105 - ஸூரா அல்பீல் ()

|

(1) (நபியே!) யானைப் படைகளை உம் இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

(2) அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா?

(3) அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.

(4) சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு (அவை) அவர்களை எறிந்தன.

(5) ஆகவே, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று அவன் (- அல்லாஹ்) அவர்களை ஆக்கினான்.