"விடுமுறை, ஓய்வுநேரங்களைக் கழிப்பதில் எமது முஸ்லிம்கள் சுற்றுலாக்களில் அதிக கவனமெடுக்கும் முஸ்லிம்களும் எல்லைமீறும் பாவங்களும் மாற்றுமதத்தவர்களின் பண்டிகைகளில் முஸ்லிம்களும் அதிகமாத பங்கெடுக்கும் நிலை அவர்களின் பெருநாள்களில் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுதல், பெருநாள் நிகழ்வுகளில் பங்கெடுத்தல் போன்றவற்றில் முஸ்லிம்கள் அளவுகடந்து செல்லல். வேதக்காரர்களையும் சிலை வணங்கிகளையும் ஒன்றாகப் பார்க்கும் நிலை. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் பெரும்பான்மை மாற்றுமதத்தவர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை."
"சத்தியத்தையும், பொறுமையையும் கொண்டு ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளல். முஸ்லிம்களின் நலன்களில் கரிசணை எடுப்பதன் முக்கியத்துவம். சுயநலத்தை இஸ்லாம் எச்சரிக்கின்றது. பொதுநலத்தை இஸ்லாம் தூண்டும் விதம் ஓர் அடியான் தனது சகோதர முஸ்லிமுக்கு உதவும் போது அல்லாஹ் அவனுக்கு உதவுகின்றான். பொதுநலத்தின் சில முறைகள். பொதுப்பணிகள் செய்யும் போது கவனிக்க வேண்டியவை"
"ஸூரா நஹ்ல் 112ம் வசனத்தின் விளக்கம் பயம், பட்டிணி ஆகிய இரண்டின் மூலம் தண்டிக்கப்படுவதும், அதன் பின்விளைவுகளும் பஸராவில் ஏற்பட்ட பாரிய தொற்று நோய்கள் உலகின் சுவனமென அழைக்கப்பட்ட ஸிரியாவின் வளங்களும், பயத்தாலும் பட்டிணியாலும் சோதிக்கப்படும் இன்றைய நிலையும். இறைவனின் தண்டனைகள் இறங்கக்காரணம் : ஒழுக்கக்கேடுகள் மலிதல், அல்குர்ஆன் ஸுன்னாவை விட்டும் தூரமாதல் போன்றன"
"சங்கைக்குரிய 4 மாதங்களில் ஒன்று இம்மாதம் ஆஷூரா தினத்தை உளளடக்கியுள்ளது. நபி மூஸா (அலை) அவர்களும் பனூஇஸ்ரவேலர்களும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்ட மாதம்."
அல்லாஹ்வின் அருட்கொடை நீரின் முக்கியத்துவம், வரலாற்றில் ஏற்பட்ட சில வரட்சிகளும் பஞ்சங்களும், வரட்சிக்கான காரணங்கள், மழை கூடுவதும் குறைவதும் சோதனையே, வரட்சியின் போது முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை, நபி (ஸல்) அவர்கள் மழை தேடிய முறைகள்
அல்குர்ஆனை கற்பதன் முக்கியத்துவம், அதனை விளங்குதல், நபித்தோழர்கள் உடனடியாகக் கட்டுப்பட்ட சில வசனங்கள், ஒவ்வொரு வசனமும் தனக்குத்தான் இறங்கியதென கருதுதல்