110 - ஸூரா அந்நஸ்ர் ()

|

(1) 1. (நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,

(2) 2. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால்,

(3) 3. (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலை(யும்) அங்கீகரிப்பவனாக இருக்கிறான்.