1. வஸீலா-ஓர் விளக்கம் 2. வஸீலாவின் அடிப்படைகள் 3. வஸீலாவின் வகைகள் 4. அனுமதியற்ற வஸீலாவும், அதன் வகைகளும் 5.வஸீலாவின் கருத்தை மக்கள் சரியாக புரியாமல் போனமைக்குக் காரணங்கள்
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர், எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154) அவ்லியாக்கள் மூலம் உதவி தேடலாம் அவர்கள் கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தவறாகும். உயிர் தியாகத்தை சிறப்பிக்க இந்த வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர அவ்லியாக்கள் மகான்களி டத்தில் உதவி தேடுவதற்கு ஆதாரம் காட்டக் கூடாது.
உயிருடன் இருக்கும் இறையச்சமுள்ள நன்னடத்தையுள்ள நல்லடியார் ஒருவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களை நீக்கிட அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கோருவது இஸ்லாத்தில் தடுக்கப்பட வில்லை.
நபியவர்களதும், இறை நேசர்களதும் பொருட்டை கொண்டு, அல்லது அவர்களின் கண்ணியத்தைக் கொண்டு, அல்லது அவர்களுடை (கப்று) மண்ணரை அதன் மாடம் முதலியவைகள் கொண்டு அல்லாஹ்விடம் நெருங்க வஸீலா தேடுவது தடுக்கப்பட்டுள்ளது,
எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை அஞ்சி அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நிபந்தனைகளின் படி அமல்கள் புரிய வேண்டும் நாம் சம்பாதித்த அமல்களை கொண்டே அல்லாஹ்விடம் வஸீலாவை –உதவியை – தேட வேண்டும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் மட்டுமே துஆ கேட்க கடமைப் பட்டிருக்கிறான். அல்லாஹ்வின் அழகிய பெயர்களை முன்மொழிந்து பிரார்த்தித்து வேண்டுதல்களை கேட்குமாறு கூறுகிறான். நபிமார்கள் கேட்ட பிரார்த்தனைகளிலும் இந்த அம்சங்கள் அல்லது தன்மைகள் மேலும் விபரிக்கப்பட் டுள்ளன.