(1) 1. (நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
(2) 2. (ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.
(3) 3. அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.
(4) 4. (கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.
(5) 5. அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
(6) 6. (மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.
(7) 7. (மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.