 வருடங்களுக்கு முன் மக்கா வாழ் அரபிகள் உயர்ந்தவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமு மில்லை. அதன் பின் அல்லாஹ்விடம் இருந்து தூதையும், முழுமையான நேர்வழியையும், எடுத்துக் கொண்டு ரசூல்மார்கள் வந்தார்கள் என்றும், அதன் மூலம் பிரகாசமான, சரியான அறிவு, சகலவிதமான நன்மைகள் மக்களுக்கு கிடைத்தன என்றும் அந்த பழக்காலத்து அரபு மக்கள் அறிந்துக் கொண்டார்கள். சரியாக சிந்திக்க கூடிய மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார்கள். இறுதியில் அல்லாஹ் விடம் இருந்தே சகல தேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் அறிந்துக் கொண்டார்கள். அதன் காரணமாக ரசூல்மார்கள் கொண்டு வந்த சத்தியத்துக்கு அடி பணிந்தார்கள். ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் சேர்த்துக் கொண்டாலும், ரசூல்மார்கள் கொண்டு வந்த மிகவும் அவசியமான சத்தியத்துக்கு நெருங்கவும் முடியாது. இந்த உண்மையின் அடிப்படையில் தான் இறை வாக்குகள் இறக்கப் பட்டன. அவ்வாறு இல்லையெனில், தெளிவான ஏமாற்றத்துக்கும், அந்தகார இருட்டுக்கும், நிந்தர குழப்பத்துக்கும், பெரும் குருட்டுத் தன்மைக்கும், நிரந்தரமான அழிவுக்கும் ஆளாக நேரிடும் என்று உண்மையான இறை நேசன் விசுவாசம் கொள்வான். இந்த உண்மையை அல்லாஹ் இவ்வாறு விளக்கி கூறுகிறான்.

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ

அல்லாஹ் விசுவாசிகளின் மீது – அவர்களில் ஒரு தூதரை, (அதுவும்) அவர்களிடமிருந்தே அவன் அனுப்பி வைத்த சமயத்தில், திட்டமாக பேரருள் செய்து விட்டான். அவர், அவர்களுக்கு அவனது வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை (பாவத்திலிருந்து) பரிசுத்தமாக்கியும் வைக்கிறார். அவர்களுக்கு வேதத்தையும், (குர்ஆனையும்) ஞானத்தையும், (ஸுன்னத்தையும்) கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். சூரா ஆலு இம்ரான் 3;164.

ரசூல்மார்கள் கொண்டு வந்த விஷயங்களில் மூலம் இன்றி சரியான வழிகாட்டும் அறிவை மக்கள்பெற வில்லை. அப்படிப்பட்ட அறிவு வளர்ச்சி பெறவும் இல்லை. அதே நேரத்தில் சமூகத்தில் அனேகம் பேர் அறியாமையை வளர்க்கும் பொய்யான வார்த்தைகளால் ஏமாற்றப் பட்டு வழி தவறி போய் கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக எவ்வித அறிவோ, சாட்சிகளோ இல்லாமல் இவர்கள் உண்மையை புறக்கணித்த னர். மேல் கூறிய காரணத்தினால் மார்க்க அறிவையும், அதில் மூலம் பெறக்கூடிய நன்மைகளையும் குறுகிய சிந்தனைகள் என்று குறை கூறி, விஞ்ஞானம் மற்றும் தமக்கு லாபம் கொண்டு வரும் விஷயங்களை, தமது கலாச்சாரம் என்றும் நவீன சிந்னைகள் என்றும் பறை சாட்டுகின்றனர். ஒவ்வொரு மனிதனுக்கும் தெளிவான பகுத்தறிவு உண்டு. எல்லா கலாச்சாரங்களும், நவீன சிந்தனைகளும் மார்க்கத்தில் நேர்வழிக்கு இட்டுச் செல்லும் அடிப்படை விஷயங்களில் மனிதனுக்கு வழி காட்ட முடியாது. இதற்கு காரணம், நவீன விஷயங்கள் கெட்டவை என்பது மாத்திரமின்றி, அவை துன்பம் நிறைந்ததும், பெறுமையின்மையும், அதே நேரத்தில் குறைகளை கொண்டதுமாகும். எவரொருவர் இறை மார்க்கத்தை தாழ்வாக கருதுகிறாரோ, அந்த மனிதர் நல்லொழுங்களை நாசமாக்கும் சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் லௌகிகவாதிகளின் வார்த்தைகள் மீது நம்பிக்கை கொண்டு, மனிதனுக்கு துன்பங்களை கொண்டு வரும் விஷயங்களை ஏற்று, நன்மை விளைவிக்கும் விஷயங்களை விட்டும் நீங்குவார்கள். சரியான வாழ்க்கை முறை என்பது நபிமார்கள் கொண்டு வந்த வழி காட்டலும், அவர்களின் உபதேசங்களுக்கும் ஏற்ற முறையில் எமது சிந்தனைகளை மாற்றிக் கொள்வதே. பொது நன்மைகளுக்காக, பயனளிக்கக் கூடிய செயல்கள், போற்றப் படவேண்டிய குணங்கள் என்பவற்றை பழகிக் கொள்வது அவசியம். சரியான அறிவின் மூலம் நன்மைகளும், சீரான வழி முறைகளும், காரிய சித்தியும் பெற வழி வகுக்க முடியும்.

இதற்கு காரணம், ஈருலகிலும் வெற்றி பெறும் படியும், இவ்விரண்டிலும் பாக்கியங்களை அதிகமாக பெற்று பூரணப்படுத்திக் கொள்ளும் படியும் இஸ்லாம் அடியார்களுக்கு ஆணை யிடுகிறது. அதன் பக்கம் ஊக்கம் கொடுக்கிறது. எவரொருவர் சகல விபரங்களையும் உள்ளடக்கிய அல் குர்ஆனும், நபியவர்களின் சுன்னாஹ்வும் குறிப்பிடும் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி சிந்திக்கத் தொடங்குகிறாரோ, அவர் அந்த மார்க்க அறிவுரை களையும், நேர் வழிகளையும் தவிர மனிதனுக்கு வேறு நன்மை பயக்கும் வழி கிடையாது என்பதை புரிந்துக் கொள்வார். அதன் படி தனது சிந்தனை களையும், பண்புகளையும், செயல்களையும் நன்மையின் பக்கம் மாற்றிக் கொள்வார். இவ்வுலக வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை சரிப்படுத்திக் கொள்வார். நன்மையான விஷயங்கள், சமூக தேவைகள், தனிப்பட்ட தேவைகள் போன்ற எல்லா விஷங்களிலும் மற்றவர்களுக்கு வழி காட்டியாக திகழ்வார். நேர்வழி காட்டக் கூடியவன் அல்லாஹ் ஒருவனே. முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைகிவஸல்லம்) மீது அல்லாஹவின் சந்தியும் சமாதானமும் எற்படுதாக.