93 - ஸூரா அழ்ழுஹா ()

|

(2) இரவின் மீது சத்தியமாக! அது நிசப்தமாகும்போது,

(3) (நபியே!) உம் இறைவன் உம்மை விட்டு (விலகி) விடவில்லை; இன்னும் (உம்மை) வெறுக்கவில்லை.

(4) இம்மையைவிட மறுமைதான் உமக்கு மிகச் சிறந்தது.

(5) திட்டமாக, உம் இறைவன் (தன் அருளை) உமக்குக் கொடுப்பான். ஆகவே, நீர் திருப்தியடைவீர்.

(6) உம்மை அநாதையாக அவன் காணவில்லையா? ஆகவே, (உம்மை) அவன் ஆதரித்தான்.

(7) உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆகவே, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்.

(8) அவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆகவே, (அவன் உம்மை) செல்வந்தராக்கினான்.

(9) ஆக, அநாதைக்கு அநீதி செய்யாதீர்!

(10) ஆக, யாசகரைக் கடிந்து கொள்ளாதீர்!

(11) ஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக!

(1) (நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?