இமாம் இப்னு ரஜப் அல்ஹன்பலியின் ஜாமிஉல் உலூமி வல்ஹிகம் நூலின் சுருக்கமாகிய இது மிகவும் பயனுள்ள நூலாகும். இமாம் நவவீயின் நாற்பது நபிமொழித் தொகுப்புக்கு விரிவுரை எழுதிய இமாமவர்கள் அதனுடன் எட்டு நபிமொழிகளை அதிகரித்து ஐம்பதாகப் பூர்த்தி செய்துள்ளார்கள். நூலை சுருக்கியவர் விரிவுரையில் இடம்பெறும் நபிமொழிகளின் மூலநூல்களையும் அவற்றின் தரம் பற்றிய அறிஞர்களின் கூற்றுக்களையும் பதிந்துள்ளார். நூலின் பல இடங்களில் தனது கருத்துரைகளையும் கூறியுள்ளார்.
இஸ்லாமிய அழைப்புப் பணயில் மிக பயனுள்ள நல்ல நூல். கிறிஸ்த்துவம் , நாத்திகம் மற்றும் கம்யூனிசம் குறித்து தெளிவான பதில்களை உள்ளடக்கிய நூல். பல ஆயிரம் மக்கள் இஸ்லாமை ஏற்பதற்கு காரணமாக இருந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படைகளை விவரிப்பதில் மிகத் துல்லியமான ஒரு நூல். இஸ்லாம் பற்றி கண்டிப்பாக அறிய வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்நூல் விவரிக்கிறது. கண்டிப்பாக ஒவ்வொருவரும் இந்நூலை வாசிக்க வேண்டும்.
Follow us: