• தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  பிறப்பால் முஸ்லீம் என்ற காரணத்தால் இமான் தானாகவே வந்து அடையாது. ஈமானையும் கற்று அறிய வேண்டும். இல்லாவிடில் எம்மை அறியாமலே ஈமானை அழித்து விடும். சகுனம் பார்ப்பது, ஆந்தையின் சத்தம், தொற்று நோய் தானாக ஒருவரை வந்தடையும் போன்ற சிந்தனைகள் எமது ஈமானை அழிக்க வல்லது.

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  முஹம்மத் (ஸல்) பற்றி ரோம அரச சபையில் அபு சுபியானிடம் விசாரணை செய்த சம்பவம் சஹீஹ் புஹாரி ஹதீஸ் பற்றிய விளக்கம்.

 • தமிழ்
  video-shot
  விரிவுரையாளர்கள் : ஷெய்க் மசீர் அப்பஸி மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  சூரா ழுஹா பற்றிய ஒரு விளக்கம். இது நபித்துவத்தின் ஆரம்பத்தில் இறக்கப் பட்டது. ழுஹா தொழுகையின் சிறப்பு, நபியவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தவும், அல்லாஹ்வின் தொடர்ந்த உதவியையும், நபியின் அனாதையாக ஆரம்பித்த வாழ்க்கையையும், எதிர் காலத்தில் கிடைக்க இருக்கும் உயர்வையும் உறுதி கூறவும் இந்த சூரா இறக்கப்பட்டது.

 • தமிழ்
  video-shot
  விரிவுரையாளர்கள் : மௌலவி யூனுஸ் தப்ரிஸ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  சஹாப்பாக்களின் தியாகங்கள் பற்றிய சில விபரங்கள். சுமையா (ரழி) அன்ஹா, பிலால் (ரழி), அபு பக்கர் சித்தீக் (ரழி), உமர் (ரழி) போன்றவர்களின் சிறப்புக்கள் பற்றிய சம்பவங்கள்.

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  பித்னாக்களில் ஈடுபடும் முஸ்லிம்களும் தாம் சரியான வழியில் இருப்பதாக கருதுகிறார்கள். இந்த பித்னாக்கள் மூலம் அல்லாஹ் மக்களை சோதிக்கிறான். இது அல்லாஹ்வின் நியதி. நபி (ஸல்) அவர்களும் இதனை பற்றி எச்சரிக்கை செய்தார்கள். கிதாபுல் பிதன் என்ற நூல் இது பற்றி குறிப்பிடுகிறது. நன்மைகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். ஆனால் பித்னாக்கள் எம்மை தேடி வரும். உடல் இச்சை, பணம் தேடும் முறை, கொலை போன்ற பித்னாக்கள் இவற்றில் சில. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள மார்க்க விஷயத்தில் ஏற்படும் குழப்பம் மிகவும் மோசமானது.

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  தாஇகள் மார்க்கத்தை கற்ற பின்பு மக்களுக்கு கற்பிக்க வேண்டும். தஅவா பணியில் முதலாவதாக அல்லாஹ்வை பற்றி சொல்லவேண்டும். அல்லாஹ்வை நம்பிய மக்கள் ஷிர்க்கிலும் ஈடுபடக்கூடும் என்று குர்ஆன் கூறுகிறது. மக்கா காபிர்கள் கடும் துன்பம் ஏற்படும்போது அல்லாஹ் மீது ஈமான் வைத்து துஆ கேட்டார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம் அல்லாஹ்வை தொழுது உதவி தேடாது தாயத்துகள், மந்திரங்கள், பித்ஆக்களில் நிவாரணம் தேடுவது ஷிர்க்காகும்

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  பெருமையின் விளக்கம் - ஆரம்பப் பாவங்களில் ஒன்று - லுக்மான் (அலை) செய்த உபதேசம் - பெருமையின் காரணங்களும் பரிகாரங்களும் - பெருமையின் வெளிப்பாடுகள்

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  அபுபக்கர் (ரழி) அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு, அவரது சிபத்துக்கள் பற்றிய விளக்கம், அபுபக்கர் (ரழி) செய்த உதவிகளுக்கு உலகில் எவ்வித கைமாறும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதில் அபுபக்கர் (ரழி) முன்னிலையில் நின்றார்கள்.

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  உலக வாழ்வின் சோதனையிலிருந்து எவராலும் தப்ப முடியாது. நன்மையை கொண்டும் தீமையை கொண்டும் அல்லாஹ் கூறுகிறான்.செல்வமும், வறுமையும் இந்த சோதனைகளின் அங்கமாகும். செல்வந்தன் இறுமாப்பு கொள்ளவோ, ஏழை பொறாமை அடையவோ காரணம் இல்லை. அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  அடுத்த வீட்டாருடன் வாழும் முறை பற்றி இஸ்லாம் கூறும் வழிமுறைகள். அண்டை வீட்டாரின் உரிமைகள் என்ன? அவர்களுக்கு எமது கடமை என்ன? பற்றிய விளக்கம். கவணக் குறைவால் அல்லது பெருமையில் தனித்து வாழும் மக்களும் இன்று உள்ளனர். இதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றிய படிப்பினைகள் உள்ளன.

 • தமிழ்
  video-shot
  விரிவுரையாளர்கள் : ஷெய்க் மசீர் அப்பஸி மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  இஸ்லாத்தின் ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் தேவையான சட்டங்கள் உண்டு. மனிதர் விட்டுச் செல்வத்தில் ஆண் பெண் இரு பாலாருக்கும் பங்குண்டு. அவை எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என குர்ஆன் தெளிவாக கூறுகிறது. இப்படிப்பட்ட சட்டங்கள் எந்த மதத்திலும் இல்லை. இந்த சட்டங்களை மீறும் மக்களுக்கு நரகம் சொந்தமாகிறது என்று குஆன் எச்சரிக்கிறது

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  சூரா பகரா 129 ஆயத்தில் தனது பரம்பரையில் நபி மார்களை அனுப்புமாறு இப்ராஹிம் (அலை) அவர்களின் துஆ சம்பந்தப்பட்ட விளக்கம். இஸ்ஹாக் (அலை) பரம்பரையில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கு பிறகு இஸ்மாயில் (அலை) பரம்பரையில் முஹம்மத் (சல்) அனுப்பப் பட்டார்கள். அன்னார் எல்லா சமுதாயத்துக்கும் வழி காட்ட வந்தார்கள். அன்னாரின் சிபத்துகளையும் இப்ராஹிம் (அலை) விபரித்துக் கூறுனார்கள்.

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  குர்ஆனையும் நேர் வழிபெற்ற குலபாக்கலின் வழியை பின்பற்றுமாறு ரஸூல் (ஸல்) அவர்களின் இறுதி உபதேசமாகும். ஷீஆக்கள், ஜஹ்மியாக்கள் போன்ற கூட்டம் இன்று பெரும் செல்வாக்குடன் உலகில் வாழ்கிறது. இமாம் ஹம்பலி (ரஹி) பித்அத்துகளை நீக்க பெரும் முயற்சிகள் செய்தார்கள். இமாம் இப்னு தைமியா (ரஹி) அதே வழியில் பாடுபட்டார்கள். மதத்தை விட்டு மத்ஹப்பை மக்கள் பின்பற்றினார்கள். கஅபாவில் கூட ஒரு காலத்தில் நான்கு மிஹ்ராபுகள் இருந்தன. இந்த நிலை இன்று மெதுவாக மாறிக்கொண்டு வருகிறது

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  பெண்கள் விஷயத்தில் குர்ஆன் காட்டிய அக்கறை பற்றி பெண்கள் அறியமாட்டார்கள். லிஹார் எனும் விவாகரத்து, விவாக ரத்து பெற்ற பெண் மீண்டும் தன் கணவனுடன் சேர்ந்து வாழ அனுமதி, இரு முறை மாத்திரம் தலாக் கூற அனுமதி அளிப்பதன் மூலம் பெண்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு, பெண்களின் சுய விருப்பமின்றி நிர்ப்பந்தமாக மணமுடிக்கத் தடை, தந்தை இறந்த பின் அவரது மனைவிகளை மணமுடிக்க மகனுக்கு தடை, ஈமானுள்ள அடிமை பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த தடை, அப்படிப்பட்ட பெண்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் மன்னிப்பு, ஹிஜ்ரத் செய்த பெண்களை சோதித்து பார்த்து அவர்களுக்கு இஸ்லாத்தில் தஞ்சம் அளிப்பது, பெண்கள் மீது கூறும் அவதூருக்கு உரிய தண்டனை போன்ற விஷயங்களில் குர்ஆன் விஷேச கவனம் செலுத்திய விபரங்கள் இதில் விளக்கம் உண்டு.

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  உள்ளம் தூய்மை அடைய, பாவங்களில் இருந்து நீங்க தஅவா என்றென்றும் தொடர்ந்து நடைபெற வேண்டும். பயான் செய்வது மாத்திரம் தஅவா ஆகி விடாது. பல் வேறு வழிகள் மூலம தஅவா செய்வதற்கு அல்லாஹ் எமக்கு வழி வைத்திருக்கிறான். ஒவ்வொருவரும் தமக்கு இயன்ற முறையில் சந்தர்ப்பத்துக்கு பொருத்தமாக தஅவா செய்ய வேண்டும். தஅவா செய்பவர் தற்பெருமை பேசக் கூடாது என்பதும் முக்கியம்.

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  ஈமான் கூடலாம், குறையலாம் ஆனால் ஈமானில் உறுதி இருக்க வேண்டும் என குர்ஆன் தெளிவாக கூறுகிறது. உறுதியான ஈமான் கொண்ட வாழ்வில் அச்சமோ, துன்பமோ இல்லை. ஈமானுக்கு மாற்றமான நடைமுறை எமது வாழ்வில் இருக்கக் கூடாது. மறுமையின் வெற்றி இதில் தான் தங்கியுள்ளது.

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  அல்லாஹ்வின் ஆலயமாகி கஅபவின் சிறப்பும். அதனை பாதுகாக்கும் பொறுப்பு அல்லாஹ்வுக்கு சொந்தம் என அல்லாஹ் கூறுகிறான்

 • தமிழ்
  video-shot
  விரிவுரையாளர்கள் : ஸபர் சாலிஹ் மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  நபி (ஸல்) காட்டித்தராத நூதனங்கள் இந்த மாதம் இஸ்லாத்தின்பெயரில் நடைபெறுகின்றன. நபி அவர்கள் மனித சுபாவம் உள்ளவர்.தெய்வ சுபாவம் கொடுக்கப் பட வில்லை. அவருக்கு செய்யக்கூடிய கண்ணியம், அவரது முன்மாதிரியை பின்பற்றுவதே. மீலாத் உற்சவம் இப்படிப் பட்ட பித்ஆவாகும். ஹிஜ்ரி 322 வருடம் பாத்திமித் பரம்பரையில் ராபிதி சிந்தனையினல் வந்த அரசனால் மிலாத் ஆரம்பக்கப்பட்டது.

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  வர்த்தகம், விளையாட்டு, விவசாயம், களியாட்டம் தா தமது வாழ்கையாக இன்று மக்கள் கொண்டுள்ளார்கள். ஆனால் தவ்ஹீத், தக்வா, நல்லமல்கள் என்பன குர்ஆன் சுன்னத்திற்கு ஏற்ற முறையில் இருக்கும்போது அந்த வாழ்க்கை வணக்கமாக மாறும். தொழுகை, சகாத், நோன்பு, ஹஜ் என்பன நிறைவேற்றப்படவேண்டும் பெரும் பாவங்களிலிருந்து நீங்க வேண்டும்.

 • தமிழ்
  video-shot
  மீளாய்வு செய்தல் : முஹம்மத் அமீன்

  அகீதாவின் கொள்கை விளக்கம். முதலாவது தவ்ஹீத் பற்றிய பாடம். 1.இகீதாவை பற்றிய அறிவைபெற தகுதி உடையவராக இருக்க வேண்டும்.2. அறிவை செயல் படுத்தக் கூடியவராக இருக்கவேண்டும். 3.இதனை பற்றி தஅவா செய்யக் கூடியதவராக இருக்கவேண்டும். 4. இவற்றில் ஈடுபடும் போது தேலையான சப்ர் எனும் பொறுமை எம்மிடம் இருக்க வேண்டும்.

பக்கம் : 2 - இருந்து : 1
رأيك يهمنا