24 - ஸூரா அந்நூர் ()

|

(2) விபசாரி இன்னும் விபசாரன் அவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு அடி அடியுங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தில் அந்த இருவர் மீது உங்களை இரக்கம் பிடித்துவிட வேண்டாம் நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால். நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டம் அவ்விருவரின் தண்டனைக்கு ஆஜராகட்டும்.

(3) ஒரு விபசாரன் ஒரு விபசாரியுடன் அல்லது இணைவைப்பவள் ஒருத்தியுடன் தவிர (மற்றவளுடன்)(டலு)றவு வைக்க மாட்டான். விபசாரி - அவளுடன் ஒரு விபசாரன் அல்லது இணைவைப்பவன் ஒருவனைத் தவிர (மற்றவர்)(டலு)றவு வைக்கமாட்டான். இது (-விபசாரம் செய்வது) நம்பிக்கையாளர்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.

(4) எவர்கள் பத்தினிகளை (விபசாரிகள் என்று) ஏசுவார்களோ, பிறகு அவர்கள் (தாங்கள் கூறியதற்கு) நான்கு சாட்சிகளை கொண்டுவரவில்லை என்றால் அவர்களை எண்பது அடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்காதீர்கள். அவர்கள்தான் பாவிகள் (பொய்யர்கள்).

(5) அதற்குப் பின்னர் திருந்தி, (தங்களை) சீர்படுத்திக் கொண்டவர்களைத் தவிர. (அவர்கள் பாவிகள் அல்லர்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.

(6) எவர்கள் தங்களது மனைவிகளை (விபசாரிகள் என்று) ஏசுகிறார்களோ அவர்களிடம் அவர்களைத் தவிர சாட்சிகள் (வேறு) இல்லையோ, அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக தான் உண்மை கூறுபவர்களில் (ஒருவன்)தான்”என்று நான்கு முறை சாட்சிகள் சொல்ல வேண்டும்.

(7) ஐந்தாவது முறை, “நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும், தான் பொய் கூறுபவர்களில் ஒருவனாக இருந்தால்”என்று கூறவேண்டும்.

(8) அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர் (-கணவர்) பொய் கூறுபவர்களில் உள்ளவர் என்று நான்கு முறை அவள் சாட்சி சொல்வது அவளை விட்டும் தண்டனையை தடுக்கும்.

(9) ஐந்தாவது முறை, “அவர் உண்மை கூறுபவர்களில் இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” (என்று அவள் சொல்லவேண்டும்).

(10) அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும் ஞானவானாகவும் இல்லாதிருந்தால்... (அவன் உங்களை உடனே தண்டித்திருப்பான்.)

(11) நிச்சயமாக இட்டுக்கட்டியவர்கள் உங்களில் உள்ள ஒரு குழுவினர்தான். அதை (இட்டுக்கட்டிய செய்தியை) உங்களுக்கு தீமையாக கருதாதீர்கள். மாறாக, அது உங்களுக்கு நன்மைதான். அவர்களில் ஒவ்வொருக்கும் பாவத்தில் அவர் செய்தது (-அதன் தண்டனை) உண்டு. அவர்களில் அதில் பெரியதை செய்தவர் (-இட்டுக் கட்டுவதில் பெரும் பங்களிப்பு வகித்தவர்) அவருக்கு பெரும் தண்டனை உண்டு.

(12) நீங்கள் அதைக் கேட்டபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி (தங்களில் இட்டுக்கட்டப்பட்டவரைப் பற்றி) நல்லதை எண்ணியிருக்க வேண்டாமா! இன்னும் இது தெளிவான இட்டுக்கட்டாகும் (பொய்யாகும்) என்று சொல்லியிருக்க வேண்டாமா!

(13) அவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா! ஆகவே, அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வராததால் அவர்கள்தான் அல்லாஹ்விடம் பொய்யர்கள்.

(14) உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் கருணையும் இம்மையிலும் மறுமையிலும் இல்லாதிருந்தால் நீங்கள் ஈடுபட்ட விஷயத்தில் உங்களுக்கு பெரிய தண்டனை கிடைத்திருக்கும்.

(15) ஏனெனில், நீங்கள் உங்கள் நாவுகளால் அதை உங்களுக்குள் அறிவித்துக் கொண்டீர்கள். இன்னும் உங்கள் வாய்களால் உங்களுக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை கூறுகிறீர்கள், அதை மிக இலகுவாக கருதுகிறீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் மிகப்பெரியதாக இருக்கிறது.

(16) அதை நீங்கள் கேட்டபோது “இதை நாங்கள் பேசுவது எங்களுக்குத் தகாது, அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன், இது பெரிய அபாண்டமான பேச்சு” என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா!

(17) இது போன்றதற்கு ஒரு போதும் நீங்கள் மீண்டும் வரக்கூடாது (இன்னொரு முறை இப்படிப்பட்ட காரியத்தை செய்யக்கூடாது). என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால்.

(18) இன்னும் அல்லாஹ் உங்களுக்கு (தனது) வசனங்களை விவரிக்கிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகாஞானவான் ஆவான்.

(19) நிச்சயமாக அசிங்கமான செயல் நம்பிக்கையாளர்களுக்கிடையில் பரவுவதை விரும்பக்கூடியவர்கள் -அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வலி தரக்கூடிய தண்டனை உண்டு. அல்லாஹ்தான் அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

(20) அல்லாஹ் உடைய அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக்க இரக்கமுள்ளவனாகவும் மகா கருணையுள்ளவனாகவும் இல்லாதிருந்தால்... (நீங்கள் அழிந்து போயிருப்பீர்கள்.)

(21) நம்பிக்கையாளர்களே ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறானோ நிச்சயமாக அவன் (-அந்த ஷைத்தான்) அசிங்கத்தையும் கெட்டதையும் (அவருக்கு) ஏவுகிறான். அல்லாஹ்வுடைய அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் உங்களில் எவரும் ஒரு போதும் தூய்மை அடைந்திருக்கமாட்டார் (-நேர்வழி பெற்றிருக்க மாட்டார்). எனினும், அல்லாஹ் தான் நாடியவரை பரிசுத்தப்படுத்துகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.

(22) உங்களில் செல்வமும் வசதியும் உடையவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா சென்றவர்களுக்கும் தர்மம் கொடுக்க மாட்டோம் என சத்தியம் செய்ய வேண்டாம். அவர்கள் மன்னிக்கட்டும், பெருந்தன்மையுடன் விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களை மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையுடையவன்.

(23) நிச்சயமாக (அசிங்கமான செயலை) அறியாதவர்களான நம்பிக்கை கொண்ட பத்தினி பெண்கள் மீது யார் குற்றம் சுமத்துகிறார்களோ அவர்கள் உலகத்திலும் மறுமையிலும் சபிக்கப்பட்டார்கள். இன்னும் அவர்களுக்கு பெரிய தண்டனை உண்டு.

(24) அவர்களுக்கு எதிராக அவர்களது நாவுகளும் அவர்களது கரங்களும் அவர்களது கால்களும் அவர்கள் செய்து கொண்டு இருந்ததை சாட்சி பகரும் நாளில் (அந்த தண்டனை அவர்களுக்கு உண்டு).

(25) அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்கு அவர்களுடைய உண்மையான கூலியை முழுமையாக தருவான். நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன், தெளிவானவன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

(26) கெட்ட சொற்கள் கெட்டவர்களுக்கு உரியன. கெட்டவர்கள் கெட்ட சொற்களுக்கு உரியவர்கள். நல்ல சொற்கள் நல்லவர்களுக்கு உரியன. நல்லவர்கள் நல்ல சொற்களுக்கு உரியவர்கள். அவர்கள் (-நல்லவர்கள்) இவர்கள் (-பாவிகள்) சொல்வதிலிருந்து நீக்கப்பட்டவர்கள். (பாவிகள் சுமத்தும் பழியிலிருந்து நல்லவர்கள் நீங்கியவர்கள் ஆவர்.) அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான அருட்கொடையும் (-சொர்கமும்) உண்டு.

(27) நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத வீடுகளில் நீங்கள் நுழையாதீர்கள், நீங்கள் அவ்வீட்டார்களுக்கு சலாம் கூறி, பேசி அனுமதி பெறுகின்ற வரை. (இதன்மூலம்) நீங்கள் நல்லறிவு பெறவேண்டுமே! அதுதான் உங்களுக்கு சிறந்தது.

(28) அவற்றில் நீங்கள் ஒருவரையும் காணவில்லையெனில், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகின்ற வரை அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள். “திரும்பி விடுங்கள்”என்று உங்களுக்கு சொல்லப்பட்டால் (வீட்டுக்குள் நுழையாமல்) திரும்பி விடுங்கள். அது உங்க(ள் ஆன்மாக்க)ளுக்கு மிக சுத்தமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

(29) வசிக்கப்படாத வீடுகளில் -அவற்றில் உங்களுக்கு பொருள் இருந்து -நீங்கள் நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைப்பதையும் நன்கறிவான்.

(30) (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளை (அல்லாஹ் வெறுப்பதை பார்ப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளட்டும், தங்கள் மறைவிடங்களை (பிறர் பார்வைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளட்டும். அது அவர்களுக்கு மிக சுத்தமானது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.

(31) நபியே! நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளை தடுத்துக் கொள்ளட்டும், தங்கள் மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரங்களை - அதிலிருந்து வெளியில் தெரிபவற்றைத் தவிர (மற்றதை) - வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் அவர்கள் தங்கள் முந்தானைகளை தங்கள் (சட்டைகளின்) நெஞ்சுப் பகுதிகள் மீது போர்த்திக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் கணவர்களுக்கு அல்லது தங்கள் தந்தைகளுக்கு அல்லது தங்கள் கணவர்களின் தந்தைகளுக்கு அல்லது தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் கணவர்களின் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் சகோதரர்களுக்கு அல்லது தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகளுக்கு அல்லது தங்கள் (இன முஸ்லிமான) பெண்களுக்கு அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கு அல்லது ஆண்களில் ஆசையில்லாத பணியாளர்களுக்கு அல்லது பெண்களின் மறைவிடங்களை அறியாத சிறுவர்களுக்கு (ஆகிய இவர்களுக்கே)த் தவிர. (கணவனுக்கு மனைவியிடம் எந்த மறைவும் இல்லை. மற்ற மேல் கூறப்பட்டவர்களுக்கு முன் ஒரு பெண் தனது முகம், குடங்கை, கழுத்துப் பகுதி, பாதம், காதுகள் தெரியும்படி இருந்தால் அவள் மீது குற்றமில்லை) தங்கள் அலங்காரங்களிலிருந்து அவர்கள் மறைக்கின்றவற்றை (மற்றவர்கள்) அறியப்படுவதற்காக அவர்கள் தங்கள் கால்களை பூமியில் தட்டி நடக்கவேண்டாம். இன்னும் நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்.

(32) உங்களில் ஜோடி இல்லாதவர்களுக்கும் (-மனைவி இல்லாத ஆண்களுக்கும், கணவன் இல்லாத பெண்களுக்கும்) உங்கள் ஆண் அடிமைகளிலும் உங்கள் பெண் அடிமைகளிலும் உள்ள நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் அவர்களை தனது அருளால் நிறைவுறச் செய்வான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன்.

(33) திருமணத்திற்கு வசதி பெறாதவர்கள் அல்லாஹ் அவர்களை தன் அருளால் நிறைவு செய்கிற வரை ஒழுக்கமாக இருக்கட்டும். உங்கள் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (உரிமைப்) பத்திரம் எழுதிட விரும்புபவர்கள் - அவர்களில் நீங்கள் நன்மையை (-நம்பிக்கையையும் நல்ல தன்மையையும்) அறிந்தால் அவர்களுக்கு (உரிமைப் பத்திரம்) எழுதிக் கொடுங்கள். உங்களுக்கு கொடுத்த அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து அவர்களுக்கு கொடுங்கள். நீங்கள் உலக வாழ்க்கையின் பொருளை விரும்பியதற்காக உங்கள் பெண் அடிமைகளை விபசாரத்தில் நிர்ப்பந்திக்காதீர்கள் -அவர்கள் பத்தினித்தனத்தை விரும்பினால். யார் அவர்களை நிர்ப்பந்திப்பாரோ நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் (அவர்களை) மன்னிப்பவன்,(அவர்கள் மீது) கருணை காட்டுபவன் ஆவான்.

(34) திட்டவட்டமாக உங்களுக்கு தெளிவான வசனங்களையும் உங்களுக்கு முன்னர் சென்றவர்களின் உதாரணத்தையும் இறையச்சமுள்ளவர்களுக்கு உபதேசத்தையும் இறக்கியுள்ளோம்.

(35) அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமி(யில் உள்ளவர்களின்) ஒளி (-நேர்வழி காட்டி) ஆவான். (முஃமினுடைய உள்ளத்தில் உள்ள அவனது நேர்வழி மற்றும் குர்ஆனுடைய) ஒளியின் தன்மையாவது ஒரு மாடத்தைப் போன்றாகும். அதில் ஒரு விளக்கு உள்ளது. அந்த விளக்கு கண்ணாடியில் உள்ளது. அந்தக் கண்ணாடி மின்னக்கூடிய ஒரு நட்சத்திரத்தைப் போல் உள்ளது. (அந்த விளக்கு,) கிழக்கிலும் அல்லாத மேற்கிலும் அல்லாத (-சூரியன் உதிக்கும் போதும் அது மறையும் போதும் அதன் வெயில் படாத அளவிற்கு இலைகள் அடர்த்தியான) ஆலிவ் என்னும் அருள் நிறைந்த மரத்தில் இருந்து (எடுக்கப்பட்ட எண்ணெயிலிருந்து) எரிக்கப்படுகிறது. அதன் எண்ணெய் ஒளிர ஆரம்பித்து விடுகிறது. அதன் மீது தீ படவில்லை (என்றாலும் சரியே). (தீ பட்டால் அது) ஒளிக்கு மேல் ஒளி ஆகும். அல்லாஹ் தன் ஒளிக்கு (இஸ்லாம் என்னும் நேர்வழிக்கு) தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான். மக்களுக்கு அல்லாஹ் உதாரணங்களை விவரிக்கிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.

(36) (அந்த விளக்கு) இறை இல்லங்களில் (-மஸ்ஜிதுகளில் எரிக்கப்படுகிறது). அவை உயர்த்திக் கட்டப்படுவதற்கும் அவற்றில் அவனது திருப்பெயர் நினைவு கூறப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (பல ஆண்கள்) அவனை துதிக்கின்றனர் (-தொழுகின்றனர்)

(37) பல ஆண்கள் (அங்கு தொழுகின்றனர்.) வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் (வழிபாட்டை) அல்லாஹ்விற்கு தூய்மையாக செய்வதை விட்டும் அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும்.

(38) (அவர்கள் அதை செய்தது ஏனெனில்,) அவர்கள் செய்ததில் மிக அழகியவற்றுக்கு அல்லாஹ் கூலி வழங்குவதற்காகவும் தனது அருளிலிருந்து அவர்களுக்கு மேலும் அதிகப்படுத்துவதற்காகவும் ஆகும். அல்லாஹ் தான் நாடியவருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.

(39) நிராகரிப்பாளர்கள் அவர்களுடைய செயல்கள் வெட்டவெளியில் இருக்கும் கானல் நீரைப் போலாகும். அதை (தாகித்தவர்) தண்ணீராக எண்ணுகிறார். இறுதியாக, அதனிடம் அவர் வந்தால் அதை ஏதும் காணமாட்டார். அல்லாஹ்வைத்தான் அதனிடம் காண்பார். அவன் அவருடைய கணக்கை அவருக்கு (முழுமையாக) நிறைவேற்றுவான். கேள்வி கணக்கு கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்.

(40) அல்லது ஆழமான கடலில் உள்ள இருள்களைப் போலாகும் (அவர்களது செயல்கள்). அதை (-அந்த கடலை) அலைக்கு மேல் அலை சூழ்ந்திருக்க, அதற்கு மேல் மேகம் சூழ்ந்திருக்கிறது. (இப்படி) இருள்கள் -அவற்றில் சில, சிலவற்றுக்கு- மேலாக (-கடுமையாக) இருக்கிறது. அவன் தனது கையை வெளியே நீட்டினால் அதை அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை (நேர்வழியை) ஏற்படுத்தவில்லையோ அவருக்கு எவ்வித ஒளியும் (-நேர்வழியும்) இல்லை.

(41) (நபியே!) நீர் பார்க்கவில்லையா! நிச்சயமாக அல்லாஹ்வை வானத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் வரிசையாக பறக்கின்ற பறவைகளும் அவனை துதிக்கின்றனர். ஒவ்வொருவரும் அவனைத் தொழுவதையும் அவனைத் துதிப்பதையும் திட்டமாக அறிந்துள்ளனர். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன்.

(42) அல்லாஹ்விற்கே வானங்களின் பூமியின் ஆட்சி உரியது. அல்லாஹ்வின் பக்கமே மீளுமிடம் இருக்கிறது.

(43) (நபியே!) நீர் பார்க்கவில்லையா!? நிச்சயமாக அல்லாஹ் மேகங்களை ஓட்டிவருகிறான். பிறகு அவற்றுக்கு இடையில் இணைக்கிறான், பிறகு அவற்றை ஒன்றிணைக்கப்பட்டதாக ஆக்குகிறான். ஆகவே, அவற்றுக்கு இடையில் இருந்து மழை வெளிவருவதை நீர் பார்க்கிறீர். வானத்திலிருந்து, அதில் உள்ள பனி மலைகளில் இருந்து அவன் (நீரை, ஆலங்கட்டிகளை) இறக்குகிறான். அதன் மூலம் தான் நாடியவரை அவன் தண்டிக்கிறான். தான் நாடியவரை விட்டும் அவன் அதை திருப்பிவிடுகிறான். அதன் மின்னலின் கடுமையான வெளிச்சம் பார்வைகளை பறித்துவிட ஆரம்பித்து விடுகிறது.

(44) அல்லாஹ் இரவு பகலை மாற்றுகிறான். நிச்சயமாக இவற்றில் அறிவுடையவர்களுக்கு படிப்பினை இருக்கிறது.

(45) அல்லாஹ் (இப்பூமியில் உள்ள) எல்லா உயிரினங்களையும் தண்ணீரிலிருந்து படைத்தான். அவர்களில் தனது வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவர்களில் இரண்டு கால்கள் மீது நடப்பவையும் உண்டு. அவர்களில் நான்கு கால்கள் மீது நடப்பவையும் உண்டு. அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.

(46) தெளிவான வசனங்களை திட்டவட்டமாக நாம் இறக்கியுள்ளோம். அல்லாஹ் தான் நாடியவருக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறான்.

(47) அவர்கள் நாங்கள் அல்லாஹ்வையும் தூதரையும் நம்பிக்கை கொண்டோம், (அவர்களுக்கு) கீழ்ப்படிந்தோம் என்று கூறுகின்றனர். பிறகு, அவர்களில் ஒரு பிரிவினர் அதற்குப் பின்னர் திரும்பி விடுகின்றனர். அவர்கள் நம்பிக்கையாளர்கள் இல்லை.

(48) அவர்கள் அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் பக்கம் அழைக்கப்பட்டால் - அவர்களுக்கிடையில் (அவனது தூதர்) தீர்ப்பளிப்பதற்காக - அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர்.

(49) அவர்களுக்கு சாதகமாக சத்தியம் இருந்தால் அவர் பக்கம் (-தூதரின் பக்கம்) கட்டுப்பட்டவர்களாக வருகின்றனர்.

(50) அவர்களது உள்ளங்களில் நோய் இருக்கிறதா? அல்லது அவர்கள் சந்தேகிக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனது தூதரும் அவர்கள் மீது அநீதியிழைத்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? மாறாக, அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.

(51) நம்பிக்கையாளர்களுடைய கூற்றாக இருப்பதெல்லாம், அவர்கள் அல்லாஹ் இன்னும் அவனது தூதர் பக்கம் அழைக்கப்பட்டால் - அவர் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பதற்காக - நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்று அவர்கள் கூறுவதுதான். அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவர்.

(52) யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து, அல்லாஹ்வை பயந்து, அவனை அஞ்சிக் கொள்வார்களோ அவர்கள்தான் (சொர்க்கத்தின்) நற்பாக்கியம் பெற்றவர்கள்.

(53) அல்லாஹ்வின் மீது கடுமையாக சத்தியம் செய்தனர்: “நீர் அவர்களுக்கு கட்டளையிட்டால் நிச்சயமாக அவர்கள் வெளியேறுவார்கள்” என்று. (நபியே) கூறுவீராக: “நீங்கள் சத்தியமிடாதீர்கள். (உங்கள் கீழ்ப்படிதல் பொய் என்று) அறியப்பட்ட கீழ்ப்படிதலே.” நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தரிபவன் ஆவான்.

(54) நபியே கூறுவீராக! அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், தூதருக்கு கீழ்ப்படியுங்கள். நீங்கள் விலகிச் சென்றால் அவர் மீது கடமையெல்லாம் அவர் மீது சுமத்தப்பட்டதுதான் (-எடுத்துச் சொல்வதுதான்). உங்கள் மீது கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்டதுதான் (கீழ்ப்படிவதும் கட்டுப்படுவதும்தான்). நீங்கள் அவருக்கு கீழ்ப்படிந்தால் நீங்கள்தான் நேரான வழியைப் பெறுவீர்கள். தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர தூதர் மீது (வேறு எந்தக்) கடமையும் இல்லை.

(55) உங்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்: இவர்களுக்கு முன்னுள்ளவர்களை (பூமியின்) பிரதிநிதிகளாக ஆக்கியது போன்று இப்பூமியில் இவர்களை பிரதிநிதிகளாக ஆக்குவான். இன்னும் இவர்களுக்காக அவன் திருப்தி கொண்ட இவர்களுடைய மார்க்கத்தை இவர்களுக்கு பலப்படுத்தித் தருவான். இவர்களது பயத்திற்கு பின்னர் நிம்மதியை இவர்களுக்கு மாற்றித்தருவான். இவர்கள் என்னை வணங்குவார்கள், எனக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள். இதற்குப் பின்னர் யார் நிராகரிப்பார்களோ அவர்கள்தான் பாவிகள்.

(56) இன்னும் தொழுகையை நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தை கொடுங்கள். இன்னும் தூதருக்கு கீழ்ப்படியுங்கள் நீங்கள் வெற்றி பெறுவதற்காக.

(57) (நபியே!) நிராகரிப்பாளர்களை இப்பூமியில் (அல்லாஹ்வை -அவன் அவர்களை அழிக்க நாடினால்-) பலவீனப்படுத்தி விடுபவர்களாக எண்ணி விடாதீர்கள். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது.

(58) உங்கள் வலக்கரங்கள் சொந்தமாகியவர்களும் உங்களில் பருவத்தை அடையாதவர்களும் மூன்று நேரங்களில் (உங்கள் இல்லங்களுக்குள் நுழைய) உங்களிடம் அனுமதி கோரட்டும். (அனுமதி கோர வேண்டிய மூன்று நேரங்கள்) காலை தொழுகைக்கு முன், மதியத்தில் (நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக) உங்கள் ஆடைகளை நீங்கள் களைந்துவிடும் நேரத்தில், இஷா தொழுகைக்கு பின். இவை மூன்றும் உங்களுக்கு மறைவான நேரங்கள். (மற்ற நேரங்களில் அனுமதியின்றி அவர்கள் நுழைவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை. அவர்கள் உங்களிடம் அதிகம் வந்துபோகக் கூடியவர்கள். உங்களில் சிலர் சிலரிடம் (வந்துபோகக் கூடியவர்கள்). இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.

(59) உங்களின் குழந்தைகள் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்கள் (உங்கள் இல்லங்களில் நுழையும் போது அவர்கள்) அனுமதி கோரட்டும் அவர்களுக்கு முன்னுள்ள (வயது வந்த)வர்கள் அனுமதி கோரியது போன்று. இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு தனது வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.

(60) பெண்களில் திருமணத்தை ஆசைப்படாத வயது முதிர்ந்தவர்கள் அவர்கள் அலங்காரங்களுடன் வெளியே வராமல் (தங்களது பர்தாவின் மேல் உள்ள) அவர்களின் துப்பட்டாக்களை (அணியாமல்) கழட்டுவதில் அவர்கள் மீது குற்றமில்லை. அவர்கள் பேணுதலாக இருப்பது (-மேல் துப்பட்டாக்களை எல்லோர் முன்பும் அணிந்து இருப்பது) அவர்களுக்கு சிறந்தது. அல்லாஹ் நன்கு செவியேற்பவன், நன்கறிந்தவன்.

(61) குருடர் மீது குற்றம் இல்லை, ஊனமுற்றவர் மீது குற்றம் இல்லை, நோயாளி மீது குற்றம் இல்லை, உங்கள் மீது குற்றம் இல்லை - நீங்கள் உங்கள் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தந்தைகளின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தாய்மார்களின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் சகோதரர்களின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் சகோதரிகளின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்களின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் மாமிகளின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தாய்மாமன்களின் இல்லங்களிலிருந்து அல்லது உங்கள் தாயின் சகோதரிகளின் இல்லங்களிலிருந்து அல்லது எந்த இல்லத்தின் சாவிகளை நீங்கள் உங்கள் உரிமையில் வைத்திருக்கிறீர்களோ அதிலிருந்து அல்லது உங்கள் நண்பனின் இல்லங்களிலிருந்து நீங்கள் உண்பது (உங்கள் மீது குற்றமில்லை). நீங்கள் ஒன்றினைந்தவர்களாக அல்லது பிரிந்தவர்களாக (தனித்தனியாக) உண்பது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் (உங்கள் அல்லது பிறருடைய) இல்லங்களில் நுழைந்தால் உங்களுக்கு (அங்குள்ள உங்கள் சகோதரர்களுக்கு) -அல்லாஹ்விடமிருந்து (கற்பிக்கப்பட்ட) அருள்நிறைந்த நல்ல முகமனாகிய- சலாமை சொல்லுங்கள். நீங்கள் சிந்தித்து விளங்குவதற்காக அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு வசனங்களை தெளிவுபடுத்துகிறான்.

(62) நம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்) எல்லாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (அவர்கள் கூறிய எல்லா விஷயங்களிலும்) உண்மைப்படுத்தியவர்கள் தான். அவர்கள் அவருடன் (தூதருடன் போர், தொழுகை, ஆலோசனை போன்ற) ஒரு பொது காரியத்தில் இருந்தால் அவரிடம் அனுமதி கேட்காமல் (அங்கிருந்து) அவர்கள் செல்லமாட்டார்கள். நிச்சயமாக உங்களிடம் அனுமதி கேட்பவர்கள், அவர்கள்தான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உண்மைப்படுத்தியவர்கள். ஆகவே, அவர்கள் உம்மிடம் தங்களின் சில காரியத்திற்கு அனுமதி கேட்டால் அவர்களில் நீர் நாடியவருக்கு அனுமதி அளிப்பீராக. அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.

(63) (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு மத்தியில் தூதரின் சாபத்தை உங்களில் சிலர் சிலரை சபிப்பது போன்று ஆக்கிவிடாதீர்கள். (அவருடைய சாபம் கண்டிப்பாக பலித்துவிடும்) உங்களில் மறைவாக நழுவிச் செல்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறுசெய்பவர்கள் (-உள்ளங்கள் இறுகி நிராகரிப்பு என்னும்) குழப்பம் தங்களை அடைவதை அல்லது வலிதரும் (கடுமையான) தண்டனை தங்களை அடைவதைப் பற்றி உஷாராக (பயந்தவர்களாக) இருக்கட்டும்.

(64) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்விற்கே சொந்தமானவை வானங்களிலும் பூமியிலும் உள்ளவை. திட்டமாக நீங்கள் இருக்கும் நிலையை அவன் நன்கறிந்தவன். (நபியின் கட்டளைக்கு மாறுசெய்பவர்கள்) அந்நாளில் அவனிடம் (அல்லாஹ்விடம்) அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படும்போது அவர்கள் செய்ததை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.

(1) னது அடியார் மீது -அவர் அகிலத்தார்களை எச்சரிப்பவராக இருப்பதற்காக - பகுத்தறிவிக்கும் வேதத்தை இறக்கியவன் மிக்க அருள் நிறைந்தவன்,