சுத்தம், தொழுகை, ஜனாஸா, ஸகாத், ஸதகா, நோன்பு, ஹஜ் மற்று குர்பான்போன்ற சகல விஷயங்களிலும் ஒரு முஸ்லிம் பின்பற்றக் கூடிய முறையில் நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டி வழி முறளை பற்றிய விளக்கம்.
1.ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மத் (சல்) வரை வந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து ஒரே ஒரு செய்தி தான் கொண்டு வந்தார்கள். இதனை தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் உறுதி படுத்துவதை ஆதார பூர்வமாக விளக்கும் சின்னஞ் சிறு நூல்.
குர்ஆனுக்கும், சுன்னத்துக்கும் மாற்றமாக செயல் புரிந்த அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூதனின் தலைமையில் உதுமான் (ரழி) எதிராக உருவாகிய அரசியல் கூட்டம் தான் ஷீஆக்கள். சில வருடங்கள் கழிந்த பின் இதுவே இன்னுமொரு மதமாக மாறியது. இன்று குர்ஆனையே குற்றம் கூறி, அலி (ரழி) முன்வைத்து சரித்திரத்தையே மாற்றம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.
வாழ்க்யில் ஒழுக்கத்தை கடைப்படிக்க வேண்டிய அவசியத்தை முழுமையாக அறிந்துக் கொண்ட முஸ்லிம்கள், மற்றவர்களும் அதன் சிறப்பை அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக, தமது இச்சைப்படி வாழும் மக்களை எதிர் நோக்கியிருக்கும் நரகத்தை அவர்கள் அறிவார்கள். ஆகையால் இந்த மூமின்கள் உலகில் வாழும் அனைத்து மக்களும் அல்லாஹ் எற்றுக்கொள்ளும் வழியில் வாழ்ந்து, நரகத்தின் கொடுமைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நாடுகிறார்கள்.
ஸஹாபாக்களை மகிமை படுத்த வேண்டிய எமது கடமை, அதற்கான 10 அடிப்படை காரணங்கள், பித்ஆக்களை ஸஹாபாக்கள் பின்பற்றாத காரணத்தால் முஸ்லிம்களும் அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை.. உயிருடன் உலகில் வாழ்ந்த காலத்தில் சுவர்க்கத்தில் இடம் பிடித்த உத்தம ஸஹாப்பாக்கள் 10 பேர்களின் பெயர்கள் என்பன இதில் அடங்கியுள்ளன.
அல்லாஹ்வுடைய திருப்திதான் எமது வாழ்வின் நோக்கம். மறுமையே எமது இலக்கு. அதற்காக எந்த துன்பத்தையும் தாங்குவோம். இஸ்லாத்தை அழிக்க முயன்ற பலர் தோல்வி கண்டனர. அதனால் உஸமான் (ரழி)காலத்தில் இஸ்லாத்தில் ரகசியமா புகுந்த ஒரு யூதன் இஸ்லாத்தில் பிளவை ஏற்படுத்தினான். அந்த யூதனின் வலையில் சிக்கியவர்கள் ஷீஆக்களாக மாறினார்கள்.
சுமார் 1,500 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஏக இறை வணக்கம், எத்தனையோ தேசங்களை மாற்றி அமைத்தது. எனினும் இஸ்லாத்தைப் பற்றிய விபரங்களும், விளக்கங்களும் உலக மக்களுக்கு நிறையவே இருப்பினும், இஸ்லாத்தை பற்றிய புதிர்கள் இன்னும் எஞ்சியிருப்பதை காண்கிறோம். இன்னும் மக்கள் உள்ளத்தில் பிழையான கருத்துக்களையும், வேற்றுமையையும் உண்டு பண்ணும் பத்து புதிர்களையும், கட்டுக் கதைகளையும் சற்று பரீட்சித்துப் பார்ப்போம்.
துஆ ஒரு வணக்கமாகும். அதனை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்க வேண்டும். அதன் சிறப்புகள், ஒழுங்கு முறைகள், ஏற்றுக் கொள்ளப்படும் துஆக்கள், நேரங்கள், இடங்கள் என்பது பற்றிய விளக்கம்.
இஸலாத்தில் ஏக இறைவன் மீது நம்பிக்கை வைப்பதில் பின்பற்ற வேண்டிய நெறிகள் பற்றிய விளக்கம். தவ்ஹீத் உலூஹிய்யா, தவ்ஹீத் ரூபூபிய்யா, அஸ்மா வ ஸிபா என்பவற்றின் முக்கியத்துவம். வணக்கத்தில் ஏகத்துவக் கொள்கையை முழுமையாக பின்பற்றாதவர்கள் செய்யக்கூடிய பிழைகள் காரணமாக, அவர்களது இறை விசுவாசமே உறுதியற்ற நிலைக்கு ஆளாக நேரும் ஆபத்து பற்றிய விளக்கங்கள் இதில் உள்ளன.
முஸ்லிம்கள் பரீட்சிக்கப் படுகிறார்களா? நாம் வரம்பு மீறி வாழும் போது அல்லாஹ் எமக்கு தண்டனையாக சோதனைகளை அனுப்புவான். நாம் பொறுமையுடன் சோதனைகளை சகித்து கொண்டால் எமது பாவங்களுக்கு மன்னிப்பு அளிக்கவும், சுவர்க்கத்தில் எமது நிலையை உயர்த்தவும் இவை காரணங்களாக இருக்கவும் கூடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி.
பத்ர் யுத்தத்தின் பின்னணியும் யுத்தத்தின் விளைவுகளும்.. ரமதானில் நடைபெற்ற பத்ர் யுத்தத்தில் அல்லாஹ் அருளிய உதவியின் பிரதிபலனாக இஸ்லாம் உலகெங்கும் பரவியது.
மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – தாருல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் பெண்களுக்கான அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் அஸ்கர் அவர்களுடன் கருத்து பரிமாறல்