நபித் தோழர்களை வெறுப்பது ஈமானை மாத்திரம் பாதிக்குமா?

விபரங்கள்

படைப்பினங்களில் மிகவும் சிறந்த இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தோழர்களை விமர்சிப்பது, குறை கூறுவது, வெறுப்பது என்பன மிகப் பெரும் ஏமாற்றத்தையும், தோல்வியையும் ஏற்படுத்தி, இறையருளை விட்டும் தூர தள்ளி விடும் குற்ற செயலாக விளங்குகிறது

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  بغض الصحابة يضر الإيمان

  நபித்தோழர்களை வெறுத்தல்

  <தமிழ்>

  Author' name

  அஷ்ஷெய்க் சாலிஹ் அல் பவுசான்

  الشيخ صالح بن فوزان الفوزان

  —™

  Translator's name:

  அப்துல் ஜப்பார் முஹம்மத் மக்தூம்

  Reviser's name:முஹம்மத் அமீன்

  ترجمة:محمد مخدوم عبد الجبار

  مراجعة:محمد أمين

  நபித்தோழர்களை வெறுத்தல்

  தொடர்ப்பில் மார்க்க தீர்ப்பு

  http://islamqa.info/ar/45563

  கேள்வி:

  நான் கண்ணிய மிக்க நபித் தோழர்கள் (ரில்வானுல்லாஹி அலைஹிம்) தொடர்பில் எனது நண்பர் ஒருவருடன் கலந்துரையாடலில் இருந்த போது, எங்களில் எவரும் எந்த நபித் தோழரையும் வெறுப்பதன் மூலம் ஈமானின் வட்டத்தில் இருந்து அவர் வெளியாகிவிடுவார். (அவ்வாறு நடப்பது அவரது இறை விசுவாசத்தில் குறைவை ஏற்படுத்தி விடும்). மாற்றமாக இஸ்லாத்தின் வட்டத்தில் இருந்து அவர் வெளியாகி விடமாட்டார் (காஃபிராகி விடமாட்டார்). என அவர் கூறினார்.

  எனவே, இந்த விடயம் தொடர்ப்பில் தெளிவான விளக்கம் ஒன்று தருமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

  பதில்:

  படைப்பினங்களில் மிகவும் சிறந்த இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தோழர்களை விமர்சிப்பது, குறை கூறுவது, வெறுப்பது என்பன மிகப் பெரும் ஏமாற்றத்தையும், தோல்வியையும் ஏற்படுத்தி, இறையருளை விட்டும் தூர தள்ளி விடும் குற்ற செயலாக விளங்குகிறது.

  கண்ணிய மிக்க சகாபாக்களின் குறைகளை தேடித் திரிவதைத் தவிர்த்து, ஒவ்வொருவரும் தமது தீனுக்கும், துன்யாவுக்கும் பலன் தரும் விடயங்களில் தம்மை ஈடுபடுத்தி கொள்வது அவசியமாகும்.

  கண்ணியமிக்க நபித் தோழர்களான சஹாபாக்களை எசுவதற்கோ, நிந்தனை செய்வதற்கோ, வெருப்பதற்கோ, குறை கூறுவதற்கோ யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அவர்களின் உயர்வும், சிறப்பும் எண்ணிலடங்காது. அவர்கள் தான் உலகம் முழுவதும் வெற்றி கொண்டு இந்த மார்க்கத்தை பரப்பியவர்கள், இஸ்லாத்திற்கு எதிரான இணை வைப்பாளர்களுடன் போரிட்டு வெற்றி ஈட்டியவர்கள். குர்ஆனையும், சுன்னாஹ்வையும், மார்க்க சட்ட திட்டங்களையும் எமக்கு கொண்டு வந்து சேர்த்தவர்கள், தமது உயிர்கள், உடைமைகள், சொத்துக்கள், செல்வங்களை எல்லாம் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணம் செய்தவர்கள்.

  இறைவனே அவனது உயர்வு மிக்க நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தோழர்களாக அவர்களை தெரிவு செய்துள்ளான். அல்லாஹ்வின் மார்க்கத்தை நம்பாத, அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்குவதை விரும்பாத நயவஞ்சகனைத் தவிர வேறு யாரும் கண்ணியமிக்க நபித் தோழர்களை ஏசவோ, வெறுக்கவோ, நிந்திக்கவோ மாட்டார்கள்.

  عن البراء رضي الله عنه قال : سمعت النبي صلى الله عليه وسلم قال : " الأنصار : لا يحبهم إلا مؤمن ، ولا يبغضهم إلا منافق ، فمن أحبهم أحبه الله ، ومن أبغضهم أبغضه الله " .رواه البخاري ( 3572 ) ومسلم ( 75 (

  “அல்லாஹ்வின் மார்க்கத்துக்கு உதவி புரிந்த நபித் தோழர்களை (அன்சார்கள்) இறை விசுவாசியைத் தவிர வேறு யாரும் நேசம் கொள்ள மாட்டார்கள், நயவஞ்சகர்களைத் தவிர வேறு யாரும் அவர்களை வெறுக்க மாட்டார்கள், யார் அவர்களை நேசிக்கின்றார்களோ, அல்லாஹ்வும் அத்தகையோரை நேசிக்கின்றான். அவர்களை வெறுக்கின்றவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூற, தான் செவிமடுத்ததாக பராஃ இப்னு ஆஸிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

  அல்லாஹ்வின் மார்கத்திற்கு உதவி புரிந்த நபித் தோழர்களை (அன்சார்கள்) வெறுப்பதன் மூலம் ஒருவனுடைய ஈமான் பறிக்கப்பட்டு இறை நிராகரிப்பாளனான, நயவஞ்சகனாக அவன் மாறி விடுகிறான் என்றால், அவர்களை வெறுப்பதோடு மாத்திரம் நின்று விடாமல், அவர்களையும் அவர்களை பின்பற்றியவர்களையும், அவர்களை நேசிப்பவர் களையும், ஏசி, நிந்தித்து, சபித்து, அவர்கள் அனைவரை யும் காஃபிர்கள் என கூறுகின்றவர்களின் நிலைமை என்ன?

  ஷீஆ பிரிவைச் சேர்ந்த ராஃபிலாக்களே இவ்வாறு செய்கின்றார்கள்; இறை நிராகரிப்பாளர்கள் என கூறப்படவும், நயவஞ்சகர்கள் என கூறப்படவும், ஈமான் இல்லாதவர்கள் என கூறப்படவும் சந்தேகமின்றி இவர்களே மிகவும் பொருத்தமானவர்கள்.

  இமாம் அபூ ஜஃபர் அத் தஹாவி (ரஹீமஹுல்லாஹ்) அவர்கள் (بيان اعتقاد أهل السنة والجماعة) “பயான் இஃதிகாது அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆஹ்” என்ற தமது நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

  “நாம் இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்களை நேசம் கொள்கிறோம், ஆனால் அவர்களை எல்லை மீறி நேசிப்பதில்லை, அவர்களை நாம் வெறுப்பதும் இல்லை. அவர்களை வெறுக்கின்றவர்களையும், அவர்களை குறைக் கூறுகின்றவர்களையும் நாம் வெறுக்கின்றோம். நபித் தோழர்களின் நன்மைகளை அன்றி நாம் விமர்சிப்பதில்லை. அவர்களை நேசிப்பது மார்க்கமும், இறை விசுவாசமும், நன்மையுமாகும். அவர்களை வெறுப்பது இறை நிராகரிப்பும், நயவஞ்சகமும், மாபெரும் குற்றமுமாகும்.”

  இதற்கு விளக்கம் எழுதியுள்ள அஷ் ஷேய்க் ஸாலிஹ் அல் பௌஸான் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

  இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தினர்களாகிய “அஹ்லுல் பைத்தை”ச் சேர்ந்தவர்களுடன் நேசம் வைத்து சேர்ந்து நடப்பதே “அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆஹ்” வுடைய சரியான கொள்கையாக விளங்குகிறது.

  வழித் தவறிய கொள்கையுடைய “நாஸிபாக்கள்” இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தினர்களாகிய “அஹ்லுல் பைத்தை”ச் சேர்ந்தவர்களை கடுமையாக விரோதிக்கின் றார்கள். இதனாலேயே இவர்கள் “நாஸிபாக்கள்” என்றழைக்கப் படுகிறார்கள்.

  ராஃபிழாக்கள் இதற்கு மாற்றமாக இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் குடும்பத்தினர்களை எல்லை மீறி நேசிக்கின்றார்கள். ஏனைய நபித் தோழர்களை கடுமையாக வெறுக்கின்றார்கள், அவர்களை சாடுகின்றார்கள், காபிர்கள் என கூறுகிறார்கள், இழிவு படுத்துகின்றார்கள்.

  யார் நபித் தோழர்களை வெறுக்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தையே வெறுத்தவர்களாக கருதப்படும், ஏனெனில் அவர்கள் தான் அல்லாஹ்வின் தூதரை நேருக்கு நேர் சந்தித்து பின்பற்றி அவனது மார்க்கத்தை நமக்கு சுமந்து வந்தவர்கள். யார் அவர்களை வெறுக்கின்றார்களோ அவர்கள் இஸ்லாத்தை வெறுத்தவர்கள். நபித் தோழர்களை வெறுப்பது வெறுக்கின்றவர்களின் உள்ளத்தில் சிறிதளவேனும் ஈமான் இல்லை என்பதற்கும், இவர்கள் இஸ்லாத்தின் விரோதிகள் என்பதற்கும் அடையாள மாகும்.

  இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்களை நேசிப்பதும் அவர்களுக்கு உரிய மதிப்பை வழங்குவதும் ஈமானில் ஒரு பகுதியாகும்; அவர்களில் ஒருவரையோ, பலரையோ வெறுப்பது இறை நிராகரிப்பும், நயவஞ்சகமும் ஆகும். அவர்களை நேசிப்பது இறைத் தூதரை நேசிப்பது போன்றாகும், அவர்களை வெறுப்பது இறைத் தூதரை வெறுப்பது போன்றதாகும் என்பது அனைத்து முஸ்லிம்களும் அறிந்திருக்க வேண்டிய உயரிய அடிப்படை விடயமாகும். (ஷரஹ் அல் அகீதாஹ் அத் தஹாவிய்யாஹ் شرح العقيدة الطحاوية)

  “எவனாவது இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்களில் ஒருவரை குறை கூற நீர் கண்டால் அவன் இறை நிராகரிப்பவன் என விளங்கிக் கொள்” என அபூ ஸுர்ஆ அல் ராஸி அவர்கள் கூறியுள்ளார்.

  எவனாவது இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்களில் ஒருவரை பற்றி தீயதை கூறி விமர்சித்தால் அவன் முஸ்லிமாக இருக்க முடியாது என இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூரியுள்ளார்.

  http://islamqa.info/ar/45563