ஷஃபான் மாத சிறப்பு

விபரங்கள்

உஸாமா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்கின்றபடி ஏனைய மாதங்களில் நோன்பு நோற்பதை நான் கண்டதில்லை” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் “ரஜபுக்கும், ரமழானுக்கும் மத்தியிலிருக்கும் அந்த மாதத்தை மக்கள் மறந்து விடுகின்றனர். மேலும் இந்த மாதத்தில் மக்களின் செயல்கள் சர்வலோக இரட்சகனிடம் உயர்த்தப் படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என்னுடைய செயல்கள் உயர்த்தப்படுவைதை நான் வெகுவாக விரும்புகின்றேன்” என்று நபியவர்கள் கூறினார்கள்” எ

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  ஷஃபான் மாத சிறப்பு

  فضل شهر شعبان

  < tamil தமிழ்-- تاميلي>

  Y.M.S.I.இமாம்

  اسم المؤلف

  سيد إسماعيل إمام

  —™

  Reviser's name:

  முஹம்மத் அமீன்

  مراجعة: محمد أمين

  ஷஃபான் மாத சிறப்பு

  அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும் நம் உயிரிலும் மேலான நமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் கிளையார், தோழர்கள் மீதும், கியாமம் வரை அன்னாரைப் பின்பற்றிய முஃமின்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.

  வருடத்தில் 12 மாதங்களை ஏற்படுத்திய அல்லாஹ் அதில் 04 மாதங்களை, கண்ணியம் பொருந்தியவையாக ஆக்கியுள்ளான். இது தவிர வேறு சில மாதங்களையும், நாட்களையும், நேரங்களையும், இடங்களையும் சிறப்புக் குரியவைகளாக அவன் ஆக்கியுள்ளான். அது மாத்திர மன்றி அந்த காலங்களிலும் ஸ்தானங்களிலும் யார் நற்கிரியைகள் செய்துவருவாரோ, அன்னவருக்கு பன்மடங்கு கூலிகள் வழங்கி அவரின் அந்தஸ்தையும் அல்லாஹ் உயர்த்துகின்றான். இவ்வாறான அரிய சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் ‘ஷஃபான்’ மாதம்.

  இதன் கண்ணியத்தையும், மகத்துவத்தையும் உணர்ந்த நபித் தோழர்களும், சான்றோர்களும் அந்த மாதத்தில் அதிகமான நல்லமல்கள் செய்து, அந்த அரிய சந்தர்ப்பத்தைப் நல்ல முறையில் பயன்படுத்திக்

  கொண்டனர். இவ்வாறான சந்தர்ப்பங்களை சகல முஸ்லிம்களும் பயன் படுத்திக் கொள்வது அவசியம். ஏனெனில் வாழ்வில் அத்தகைய வாய்ப்புக்களை இன்னொரு முறை சந்திக்கலாமா? என்பது சந்தேகமே. கடந்த காலங்களில் நம்முடன் இருந்த பலர் இன்று நம்முடன் இல்லை என்பதே அதற்குப் போதிய சான்றாகும். எனவேதான் நபியவர்கள், அப்துல்லாஹ் இப்னு உமரிடம்,

  إِغْتَنِمْ خَمْساً قَبْلَ خَمْسٍ :شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ وَصِحَّتكَ قَبْلَ سَقَمِكَ وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ وفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ.

  " ஐந்து விடயங்களுக்கு முன் ஐந்து விடயங்களைப் பயன் படுத்திக் கொள், அவையாவன: உன் முதுமைக்கு முன் உனது இளமையையும், உன் நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன் வறுமைக்கு முன் உன் செல்வத்தையும், உன் வேலைப் பளுவுக்கு முன் உன் ஓய்வையும், உன் மரணத்திற்கு முன் உன் ஜீவியத்தையும்” என்றார்கள்.

  எனவே மனிதன் பெற்றுள்ள இளமை, ஆரோக்கியம், செல்வம், ஓய்வு, ஜீவியம் எனும் இவ்வைந்து வாய்ப்புக்களும் நிரந்தரமானவை அல்ல. அவை அழியக் கூடியவை. எனவேதான் அவை அழிந்து போகு முன் அந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு

  நபியவர்கள் உபதேசம் செய்தார்கள். மனித வாழ்வின் காலத்தையும் நேரத்தையும் மூன்றாக வகைப்படுத்தலாம். ஒன்று கடந்த காலம், அது திரும்பவும் வராது. இரண்டு நிகழ் காலம், கருமங்களைச் செய்ய வேண்டிய, சந்தர்ப்பங்களைத் தவறவிடாமல் பயன்படுத்த வேண்டிய காலம் அது. மூனறாவது வருங்காலம். எதிர்பார்க்கப் படும் அந்தக் காலம் வரை நாம் ஜீவித்திருப்போமா இல்லையா என்பது உறுதியற்றது. குறுகிய காலத்தில் அதிக நன்மைகளைத் தேடித் தரும், விசேடமான கால நேரமும் அப்படிப்பட்டதுதான். எனவே பல தடவைகள் ஷஃபான் மாதத்தின் அரிய சந்தர்ப்பத்தைக் கை நழுவிட்ட நாம் இனியேனும் அவ்வாறு நிகழாது பார்த்துக் கொள்வது நமது கடமை. இனி இம்மாதம் குறித்து நபியவர்களின் ஸுன்னாவில் வந்திருப்பதைக் கவனிப்போம்.

  عن عائشة رضي الله عنها قالت: مَا مِنْ شَهْرٍ أَكْثَرَ صِيَامًا لِرَسُوْلِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْهُ إلاَّ فِيْ شَهْرِ شَعْبَانَ ( رواه البخاري ومسلم وابو داود والترمذي والنسائي)

  " ஷஃபான் மாத்தில் போன்று வேறு எந்த மாதத்திலும் நபியவர்கள் அதிகமாக நோன்பு நோற்றதில்லை” என்று ஆஇஷா (ரழி) அவர்கள் குறிபிப்பிட்டுள்ளார்கள்.

  நபியவர்களின் இந்தச் செயலானது, அன்னார் இம்மாதத்தில் அதிகம் நோன்பு நோற்க விரும்பினார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதனை வேறு சில ஹதீஸ்களும் தெளிவுபடுத்துகின்றன.

  عَن ابي سلمة انَّ عائشة رضي الله عنها قالت لَمْ يَكُنِ النبي صلى الله عليه وسلم يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ.فَإنَّه كَان يصُومُ شَعْبَانَ كُلَّهُ فَكَانَ يَقُولُ خُذُوا مِنَ الْعَمَل ما تُطِيْقُونَ، فَإنَّ اللَّه لاَيَمَلُّ حتَّى تَمَلُّوْا.وفي رواية لَمْ يَكُنْ صَلَّى الله عليه وسلم يَصُوم مِنَ السَّنَةِ تَامًّا إِلاَّ شَعْبَانَ، يَصِلُ بِه رمضانَ (رواه الخمسة)

  “ ஷஃபான் மாதத்தை தவிர வேறு மாதங்கள் எதிலும் ரஸூல் (ஸல்) அவர்கள் அதிகமாக நோன்பு நோற்கவில்லை. பின்னர், அன்னார் ஷஃபான் மாதம் பூராகவும் நோன்பு நோற்று வந்தார்கள். “மேலும் அல்லாஹ்வோ, சோர்வு அடைவதில்லை, எனவே உங்களுக்கு சோர்வு ஏற்படும் வரையில் உங்களால் இயன்ற வரை நீங்கள் நல்லமல்களைச் செய்யுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள், என்று ஆஇஷா (ரழி) அவர்கள் தன்னிடம் அறிவித்தார்கள், என அபூ ஸலமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இன்னொரு அறிவிப்பில், நபியவர்கள் வருடத்தில் ஷஃபான் மாதம் தவிர்ந்த வேறு எந்த வொரு மாதத்திலும், மாதம் பூராகவும் நோன்பு

  நோற்றதில்லை. மேலும் அதனை ரமழான் மாதத்துடன் இணைத்துக் கொள்வார்கள், என்று இடம் பெற்றுள்ளது.

  عنْ أبِيْ سَلَمَةَ أنَّ عَائِشَةَ رضَيَ اللهُ عَنْها قَالَتْ كَانَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يَصُوْمُ حَتَّى نَقُول لاَ يُفْطِرُ ، وَيُفْطِرُ حَتَّى نَقُول لايَصُومُ ، وَمَا رَأَيْتُ

  رَسُولَ الله صلى الله عليه وسلم إسْتَكْمَلَ شَهْرًا قَطُّ إلاَّ شَهْرَ رَمَضَانَ وَمَا رَأيْتُهُ في شَهْرٍ أكْثَرَ مِنْهُ صيَامًا إِلاَّ في شَعْبَانَ (متفق عليه)

  “நோன்பு நோற்பதை நபியவர்கள் நிறுத்திக் கொள்ளமாட்டார்களோ, என்று நாங்கள் நினைத்து பிரஸ்த்தாபிக்கும் வரையில் அன்னார் தொடர்ந்தும் நோன்பு நோற்றுக் கொண்டிருப்பார்கள். மேலும் அன்னார், இனி நோன்பு நோற்கமாட்டார்கள் என்று நாம் கூறும் வரையில் அன்னார் நோன்பு நோற்காமல் இருந்து வருவார்கள். மேலும் ஷஃபான் அல்லாத மாதங்களில் ரஸூல் صلى الله عليه وسلمஅவர்கள் அதிகமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை” என்று ஆஇஷா (ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள், என்று அபூ ஸலமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

  இது வரை குறிப்பிட்ட இந்த ஹதீஸ்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதில் நபியவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன.

  மேலும் அந்த மாதத்தில் நோன்பு நோற்குமாறு தன் தோழர்களையும் நபியவர்கள் தூண்டினார்கள் என்பதையும் இந்த ஹதீஸ்களில் காண முடிகின்றது. எனவேதான் ஸஹாபாக்களும், அன்னவர்களை அடுத்து வந்த தாபிஈன்களும், தபஉத் தாபிஈன்களும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டி வந்ததை அவர்களின் வாழ்க்கையில் காணமுடிகிறது. நபியவர்வர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதில் ஆர்வம் கொண்டிருந்தமைக்கான காரணம் பின்வரும் நபி மொழியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

  عَنْ أُسَامَةَ قال قُلْتُ يَارَسولَ اللَّه لَمْ أرَكَ تَصُوْمُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا مِنْ شَعْبَانَ قَالَ ذلك شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبَ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيْهِ الأَعْمَالُ اِلَى رَبِّ الْعَالَمِيْنَ فَأُحِبُّ أنْ يُرْفَعَ عَمَلِيْ وَأنَا صَائِمٌ (واه النسائي)

  “உஸாமா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்கின்றபடி ஏனைய மாதங்களில் நோன்பு நோற்பதை நான் கண்டதில்லை” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் “ரஜபுக்கும், ரமழானுக்கும் மத்தியிலிருக்கும் அந்த மாதத்தை மக்கள் மறந்து விடுகின்றனர். மேலும் இந்த மாதத்தில் மக்களின் செயல்கள் சர்வலோக இரட்சகனிடம் உயர்த்தப்

  படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என்னுடைய செயல்கள் உயர்த்தப்படுவைதை நான் வெகுவாக விரும்புகின்றேன்” என்று நபியவர்கள் கூறினார்கள்” என உஸாமா ( ரழி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

  எல்லா விடயங்களுக்கும் பருவ காலங்கள் உண்டு. குறிப்பிடத்தக்க ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் தங்களுக்குரிய பருவ காலங்களைத் தவற விடமாட்டார் கள். ஏனெனில் அதன் மூலம் உண்டாகும் இழப்பும் நஷ்டமும் ஈடு செய்ய முடியாதது என்பதை அவர்கள் அறிவர். எனவே அந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள எந்தவொரு தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் செய்ய அவர்கள் பின் நிற்கமாட்டார்கள். உதாரணமாக வியாபாரிகளை எடுத்துக் கொண்டால், சித்திரைக் காலம் அவர்களின் பருவ காலம் என்ற படியால், அதிக வருமாணத்தை ஈட்ட வாய்ப்பாகவுள்ள அந்த காலத்தில், அவர்கள் தாங்கிக் கொள்ளும் அர்ப்பணிப்புக்களும், சிரமங்களும் கொஞ்நஞ்சமல்ல. உரிய நேரத்தில் சாப்ப்பிடுவதில்லை, உறங்குவதில்லை. எவ்வளவுதான் களைப்பும் சோர்வும் வந்த போதிலும் அதனையெல்லாம் சரிபடுத்திக் கொண்டு உழைப்பிலேயே அவர்கள் குறியாக இருப்பர்.

  இவ்வாறே குறுகிய காலத்தில் இபாதத்துக்கள் செய்து, அதிக நன்மைகளைத் தேடிக் கொள்வதற்காக, அடியார்களுக்குச் சில விசேடமான சந்தர்ப்ப சூழ்நிலை களை அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்துள்ளான். அதில் ஒன்று தான் ஷஃபான் மாதம். எனவே தான் சிரமம் பாராது, முடியுமான வரை அந்த மாதத்தில் அதிகமாக நல்லமல்களைச் செய்யுமாறு தன் தோழர்களை நபியவர்கள் தூண்டினார்கள்.

  "خُذُوا مِنَ الأَعْمَالِ مَا تُطِيْقُونَ حَتَّى تَمَلُّوا" “இந்த மாதத்தில் உங்களால் முடிந்த வரை, நீங்கள் சோர்வடையும் வரையில் நல்லமல்களைச் செய்து வாருங்கள்” என்று நபியவர்கள் தன் தோழர்களுக்கு கூறினார்கள். எனவே ஷஃபான் மாதமானது அதிக நன்மைகளை ஈட்டித் தரும் ஒரு பருவ காலம் என்ற படியால் என்ன பாடுபட்டாயினும் நன்மைகளை அதிகம், அதிகம் தேடிக் கொள்ள அந்த மாதத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

  நபியவர்கள், ரமழான் மாதமல்லாத ஏனைய மாதம் எதிலும் பூரணமாக நோன்பு நோற்றதில்லை அப்படி இருந்தும் சில ஹதீஸில் நபியவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கருத்தாவது “ அறபு மொழிப் பிரயோகத்தின் படி ஒரு மாதத்தில் அதிகமான நாட்கள் நோன்பு நோற்றிருந்த

  வனைப் பற்றிக் குறிப்படும் போது, صامَ الشهر كله"” அவன் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருந்தான் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளப் பட்டதாகும்” என்று இப்னுல் முபாரக் அவர்கள் கூறியுள்ளார்கள்” என இமாம் துர்மிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே நபியவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றார்கள் என்பதன் கருத்து, அந்த மாதத்தில் அன்னார் அதிகமாக நோன்பு நோற்றாக்கள் என்பதாகும்.

  மேலும் ஷஃபானின் அரை மாத இரவில் தனிப்பட்ட பிரத்தியேகமான தொழுகை எதுவும் இருக்கின்றனவா? என்ற விடயமும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியதாகும். சிலர் இந்த மாதத்தின் 15வது இரவிலும் பகலிலும் நபியவர்களின் வழிமுறையில் காணப்படாத சில அமல்களைச் செய்து வருகிறார்கள். அவை தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

  இந்த இரவில் சிலர் மேற்கொள்ளும் சடங்குகளைப் பற்றிக் குறிப்பிடும் அஷ்ஷைக் பின் பாஸ் அவர்கள் “சிலர் இன்றைய இரவில் பிரத்தியேகமான ஒரு உணவை சமைத்து அதனை ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக் கும் வழங்கி வருகின்றனர். அதனை அவர்கள் عَشَاءُ الوَالِدَيْنِ “பெற்றோரின் இராப் போசனம்” என்று அழைக்கின்றனர். ஆனால் இது எந்தவொரு அடிப்படையும் இல்லாத ஒரு

  செயலாகும். மேலும் வருடத்தின் நடவடிக்கைகள் அன்றைய இரவில் திட்டமிடப்படுவதாகப் பரவலாகப் பேசப்படுகின்றது. ஆனால் அது தவறானது. ஏனெனில் செயல்கள் திட்டமிடப்படும் இரவு ‘லைலதுல் கத்ர்’ இரவு என்பதை فيها يفرق كل امر حكيم“ உறுதியான எல்லா காரியங்களும் அதில் தான் (லைலதுல் கத்ர் இரவில் தான் நிர்மாணிக்கப் பட்டு) பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.” என்ற அல்லாஹ்வின் வாக்கு உறுதிப் படுத்துகின்றது” என்று பின் பாஸ் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

  ‘மேலும் தப்ஸீருல் மனார்’ என்ற நூலின் ஆசிரியர் ரஷீத் ரழா அவர்கள், “அல்லாஹ்வின் வேதத்திலோ அவனின் வழி முறையிலோ, அன்றைய இரவில் குறிப்பிடத்தக்க விசேட இபாதத்துக்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், அஷ்ஷைக் பின் பாஸ் அவர்கள், அன்றைய இரவில் தொழும் தொழுகைக்கு தனிச் சிறப்புக்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்ற ஹதீஸ்கள் யாவும், மௌழூஆன, புணையப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

  எனவே ஷஃபான் மாதத்தின் பொதுச் சிறப்பைக் கருத்திற் கொண்டு தனிப்பட்ட முறையில் அதன் எந்த வொரு தினத்திற்கும் தனிச் சிறப்புக்கள் வழங்காது, அந்த மாதத்தின் அதிகமான நாட்களில் சிரமம் பாராது நோன்பு

  நோற்றல், அல் குர்ஆனை பாராயணம் செய்தல், தான தர்மங்கள் செய்தல் போன்ற வேறு பல நன்மையான காரியங்களில் நேரத்தைப் பயன்படுத்தி நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்வதே சிறந்தது. எனவே இந்த மாதத்தை நபியவர்களின் ஸுன்னாவின் அடிப்படையில் நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.

  وصلى الله وسلم على سيدنا وحبيبنا محمد واله وصحبه أجمعين

  திக்குவல்லை இமாம் (ரஷாதீ_ பெங்களூர்)

  21/05/2015