இஸ்லாத்தில் நேசம் வைத்தலும் நீங்கிக் கொள்ளலும்

விபரங்கள்

காபிர்களை விட்டும் நீங்கிக் கொள்ளல், காபிர்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள், முஸ்லிம்களை நேசித்தல், முஸ்லிம்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள் .

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  இஸ்லாத்தில்

  நேசம் வைத்தலும்

  நீங்கிக் கொள்ளலும்

  கலாநிதி

  அமீன் பின் அப்தில்லாஹ்

  அஷ்ஷகாவீ

  தமிழில்

  எம். அஹ்மத் (அப்பாஸி)

  மீள்பரிசீலனை

  எம். ஜே. எம். ரிஸ்மி (அப்பாஸி, M. A)

  வெளியீடு

  இஸ்லாமிய அழைப்பு நிலையம்

  ரியாத் – ஸவூதி அரேபியா

  إعداد

  الدكتور / أمين بن عبد الله الشقاوي

  ترجمة

  أحمد بن محمد

  مراجعة

  محمد رزمي محمد جنيد

  الناشر

  المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالربوة

  الرياض

  المملكة العربية السعودية

  بسم الله الرحمن الرحيم

  புகழனைத்தும் ஏக வல்லவன் அல்லாஹ்வுக்கே. சாந்தியும் சமாதானமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் குடும்பத்தினர் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

  வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், ஈடிணையற்றவன் என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்றும் நான் சாட்சி பகர்கின்றேன்.

  காபிர்களை விட்டும் நீங்கிக் கொள்ளல் :

  இணைவைப்பாளர்களுடன் பகைமை கொள்வதையும் அவர்களை வெறுப்பதையும் அல்லாஹ் விசுவாசிகள் மீது பணித்துள்ளான். இதுதான் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமாகும். அதுவே எங்கள் நபி (ஸல்) அவர்களுடையவும் எங்களுடையவும் மார்க்கமாகும். அவர்களுடையவும் எங்களுடையவும் வழிகாட்டியுமாகும். இறைவன் கூறுகின்றான் :

  ﭽ ﮅ ﮆ ﮇ ﮈ ﮉ ﮊ ﮋ ﮌﮍ ﮎ ﮏ ﮐ ﮑ ﭼ النحل: ١٢٣

  "(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!'' என்று உமக்கு பின்பு தூதுச்செய்தி அறிவித்தோம். அவர் இணைகற்பிப்பவராக இருந்ததில்லை. (நஹ்ல் : 123). மேலும் கூறுகின்றான் :

  ﭽ ﮆ ﮇ ﮈ ﮉ ﮊ ﮋ ﮌ ﮍ ﮎﮏ ﮐ ﮑ ﮒ ﮓﮔ ﮕ ﮖ ﮗ ﮘ ﮙ ﭼ البقرة: ١٣٠

  "தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார்." (பகரா : 130).

  இந்த நேசம் வைத்தலும் நீங்கிக் கொள்ளலும் இரண்டு அடிப்படைகளைக் கொண்டது.

  1. வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் தூய்மையாக்குதல். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

  ﭽ ﮠ ﮡ ﮢ ﮣ ﮤ ﮥ ﮦ ﮧ ﮨ ﮩ ﮪ ﮫﮬ ﮭ ﮮ ﮯ ﮰ ﮱ ﯓ ﯔ ﯕ ﯖ ﯗ ﯘ ﯙ ﯚ ﯛ ﯜ ﯝ ﯞ ﯟﯠ ﯡ ﯢ ﯣ ﯤ ﯥ ﭼ الأنعام: ١٦١ - ١٦٣

  "எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை'' என்று கூறுவீராக! "எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்'' என்றும் கூறுவீராக! (அன்ஆம் 161-163).

  2. இணைவைப்பு மற்றும் இணைவைப்பாளர்களை விட்டும் நீங்கி அவர்களுடன் பகைமை கொள்ளுதல். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

  ﭽ ﮣ ﮤ ﮥ ﮦ ﮧ ﮨ ﮩ ﮪ ﮫ ﮬ ﮭ ﮮ ﮯ ﮰ ﮱ ﯓ ﯔ ﯕ ﯖ ﯗ ﯘ ﯙ ﯚ ﯛ ﯜ ﯝ ﯞ ﯟ ﯠ ﯡ ﯢ ﯣ ﭼ الممتحنة: ٤

  "உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (மும்தஹினா : 4)

  தன்னுடன் ஒன்றரக் கலந்து வாழும் தனது சமூகத்தாரைப் பார்த்தே இவ்வாறு கூறுவது கடமையென்றால், அனைத்து விடயங்களிலும் தனக்கு முரண்படும், தனக்கு வெகு தூரத்திலிருப்போருக்கு இப்ராஹீம்(அலை) அவர்கள் கூறிய மேற்கண்ட வார்த்தையைக் கூறுதல் அவசியமென்பது தெள்ளத் தெளிவானதே. இவ்விரண்டு அடிப்படைகளையும் சரிவரப் பேணாதோர் தாம் இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தில் தான் இருக்கின்றோம் என்று சொல்லத் தகுதியற்றவர்களே.

  இறைவன் கூறுகின்றான் :

  ﭽ ﭑ ﭒ ﭓ ﭔ ﭕ ﭖ ﭗ ﭘ ﭙ ﭚ ﭛ ﭜ ﭝ ﭞ ﭟ ﭠ ﭡ ﭢ ﭣ ﭤﭥ ﭦ ﭧ ﭨ ﭩ ﭪ ﭫ ﭬ ﭭ ﭮ ﭯ ﭰ ﭱﭲ ﭳ ﭴ ﭵ ﭶ ﭷ ﭸ ﭹ ﭺ ﭻﭼ ﭽ ﭾ ﭿ ﮀ ﮁ ﮂ ﮃ ﭼ الممتحنة: ١

  "நம்பிக்கை கொண்டோரே! எனது பாதையிலும், எனது திருப்தியை நாடியும் அறப்போருக்குப் புறப்படுவோராக நீங்கள் இருந்தால் எனது பகைவரையும், உங்கள் பகைவரையும் நீங்கள் அன்பு செலுத்தும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்கள் உங்களிடம் வந்துள்ள உண்மையை மறுக்கின்றனர். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பியதற்காக இத்தூதரையும், உங்களையும் (ஊரை விட்டு) அவர்கள் வெளியேற்றினார்கள். அவர்களிடம் இரகசியமாக அன்பைச் செலுத்துகிறீர்கள். நீங்கள் பகிரங்கப் படுத்தியதையும், மறைத்ததையும் நான் நன்கு அறிபவன். உங்களில் இதைச் செய்பவர் நேர்வழி தவறி விட்டார்." (மும்தஹினா : 1)

  அதற்கும் மேலாக தனக்கு மிக நெருக்கமான உறவுக்காரராக இருப்பினும், நிராகரிப்பாளர்களை நேசிப்பதை இறைவன் விசுவாசிக்குத் தடை செய்துள்ளான்.

  ﭽ ﭑ ﭒ ﭓ ﭔ ﭕ ﭖ ﭗ ﭘ ﭙ ﭚ ﭛ ﭜ ﭝ ﭞ ﭟ ﭠ ﭡ ﭢ ﭣ ﭤ ﭥ ﭼ المجادلة: ٢٢

  "அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காணமாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! " (முஜாதலா : 22).

  காபிர்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள் :

  "ஔஸகு உரல் இஸ்லாம்" எனும் நூலில் அஷ்ஷேஹ் முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் காபிர்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள் சிலவற்றைக் கூறியுள்ளார்கள் :

  1. பொதுவாக அவர்களை நேசித்தல்.

  2. உள்ளார்ந்த நேசமும் விருப்பமும்.

  3. அவர்கள் பக்கம் சற்று சாய்தல். இறைவன் கூறுகின்றான் :

  ﭽ ﯮ ﯯ ﯰ ﯱ ﯲ ﯳ ﯴ ﯵ ﯶ ﯷ ﯸ ﯹ ﯺ ﯻ ﯼ ﯽ ﯾ ﯿ ﰀ ﰁ ﰂ ﰃ ﭼ الإسراء: ٧٤ - ٧٥

  "(முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்! அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும்போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும்போது இரு மடங்கும் வேதனையைச் சுவைக்கச் செய்திருப்போம். பின்னர் நம்மிடம் உமக்காக எந்த உதவியாளரையும் காண மாட்டீர்." (இஸ்ராஃ : 74,75). படைப்புக்களிலே மிகச் சிறந்தவரான நபி (ஸல்) அவர்களுக்கே இவ்வெச்சரிக்கை என்றால் ஏனையோருக்கு எவ்வாறிருக்கும்?

  4. அவர்களுடன் வளைந்து கொடுத்து, சேர்ந்து போதல். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

  ﭽ ﯗ ﯘ ﯙ ﯚ ﭼ القلم: ٩

  "(முஹம்மதே!) நீர் வளைந்து கொடுத்தால் அவர்களும் வளைந்து கொடுக்க விரும்புகின்றனர்." (கலம் : 9).

  5. அவர்களது வார்த்தைகளிலும், ஆலோசனைகளிலும் அவர்களுக்கு வழிப்படுதல். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

  ﭽ ﭥ ﭦ ﭧ ﭨ ﭩ ﭪ ﭫ ﭬ ﭭ ﭮ ﭯ ﭰ ﭼ الكهف: ٢٨

  "நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது." (கஹ்ப்ஃ : 28). மேலும் கூறுகின்றான் :

  ﭽ ﯜ ﯝ ﯞ ﯟ ﯠ ﭼ القلم: ١٠

  "அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவனாகிய எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்" (கலம் : 10).

  6. இஸ்லாமியத் தலைவர்களிடத்தில் அமர்வதற்கும், அவர்களிடத்தில் நுழைவதற்கும் இக்காபிர்களை முன்னிலைப் படுத்தல்.

  7. ஆலோசனைகளில் அவர்களையும் சேர்த்துக் கொள்ளல்.

  8. தலைமைத்துவம், தொழிலாளர் கண்காணிப்பு, முகாமைத்துவம் போன்ற முஸ்லிம்களின் ஏதாவது பொறுப்புக்களை அவர்களிடம் ஒப்படைத்தல்.

  9. முஃமின்களை விடுத்து அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளல்.

  10. அவர்களுடன் அடிக்கடி உட்கார்தல், சந்தித்துக் கொள்ளல், அவர்களிடத்தில் அடிக்கடி சென்று வருதல்.

  11. அளவுக்கதிகமாக அவர்களுடன் புன்முறுவல் பூத்து, சரளமாகப் பேசுதல்.

  12. முஸ்லிம்களை விட அவர்களைக் கண்ணியப் படுத்தல்.

  13. அவர்கள் துரோகமிழைக்கக் கூடியவர்கள் என்று அல்லாஹ் கூறியும் அவர்களையே நம்பிக் கொண்டிருத்தல்.

  14. அவர்களது விடயங்களில் அவர்களுக்கு உதவுதல். அது அநியாயத்தை எழுதுவதற்காக பேனா, மைகளை எடுத்துக் கொடுப்பது போன்ற சிறு விடயமாயிருந்தாலும் சரியே.

  15. அவர்களுக்கு நலவு நாடுதல்.

  16. அவர்களது மனோஇச்சைகளைப் பின்பற்றல்.

  17. அவர்களுடன் கூட்டுழைப்புக் கொடுத்தல்.

  18. அவர்களது செயற்களைப் பார்த்துப் பூரிப்படைதல். அவர்களுக்கு ஒப்பாதல், அவர்களைப் போன்றே ஆடையணிதல்.

  19. அவர்களை கௌரவிக்கும் வகையில் தலைவர்கள், ஞானிகள் எனப் பெயர் சூட்டல். உதாரணமாக, அவர்களில் மத குருக்களை தலைவர் என்றும், வைத்தியர்களை ஞானி என்றும் அழைத்தல்.

  20. அவர்களது ஊர்களிலே அவர்களுடனேயே குடியிருத்தல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "யார் இணைவைப்பாளர்களுடனேயே கூட்டுச் சேர்ந்து அவர்களுடனேயே வசிக்கிறாரோ அவரும் அக்கூட்டத்தைச் சார்ந்தவரே". (அபூதாவூத் 2787.)

  முஸ்லிம்களை நேசித்தல் :

  இஸ்லாத்தின் எதிரிகளான காபிர்களை நேசிப்பதை எவ்வாறு இறைவன் தடை செய்தானோ, மறுபுறத்தில் முஸ்லிம்களை நேசிப்பதையும் விரும்புவதையும் கடமையாக்கியுள்ளான். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

  ﭽ ﯥ ﯦ ﯧ ﯨ ﯩ ﯪ ﯫ ﯬ ﯭ ﯮ ﯯ ﯰ ﯱ ﯲ ﯳ ﯴ ﯵ ﯶ ﯷ ﯸ ﯹ ﯺ ﯻ ﯼ ﯽ ﭼ المائدة: ٥٥ - ٥٦

  "அல்லாஹ்வும், அவனது தூதரும், தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிற நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள். அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்." (மாஇதா : 55, 56). மேலும் கூறுகின்றான் :

  ﭽ ﯜ ﯝ ﯞ ﭼ الحجرات: ١٠

  "நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம்." (ஹுஜ்ராத் : 10)

  முஸ்லிம்களை நேசிப்பதன் வெளிப்பாடுகள் :

  1. மார்க்கத்தைப் பாதுகாக்கும் பொருட்டு காபிர்கள் வாழும் ஊர்களை விட்டும் துறந்து முஸ்லிம்களின் ஊர்களுக்குச் செல்லல். காபிர்களுக்கு மத்தியில் வசிக்கும் முஸ்லிம்களை விட்டும் நபி (ஸல்) அவர்கள் நீங்கிக் கொண்டார்கள். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

  ﭽ ﭺ ﭻ ﭼ ﭽ ﭾ ﭿ ﮀ ﮁ ﮂ ﮃ ﮄ ﮅ ﮆ ﮇ ﮈ ﮉ ﮊﮋ ﮌ ﮍ ﮎ ﮏ ﮐ ﮑ ﮒ ﮓ ﮔ ﮕ ﮖ ﮗ ﭼ الأنفال: ٧٢

  "நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை." (அன்பால் : 72).

  2. முஸ்லிம்களின் மார்க்க, உலக தேவைகளுக்கேற்ப அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் உதவி, ஒத்தாசை புரிதல். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :

  ﭽ ﮑ ﮒ ﮓ ﮔ ﮕﮖ ﮗ ﮘ ﮙ ﮚ ﮛ ﮜ ﮝ ﮞ ﮟ ﮠ ﮡ ﮢﮣ ﮤ ﮥ ﮦﮧ ﮨ ﮩ ﮪ ﮫ ﭼ التوبة: ٧١

  "நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்." (தௌபாஃ : 71).

  மேலும் கூறுகின்றான் :

  ﭽ ﭺ ﭻ ﭼ ﭽ ﭾ ﭿ ﮀ ﮁ ﮂ ﮃ ﮄ ﮅ ﮆ ﮇ ﮈ ﮉ ﮊﮋ ﮌ ﮍ ﮎ ﮏ ﮐ ﮑ ﮒ ﮓ ﮔ ﮕ ﮖ ﮗﮘ ﮙ ﮚ ﮛ ﮜ ﮝ ﮞ ﮟ ﮠ ﮡ ﮢ ﮣ ﮤﮥ ﮦ ﮧ ﮨ ﮩ ﭼ الأنفال: ٧٢

  "நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்." (அன்பால் : 72).

  3. அவர்களுக்கு நலவு நாடுதல், நல்ல விடயங்களை அவர்களுக்காக நேசித்தல், அவர்களை ஏமாற்றி துரோகம் இழைக்காமலிருத்தல். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையான) இறை நம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார். (புஹாரி 13, முஸ்லிம் 45.)

  குறிப்பு :

  மேற்கூறப்பட்ட காபிர்களை நேசம் வைத்தலின் வெளிப்பாடுகளானது அவர்களை உள்ளத்தால் நேசித்து, முஸ்லிம்களை விட அவர்களை உயர்வாக மதித்தலையே குறிப்பிடுகின்றது. மாறாக நிர்ப்பந்த அடிப்படையில் அவர்களது ஊர்களிலே குடியிருப்பதையோ அவர்களுடன் அனுமதிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதையோ இஸ்லாம் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பின்வரும் ஆதாரங்களைக் குறிப்பிடலாம்:

  ﭽ ﭹ ﭺ ﭻ ﭼ ﭽ ﭾ ﭿ ﮀ ﮁ ﮂ ﮃ ﮄ ﮅ ﮆ ﮇ ﮈ ﮉﮊ ﮋ ﮌ ﮍ ﮎ ﮏ ﮐ ﮑ ﮒ ﮓ ﮔ ﮕ ﮖ ﮗ ﮘ ﮙ ﮚ ﮛ ﮜ ﮝ ﮞ ﮟﮠ ﮡ ﮢ ﮣ ﮤ ﮥ ﭼ الممتحنة: ٨ - ٩

  1. "மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்." (மும்தஹினா : 8, 9)

  2. அன்னை ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் தம் போர்க்கவசம் முப்பது ஸாவுகள் அளவு வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். (புஹாரி 2916.) (மொழிபெயர்ப்பாளர்)

  புகழனைத்தும் அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே. சாந்தியும் சமாதானமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் குடும்பத்தினர் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.