86 - ஸூரா அத்தாரிக் ()

|

(2) (நபியே!) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

(3) (அது) மின்னக்கூடிய நட்சத்திரமாகும்.

(4) ஒவ்வோர் ஆன்மாவும் இல்லை, அதன் மீது ஒரு காவலர் இருந்தே தவிர.

(5) ஆகவே, மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டான் எனப் பார்க்கட்டும்.

(6) வேகமாக ஊற்றப்படக்கூடிய (இந்திரியம் எனும்) தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்.

(7) அது முதுகந்தண்டுக்கும் நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளியேறுகிறது.

(8) நிச்சயமாக அவன், அவனை மீட்பதற்கு ஆற்றல்மிக்கவனாக இருக்கின்றான்,

(9) இரகசியங்கள் சோதிக்கப்படுகின்ற (பகிரங்கப்படுத்தப்படுகின்ற) நாளில் (அவன் மனிதனை மீண்டும் உயிர்பிப்பான்).

(10) ஆகவே, அவனுக்கு எந்த சக்தியும் இல்லை; எந்த உதவியாளரும் இல்லை.

(11) மழைபொழியும் வானத்தின் மீது சத்தியமாக!

(12) தாவரங்களை முளைப்பிக்கும் பூமியின் மீது சத்தியமாக!

(13) நிச்சயமாக இது (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய கூற்றுதான்.

(14) இது விளையாட்டாக இல்லை. (கேலியான பேச்சல்ல)

(15) நிச்சயமாக அவர்கள் சூழ்ச்சிதான் செய்கிறார்கள்.

(16) (நானும்) சூழ்ச்சிதான் செய்கிறேன்.

(17) ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு அவகாசமளிப்பீராக! அவர்களுக்குக் கொஞ்சம் அவகாசமளிப்பீராக!

(1) (நபியே!) மிக உயர்ந்தவனாகிய உம் இறைவனின் பெயரைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக!