(1) திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது.
(2) திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்ன?
(3) (நபியே!) இன்னும் திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
(4) (அந்)நாளில் மக்கள் பரப்பப்பட்ட ஈசல்களைப் போன்று ஆகுவார்கள்.
(5) இன்னும் அந்நாளில் மலைகள் சாயம் ஏற்றப்பட்ட முடியைப்போன்று ஆகும்.
(6) ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ,
(7) அவர் திருப்தியான (சொர்க்க) வாழ்க்கையில் இருப்பார்.
(8) ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,
(9) அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான்.
(10) (நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
(11) (அது) கடுமையாக எரியும் நெருப் பாகும்.