(1) 1. (நபியே!) யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா?
(2) 2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிட வில்லையா?
(3) 3. அவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அனுப்பிவைத்தான்.
(4) 4. (கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.
(5) 5. அதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான்.