1-ஷஹாதாக்களின் நிபந்தனைகள், ஷஹாதாவின் யதார்த்தமும் பொருளும், ஷஹாதாவுக்கு எதிரானவைகள், ஷஹாதாவின் நிறைவு நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்ளல் ஆகியவை பற்றிய விளக்கம். 2- ஜும்ஆ தொழுகை, அதன் விதிகள், நபில் தொழுகை, மற்றும் சகாத் பற்றிய பற்றிய விபரங்கள் இதில் அடங்கியுள்ளன. 3- ஸகாத்தின் ஏனைய விடயங்களும், ஹஜ்ஜின் முக்கிய விடயங்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
இஸ்லாத்தில் அனுஷ்டானங்கள் போலவே அதன் கொள்கையும், கோட்பாடும் மிகவும் முக்கிய மானவை. ஏனைய மதத்தை பின்பற்றும் ஒருவர் இன்னொரு மதம் சார்ந்த மதபீடங்களுக்குச் சென்று அங்கு சில வழிபாடுகளையும், காணிக்கைகளையும் சமர்ப்பித்து வருவதைத் தவறாகவோ அல்லது தங்களின் மதத்திற்கு விரோதமான செயலாகவோ காண்பதில்லை. அதனால் அவர்கள் வேற்று மத குருக்களின் காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கூட ஒரு புண்ணிய கருமமாக கருதுகின்றனர். இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை.
லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்பது மார்க்கத்தின் அத்திவாரமாகும். இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு மாபெரும் அந்தஸ்து உண்டு. இதுவே இஸ்லாத்தின் கடமைகளில் முதற்கடமையும் ஈமானின் கிளைகளில் மிக உயர்ந்ததுமாகும். எமது செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இக்கலிமாவை மொழிவதும், அதன்படி செயற்படுவதும் முக்கிய நிபந்தனைகளாகும்