இமாம் செய்யத் இஸ்மாயில் - நூல்கள்
பொருட்ளின் எண்ணிக்கை: 3
- தமிழ் எழுத்தாளர் : ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான் மொழிபெயர்ப்பு : இமாம் செய்யத் இஸ்மாயில் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
கோட்பாடுகளும் அவற்றின் அவசியமும், அகீதாவின் சரியான அடிப்படைகளும் முன்னோரின் அணுகு முறையும், மனித வழிகேட்டின் ஆரம்பமும், பாதுகாப்புப் பெரும் வழிகளும். அதிகாரத்தில் ஏகத்தும், அல்குர்ஆன், ஸுன்னாவின் பார்வையில் றப்பு, வழி தவறிய சமூக சிந்தனையில் “றப்பின்” கருத்து, பிழையான கற்பனை வாதத்திற்குப் பதில், அல்லாஹ்வின் கட்டளைக்கு பிரபஞ்சம் அடிபணிதல், அல்லாஹ்வின் இருப்பையும், அவன் ஒருவன் என்பதையும் நிரூபிப்பதில் அல்குர்ஆனின் அணுகு முறை, தெய்வீகத் தன்மையில் ஏகத்துவம் உறுதி பெறல்
- தமிழ் எழுத்தாளர் : முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் மொழிபெயர்ப்பு : இமாம் செய்யத் இஸ்மாயில் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன் வெளியீட்டாளர் : இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை
இஸ்லாத்தில் அனுஷ்டானங்கள் போலவே அதன் கொள்கையும், கோட்பாடும் மிகவும் முக்கிய மானவை. ஏனைய மதத்தை பின்பற்றும் ஒருவர் இன்னொரு மதம் சார்ந்த மதபீடங்களுக்குச் சென்று அங்கு சில வழிபாடுகளையும், காணிக்கைகளையும் சமர்ப்பித்து வருவதைத் தவறாகவோ அல்லது தங்களின் மதத்திற்கு விரோதமான செயலாகவோ காண்பதில்லை. அதனால் அவர்கள் வேற்று மத குருக்களின் காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கூட ஒரு புண்ணிய கருமமாக கருதுகின்றனர். இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை.
- தமிழ் எழுத்தாளர் : ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான் மொழிபெயர்ப்பு : இமாம் செய்யத் இஸ்மாயில் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்
இக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸ்லிம்களின் மீதும் கடமை.