109 - ஸூரா அல்காபிரூன் ()

|

(1) 1. (நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!

(2) 2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

(3) 3. நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.

(4) 4. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.

(5) 5. நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.

(6) 6. உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).