70 - ஸூரா அல்மஆரிஜ் ()

|

(2) நிராகரிப்பாளர்களுக்கு (நிகழக்கூடிய வேதனையைப் பற்றி (கேட்பவர் கேட்டார்) அதை தடுப்பவர் ஒருவரும் இல்லை.

(3) உயர்வுகளும் மேன்மைகளும் உடைய அல்லாஹ்விடமிருந்து (அது நிகழும் போது (அதை தடுப்பவர் ஒருவரும் இல்லை.)

(4) வானவர்களும் ஜிப்ரீலும் அவன் பக்கம் ஒரு நாளில் ஏறுகின்றனர். அ(ந்)(ஒரு நாளி)ன் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.

(5) ஆகவே, அழகிய பொறுமையாக நீர் பொறுப்பீராக!

(6) நிச்சயமாக இவர்கள் அதை தூரமாக பார்க்கின்றனர்.

(7) நாம் அதை சமீபமாக பார்க்கிறோம்.

(8) வானம் எண்ணையின் அடி மண்டியைப் போல் ஆகிவிடும் நாளில்,

(9) மலைகள் முடிகளைப் போல் ஆகிவிடும் நாளில் (அந்த வேதனை நிகழும்).

(10) ஒரு நண்பன் (தனது) நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்.

(11) அவர்கள் அவர்களை (நண்பர்கள் நண்பர்களை) காண்பிக்கப்படுவார்கள். அந்நாளின் தண்டனையிலிருந்து (தப்பிக்க) தன் பிள்ளைகளை ஈடாக கொடுக்க வேண்டுமே என்று குற்றவாளி ஆசைப்படுவான்.

(12) இன்னும், தன் மனைவியையும் தன் சகோதரனையும் (ஈடாக கொடுக்க வேண்டுமே என்று குற்றவாளி ஆசைப்படுவான்).

(13) இன்னும், தன்னை அரவணைக்கின்ற தன் குடும்பத்தையும் (ஈடாக கொடுக்க வேண்டுமே என்று ஆசைப்படுவான்).

(14) இன்னும், பூமியில் உள்ளவர்களையும்- இவர்கள் அனைவரையும் (ஈடாக கொடுக்க வேண்டுமே என்று ஆசைப்படுவான்). பிறகு, அது அவனை பாதுகாக்க வேண்டும் (என்றும் அந்த குற்றவாளி ஆசைப்படுவான்).

(15) அவ்வாறல்ல. நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்.

(16) (தலை இன்னும் உடலின்) தோலை கழட்டிவிடக்கூடியது அது.

(17) புறக்கணித்து, விலகி சென்ரவர்களை அது அழைக்கும்.

(18) இன்னும், (செல்வங்களை) சேகரித்து, (அவற்றை தர்மம் செய்யாமல்) பாதுகாத்து வைத்தவர்களை அது அழைக்கும்.

(19) நிச்சயமாக மனிதன் பேராசைக்காரனாக படைக்கப்பட்டான்.

(20) அவனுக்கு தீங்கு ஏற்பட்டால் மிக பதட்டக்காரனாக,

(21) அவனுக்கு வசதி ஏற்பட்டால் (பிறருக்கு கொடுக்காமல்) முற்றிலும் தடுப்பவனாக (படைக்கப்பட்டான்).

(22) (ஆனால்,) தொழுகையாளிகளைத் தவிர.

(23) அவர்கள் தங்கள் தொழுகையில் நிரந்தரமாக இருபார்கள்.

(24) இன்னும் அவர்களுடைய செல்வங்களில் குறிப்பிட்ட உரிமை

(25) யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கு இருக்கும்.

(26) இன்னும் அவர்கள் கூலி நாளை உண்மைப்படுத்துவார்கள்.

(27) இன்னும் அவர்கள் தங்கள் இறைவனின் தண்டனையைப் பயப்படுவார்கள்.

(28) நிச்சயமாக அவர்களுடைய இறைவனின் தண்டனை பயமற்று இருக்கக் கூடியது அல்ல.

(29) இன்னும் அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை பாதுகாப்பார்கள்,

(30) தங்கள் மனைவிகள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம் தவிர. நிச்சயமாக இவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

(31) யார் இதற்குப் பின் (தவறான ஆசையை) தேடுவார்களோ அவர்கள்தான் வரம்பு மீறிகள் ஆவர்.

(32) இன்னும் அவர்கள் தங்கள் அமானிதங்களையும் தங்கள் ஒப்பந்தங்களையும் பேணி நடப்பார்கள்.

(33) இன்னும், அவர்கள் தங்கள் சாட்சிகளை நிறைவேற்றுவார்கள்.

(34) இன்னும் அவர்கள் தங்கள் தொழுகையை பேணுவார்கள்.

(35) (மேற்கூறப்பட்ட) இவர்கள் (அனைவரும்) சொர்க்கங்களில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.

(36) நிராகரித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது, உம் பக்கம் விரைந்து வருகின்றனர்?

(37) வலது புறத்தில் இருந்தும் இடது புறத்தில் இருந்தும் பல கூட்டங்களாக (உம்மிடம் ஏன் விரைந்து வருகின்றனர்)?

(38) (நம்பிக்கையாளர்களுடன் சேர்ந்து) தானும் “நயீம்” (-இன்பம் நிறைந்த) சொர்க்கத்தில் நுழைக்கப்பட வேண்டும் என்று அவர்களில் ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகின்றானா?

(39) அவ்வாறல்ல. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்ற ஒன்றிலிருந்துதான் (அற்பமான நீரிலிருந்துதான்) படைத்தோம்.

(40) கிழக்குகள், இன்னும் மேற்குகளின் இறைவன் மீது சத்தியம் செய்கிறேன், நிச்சயமாக நாம் ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்,

(41) இவர்களை விட சிறந்தவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கு (ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்). நாம் பலவீனமானவர்கள் அல்ல.

(42) அவர்களை விட்டுவிடுவீராக! அவர்கள் (தங்கள் பொய்களில்) ஈடுபடட்டும்! (தங்கள் உலக காரியங்களில்) விளையாடட்டும்! இறுதியாக, அவர்கள் எச்சரிக்கப்பட்ட அவர்களது (தண்டனைக்குரிய) நாளை அவர்கள் சந்திப்பார்கள்!

(43) அவர்கள் புதைக்குழிகளில் இருந்து விரைவாக வெளியேறுகின்ற நாளில், அவர்களோ (நிறுத்திவைக்கப்பட்டுள்ள) கம்பத்தின் பக்கம் விரைந்து ஓடுகின்றவர்கள் போல் இருப்பார்கள்.

(44) அவர்களின் பார்வைகள் (இழிவால்) கீழ்நோக்கி இருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும். இதுதான் இவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாளாகும்.

(1) நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களின் பக்கம் (தூதராக) அனுப்பினோம், ஏனெனில், நீர் உமது மக்களை வலி தரக்கூடிய தண்டனை அவர்களுக்கு வருவதற்கு முன்னர் எச்சரிப்பீராக!