புனிதமிக்க அல் குர்ஆனை திரிபுபடுத்தும் ஷீஆக்கள்

விபரங்கள்

எம்மிடம் உள்ள அல் குர்ஆன் பிரதியில் இல்லாத ஒரு சூராஹ் ஷீஆ பிரிவினரிடையே உள்ள குர்ஆனில் உள்ளதாக கூறும் கருத்துக்கு உண்மையான விளக்கம்.

Download
குறிப்பொன்றை அனுப்ப

விபரமான விளக்கம்

  புனிதமிக்க அல் குர்ஆனை

  திரிபுபடுத்தும் ஷீஆக்கள்

  تحريف القرآن عند الرافضة

  < தமிழ் - تاميلية >

  ஷெய்க் சாலிஹ் அல் முனஜ்ஜித்

  اسم المؤلف

  الشيخ محمد صالح المنجد

  —™

  அப்துல் ஜப்பார் முஹம்மத் மக்தூம்

  Reviser's name:முஹம்மத் அமீன்

  ترجمة:محمد مخدوم عبد الجبار

  مراجعة: محمد أمين

  புனிதமிக்க அல் குர்ஆனை

  திரிபுபடுத்தும் ஷீஆக்கள்

  ஷெய்க் சாலிஹ் அல் முனஜ்ஜித்

  தமிழில் அப்துல் ஜப்பார் முஹம்மத் மக்தூம்

  கேள்வி:

  எம்மிடம் உள்ள அல் குர்ஆன் பிரதியில் இல்லாத ஒரு சூராஹ் ஷீஆ பிரிவினரிடையே உள்ள குர்ஆனில் உள்ளதாக எனது சக ஊழியர் ஒருவர் கூறினார். அந்த சூராவின் பெயர் “சூரத்துல் விலாயாஹ்" (سورة الولاية) என்பதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  இது சரியா...? தெளிவு படுத்தவும்,,,

  பதில்:

  ஷீஆ கொள்கை சார்ந்த அறிஞர்கள் சிலர் “சூரத்துல் விலாயாஹ்" (سورة الولاية) என்ற ஓர் சூரா அல் குர் ஆனில் இருந்து அதனை சகாபாக்கள் மறைத்து விட்டதாக கூறுகின்றனர். அக்கொள்கை சார்ந்த சில அறிஞர்கள் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். அவர்களும் (அவர்களின் உண்மையான கொள்கைகளை மறைத்து) தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே இவ்வாறு செய்கின்றனர்.

  (ஹிஜ்ரி 1320 ம் ஆண்டு மரணித்த) அவர்களின் அறிஞர்களில் ஒருவராக கருதப்படும் ( ميرزا حسين محمد تقي النوري الطبرسي ) “மிர்ஸா ஹுஸைன் முஹம்மத் தகிய் அன்னூரி அத் தப்ருசி" என்பவர் இவ்வாறு (سورة الولاية) என்ற ஓர் சூரா அல் குர் ஆனில் இருந்ததாக கூறுகிறார்.

  இது தொடர்ப்பில் அவர் எழுதியுள்ள ஓர் நூலில் சகாபாக்கள் பல சூராக்களை அல் குர்ஆனில் இருந்து மறைத்து திரிபுபடுத்தி விட்டதாகவும், அதில் ஒன்றுதான் “சூரத்துல் விலாயாஹ்" (سورة الولاية) என்ற சூராவாகும் என எழுதியுள்ளார்.

  ஷீஆ பிரிவினரில் மிகவும் மோசமான கொள்கையுடைய ராஃபிழாக்கள் அவரை மதிப்பிற்குரியவராக கருதுகின்றனர். அவரது குறித்த நூல் 1298 ம் ஆண்டு ஈரான் நாட்டில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. “ஃபஸ்லுல் கிதாப் ஃபீ இத்பாதி தஹ்ரீஃபி ரப்பில் அர்பாப்" என பெயரிடபட்ட குறித்த நூலில் சகாபாக்கள் நீக்கி விட்டதாக அல்லது மறைத்து விட்டதாக அவர்கள் கருதும் சில வசனங்களையும், சூராக்களையும் குறிப்பிட்டுள்ளார். “சூரத்துல் விலாயாஹ்" (سورة الولاية) என்ற சூராவும் அதில் அடங்கும்.

  புத்தகத்தில் இருப்பது போல் அதன் வடிவம் பின்வருமாறு அமைந்துள்ளது.

  " يا أيها الذين آمنوا آمنوا بالنبي والولي الذين بعثناهما يهديانكم إلى الصراط المستقيم نبي وولي بعضهما من بعض وأنا العليم الخبير ... " ،

  பொருள்:

  ஈமான் கொண்டோரே! உங்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக நாம் அனுப்பியுள்ள நபியையும், ஆட்சியாளர்களையும் நம்பிக்கைக் கொள்ளுங்கள்; நபியோ, வலியோ (ஆட்சியாளர்கள்) ஒருவர் மற்றவருக்கு சமனாகும். நானே நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்.

  சகாபாக்கள் மறைத்து விட்டதாக அவர்கள் கூறும் மற்றுமொரு சூரா “சூரத்துன் நூரைன்" என்பதாகும். அது அவர்கள் கூறுவது போன்று பின்வருமாறு அமைந்துள்ளது.

  " يأيها الذين آمَنوا آمِنوا بالنورين أنزلناهما يتلوان عليكم آياتي ويحذرانكم عذاب يوم عظيم . بعضهما من بعض وأنا السميع العليم . إن الذين يوفون بعهد الله ورسوله في آيات لهم جنات النعيم . والذين كفروا من بعد ما آمنوا بنقضهم ميثاقهم وما عاهدهم الرسول عليه يقذفون في الجحيم . ظلموا أنفسهم وعصوا وصية الرسول أولئك يسقون من حميم “...

  பொருள்:

  ஈமான் கொண்டோரே! (நபிமார்கள், ஆட்சியாளர்கள் ஆகிய) இரண்டு நூர் (ஒளி) களையும் நம்புங்கள்; அவர்கள் இரு சாராரையும் நான் எனது அத்தாட்சிகளை உங்களுக்கு ஓதி காண்பிப்பதற்காகவும், மறுமையின் வேதனைப்பற்றி எச்சரிக்கை செய்வதற்காகவும் இறக்கி அருளி உள்ளேன். அவர்கள் இருவரும் ஒருவர் மற்றவரில் இருந்தும் உள்ளவர் ஆவார். யார் அத்தாட்சிகளில் உள்ளவாறு அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் தான் செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றுகின்றாரோ அவர் இன்பம் தரும் சுவனத்தில் இருப்பார். யார் ஈமான் கொண்ட பிறகு அல்லாஹ்வுடன் தான் செய்து கொண்ட உடன்படிக்கையையும், இறைதூதர் வழங்கியுள்ள உறுதிமானத்தையும் முறித்துக் கொள்வதன் மூலம் காபிராகி விடுகிறாரோ அவர் நரகத்தில் எறியப் படுவார். அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர். இவர்கள் இறை தூதரின் கட்டளைக்கு மாற்றம் செய்து விட்டனர். நரக பானத்தில் இருந்து அவர்களுக்கு புகட்டப் படும்...

  இது போன்ற அபத்தங்கள் பலவற்றை அவர்களின் நூல்களில் காணலாம்.

  எகிப்து நீதி அமைச்சில் உயர் ஆலோசகராக கடமைப் புரிந்த பேராசிரியர் முஹம்மத் அலி சுஊதி மேற் குறிப்பிடப் பட்டவாறு ஈரானிய குர்ஆன் கையெழுத்துப் பிரதி ஒன்றை கீழைத்தேய நாடுகளை சேர்ந்த “பிரையன்" என்பவரிடம் கண்டதாக உறுதிப் படுத்தி உள்ளார். டெலிகிராஃப் கருவி ஊடாக அவரிடம் இருந்து குறித்த ஈரானிய குர்ஆன் பிரதியை அவர் பரிமாற்றம் செய்துள்ளார். அரபு மொழியிலான அதன் வரிகளுக்கு மேலே ஈரான் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளதை காணலாம்.

  தப்ருசி தனது நூலில் கூறியுள்ளது போன்றே “முஹ்சின் பானி அல் காஷ்மீரி" என்பவர் எழுதியுள்ள ஈரான் மொழியிலான நூலிலும் மேற்படி இட்டுக்கட்டப்பட்டுள்ள சூராக்கள் கூறப்பட்டுள்ளதை காணலாம். ஈரான் நாட்டில் இவர் எழுதியுள்ள மேற்படி நூல் பல பதிப்புகளாக அச்சிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டப்பட்டுள்ள இந்த சூராக்களை இவரின் நூலில் இருந்து எடுத்து கீழ்த்திசை நாடுகளை சேர்ந்த “நோல்தேகே" என்பவர் தஃரீகும் மசாஹிஃப் (تأريخ المصاحف) என்ற தனது நூலில் ( 2 / 102 ) பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். "பிரஞ்சு ஆசிய பத்திரிகை" 1842ம் ஆண்டு இதனை வெளியிட்டுள்ளது.

  மிர்ஸா ஹபீபுல்லா அல் ஹாஷிமி அல் கௌஇ என்பவர் “மின்ஹாஜுள் பராஆ பீ ஷரஹ் நஹ்ஜில் பலாகா" (منهاج البراعة في شرح نهج البلاغة) ( 2 / 217 ) என்ற தனது நூலிலும், முஹம்மத் பாகிர் அல் மஜ்லிசி" என்பவர் பாரசீக மொழியிலான “தத்கிரதுல் அல் இம்மாஹ்" (تذكرة الائمة) ( ص 19 ، 20 ) என்ற தமது நூலிலும் குறிப்பிட்டுள்ளனர்.

  மேலதிக விபரங்கள் தேவைப்பட்டவர்கள் “முஹிப்புத் தீன் அல் கதீப்' எழுதியுள்ள “அல் குதூதுல் அறீதாஹ் லில் உஸுஸ் அல்லதீ காம அலைஹா தீனுஷ் ஷீஆ" الخطوط العريضة للأسس التي قام عليها دين الشيعة " لمحب الدين الخطيب" என்ற நூலை பார்க்கலாம்.

  இந்த வழிகேடர்களின் கொள்கை

  (إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ) “நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்." (அல் குர்ஆன் 15;9) என்ற இறைவசனத்திற்கு முற்றிலும் முரணாகவும், அதனை மறுப்பதாகவும் அமைந்துள்ளது. எனவேதான் அல் குர்ஆன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அல்லது திரிபுபடுத்தப்பட்டுள்ளது என யாராவது நம்பினால் அவர் காஃபிராகி விடுவார் என்பது முஸ்லிம்கள் அனைவரினதும் ஏகோபித்த முடிவாக கருதப்படுகிறது.

  இது போன்றே அல் குர்ஆனில் சில வசனங்கள் மறைக்கப்பட்டுள்ளன, அல்லது குறைக்கப்பட்டுள்ளன, அல்லது விதியாக்கப்பட்டுள்ள சட்டங்களை செல்லத் தகாததாக்கும் மறைமுகமான விளக்கங்கள் அதற்கு உள்ளன என யாரவது நம்பினால் அவரும் காஃபிராகி விடுவார் என இமாம் இப்னு தைமியா குறிப்பிடுகின்றார். இந்த கொள்கையை சேர்ந்தோர் “கராமிதா" அல்லது “பாதிநிய்யாஹ்" என்றழைக்கப் படுகின்றனர். “தனாசுகிய்யாஹ்" பிரிவைச் சேர்ந்தோரும் இதே கொள்கையையே கொண்டுள்ளனர். “அஸ்ஸாரிமுல் மஸ்லூல்" " الصارم المسلول " ( 3 / 1108 – 1110 )

  “இறைவனால் இறக்கியருளப்பட்டுள்ள அல் குர்ஆன் மாற்றப்பட்டு விட்டதாக கூறுவது மிகவும் தெளிவான குஃப்ரும் (இறை நிராகரிப்பு), இறைத் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களை பொய்பித்தலும்" ஆகும் என இமாம் இப்னு ஹஸ்ம் குறிப்பிடுகிறார். “அல் பிசல் பில் அஹ்வா வல் மிலல் வன் நிஹல்" الفِصَل في الأهواء والملل والنِّحَل " 4 / 139 )

  அல்லாஹ்வே நன்கறிந்தவன்

  http://islamqa.info/ar/21500