1 - ஸூரா அல்பாதிஹா ()

|

(1) 1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)

(2) 2. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்.

(3) 3. (அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்,

(4) 4. தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே).

(5) 5. (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.

(6) 6. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!

(7) 7. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.