அறிவியல் வகைகள்

معلومات المواد باللغة العربية

தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் வீட்டு அங்கத்தவர்களும்

பொருட்ளின் எண்ணிக்கை: 10

  • தமிழ்

    YOUTUBE

    விரிவுரையாளர்கள் : முஹம்மத் இம்தியாஸ் மீளாய்வு செய்தல் : Ahma Ebn Mohammad

    "அபூ பக்ர் (ரலி) அவர்களின் சிறப்பும் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த சேவைகளும். இறைத்தூதரிடம் அவர்களுக்கிருந்த மதிப்பு. இறைத்தூதர் மரணித்த போது அபூ பக்ர் (ரலி) அவர்களின் நிலைப்பாடு ஷீஆக்களின் உருவாக்கத்தில் அப்துல்லாஹ் பின் ஸபஇன் பங்களிப்பு. அவன் இச்சமூகத்தைப் பிரிக்க கையிலெடுத்த ஆயுதம் அஹ்லுல்பைத்தினரை நேசித்தல். அபூ பக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்கும் அஹ்லுல்பைத்தினரின் குடும்பத்தினருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகள் இவற்றில் ஷீஆக்களின் திரிபு படுத்தல்கள்."

  • தமிழ்

    MP4

    மீளாய்வு செய்தல் : ஜாசிம் பின் தய்யான்

    குர்ஆனுக்கும், சுன்னத்துக்கும் மாற்றமாக செயல் புரிந்த அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூதனின் தலைமையில் உதுமான் (ரழி) எதிராக உருவாகிய அரசியல் கூட்டம் தான் ஷீஆக்கள். சில வருடங்கள் கழிந்த பின் இதுவே இன்னுமொரு மதமாக மாறியது. இன்று குர்ஆனையே குற்றம் கூறி, அலி (ரழி) முன்வைத்து சரித்திரத்தையே மாற்றம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

  • தமிழ்

    PDF

    ’அஹ்லுல் பைத்’ என்போர் யார், ’அஹ்லுல் பைத்’ பற்றி வந்துள்ள சில ஆதாரங்கள், அஹ்லுல் பைத்தின் சிறப்புக்கள், அஹ்லுல் பைத்தின் உரிமைகள்.

  • தமிழ்

    PDF

    சஹாபாக்கள் இந்த மார்க்கத்தை நிலை நாட்டுவதற்காக பெரும் தியாகங்களை செய்தவர்கள், பல சித்திர வதைகளை சுமந்தவர்கள். பல இன்னல்களை அனுபவித்த வர்கள். உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்கள். அகதிகளாக அனாதைகளாக ஆனவர்கள். உலக இன்பங்களை இழந்து மறுமையின் நலனுக்காக வாழ்ந்தவர்கள்.

  • தமிழ்

    PDF

    இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் பல காரணங்களுக்காக வேண்டி கருத்து வேறுபாட்டுடன் இருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் நியதாக உள்ளது . இத்தகைய கருத்துவேறுபாடுகள் சிலரின் அறிவீனத்தாலும் சிலர் தன் விருப்பப்படி செயற்படுவதாலுமே உருவாகின்றன . இவ்வாறு நிகழக்கூடிய கருத்துவேறுபாடுகள் , உண்மையான வழியைத் தேடிட வேண்டுமென பெருமுனைப்போடு செயற்படும் ஓர் முஸ்லிமிடத்தில் நபி * அவர்களும் , அவர்களின் தோழர்களும் அறிவிலும் , அதை செயற்படுத்துவதிலும் எவ்வாறு செயற்பட்டார்களோ அத்தகைய வழியைத் தேடுவதற்கும் , அவ்வழியைப் பின்பற்றி நடப்பதற்குமான அவசியத்தை உருவாக்குகிறது . வாசகர்களே , உங்கள் கைகளில் தவழும் இப்புத்தகத்தில் இஸ்லாத்தின் பெரும் ஆபத்தான பகுதியாக இருக்கும் " நம்பிக்கை சார் கோட்பாடுகள் ” பகுதியில் நபி அவர்களும் , அவர்களின் தோழர்களும் மேற்கொண்டவற்றைப் பற்றிய முழு விபரங்களையும் சுருக்கமாக இந்நூலாசிரியர் கோர்வை செய்து தந்துள்ளார் . இவற்றில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டுமென்பதற்காக இது விடயத்தில் வழிதவறியவர்களின் கூற்றுக்கள் யாது என்பதைப் பற்றிய தெளிவும் வழங்கப்பட்டுள்ளது . இந்நூலாசிரியருக்கு சிறந்த நற்கூலிகளை வழங்கி , அவரின் அனைத்து செயற்பாடுகளையும் அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டுமென நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் . மேலும் இந்நூலுக்காக மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்புப் பணி , வடிவமைப்பு , அச்சுவடிவம் , மேற்பார்வை போன்ற அனைத்துப் பணிகளையும் செய்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்க வேண்டுமெனவும் நாம் பிரார்த்திக்கிறோம் . இதனை முஸ்லிம்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இதன் கூலிகள் அனைத்தும் கிடைக்கவேண்டுமெனவும் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் .

  • தமிழ்

    PDF

    ஸஹாபாக்களை மகிமை படுத்த வேண்டிய எமது கடமை, அதற்கான 10 அடிப்படை காரணங்கள், பித்ஆக்களை ஸஹாபாக்கள் பின்பற்றாத காரணத்தால் முஸ்லிம்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை.. உயிருடன் உலகில் வாழ்ந்த காலத்தில் சுவர்க்கத்தில் இடம் பிடித்த உத்தம ஸஹாப்பாக்கள் 10 பேர்களின் பெயர்கள் என்பன இதில் அடங்கியுள்ளன.

  • தமிழ்

    YOUTUBE

    விரிவுரையாளர்கள் : மௌலவி யூனுஸ் தப்ரிஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    சஹாப்பாக்களின் தியாகங்கள் பற்றிய சில விபரங்கள். சுமையா (ரழி) அன்ஹா, பிலால் (ரழி), அபு பக்கர் சித்தீக் (ரழி), உமர் (ரழி) போன்றவர்களின் சிறப்புக்கள் பற்றிய சம்பவங்கள்.

  • தமிழ்

    MP4

    மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

    அபுபக்கர் (ரழி) அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு, அவரது சிபத்துக்கள் பற்றிய விளக்கம், அபுபக்கர் (ரழி) செய்த உதவிகளுக்கு உலகில் எவ்வித கைமாறும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதில் அபுபக்கர் (ரழி) முன்னிலையில் நின்றார்கள்.

  • தமிழ்

    PDF

    படைப்பினங்களில் மிகவும் சிறந்த இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் தோழர்களை விமர்சிப்பது, குறை கூறுவது, வெறுப்பது என்பன மிகப் பெரும் ஏமாற்றத்தையும், தோல்வியையும் ஏற்படுத்தி, இறையருளை விட்டும் தூர தள்ளி விடும் குற்ற செயலாக விளங்குகிறது

  • தமிழ்

    PDF

    விசுவாசிகளின் அன்னையர் பற்றிய சிறப்புக்கள் மற்றும் அவர்கள் பற்றிய இறைவசனங்களும் நபிமொழிகளும் .