நரக தண்டனை தேவ நீதியா? கிறிஸ்தவர்களுக்கான பதில்.

விபரங்கள்

அல்லாஹ்வைப் பற்றி கிறிஸ்தவ போதகர்கள் கூறும் அபாண்டமான பொய்க்கு பதில் கூறல்

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  நரக தண்டனை தேவ நீதியா? கிறிஸ்தவர்களுக்கான பதில்

  ] தமிழ் – Sinhala –[ سنهالي

  எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி

  2013 - 1435

  هل من عدل الله عذاب النار؟

  (رد على المسيحية)

  « باللغة السنهالية »

  محمد إمتياز يوسف

  2013 - 1435

  நரக தண்டனை தேவ நீதியா? கிறிஸ்தவர்களுக்கான பதில்.

  எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி

  நரக தண்டனை தேவ நீதியா? எனும் தலைப்பில் கிறிஸ்தவ சகோதரர்கள் ஒரு பிரசுரத்தை நீண்ட காலமாக வெளியிட்டு, வீடு வீடாகச் சென்று பங்கீடு செய்து வருகிறார்கள்.

  அப்பிரசுரத்தில் மனிதர்கள் குற்றம் செய்தால் அதற்கான தண்டனைகளை கடவுள் வழங்குவது, எரி நரக நெருப்பில் போட்டு தண்டிப்பது வதைப்பது பகுத்தறிவுக்கு ஏற்றமானதா? அன்பு காட்டும் கடவுள் இதனை செய்வாரா?

  அநேக மதங்களில் இது அதிகாரபூர்வமான கோட்பாடாகவே இருக்கிறது. கிறிஸ்தவ மதம் அப்படிப்பட்டதல்ல. கர்த்தர் அன்பானவர். அவர் பாவிகளை சித்திரவதை செய்வதில்லை.

  மக்களை வதைப்பது மூர்க்கதனமான செயல். மூர்க்கத்தனமான கடவுளை நம்புகிறவர்கள் பெரும்பாலும் மூர்க்கத்தனமானவர்களாகவே ஆகிறார்கள். கிறிஸ்தவ கடவுள் அன்பானவர் அன்பே உருவமாக இருக்கிறார் என்பது தான் அப்பிரசுரத்தின் சாரம்சம்.

  இப்பிரசுரத்தை ஏந்தி வருபவர்களுக்கு உரிய பதிலளிக்கும் போது பல காரணங்களைக் கூறி ஒடிவிடுகிறார்கள். மக்களை தப்பான வழிக்கு இட்டுச் செல்லும் வழிதான் இப்பிரசுரம்!

  எல்லா மதங்களும் நரக நெருப்பு பற்றியும் பாவிகள் கடவுளால் தண்டிக்கப்படுவது பற்றியும் போதிக்கின்றது. கிறிஸ்தவத்தில் அப்படியான நிலையில்லை என கூறி மக்களை கிறிஸ்வத்திற்கு இட்டுச் செல்ல முனைகிறார்கள்.

  இவர்களது பிரசுரத்தின் பிரகாரம் இஸ்லாமிய மார்க்கமும் விமர்சனத்திற்குள்ளாகுவதாலும், பைபிளில் நரக நெருப்பு பற்றி வரக்கூடிய வசனங்களை மூடி மறைத்து தப்பான பிரச்சாரம் செய்வதாலும் இவர்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பு எமக்குண்டு.

  முதலில் இவர்களது வாதம் சரியானதா? பகுத்தறிவுக்கு பொறுத்தமானதா? என சிந்தித்துப் பார்த்தால் பகுத்தறிவுக்கு பொறுத்தமற்ற அறியாமை நிறைந்த வாதம் என்பதை சிந்தனையாளர்கள் புரிந்துகொள்வார்கள்.

  உலகத்தில் நன்மை தீமை செய்யக்கூடிய மக்கள் இருக்கிறார்கள். நன்மை செய்தவர்களுக்கு கர்த்தரால் நற்கூலி வழங்கப்படுவது போல் தீமை செய்தவர்களுக்கும் அதற்குரிய தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும்.

  அநியாயம், அக்கிரமம் செய்தவனுக்கு பிறருடைய உரிமைகளை நாசப்படுத்தியவனுக்கு கர்த்தர் தண்டனை வழங்க மாட்டார். அன்பு காட்டுவார் ஆதரவளிப்பார் என்றால் அவர் அநியாயக்கார னுக்கும் கொடுமைக்காரனுக்கும் தான் கர்த்தராக இருப்பாரே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் கர்த்தராக இருக்க மாட்டார்.

  பகுத்தறிவுக்குப் பொறுத்தமற்ற இந்த வாதத்தை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது! இவர்களது வாதம் கிறிஸ்தவம் கலந்த நாஸ்தீகம் என்பதை அறிவுடையோர் புரிந்து கொள் வார்கள்.

  கர்த்தர் அன்பு காட்டுபவர் மட்டுமல்லாமல் சித்திரவதை செய்பவர், எரி நரகில் போட்டு வதைப் பவர். கிறிஸ்தவர்களின் வார்த்தையினால் கூறுவதானால் அவர் மூர்கத்தனமானவர் என்றெல் லாம் பைபிள் கூறும் வசனங்களை மறைத்துவிட்டு தவறான பிரசாரம் செய்கிறார்கள். கர்த்தர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்ள பின்வரும் வசனங்களை அமைதியாக படியுங்கள்!

  (கர்த்தர் ஏவாளை நோக்கி) நீ கர்ப்பவதியாக இருக்கும் போது உன் வேதனையை மிகவும் பெருக பண்ணுவேன் (ஆதியாகமம் 3:16)

  (ஆதாமை நோக்கி) புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியை புசித்த படியால் பூமி உன் நிமித்தம் சபிக்கப் பட்டிருக்கும். (ஆதியாகமம் 3:17)

  தடுக்கப்பட்ட ஒரு பழத்தை அதாமும் ஏவாளும் சாப்பிட்டதற்காக கர்த்தர் இடும் சாபம் இது!

  பிரசவ வேதனை என்பது ஒரு பெண் மரணத்தோடு போராடுகின்ற பயங்கரமான வேதனை! இந்த வேதனையை அதிகரிக்கச் செய்து சித்திரவதை பண்ணுவதாக கர்த்தர் சபதம் எடுக்கிறாரே! கர்த்தர் அன்பானவர் என்பதற்கு இதுதான் அடையாளமா?

  ஒரு பழத்தை சாப்பிட்டதற்காக பூமி சபிக்கப் பட்டதென்றால் அதில் வாழும் மக்கள் கிறிஸ்த வர்கள் உட்பட அனைவரும் சபிக்கப்பட்டவர்கள் தானே! சாபமிடுவது அன்புள்ள கர்த்தருக்கு ஆகுமா?

  ...(கர்த்தரின்) நாக்கு பொசுக்கும் நெருப்பை போன்றது... அவர் பொங்கியெழும் சீற்றம் கொண்டு விழுங்கும் நெருப்பு, சூறாவளிக் காற்று கல்மழை இவற்றால் தம் தண்டிக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவார்...

  ... நெருப்புக்குழி ஒன்று ஏற்பாடாகியுள்ளது அது அரசனுக்கென்று தயார்செய்யப்பட்டது. உரு வாக்கப்பட்டது. ஆழமும் அகலமுமான நெருப்புக் குழியால் உருவாக்கப்பட்ட அதில் நெருப்பும் விறகுக் கட்டையும் ஏராளமாக நிறைந்துள்ளன. கர்த்தரின் மூச்சு கந்தக மழை போல் அவற்றின் மேல் நெருப்பு மூட்டும் (ஏசாயா 30:27-33)

  அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் (மத்மேயு 13:43,50)

  இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர் (கர்த்தர்) சபிக்கப்பட்டவர்களே என்னை விட்டு பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும்

  .... ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் (மத்தேயு 26:41)

  மேலும் அவர்களை மோசம் போக்கின பிசாசானவன் மிருகமும், கள்ளத் தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் சந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதா காலங்களிலும் வதைக்கப் படுவார்கள். (வெளிப்பாடு 20:10)

  தீமை செய்தவர்கள் அக்கிணியை அடையும் படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள் (யோவான் 5:25)

  (கர்த்தர்) பாவஞ் செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல் அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத் தீர்ப்புக்கு வைக்கப் பட்டர்வகளாக ஒப்புக் கொடுத்து ... தேவ பக்தி யுள்ளவர்களைச் சோதனையின்று இரட்சிக்க வும் அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக வைக்கவும் அறிந்திருக்கிறார். (2 பேதுரு 2 :4)

  அன்புள்ள கர்த்தரின் சாதுவான வர்ணனைகளா இவை? அல்லது பயங்கரமான மூர்க்கத்தனமான வர்ணனைகளா? எரி நரகை தயார்படுத்தி வைத்திருப்பவர் அன்புள்ள தேவனாக இருப்பாரா?

  இறைத்தூதர் நோவா துவக்கம் பல தூதர்களின் சமூகம் அழிக்கப்பட்ட செய்திகளை பைபிள் சொல்வதை மறைப்பது ஏன்?

  தாவித் எனும் தீர்க்கதரிசி, உரியா என்னும் தனது படைவீரரின் மனைவி குளித்துக் கொண்டி ருப்பதைக் கண்டு அவளை அழைத்து உடலுறவு கொள்கிறார். விபச்சாரம் செய்கிறார். அவள் கர்ப்பமடைகிறாள். இதை அறிந்த தாவித் அப்பெண்ணின் கணவனை யுத்த களத்திற்கு அனுப்பி கொலை செய்துவிடுகிறார். பிறகு அப்பெண்ணை சொந்தப்படுத்திக் கொள்கிறார். இந்த பாவத்திற்கு கர்த்தர் காட்டிய கருனை என்ன தெரியுமா?

  (தாவிதை நோக்கி) கர்த்தர் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய். ஆயினும் கர்த்தரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும் படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்.

  உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை கர்த்தர் தாக்க அது நோயுற்றுச் சாகக் கிடந்தது (2 சாமுவேல் 12:1-15)

  யாரோ செய்த குற்றத்திற்கு எந்தப் பாவமும் அறியாத பாலகனை சாகடிப்பதா கர்த்தர் காட்டும் அன்பு?

  லோத்து எனும் தீர்க்கதரிசியின் சமூகம் ஆண் புணர்ச்சியில் ஈடுபட்ட போது கர்த்தர் வானத்திலிருந்து கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார் (ஆதியாகமம் 19:23)

  பாவிகளை இப்பூமியிலே நெருப்பில் போட்டு பொசுக்கியுள்ளாரே கர்த்தர்?

  அன்புள்ளவர் நெருப்பினால் வதைக்கலாமா?

  நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல. வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். (மத்கேயு 10:34,35)

  மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன் அது இப்பொழுது பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.... மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக் கிறீர்கள்? இல்லை பிளவு உண்டாக்கவே வந்தேன் (லூக்கா 12:49,51)

  பூமியில் பிரிவினையை உருவாக்கி தீ மூட்ட வந்ததாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து(?) கூறும் அன்பான வார்த்தைகளா இவைகள்? மனிதப் பாவங்களுக்காக தன்னையே பலி கொடுக்க இயேசு கிறஸ்து வந்தததாக கிறிஸ்தவ சகோதரர்கள் நம்புகிறார்கள்.

  பூமி எங்கும் மனிதர்களுக்கிடையில் குழப்பத்தையும் பிரிவினையையும் வன்முறையையும் உருவாக்கி பகைமையை ஏற்படுத்த வந்ததாக கர்த்தராகிய இயேசு கூறுகிறார்.

  மக்களை இரத்தம் சிந்த வைத்து பாவிகளாக உருவாக்கிய பிறகு அவர்களுக்கு எரி நரக தண்டனையை வழங்குவதாக கர்த்தராகிய இயேசு கூறுகிறாரே? இது தகுமா?

  இது போன்ற அநேக வசனங்கள் நரக நெருப்பு பற்றி பைபிள் விபரிக்கின்றது. உள்ளதை உள்ளபடி பிரசாரம் செய்யவேண்டும். திரிவுபடுத்தி பிரசாரம் செய்யக்கூடாது என்றே நாம் கேட்டுக் கொள்கிறோம். இவர்கள் செய்யும் அல்லது சொல்லும் தப்பான வாதத்திற்கான பதிலாக இக்குறிப்புக்களை நாம் எடுத்துக காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

  இஸ்லாமும் நரக தண்டனையைப் பற்றி பேசுகிறது. அதே நேரம் பாவமன்னிப்புப் பற்றியும் பேசுகிறது. அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறிழைக்கும் மனிதன் தனது மரணத்துக்கு முன் பாவமன்னிப்புக் கோரி மீளுமாறு இஸ்லாம் அழைப்பு விடுக்கின்றது. மனிதர்களுடைய விடயத்தில் செய்யும் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்ட மனிதர்களிடம் பாவமன்னிப்பு கோறுமாறும் கட்டளையிடுகிறது. இதற்கப்பாலே நரக தண்டனைப்பற்றி பேசுகிறது இதனை புரிந்து கொள்ளுமாறு இந்த பிரசுரத்தை வினியோகிக்கும் கிறிஸ்தவ நண்பர்களிடம் அன்பாக கேட்டுக் கொள்கிறோம்.