சுத்தம், தொழுகை, ஜனாஸா, ஸகாத், ஸதகா, நோன்பு, ஹஜ் மற்று குர்பான்போன்ற சகல விஷயங்களிலும் ஒரு முஸ்லிம் பின்பற்றக் கூடிய முறையில் நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டி வழி முறளை பற்றிய விளக்கம்.
1.ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மத் (சல்) வரை வந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து ஒரே ஒரு செய்தி தான் கொண்டு வந்தார்கள். இதனை தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் உறுதி படுத்துவதை ஆதார பூர்வமாக விளக்கும் சின்னஞ் சிறு நூல்.
ஸஹாபாக்களை மகிமை படுத்த வேண்டிய எமது கடமை, அதற்கான 10 அடிப்படை காரணங்கள், பித்ஆக்களை ஸஹாபாக்கள் பின்பற்றாத காரணத்தால் முஸ்லிம்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை.. உயிருடன் உலகில் வாழ்ந்த காலத்தில் சுவர்க்கத்தில் இடம் பிடித்த உத்தம ஸஹாப்பாக்கள் 10 பேர்களின் பெயர்கள் என்பன இதில் அடங்கியுள்ளன.
துஆ ஒரு வணக்கமாகும். அதனை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்க வேண்டும். அதன் சிறப்புகள், ஒழுங்கு முறைகள், ஏற்றுக் கொள்ளப்படும் துஆக்கள், நேரங்கள், இடங்கள் என்பது பற்றிய விளக்கம்.
இஸலாத்தில் ஏக இறைவன் மீது நம்பிக்கை வைப்பதில் பின்பற்ற வேண்டிய நெறிகள் பற்றிய விளக்கம். தவ்ஹீத் உலூஹிய்யா, தவ்ஹீத் ரூபூபிய்யா, அஸ்மா வ ஸிபா என்பவற்றின் முக்கியத்துவம். வணக்கத்தில் ஏகத்துவக் கொள்கையை முழுமையாக பின்பற்றாதவர்கள் செய்யக்கூடிய பிழைகள் காரணமாக, அவர்களது இறை விசுவாசமே உறுதியற்ற நிலைக்கு ஆளாக நேரும் ஆபத்து பற்றிய விளக்கங்கள் இதில் உள்ளன.
1. சமூகத்தில் பள்ளிவாசலின் முக்கியத்துவம், அங்கு பேணப்படவேண்டிய முறைகள். 2. பள்ளிவாசல்- மஸ்ஜித் என்பது என்ன? 3. ஆரம்ப கால மஸ்ஜிதின் அமைப்பு. 4. தொழுகை நிறைவேற்ற அனுமதிக்கப் படாத இடங்கள். 5. உலகிலுள்ள மிகச் சிறந்த பள்ளி எது? 6. பள்ளியை கட்டுவிக்கின்றவன் பெறும் வெகுமதி என்ன? 7. மஸ்ஜிதின் பங்களிப்பு என்ன?