முஸ்லிம்கள் திசையை வணங்குகின்றார்களா?

விபரங்கள்

1. முஸ்லிம்களின் கிப்லா பற்றிய வியக்கம்
2 அல்லாஹ்வின் கட்டளைகள் சில

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  முஸ்லிம்கள் திசையை வணங்குகின்றார்களா?

  ] Tamil – தமிழ் –[ تاميلي

  M.S.M.இம்தியாஸ் யூசுப்

  2014 - 1436

  هل المسلمون يعبدون الجهات؟

  « باللغة التاميلية »

  محمد إمتياز يوسف

  2014 - 1436

  முஸ்லிம்கள் திசையை வணங்குகின்றார்களா?

  இம்தியாஸ் யூசுப் ஸலபி

  முஸ்லிமல்லாத மக்கள் கடவுளை வணங்கும் போது முஸ்லிம்கள் ஒரு திசை நோக்கி வணங்குகின்றவர்களாக உள்ளார்கள் என மாற்று மத நண்பர்கள் கூறுகிறார்கள்.

  இது பற்றி தெளிவை கொடுப்பது எமது கடமை.

  முஸ்லிம்கள் ஒரு கடவுளை மட்டும் நம்பி வழிபடுபவர்கள். அந்த கடவுளை அல்லாஹ் என்று அழைக்கின்றார்கள். அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடும் முஸ்லிம்கள் அல்லாஹ் அல்லாத எந்தவொன்றையும் எந்தவொரு வஸ்துவையும் கடவுளாக நம்புவதில்லை. அவர்கள் திசையை வணங்குவதாக இருந்தால் திசையையும் கடவுளாக ஏற்றிருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்களுடைய வணக்கதில் அல்லது நம்பிக்கையில் அவ்வாறான கோட்பாடு எதுவும் இல்லை. அப்படி யிருக்கும் போது ஏன் திசையை நோக்கி வணங்குகிறார்கள் என்பதை அறிவது நியாயம் தான்.

  உலகில் அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வுக்குரிய வணக்கத்திற்காக முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் தான் சவுதி அரேபியாவில் மக்கா நகரில் அமைந்துள்ள புனித கஃபா ஆலயமாகும்.

  إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ

  (அல்லாஹ்வை வணங்குவதற்காக) மனிதர் களுக்கு அமைக்கப்பட்ட முதல் வீடு பக்கா (எனப்படும் மக்கா)வில் உள்ள தாகும். (அது) பாக்கியம் பொருந்தியதும் அகிலத்தாருக்கு நேர்வழியுமாகும். (9-96)

  ஆல்லாஹ்வையும் இறை கோட்டையும் ஏற்ற மனிதர்கள் இந்த ஆலயத்தை நோக்கி வணங்கு மாறும் வருடத்திற்கு ஒரு முறை ஹஜ் வணக்கத்திற்காக ஒன்று கூடுமாறும் இஸ்லாம் பணிக்கின்றது.

  இந்த புனித ஆலயம் நபி இப்றாகீம் (அலை) அவர்கள் மூலமும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் மூலமும் புனருத்தானம் செய்யப் பட்டது.

  وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ} البقرة: 125

  கஃபா எனும் இவ்வீட்டை மக்கள் ஒன்று கூடுமிடமாகவும்அபயமளிக்குமிடமாகவும் ஆக்கி யதை எண்ணிப் பாருங்கள். நீஙகள் மகாமு இப்றாகீமை தொழுமிடமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனது (இந்த வீட்டை) சுற்றி வருவோருக்கும் (தவாப் செய்வோருக்கும்) தங்கி யிருப்போருக்கும் (குனிந்து பணிந்து சிரம் தாழ்த்தி) ருகூவு, சுஜூது செய்பவர்களுக்கும் நீங்கள் இருவரும் தூய்மைப் படுத்துங்கள் என்று இப்றாகீமுக்கும் இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளையிட்டோம்.(2:125)

  ஒரு இறைவனை நம்பிய முஸ்லிம்கள் அந்த ஆலயத்திற்குள் இறைவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் வணங்குவதில்லை.

  உலகில் எத்திசையில் முஸ்லிம்கள் இருந்தாலும் பயணத்தில் இருந்தாலும் ஊரில் இருந்தாலும்-இந்த புனித ஆலயத்தை முன்னோக்கி வணங்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

  وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ} البقرة : 150

  நபியே! நீர் எங்கிருந்து புறப்பட்டு சென்றாலும் (தொழுகையின் போது ) உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கி (புனித கஃபாவை நோக்கி) திருப்பு வாயாக. (2:150)

  நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது புனித கஃபாவை நோக்கி தொழுது வந்தார்கள்.

  மதீனா நகருக்கு சென்றதும் புனித மஸ்ஜிதுல் அக்ஸா எனும் ஆலயத்தை நோக்கி தொழும்படி அல்லாஹ்வினால் ஏவப்பட்டார்கள். சுமார் பதினேழு மாதங்கள் இவ்வாறு அத்திசையை நோக்கி நின்று வணங்கி வந்தாலும் கஃபாவை நோக்கி வணங்குவதையே நபி (முஹம்மத் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அப்போது அல்லாஹ் பின் வரும் வசனத்தை இறக்கி வைத்தான்.

  قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ (144) وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ إِنَّكَ إِذًا لَمِنَ الظَّالِمِينَ (1452:

  நபியே உமது முகம் வானத்தின் பால் அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகின்ற கிப்லாவை நோக்கி நிச்சயமாக நாம் உம்மை திருப்புவோம். எனவே (இப்போது) உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கி திருப்புவாயாக. நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அதன் பால் திருப்புங்கள். நிச்சயமாக வேதம் கொடுக்கப்பட்டோர் இது தங்களது இரட்சகனிட மிருந்து வந்த உண்மை என்பதை நன்கறிவார்கள. அவர்கள் செய்பவைப் பற்றி அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.(2:144.145)

  முஸ்லிம்கள் திசையை வணங்குபவர்களாக இருந்தால் ஏதும் ஒரு திசையை வணங்கி விட்டு போய் இருப்பார்கள். ஆனால் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் முதலாவது ஆலயமான, இப்றாகீம் நபி புனர்நிர்மானம் செய்த புனித ஆலய முமான கஃபாவையே கிப்லாவாக எடுத்துக் கொள்ள விரும்பினார்கள். அவர்களது விருப்பத்திற்கேற்ப அல்லாஹ் இந்த கட்டளை யை பிறப்பித்தான். அது மட்டுமன்றி இப்றாகீம் நபியை வழிகாட்டியாக ஏற்றிருந்த, வேதம் கொடுக்கப்பட்ட மக்களின் மனோநிலை எப்படி யிருக்கின்றது என்பதை பரீட்சிப்பதற்கும் சத்தியத்தின் பால் திரும்புவர்களாக இருக்கின் றார்களா என்று பார்ப்பதற்கும் இந்த நிலையை அல்லாஹ் ஏற்படுத்தினான்.

  எனவே முஸ்லிம்கள் திசையை நோக்கி வணங்குபவர்களல்ல என்பதை இது காட்டுகின்றது.

  ஒரு கொள்கையில் ஒன்று பட்டவர்கள் வணக்கத்திலும் ஒன்று பட்டு ஒரு அணியில் நின்று வணங்க வேண்டும் என்றே இஸ்லாம் பணிக்கின்றது.

  பள்ளிவாசலுக்குள் நுழைந்த முஸ்லிம்கள் ஒருவரின் (இமாமின்) தலையின் கீழ் ஒரு அணியில் ஒன்றாக இணைந்து நின்று இந்த ஆலயத்தை நோக்கியே வணங்குகிறார்கள்.

  திசையை வணங்கக் கூடியவர்களாக இருந்தால் பள்ளி வாசலுக்குள் தனித்தனியாகவோ குழுக்க ளாகவோ, தான் விரும்பிய திசையில் நின்று முஸ்லிம்கள் வணங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படியான முறையில் வணங்குவ தில்லை என்பதிலிருந்து முஸ்லிம்கள் திசையை வணங்குபவர்களல்ல என்பது தெளிவாகும்.

  மஅறிமுகமில்லாத இடத்தில் கடும் காரிருள் அல்லது பனி மூட்டம் போன்ற காரணங்களால் கஃபா அமைந்திருக்கும் திசையை அறிய முடியா விட்டால் கஃபா இந்த திசையில் இருக்கலாம் என்று அனுமானித்து அத்திசையை நோக்கி நின்று தொழுவதை இஸ்லாம் தடுக்க வில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

  [email protected]