111 - ஸூரா அல்மஸத் ()

|

(2) அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.)

(3) அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.

(4) இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).

(5) அவளுடைய கழுத்தில் ஈச்சம் பாளையின் கயிறுதான் இருக்கும்.

(1) அபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும். இன்னும், அவனும் அழியட்டும்.