யார் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்?

விபரங்கள்

ஹூதி இயக்கம் தோற்றம் பெற்றது முதல் “ஷீஆ” சிந்தனையை பிரதான கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என யெமன் அரசை இவர்கள் கோரி வந்தனர். இதனை யெமன் அரசு மறுத்து வந்தது. இதுவே இவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எதிர் காலத்தில் பெரும் போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமைந்தது எனலாம்.

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  யார் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்?

  < தமிழ் >

  அப்துல் ஜப்பார் முஹம்மத் மக்தூம்

  —™

  முஹம்மத் அமீன்

  من هم الحوثيون؟

  اسم المؤلف

  محمد مخدوم بن عبد الجبار

  —™

  مراجعة:محمد أمين

  யார் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்?

  A.J.M. மக்தூம்

  ஹூதி கிளர்ச்சியாளர்கள்: யெமன் நாட்டின் வடக்கில் அமைந்துள்ள “ஸாஇதா” மாகாணத்தில் தோன்றிய வழிகெட்ட “ஷிஆ” சிந்தனையின் பின்னணியில் இயங்கும் அரசியல் இயக்கம். அந்த மாகாணத்தையே தனது கேந்திர நிலையமாக அமைத்து செயல்பட்டு வருகிறது. “ஷிஆ” க்களின் கொள்கைகளையம், திட்டங்களையும் நிறைவேற்றும் நோக்கில் இவ்வியக்கம் யெமன் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறது.

  அவ்வியக்கத்தின் ஸ்தாபகரும், ஆன்மிகத் தலைவராகவும் கருதப் படும் “ஹுசைன் பத்ருத் தீன் அல் ஹூதி” என்பவரின் பெயரை அடியொட்டியே ஹூதி கிளர்ச்சியாளர்கள் என அறியப்படுகிறது. 2004 செப்டம்பரில் இவர் யெமன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அவரின் இளைய சகோதரர் அப்துல்-மாலிக் அல்-ஹூதி என்பவரின் தலைமையில் தற்போது இயங்கும் இவ்வியக்கம் 2014-2015 இல் யெமனில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கிய காரணியாக விளங்கியது. அதன் பின்னர் யெமன் தலைநகர் சன்ஆ உட்பட பல்வேறு நகரங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. “அன்ஸாருல்லாஹ்” இயக்கம், அல்லது “அஷ் ஷபாபுல் முஃமின்” இயக்கம் எனவும் இவ்வியக்கம் அழைக்கப் படுகிறது.

  யெமனில் ஆதிக்கம் செலுத்தி வரும் இவர்கள், சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரெயின், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். ஈரானிடம் இருந்து ஆயுதங்கள், நிதியுதவி, மற்றும் பயிற்சிகள் பெற்று வருவதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப் படுகிறது.

  அதன் தோற்றமும், அடித்தளமும்

  இவ்வியக்கம் யெமன் அரசாங்கத்திற்கு எதிராக 2004 ம் ஆண்டு முதல் முறையாக வெடித்த புரட்சியின் பின்னரே நடைமுறை ரீதியாக உருவெடுத்தது. ஆனால் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளிலேயே அதன் உருவாக்கத்திற்கு அடித்தளமிடப் பட்டு விட்டதாக தெரிவிக்கப் படுகிறது.

  யெமன் நாட்டில் உள்ள “ஷீஆ” சிந்தனை கோட்பாட்டின் ஒரு பிரிவாகக் கருதப் படும் “ஸய்தி” பிரிவை சேர்ந்த வாலிபர்களை வழி நடாத்தும் பெயரில் 1986 ஆம் ஆண்டு “சலாஹ் அஹ்மத் பல்லீதாஹ்” என்பவரினால் உருவாக்கப் பட்ட இளைஞர் ஒன்றியத்தின் ஊடாக இவ்வியக்கத்தின் தோற்றத்திற்கான அடித்தளம் இடப்பட்டு விட்டதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

  “அலி அப்துல்லாஹ் ஸாலிஹி” ன் ஆட்சியின் கீழ் இருந்த அப்போதைய யெமன் அரசாங்கத்தின் மூலம், அந்நாட்டில் உள்ள “ஸய்தி” பிரிவினர் ஒடுக்கப் படுவதாகவும், பாரபட்சமாக நடாத்தப் படுவதாகவும், மத சுதந்திரங்கள் நசுக்கப்படுவதாகவும், “ஸய்தி” பிரிவின் அறிவுஜீவிகள் ஒதுக்கப் படுவதாகவும் கூறி, அதற்கெதிராக போராடும் நோக்கிலேயே மேற்படி அமைப்பு உருவாக்கப் பட்டதாக தெரிவிக்கப் படுகிறது.

  கருத்தியல் கோட்பாடு

  அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற யூதன் மூலம் வித்திடப்பட்ட “ஷீஆ” கொள்கைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே யெமன் “ஹூதி” இயக்கமும் பிறந்துள்ளது. சம காலத்தில் ஈரானை தலைமையகமாக கொண்டு இயங்கும் “ஷீஆ” பிரிவினர் முஸ்லிம்களை குறி வைத்து தங்கள் பிரச்சாரங்களை மிகப் பெரிய அளவில் நடை முறைப் படுத்திக் கொண்டிருகின்றனர். மத்திய கிழக்கில் தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்கும் நோக்கில் பல்வேறு குழப்பங்களையும், அரசியல் நெருக்கடிகளையும் தூண்டிவிடுகின்றனர். அங்கு இயங்கும் போராட்டக் குழுக்களுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆயுதங்கள் விநியோகித்து நாடுகளை துண்டாடி வருகின்றனர். இது இவ்வாறு இருக்க மத்திய கிழக்கில் மாத்திரமின்றி இலங்கை இந்தியா உட்பட முழு உலகிலும் ஈரானின் ஊடுருவல் அதிகரித்து வருகின்றமை கண்கூடானதாகும்.

  இவ்வியக்கத்தின் ஸ்தாபகரும், ஆன்மீகத் தலைவருமான ஹுசைனின் தந்தை பத்ருத் தீன் “ஷீஆ” சிந்தனையினால் பாரிய அளவில் கவரப்பட்டிருந்தார். இவருடன் இணைந்து இவரின் மகன் ஹுசைனும் ஈரான், லெபனான் போன்ற நாடுகளுக்கு சென்று “ஷீஆ” கொள்கைகளை விருத்தி செய்து கொண்டதோடு, பயிட்சிகளும் பெற்றுக் கொண்டனர்.

  இவ்வியக்கம் தோற்றம் பெற்றது முதல் “ஷீஆ” சிந்தனையை பிரதான கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என யெமன் அரசை இவர்கள் கோரி வந்தனர். இதனை யெமன் அரசு மறுத்து வந்தது. இதுவே இவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எதிர் காலத்தில் பெரும் போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமைந்தது எனலாம்.

  அரசியல் சிந்தனை

  1990 ம் ஆண்டு மே மாதம் யெமன் ஒருங்கிணைக்கப்பட்டு பல கட்சி முறை ஆட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட போது, “ஸய்தி” பிரிவை சேர்ந்த வாலிபர்களை வழி நடாத்தும் பெயரில் உருவான இளைஞர் ஒன்றியம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதை விட்டு விட்டு அரசியலில் தன்னை நுழைத்து கொண்டது.

  “ஹிஸ்புல் ஹக்” எனும் பெயரில் இயங்கி வந்த குறித்த கட்சி, 1992 ஆம் ஆண்டின் பிறகு “அஷ் ஷபாபுல் முஃமின்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

  2004 ஆம் ஆண்டு யெமன் படைகளுக்கும், இவர்களுக்கும் இடையில் போராட்டம் வெடித்த போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஹுசைன் அல் ஹூதி என்பவர் இவ்வியக்கத்தை தலைமை தாங்கி வழி நடாத்தி வந்தார். 2004 செப்டம்பரில் யெமன் இராணுவத்தினரால் அவர் கொல்லப்பட்டப் போது அவரின் தந்தை பத்ருத்தீன் இயக்கத்தை வழி நடாத்தி வந்தார். அவருக்குப்பிறகு அவரது இளைய மகன் அப்துல் மலிக் இயக்கத்தைப் பொறுப்பேற்றார்.

  2011 ம் ஆண்டு வரை யெமன் அரசாங்கத்துடன் பல மோதல்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். 2009 ஆம் ஆண்டில் “ஸாஇதா” எல்லையில் சவுதி படைகளுடன் மோதலில் இவர்கள் ஈடுபட்டனர்.

  2011 ம் ஆண்டு யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹின் ஆட்சிக்கு எதிராக புரட்சி வெடித்த போது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பாரிய பங்களிப்பு செய்தனர்.

  சாலிஹின் பதவி கவிழ்க்கப்பட்ட பிறகு ஆட்சிக்கு வந்த யெமன் ஜனாதிபதி அப்து ரப்பாஹ் மன்சூர் ஹாதிக்கு எதிராகவும் 2014 ம் ஆண்டு ஆகஸ்ட் 18 ல் போராட்டம் நடாத்தி யெமன் தலை நகர் சன்ஆ வுக்குள் நுழைந்தனர். பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹின் விசுவாசப் படைகளுடன் இணைந்து அதே ஆண்டு செப்டம்பர் 21 ல் முழு நகரையும் கைப்பற்றினர். ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களின் தலைமையகம் அனைத்தையும் கைப்பற்றினர்.

  அதன் பிறகு “ஹூதி” கிளர்ச்சியாளர்களினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த யெமன் ஜனாதிபதி அப்து ரப்பாஹ் மன்சூர் ஹாதி 2015 பிப்ரவரி 20 இல் தப்பிச்சென்று தனது கடைமைகளை முன்னெடுத்ததோடு, யெமன் நாட்டையும் மக்களையும் பாதுகாக்குமாறு சவுதி அரசிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக 2015 மார்ச் 26 ல் “ஆசிபதுல் ஹஸ்ம்” இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சவுதி அரேபியாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த இராணுவ நடவடிக்கைக்கு பத்துக்கும் மேற்பட்ட அரபு நாடுகள் கூட்டணி சேர்ந்துள்ளன.

  அறிவியல் வகைகள்: