(1) (நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப் பவனைப் பார்த்தீரா?
(2) ஆகவே, அவன் அநாதையை விரட்டுகிறான். (அநாதைக்கு அநீதி இழைக்கிறான்.)
(3) ஏழையின் உணவுக்கு (பிறரைத்) தூண்ட மாட்டான்.
(4) ஆக, அந்த தொழுகையாளி களுக்குக் கேடுதான்,
(5) அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
(6) அவர்கள் பிறர் பார்ப்பதற்காக (நல்லறங்களை) செய்கிறார்கள்.
(7) (பாத்திரம், ஊசி போன்ற) சிறிய பொருளை(யும் இரவல் கொடுக்காது) தடுக்கிறார்கள்.