"மன்னித்தல் அல்லாஹ் தனது நபிக்கும் அடியார்களுக்கும் ஏவிய நற்பண்புகளில் ஒன்று. இது முன்னைய நபிமார்களினதும் பண்புகளில் ஒன்று. மன்னித்தலின் சிறப்பு பற்றி இடம்பெற்றுள்ள அல்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும்"
"முஸ்லிம்களுக்கு மத்தியில் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளல், அவர்களின் துயர் துடைத்தல் இறையச்சம், நற்கருமங்களில் பரஸ்பரம் உதவி செய்வது பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் முஸ்லிம்களுக்கு உதவிபுரிய பல வழிகள் உள்ளன. பணத்தால், உடலால், நல்ல சிந்தனை, கருத்துக்களால்....."
"சத்தியத்தையும், பொறுமையையும் கொண்டு ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளல். முஸ்லிம்களின் நலன்களில் கரிசணை எடுப்பதன் முக்கியத்துவம். சுயநலத்தை இஸ்லாம் எச்சரிக்கின்றது. பொதுநலத்தை இஸ்லாம் தூண்டும் விதம் ஓர் அடியான் தனது சகோதர முஸ்லிமுக்கு உதவும் போது அல்லாஹ் அவனுக்கு உதவுகின்றான். பொதுநலத்தின் சில முறைகள். பொதுப்பணிகள் செய்யும் போது கவனிக்க வேண்டியவை"
"ரோசம் என்றால் என்ன? ரோசம் இஸ்லாத்தின் நற்குணங்களில் ஒன்று அது அல்லாஹ்வின் பண்பாகவும், விசுவாசிகளின் குணமாகவும் உள்ளது. மார்க்கத்திற்காக ரோசப்படுதல், மானத்திற்காக ரோசப்படுதல் விட்டுக்கொடுப்பு, சகவாழ்வு என்ற பெயரில் தவறுகளைக் கண்டு மௌனித்தல் மாற்று மத நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடுதல் இஸ்லாமியத் தனித்துவத்தை இழக்கும் இன்றைய அவல நிலை"
அடுத்த வீட்டாருடன் வாழும் முறை பற்றி இஸ்லாம் கூறும் வழிமுறைகள். அண்டை வீட்டாரின் உரிமைகள் என்ன? அவர்களுக்கு எமது கடமை என்ன? பற்றிய விளக்கம். கவணக் குறைவால் அல்லது பெருமையில் தனித்து வாழும் மக்களும் இன்று உள்ளனர். இதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றிய படிப்பினைகள் உள்ளன.
ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிடைத்தது கனீமத் (இஃதனிம்) போன்ற பயன்பாடாக இருக்க வேண்டுமென ஹதீஸ் கூறுகின்றது. குறிப்பாக இளமைப் பருவத்தில் பத்தினித் தனத்துடன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு அல் -குர்ஆன் இப்றாஹீம்(அலை), யூசுப்(அலை) போன்றவர்களை முன்னுதாரணப்படுத்திருக்கின்றது. இன்று பாவங்கள் நடைபெறாமல் இருக்க சந்தர்ப்பங்கள் கிடைக்காமலிருப்பதே.இவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தும் தக்வாவின் காரணமாக அதனை புறமொதுக்கியவர்கள். தக்வாவை விட்ட அறிவு நலவைக் கொண்டு தரமாட்டாது என இங்கு கூறப்படுகின்றது.