1. வஸீலா-ஓர் விளக்கம் 2. வஸீலாவின் அடிப்படைகள் 3. வஸீலாவின் வகைகள் 4. அனுமதியற்ற வஸீலாவும், அதன் வகைகளும் 5.வஸீலாவின் கருத்தை மக்கள் சரியாக புரியாமல் போனமைக்குக் காரணங்கள்
வணக்கம் செய்யும் போது காலம், இடம் போன்றவற்றிலும் நபியவர்களைத் துயர வேண்டும். வணக்கங்களில் பித்அத்கள் இரு வகையில் ஏற்படும். ஒன்று, வணக்கத்துடன் அறவே தொடர்பில்லாத பித்அத்கள். மற்றது, பொதுவாக வந்துள்ள வணக்கங்களை மேற்கூறப்பட்ட ஆறு விடயங்களில் ஒன்றைக் கொண்டு ஆதாரமின்றி குறிப்பாக்குதல்.
வணக்கங்கள் ஏற்கப்படுவதற்கான நிபந்தனைகள், வணக்கத்திற்கான காரணம், அதன் வகை, எண்ணிக்கை, அதனைச் செய்யும் விதம் ஆகியவற்றில் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் ஒன்றிலாவது நபியவர்கள் காட்டித் தராத முறையில் குறிப்பாக்கினால் அது பித்அத்தாகி விடும்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர், எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் 2:154) அவ்லியாக்கள் மூலம் உதவி தேடலாம் அவர்கள் கப்றில் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தவறாகும். உயிர் தியாகத்தை சிறப்பிக்க இந்த வசனத்தை ஆதாரம் காட்ட வேண்டுமே தவிர அவ்லியாக்கள் மகான்களி டத்தில் உதவி தேடுவதற்கு ஆதாரம் காட்டக் கூடாது.
உயிருடன் இருக்கும் இறையச்சமுள்ள நன்னடத்தையுள்ள நல்லடியார் ஒருவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களை நீக்கிட அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கோருவது இஸ்லாத்தில் தடுக்கப்பட வில்லை.
அடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள் : இந்நூலானது அஷ்ஷேஹ் அப்துல்அஸீஸ் பின்மர்ஸூக்அத்தரீஃபீஅவர்கள் ஸிரியா மக்களுக்கு எழுதிய ஒரு மடலாகும் . இதில் ஒரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இறைநம்பிக்கை , இணைவைப்பு , இறைநிராகரிப்பு , தலைவர்களுக்குக் கட்டுப்படல் , நபித்தோழர்களின் சிறப்புக்கள் போன்ற இஸ்லாமிய நம்பிக்கையுடன் தொடர்புடைய பலதரப்பட்ட விடயங்களை நூலாசிரியர் விளக்கியுள்ளார் . அடிப்படை நம்பிக்கையுடன் தொடர்பான விடயங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளதால் , இது ஸிரியா மக்களுக்கு எழுதப்பட்டாலும் அனைத்து முஸ்லிம்களும் அவசியம் வாசிக்க வேண்டிய பொதுவான ஒரு மடலாகத்தான் இருக்கின்றது .
வர்த்தகம், விளையாட்டு, விவசாயம், களியாட்டம் தா தமது வாழ்கையாக இன்று மக்கள் கொண்டுள்ளார்கள். ஆனால் தவ்ஹீத், தக்வா, நல்லமல்கள் என்பன குர்ஆன் சுன்னத்திற்கு ஏற்ற முறையில் இருக்கும்போது அந்த வாழ்க்கை வணக்கமாக மாறும். தொழுகை, சகாத், நோன்பு, ஹஜ் என்பன நிறைவேற்றப்படவேண்டும் பெரும் பாவங்களிலிருந்து நீங்க வேண்டும்.
நபியவர்களதும், இறை நேசர்களதும் பொருட்டை கொண்டு, அல்லது அவர்களின் கண்ணியத்தைக் கொண்டு, அல்லது அவர்களுடை (கப்று) மண்ணரை அதன் மாடம் முதலியவைகள் கொண்டு அல்லாஹ்விடம் நெருங்க வஸீலா தேடுவது தடுக்கப்பட்டுள்ளது,
அனைத்து நல்லறங்களிலும் இரண்டு நிபந்தனைகள் கட்டாயம் பேணப் பட வேண்டும். அவைகளாவன; 1- 1. “அல்லாஹ்வுக்கு” என்ற தூய எண்ணம். 2- 2. நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறை பின்பற்றப்படல்.
(அல்லாஹ்வின்) நேசம் மகத்துவம் மிக்க ஒரு அந்தஸ்தாகும். அதை அடைவதற்காகவே ஸாலிஹான முன்னோர்கள் போட்டிபோட்டுக் கொண்டார்கள். நற்செயல்கள் புரிந்தார்கள், அனைத்தையும் துறந்து பாடுபட்டார்கள், (உயிர்) தியாகம் செய்தார்கள்.
எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை அஞ்சி அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படும் நிபந்தனைகளின் படி அமல்கள் புரிய வேண்டும் நாம் சம்பாதித்த அமல்களை கொண்டே அல்லாஹ்விடம் வஸீலாவை –உதவியை – தேட வேண்டும். ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் மட்டுமே துஆ கேட்க கடமைப் பட்டிருக்கிறான். அல்லாஹ்வின் அழகிய பெயர்களை முன்மொழிந்து பிரார்த்தித்து வேண்டுதல்களை கேட்குமாறு கூறுகிறான். நபிமார்கள் கேட்ட பிரார்த்தனைகளிலும் இந்த அம்சங்கள் அல்லது தன்மைகள் மேலும் விபரிக்கப்பட் டுள்ளன.
"உண்மை முஃமினின் பண்புகளில் ஒன்று உண்மையை ஊக்குவித்தும் பொய்யை எச்சரித்தும் வந்த இறை வசனங்கள், நபிமொழிகள் உண்மை சுவனத்திற்கான வழி, பொய் நரகிற்கான வழி அறியாமைக் காலத்தில் கூட உண்மை நல்ல பண்பாகப் பார்க்கப்பட்டது கொடுக்கல், வாங்கலில் உண்மையாக் கடைபிடித்தால் சொத்துக்களில் அபிவிருத்தி ஏற்படும்"
வஹீயைப் பின்பற்றுதல், வணக்கங்களின் அளவுகோல் நபிவழியே, பித்அத்கள் தோன்றக் காரணம், வழிகெட்ட இயக்கங்கள் தோன்றக் காரணம், மைய்யித் வீட்டில் நடக்கும் பித்அத்கள், கூட்டுதுஆ, முடி வெட்டுதல், மெல்லிய ஆடைகளை, கரண்டைக் காலுக்குக் கீழால் அணிதல், மியூஸிக் கேட்டல் போன்ற வற்றில் யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றல்
1- இறையச்சம் குறித்த சில குர்ஆன் வசனங்கள் இறையச்சத்தின் யதார்த்தம், இறையச்சமுள்ளவரின் அடையாளங்கள், இறையச்சத்தை உண்டாக்கும் காரணிகள். அல்லாஹ்வின் மீது ஆதரவு வைத்தல். (அல்லாஹ்வின் மீது) ஆதரவு வைப்பவரை அறிந்து கொள்ளும் அடையாளங்கள்.